சிவாவோ அவளை பார்ப்பதே போதும் என பேசக்கூட முயலவில்லை. திருமணத்தைப் பற்றிய பயமும் மாப்பிள்ளைகள் மேல் ஒருவித ஒவ்வாமையும் செண்பாவிற்கு இருப்பதை புரிந்து கொண்டிருந்த சிவா அவளை அணுகுவதில் மிகவும் கவனமாக இருந்தான்.
ராகவனுக்கும் பாக்கியாவிற்கும் கூட சிவாவின் உள்மனம் புரிந்தது. அவனுக்கு செண்பாவை பிடித்திருக்கிறது என்பதை ராமர் மூலமாக அறிந்து இருந்தார்கள் இருவரும் என்றாலும் அவனாக எதுவும் வாய் திறந்து சொல்லாத போது பெரியவர்களாக ஒரு முடிவிற்கு வருவதற்கும் தயக்கமாக இருந்தது.
அதிலும் சிவா ராகவனிடம் பேசும் போதெல்லாம் "எங்க அப்பாவை பார்த்து கத்துக்கோங்க மாமா, எனக்கு கல்யாணத்துக்குப் பெண்ணை நானே தேடி கண்டுபிடிச்சு கட்டணுமாம். அவரு என்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டாராம். கல்யாணத்துக்கு பெண் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டமான காரியம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு அதிலிருந்து தப்பிக்கிறதுக்காக இப்படி தாராள மனசோட நடந்துக்கிற மாதிரி வேஷம் போடுறார் உங்க நட்பு.
நீங்க என்னன்னா உங்க மகளுக்கு கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணத்துக்கு பேச ஆரம்பிக்கலாம் அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருந்தாக்கூட பொண்ணு பார்க்க வரோம்னு வர்றவங்கள எல்லாம் வாங்க வாங்க அப்படின்னு வரவச்சு, ஷோக்கேஷ் பொம்மை காட்டுறது மாதிரி காட்டிகிட்டு இருக்கீங்க. அவ ஒரு உயிருள்ள மனுஷி, அவளை இப்படி எல்லாருக்கும் கண்காட்சியில் வைக்கிற பொருள் மாதிரி காட்டுறது சரியா? உங்களை ஏதாவது பொருட்காட்சியில் போய் உட்கார வைத்து வேடிக்கை பொருளா காட்டினா நீங்க ஒத்துப்பீங்களா? உங்கள மாதிரி தானே அவளுக்கும் மனசு யோசிக்கும்? அவளோட மனசையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. எப்போதும் பதட்ட நிலையிலேயே வச்சிக்கிட்டு இருக்காம கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க.
அப்போ அவளாகவே யோசிப்பா, அவளாவே யோசிச்சாலே ஒரு நல்ல முடிவுக்கு வருவா. நீங்க போட்டு அழுத்த அழுத்த தான் அவள் இன்னும் இன்னும் தன்னோட கூட்டுக்குள்ள சுருங்கிப் போறா" என்று நீளமாக அறிவுரை கூறினான்.
"எலே ராமா பாத்தியா கடைசியில இப்படி சில்வண்டு எல்லாம் வந்து அறிவுரை சொல்ற நிலைமைக்கு நான் நடந்துகிட்டு இருந்திருக்கேன். இப்ப தான் என் புத்திக்கும் உரைக்குது. யாரோ தெரியாத மூனாவது மனுசங்கள நோகடிக்க கூடாதுன்னு நான் பெத்த மகளையே இத்தனை நாள் நோகடிச்சுக்கிட்டு இருந்திருக்கேன். இனிமே அப்படி யாரையும் உள்ள விடலை சரிதான மாப்பிள?" என்று சிவாவின் கூற்றை ஏற்றுக் கொண்டார் ராகவன்.
அதன் பின் திருமணம் பேச என்று வரும் ஓரிருவரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வில்லை அவர். "என் பிள்ளைக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்யற எண்ணமில்லை, ஒரு இரண்டு வருஷம் ஆகும்" என்று வருபவர்களை எல்லாம் வாசலோடு கைகூப்பி அனுப்பி வைத்தார் ராகவன்.
ஓரிரு வரை அவர் அவ்வாறு வெளியேற்றவும் சிறு மகிழ்ச்சி துளிர்த்தாலும் தந்தையின் மீது முழு நம்பிக்கை வரவில்லை செண்பாவிற்கு. நாளைக்கு யாரேனும் அவர் மனதிற்கு பிடித்தமானதாக தோன்றினால் கொஞ்சமும் யோசிக்காமல் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார் என்றே அவளது எண்ணப்போக்கு இருந்தது.
ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வீடு தேடி வரும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரிடமுமே தன் மகளுக்கு இரண்டு ஆண்டுகள் நேரம் தேவைப்படுகிறது என்று கூறி அனுப்பி வைத்தார் ராகவன்.
இதுவே செண்பாவிற்கு மனதில் உற்சாகம் அளிக்கப் போதுமானதாக இருந்தது. அது வரை ஒரு வித வெறுமையான மனதுடனே எதுவும் கற்றுக் கொள்ளாமல் வெட்டியாக பொழுது போக்கியவள் அதன் பின் யூடியூபில் பார்த்து ஒப்போஸ்(opos-one pot one shot) சமையல் எல்லாம் தானாகவே கற்றுக் கொண்டு வீட்டில் செய்ய ஆரம்பித்தாள்.
ஒரு சிக்கன் பிரியாணி செய்வதற்கு ஐந்தாறு பாத்திரங்களை உபயோகிக்கும் அவளது தாயார், செண்பா ஒரே ஒரு குக்கரில் அசத்தலாக சிக்கன் பிரியாணி செய்து பரிமாறவும் மூக்கின்மேல் விரலை வைத்தார்.
"இம்புட்டு வித்தையையும் இத்தனை நாள் எங்கடி வச்சிருந்த? ஒரு சுடு தண்ணி கூட போடத் தெரியாத பிள்ளைன்னு நான் இத்தனை காலம் எவ்வளவு வேதனைப்பட்டேன். போற இடத்தில என்ன தான் செய்யப்போறயோ அப்படின்னு நான் கவலைப்படாத நாள் இல்ல" என்று சந்தோஷ மிகுதியில் கேள்விகளாக அடுக்கினார் பாக்கியா.
"அம்மா உண்மையிலேயே உன் மகளை சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாத அசடா தான் வளத்து வச்சிருக்க.. இப்ப இருக்கிற காலத்துல சமைக்கிறது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல மா. உனக்கே தெரியாத ஏதாவது உனக்கு புடிச்ச சமையல் குறிப்பு சொல்லு அதை எப்படி சொல்றதுன்னு நான் சொல்றேன்" என்றாள் செண்பா.
தன் தாயார் செய்து கொடுக்கும் பர்பி, எப்போததோ சிறுவயதில் தன் பாட்டி கையால் சாப்பிட்ட பலகாரம், தன்னுடைய மாமியார் செய்யும் சிறப்பான உணவு என்று சிலவற்றின் செய்முறை எப்படி எனக் கேட்டார் பாக்கியா.
ஒவ்வொரு உணவு பண்டத்தின் இரண்டு மூன்று வழிமுறைகளை யூடியூபில் பார்த்து அதில் சிறந்ததாக தோன்றியவற்றை தன் தாயாரிடம் விளக்கினாள் செண்பா.
செண்பா சொல்லியபடி அந்த பதார்த்தங்களைச் செய்து பார்த்த பாக்யா மிகவும் அகமகிழ்ந்து போனார். "அந்தக் காலத்து பண்டம் பலகாரம் எல்லாம் கூட உனக்கு நல்லா தெரிஞ்சு இருக்கே ஷெண்பா, எப்போ இதெல்லாம் கத்துகிட்ட" என்று மீண்டும் ஆச்சரியப்பட்டார் செண்பாவின் தாயார்.
"அம்மா இப்போ சமைக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை அப்படின்னு சொன்னனா இல்லையா? ஒவ்வொரு உணவுப் பதார்த்தத்துக்கும் செய்முறை விளக்கி ஓராயிரம் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டு இருக்குது. நமக்கு ஏதாவது உணவு பதார்த்தம் எப்படி செய்யறதுன்னு தெரியலைனா யூடியூபில் வந்து வீடியோ பார்த்தாலே ரொம்ப சுலபமா அதோட செயல்முறை விளக்கத்தை புரிஞ்சுக்கிட்டு நாமளும் அழகா சமைக்கலாம்.
அதுவும் ஒப்போஸ் முறையில்(opos) சமையல் செய்றது ரொம்பவும் சுலபம். ஒரே ஒரு பாத்திரம், ஒரே ஒரு செயல்முறைல தேவையான விதவிதமான உணவுகளை அதோட சுவையும் ஆரோக்கியமும் குலையாம சமைக்கிறது தான் ஓப்போஸ் முறை.
பெண்கள் கிச்சன்ல ரொம்ப நேரம் இருக்கறத குறைக்கறதுக்காகவே இந்த சமையல் முறையே உருவாக்கி இருக்காங்க.
ஒப்போஸ் அப்படின்னா ஒன் பாட் ஒன் ஷார்ட் அப்படிங்கற முறையில் சமையல் செய்வது. நம்முடைய பாரம்பரியமான சைவ அசைவ உணவுகள் எல்லாத்துக்குமே அதில் செயல்முறை கொடுத்திருப்பாங்க. யூடியூப்ல பேஸ்புக்ல எல்லாம் அதற்கான குழுக்களும் இருக்கு. முதல் முதலா ஒப்போஸ் சமையலை முயற்சிக்கிறவங்க ஏற்கனவே அந்த முறையில் சமையல் செய்பவர்களோட ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டு அதே மாதிரி செய்யலாம்.
நிறைய தண்ணீர் சேர்க்காமல், நிறைய பாத்திரங்களை அழுக்காகாமல் சமைக்கலாம். இதன் மூலமா நிறைய பாத்திரங்கள் கழுவும் தண்ணீரை மிச்சம் பிடிக்கலாம்னு ஒப்போஸ் சமையல் முறையை ஏற்றுக்கொள்வதற்கு நூற்றுக்கணக்கான நல்ல காரணங்கள் இருக்கு.
நீயும் முடிஞ்சா ஒப்போஸ்ல சமைக்க முயற்சி செய்யும்மா" என்று தன் தாயாருக்கு அறிவுரை வழங்கினாள் செண்பா.
"புள்ள எம்புட்டு அறிவா பேசுது. இத்தன நாள் எங்க டீ வச்சிருந்த இந்த திறமைய எல்லாம்"
"அதெல்லாம் இங்க தான் இருந்திச்சு.. நீயும் உன்னூட்டுகாரும் சேர்ந்து தா அத காணாம அடிச்சிட்டீங்க" என வெடுக்கென சொல்லிவிட்டுப் போய்விட்டாள் செண்பா.
பெண்களின் கோபம் முழுமையாக வெளிப்படும் ஒரே இடம் தாயிடம் மட்டுமே தானே. தந்தை, கணவன், குழந்தைகள், சமூகம், சொந்தபந்தம் ஏன் நண்பர்களிடம் கூட தம்மை முழுதாக வெளிப்படுத்த மாட்டார்களே பெண்கள்.
அவளின் கோபமும் கொஞ்சலும் கெஞ்சலும் மொத்தமாய் கொட்டப்படும் ஒரே இடம் தாய்மடி. அதற்கு வேறெங்கும் கிளைகள் இல்லை தானே!
மகள்களின் மொத்த கோபத்தையும் வாங்கிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் அவளிடம் அதே பிரியத்தோடு உறவாட தாயால் மட்டும் தானே முடியும்.
ஆக, 'ஏதோ கோவத்துல கத்திட்டு போறா.. அப்பறம் வந்து டீ போடு, டிபன் செய்னு அதிகாரம் செய்வா, எங்க போயிடப்போகுது கழுத' என்பதாக தாயார் வேலைகளை கவனிக்கலானார்.
ஆனால், தாயும் மகளும் சமையல் செய்து கொண்டே அரட்டை அடிப்பதை, வீட்டில் மீண்டும் செண்பாவின் கலகலப்பு திரும்பியதில் அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டே முற்றத்தில் அமர்ந்திருந்த ராகவன் தான் மிகவும் வருத்தப்பட்டார்.
ஏற்கனவே, சிவா சொன்னதில் இருந்து மகளை மிகவும் வருத்திவிட்டோமோ என்ற எண்ணத்தில் இருந்தவர், அவள் வாய்மொழியாகவே அதை கேட்கவும் குற்றவுணர்வுக்கு ஆளானார்.
குற்றவுணர்வில் தவித்தவர், உண்ணக்கூட இயலாமல் மனமே சரியில்லாமல் தவித்தார்.
இப்போது எல்லாம் சரியாக இருப்பதாக தோன்றினாலும், தான் தன் மகளை வருத்தியதற்கு என்ன பரிகாரம் செய்வதென அவர் மனம் தவியாய் தவித்தது.
இதற்கான விடையும் சிவாவிடம் தான் கேட்க வேண்டும். இந்தக் காலத்துப் பையன், அதோடு தன் மகளிடம் பேசியது கூட இல்லையானாலும் அவளது மனதை துள்ளியமாக எடுத்துரைத்தானே! தெளிவானவன். அவனிடம் தான் தீர்வு கேட்க வேண்டும் என நினைத்தவர், அவனைக் கைபேசியில் தொடர்பு கொண்டார்.
"ஹ ஹல்லோ.."
"என்ன ஆச்சு மாமா? எதாவது பிரச்சினையா? ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு?"
தான் எதுவும் சொல்லாமலே தன் குரலில் இருந்தே அனைத்தையும் புரிந்து கொள்பவன். தன் மகன் செண்பகராஜன் கூட இப்படி இல்லையே என மனம் நெகிழ்ந்தது ராகவனுக்கு.
"சொல்லுங்க மாமா.." எதிர்முனையில் அவன் காத்திருப்பதை உண்ர்ந்து பேசத்துவங்கினார்.
தன் மகளின் மனநிலை, தன் குற்றவுணர்வு, அதைப் போக்க இயலாமல் தவிப்பது என தனது மனப் பாரத்தை எல்லாம் அவனிடம் இறக்கி வைத்தார்.