அத்தியாயம் 28
கீழே வந்த சுதாகர் உறங்கிக் கொண்டிருந்த ஜீவாவை அறையில் தூங்க வைத்துவிட்டு வெளிவர, சந்தியா வீட்டிற்கு வெளியிலேயே நின்றிருந்தாள்.
"உள்ளே வா தியா!" வாசலில் நின்று அவன் அழைக்கவும் அவள் புன்னகை விரிந்தது. சபதம் நிறைவேறியதே!
"ஏன் சிரிக்குற?" அவன் கேட்க,
"இல்ல இதே வாய் கொஞ்ச நாள் முன்னாடி தான் வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லுச்சு என்னை" சிரிப்புடன் சொல்லிக்கொண்டே அவள் உள்ளே செல்ல,
"அதை இன்னுமா நியாபகம் வச்சுருக்க?" என அவனுமே சிரித்தான்.
"அப்புறம்! நிச்சயம் யுவா சமாதானம் ஆயிடுவான்னு ஒரு நம்பிக்கை இருக்கு.. நீ சொல்லு.. என்ன முடிவு பண்ணியிருக்க?" சுதாகர் கேட்க,
"எதை பத்தி?" என்றாள்.
"ஏய்! வரும் போது தானே சொன்னேன்? அதுக்குள்ள மறந்து போற மாதிரி அவ்வளோ மொக்கையாவா ப்ரொபோஸ் பண்ணினேன்?"
"ஹப்பா! நான் கூட கனவோனு நினச்சேன்.. நல்லவேளை.. ஆனா வக்கீலு! மேல கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் ஒரு பச்சை மண்ணு... க்ரீன் சேண்டு.. உன்னை நம்பி சொன்னதை எல்லாம் புட்டு புட்டு வச்சியே.. அது எப்படி ரெப்லெக்ட் ஆகும் தெரியுமா? வித்தார்த்கிட்ட மாட்டினேனு வை..."
"ப்ச்! அதுக்கு தான் சொல்றேன்.. லவ் இல்லைனாலும் பரவால்ல.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. நான் வாதாடி உன்னை காப்பாத்துறேன்" என்றான் சளைக்காமல்.
"ரொம்ப நொந்து போய் இருக்க போல வக்கீலு.. எதுக்கும் ஒரு ஒருமணி நேரத்துக்கு அப்புறம் கேளு.. வாழ்க்கை கொடுக்குறதா மேல பேசுனியே! யுவா அக்காவை வேணாம்னு சொல்லிட்டா வாக்கு கொடுத்ததை காப்பாத்தணும்ல?"
நிச்சயம் அப்படி ஒரு நிலை வராது என்று தான் அவளுக்கும் தோன்றியது. அவனை வெறுப்பேத்தவே அப்படி அவள் கூற,
"உன் வாயில அழுகின முட்டையை தான் ஊத்தணும் டி" என்றவனை பார்த்து கண், காது, வாய் அனைத்தையும் திறந்தாள் சந்தியா.
"எதே! டி'யா? பார்த்தியா மரியாதை தேயுது?? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ?" என்றவளிடம் சீரியஸாய் பேச ஆரம்பித்தான் சுதாகர்.
"தியா! ஐம் சீரியஸ்.. சொல்லு உனக்கு ஓகேவா.. நாட் ஓகேவா?"
"இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. ஆனா கார்லயே என்கிட்ட பதில் கேட்ருந்தா முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்திருப்பேன்.. ஆனா நீ மேல வச்சு கல்பனா அக்காவை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டு என்னை ஒரு பார்வை பார்த்த பார்த்தியா... நிஜமா சொல்றேன்... அந்த நிமிஷம் அப்டியே மெல்ட் ஆகிட்டேன் பா.. என் மனசு இஞ்சி நூறா உடைஞ்சு போச்சு.."
"இஞ்சி நூறா?" இஞ்சி சாப்பிட்டது போலவே முகம் வைத்து அவன் கேட்க,
"வக்கீலா இருந்துட்டு குறுக்க பேசினா ஃபுளோ வராதுன்னு தெரியாதா? என்ன வக்கீலு நீயி? சுக்கு மட்டும் தான் நூறா உடையுமா என்ன? இஞ்சி உடையாதா?" அவள் கூறிய தத்துவத்தில் தலையில் அடித்துக் கொண்டவன் பதிலை கேட்கவே பொறுமை காத்தான்.
"நான் இப்ப என்ன சொல்ல வர்றேன்னா... சாகனும்னு முடிவு பண்ணிட்டா தூக்கும் ஒன்னு தான்.. தூக்க மாத்திரையும் ஒன்னு தான்.. எப்படியும் கல்யாணம்னு ஒன்னு பண்ணி தானே ஆகணும்? அது ஏன் உன்னை பண்ணிக்க கூடாது? எப்படி என் பாயிண்ட்லாம் கரெக்ட்டா இருந்துச்சா?"
அவள் சம்மதம் கூறியது என்னவோ சந்தோஷம் தான் ஆனால் அவள் சொன்ன விதத்தில் தான் 'ங்யே' என முழித்து நின்றான் சுதாகர்.
"அடிப்பாவி! அப்ப என்னை கல்யாணம் பண்றதும் சாகுறதும் ஒன்னுனு சொல்றியா?"
"ச்ச! ச்ச! அது டக்குனு உதாரணம் அது தான் தோணுச்சு லாயர்.. ஆனா சத்தியமா என் அப்பா ஒத்துக்க மாட்டாரு.. ஜானகி ஒருத்தி போதும்.. கொளுத்தி போட்டுட்டா ஊரே பத்தி எரியும்" கவலையாய் அவள் சொன்னது கூட இவனுக்கு சிரிப்பை தான் கொடுத்தது.
"ஆனா நான் அப்படிலாம் இல்ல பா.. ஐம் குட் கேர்ள்.. நீ குடிசைல இருக்க சொன்னா கூட எனக்கு ஓகே தான்.. ஆனா அங்க ஒரு ஏசி மட்டும் மாட்டிடு.. அது இல்லைனா தூக்கம் வராது" அவள் விருப்பத்தை சுவரசியமாய் அவள் சொன்ன விதம் அத்தனை பிடித்தது சுதாகருக்கு.
கூடவே ஒரு குறும்பு புன்னகையும் தோன்றிட "ப்ச்! தூக்கம் தானே? அதெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்றவனின் டபுள் அர்த்தம் மக்கு தியாவிற்கு கொஞ்சம் புரிந்திருக்கலாம்.
"ஆமா! கண்டிப்பா உன் அப்பா அம்மா சம்மதம் உனக்கு முக்கியமா?" அவன் கேட்க,
"என்ன லாயர் சார் இப்படி கேட்குறீங்க? ஆனாலும் நியாயமான கேள்வி தான்..." என்றவள் யோசித்து
"சம்மதம் முக்கியம் இல்ல... ஆனா கல்யாணத்துக்கு அவங்களும் வரணும்.. ஒரு சின்ன செண்டிமெண்ட்... அவ்வளவு தான்" பெற்றவர்களை பற்றி தெரிந்தவள் சொல்ல,
"அது ஓகே! வர வச்சுடலாம்..நோ ப்ரோப்லேம்" என்றான் யோசித்தவாறே.
காதல் தான்... இருவருக்குமே எங்கு எப்படி ஆரம்பித்தது என்று எல்லாம் தெரியவில்லை.. அதை விரிவாய் பேசிக் கொள்ளவும் தெரியவில்லை.. அவரவரின் இயல்பிலேயே இருந்தனர் இருவரும்.. இப்போது வெளிப்படையாய் பேசிக் கொண்டது கூட பீல் குட் என்பது போன்ற உணர்வு..
காதலை வார்த்தையில் உணர்த்துவதை விட வாழ்ந்து தானே உணர்த்த வேண்டும்.. இருவருமே
உணர்த்திடுவார்கள்.
"ண்ணா! அண்ணி பாவம்ணா" ஒரே வார்த்தை தான் கூறினாள். யுவா பார்த்த பார்வையில் அதற்குமேல் பேச்சு வரவில்லை சூர்யாவிற்கு.
"நீ ஏன் சூரி அவங்களுக்காக பாவப்படுற? அவ கஷ்டப்படும்போது சந்தோஷப்படுற கூட்டத்துல தானே நீயும் இருந்த?" அன்னையிடம் காட்டிய, காட்ட வேண்டிய கோபத்தை தங்கையின் மேலும் கொட்டினான்.
"சத்தியமா அம்மா இப்படி பண்ணுவாங்கனு நான் எதிர்பார்க்கலணா.. வேணும்னு பண்ணல சாரிண்ணா" அண்ணன் தன்னை தவறாய் நினைப்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
"வேண்டாம் சூரி! விடேன் நாம ரொம்ப பாவம் பண்ணிருக்கோம் டா.." தங்கைக்கும் தனக்கும் சேர்த்தே ஆறுதல் கூறினான்.
"யுவா! யுவா ப்ளீஸ் யுவா.. சத்தியமா இப்படி ஒரு தப்பை இனி பண்ணவே மாட்டேன்.. என்ன மன்னிச்சுடுங்க.. சந்தியா கூட நீங்க சந்தோஷமா வாழுறதை நான் கெடுக்க கூடாதுன்னு தான் இவ்வளவு நாளா நான் எதுவும் பேசல.. என்னால நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பிங்கனு தெரியாம போச்சு.. நானும் உங்களை அளவுக்கு அதிகமா விரும்பிட்டேன் யுவா.. நீங்க நல்லாருக்கணும்னு மட்டும் தான் நான் விலகி போனேன்.. மறுபடி என்னை அனாதை ஆக்கிடாதீங்களேன்..."
அவன் முகம் பார்த்து விழி நீரை மறைக்க பேச ஆரம்பித்தவள் முடிவில் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.
"நீ அம்மா கூட எனக்கும் என்ன தண்டனை வேணா குடுண்ணா.. ஆனா அண்ணியும் ஜீவாவும் பாவம்... நீ அண்ணி வாழ்க்கையை நினச்சு அவங்களை நெருங்காம நின்ன மாதிரி தானே அவங்களும் உன்னை நெருங்க வேணாம்னு நினச்சுருப்பாங்க.. அம்மா பண்ணின தப்புக்கு அண்ணியை தண்டிச்சுடாதண்ணா!
இது தான் சூர்யா.. அன்னை மேல் கோபம் வந்தாலும் காட்டிவிட்டு தான் மறுபடியும் அவரிடம் பேசுவாள். தவறு தன் பக்கம் என்றதும் தயங்காமல் மாறிவிட்டாள்.. ஆனால் இப்போதும் அவள் கிளிபிள்ளை தான். சொல்பேச்சை மட்டுமே நம்புபவள்.. சுபாவத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மாற்றிட முடியாதே!
மூவரின் கண்களுமே கண்ணீர் வற்றி காய்ந்திருந்தது.
யோசித்து பார்த்தால் சூர்யா கூறியது தானே உண்மை? ஒருவரின் நலனில் இன்னொருவர் கொண்ட அக்கறையும் தானே இந்த இருவரின் பிரிவுக்கு காரணம்? இதற்கும் விதி மட்டும் தான் காரணம்.. பதிலறியா கேள்விகளுக்கு என்றுமே விடை காண முடியாது நம் மனம் நினைக்கும் வரை.
நாம் கொண்டு செல்லும் பாதையில் தான் வாழ்க்கை பயணம்.. வழி மாறிப் போவதும் தடம் மாறிப் போவதும் அவரவரின் திறன் மட்டுமே!.
ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவன் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான்.
அவள் கைகளை தன் கைகளால் அவன் பிரிக்க அழுகையுடன் அவன் முகம் நோக்கியவள் அவனின் கண்களையும் அதில் அவள் மீதான நேசத்தையும் மட்டுமே தேடினாள்.
உருகித் தான் போனான் அந்த தேடலில்.. நீண்ட நெடும் காலத்திற்கு பின் அவனின் உதடுகளில் சிறு புன்னகை.
அவள் முகத்தில் இருந்த தன் கைவிரல் கொண்டு அவளின் கண்ணீரை துடைக்க மீண்டும் உற்பத்தியானது கண்ணீர்.. உடன் புன்னகையும்.
"சாரி யுவா!" அவள் சொல்ல, மறுப்பாய் தலையசைத்தவன் நெற்றியோடு நெற்றி முட்டி நிற்க, நாகரிகம் கருதி கீழே இறங்கி வந்தாள் சூர்யா.
சுதாகர் வீட்டில் சண்டையிடும் சத்தம் கேட்க யோசனையுடன் உள்ளே எட்டிப் பார்த்தாள் சூர்யா.. சுதாகர் சந்தியா தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
"லெட்ஸ் பிரேக்கப் வக்கீலு!" சந்தியா சொல்லும் சமயம் வாசலில் நின்று இருவரும் சண்டையிடுவதைக் கேட்க ஆரம்பித்தாள் சூர்யா.
ஏதோ பிரச்சனை என நினைத்து வந்தவளுக்கு அவர்கள் சண்டை சிரிப்பை தான் கொடுத்தது.
"பிரேக்அப்பா? அடியேய் லவ் பண்ண ஆரம்பிச்சே ஒன் ஹவர் கூட ஆகல.." சுதாகர்.
"எனக்கு தெரியாது.. நான் சொன்னதை செஞ்சா தான் மேரேஜ்"
"புரியாம பேசாத லூசு! அங்கே இருக்குறது எல்லாம் மனுஷங்களே இல்ல.. எல்லாம் மிருகம்.." - சுதாகர்.
"ஒரே ஒரு மாசம் டைம் கொடு வக்கீலு.. நீ கூட வர வேணாம்.. நான் பாத்துக்குறேன்" சந்தியா.
"கல்யாணம் பண்ணி உன்னை அங்கே விட்டுட்டு நான் என்ன புல்லு புடுங்கவா? ஏண்டி படுத்துற?" நொந்து கொண்டவன் அவள் அருகிலேயே அமர்ந்தான்.
திருமணத்திற்கு பின் ஒரு மாதம் சுதாகரின் சொந்த ஊரில் அவனின் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை சந்தியா வைக்க அங்கே ஆரம்பித்தது தான் இந்த விவாதம்.
"இப்படி கண்டுக்காம விட்டு தான் ஒரு பொண்ணை பொண்ணா மதிக்கவே தெரியல அங்கே இருக்கவங்களுக்கு.. நான் போய் அவங்களுக்கு எல்லாம் ஒரு காட்டு காட்டல... என் பேரு சந்தியா இல்ல.. இந்த ஜானகியையும் நாலு கேள்வி கேட்காமல் விட கூடாது..." சந்தியா அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க, வக்கீலாய் யோசிக்க ஆரம்பித்தான் சுதாகர்.
"சரி ஓகே! பாத்துக்கலாம்" என்றவன் என்ன நடந்தாலும் தன் திருமணத்தில் யாரையெல்லாம் அழைக்க கூடாது என்ற முடிவில் தெளிவாய் இருந்தான்.
ஆசை தொடரும்..