அத்தியாயம் 5
"ஜஸ்ட் ஸ்டாப் இட் கல்ப்! இப்ப ஏன் அழுறனு சொல்ல முடியுமா முடியாதா?" பொறுமை இழந்து கத்திய சுதாகருக்கு பதில் சொல்லாமல் இன்னும் அழுது கொண்டு தான் இருந்தாள்.
சில நிமிடங்கள் யோசித்தவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தாலும் அது எந்தளவு உண்மை என்றும் உண்மை தானா என்றும் தெரியாமல் குழம்பி நிற்க, "அக்கா" என்ற அழைப்பில் தெளிந்து வாசலுக்கு சென்றான்.
"மாமா! எப்படி இருக்கீங்க மாமா?" தயங்கி தயங்கி கேட்டு வாசலிலேயே நின்றான் ஜீவிதன். கல்பனாவின் தம்பி.
"வாடா! இப்ப தான் உனக்கு இங்கே வர வழி தெரிஞ்சுதா?" என்று வரவேற்ற சுதாகர் மனதுக்குள் 'இவனுக்கு தெரியுமே கேட்டு பார்க்கலாமா?' என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.
இருவரும் உள்ளே வரும்முன் முகம் கழுவி அழுகையை மறைக்க முயற்சித்து புன்னகை பூசி நின்றாள் கல்பனா.
"வா ஜீவி! எப்ப சென்னை வந்த?" கல்பனா கேட்க,
"ஒரு வாரம் ஆச்சு அக்கா" என்றவன் "ஏதாவது பிரச்சனையா மாமா? ஏன் அக்கா டல்லா இருக்காங்க?" என கேட்க, பொங்கி விட்டான் சுதாகர்.
"ஆமா டா இப்ப கேளு. நான் தான் அவளை கொடுமைப்படுத்திட்டு இருக்கேன். அவ்வளவு அக்கறை இருக்கிறவன் அவளை தேட ட்ரை பண்ணிருக்கணும் இல்ல சென்னை வந்ததும் பார்க்கவாச்சும் வந்திருக்கணும். இப்ப வந்துட்டான்.. பெரிய இவனாட்டம் கேள்வி கேட்க" என்று சத்தம் போட அவன் சத்தத்தில் மிரண்டு அழுதுவிட்டான் ஜீவா.
அதிர்ந்து குற்ற உணர்வில் நின்றுவிட்டான் ஜீவிதன்.
ஜீவா அழுகையில் சுயம் வந்து தன் தலையிலே அடித்துக் கொண்ட சுதாகர் ஜீவாவை தூக்கினான்.
"சாரி டா குட்டி. அப்பா சும்மா விளையாடினேன். இங்கே பாரு.. மாமா சிரிக்குறாங்க பாரு" என ஜீவிதனை காட்ட, அவனும் அதற்குள் தெளிந்து சிரிப்புடன் ஜீவாவை கைகளில் வாங்கிக் கொண்டான்.
இத்தனை நடந்தும் அங்கே அமைதியாய் தான் நின்றிருந்தாள் கல்பனா. அதில் ஓரளவு அவள் எண்ணம் புரிந்தாலும் தவறு தன் மேல் எனும்போது என்ன தான் செய்வான் தமையன்.
"ப்ச்! சரி கல்ப் போய் ஜீவிக்கு காபி கொண்டுவா" என்று சொல்ல சரி என நகர்ந்தாள்
"சாரி டா.. ஏதோ டென்ஷன்.. அதை உன் மேலே காட்டிட்டேன். எதுவும் நினைச்சுக்காத" சுதாகர் சொல்ல,
"ச்ச! ச்ச! என்ன மாமா நீங்க? என்கிட்ட போய் சாரிலாம் கேட்டுட்டு.. நீங்க சொன்னதுல தப்பு எதுவும் இல்லையே? நான் கையாலாகாதவனா தானே இருந்துட்டேன்" உண்மையாய் வருந்தி கூறினான் ஜீவிதன்.
"அதை விடு டா. அப்புறம் எங்கே வேலை கிடைச்சுருக்கு? எல்லாம் செட் ஆகிடுச்சா?" என அவன் பேச்சை மாற்றிவிட ஜீவியும் தொடர்ந்தான்.
"நுங்கம்பாக்கம் தான் மாமா! டிஎல் டெல்லியாம்.. வர ஒரு வாரம் ஆகும்னு பேசிகிட்டாங்க.. இப்ப பிரீ தான். ஒர்க் இன்னும் ஸ்டார்ட் பண்ணல" என்று சொல்ல கேட்டுக் கொண்டான்.
"ஹ்ம்ம்! அப்புறம் எப்படி இருக்காங்க உங்க அம்மா புண்ணியவதி?" நக்கல் மட்டுமே அவன் கேள்வியில்.
"மாமா!" அதட்டலுடன் கல்பனா வர,
"என்ன? அவங்களை சொன்னா உனக்கு ஏன் மூக்கு மேல ஏறுது? ஓஹ் பாசமா?" கோபத்தை இப்படியும் காட்டலாம் எனக் காட்டிக் கொண்டிருந்தான் சுதாகர்.
"இருக்காங்க மாமா! காலேஜ் முடிஞ்சதும் ஒரு வாரம் ஊர்ல தான் இருந்தேன். பெருசா எதுவும் பேசிக்கல.. அதே மாதிரி அங்கே எதுவும் மாறிடல" பேச ஆரம்பித்தவன் குரல் முடியும் போது உள்ளே சென்றுவிட்டது.
"அப்பா எப்படி இருக்காங்க டா?" - கல்பனா.
"ம்ம் இருக்காங்க அக்கா எப்பவும் போல" ஜீவி சொல்ல,
"ஏன் நீ திருந்திட்டனு அவங்களும் திருந்திடுவாங்களா என்ன?" சுதாகரின் ஒவ்வொரு வார்த்தையும் மனதை தைக்க கண்களை மூடிக் கொண்டான் ஜீவிதன்.
"மாமா ப்ளீஸ்! ஏன் சொல்லிக் காட்டிட்டே இருக்கீங்க? அவன் பாவம் மாமா. விடுங்களேன். நான் என்ன செத்தா போய்ட்டேன்?" கல்பனா சொல்ல,
"அக்கா!...." என்று ஜீவிதான் பதறிய நேரம் "ஆமா செத்து தான் போயிருப்ப..." என்ற சுதாகர் அதற்கு மேல் அதை பற்றி பேச பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டான்.
"ஏன்க்கா இப்படிலாம் பேசுறீங்க?" கண் கலங்கி அவன் சொல்ல,
"விடு ஜீவி! எது நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும்" என்றவள் சுதாகரை சமாதானம் செய்ய சென்றாள்.
"மாமா! என்னை தான் அடிக்கடி டென்ஷன் ஆகுறேன்னு சொல்லுவீங்க. இன்னைக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க?" கல்பனா சுதாகரிடம் வந்து கேட்டாள்.
"ஆமாம் டி. என்னன்னே தெரியாம நீ இன்னொருத்தன் வீட்ல இருந்து அழுதுட்டு வருவியாம். என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டியாம். நாங்க அப்படியே குளு குளுன்னு சுத்தி வரணுமாம். அப்படித்தானே?"
அவன் கேட்ட கேள்வியில் முகம் வெளுத்தாலும் இறுதி வரிகளில் சிரித்துவிட அவளை முறைத்துக் கொண்டே ஜீவி அருகில் வந்து அமர்ந்தான் சுதாகர்.
"நேத்து தான் இவனை நல்லவன் வல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. அதுக்குள்ள பாவி பய இப்படி அந்த அக்காவை அழ வச்சு அனுப்பிட்டானே! இனி எப்படி அவங்க வீட்டுக்கு போவேன்? லாயர் என்ன நினைச்சாரோ? எதுவுமே பேசாமல் போய்ட்டாரே.. இதுல உண்மைய வேற தெளிவா உளறி வச்சுருக்கேன். ஆண்டவா! லாயர் சார் யுவாகிட்ட எதுவும் கேட்டுட கூடாது. யுவாகிட்ட திரும்ப ஒரு டைம் கேட்டு பார்ப்போமா?" என மனதுக்குள் பலதும் யோசித்த சந்தியா
"ச்ச! இவன்கிட்ட மனுஷன் பேசுவானா? நல்லா தானே இருந்தான் இடையில இவனுக்கு என்னதான் நடந்துச்சோ! அப்பப்ப மிருகமா மாறிடுறான். பேசாமல் கல்பனா அக்காகிட்ட போய் சாரியாவது கேட்டுட்டு வந்துடலாம்" என முடிவெடுத்து வெளியே வந்தாள்.
"எங்கே போற?" வாசல் அருகே செல்லவும் வந்தது அந்த குரல்.
'ஆரம்பிச்சுட்டான்! என்ன பாட்டு பாட போறானோ' மனதில் நினைத்தவள் மெதுவாய் அவன் பக்கம் திரும்ப அவன் லேப்டாப்பில் இருந்து கண்களை அகற்றவே இல்லை.
"நம்மகிட்ட கேட்கலையோ? ம்ம் பிரம்மையா தான் இருக்கும்.." மைண்ட் வாய்ஸ்ஸாக இவள் நினைத்தது சத்தமாய் கேட்டுவிட,
"உன்னை தான் கேட்கிறேன்" என்றான் கண்களை மட்டும் உயர்த்தி பார்த்து.
"அது..." என்று திணறியவள்.. 'தப்பு பண்ணிட்டு அவனே தைரியமா கேட்குறான். சாரி கேட்க போற நீ ஏன்டி மென்னு முழுங்குற' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்
"கல்பனா அக்காவை பார்க்க போறேன். சாரி கேட்க போறேன்" என்றுவிட்டு திரும்ப,
"திரும்ப இங்கே வர்ற பிளான் இல்லைனா நீ போகலாம்" என்ற அவன் குரலில் எரிச்சலுடன் மீண்டும் நின்றாள்.
'மனுஷன்னா கொஞ்சமாவது மனசாட்சி வேணும். இவனை போய் என் தலையில கட்டிவைக்க பிளான் பண்ணிட்டு இருக்காங்க' இவனிடம் மட்டும் மனதில் இருப்பதை பேச முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் நிற்க,
"என்ன முழிக்குற? போகணும்னா நோ அப்ஜெக்ஷன். ஆனால் திரும்பி வரக் கூடாது" என்றான் அவள் புறம் திரும்பி.
"அத சொல்ல நீங்க யாரு? நான் போவேன்" அவள் பிடிவாதமாய் சொல்ல,
"ஹான்! உன் புருஷன்" என்றவனை அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்தாள்.
"என்ன? அப்படி தானே இங்கே சொல்லி வச்சுருக்குற?"
"அதுக்காக?"
"லுக்! என்னோட வழில வந்து நீ தான் தொல்லை பண்ணிட்டு இருக்குற. சாரி கேட்குற அளவுக்கு இங்கே எதுவும் நடக்கல.. எல்லாத்துக்கும் ஆயிரம் காரணம் இருக்கு. உன் வேலைய மட்டும் பாக்குறதுனா பாரு. இல்லை இப்படியே கிளம்பி டெல்லி போய்டு"
அவன் மிரட்ட இவள் பாவமாய் தான் நின்றாள் தன் நிலையை எண்ணி.
'வீட்டுக்கே போய்டலாமோ?' என நினைத்தவள்முன் தந்தை முகம் தெரிய, 'ம்ம்ஹ்ஹ்ம்ம் அதுக்கு இவனே பெட்டெர்' என்பதை போல உள்ளே சென்றுவிட்டாள்.
யுவாவும் அவளை பார்த்தவாறே இருக்க அவன் மொபைல் தன் இருப்பை காட்டியது.
"சொல்லு சூர்யா"
"ஹாய் ண்ணா! எப்படி இருக்கீங்க?"
"ஹ்ம்ம் இருக்கேன் டா. நீ எப்படி இருக்குற?
"ம்ம் நல்லாருக்கேன் ண்ணா. உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன்"
"ஹெல்ப்பா? சொல்லு மா என்ன விஷயம்?"
"ண்ணா! இன்னும் ஃபார்ட்டி டேஸ்ல காலேஜ் முடியுது... போன வாரம் கேம்பஸ் இன்டெர்வியூ நடந்துச்சு அதுல செலக்ட் ஆகிட்டேன்னு எனக்கு மெயில் வந்திருக்கு"
"நீ ஜாப் போகணும்னு என்ன டா அவசியம். அதுவும் வீட்ல விட மாட்டாங்கனு உனக்கு தெரியாதா?"
"அண்ணா ப்ளீஸ்! நான் வீட்லயே எவ்வளவு நாள் இருக்குறது? அதுவும் இப்படியே இருந்தேன்னா உடனே கல்யாணம்னு தான் அம்மா பேசுவாங்க. அதெல்லாம் எனக்கு இப்ப வேணாம். ப்ளீஸ் ண்ணா நான் கொஞ்ச நாள் வேலைக்கு போறேனே" என கெஞ்ச யுவாவும் யோசனைக்கு சென்றான்.
"ஜாப் எங்கே?" என்ற ஒரு கேள்வியில் அவன் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சி அவளுக்கு. ஆனாலும் தயங்கி தயங்கி தான் கூறினாள் சென்னை என்று.
"சென்னையா? நோ சான்ஸ் சூரி. இதுக்கு எப்படி எல்லாரும் சம்மதிப்பாங்கனு நினச்ச?"
"அதுனால தான் உன்கிட்ட கேட்டேன். உன்கூட இருந்தேன்னா கண்டிப்பா அம்மா சரின்னு தான் சொல்லுவாங்க" எல்லாம் முடிவெடுத்து அவள் பேசுவது இப்போது தான் அவனுக்கும் புரிந்தது.
ஆனாலும் அவன் முடியாது என்று கூற, அவனின் தங்கை பேசி பேசியே அவனோடு தங்கவும் சம்மதம் வாங்கினாள்.
எப்ப ஜாயின் பண்ணனும்? எப்படி வருவ? என்ன கம்பெனி? எங்கே இருக்கு? மொத்த விவரங்களையும் அவன் கேட்டு போனை வைத்துவிட 90 சதவீதம் பிரச்சனை முடிந்தது என்றே தோன்றியது அவளுக்கு.
எல்லாம் சரி தான் என்றாலும் சூர்யா கல்பனா இருவரும் சந்தித்தால்? இந்த ஒரு கேள்வி தவிர அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
தன் வாழ்க்கையில் அவள் இல்லை என்றானபின் இவர்கள் சந்தித்தால் மட்டும் என்ன மாறிவிட போகிறது என்று நினைத்தபின் தெளிந்துவிட்டான்.
அங்கே ஜானகியும் தன் மகள் சூர்யாவிடம் வேலைக்கு அனுப்ப முடியவே முடியாது என்றவர் சென்னையில் வேலை, அண்ணனுடன் தங்கப் போகிறேன் என்ற செய்தியில் அமைதியானார்.
ஆனால் இப்போதும் அவர் மனம் தப்பாய் தான் கணக்கு போட்டது. அவனை தன் வசமாக்க சந்தியாவை அனுப்பியவர் இப்போது தன் பிடியில் ஆட்டி வைக்க என மகளை அனுப்பி வைக்க சம்மதித்தார்.
காதல் தொடரும்..