2.
அதிகாலை வேளையில் சக்தியின் இல்லம் போய் சேர்ந்தது அவள் சென்ற கார்.
நேராக வீட்டிற்குள் விடவும் பணியாட்கள் அனைவரும் சக்தியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் நின்றிருந்தனர்.
முதலில் இறங்கிய சித்தப்பா என்ன காலங்காத்தால யாருக்கும் வேலை இல்லையா எல்லாரும் போய் வேலையைப் பாருங்க என அனைவரையும் விரட்டி விட்டார்.
பிறகு சக்திக்கு காரை கதவை திறந்து விட அவள் காரை விட்டு இறங்கினாள்.
ஆரத்தி எடுப்பதற்காக இரு பெண்கள் வரவும் எனக்கெதற்கு சித்தப்பா இதெல்லாம்.
எத்தனை நாள் கழித்து வீட்டிற்கு வந்திருக்க..நில்லும்மா என்றபடி உள்ளே சென்றார்.
ஆரத்தி எடுத்த பெண்களை பார்த்தவள் நீங்க புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கீங்களா அக்கா எனக் கேட்டாள்.
வேலையாட்களை சற்றும் மதிக்காத குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் மரியாதையாக உறவுமுறை வைத்து அழைக்கவும் இரு பெண்களுமே மகிழ்ச்சியோடு ஆமாம் என தலையசைத்தனர்.
அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்து சக்தியின் தாயோ என்ன இது புது பழக்கம் சக்தி வேலைக்காரங்க கிட்ட எல்லாம் வளவளன்னு பேசிகிட்டு உள்ள வா என சிடுசிடுத்தார் சக்திக்கு ஒரு மாதிரியாகிவிட்டது மௌனமாக வீட்டிற்குள் வந்தாள்.
ஏனோ அவளால் உரிமையோடு உறவாட முடியவில்லை.
கடந்த ஆறு மாத காலத்தில் அவளது வீட்டில் தான் எத்தனை மாற்றங்கள்.
வேலையாட்கள் அனைவரும் புதியவர்கள் மருந்திற்கு கூட அந்நிய ஆண்கள் தென்படவில்லை அநேகமாக இவள் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் வேலை செய்த ஆண்களை எல்லாம் தந்தை அனுப்பி இருப்பார் என நினைத்தாள்.
அது மட்டும் இல்லாமல் அவளது குடும்பம் வேறு எல்லா உறவுகளையாம் உள்ளடக்கிய மிகப் பெரிய கூட்டுக்குடும்பம்.
நான்கு தெருவை ஒன்று சேர்க்கும் அளவிற்கு இருக்கும் அவர்களது வீடு சுற்றிலும் ஆளுயர மதில் சுவர் கட்டி உள்ளுக்குள் பழமை மாறாத மிகப்பெரிய தொட்டிகட்டி வீடு.
காலம் காலமாக பல தொழில்களில் கொடிகட்டி பறப்பவர்கள்.
பெரியப்பா வேறு அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் சொல்லவே வேண்டாம் கமிஷனாக பெறப்படும் பணம் பெரும் பகுதி இந்த குடும்பத்திற்காகவே கொட்டப்படுகிறது.
தந்தை வேற ஜாதி கட்சி தலைவர் சித்தப்பா ஊரில் இருக்கும் அத்தனை கட்டை பஞ்சாயத்துகளையும் பார்ப்பவர் இந்த வீட்டிலிருந்து சக்தி எப்படி காதல் திருமணம் செய்து வெளியேறினாள் என்பது குடும்பத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் புரியாத புதிர் தான்.
வீட்டிற்குள் வந்தவளை யாரும் அமர சொல்லவும் இல்லை மேற்கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் செல்லவும் இல்லை.
அவளது பெரியம்மா கண்மணி தான் முதலில் கண்ணில் பட்டார்.
சிரிப்பதா வேண்டாமா என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
கனத்த உருவத்தில் கழுத்து நிறைய நகைகளுடனும் பெரிய ஜரிகை பட்டு அணிந்திருந்தவர் அவளைப் பார்த்த பார்வையில் என்ன இருந்தது.
கனிவு, பரிதாபம், அடிப்பட்டு வேதனையில் அனத்தும் வளர்ப்பு பிராணியை பார்ப்பார்களே அது போன்றதொரு பார்வையா..?இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..?
வா..சக்தி இப்போ தான் வந்தியா.
குரல் எதற்கோ பயந்தது.
ம்ம்.. பெரியம்மா எப்படி இருக்கீங்க.
பாக்கறல்ல என்றவர்.. பின்னாடி சுடுதண்ணீர் விளாவி வச்சிருக்கு போய் தலைக்கு எண்ணெய் வச்சி தலைமுழுகிட்டு உள்ள வா.
ஹான்..?
என்ன மதனி நீங்க எதையும் தெளிவாவே சொல்ல மாட்டீங்களா பயணக் கலைப்பு தீர தலைக்கு நல்லா எண்ணெய் வச்சு தேச்சு குளிச்சிட்டு வான்னு சொல்லணும் என வீட்டிற்குள் நுழைந்த சித்தப்பா கூறியபடி உள்ளே வந்தார்.
ஓஓ.. என நிம்மதிப் பெரு மூச்சு விட்ட சக்தி அவளது பயண பையை தேடினாள்.
என்னமா தேடுற.
என் பேக் சித்தப்பா.
அடடா மறந்தே போச்சு பாத்தியா கார்லயே விட்டுட்டேன் டிரைவர் வேற இப்போ காரை செட்டில் விட்டிருப்பானே..அதனால என்ன நீ முதல்ல போட்டுட்டு இருந்த துணிமணிகள் எல்லாம் இங்கதான் இருக்கு அதுல ஏதாவது ஒன்னு எடுத்து போடு அப்புறமா யாரையாவது விட்டு பேக்கை எடுத்துட்டு வர சொல்றேன்
என அனுப்பி வைத்தார் .
அவள் குளித்து முடித்து வெளியே வரவும் விலை உயர்ந்த ஆடைகள் அதற்கு ஏற்றது போல நகைகள் என அனைத்தும் வந்தது.
சக்தி திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலோ அதே போலவே சில மணி நேரத்தில் மாற்றப்பட்டாள்.
ஆறு மாத காலத்தில் கணவனின் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தி பழகிய சக்திக்கு மீண்டும் பழைய மாதிரியான ஆடம்பர வாழ்க்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..நகைகளை கழட்டி வைத்தவள் பிரோவைத்திறந்து எளிய முறையில் இருக்கும் ஆடையை தேடிக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த அவளது தாய் ரேவதி இங்க என்ன பண்ணற கோபம் கொப்பளித்தது வார்த்தையில்.
அவரின் திடீர் வருகையில் பயந்து பீரோவோடு ஒன்றியவள்.. தாயைப் பார்த்ததும் நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டு படி நீங்களாம்மா நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்.
இந்த டிரஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு காட்டன் சுடிதார் இருக்கான்னு தேடிட்டு இருக்கேன்மா என்றாள்.
உன்னை பாக்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்துகிட்டே இருப்பாங்க அதனால இதேயே போட்டுக்கோ எதுக்கு நகை எல்லாம் கழட்டி வச்சிருக்க எல்லாத்தையும் எடுத்து கழுத்துல மாட்டிக்கோ என வார்த்தைகளில் கனிவு என்பது கொஞ்சமும் இல்லாமல் மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல பேசினார்.
என் மா வீட்ல வேலை செய்றவங்க கிட்ட பேசுற மாதிரியே என்கிட்டேயும் பேசுறீங்க நான் உங்க பொண்ணு மா ஆறு மாசம் கழிச்சு உங்களை எல்லாம் பாக்கணும்னு ஆசையா ஓடி வந்திருக்கேன் என்கிட்ட கொஞ்சம் பாசமா பேச கூடாதா என ஏக்கமாக கேட்டபடி தாயின் தோள் மீது கை வைத்தாள்.
பட்டென்று கையை தட்டி விட்டவர் ஆமா பாசமா பேசறது போல தானே நீ நடத்துகிட்ட.. எவனோ ஒருத்தனுக்காக
பெற்று வளர்த்த எங்க எல்லாரையும் விட்டுட்டு ஓடிப்போனதுதானே நீ.
உன்கிட்ட வேற எப்படி பேசறதாம்..ஆமா எந்த மூஞ்சியை வச்சுட்டு இங்க வந்த உன் சித்தப்பாக்கு தான் அறிவு இல்லன்னா உனக்கு எங்க போச்சு புத்தி.
சரி சரி என்னமோ வந்துட்ட.. வீட்ல பங்க்ஷன் முடிஞ்சதும் உடனே கிளம்பி போற மாதிரி இருந்துக்கோ.
அது வரைக்கும் அந்த வெறும் பையலோட பொண்டாட்டியா இருக்காம இந்த வீட்டு பொண்ணா கொஞ்சம் பகட்டோட இரு எனக் கூறியபடி சென்று விட்டார்.
கண்களில் கண்ணீருடன் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
அதன் பிறகு வந்து ஒவ்வொரு நாட்களிலுமே அவளுக்கு ராஜ உபசரிப்பு தான்.
அவளுக்கு இரண்டு அண்ணிகள்.
பெரியப்பாவின் மருமகள் ஒருத்தி..சொந்த அண்ணி ஒருத்தி..இருவருமே அவளுக்கு பலவிதமான புடவைகளையும் நகைகளையும் அவ்வப்போது பரிசளித்து விட்டு சென்றனர்.
கூடவே வெளியேயும் அழைத்துச் சென்று உயர்தர உணவுவகைகளை வாங்கிக்கொடுத்தனர்.
அவர்களின் பேச்சு செயல்பாடுகள் அனைத்துமே இதை எல்லாம் நீ கடந்த ஆறு மாதத்தில் பார்த்திருக்கவே மாட்ட அதனால இப்போ பாத்துக்கோ என்ற மறைமுக பொருள் ஒளிந்து இருந்தது அது சக்திக்கு புரியாமல் இல்லை.
மென் புன்னகையில் அவளது அவமானங்களை மென்று முழுங்கினாள்.
நாட்கள் மெதுவாக நகர்ந்தது.. ஆரம்பத்தில் அவளிடம் கோபமாக நடந்து கொண்ட சித்தி அம்மா அண்ணன்கள் கூட இப்பொழுது மெல்ல மெல்ல அவளிடம் பழைய பாசத்தை பொழிய ஆரம்பித்தனர்.
சித்தப்பாவின் மகளான ஆர்த்தி கடந்த ஆறு மாதத்தில் சக்தியை எந்த அளவிற்கு மிஸ் செய்திருந்தாள் என்பதை கண்ணீருடன் விவரித்தாள்.
தன்மீது இவ்வளவு பாசம் வைத்திருந்தாளா இச்சிறு பெண் என்று பதிலுக்கு இவளும் கண்கலங்கினாள்.
கூடவே அத்தை அவள் இல்லாமல் அந்த வீடு இந்த ஆறு மாதத்தில் எத்தனை வேதனைகளை சுமந்தது என்பதையும் அவ்வப்போது விவரித்து விட்டு சென்றார்.
தந்தை இவளை பார்த்ததும் கண்களில் நீருடன் எப்படிம்மா இப்படி ஒரு முடிவை எடுத்த நீ எல்லாத்தையும் அப்பா கிட்ட சொல்லற நீ உனக்கு ஒருத்தனை பிடிச்ச விஷயத்தை சொல்லாம விட்டுட்டியே.
எனக்கு இவனை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ண ஆசைப் படறேன்னு சொல்லி இருந்தா நானே ஊரை அழைத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே.
அதை விட்டுட்டு எங்க எல்லாரையும் ஏமாத்திட்டு ஓடிப்போக உனக்கு எப்படி ஆத்தா மனசு வந்தது என இரு கைகளையும் யாசகம் கேட்பது போல ஏந்தி கண்ணீர் சிந்தும் பொழுது இவளாலும் கதறி அழாமல் இருக்க முடியவில்லை.
மாறி மாறி மூன்று அப்பாக்களிடமும் அத்தையிடமும் மன்னிப்பு கேட்டவள் அந்த வார இறுதியில் மெல்ல மெல்ல அவர்களின் வீட்டு மகளாகவே முற்றிலும் மாறிவிட்டாள்.இல்லையில்லை மாற்றப்பட்டாள்.
கணவன் சிவா என்ன செய்கிறான் எப்படி இருக்கிறான் என்று நினைவே வராத அளவிற்கு அவளது குடும்பம் அவளைப் பார்த்துக் கொண்டது.
அது மட்டும் இல்லாமல் அவள் கொண்டு பயண பையோ அதில் அவள் வைத்திருந்த மொபைல் போனோ எங்கிருக்கிறது என்று முதல் இரண்டு நாள் கேட்டு சலித்தவள் மெல்ல மெல்ல அந்த விஷயத்தை மறந்தாள்..
வேளைக்கு ஒரு புத்தாடை அதற்கு மேட்ச்சாக அணிந்து கொள்ள விதவிதமான நகைகள் ஆசைப்பட்ட உயர்தர உணவுகள் அவள் பார்த்து ரசிக்கும் பிரபல நடிகரின் சினிமா இப்படி அவளது வாழ்க்கை ஒரு வாரத்தில் முற்றிலும் மாறி இருந்தது.
வாரக்கடைசியில் அத்தைப் பிள்ளைகளோடும் சித்தப்பா பிள்ளைகளோடும் விளையாடிக் கொண்டிருந்தவளிடம் வந்த அவளது தாய் தான் மெதுவாக கேட்டார்.
நீ வந்து ஓரு வாரம் ஆச்சில்ல..உன் புருஷன் கிட்ட பேசினியா..அவர் உன்னை தேட மாட்டாரா..
அது..ம்மா.
இந்த காலத்து பிள்ளைகளோட காதலெல்லாம் இவ்வளவுதான் ஒரு வாரம் நல்ல சாப்பாடு நல்ல துணிமணி சுத்தி உன் ஆளுக.
தானாகவே உன் காதலும் உன் புருஷனும் மறந்து போய்ட்டான் பாத்தியா..என நக்கலா கேட்டபடி சென்றார்.
அதிர்ச்சியில் தாயைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் சிவாவிடம் பேசி ஒரு வாரம் ஆனது என்ற விஷயமே ஞாபகத்திற்கு வந்தது.
இதோ சக்தி சென்று ஒருவாரம் ஆகி விட்டது…இந்த ஓரு வாரத்தில் சக்தி சிவாவிடம் ஓரு வார்த்தை கூட பேச வில்லை.
அவனும் எவ்வளவோ முயன்று விட்டான் அவளிடம் பேசவே முடியவில்லை…இவன் அழைக்கும் நேரமெல்லாம் நம்பர் பிஸி.. இல்லையென்றால் சுவிட்ச் ஆஃப்.. வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பல அனுப்பி விட்டான்..அது திறக்கபடாமலே கிடக்கிறது…என்ன செய்வது…சிவாவால் இப்பொழுது அவளைத் தேடி செல்லவும் முடியாது.
பணிச்சுமை வேறு அவனை அசையவிடவில்லை.
மனையாளின் பிரிவு ஓரு புறம் வேலை மறுபுறம் என இரண்டிற்கும் நடுவில் சிக்கித்தவித்தான்.
பெண்கள் பிறந்த வீட்டினரைப் பார்த்தாலே அனைத்தையும் மறந்
து விடுவர்.. இதில் சக்தி அவளது பிறந்த வீட்டிற்கே சென்றிருக்கிறாள்..சொல்லவா வேண்டும் என மனதை தேற்றிக் கொண்டான்.