அத்தியாயம் 4
யுவராஜ், சந்தியா வந்து ஒரு வாரம் முடிந்திருந்தது. சந்தியா விஷயத்தில் இவன் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவளே தானே வந்தாள் அவளே செல்லட்டும் என்பது போல விட்டுவிட்டான்.
காலையில் அவன் ஆபீஸ் கிளம்பும் நேரம் இவளும் கிளம்பி அங்கே ட்ராப் செய் இங்கே ட்ராப் செய் என்க மூன்றாம் நாளே திட்டி தனியே விட்டுவிட்டான்.
"உனக்கு போகணும்னா நீயே போய்க்கோ" என்று வேறு சொல்லிவிட, இவளும் கோபம் போல பேசாமல் இருந்துவிட்டாள்.
அடுத்து சுதாகரை தான் தேடி வந்தாள். அவன் யுவாவை போல எல்லாம் இல்லை. முடியாது என முதல் நாளே முகத்துக்கு நேராக சொல்லிவிட அவனுடனும் கோபித்துக் கொண்டு ஜீவாவை தூக்கிக் கொண்டு மேலே தன் வீட்டிற்கு வந்துவிடுவாள்.
ஜீவா தான் இவளது டே பிரண்ட். அவனுடன் நேரம் நன்றாகவே கழியும். அப்போது தான் பேசிப் பழகும் ஜீவாவிற்கு அழகாய் ஒவ்வொன்றாய் பேச கற்று கொடுப்பாள். விளையாடுவாள். அப்படியே அவனுடனே தூங்கியும் விடுவாள்.
இதில் கலவரம் அடைந்தது என்னவோ கல்பனா தான். நாளுக்கு நாள் அவள் பயம் அதிகரித்துக் கொண்டே போக சுதாகரும் அவளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
ஆனால் எவ்வளவு கேட்டும் சரியான பதில் அவளிடம் இருந்து வரவில்லை. இவனுக்கும் புரியவில்லை.
இதில் சந்தியா வந்து சுதாகருடனும் ஜீவாவுடனும் எளிதாய் பழகிவிட மேலும் கொடூரமாய் ஆனது நாட்கள்.
தன் வீட்டிற்கு ஜீவாவை எடுத்து செல்வதாக சந்தியா கூறவும் ஒரு கணம் உலகமே சுற்றிவிட்டது கல்பனாவிற்கு.
விடவே மாட்டேன் என்றவளை சுதாகர் தான் பேசி சமாளித்து அனுப்பிவிட்டான்.
அவள் நினைத்தது என்ன? இப்போது நடப்பது என்ன? தன்னை நினைத்தே கூனி குறுகி போனாள் கல்பனா. தன் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்க தொடங்கினாள்.
முதல் இரண்டு நாட்களும் யுவா வருவதற்கு முன் சந்தியா ஜீவாவை கொண்டு வந்து கொடுத்துவிட அதுவரை நிம்மதி தான் கல்பனாவிற்கும்.
மூன்றாம் நாள் ஜீவாவுடன் விளையாடி களைத்து தூங்கி எழுந்து அவனுக்கும் தனக்கும் சேர்த்தே பாலை காய்ச்சி அருந்தினாள்.
சரியாய் உள்ளே நுழைந்தான் யுவா. குழந்தையையும் அவளையும் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் குளித்து முடித்து வெளிவர அவன் கால்களை கட்டிக் கொண்டான் ஜீவா.
"தூத்து.. தூத்து..." என்று மழலை மொழியில் அவன் தூக்க சொல்ல, இங்கே ஆடி போனாள் சந்தியா.
'அடேய் யாரு கால டா பிடிச்சிருக்க? அது எரிமலையாச்சே. எப்ப வெடிக்கும்னு தெரியாதே..' என தனக்குள் பேசிக் கொண்டவள் வேகமாய் அவன் அருகே செல்ல, அதற்குள் ஜீவாவை அழகாய் தூக்கி இருந்தான் யுவா.
இப்போது ஹார்ட் அட்டாக் வருவது போல இருந்தது என்னவோ சந்தியாவிற்கு தான்.
குழந்தையை கொஞ்சக் கூட தெரியாமல் ஜீவா முகத்தையே அவன் பார்த்திருக்க, குழந்தையும் யுவா முகத்தில் பிஞ்சு விரல்களால் கோலம் போட்டபடி இருந்தது.
தன் கால்களை கட்டிக் கொண்ட ஜீவாவை பார்த்து முதலில் அவனுக்கு அன்று பார்த்த அதிர்ந்த கல்பனாவின் முகம் ஞாபகம் வர அப்படியே பார்த்து கொண்டே இருக்க, குழந்தையின் மொழியில் கை தன்னால் அவனை தூக்கிக் கொண்டது.
'என்ன இவன் இவ்ளோ க்யூட்டா விளையாடுற குழந்தைய போய் வெறிச்சு பாத்துட்டு இருக்கான். இப்ப என்ன பண்றது என நினைத்தவள் தற்செயலாய் எதிர்பக்கம் திரும்பினாள்.
சுதாகர் யாரோ ஒருவரை கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்ல தன் வீட்டின் ஜன்னல் வழியே அதை கண்டாள் சந்தியா.
உடனே அவளின் குறும்புத்தனம் தலைதூக்க ஜீவாவை யுவாவுடனே விட்டுவிட்டு சுதாகர் பின்னாலேயே மேலேறினாள்.
குழந்தையின் முகத்தில் ஆழ்ந்தந்திருந்த யுவாவும் அவள் சென்றதை கவனிக்கவில்லை.
யாருடனும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் சந்தியா தன்னுடன் வாயாடும் சுதாகரையும் விட்டு வைக்காமல் இயல்பாய் பேசி நட்பாகிவிட்டிருந்தாள்.
தீவிரமாய் சுதாகரும் அந்த பெரியவரும் பேசிக் கொண்டிருக்க பின்னிருந்து சுதாகர் கண்களை மூடுவது மட்டுமே இப்போது அவளுடைய பிளான்.
யுவராஜ் மனைவியாய் தான் சந்தியா தன்னை தானே அறிமுகம் செய்திருந்தாலும் முதலிலேயே அவளின் பேச்சில் சுதாகரும் ஒருமையில் அழைப்பது தொடங்கி நட்பாகி விட்டிருந்தான்.
அருகில் சென்று அவனை நோக்கி கைகளைக் கொண்டு வந்தவள் அவன் பேச்சில் ஷாக் அடித்தது போல அப்படியே நின்றுவிட்டான்.
"என்னப்பா நீங்க! நான் தான் தெளிவா சொன்னேனே! கல்பனாவை வச்சுகிட்டு நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். முதல்ல அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை...." என்றவன் பேச்சு பாதியில் நின்றது, அந்த புதியவர் பார்வை இவனை தாண்டி பின்னால் பார்த்தத்தில்.
யாரோ வந்திருப்பதை அவர் பார்வையில் உணர்ந்தவனும் பயந்து எச்சில் விழுங்கி மெதுவாய் திரும்பி பார்க்க அங்கே சந்தியாவை பார்த்ததும் தான் கொஞ்சம் மூச்சு வந்தது. ஆனாலும் அதிர்ச்சி தான்.
"சந்தியா! நீ எங்க இங்க?" குரல் கம்ம அவன் கேட்க,
"உங்க ஊர்ல எல்லாம் வைஃப்க்கு ஹஸ்பண்ட் தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்களா லாயர் சார்?" விழிவிரித்து எங்கோ பார்வையை வைத்து அவள் அதிர்ச்சி மாறாமல் கேட்க இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
"நான் உங்களை நல்லவர்னு நினச்சேன். நீங்க சரியில்ல..." சொல்லிக் கொண்டே அவள் பின்னால் செல்ல அவளின் தவறான மன ஓட்டத்தை இவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஹேய்! ஒரு நிமிஷம் சந்தியா! நில்லு நில்லு" என்று அவள் பின்னால் அவன் செல்ல, அவளும் அங்கிருந்து ஓடிட முயன்றாள்.
"கல்பனா என் வைஃப் இல்ல மா" என்ற வார்த்தை மட்டும் தான் அவளை அங்கே நிற்க வைத்தது.
"என்ன?" சந்தியா.
"ப்ச்! வேறெதும் கேட்காத ப்ளீஸ். ப்பா! நீங்க போங்க இதை பத்தில் இனி பேச வந்தா வீட்டு பக்கமே வர மாட்டேன்னு அம்மாகிட்ட சொல்லிடுங்க" என்று தன் தந்தையை அனுப்பி வைத்தான்.
அப்போதும் அவள் அவன் கூறியதை நம்ப முடியாமல் தான் நின்றாள்.
"நிஜமாவே எங்களை மாதிரி தான் நீங்களுமா?" தவறிவிட்டாள்.. வார்த்தையை தவறி விட்டுவிட்டாள் சந்தியா.
"என்ன? என்ன சொன்ன? கம் அகைன்?" அவள் வார்த்தை புரிந்து அவன் படபடக்க அப்போதுதான் தான் உளறி வைத்ததும் அவளுக்கு புரிந்தது.
"அச்சோ! சொதப்பிட்டேனா? இல்ல இல்ல! நான் ஒன்னும் சொல்லல. நான் சொன்னத மறந்திடுங்க" என்று அவள் ஓட பார்க்க, அவன் விடுவதாய் இல்லை. வக்கீல் ஆகிற்றே!.
"இப்ப உண்மைய சொல்லலைனா சுந்தரம் அங்கிள் இங்க வருவாங்க. எப்படி வசதி!" என்று அவன் கேட்க, தான் வசமாய் மாட்டிக் கொண்டது புரிந்தது. ஆனாலும் வீம்பாய் பேசினாள்.
"கூப்பிடுங்க! கூப்பிடுங்க! நானும் சுந்தரம் அங்கிள்கிட்ட உங்களை பத்தி சொல்றேன்"
"என்ன சொல்லிடுவ? நான் இப்ப சொன்னதையா? அது ஏற்கனவே அங்கிள்க்கு தெரியும். அங்கிள் எங்களை புரிஞ்சி தான் இந்த வீட்டை குடுத்தாங்க. இந்த சமூகத்துக்கு பயந்து தான் எங்களோட இந்த வேஷம்" அவன் வேதனையாய் சொல்ல இவளுக்கு அதற்குமேல் என்ன சொல்வதென தெரியவில்லை.
ஒரு பெருமூச்சை எறிந்தவன் "சரி அதைவிடு! இப்ப சொல்லு. நிஜமா அந்த உம்முனா... சாரி அந்த யுவராஜும் நீயும் ஹஸ்பண்ட் வைஃப் இல்லையா?" என்று கேட்க,
"லாயர் சார்! எங்களை தப்பா எதுவும் நினச்சுடாதீங்க. இது ஒரு அச்சிடேன்ட். சொல்லப்போனா யுவா மேல தப்பு இல்ல. நான் தான் யுவாக்கு கூட தெரியாம இங்க வர எல்லாம் பண்ணினேன். எங்க ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு பேசிட்டு இருக்காங்க.. நான் வைஃப்னு சொல்லலைனா இங்க எங்களை தப்பா தானே பேசுவாங்க? அதுனால தான் அப்படி ஒரு பொய் சொல்லி வந்தேன். என்னோட சந்தோஷத்துக்காக தான் வந்தேன். ப்ளீஸ் யுவாகிட்ட எதுவும் கேட்டுடாதீங்க. சும்மாவே முகத்தை பார்க்க முடியாதபடி தான் வச்சுருக்கும்.. இப்ப உங்களுக்கு தெரியும்னு சொன்னா அவ்வளவு தான்" அவள் சொல்லி முடிக்கவும் இவன் ஏதோ யோசனைக்கு சென்றான்.
"சொல்லமாட்டிங்க தானே? அப்படி மட்டும் சொல்லிட்டீங்க.. அப்புறம் யுவா என்னை" என்றவள் கைகளால் கழுத்தை நெரிப்பது போல வைத்து நாக்கை வெளியில் நீட்டி காண்பிக்க அதில் சிரித்துவிட்டான் சுதாகர்.
"என்ன வாயி! சரியான கேடி தான் நீ. அந்த உம்மு... ப்ச் யுவராஜ் முரட்டு பீஸ்னாலும் நல்லவன் மாதிரி தான் தெரியுது. அதுனால உன்னை சும்மா விடுறேன். சீக்கிரம் ஊருக்கு போற வழிய பாரு" என்றவன் கீழிறங்க போக,
"ஹெலோ! ஹெலோ லாயர் சார்! உம்முனா மூஞ்சின்னே சொல்லுங்க நான் ஒன்னும் போட்டு கொடுக்க மாட்டேன். ஆனால் ஜீவா?" என்று கேள்வியாய் நிறுத்த,
கொஞ்சமும் யோசிக்காமல் "என் குழந்தை தான்" என்றுவிட்டு வேகமாய் இறங்கி சென்றுவிட்டான்.
அவன் சென்றபின் தான் ஜீவா ஞாபகம் இவளுக்கு வர 'அச்சச்சோ! சிரிக்க தெரியாதவன் என்ன பண்ணி வச்சிருக்கானோ!' என பதறி கீழே ஓட, இவள் பார்த்தது என்னவோ அங்கே யுவா வீட்டில் இருந்து குழந்தையுடன் அழுது கொண்டே ஓடிய கல்பனாவை தான்.
அதற்கு முன்பு கீழே வந்த சுதாகரும் கடைசி படியில் நின்று அந்த காட்சியை தான் பார்த்திருந்தான்.
"சாரி லாயர் சார்! நான் தான் ஜீவாவை கொண்டு வந்து தர மறந்துட்டேன். உம்முனா மூஞ்சி கல்பனா அக்கவை ஏதோ திட்டிடுச்சு போல" என பாவமாய் சொல்ல, யுவராஜ் என்றவனை புரிந்து கொள்ள முடியாமல் கல்பனாவை தேடி சென்றான் சுதாகர்.
'இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்? எப்படி ஒரு பொண்ண அழ வைக்கலாம்' என வரிந்து கட்டி யுவாவிடம் சண்டையிட சந்தியா உள்ளே செல்ல,
அவனோ தலையை கைகளில் தாங்கியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தான்.
"என்ன யுவா? ஏன் கல்பனா அக்கா அழுத்துட்டு போறாங்க? நான் தான் குழந்தைய தூக்கிட்டு வந்தேன் அவங்க பாவம்" என அவள் சத்தம் போட அமைதியாய் அழுத்தமாய் அவன் பார்த்த பார்வையில் இவளுக்கு இவள் தந்தை கண்முன் தோன்றிவிட அப்படியே ஆஃப் ஆகிவிட்டாள்.
கல்பனாவை தேடி வந்த சுதாகர் அவள் அழுகையில் சிறிது நேரம் கைகட்டி நின்றுவிட்டான்.
கல்பனா அவ்வளவு கோழை எல்லாம் அல்ல. யாருடைய பேச்சுக்கும் பதில் பேசி வருபவள் தான். இவள் அழும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்றே அவனுக்கு புரியவில்லை.
அவள் அழுகை குறையவும், "கல்ப்! என்னாச்சு? என்ன சொன்னான் அவன்? இப்ப நீ சொல்லலைனா நான் அவன் சட்டைய போய் பிடிப்பேன்"
சில நிமிடங்களுக்கு பின் பொறுமையிழந்து அவன் கேட்க எதுவும் சொல்லாமல் மீண்டும் ஏங்க ஆரம்பித்தாள்.
சுதாகருக்கு ஏதோ மனதில் உறுத்த தொடங்க அவளையே கூர்ந்து நோக்கினான்.
இப்போது மீண்டும் யுவாவின் முகத்தை நினைவுக்கு கொண்டு வர, தான் நினைப்பது சரியா தவறா என குழம்பினான் அந்த பிரபல வழக்கறிஞர்.
காதல் தொடரும்...