அத்தியாயம் 8
"நான் உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்குற? அவன்கிட்ட உனக்கு என்ன பேச்சு?" எதிர்பார்த்தது போலவே வீட்டிற்கு வந்ததும் யுவா சந்தியாவை கேட்டுவிட,
'அய்யடா! யுவா தவால இட்லிய திருப்பி போட ஆரம்பிச்சுட்டேனே. இட்லி கருகினாலும் விடமாட்டானே!' சந்தியா மைண்ட் குரல் கொடுப்பதை தடுக்க முடியவில்லை.
"உன்கிட்ட தான் கேட்குறேன் சந்தியா" சத்தம் அதிகம் இல்லாமல் அழுத்தமாய் கேட்க,
"ப்ளீஸ் யுவா! நீ என்னை ரொம்ப டவுன் பண்ற. என் வீட்லயே நான் அடிமை மாதிரி இருந்தேன். மூச்சு முட்டி போய் உன் அம்மாவை ஏமாத்தி இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீ அதை பண்ணாத இதை பண்ணாதனு சொல்றதை... என்னால... ஏத்துக்க முடியல. நீ பண்ணின தப்புக்கு நான் சாரி சொல்ல போனேன். அதையும் செய்யாதேனு சொல்ற. இதுக்கு நான் அங்கேயே இருந்திருக்கலாம்"
ஊரையே ஏமாற்றி மணக்கவே விரும்பாத ஒருவனுடன் இருந்து கொண்டு அவள் வைக்கனையாய் வியக்கானம் பேச இவனுக்கு அவளை முறைப்பதை தவிர வேறென்ன செய்திட முடியும்?
"உனக்கு புரியல.. என்னால புரிய வைக்கவும் முடியாது. சுந்தரம் அங்கிள பாத்துக்க சொல்லி அருண் சொன்னதால தான் என்னால எதுவும் செய்ய முடியல.. அருண் வந்ததும் நான் இங்கேருந்து கிளம்பிடுவேன். இனி உன் இஷ்டம்" யுவா சொல்ல,
"அப்புறம்?"
"எங்கேயாவது போகணும்"
"அப்ப ஒன் மன்ந்த் தான் இங்கேன்னு சொன்ன? அப்ப டெல்லி" என்றாள்.
"ப்ச்! மாத்திட்டாங்க.. ஒன் இயர்"
"வாவ்! ஆமா மாத்திட்டாங்களா இல்ல மாத்திகிட்டியா?"
"உனக்கெதுக்கு அதெல்லாம்? நீ எப்ப கிளம்புற?"
"ம்ம் யோசிச்சு சொல்றேன்" என்றவள் நழுவி ஓடிவிட்டாள்.
நிஜமாகவே இது அவனாய் மாத்திக் கொண்டது தான். அதுவும் கல்பனா இங்கு இருப்பது தெரிவதற்கு முன்பே மாற்றிக் கொண்டது.
டெல்லி போகக் கூடாது.. தன்னால் அங்கே இயல்பாய் இருக்க முடியாது என்பதற்காக அவன் எடுத்த நடவடிக்கை அது. இப்போதும் சென்னையில் அதே இடத்தில் வேலை என்பதை தவிர அனைத்தையும் மாற்றிக் கொள்ள தயார் தான். அதற்குள் அருண் வந்துவிட வேண்டும்.
இவள் இருக்கும் இடத்தில் இருந்து தூரமாய் சென்றிட வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்.
"ஹெலோ! என்ன நாத்தனாரே எனக்கு போன் எல்லாம் பண்ணியிருக்க? அதிசயமா இருக்கே? என்கிட்ட பேசவே மாட்டன்னுல்ல நினச்சேன்?" சந்தியா சூர்யாவிடம் கேட்டாள்.
"எனக்கும் உன்கிட்ட பேச இஷ்டம் இல்லை தான் அண்ணி. ஆனாலும் இப்ப அண்ணா கூட நீ தானே இருக்குற? வேற என்ன பண்றது?" அவளும் பதிலுக்கு கோபத்தை கிண்டலாய் காட்டினாள்.
"ஹ்ம்ம்! உன்னை எல்லாம் கடவுள் தான் காப்பாத்தணும் டியர். சரி சொல்லு என்ன விஷயம்?" சந்தியா.
"அண்ணாக்கு இன்னைக்கு பர்த்டே"
"ஆமா உன் அண்ணாக்கு இது மட்டும் தான் இப்ப தேவை"
"இப்ப நீ நான் சொல்றதை செய்யலைனா உங்க அப்பாக்கு கால் பண்ணி ஏதாவது சொல்லிடுவேன்" சூர்யா சொல்ல, அடுத்த நொடி அவள் காலில் விழாத குறையாக சரணடைந்தாள் சந்தியா.
"யுவா என்கிட்டயும் எரிஞ்சு தான் விழுறான் டி. இப்ப போய் சர்ப்ரைஸ் கேக், பர்த்டே பார்ட்டினு சொன்னேன்னு வையேன்.. அவ்வளவு தான் உன் அண்ணா கண்ணாலயே என்னை எரிச்சிடுவான்"
வீட்டில் இருந்த போதும் அவன் பெரிதாய் பிறந்தநாள் கொண்டாட மாட்டான் தான். ஆனால் அன்னை அவனுக்கென தனியாய் ஸ்பெஷலாய் சமையல் செய்து அசத்தி விடுவார் அந்த நாளை.
"அதெல்லாம் நான் பண்ணினதுனு சொன்னா அண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாங்க" என்றவள் சிந்தனைகளில் பழைய ஞாபகங்கள் ஓட,
"அவ ஒருத்தி மட்டும் என் அண்ணா வாழ்க்கைல வராமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?" மனதில் ஓடிய வார்த்தைகள் வாய் மொழியாவும் வந்துவிட இந்த பக்கம் கடுப்பாகி விட்டாள் சந்தியா.
"அடியேய்! உன் அம்மாவைத் தவிர ஊர்ல இருக்குற பொண்ணுங்க எல்லாம் கெட்டவங்கன்ற எண்ணத்தை முதல்ல மாத்து. இத்தனை வருஷமா அவங்க கூட இருந்தும் அவங்க புத்தி உனக்கு தெரியாம போச்சுல்ல? இல்ல இல்ல.. நீயும் அவங்க பொண்ணு தானே? அப்படி தான் இருப்ப" என்று கோபத்தில் சந்தியா சொல்லிவிட பதிலுக்கு சூர்யா சத்தமிட, மினி போரில் இருவரும் சளைச்சவர்கள் இல்லை என்பதை போல இருவரின் வாயும் நீண்டு பின் அமைதியானது.
"உன்கிட்ட போய் வாயக் குடுத்தேன் பாரு. இப்ப என்ன? உன் அண்ணாக்கு கேக் வாங்கி கொடுக்கணும் அவ்வளவு தானே? பண்றேன்.. பண்ணி தொலைக்குறேன்" என்றவள் போனை அணைத்துவிட்டு விதியே என்று நொந்து கொண்டு கிளம்பினாள்.
"ஜீவி! கல்பனா ஹஸ்பண்ட் நேம் என்ன?" தனியாய் அழைத்து எடுத்ததும் போட்டு உடைத்தான் சுதாகர்.
"மாமா!"
"நீ அப்புறமா ஷாக் ஆகிக்கோ.. இப்ப பதில் சொல்லு" என அவன் உறுதியாய் நிற்க,
"அக்கா இதுவரை உங்ககிட்ட சொன்னதில்லையா மாமா?" மீண்டும் கேள்வியே கேட்பவனை கொல்லும் வெறி வந்த போதும் முறைத்துக் கொண்டு அவன் நிற்க,
"இல்ல... அக்காவே சொல்லலைனா... நான் எப்படி மாமா? நீங்க அக்காகிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோங்களேன்" நீ அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் என நின்றான் ஜீவி.
"உன் அக்காவே தேவல டா. அவளை இப்படியே பாத்துட்டு இருக்குறது தான் உன்னோட ஆசைனா எப்படியோ போ. என்னால என்ன பண்ண முடியுமோ நான் பண்ணிக்குறேன்" என்றவன் நகரப் பார்க்க அவன் கைகளைப் பிடித்தான்.
"சாரி மாமா! அக்காக்கு புடிக்காதோன்னு தான்.... அவரு பேரு யுவராஜ்..." என்று தயங்க, முழு தெளிவு சுதாகருக்கு.
"இன்னொன்னு சொல்லணும் மாமா..." ஜீவி இழுக்க,
'மேலே அவன் இருப்பதை பார்திருப்பானோ?' என்ற நினைப்புடன் சுதாகர் அவனை பார்க்க,
"நான் ஜாயின் பண்ணிருக்குற ஆபீஸ்ல அவரு தான் டீம் லீடர். எனக்கே நேத்து தான் தெரியும். ஆனால் அக்காகிட்ட நான் சொல்லல"
இதை என்னவென்று சொல்ல? நிச்சயமாய் புரியவில்லை சுதாகருக்கு. இதை சரி செய்யவா இல்லை முடித்து விடவா? கல்பனா மட்டுமே பாதிக்கப்பட்டவள் எனதான் இவ்வளவு நாளும் அவன் நினைத்திருக்க, இரண்டு வருடமாக அன்னையிடமும் பேசாமல் வீட்டிற்கும் செல்லாமல் யுவா இருப்பது கொஞ்சம் யோசிக்க வைத்தது.
"நீ பேசினியா?"
"இல்ல மாமா! அவரால தானே அக்கா இப்படி கஷ்டப்படுறாங்க?"
"அடேயப்பா! எப்ப வந்தது இந்த ஞானோதயம்?"
"மாமா...."
"ப்ச்! சரி விடு. அவன் மேல தப்பு இல்லைனா நீ என்ன செய்யலாம்னு இருக்க?"
"அப்ப அக்கா மேலே தான் தப்புன்னு சொல்றிங்களா மாமா?" கோபமாகவே கேட்டான் ஜீவி.
"உறுதியா சொல்லல ஜீவி. ஆனால் இருக்கலாம்ல?"
"இல்ல.. அக்கா பாவம்... ஏன் அக்கா மேல சந்தேகப்படுறீங்க?"
"ஹேய் லூசு.. சந்தேகம் இல்லை டா. ஏதோ ஒரு குழப்பம் நடந்திருக்கு. கல்ப்க்கு புரியாமல் கூட இருக்கலாம்"
"என்ன மாமா சொல்றிங்க? ஒன்னுமே புரியலையே!"
"புரிஞ்சிருந்தா இந்த வேலைய எப்பவோ நீ பார்திருப்பியே" என்றவனை பாவமாய் பார்த்தான் ஜீவி.
ஜீவி அன்னையின் மேல் உள்ள கோபத்தை இப்படி தான் இவன் மேல் அடிக்கடி காட்டி விடுகிறான் சுதாகர்.
"ஓகே கூல். நீ அவன்கிட்ட எதுவும் பேச வேண்டாம். அவனும் பேச வாய்ப்பில்லை.. பார்க்கலாம்" என்றவனுக்குள் பல சிந்தனைகள்.
"சரி மாமா.. நான் ரூம் பார்த்துட்டேன்.. நான் அங்கே கிளம்பவா? வீக்என்டுக்கு இங்கே வந்துடுறேன்"
"போறவன் அப்படியே போக வேண்டியது தானே? என்கிட்ட என்ன கேள்வி? உங்க இஷ்டத்துக்கு தானே எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்க!" என்றவன் சென்று விட்டான்.
அவன் எவ்வளவு கோபம் கொண்டாலும் ஜீவி இவர்களுடன் தங்குவதாய் இல்லை என்பதில் தெளிவாய் இருந்தான்.
கல்பனாவிடமும் அவன் சொல்ல அவள் கோபம் எதுவும் கொள்ளவில்லை. உன் விருப்பம் என்றுவிட்டாள்.
கேக் வாங்கிவிட்டு திரும்பிய சந்தியா சுதாகரை பார்த்தவள் மறுபடியும் யுவாவின் வாயில் மாட்டிக் கொள்ள கூடாது என நகர பார்க்க அவள் முன்னே வந்துவிட்டான் சுதாகர்.
"என்ன கையில?" என்றவாறு.
"அட போங்க டா.. ஆமா உங்க ரெண்டு பேருக்கும் என்ன வாய்க்கா தகராறு? அவன் உன்கிட்ட பேசினால் எரிஞ்சு விழுறான். நீ அவன் குடும்பத்தை நோண்டுற... என்னை பைத்தியம் ஆக்காமல் விட மாட்டிங்க போல" சோர்ந்து அங்கேயே ஒரு டேபிளில் அமர்ந்து விட்டாள்.
அவளருகே சிரிப்புடன் சுதாகர் அமர, கையில் இரு கூல் ட்ரிங்க்ஸ்சுடன் சுதாகரை தேடிய ஜீவிதனின் கண்களில் அவன் ஒரு பெண்ணுடன் இருப்பது தெரியவும் ஆச்சர்யத்துடன் அவனருகே வர, சுதாகர் அவனை அருகே அமர சொன்னான்.
"குடுப்பா! இவனுங்கள சமாளிக்குறதுக்குள்ள எனக்கு வயசாகிடும் போல" என்றவாரே அவள் ஒன்றை எடுத்து பருக,
'சுதாகர் மாமா கூட இவ்வளவு க்ளோஸ்ஸா பழகுற பொண்ணு யாரா இருக்கும்?' என்று அவன் யோசிக்க, மீண்டும் ஒன்றை வாங்கி வர அனுப்பி வைத்தான் சுதாகர்.
"என்ன ஸ்பெஷல்?" என்றாவறு அவன் கேக்கை பார்க்க,
'அடுத்து நீயா டா?' என நினைத்தவள், "உன் பாஷைல சொல்லனும்னா உம்முனா மூஞ்சிக்கு இன்னைக்கு பர்த்டே.. என் பாஷைல சொல்லனும்னா சிரிக்க தெரியாதவனுக்கு பர்த்டே" என்று சலிப்பாய் சொல்லிவிட்டு முழுதாய் அதை குடித்து முடித்தாள்.
"பார்றா! பர்த்டே கொண்டாடுற அளவுக்கு ரெண்டு பேரும் க்ளோஸ்ஸா?" என மீண்டும் தூண்டிலைப் போட்டான் சுதாகர்.
"வாயக் கிளறாத வக்கீலு! அவன் தங்கச்சி தொல்லை தாங்க முடியாமல் வாங்கிட்டு போறேன். அவன் இன்னும் என்ன ஆட்டம் ஆட போறானோ?" என்று சொல்லவும் வந்த ஜீவிக்கு அவளின் உரிமையான பேச்சில் மீண்டும் ஆச்சர்யம் தான்.
"இவங்க யாரு மாமா?" அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் ஜீவி கேட்டுவிட,
"வேண்டியவங்க தான்" என்ற பதிலில் இன்னுமே கண்கள் விரிந்தது ஜீவிக்கு.
"க்கும்... ரொம்ப வேணும் தான் எனக்கு.. சிங்கத்துக்கு பயந்து புலி வாலை புடிச்ச கதையா ஊரு விட்டு ஊரு வந்து நாயா அழைஞ்சுட்டு இருக்கேன்" என்று ஜீவியிடம் சந்தியா சொல்ல, சுதாகர் கொஞ்சம் ரசித்து சிரித்ததாகவே தோன்றியது ஜீவிக்கு.
அதற்கும் விடாமல் "என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது" என சந்தியா கவுண்டர் கொடுக்க கேட்டிருந்த இருவர் முகத்திலுமே புன்னகை.
சில நொடிகளில் மீண்ட சுதாகருக்கும் இதுவே சரியான சந்தர்ப்பமாய் தோன்ற, ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவன் பேச ஆரம்பித்தான்.
காதல் தொடரும்...

Last edited: