அத்தியாயம் 29
சென்னை அண்ணா நகரில் உள்ள அந்த பிரபல மண்டபம் அலங்காரத்தில் ஜொலிக்க, வாசலில் கேரள மேளம் ஒரு புறமும் மற்றொரு புறம் பன்னீர் தெளித்து வரவேற்பும் நடந்து கொண்டிருந்தது.
கேட் அருகில் மணமக்கள் பெயர்.. சுதாகர் வெட்ஸ் சந்தியா.
நாளை காலையில் திருமணம் இப்போது ரிசெப்ஷன். இப்படி ஒரு திருமணம் அதுவும் தன் திருமணம் சென்னையில் எதிர்பார்க்கவே இல்லை சந்தியா.
நேரமும் காலமும் அவளுக்கு அதிகமாய் கொடுக்கவில்லை சுதாகர். யுவாவுடன் கல்பனாவை சேர்த்து வைத்த அடுத்த ஒரே மாதத்தில் தான் நினைத்தபடி இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான். அவனுக்கு சப்போர்ட் தி கிரேட் யுவராஜ்.
மணமகள் அறையில் இருந்து சந்தியாவை கல்பனாவும் சூர்யாவும் மனமேடைக்கு அழைத்து வர, சுதாகர் யுவராஜ் மற்றும் ஜீவிதனுடன் வருகை தந்தான்.
ஜீவா சுந்தரம் தாத்தா மடியில் சமத்தாய் முன் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கல்பனாவை தன்னருகே அழைத்துக்கொண்டு முதல் வரிசை முதல் இருக்கையில் அமர்ந்து கல்பனாவை அருகே அமர வைத்து அவள் தோளில் கைபோட்டபடி அமர்ந்து மேடையை கவனித்த யுவாவின் முகத்தில் வற்றாத புன்னகை.
இவ்வளவு தான்.. சுதாகர் தன்னிடம் கேட்பவர்களுக்கு., தனது தொழில்முறை உறவு நட்பு என வந்திருந்தவர்களுக்கு இந்த கூட்டத்தை மட்டும் தான் தன் சொந்த உறவுகளாய் அறிமுகப்படுத்தினான்.
அதற்காக யாரையும் அழைக்காமல் இல்லை அவன்.. இதோ சிவலிங்கம், பானுமதி, செல்லதுரை, வசந்தா அனைவரும் வருகை தந்திருகின்றனர். கூடவே தி கிரேட் பிசினஸ்மேன் வித்தார்த், ஷீபா வித்தார்த் உடன் ஜானகியும்.
அவர்களுக்கு பார்க்க மட்டுமே அனுமதி.. இதுவும் சுதாகரின் ஏற்பாடு தான்.
அன்று சந்தியா ஒரு மாதம் திருமணத்திற்கு பின் ஊரில் இருந்தே ஆக வேண்டும்.. பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்று சொல்லியிருக்க, அப்போதே அவர்களுக்கான தண்டனையை யோசிக்க ஆரம்பித்துவிட்டான் சுதாகர்.
அன்று யுவா கல்பனாவை மேலே சமாதானம் பேச விட்டுவிட்டு சூர்யா, சந்தியா, சுதாகர், மூவரும் கீழே இருந்திருக்க இரண்டு மணி நேரத்திற்கு பின் சந்தியா தான் மாடிக்கு சென்றாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ நான் உள்ளே வர போறேன்.." யுவா வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தாள் சந்தியா.
எப்போது யுவா கல்பனாவை அணைத்திருந்தான் என்பது இருவருக்குமே தெரியாது.. நீண்ட நாட்களுக்கு பிறகான உயிர் தீண்டலில் வேறெதுவும் நினைவின்றி எவ்வளவு நேரம் என கூட அறியாமல் இருவரும் அப்படியே அதே நிலையில் நின்றிருக்க, சந்தியாவின் அழைப்பில் கல்பனா தான் முதலில் சுதாரித்தாள்.
யுவாவும் ஒரு புன்னகையுடன் விலகியவன் வாசலை பார்க்க கண்களை மெதுவாய் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தாள் சந்தியா.
"ஐம் வெரி சாரி லவ் பேர்ட்ஸ்! இன்னைக்கு முழுக்க கூட நீங்க இந்த வீட்டை விட்டு வெளிவர மாட்டிங்கனு எங்களுக்கு தெரியும்.. ஆனா நாங்க பாவம் இல்லையா?" என்றவள்
"யுவா! உன் தங்கச்சிகிட்ட மதியம் உயிரை கொடுத்து பேசினேன்... கொஞ்சம் கூட மதிக்காமல் இன்சல்ட் பன்னிட்டு போய்ட்டா.. அந்த காண்டுல நானும் சாப்பிடவே இல்ல... பசிக்குது... சாப்பிட ஹோட்டல் போலாமா?" நான் ஸ்டாப்பாய் பேசிவிட்டு இருவரையும் பார்க்க,
"ஓஹ்! சாரி சந்தியா" என்றவன் கிளம்பிவர கல்பனாவும் கீழே சென்று தயாரானாள்.
எங்கிருந்ததாம் இத்தனை மலர்ச்சி அந்த இருவரிடத்திலும்... பார்த்த மூவரும் கல்பனா யுவாவை கிண்டல் செய்தபடியே தான் இருந்தனர்.
சாப்பிட்டேன் என பெயர் பண்ணி சாப்பிட்டு எழுந்து கொண்டனர் கிட்டத்தட்ட அனைவருமே! கொஞ்சம் ரிலாக்ஸ் மோடுக்கு வரவே அனைவரையும் வெளியே அழைத்து வந்திருந்தான் சுதாகர்.
"தேங்க்ஸ் சந்தியா! அண்ட் சாரி... நிஜமா நீ என் வாழ்க்கையையே எனக்கு திரும்ப கொடுத்திருக்க... உன்னை என்னலாம் பேசி நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன்.." யுவா சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தான் சுதாகர்.
"நீ அசிங்கப்படுத்தினாலும் கழுத்தை புடிச்சி வெளில தள்ளினாலும் போறதுக்கு மேடம்க்கு வேற இடம் இல்ல.. சோ அப்பப்ப உன்னை நாலு வார்த்தை சொல்லி திட்டி மனச தேத்திக்குவா.. இல்ல தியா?" சுதாகரின் இயல்பான பேச்சு தான் அங்கே மனநிலையை அனைவருக்கும் மாற்றியது.
"வக்கீலு! போட்டு குடுக்குறியா? நான் சொல்லவா? யுவா.. இந்த வக்கீலு உனக்கு ஒரு பேரு வச்சுருக்கு.. என்னனு கேளேன்" சந்தியா சொல்ல, புரையேறிவிட்டது சுதாகருக்கு.
கல்பனா அமைதியாய் சிரிப்புடன் சாப்பிட யுவாவும் சூர்யாவும் இவர்கள் பேச்சில் என்னவாய் இருக்கும் என யோசித்தபடி சிரிப்புடன் அவனை பார்த்தனர்.
"நோ தியா! வேணாம்!" சுதாகர் சொல்ல,
"உம்முனா மூஞ்சி!" என்றாள் கல்பனா தலைகுனிந்து..
"கல்ப் யூ டூ!" சுதாகர் சொல்ல, "ஆஹாங்!" என யுவா சத்தமாய் சிரித்தான்.
கல்பனா, சூர்யா இருவருக்குமே தெரியும் அவன் எப்படிப்பட்டவன்.. எப்படி சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று.. அதனாலேயே அந்த பெயரில் அமைதியாய் இருக்க,
"சும்மா யுவா! தோ இவ தான் உன்னை அப்படி சொல்ல சொன்னா" என்றான் சுதாகர்.
சுதாகர் சந்தியா இருவரின் அரட்டையையும் யுவா கவனித்தவன் அப்போது எதுவும் கேட்கவில்லை.
"அப்புறம் யுவா நாளைக்கு கொஞ்சம் பிரீயா? பேசலாமா?" சுதாகர் தீவிரமாய் கேட்க,
"சூர்" என்றான்.
அன்றிரவு யுவா கல்பனாவிற்கு தனிமை கொடுத்து கீழே அவர்களை விட்டு மேல் வீட்டில் சந்தியா சூர்யாவுடன் இருந்து கொள்ள சுதாகர் ஜீவாவை தூங்க வைத்தவன் யோசித்து முடிவுக்கு வந்தவன் காலையில் யுவாவிடம் பேசவும் குறித்துக் கொண்டான்.
"சாரி யுவா! என்னால.." கல்பனா யுவாவிடம் பேச வர, அவள் வாயை கைகளால் மூடினான் யுவா.
"வேண்டாம் டா.. ரெண்டு பேருமே கஷ்டப்பட்டுட்டோம்.. நான் தனியா.. நீ நம்ம ஜீவாவோட.. இனி அதை நினைக்கவே வேண்டாம்.." என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.
"எப்பவாச்சும் என்னை நினைச்சுப்பீங்களா யுவா?" அவன் அணைப்பில் இருந்தே கேட்க, அப்படியே குனிந்து அவளை பார்த்தான்.
'இவ்வளவு சொன்ன பின்னாடியும் உனக்கு இந்த கேள்வியா?' என்று அவன் பார்க்க, அவனுக்குள் புதைந்து கொண்டாள்.
"ப்ளீஸ் கல்கோனா! இனி எதையும் நினைக்காத! நான் இப்ப எவ்வளவு நிம்மதியா இருக்கேன்னு வார்த்தையால எல்லாம் சொல்ல முடியாது.. வாழ்க்கைல இனி கிடைக்கவே கிடைக்காதுன்னு நான் நினச்ச நிம்மதி இப்ப என்கிட்ட வந்து சேர்ந்திருக்கு..அதுவும் கூட ஒரு பொக்கிஷத்தோட.. இனி என்ன நடந்தாலும் உன்னை எங்கேயும் நான் விடறதா இல்ல டா" என்றவன் அவளை அணைத்தவாறே சில நிமிடங்களில் தூங்கிப் போனான்.
தினம்தினம் தூங்கவென பலமணி நேரம் நடந்து நடந்து தூக்கம் வராமல் பழைய நினைவுகளில் நீந்தி தூக்கம் என்ற ஒன்றையே மறந்து போயிருந்தவனுக்கு இன்று தான் அது கைக்கு கிடைத்திருக்கிறது.
அவன் அணைப்பில் தூங்கியவனை பார்த்தவாறே விழி மூடாமல் பார்த்திருந்தாள் கல்பனா. இது நிஜம் என்பதை நம்பவே அத்தனை கடினமாய் இருந்தது அவளுக்கு.
இந்த நிமிடம் வாழ்வில் வரவே வராது என நினைத்தவள் கண் மூடினால் அனைத்தும் கனவாய் கலைந்திடுமோ என அவனையே விழி மூடாது பார்திருக்க இருவரின் இரவும் மனமும் அத்தனை அமைதியாய் நிம்மதியாய் கடந்தது.
சந்தியா காலையில் பாலோடு ஜீவா பின்னே ஓடிக்கொண்டு இருக்க, சுதாகர் சோஃபாவில் அமர்ந்து அதை புன்னகையோடு பார்த்திருந்தான்.
"இங்கே பாரு டா! உன் அம்மா மாதிரி இல்ல நான்.. நீ குடிக்கலைனா நான் குடிச்சுடுவேன்.." ஜீவாவிடம் அவள் சொல்ல, "குடி" என அவனே அவள் வாயருகே கிளாசை தள்ளிட,
சந்தியாவிடம் இருந்து பாலோடு ஜீவாவையும் வாங்கி அதை பருகவும் வைத்தாள் சூர்யா.
"ம்ம்க்கும்... ஒஹ்! அத்தை பாசமா? நடக்கட்டும் நடக்கட்டும்" சந்தியா கிண்டலோடு விலகிவிட்டாள்.
அப்போது தான் வந்து சேர்ந்தான் ஜீவிதன். இரவே அழைத்து அவனுக்கு அனைத்தையும் கூறிவிட்டான் சுதாகர்.
"வா ஜீவி!" என்று சுதாகர் வரவேற்க, திரும்பி அவனை பார்த்த சூர்யா தயக்கமாய் ஜீவாவிடம் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
"எப்படி மாமா? ஒரே நாள்ல?" ஜீவி கேட்க,
"தியா பேச்சை கேட்காம இருந்திருந்தாலே எல்லாம் நல்லபடியா நடந்திருக்கும் போல டா.." சந்தியாவை வம்பிலுக்க, முறைப்புடன் நின்று கொண்டாள் சந்தியா.
யுவா காலையிலேயே முகத்தில் இருந்த தாடியை எடுத்திருக்க சந்தியா அவனை ஒரு வழியாக்கிவிட்டாள்.
"அடப்பாவி யுவா! இவ்வளவு களையான முகத்தையா அந்த தாடிக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த..?" என்று கேட்க,
"ஹப்பா! இப்ப தான்ண்ணா யுவாண்ணாவை பாக்குற மாதிரி இருக்கு. இப்படி உன்னை பார்த்து எத்தனை நாள் ஆச்சு?" சூர்யா சொல்ல,
"ஏன் தியா! என்னை விட யுவா அழகா என்ன?" என்று கேட்ட சுதாகரை உடனே ஆமாம் என்று கூறி வெறுப்பேற்றி விட்டாள் சந்தியா.
அப்போது தான் ஜீவியை கவனித்த யுவாவும் அவனை பார்த்து புன்னகைக்க தயக்கமாய் நின்ற ஜீவியும் புன்னகைத்தான். அப்போதைக்கு அவ்வளவு தான் செய்ய முடிந்தது இருவராலும்.
மேல் வீடும் கீழ் வீடுமாய் இவர்களின் சத்தத்தில் அல்லோலப்பட்டது அந்த காலனி.
"சொல்லுங்க சுதாகர் ஏதோ பேசணும் சொன்னிங்களே?" யுவாவே வந்து கேட்க, சந்தியாவை பார்த்தவன் யுவாவிடம் பேச ஆரம்பித்தான்.
"அது யுவா! நானும் தியாவும் விரும்புறோம்" சுதாகர் சொல்ல, ஆச்சர்யமாய் யுவாவோடு கல்பனாவும் பார்க்கும் நேரம்,
"வக்கீலு பொய் சொல்லாத! கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்ட சரின்னு சொன்னேன்.." சந்தியா அவனை திருத்த
"தியா! பேச விடேன்.."
"சரி பேசு! ஆனா பொய் சொல்லாத!" அவள் சொல்ல அவளை முறைத்தவன் யுவாவிடம் தொடர்ந்தான்.
"நெக்ஸ்ட் மந்த் சென்னையிலே மேரேஜ் வச்சுக்கலாம் நினைக்குறேன்" என்றதும் சந்தியா "என்னது?" என்று அவனருகே வர, கல்பனா, யுவா, ஜீவி, சூர்யா அனைவருமே அதிர்ச்சி, குழப்பம் என மாறி மாறி அவனை பார்த்தனர்.
"வெயிட் தியா! நான் சொல்றதை கேளு ஃபர்ஸ்ட்!" என்றவன் தன் விருப்பம் திட்டம் என்ன என கூறவும் அமைதியாய் தான் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பெரிதாய் மறுக்க எந்த காரணமும் இல்லை.. சுதாகர் பெற்றோர், கல்பனா, யுவா பெற்றோரோடு சேர்த்து சந்தியாவின் பெற்றோரும் பெரிதாய் மகளுக்கு நல்லது செய்ய என எதுவும் நினைத்திடவில்லையே!
"ஓகே சுதாகர்.. உங்க விருப்பம்.. ஆனா டெல்லில சந்தியா பரேன்ட்ஸ் மட்டும் இன்வைட் பண்ணுங்க.. வேற யாரும் தேவையில்லை" ஜானகியை தவிர்க்க அவன் சொல்ல,
"இல்ல யுவா! அவங்க வரட்டும்... நீங்க பேசுறது பேசாதது.. அவங்கள நாம ஏத்துக்குறது எல்லாம் நம்ம விருப்பம் தான்.. இது அவங்களுக்கு சான்ஸ் கூட இல்ல.. ஜஸ்ட் நம்ம சந்தோஷம் இது தான்னு அவங்களுக்கு தெரியட்டும்.." சுதாகர் சொல்ல,
"ஆமாம் யுவா! எனக்கு என் அப்பா அம்மாகிட்ட பேச தான் பயம்.. அவங்களை வக்கீலு பாத்துப்பார்.. ஜானகிய சும்மா புழிஞ்சி எடுத்திடுறேன்.." சந்தியா முதலில் எப்படி இது சாத்தியம் என நினைத்தவள் சுதாகரின் தெளிவான திட்டமிடலில் சம்மதித்தாள்.
"ஹ்ம்ம்.. அப்ப ஓகே.. கலக்கிடலாம்.." யுவாவும் உற்சாகமாய் சொல்ல, உடனே அனைத்தையும் தயார் செய்தனர்.
சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு திருமண வேலை நடந்தால் எப்படி துரிதமாய் நடக்குமோ அப்படி தான் வேலைகள் நடந்தன.
திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க, முதலில் டெல்லி செல்ல முடிவு செய்தான் சுதாகர்.
"தியா! நான் இருக்கேன்ல.. உன் அப்பாவை நான் பாத்துக்குறேன்.. வா போலாம்" சுதாகர் அழைக்க, முடியவே முடியாது என சாதித்தாள் சந்தியா.
வித்தார்த்தை பார்த்தாலே அவ்வளவு பயம். இப்போதும் திருமணம் பெற்றவர்களை எதிர்த்து என்று நினைத்து பயம் இருக்கத்தான் செய்கிறதே தவிர வேறு எந்தவித உறுத்தல்களும் இல்லை.. அது தேவையும் இல்லை தான்.
ஜானகியை வைத்து விளையாடி அன்னை சம்மதம் மூலம் சென்னை வந்தவளுக்கு மீண்டும் அங்கே சென்றால் நிச்சயம் திரும்பி வருவோம் என்றே தோன்றவில்லை.
"லாயர்.. ஆயிரம் பேர் கூட ஆயுதம் இல்லாமல் சண்டை போட சொல்லு.. வாயாலே அவங்களை எல்லாம் வண்டி ஏத்திடுவேன்.. ஆனா எங்கப்பாகிட்ட மட்டும் கூப்பிடாத!" சந்தியா சொல்ல,
"சரி ஓகே சுதாகர்! நானும் கல்பனாவும் போறோம்.. யாருக்கெல்லாம் குடுக்கணுமோ கொடுத்திடலாம்" யுவா சொல்லவும் பயத்தில் கல்பனா அவனை ஒட்டி நிற்க, அவளை பார்த்து புன்னகைத்தான் யுவா.
"இது சூப்பர்! அப்படியே சும்மா கெத்தா போயி ஜானகி முன்னாடி ரெண்டு பேரும் கூட ஜீவா குட்டியும் நில்லுங்க.. அப்ப போகும் பாரு ஜானகி மூஞ்சி..." கண்முன்னே அதை நினைத்து பார்த்து சந்தியா சிரிக்க, அவள் தலையிலேயே கொட்டினான் சுதாகர்.
"உனக்கெல்லாம் வாய் மட்டும் தான்.. வித்தார்த்னு சும்மா சொன்னா கூட அதையும் மூடிக்குவ.." சுதாகர் திட்ட அதையெல்லாம் காதில் வாங்கவில்லை சந்தியா.
"ஓகே யுவா! அப்ப நானும் தியாவும் ஊருக்கு போய் அங்கே இருக்கவங்களுக்கு கொடுத்துட்டு வர்றோம்" என்று சொல்ல ஜீவி தானும் வருவதாய் கூறிய அவர்களோடு சென்றான்.
சூர்யாவிற்கு இப்போதும் ஜானகி கால் செய்வார். ஆனால் இன்னும் சூர்யா எதையும் அவரிடம் சொல்லியிருக்கவில்லை. யுவா தான் தடுத்திருந்தான். இவனே கல்பனாவுடன் ஜானகி முன்சென்று நிற்க வேண்டும் என நினைத்திருக்க இப்போது சந்தியாவும் செல்லவில்லை என்றதும் உடனே கிளம்பிவிட்டான் கல்பனாவுடன். சூர்யாவை வேண்டாம் என்ற போதும் அவளும் வலுக்கட்டாயமாக அவர்களுடன் சென்றாள் தன் அன்னையை பார்க்க.
அந்த பங்களா முன் இப்போது ஜீவாவுடன் நிற்கும் போது கல்பனாவின் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
இரண்டு வருடங்களுக்கு முன் வயிற்றில் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய தினம் கண்முன் வர இன்னும் கெட்டியாய் யுவா விரல்களை பிடித்துக் கொண்டாள் கல்பனா.
யுவாவும் தான் இறுதியாய் வந்த நாளை தான் நினைத்து நின்றான். அவனும் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.
அவர்களுக்கு முன் "அம்மா அம்மா" என்று அழைத்தவாறே ஓடியிருந்தாள் சூர்யா.
"என்ன டி வர்றதா முன்னாடி சொல்லவே இல்ல?" என கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்த ஜானகி வாசலில் வந்து கொண்டிருந்தவர்களை பார்த்து அப்படியே நின்றுவிட்டார்.
"யுவா?" என்றவர் பேச்சச்சு நின்றார். கல்பனா என்ற ஒருத்தியை மீண்டும் தான் பார்ப்போம் என்றே அவர் நினைக்கவில்லை.. அதுவும் மகனோடு கையில் குழந்தையோடு வர கண்கள் தெறித்துவிடும் போல இருந்தது.
"இப்ப தான் நம்ம வீட்டுக்கே ஒரு அழகு வந்த மாதிரி இருக்கு இல்ல ம்மா?" சூர்யா கேட்க, அவளின் பேச்சும் காதில் கேட்டதில் குழம்பிப் போனார்.
"சூர்யா.. இவ.. இவ எப்படி?" என்ன எப்படி கேட்பதென்றே தெரியவில்லை அவருக்கு.
"அண்ணி தான் மா.. நாம தொலைச்ச தங்கத்தை அண்ணா வைரத்தோட கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திருக்காங்க.." எவ்வளவு மாற்றம் சூர்யா பேச்சினில்?
"நீயுமா சூர்யா? அவ பண்ணினது எல்லாம் மறந்து போச்சா?" ஜானகி மகளிடம் கேட்ட போது அவர்கள் அருகிலேயே வந்திருந்தனர்.
"மறக்கல மா.. மறந்திருந்தா அவ்வளவு அருவருப்பையும் தாண்டி உங்க முன்னாடி இப்படி நான் நின்னுருக்கவே மாட்டேன்.. உங்களுக்கு பொண்ணா பொறந்ததுக்கு நான் என்னையே அழிச்சுக்கணும்னு தோணுது.."
தாங்கவே முடியவில்லை சூர்யாவால்.. எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்? அத்தனையையும் பொய்யாய் அல்லவா உபயோகித்திருக்கிறார்!
"சூர்யா!" கல்பனா தான் அவளை அமைதிப்படுத்த அவளருகே சென்றாள். அம்மா இல்லாமல் வளர்ந்தவளுக்கு அன்னையை எதிர்த்து பேசும் சூர்யாவை நினைத்து கவலையாய் இருந்தது. அதுவும் கூட ஜானகிக்காக தான். மகள் அன்னையை இப்படி ஒரு கேள்வி கேட்டால் அவர் தாங்குவாரா என்பதனால் தான்..
ஜானகிக்கு மகள் கேட்டதை விட கல்பனா அவளை ஆறுதல் படுத்துவதை தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் அமைதியாய் தான் நின்றிருந்தான் அவரின் முகபாவத்தை பார்த்தவாறு யுவா.
"ஏய்! உன்னை யாருடி இந்த வீட்டுக்குள்ள வர சொன்னது?" சத்தமாய் கூறியவர் "ஜோசியர் சொன்னது மறந்து போச்சா?" என்றார் கொஞ்சம் மெதுவாய்.
"அவளும் மறக்கல.. மறந்திருந்தா என்னைக்கோ என்னை தேடி வந்திருப்பா" சொன்னது யுவா.
அமைதியாய் தான் கூறினான் அதில் தான் எத்தனை கோபம்? அதிலேயே ஜானகிக்கு தெரிந்துவிட்டது மகனுக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது என்று.
"நீங்க மறந்துட்டிங்க! மகனுக்கு அம்மாவா இருக்க மறந்துட்டீங்க.. அவனோட சந்தோஷம் என்னனு மறந்துட்டீங்க" இன்னும் அவன் பேச ஒன்றுமே அவர் தலையில் ஏறவில்லை.
"மூணு மாச கர்ப்பிணியா இருந்தவங்களை தான் மா நீங்க பொய் சொல்லி சத்தியம் வாங்கி அனுப்பியிருக்கீங்க" சூர்யா இப்போது சொல்ல, அவரின் பார்வை ஜீவாவிடம் சென்றது. அந்த குண்டு குண்டான கண்ணம் கொஞ்சம் மேக்னட்டாய் இழுக்கத் தான் செய்தது. ஆனாலும் ஜானகி ஆகிற்றே! வார்த்தைகளை வீசாமல் இருப்பாரா என்ன?
"அதுக்கு ஆதாரம்?" அள்ள முடியாத வார்த்தையை வீசிவிட்டார்.
"அம்மா..." என்று கத்தியது சூர்யா தான். யுவா கைகளை இறுக்கமாய் கட்டி கோபத்தை அடக்கி அவர் முகத்தையே பார்த்து நின்றான். நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க முடியவில்லை பெற்றவளாள். கல்பனா கண்கள் குளமாகிவிட்டது.
"நீயெல்லாம் மனுஷியா ம்மா?" சூர்யா கேட்க,
"விடு சூரி! எல்லாரும் திருந்திட மாட்டாங்க.. சிலரை எல்லாம் திருத்தவே முடியாது.. திருந்தாத ஜென்மங்கள்.. அதுக்கும் ஒரு காலம் வரணும்.. நான் இப்ப சும்மா விட்டுடலாம்.. ஆனா பின்னாடி என் மகனும் இப்படி தான் இருப்பான்னு சொல்ல முடியாது.. திருப்பி கொடுக்க வருவான்.. அவன் அம்மாக்கு பதில் கேட்டு வருவான்" என்ற யுவா
"இதுக்கு தான் வந்தேன்... போலாம்" என்றவன் திரும்பிட,
"உனக்காக காத்திருந்து... உன்கூட தங்கியிருக்க சந்தியாக்கு நான் என்னடா பதில் சொல்ல?" - ஜானகி.
"ச்ச! அம்மா மாதிரியா பேசுறீங்க.. எனக்கே என்னவெல்லாமோ கேட்கணும்னு தோணுது மா" சூர்யா சொல்ல,
"ப்ச்! நானும் மறந்துட்டேன் பாரு சூரி.. என்ன இருந்தாலும் அவங்க மகன் தான்ல.." என சிரித்தவன்
"நீங்க பதில் சொல்ல வேண்டாம்... சந்தியா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கா.." என்றவன் சூர்யாவை பார்க்க, தனது பேக்கில் இருந்து இன்விடேஷனை எடுத்து நீட்டினாள் சூர்யா.
வாங்கிப் பார்த்தவருக்கு இப்போது தான் பேரதிர்ச்சியே!
"அன்பே இல்லாத ஜானகிக்கு" என ஆரம்பித்து முடிவில் "வித்தௌட் லவ் அண்ட் வித் ஹேட்.. சந்தியா சுதாகர்" என தனது கையெழுத்துடன் முடித்திருந்தாள் சந்தியா.
"இப்பவே ஷீபாகிட்ட போய் இதை காட்டுறேன்" ஜானகி சொல்ல,
"நாங்களே அடுத்து அங்கே தான் போறோம்.." போகிற போக்கில் சூர்யா சொல்லிச் செல்ல, யுவா சிரித்துக்கொண்டே சென்றான் மனைவி தோள்மீது கைப்போட்டு தன் மகனை கையில் ஏந்தி.
யுவா சென்ற நேரம் வித்தார்த் பிசினஸ் விஷயமாய் ஃபாரின் சென்றிருக்க ஷீபாவின் காச்மூச் கத்தலுக்கெல்லாம் எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாய் வந்துவிட்டனர்.
ஷீபாவின் கோபம் அனைத்தும் இப்போது ஜானகி மேல் திரும்பியது. ஜானகி சொல்லி தான் தன் கணவன் பேச்சை மீறி சந்தியாவை சென்னைக்கு அனுப்பி வைத்தார் ஷீபா.. வித்தார்த் ஊரில் இல்லாத நேரம் இவராலும் நகர முடியவில்லை.
ஜானகியை போனிலேயே காய இவர்களுக்குள் சண்டை வந்தது தான் மிச்சம்.. அங்கே கல்பனா மற்றும் சுதாகர் குடும்பத்தினரை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
"இங்கே பாரு தியா! நானே அவங்ககிட்ட பேசுறேன்.. நீ வாயே திறக்க கூடாது ஓகே!" சொல்லி தான் அழைத்துச் சென்றான் சுதாகர்..
முதலில் இவர்கள் யாரையுமே அழைக்கும் எண்ணம் சுத்தமாய் இல்லை.. பின் கல்பனா யுவாவுடன் சந்தியாவையும். அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காது.
அதுவும் இனி இவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காதது.. இது சந்தியாவிற்கு முதல் சந்திப்பாய் இருக்கட்டும்.. அடுத்து அவர்களை தெரிந்து கொண்டாள் நடந்து கொள்ள வேண்டிய விதமும் தெரிந்து கொள்வாள்.. இவ்வளவு தான் அவன் எண்ணம்.
அவன் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிச் சென்றாள் சந்தியா நல்ல பிள்ளையாய்.
எல்லாம் சுதாகர் அன்னையை பார்க்கும் வரை தான்..
சிவலிங்கம், பானுமதி இருவருமே செல்லதுரைக்கு காய்ச்சல் என்பதால் அவரைப் பார்க்க வசந்தா வீட்டிற்கு வந்திருக்க இன்னும் வசதியாய் போனது.
"யாருடா இது?" சந்தியாவுடன் வந்து நின்ற சுதாகரை வசந்தா கேட்க, உடன் ஜீவிதனும் நின்றதால் என்னவோ என்று பார்த்தார் பானுமதி.
"இது சந்தியா.. தியா இது அம்மா.. அப்பா.. அண்ட் அவங்க தான் கல்பனாவோட சித்தி.. அப்பா" அனைவரையுமே அவளுக்கு சொல்லிவிட, என்ன நடக்கிறது என பார்க்கும் முன்
"அட என்னோட அத்தை மாமா.. அம்மா அப்பானு சொல்லு வக்கீலு!" என்றதுமே பக்கென்று ஆனது சுதாகருக்கு.
அவள் அத்தை மாமா என்று அழைத்ததை விட வக்கீலு என்றது தான் பெரியவர்களுக்கு பெரிதாய் மரியாதை குறைவாய் தெரிந்தது..
உடனே கையில் இன்விடேஷனை எடுத்தவள் கொஞ்சம் தள்ளி நின்ற சுதாகர் கைப்பிடித்து அருகில் இழுத்தாள்.
"அத்தை! வர்ற புதன் எங்களுக்கு கல்யாணம்.. கண்டிப்பா வந்துடுங்க" அவன் கையையும் சேர்த்து பிடித்து வசந்தா முன் நீட்ட பேச்சிழந்து நின்றது சில நொடிகள் தான்
"யாரு டா இவ? என்னனென்னவோ சொல்றா? அவ இழுத்த இழுப்புக்கு எல்லாம் நீயும் ஆடுற?" பத்திரிக்கையை வாங்கி பிரித்துக் கூட பார்க்காமல் கிழித்துக் கொண்டே அன்னை கேட்க,
"ம்மா!" என்றவன் அவர் கிழித்து கீழே போட்டதை பார்த்தவாறு நின்றான்.
"அட இரு வக்கீலு! நான் இருக்கேன்ல" என்ற சந்தியா
"உங்களுக்கு கொடுத்தை கிழிச்சுட்டிங்க.. வேற எல்லாம் தர முடியாது.. வேணும்னா பானுமதிக்கு கொடுக்கிறதுல கல்யாணம் எத்தனை மணிக்குன்னு பார்த்து வந்து சேருங்க"
சுதாகர் கிழித்த பத்திரிக்கையை பார்த்து வருத்தமாய் நின்ற நேரம் சந்தியா இப்படி சொல்ல, அவனுக்குமே ஒரு புன்னகை தான்.
'இவர்கள் வாழ்த்தி தான் விடை கொடுப்பார்கள்' என அவனும் எதிர்பார்க்கவில்லையே!
"என்ன உன் மகன் இப்படி பண்ணி வச்சிருக்கான்.. மரியாதைனா என்னனு கேட்பா போல.. அதுவும் அம்மா அப்பாக்கே கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொண்டு வந்த ஒரே பையன் உன் பையனா தான் இருப்பான்" பானுமதி வசந்தாவை ஏற்றிவிட,
"அட என்ன நீங்க.. அவரு பையனாவது பத்திரிக்கை கொண்டு வந்தாங்க பரவால்ல.. சிலர் அம்மா ஸ்தானத்துல இருந்துட்டு பண்ண கூடாத அசிங்கமெல்லாம் பண்றாங்கம்மா.. அதெல்லாம் அவங்க எல்லாம் பொண்ணா இல்ல பிசாசானு சந்தேகமா இருக்கு... அதை கேட்க தான் நான் வந்ததே" சந்தியா சொல்ல,
"டேய் என்ன டா அவ இஷ்டத்துக்கு பேசுறா நீ பார்த்துட்டு இருக்க? என்ன மறுபடியும் கொம்பு சீவி விட்டளா அங்கே இருக்கவ? பாக்குறேன் டா பெத்தவளை தாண்டி உன் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்" வசந்தாவே தான்.
"அடிங்ங்.. இந்த சந்தியாகிட்ட மரியாதை எல்லாம் பேசுறவங்களை பொறுத்து தான் கிடைக்கும்.. அக்காவை தப்பா பேசினா.. வக்கீலு! உன் அம்மானு கூட பார்க்க மாட்டேன் சொல்லி வை" சுதாகரை பேசவே விடாமல் சந்தியா வீடு கட்ட, ஜீவிக்கு கூட அவர்களுக்கு இது தேவை தான் என அசையாமல் நின்றான்.
"கல்யாணம் நடக்கும் மா.. வர்றது வராதது எல்லாம் உங்க இஷ்டம்.. கட்டாயப்படுத்தல.." சுதாகர் சொல்ல இன்னும் அதிர்ச்சி அங்கிருந்தவர்களுக்கு.
"என்ன நீ அவங்க விருப்பம் எல்லாம் ஒன்னும் இல்ல.. தோ பாருங்க.. நீங்க வர வேண்டாம்னு சொல்ல தான் நான் வந்தேன்.. ஆனாலும் இப்ப நீங்க வரணும்னு தோணுது.. நீங்க பொறாமைல வெந்து போனா தான என்னோட வாழ்க்கை என் அக்கா கல்பனா வாழ்க்கை சும்மா செம்மயா இருக்கும்.. அதுனால ஒரே ஆப்ஷன் வரணும்.. வந்தேன் ஆகணும்.. உங்களுக்கு இன்னொரு தூக்கமான விஷயம் சொல்லவா.. யுவா இஸ் பேக்.. யுவாவும் கல்பனா அக்காவும் சந்தோஷமா இருக்காங்க.."
சுதாகர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என அவனுக்கே தெரியவில்லை.. அவள் பேச்சில் சிரிப்பும் இவர்களுக்கு இது தேவையா என்ற எண்ணமும் மாறிமாறி வர தடுத்தாலும் சந்தியா ஒரு முடிவோடு வந்திருப்பது தெரிந்து அமைதியாய் நின்றான்.
"எது அவன் வந்துட்டானா? அவன் அம்மாவே சொல்றா அவ ஒரு ஓடு..." பானுமதி பேச வந்தது புரிந்து
"ஏய்ய்... ஒரு வார்த்தை அவங்களை பேசின... ந்ந்..." நாக்கை மடித்து பல்லை கடித்து சந்தியா சொல்ல நிஜமாய் எதாவது பேசி வைத்து விடுவளோ என பயந்து விட்டார் பானுமதி.
"நான் நல்ல மூடுல வந்துருக்கேன்.. அதுனால பேசாமல் அமைதியா இருந்துடுங்க.." என்றவள் சிவலிங்கம், செல்லதுரை முன் வந்தாள்.
"பொண்டாட்டிக்கு பயப்படுறது எல்லாம் ஓகே தான்.. ஆனா முதுகெலும்பில்லாத மனுஷங்களா வாழுறதுக்கு..." அவ்வளவு தான் அதற்கு மேல் அதை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என வந்த வழி வெளியேற பார்க்க,
"டேய் நீ எங்கே டா போற? அவன் கூட சேர்ந்தா நீயும் அவனை மாதிரி கல்யாணப் பத்திரிக்கையோட வருவ..வீட்டுக்கு வா டா" ஜீவியை பானுமதி அழைக்க,
"ஜீவி! ஜீவி! நான் இதுக்கு பதில் சொல்லட்டுமா?" பச்சை பிள்ளையாய் குதித்துக் கொண்டு சந்தியா கேட்க, சிரிப்புடன் சம்மதம் கொடுத்தான் ஜீவி.
"ஜீவி கல்யாணத்துக்கு உங்க பேரன் ஜீவா மட்டும் தான் வருவான் பத்திரிக்கையோட நாக்கை புடுங்கி தொங்க விடுற மாதிரி நாலு கேள்வியும் சேர்த்து கேட்டுட்டு போவான்.. இன்னொரு இன்விடேஷனை வேஸ்ட் பண்ண முடியாது.. மரியாதையா புதன் கிழமை ஆறு மணிக்கு மண்டபத்துல இருக்கனும்.. இல்ல… புதுமைப் பெண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவேன்.. வர்ட்டாஆ…”
பூகம்பம் வந்து ஓய்ந்தது போல ஆனது வசந்தாவின் வீடு.
இப்படி தான் ஆரம்பித்து முந்தைய நாள் மாலை சுதாகர் அனுப்பிய வேனில் வந்து சேர்ந்தனர் சுதாகர், கல்பனா குடும்பத்தினர்.
அன்று முழுதும் அருகில் கூட செல்ல முயலவில்லை யாரும்.. பெரியவர்கள் அனைவரும் கோபம் போல் காட்டிக் கொள்ள கொஞ்சமும் சளைக்காமல் அவர்கள் வருவார்கள் என்பதை அறிந்து சிறியவர்களும் யாரும் அருகில் செல்லவில்லை.
தனியாய் நின்ற ஜீவியிடம் தானாய் வந்து மன்னிப்பு கேட்டாள் சூர்யா.
"என்கிட்ட மன்னிப்பு கேட்க எதுவும் இல்லைங்க.. நானே அப்ப அக்காவை சரியா புரிஞ்சுக்கல.. எனக்கும் இது செகண்ட் சான்ஸ் தான்" என்று ஒதுங்கி சென்றுவிட்டான் ஜீவி.
அடுத்த நாள் காலை மணமக்கள் அலங்காரமாய் அழகாய் வந்து மனையில் அமர, பட்டு வேஷ்டி சட்டையில் வந்த யுவாவை கண்ணகலாமல் பார்த்து நின்றாள் கல்பனா.யுவாவின் கண்களுமே அப்படி தான் பட்டுபபுடவையில் இருந்தவளை விட்டு அகல மறுத்தது.
திருமணத்தன்றும் அதற்கு பின்னுமே இப்படி ஒரு நாள் இருவருக்கும் வாய்க்கவில்லை அதன் தாக்கம் தான் அதிகமாய் இருந்தது இருவரிடமும்.
"லாயர்! பொண்ணு மாப்பிள்ளை நாம தானே?" இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்து சந்தியா கேட்க,
"ஆமாமா எனக்கும் கூட சந்தேகம் தான்" என்றான் சுதாகர் கிண்டலாய்.
யுவா இப்போதும் கல்பனாவை தன் கையணைப்பிலேயே வைத்துக் கொண்டான்.
"வக்கீலு! பெத்தவங்கனு ஆசைக்கு வந்துட்டாங்க ஓகே! ஆனா அந்த கோட்டைத் தாண்டி மேலே வந்துட கூடாது.. ஓகே!" சந்தியா மேடையில் சுதாகர் காதில் சொல்ல, அவனுமே யாரையும் அழைக்கவில்லை.
"வித்தார்த் ஏன் இப்படி முறைக்குறார்?" சுதாகர் கேட்க,
"அது கொஞ்சம் பயமா தான் இருக்கு.. ஆனா இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன பண்ணிடுவார்?" என்றாள் சுற்றி இருக்கும் கூட்டத்தை பார்த்து.
கல்பனாவை வருடங்களுக்கு பிறகு இன்று தான் பார்க்கின்றனர் அவள் குடும்பத்தினர்.
அவளைக் காயப்படுத்த வேணும் நாலு வார்த்தை பேசிட வேண்டும் என வசந்தா நினைத்திருக்க, அதற்கு கொஞ்சமும் வழி கிடைக்காது அணை காத்தான் யுவா.
திருமணம் நல்லபடியாய் முடிய நிஜமாய் அங்கே சண்டையிட வந்த யாவருக்கும் வாய்ப்பு கிட்டாமல் சுதாகர், யுவா, ஜீவியோடு வேலை பார்ப்பவர்கள், காலனி குடும்பத்தினர் என கூட்டம் ஜெக ஜோதியாய் இருந்தது.
அதே போலத்தான் கூட்டத்தை மீறி சுதாகர் அன்னை மேடையேற அவர் வரும் நேரம் சத்தமாகவே கூறினாள் சந்தியா.
"சூர்யா! ஏதோ அமானுஷ்ய துர் சக்தியோட காத்து கொஞ்சம் பலமா அடிக்குது?"
"என்ன இருந்தாலும் இனி நீ என் வீட்டுக்கு தான் மருமகளா வந்திருக்க.. பார்த்து நடந்துக்க.." -வசந்தா.
"அய்யோ என்னத்த இப்படி சொல்லிட்டீங்க.. இன்னும் ஒரு மாசம் உங்களோட நம்ம வீட்ல தான் இருக்க போறேன்.. வக்கீலு உங்ககிட்ட சொல்லல? அப்ப நான் நடந்து காட்டுறேன்.. நீங்க முன்னாடி பின்னாடி எது நல்லாருக்குன்னு பார்த்து சொல்லுங்க"
"ஒரு மாசமா...?" இப்படி தான் தோன்றியது வசந்தாவிற்கு. ஓடியே விட்டார் தன் கூட்டம் இருந்த பக்கம்.
"அப்பாலே போ சாத்தானே!" சந்தியா கையை குவித்து அவர்களை நோக்கி விரிக்க, அப்படி சிரித்தான் சுதாகரும்.
உனக்கு கஷ்டமா இல்லையா லாயர்?" அவன் முகம் பார்த்து சந்தியா கேட்க,
"ஆமாம்னு சொன்னா விட்டுடுவியா? இல்லைல?" என்றதும் அனைவருமே சிரித்தனர்.
இனி இவர்களின் குடும்பம் இது தான்.. சுதாகரும் சந்தியாவும் சுந்தரத்தின் அதே வீட்டின் கீழ் போர்ஷனிலும் யுவாவும் கல்பனாவும் மேல் போர்ஷனிலும்.
இனி வாழப் போகும் ஒவ்வொரு நொடிகளும் இவர்களுக்கான ஆசை நொடிகள் தான்.
முற்றும்..

Last edited: