கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இதம் தரும் அனுராகமே - 18

Mrithula Ashwin

Moderator
Staff member
அத்தியாயம் - 18

"என்னாச்சு உனக்கு? MRI ரிப்போர்ட் எப்ப வரும்னு உனக்கு தெரியாதா? நம்ம செயல்முறையைப் பற்றி தெரிஞ்சு இப்படி பேசற?" என்று கண்டிப்புடன் கேட்டவரைப் பார்த்துத் திருத்திருவென விழித்தாள் அனுராகா.

"இல்ல அப்பா.. வந்து.. எனக்கென்னமோ கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் இருக்குமோ ன்னு தோணுது அதான்.. சாரி"

"அனு.. ரிப்போர்ட்டை நான் சீக்கிரம் தான் கொடுக்கச் சொல்லிருக்கேன்.. எனக்கு அது சாதாரண மயக்கம் மாதிரி தான் தெரியுது.. மே பீ சோர்வு, வேலை டென்ஷன், குளுக்கோஸ் லெவல் கம்மி ஆகி கூட மயக்கம் வந்திருக்கலாம்.. பட் நௌ அவரோட சுகர் லெவல் நார்மல் தான்.. டென்ஷன் ஆகாத?! லெட்ஸ் ஸீ.."

"ம்ம்ம்" என்று மட்டும் அவள் குரல் கொடுக்க,

"நான் ரூமுக்கு போறேன்" என்றவர், திரும்பி ஒரு கணம், அவளை நோக்கி, "எதையும் நிதானமா யோசிக்கிற நீ இன்னிக்கு ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கனு... கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்கறேன்" என்றார் வரிகளுக்கு இடையில் சில வினாக்களோடு?..

"சாதாரண மனித நேயம் தான் ப்பா... மனுஷனுக்கு மனுஷன் ஒரு உதவி.. தட்ஸ் ஆல்" என்று அனுவும் தன் போக்கில் கூற,

"ஹாஹான் மேன் டு மேன் ஹெல்ப்!?.. லெட்ஸ் ஸீ" என அவர் புன்னகையோடு நகர்ந்தார்.

"ஏய் சுண்டெலி.. என் மாமாவோட வாய் தகராறு செஞ்சுட்டு இருந்தியே. என்ன விஷயம்?. உன் பேச்சை கேட்டு இப்படி அவரையே தெறிச்சு ஓட வெச்சுட்டியே.. அட்வைஸை அள்ளி வீசின..? அறுபது வயசு பெரியவரை, ஸ்பிரின்டர் (sprinter - short distance athelete) மாதிரி ஓட வெச்சு, நீ எங்கேயோ போயிட்ட!!"

தன் அருகில் கேட்டக் குரலுக்கு சொந்தக்காரர் யார் எனத் தெரிந்து, சாவகாசமாகத் திரும்பினாள் அனுராகா.

"ஒரே கேள்வியைப் பல விதமா கேட்டு ப்ளேடு போடாத.. நானே செமக் கடுப்புல இருக்கேன்" என்று தன் எதிரே நின்ற வினு என்கிற வினோத்திடம் காய்ந்தாள்.

"ஓ.. கடுப்புல இருக்கியா.. அப்ப சரி! ஜாலி.. ஜாலி" என்றான் வினோத் அவளை சீண்டும் நோக்கோடு.

"உன்னை... நேரம் பார்த்து இந்த அஞ்சு எங்க போனா... ?"

"அவ, அவளோட பேஷண்ட்ஸ் கவனிச்சிட்டு இருக்கா.. எப்படியும் இன்னும் ஒரு மணிநேரத்துல தன்னோட வேலையை முடிச்சிடுவா.. போய் பாரு!!" என்றான் கர்ம சிரத்தையாக.

"அவ்ளோ நல்லவனா நீயி... நாளைக்கு காலை வரைக்கும் பொறு வினு.. நாளைக்கு ரிசெப்ஷன் டெஸ்க் பக்கத்திலேயே ஒரு அறிக்கை பலகை மாட்ட சொல்றேன்.."

"எதுக்கு?"

"டாக்டர் அஞ்சலியின் அசிஸ்டண்ட் வினோத் அவர்களின் மனத்தைரியத்தைப் பாராட்டி, ஒரு கைக்குட்டைப் பரிசாகக் கொடுத்துள்ளோம் ன்னு தான் போட சொல்றேன். உன் புகழ் எட்டுத்திக்கும் பரவிடும்" என்றாள் காட்டமாக.

"ஓ. நன்றி.. நன்றி.. ஆனா சம்பளத்தை கொஞ்சம் அதிகமா ஏத்திக் கொடுத்தா, நானே அந்த கைக்குட்டையை வாங்கிப்பேன்.. அதை வேணா மேலிடத்தில் சொல்லி உதவி பண்ணா, நான் உனக்கு ஹாஸ்பிடல் வாசல்ல போர்டு வைக்கிறேன் எப்படி?" என்றான் அவனும்.

"டேய் அறுக்காத டா"

"ஏய் அனு.. என்ன பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிட்ட?"

"ஆறு மாசம் பெரியவனுக்கு என்ன டேஷுக்கு மரியாதை தரணும்... முடியாது போடா"

"ஐயகோ, என் இதயம் வலிக்கிறதே.." என்று வினு நாடகத்தனமாக பேச, அதை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

மீண்டும் வினோத் பேச்சைத் தொடங்கினான். "சரி ஜோக்ஸ் அபார்ட் அனு.. மிஸ்டர் மதுகரனுக்கு, மாமா என்னோட தான் கன்சல்ட் பன்னாரு.. எனக்கு தெரிஞ்சு, நத்திங் டு ஒர்ரி"

"ஓ.. நல்லது.. உன் பேச்சு கொஞ்சம் லொட லொட ன்னு இருந்தாலும், சரியா தான் பரிசோதனை பண்ணுவ.. சோ தேங்க்ஸ்"

"நான் உனக்கு லொட லொடவா.. எனக்கென்னமோ, ரிஷி சொன்னதை வெச்சுப் பார்த்தா, நீ பேசிப், பேசியே, மதுகரனை மயக்கம் போட வெச்சுட்டியோ ன்னு தோணுது.. என்ன நான் சொன்னதுக் கரெக்ட்டா? டக்குனு திரும்பி, திகில் பார்வை விடற?" என்று விளையாட்டாக போட்டு வாங்க,

"அப்படியும் இருக்குமா வினு? நான் சுத்தி வளைச்சு சொல்லாம, நேரடியா, அவர்கிட்ட என் காதலை சொன்னதால அதிர்ச்சில மயக்கம் வந்திருக்குமோ?"

"என்னது,? ப்ரொபோஸ் பண்ணதால மயங்கிட்டாரா? இருக்கும் அனு.. ஏன்னா, இப்படி ஒரு அறுவை அருக்கானி வந்து காதலை சொல்லுவா ன்னு அவர் நினைச்சு பார்த்திருக்க மாட்டார் தானே.. ரூல்ஸ் ராமானுஜத்துக்கு ஒன்னுவிட்ட பெரியம்மா பொண்ணு மாதிரி பேசியிருப்ப.. அதான், எஸ்கேப் ஆக வழி கிடைச்சிருக்காது.. " வினு அவளை ஒருவழி ஆக்கும் நோக்கோடு சீண்டிக் கொண்டிருக்க, அனுவிற்கு உள்ளுக்குள் ஆத்திரம் பெருக்கெடுத்து ஓடியது.

"அனு, காதல் ன்னா என்னன்னு தெரியுமா? என்னை பொறுத்தவரையில் அது ஒரு மொழி. ரோஜா பூ காதல் சின்னம். அதிலும் கிரேக்க காதல் கடவுளோட தொடர்புக் கொண்டது சிகப்பு ரோஜாக்கள். அவங்களோட...."

"போதும் நிறுத்து வினு.. ப்ளீஸ்"

"ஹே ஓன்னே ஒன்னு சொல்லிடறேன் ப்ளீஸ்யா.. அறிவியல் பூர்வமா பார்த்தா, ரோஜாக்கள் மன அழுத்தம், பதற்றம், அப்புறம் மனச்சோர்வைக் குறைக்கவும், மனநிலையை குறைக்கவும் உதவுது.. அதான் ரோஜா பூவையும், நம்ம இதயத்தையும், ஒப்பிட்டு சொல்லுவாங்க.." என்று தனக்கு தெரிந்த சில விஷயங்களை உரைத்தான்.

அப்பொழுது, தன் அறையிலிருந்து, வெளியே வந்த அஞ்சலி, இருவரையும் பார்த்துவிட்டு அங்கே வர, "வாம்மா அஞ்சலி.. உனக்காக தான் இந்த வினு ஏதோ சொல்லக் காத்துகிட்டு இருக்கான்"

"என்ன சொல்லணும் வினு?" என்று அஞ்சலி கேட்க,

"அவ சும்மா சொல்றா.. எனக்கு சொல்ல ஒன்னுமில்ல அஞ்சு" என வினு மழுப்ப,

"இதான் சரியான சந்தர்ப்பம் வினு.. பட்டுனு காலுல விழுந்து சொல்லிடு" என்க

"எதுக்கு என் காலுல விழனும்.. என்ன வினு.. சொல்லு, எனக்கு நேரமாச்சு"

"அப்ப நீ கிளம்பு.. இன்னொரு நாள் சொல்றேன்.. இப்பவே சொல்ற அளவுக்கு, அது ஒன்னும் தலைப் போற அவசரம் இல்ல.." என்று வினோத் ஜகா வாங்க, அனு வேடிக்கை பார்த்தாள். இந்த பக்கம் அவன் முறைத்தத்தையோ, வாயோடு முணுமுணுத்தத்தையோ அவள் சட்டை செய்யவில்லை.

"நீ சொதப்பற வினு.. இரு நானே சொல்லிடறேன்.. அது, வினு.." என்று அனு சொல்லி முடிக்கும் முன், அவள் வாயை பட்டெனப் பொத்தினான் வினோத்.

"என்ன நடக்குது இங்க.. நீங்க வம்பு பண்ண இன்னிக்கு நான் தான் கிடைச்சனா..? நேரங்காலம் இல்லாம எப்ப பாரு விளையாட்டு.. நீங்க எல்லாம் டாக்டர்ஸ் வேற.. விளங்கிடும்.." என்று அஞ்சலி டென்ஷனில் பொறிந்தாள்.

என்ன தான் மூவருமே நண்பர்கள் என்றாலும், கண் முன்னே, வினோத்தும், அனுராகாவும் கலகலப்பாக, சகஜமாக தொட்டுப் பேசுவதை, அவளால் சமீபகாலமாக ஏற்க இயலவில்லை. ஒரு வகையில் பொறாமை என்றும் சொல்லலாம்.. !!

"அஞ்சு.. கேளு, இந்த வினோத் உன்னை.."

"என்னை..." சிறு ஆர்வத்துடன், அஞ்சலி வினவ,

"டேய் வினு சொல்ல விடேன் டா இம்சை.." என்று அவனையும் மீறி கூறிவிட்டாள் அனுராகா.

"வினோத் உன்னை லவ் பண்றான்.."

"வாட்??" என்று அஞ்சலி அதிர, வினோத் ஸ்தம்பித்து நிற்க, அனுராகா மகிழ்ச்சியில் நின்றாள்.

"வினோத் என்ன இது? இது நல்லா இல்ல" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள் அஞ்சலி.
வினோத் தலை மீது கையை வைத்து ஹாஸ்பிடல் காரிடாரில் அமர்ந்து விட்டான்.

"சரி நான் மதுவை பார்க்கப் போறேன்.. அப்புறம் பேசுவோம் பை" இரண்டடி நடக்க, "ஏய் நில்லு... இங்க என் காதலை புசுவானம் ஆக்கிட்டு, பை ன்னு கூலா சொல்லிட்டுப் போற!!! தடுத்து நிறுத்தினான் வினோத்.

"இல்ல தெரியாம தான் கேக்கறேன்.. ஏன் இப்படி பண்ண?"

"லவ் குரு ரேஞ்சுக்கு காதலுக்கு விளக்கம் சொன்னியே.. காதலின் மொழி, சின்னம்ன்னு ரோஜா பூ வெச்சு அளந்தியே.. அதையே அவளுக்கு சொல்லி ப்ரொபோஸ் பண்ண வேண்டிய சான்ஸ நீ மிஸ் பண்ணிடுவியோன்னு பயந்துட்டேன்.. அதான் பட்டுனு சொல்லிட்டேன்.. எனிவே வாழ்த்துக்கள் மச்சி.. காதல் சக்ஸஸ் ஆயிடுச்சு உனக்கு" எனக் கூறி அவன் தோளை தட்டினாள்.

"அடிப்பாவி.. எப்படி ப்ரொபோஸ் பண்ணனும்னு பிளான் வெச்சிருந்தேன் தெரியுமா? அத்தனையும் சொதப்பிட்டியே.. ஒரு வாட்டர் தீம் பார்க் கூட்டிட்டு போய், இருபத்தி நாலு ரோஜா பூவை கொத்தா கட்டி, ஒரு சின்ன முள்ளு கூட இல்லாம, அவளுக்கு ரொம்ப பிடிச்ச கலரான ஒரே ஒரு ப்ளூ ரோஸ் நடுவுல அதோட வெச்சு என் காதலை சொல்லணும்னு நினைச்சேன்.. ப்ளூ ரோஸ் ஆர்டர் பண்ணி வர வெச்சேன்.. போச்சு.. போச்சு.. என் பிளான் எல்லாம் புட்டுகிட்டு போயிடுச்சு" என்று வண்டி வண்டியாகப் புலம்பினான்.

"இட்ஸ் ஓகே மச்சி.. இப்ப தான் உன் காதல் அவளுக்கு தெரிஞ்சுடுச்சே.. நீ பிளான் பண்ண மாதிரி, தீம் பார்க் கூட்டிட்டு போய் ரோஸ் கொடுத்து சொல்லிடு.. சிம்பிள்.. சரி நான் போய் என் அமோரை கவனிக்கிறேன்.. டாடா.." என்று அனுராகா நழுவினாள்.

மதுகரன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றாள். அங்கே அவளை உள்ளே செல்லும் முன், அபிராமி தடுதவிட்டார்.

"அனு.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத.. உன் நல்லத்துக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். நீ மது தம்பி அறைக்குப் போனது ரொம்ப தப்பு. ஒரு பையன் இருக்கிற அறைக்கு, கல்யாணம் ஆகாத பொண்ணு போறது சரிக் கிடையாது. நீ வீட்டுக்கு வா, என்னோட பேசு, மது தம்பியோடப் பேசு ஆனா அந்த சந்திப்பு எங்க வீட்டு வரவேற்பறையோட நிக்கனும். உங்க ரெண்டு பேரோட நல்ல வாழ்க்கைக்காக தான் இதை சொல்றேன்"

"அத்.. ஆன்ட்டி நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. "

"எனக்கு விளக்கம் வேணாம் கண்ணு.. ஆனா நான் சொன்னதை நீயே யோசிச்சுப் பாரு" என்று அதோடு பேச்சை நிறுத்திக் கொண்டார்.

சற்று நேரம் பொறுத்து, ரிஷி அனுவிடம் வந்து மெதுவாக, ஆன்ட்டி சொன்னதைப் பெருசா எடுத்துக்காத.. நான் அப்புறமா புரிய வைக்கிறேன்.."

"தட்ஸ் ஓகே ரிஷி. அவங்க என்னை வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லலையே.. " என்று புன்னகையித்தாள்.

"சரி வா, மது முழிச்சிக்கிட்டான்.. வந்துப் பாரு" என்று அனு மற்றும் அபிராமியையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆனால் மது, "அனுவை அங்கே கண்டதும், தன்னை மீறி கூச்சலிட்டான்.

"வெளியேப் போ.. எனக்கு வேணாம்.. எனக்கு எதுவுமே வேணாம்.. காதல் வேண்டாம், கல்யாணம் வேண்டாம்.. ஜஸ்ட் கெட் லாஸ்ட்" என்று கத்தவும், என்ன செய்வதறியாது குழப்பமுற்றனர் ரிஷியும், மதுவின் அன்னையும். ஆனால் இதை அனு எதிர்பார்த்திருந்தாள் போலும். மெல்லிய புன்னகையோடு, அவன் அருகே மெல்ல சென்று நின்றாள்.

நின்றவள், அவனை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கினாள். அந்தப் பார்வையில் பொதிந்துள்ள பொருள் என்னவோ?
 

Mrithula Ashwin

Moderator
Staff member
அருமையான பதிவு
எதுக்கு அப்படி பார்த்த அனு.
நன்றி சிஸ் 😍😍
அடுத்த பதிவில், இன்னும் சில விஷயங்கள் தெரிய வரும்
 
Top