இக்கரைக்கு அக்கரை பச்சை!! .... சுதாரவி
மிதமான ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்த ஏசி அறையில் கட்டிலின் ஓரம் கால்களை கீழே வைத்து மரத்துப் போனதை சரி செய்ய அசைத்துக் கொண்டிருந்தார் ராமநாதன். அருகே அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை திரும்பி பார்த்தவரின் மனதில் பல்வேறு எண்ணங்கள்.
ஆறரை மணியாகி இருந்தது. வயது காலத்தில் எல்லாம் நான்கு மணிக்கு எழுந்து பிள்ளைகளுக்கும், தனக்கும் வேண்டியவற்றை செய்து கொடுக்க ஓடிக் கொண்டிருந்தவள். உறக்கம் வரவில்லை என்றாலும் எழ மனமில்லாமல் படுத்தே கிடப்பது வழக்கமாகி விட்டது.
மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்று வாயில் கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துச் சென்று பிரிட்ஜில் வைத்துவிட்டு காலைக்கடன்களை முடிக்க குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
கணவர் எழுந்து சென்றதிலிருந்து உறக்கம் கலைந்திருக்க, எழ மனமில்லாமல் கண்களை மூடியபடியே படுத்திருந்தார் மீனாட்சி.
குளியலறையை விட்டு வெளியே வந்த ராமநாதன் மனைவியின் உறக்கம் கலைந்து விட்டதை உணர்ந்து “மீனா! எழுந்திரிக்கலையா?” என்றார் மெல்லிய குரலில்.
லேசாக பிரண்டு படுத்து “ம்ச்! ம்ம்ம்...சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போறோம்?” என்றார் சலிப்புடன்.
மனைவியை திரும்பி பார்த்துவிட்டு “காப்பி வேணும் மீனா...போட்டு தரியா?” என்றார்.
போர்வையை வெறுப்புடன் உதறி தள்ளிவிட்டு “வேலைக்குப் போனப்ப இருந்த மாதிரியே சீக்கிரமா எழுந்து காப்பி குடிக்கணும்னு அவசியம்?” என்று கடுப்படித்துவிட்டு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்தார்.
அதற்குள் பேப்பரை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த கல்லில் அமர்ந்து படிக்க ஆரம்பித்திருந்தார் ராமநாதன்.
கணவருக்கும், தனக்கும் காப்பியை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தவர் ஒருவித சலிப்புடன் “நாள் முழுக்க நம்ம முகத்தையே பார்த்துக்கிட்டே இருக்கிறது என்ன வாழ்க்கையோ போங்க. பசங்க எங்கேயோ இருக்க, வருஷத்துக்கு ஒரு முறை தான் நமக்கு வசந்தம் போல இருக்கு” என்றார்.
மனைவியின் அலுப்பைக் கண்ட ராமனாதன் “என்ன பண்றது மீனா? பசங்க அவங்க வாழ்க்கையை கவனிக்க வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே புலம்பிகிட்டு இருக்கப் போகிற சொல்லு?” என்றார் பரிவாக.
காப்பி கப்பை கீழே வைத்து விட்டு முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்ட மீனாட்சி “தனியாவே இருக்கிறது மனசுக்கு வருத்தமா இருக்குங்க. நம்ம வசந்தி பாருங்க பிள்ளை, மருமக பேரப்பிள்ளைங்கன்னு எவ்வளவு சந்தோஷமா இருக்கா. ஆனா நாம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து அலுத்தே வாழ்ந்து முடிச்சிடுவோம் போல இருக்குங்க” என்றார்.
மனைவியை கூர்ந்து பார்த்தவர் “இதை ஏன் தனிமைன்னு நினைக்கிற மீனா? நீ மனசு வைத்தால் எவ்வளவோ செய்யலாம். எல்லாமே நம்ம மனதில் தான் இருக்கு” என்றார்.
முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு “நீங்க செய்கிற அழும்பால தான் என் பசங்களை விட்டு நான் தனியாவே இருக்க வேண்டி இருக்கு” என்றார்.
“இங்கே பாரு மீனா! எதுவுமே நம்ம மனதில் தான் இருக்கு. வேலைக்கு போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் பணத்தை துரத்திகிட்டு ஓடிக் கிட்டு இருந்தோம். இப்போ ஆற, அமர வாழ்கையை அனுபவிப்பதை விட்டுட்டு புலம்பிகிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்றார்.
கணவரை முறைத்து “அது தாங்க சொல்றேன். இனி, நம்ம பசங்க பேரப் பிள்ளைகள்னு அவங்க கூட இருந்தா எத்தனை சந்தோஷப்படுவாங்க. நாமளும் நிம்மதியா இருக்கலாம்” என்றார்.
மனைவியை கூர்ந்து பார்த்தவர் “நீ சந்தோஷமா இருப்ப மீனா. அவங்க வாழ்க்கைக்கு இடையூரா நாம இருக்கிற மாதிரி ஆகிடும்” என்றார்.
தாவங்கட்டையில் கை வைத்துக் கொண்டவர் “நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிந்து தான் பேசுறீங்களா? அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமா வாழ்ந்தவங்க நாம என்பதை மறந்துட்டீங்களா?” என்றார்.
‘ஆமாம்மா! ஆனா அது வேற காலகட்டம்”.
மறுப்பாக தலையசைத்து “எப்படி இருந்தாலும் அம்மா, அப்பா உறவும் பிள்ளைங்க உறவும் காலம் மாறினா மாறி போயிடுமாங்க?” என்றார்.
யோசனையாக மனைவியை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்டவர் “சரிம்மா! நீ சொல்றதை ஒத்துக்கிறேன்...வா” என்று சென்று விட்டார்.
அதன்பின்னர் தனிமையைப் பற்றி இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், மீனாட்சி தனது தோழிகளிடம் புலம்பிக் கொண்டு தான் இருந்தார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக தன் மனதில் சில கணக்குகளை போட்டபடி இருந்தார் ராமநாதன். அன்று மகன் பேசும்போது “செல்வா! எங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா இருக்கு. கொஞ்ச நாள் உன் கூட நாங்க வந்து தங்கட்டுமா?” என்ற கேட்டார்.
கணவர் மகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டதும் உற்சாகமான மீனா அவசரமாக அவரிடமிருந்து போனை வாங்கி மகனிடம் “டிக்கெட் எடுத்து அனுப்பு தம்பி. உங்கப்பா மனசு மாறும் முன்னே” என்றார்.
சிரித்தபடியே மகன் ஒத்துக்கொள்ள, ஜரூராக அங்கு செல்வதற்கு வேலைகள் நடக்கத் தொடங்கியது. மீனாட்சி மிகுந்த உற்சாகத்துடன் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். அங்கே போய் தங்கி, இவருக்கு பழகி போயிடுச்சுன்னா வீட்டை வித்துட்டு மொத்தமாக அங்கேயே தங்கிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டார்.
நாட்கள் வேகமாக செல்ல, அவர்களின் மகன் செல்வா அவர்களை அழைத்துச் செல்ல வந்து விட்டான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் மகன் வீட்டிற்கு செல்லப் போவதை உற்சாகமாக சொல்லிக் கொண்டு மகனுடன் பிரயாணம் செய்தார்கள்.
மகன் வீட்டிற்கு சென்றதும் மருமகள் அவர்களுக்காகப் பார்த்து-பார்த்து சமைத்து வைத்திருந்தாள் பேரப் பிள்ளைகளிடம் கொஞ்சி, மகிழ்ந்து, மருமகளின் கைப்பக்குவத்தை ருசித்து சாப்பிட்டு முடித்ததும், மூன்று படுக்கை அறைகளை கொண்ட அவ்வீட்டின் ஒரு அறையை அவர்களுக்காக காட்டினான் செல்வா.
மீனாவின் முகத்தில் அத்தனை உற்சாகமும், மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருந்தது. பிரயாண களைப்பில் அயர்ந்து உறங்கியவர்கள் மாலை எழுந்து அறையை விட்டு வெளியே வர, பேரன் பையை மாட்டிக் கொண்டு டியுஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். மருமகள் ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டவள் மீனாவைப் பார்த்து “அத்தை! டிபன் ஹாட்பாக்கில் வைத்திருக்கேன், காப்பி பிளாஸ்கில் ஊற்றி வைத்திருக்கிறேன், மாமாவுக்கு கொடுத்திட்டு எடுத்துக்கோங்க. நான் இவனை கொண்டு விட்டுட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
அடுத்து பேத்தியை அழைத்துக் கொண்டு வந்த செல்வா தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு தந்தையைப் பார்த்து “இவளை டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வந்துடுறேன் அப்பா” என்று வெளியேறினான்.
அவர்கள் சென்றதும் சற்றே திகைத்து நின்ற மீனாட்சியை அழைத்த ராமநாதன் காப்பி கேட்க, மெல்ல டைனிங் டேபிளிருக்கு சென்று காப்பி டிபனை எடுத்துக் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டார்.
அவர்கள் வரவே எட்டு மணியானது. மருமகள் வந்து அனைவருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்து சாப்பிட்டு உறங்க பதினொரு மணியானது. மீனாட்சிக்கு முதல் நாளே கண்ணை கட்டியது.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து முடித்து வெளியே சென்றவரின் கையில் காப்பியை கொடுத்துவிட்டு “அத்தை! உங்களுக்கும் மாமாவுக்கும், காலை டிபன் , மதிய லஞ்ச் எல்லாம் செஞ்சு ஹாட் பாக்கில் வச்சிடுறேன்” என்றவளை தடுத்தவர் “அதெல்லாம் நான் பார்த்துகிறேன் மா” என்றார்.
அவர்களோ நிற்க நேரமில்லாமல் இரு பிள்ளைகளையும் ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு பள்ளிக்கு தயார் செய்து அனுப்பி விட்டு தாங்களும் உணவை வேகம் வேகமாக விழுங்கி விட்டு ஆபிசிற்கு கிளம்பிச் சென்றார்கள்.
அனைவரும் கிளம்பிச் சென்ற பிறகு வீடே போர்க்களம் மாதிரி இருந்தது. ராமநாதன் அனைத்தையும் கவனித்துக் கொண்டு அமைதியாக பேப்பரை படிப்பதை போல சோபாவில் அமர்ந்திருந்தார். மீனாட்சியோ எல்லோரும் சென்ற பிறகு வெறுமையாக இருந்த வீட்டைப் பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு சமையலறையை ஒழித்துப் போடச் சென்றார்.
அவர்கள் அங்கு வந்து பத்து நாட்கள் கடந்திருந்தது. அந்த பத்து நாட்களே ஒரு யுகமாக தோன்றியது மீனாட்சிக்கு. இருவரும் குழந்தைகளையும் தயார் செய்து வேலைக்கு ஓடுவதும், மாலை பள்ளியில் இருந்து வரும் பேரப் பிள்ளைகள் நிற்க நேரமில்லாமல் டியுஷன், அந்தக் க்ளாஸ் இந்தக் கிளாஸ் என்று ஓடி விட்டு இரவு எட்டு மணிக்கு வருவதும், பின்னர் எவரிடமும் பேசக் கூட நேரமில்லாமல் அன்றைய வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டு படுப்பதுமாகவே இருந்தது.
தாங்கள் ஊரில் இருந்த பொழுதாவது மகன் வாரம் ஒருமுறை அரை மணி நேரம் அனைத்து கதைகளையும் பேசுவான். ஆனால் இங்கோ நின்று முகம் கொடுத்து பேசவே நேரமில்லாது ஓடிக் கொண்டிருந்தவனைக் கண்டு மனம் நொந்து போனார் மீனாட்சி.
அதோடு இருவரும் தங்கள் வீட்டில் இருந்த பொழுது மாலை டிவியில் வரும் அனைத்து சீரியல்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கோ பேரப் பிள்ளைகள் படிக்கும் நேரம் டிவி போட வேண்டாம் என்று மகன் கூறி விட, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள்ளேயே முடங்கிக் கொள்ள வேண்டிய நிலை.
ராமநாதன் எப்பொழுதும் போல அமைதியாகவே இருந்தார். ஆனால் மீனாட்சியால் முடியவில்லை. படுக்கையில் அமர்ந்திருந்தவரிடம் “நம்ம வீட்டின் தனிமை சுகமானதுங்க..இங்கே இத்தனை பேர் இருந்தும் இந்த அறையின் தனிமை மூச்சு முட்டுதுங்க” என்றார்.
மனைவியை திரும்பி பார்த்தவர் “நாளையில இருந்து காலையில மருமகளுக்கு சமையலில் ஒத்தாசை பண்ணு மீனா. நானும் பசங்களை டியுஷனுக்கு கொண்டு விட்டு அழைச்சிட்டு வரேன்” என்றார்.
சற்றே தயக்கத்துடன் “நீங்க சொன்னப்ப சில விஷயங்கள் எனக்கு புரியலங்க. ஆனா இங்கே வந்து பார்த்த பிறகு புரியுதுங்க. நாம வாழ்ந்த வாழ்க்கை முறை வேற. இன்னைக்கு இவங்க வாழ்க்கை வேற. அவங்களுக்கு இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில் நாம நந்தி மாதிரி இருக்க வேண்டாங்க. வருஷத்துக்கு ஒரு முறையோ இல்ல ரெண்டு முறையோ அவங்க இந்த வாழ்க்கையை விட்டு நம்ம வீட்டில் வந்து நிம்மதியா இருந்திட்டு போகட்டுங்க” என்றார்.
மெல்லிய சிரிப்புடன் “அங்கே போன பிறகு தனிமையில் கிடந்தது தவிக்கிறேன்னு புலம்ப மாட்டியே?” என்றார் கேலியாக.
மறுப்பாக தலையசைத்து “அங்கிருந்த தனிமை வேறங்க. இங்கே அனைவரும் கிளம்பிய பிறகு இருக்கும் தனிமை எனக்கு மூச்சு முட்டுது. நாம நம்ம வீட்டுக்கே போயிடலாங்க” என்றார்.