கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இனிய தனிமையே! - அன்னப்பூரணி தண்டபானி

Aathisakthi

Well-known member
அழகான குடும்பம்...

அருமையான பெற்றோர...

அதை சரியாக பயன்படுத்தும் அற்புதமான மகன்...

உழைப்பும் திறமையும் அங்கிகரிக்க படாமல் போனால்...

சோர்வு என்பது சொல்லாமல் கொள்ளாமல் சொந்தமாகி விடுதே...

ஆனால் காற்றை கையில் அடைக்க முடியுமா..

கலையை தட்டி பறிக்க முடியுமா...

உழைப்பே அழைப்பாய் தொலைபேசி வழியாய் ...

தனிமையும் இனிமையாகும்...

இதயம் அதை இயல்பாய் ஏற்று அழகாய் மாற்றும் பொழுது...

வாழ்த்துக்கள்🌹🌹🌹
 

Annapurani Dhandapani

Active member
அழகான குடும்பம்...

அருமையான பெற்றோர...

அதை சரியாக பயன்படுத்தும் அற்புதமான மகன்...

உழைப்பும் திறமையும் அங்கிகரிக்க படாமல் போனால்...

சோர்வு என்பது சொல்லாமல் கொள்ளாமல் சொந்தமாகி விடுதே...

ஆனால் காற்றை கையில் அடைக்க முடியுமா..

கலையை தட்டி பறிக்க முடியுமா...

உழைப்பே அழைப்பாய் தொலைபேசி வழியாய் ...

தனிமையும் இனிமையாகும்...

இதயம் அதை இயல்பாய் ஏற்று அழகாய் மாற்றும் பொழுது...

வாழ்த்துக்கள்🌹🌹🌹

Thank you so much Sis, for your wonderful comment in the form of a Poem. Liked it very much.
 

Rosie kajan

Moderator
Staff member
ஹாய் அன்னபூரணி,

கதை நகர்வு வாசிக்க நன்றாக இருந்தது .

தனிப்பிள்ளையாய் இருப்பதுக்கும் சாதிப்பதுக்கும் தொடர்பில்லை என்றாலும் அவன் பெற்றோர் மனதில் அந்த ஒற்றைப்பிள்ளைை என்பது கவலை கொடுத்திருக்கு. தனிப்பிள்ளை எதிர்காலம் எப்படியாகுமோ என்று இருந்திருக்கிறார்கள் போலும் . இப்படிதான் சிலர். முடிவைப்பார்த்தால் தனியாக இருந்ததால் தான் தன்னால் சாதிக்க முடிந்தது என்ற எண்ணம் அவனுள்் இருக்கோ! நிச்சயம் அது தவறான எண்ணம் என்றே எனக்குத் தோன்றுது.

தனிமை என்பதோடு ஒப்பிடுகையில் தான் அன்னபூரணி இந்த எண்ணம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் உண்மையான உழைப்புக்கு நிச்சயம் அங்கிகாரம் கிடைத்தே தீரும், அதுவும் தத்தமக்கு விரும்பிய வழியில் சென்று சாதிக்கலாம் என்கிறது கதை !



மனமார்ந்த வாழ்த்துகள்!
 
Top