சங்கமம் குழுமத்தின் அடுத்த அறிவிப்பு இதோ..
எங்களுடன் இணைந்து பயணிக்கும், எங்கள் தளத்தில் எழுதும் எழுத்தாள தோழமைகளுக்காக இந்த ‘இரட்டை ரோஜாக்கள்’ போட்டி நடத்த, சங்கமம் குழுமம் தீர்மானித்திருக்கிறது.
இரட்டை ரோஜாக்கள் போட்டியின் விதிமுறைகள் கீழே:
இரட்டை ரோஜாக்கள்
எங்களுடன் இணைந்து பயணிக்கும், எங்கள் தளத்தில் எழுதும் எழுத்தாள தோழமைகளுக்காக இந்த ‘இரட்டை ரோஜாக்கள்’ போட்டி நடத்த, சங்கமம் குழுமம் தீர்மானித்திருக்கிறது.
இரட்டை ரோஜாக்கள் போட்டியின் விதிமுறைகள் கீழே:
- நமது சங்கமம் நாவல்ஸ் தளத்தில் தற்போது தொடர்கதைகள்/ குறுநாவல்கள் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்தப் போட்டி.(15.09.2020 க்குள்). தங்கள் படைப்புக்களை இங்கே தற்பொழுது எழுதி கொண்டிருக்கும் எழுத்தாள பெருமக்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இது சங்கமம் எழுத்தாளார்களுக்கு மட்டுமே.
- எழுத்தாளர்கள் இருவர் இணைந்து எழுத வேண்டும். இரட்டை ரோஜாக்களாய் பூக்க வேண்டும்.
- கதையின் கரு உங்கள் இஷ்டம்.. அறிவியல், அமானுஷ்யம், குடும்பம், காதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- இருவரும் கலந்து ஒரு கதைதான் எழுத வேண்டும்... ஆனால், ஒருவர் ஒரு கதை மட்டுமே ஜோடியுடன் எழுத அனுமதி. எழுத்தாளர்களே, சரியாக கவனியுங்கள்.
- யார் யாருடன் சேருவது என்பது எழுத்தாளர்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் சங்கமம் குழுவின் தலையீடு நிச்சயம் இருக்காது.
- கதையின் வார்த்தைகளின் அளவீடு 30000-40000 க்குள் இருக்க வேண்டும். கதையின் தேவைக்காக, அதிகபட்சமாக இருநூறு வார்த்தைகள் கூடலாம். ஆனால், நிச்சயம் வார்த்தைகள் 30000 கீழே குறையக்கூடாது.
- பரிசு தொகை நிச்சயம் உண்டு. ரூ.5000 பரிசுத்தொகை..(மொத்தம் ரூ.5000+5000) இரு ஜோடிகளுக்கு. சிறந்த இரண்டு.. இரு குழுவுக்கும் தலா ரூ.5000. பரிசுத் தொகையை ஜோடிகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும்.
- இதைத்தவிர, கதை முடிந்தவுடன் அக்கதையை நம் அச்சகம், பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.. புதுவருடத்தில் அக்கதை அச்சேறும்.
- புதுப்பிக்கப்படும் கதைகள் அனைத்திற்கும், நிச்சயம் எழுத்தாளர்களுக்கான சன்மானம் உண்டு. அதுவும் இரட்டை ரோஜாக்களுக்கும் பகிர்ந்துதான் அளிக்கப்படும். (ஃபாரம் ஒன்றுக்கு ரூ 200/-)
- உங்கள் ஜோடியைப்பற்றிய விவரங்களும், கதையின் தலைப்பையையும் செப்டம்பர் 15, 2020 க்குள் தகவல் சொல்ல வேண்டும். எங்கள் தனிப்பட்ட மெயில் ஐ.டியில் தெரிவிக்கவும். அல்லது வாட்சப்பில்.
- கதை தொடங்கும் நாள் அக்டோபர் 1 முதல்… ஜனவரி 15 வரையில் மட்டுமே..
- வாரம் ஒரு பதிவாவது அவசியம் இருத்தல் வேண்டும். மற்றபடி தினம் ஒரு பதிவு கொடுத்தாலும் சம்மதமே.
- உங்கள் கதைகளை நீங்களே தளத்தில் பதிவிடலாம்..
- Word Doc. ல் 10 புள்ளியில் கதைகளை எழுதி, நம் தளத்தில் தயவுசெய்து Font 18 அல்லது 22 ல் பதிவேற்ற வேண்டும்.
Last edited: