சிவாவும் ராமரும் வந்துவிட்டு சென்றதன் பயனாக ஊருக்குள் செண்பாவிற்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்பது போன்ற பேச்சு பரவவும், அதன் பின் ஒரு நாளைக்கு ஐந்து ஆறு என்று பெண் பார்க்க வருபவர்களின் தொல்லை குறைந்து விட்டது.
தினம் தினம் ஐந்தாறு பேர் வந்தது மாறி 2 நாட்களுக்கு ஒருவர், வாரத்திற்கு இருவர் என்ற அளவில் பெண் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறையவும் செண்பாவின் குடும்பத்தில் அனைவருக்குமே ஓர் மன அமைதி ஏற்பட்டது.
"திருமணம் நிச்சயம் ஆகவில்லை" என்று இவர்கள் எத்தனை பேரிடம் கூறியிருந்தாலும், அந்த ஒரு பேச்சு எழுந்ததன் பலனாக மூச்சு விடும் அவகாசமாவது கிடைத்ததாகவே உணர்ந்தார்கள் மூவரும்.
இப்போது தான் படித்து முடித்திருக்கிறாள். வேலைக்கு வெளியூர் அனுப்ப விருப்பம் இல்லை என்றாலும், மகனும் வெளிநாட்டு வேலையில் தொலைதூரமாக இருக்க, சில காலமாவது தங்களோடு தங்களது மகள் இருக்கட்டுமே என்ற எண்ணம் தான் பெற்றவர்களுக்கும்.
ஆனால் வீடு தேடி வருபவர்களை மறுக்கவும் முடியாமல் மனதில் பாரம் ஏற்றி வைத்தது போல் தவித்துக் கொண்டிருந்த மூவரும் இப்போது மிகவுமே நிம்மதியாக உணர்ந்தார்கள்.
செண்பாவின் மனதில் மீண்டும் மானசீகமாக சிவாவின் மீதும், அவனது தந்தையின் மீதும் நன்றி உணர்ச்சியோடு நல்லெண்ணமும் உருவாக்கி இருந்தது.
..
செண்பாவின் வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து சிவாவும் அவள் நினைவாகத் தான் இருந்தான். அவளது துடுக்கு பேச்சும், தன் தவறை உணர்ந்து உடனே மன்னிப்பு கேட்டதும் தந்தையிடம் பவ்யமாக பதுங்கியதும் அவனைக் கண்டு வெட்கம் கொண்டு ஓடியதும் என்று சில மணித் துளிகளில் எத்தனை எத்தனை ரூபங்களைக் காட்டி விட்டாள்.
அவன் ஒன்றும் பெண்களோடு பழகியிறாதவன் அல்ல. தினம் தினம் எத்தனையோ பெண்களைச் சந்திக்கிறான், எத்தனையோ பேருக்கு வழி காட்டுகிறான், பல பெண்களின் நட்பு வட்டத்தில் இருக்கிறான்.
நல்ல நட்போடு அனைவரையும் சமமாக நடத்தும் சிவா இன்றானால் சில மணி நேரங்கள் மட்டுமே பார்த்த, ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசி இராத ஒரு பெண்ணை நினைத்துக் கொண்டே இருப்பது அவனுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது.
ராமருக்கும் செண்பாவை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை அவர் தன் தாய் ஜெயாவுடன் பேசியதிலிருந்து புரிந்து கொண்டான்.
ஊரிலிருந்து வந்ததிலிருந்து தன் பால்ய சினேகிதன் ராகவனைப் பார்த்ததை, அவரோடு கதைத்ததைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியாக திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார் ராமர். அத்தோடு நண்பன் மகளின் அழகு, வாய்த் துடுக்கு, பணிவு என்று சிறு குழந்தையில் தான் தூக்கி கொஞ்சிய குழந்தை இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாள், எப்படி பேசுகிறாள்? என்று தன் மனைவியிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் ராமர்.
தானும் ஓர் மகன் வைத்திருக்கும், பெண் தேடி அலைய வேண்டிய நிலையிலிருக்கும் தாயாக, ஒரு இளம் பெண்ணைப் பற்றிய பேச்சை மிக ஆவலுடனே கேட்டுக் கொண்டிருந்தார் ஜெயா.
"உங்க சினேகிதரோட பொண்ணு படிச்சு முடிச்சிட்டான்னா நம்ம பையனுக்கு கேட்கலாமே" என்று தயக்கமாக அதே நேரம் உற்சாகத்தோடும் கேட்டார் ஜெயா.
"அவன் வாழ்க்கை அவன் இஷ்டம் அப்படின்னு நாம எப்போவோ முடிவு செஞ்சிட்டோமே ஜெயா. அவனுக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருந்தா கல்யாணம் செஞ்சுகிட்டும், நாமளா பெண் பார்த்து அவனை கட்டாயப்படுத்தக் கூடாது இல்லையா?"
"எல்லாம் பொண்ணு தேடி ஊரு ஊரா போய் அலைஞ்சா கூட பெண் கிடைக்க வருஷக்கணக்கா ஆகுது. இதுல நீயா உனக்குப் பிடிச்ச மாதிரி தேடிக் கொண்டு வா அப்டின்னு அவன் கிட்ட சொன்னா அவன் எங்க போயி பொண்ணு தேடுவான்? அரைக்கிழம் ஆனதுக்கப்புறம் கல்யாணம் செய்யச் சொல்கிறீர்களா அவனை?" என்றவரின் குரல் ஆற்றாமையோடு வெளிவந்தது.
"அரைக் கிழவன் ஆனதுக்கப்புறம் கல்யாணம் செஞ்சாக் கூட அவன் மனசுக்குப் பிடிச்ச பொண்ண கல்யாணம் செஞ்சுப்பான்ல? அது தானே முக்கியம்?"
'அவர் சொல்வதும் சரி தானே, பிடிக்காத திருமணத்தை வலிந்து செய்து வைப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு பிடித்த இணையை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுப்பது சிறந்தது அல்லவா?' என்று மௌனமானார் ஜெயா.
"அதன் பின் தங்கள் பூர்வீக நில விஷயமாக ராமர் குருவிகுளத்திற்கு புறப்படும் போதெல்லாம் அவரோடு தானும் வம்படியாக வந்து இணைந்து கொண்டான் சிவா. அவரே எங்காவது செல்ல வேண்டும் வா என்று அழைத்தாலும் தனக்கு இருக்கும் அதீத வேலைகளையும் பொறுப்புகளையும் சுட்டிக்காட்டி மறுப்பவன், முதல்முறை நில விசயமாக கிராமத்திற்குச் செல்லும் போது கூட "இந்த ஒரு முறை தான் வருவேன், அதன் பின் நீங்களாகத் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியவன் இப்போதானால் 'வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன்' என்றால் கூட விடாமல் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தான்.
வரும் போதெல்லாம் "உங்க நண்பரை பார்க்கலையா" என்று அவனே ராகவன் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறான்.
மகனின் நடவடிக்கைகளில் இருந்து அவனது மன ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமர் எதுவானாலும் அவன் வாயிலிருந்து வரட்டும் என்று அமைதி காத்தார்.
அவராக கேட்டு பேசி முடிப்பார் என்று அவனும், அவனாக கேட்டால் பேசி முடிப்பது என அவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க சிவாவின் பொறுமை நாளுக்கு நாள் பறந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை ராகவன் வீட்டிற்கு செல்லும் போதும் ராகவனும் பாக்யாவும் மிக அன்போடு வரவேற்றார்கள். ஆனால், செண்பா வாருங்கள் என்று அழைப்பதோடு ஒதுங்கிப் போனாள்.
என்ன தான் அவளது மனதில் ராமர் மீதும் அவருடைய அழகான மகன் மீதும் ஓர் நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் எங்கே அவர்களிடம் நன்றாகப் பேசினால், பழகினால், ஏன் வாய் தவறி அவன் பெயர் என்ன என்று கேட்டால் கூட தன்னுடைய தந்தை இது தான் சாக்கு என்று அவனுக்குத் தன்னை திருமணம் செய்து வைத்தாலும் வைத்து விடுவார் என்று தோன்றியது அவளுக்கு.
அவ்வளவு நெருக்கமாகவும் அன்பாகவும் அவர்களிடம் பழகினார் ராகவன். சிவாவிடம் அவர் பேசும் போது அவள் கவனித்து இருக்கிறாள். தனது மகன் செண்பகராஜனிடம் காட்டும் அதே பாசமும் வாஞ்சையும் அவரது குரலிலும் கண்களிலும் தெரியும்.
ஆகவே 'எதற்கு வம்பு இப்படி சுதந்திரமாக இருப்பதை விட்டு விட்டு எதையாவது கேட்கப் போய், உடனே கல்யாணம் செய்து கொள் என்று விட்டால் என்ன செய்வது?' என்றே பெரும்பாலும் அவர்களைத் தவிர்த்தாள் எனலாம்.
அவர்கள் வரும் பொழுதுகளில் அவளுக்கு முக்கியமாக ஏதேனும் வேலை இருந்தது. கோவிலுக்குச் செல்வது, நூலகம் செல்வது தவிரவும் பக்கத்து வீட்டு ராகுலுக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பது, மிக அபூர்வமான ரோஜா பதியனை வாங்கி வருவது, தலை வலி என நடைபயிற்சிக்கு போவது, அல்லது கனியோடு பல்லாங்குழி ஆடப் போவது, பெரிய தோட்டத்து தாத்தாவுடன் ஆடுபுலி ஆட்டம் ஆடப் போவது என மிக மிக முக்கியமான வேலைகள் எல்லாம் வரிசை கட்டி நிற்கும்.
"ஏய் செண்பா, நட்பு கைசில (ராகவனின் நண்பர் ராமரின் மகன் சிவா) அடிக்கடி உங்க வீட்டுப் பக்கம் சுத்துதே என்ன விசயம்?" என சந்தேகத்தோடு கேட்டாள் கனி.
"அவங்க வந்த வேலை முடியலையோ என்னவோ? நமக்கு எப்படி கனி தெரியும்?"
"எனக்குத் தெரியாது சரி தான்.. ஆனா, நமக்குன்னு உன்னயவும் ஏன் சேர்த்துக்குற? உனக்குத் தெரியாம எப்டி பிள்ள இருக்கும்?" என ராகம் பாடினாள் கனி.
"தெரியாதுன்னு சொன்னா நம்ப மாட்டியா நீ? நான் எதுவும் கேட்டுக்கறது இல்ல. ஏன் கேக்கனும் ஏன் வம்புல மாட்டனும். நான் சுதந்திரமா இருக்கது பிடிக்கலையா உனக்கு?"
"அட இதைக் கேட்டா கூடவா உன்னய தூக்குல போட்ருவாங்க" என நம்பாத்தன்மையோடு கேட்டாள் கனி.
"இல்லியா பின்ன? அதுவுமில்லாம அந்த கைசில-யோட பெர்சனல் தகவல்கள் எல்லாம் நமக்கெதுக்கு.. அப்பப்ப பார்த்து ரசிச்சோமா அதோட நம்ம வேலைய பார்த்து நகர்ந்திடனும்" என விலாவரியாக விளக்கம் கொடுத்தாள்.
"நீ சொல்றதும் சரி தான். ஆனால் கைசில பாக்குறதுக்கு ரொம்ப டீசண்டான ஆளு போல தெரியுது. நீ சும்மா ஒரு நட்பாவாவது பேசியிருக்கலாம்"
"பாக்குறதுக்கு டீசன்டான ஆளுன்னு உனக்கு எப்படி தெரியும்"
"அதான் நான் பார்த்தேனே, நான் மட்டும் இல்ல மொத்த ஊரும் அவர பார்த்துகிட்டு தான் இருக்கு. என்ன இருந்தாலும் நம்ம ஊருக்கு வர போற மாப்பிள்ளை இல்லையா?"
"கிண்டல் பண்றதுக்கு ஒரு அளவில்லையா கனி? அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி அதையே புடிச்சு பேசிக்கிட்டிருப்பது நல்லாவா இருக்கு?"
"நான் எங்கே உன்னை கிண்டல் செஞ்சேன். ஊருக்குள்ள என்ன பேசுறாங்களோ அதை உன் கிட்ட சொல்றேன் என்றவள், சரி அதை விடு நம்ம கைசில மெக்கானிக்கலா இல்ல எலக்ட்ரிக்கல் ஆ?"
"நல்லா முறுக்கிக்கிட்டு ஓங்குதாங்காக இருக்கிறதை பார்த்தா மெக்கானிக்கலா தான் இருக்கும்னு நினைக்கிறேன், இதெல்லாம் சாப்ட்வேரா இருக்க வாய்ப்பே இல்லை. அதனால நம்ம மாப்பிள்ளை லிஸ்ட்ல வருவதற்கும் வாய்ப்பில்லை"
"அது என்ன பிடிவாதம்? கட்டினா சாப்ட்வேர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவது அப்படின்னு"
"ஏன் நீ சினிமா எல்லாம் பார்த்ததே இல்லையா? சாப்ட்வேர் பசங்க தான் பொண்ணுங்கள கையில வச்சு தாங்குவாங்க. அவ அடிச்சா கூட வாங்கிக்குவாங்க, எப்பவும் பொண்டாட்டிய கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க, நமக்கும் அப்படி இருந்தா தான் பிடிக்கும்? நம்மள மட்டுமே நேசிச்சுக்கிட்டு நமக்காகவே வாழுற ஒரு உயிர் தானே நமக்கு இணையா வரணும்?"
"சினிமால காமிக்கிறது எல்லாம் உண்மையா என்ன? அதெல்லாம் மிகைப்படுத்தின காட்சிகள் தானே?
"ஏன் சாஃப்ட்வேர் பசங்க அப்படின்னா வார நாளில் கடுமையான வேலை, மேற்கத்திய உணவு, வார இறுதியில் பார்ட்டி, பப், மப்பு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று இருப்பாங்களா என்ன? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க இல்ல?"
"நீ சொல்றதும் சரி தான். மனுஷங்களோட வேலைய பொருத்து இல்ல அவங்களோட குணத்தை பொறுத்து தான் ஒவ்வொருத்தரும் எப்படி நடந்துக்குவாங்க அப்படிங்கிறத வரையறுக்க முடியும். ஆனாலும் நம்ம சமூகம் சில வேலைகளையும் சிலரின் குணத்தையும் ஒப்பிட்டு வச்சிருக்கு தானே?"
"என்னவோ போ எப்படி இருந்தாலும் கைசில கைசில தான், என்ன அழகு" என்று குசு குசுவென பேசி தங்களுக்குள்ளேயே நகைத்துக் கொண்டார்கள் நங்கைகள்.