கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உன்னுள் உறைந்தேனே பிரியசகி

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 4


வெளியில் செல்லும் சத்யனையே பார்த்து கொண்டு இருந்தாள் உமா... அவன் சென்றதும் கதவு மூடி கொள்ள


உமாவிற்கு குழப்பங்கள் தான் அதிகமானது... அதிலும் அவள் கண்ட காட்சி.. அது கனவா, கற்பனையா, இல்லை, அவள் வாழ்வில் நடந்த நிகழ்வா என்பது மட்டும் அவளுக்கு புரியவே இல்லை..யாரை கேட்பது என்பதும் கூட புரியவில்லை அவளுக்கு.


"ஆனால் அதில் அனைவரும் சங்க காலத்தை சேர்ந்தவர்கள் போல இருந்தார்களே.. அதிலும் அந்த டாக்டர் எப்படி அதுல வந்தாரு.. அவர் யார் எனக்கு" பெட்டில் பின் நோக்கி சாய்ந்த படி, கண்ணை மூடி அவள் யோசிக்க.


"டமால்" என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஆதிரா.. அவள் எழுப்பிய சத்ததில் நெற்றி சுழித்த படி.


"எத்தனை தடவை சொல்லுறது உனக்கு... பொறுமையா நடக்க சொல்லி... பொண்ணு மாதிரி நடந்துக்கோ ஆதிரா" என்றாள் உமா அவளையும் அறியாமல்.


அதில் விக்கித்து போய் நின்ற ஆதிரா.. "அக்கா உனக்கு நியாபகம் வருதா... நான் இப்டி தான் நடப்பேன்னு உனக்கு நியாபகம் இருக்கா" என்றாள் எதிர்பார்ப்போடு.


அதில் கலங்கிய உமா.. "இல்லை, எதோ தோணியது சொல்லிட்டேன்... வேற எதுவும் நியாபகம் பண்ண முடியல... எவ்வளவு யோசிச்சாலும் எதுவும் நியாபகம் வர மாட்டேங்குது" என்றாள் சோகமாக.


இது ஆதிராவிற்கு ஏமாற்றத்தை தந்தாலும்..அதை முகத்தில் காட்டாமல் மறைத்தவள்...


"பரவாயில்லைக்கா..நான் எதுக்கு இருக்கேன்.. உனக்கு எல்லாத்தையும் நியாபகம் பண்ணிடுறேன்... நான் எப்பவும் இப்டி தான்.. கண்ணு மண்ணு தெரியாதா மாதிரி அங்கேயும் இங்கயும் ஓடுவேன்... நீயும் அம்மாவும் இதோ இப்போ நீ சொன்னா மாதிரியே தான் சொல்லி திட்டுவீங்க" என்றாள் கையில் இருக்கும் பொருட்களை கீழே வைத்த படி.


"இவ இப்போயும் திருந்தல போல" தனக்கு தெரிந்த பார்வையை நினைத்த படி அவள் புன்னகைக்க.. அதை பார்த்த ஆதிராவிற்கு ஏனோ மன நிறைவு தான்.


அவள் அம்மா என்று கூற.. "நம்ப அம்மா அப்பா எங்க ஆதிரா... எனக்கு விபத்து ஆகி யாரும் என்னை வந்து பார்க்கவே இல்லை... வீட்டுக்கு போயிருக்காங்களா?" என்றாள் கேள்வியாய்.


பொருட்களை அடுக்குவதை நிறுத்தி விட்டு... உமாவை பார்த்த ஆதிரா.. அவளிடம் சென்று.. அவளின் அருகில் அமர்ந்தவள்.


"அக்கா.. நம்ப அப்பா அம்மா இப்போ தான் ஒரு வாரத்துக்கு முன்னாடி இறந்து போனாங்க.. ஒரு விபத்துல தான் இறந்தாங்க.. அதனால தான் உனக்கு விபத்துனு கேட்ட அப்போ...எனக்கு ரொம்பவே பயமா போச்சு" திக்கி திணறி வலியுடன் அவள் பேசுவதை பார்க்க முடுயாமல் அவளை தன்னுடன் அணைத்து கொண்டாள் உமா.. ஆதிராவை தன் தங்கை என்பதை முழுவதுமாக நம்பவும், ஏற்கவும் செய்தது அவளின் மனது.


பின் அவளிடம் இருந்து விலகிய உமா.. எப்படி இறந்தார்கள்... என்ன ஆனது என்று கேட்க தான் எண்ணினாள்... ஆனால் கலங்கிய ஆதிராவை பார்த்ததும்... இப்போது வேண்டாம்.. பிறகு கேட்கலாம் என்று அமைதியாகி விட்டாள்.


உமாவிடம் பேச துவங்கிய ஆதிரா... "உனக்கு சாப்பிட நான் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்க்கா...இந்த உனக்கு பிடிச்ச சிக்கன் சீஸ் சாண்விச்"என்ற படி அவள் கையில் அதை குடுக்க..


அவளும் அதை ஆசையாய் வாங்கி உண்டவள்.. "ரொம்பவே நல்லா இருக்கு...எங்க போய் வாங்குன..இவ்ளோ நல்லா செஞ்சி இருக்காங்க? "


"வாங்கினது இல்லக்கா..உனக்காக நானே செஞ்சது.. கீழ கேன்டீன் இருந்துது.. ஆனா அதுல சாப்பாடு எதுவும் பிரெஷ்ஷா இல்ல...அதனால நானே உள்ள நுழஞ்சி பண்ணிட்டேன்" என்றாள் பெருமையாக.


உமா அடுத்து எதோ கேட்க நினைத்து வாய் எடுத்தாலும்.. "மொதல்ல சாப்பிடு அக்கா.. அப்றம் எல்லாத்தையும் பேசிக்கலாம்"என்று அவள் கூற...சரி என்ற படி அவளும் சாப்பிட்டாள்.


பின் வீட்டில் இருந்து போட்டோ ஆல்பம் ஒன்றை கொண்டு வந்த ஆதிரா...உமாவிற்கு அதில் இருந்த அனைவரையும் அறிமுகம் செய்தாள்...


அதில் தன் தாய் தந்தையுடன் ஊட்டி சுற்றுலா போன போது எடுத்த புகை படம்.. அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த உமாவிற்கு.. திடீரென எதோ தோன்ற.


"ஆதிரா.. சாயங்காலம் நாம வீட்டுக்கு போறதா சொன்னியே..அப்போ இந்த ஹாஸ்பிடல் பில் எப்படி கட்டுறது.. நான் என்ன வேலை செஞ்சேன்னு எதுவும் எனக்கு நியாபகம் இல்லை... இந்த ஹாஸ்பிடல் பாக்கும் போது, ரொம்ப செலவாகி இருக்கும் போலயே... அதை எப்படி கட்ட போறோம்" என்றாள் அறையை சுற்றி தன் பார்வையை சுழற்றி, கவலையாய்.


அவள் பேசுவதை கேட்டவள்...சத்தமாய் சிரிக்க..பின் தொடர்ந்தவள்.. "நீ எப்பவுமே அப்பாவி தன் அக்கா... நாம இங்க எதுவும் கட்ட வேண்டாம்... அதுக்கான அவசியமும் இல்லை" என்றவளை குழப்பமாய் பார்த்த உமாவை மேலும் குழப்பாமல் தொடர்ந்தாள் ஆதிரா.


"இது நம்மளோட ஹாஸ்பிடல் அக்கா... அப்பாவும் அம்மாவும் கட்டின நம்ப ஹாஸ்பிடல்... பேர் என்ன தெரியுமா.. "உமைரா ஹாஸ்பிடல்" உமா பிளஸ் ஆதிரா அதன் உமைரா"என்றாள் பெருமிதமாக.


"அப்படியா... நம்ப ஹாஸ்பிடல்லா..அதனால தன் நீ கேன்டீன் உள்ள போய் சமைக்க எல்லாம் செஞ்சியா" என்று உமா யோசிக்க.


"அப்போ நான் என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தேன்... நீ என்ன பண்றே...நாம எங்க தங்கி இருக்கோம்? " என்றாள் கேள்வியாய்.


"பொறுமை..பொறுமை.. ஒரே நேரத்துல எல்லாத்தையும் தெரிஞ்சிக்க வேண்டாம்.. அது உனக்கு ஆபத்துனு சத்யன் சொன்னாரு..அதனால வீட்டை பத்தி அங்க போகும் போது சொல்லுறேன்" என்று தொடர்ந்தவள்.


"நீ இதோ இந்த ஹாஸ்பிடல்ல தன் வேலை செய்யுற...மகப்பேறு மருத்துவரா வேலை செய்யுறீங்க.. நான் இந்த ஹாஸ்பிடலோட காலேஜ்ல தன் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்குறேன்.. அது இல்லாமல் நீங்க பாடமும் எடுக்குறீங்க...இப்போதைக்கு இது போதும்... மீதி எல்லாம் அப்றம் சொல்லுறேன்" என்றவள் அங்கு இருக்கும் துணிகளை மடித்து வைத்து கொண்டு இருக்க.


அப்போது மேஜை மேல் இருந்த புத்தகம் ஒன்று தவிரி கீழே விழுந்தது... அது உமாவின் கவனத்தை ஈர்க்க..


"என்ன அது...என்ன புத்தகம் அது" என்றாள் ஆர்வமாய்.


"இது நீ வரையுறதுக்கு பயன் படுத்துற புத்தகம் அக்கா...இதுல நீ நெறைய படம் வரஞ்சி வெச்சி இருக்க... ஆனால் நான் தான் பார்த்ததே இல்லை... இல்லை உன்னை தவிர யாரும் தொட நீ விடுவது இல்லை" என்ற படி அதை உமாவிடம் நீட்ட.


அதை வாங்கியவள்.. அதன் பக்கங்களை திருப்ப ஆரம்பித்தாள்.


முதல் பக்கத்தில்.. சிரித்த படி.. பரத நாட்டிய உடையில் இருந்தாள் ஆதிரா.. "உனக்கு பரதம் எல்லாம் தெரியுமா.. இதுல அழகா இருக்கே" வியந்த படி கூறினாள் உமா.


"ஆமாம் அக்கா.. இது என்னோட முதல் அரங்கேற்றதப்ப நான் ஆடுனது... நீ அழகா வரஞ்சி வெச்சி இருக்கியே... ரொம்பவே நல்லா இருக்கு" என்ற படி அடுத்தடுத்த பக்கங்களை உமா திருப்ப.


அப்போது ஆதிராவின் கை பேசி ஒலித்தது.. எடுத்தவள்.


"இனியா அக்கா... எங்க இருக்கீங்க? கேம்ப் எல்லாம் முடிஞ்சுதா? "


........


"அதுவா.. எதுவும் பிரெச்சனை இல்லை அக்கா.. நான் நல்லா தான் இருக்கேன்"


.......


"ஒரு நிமிஷம் அக்கா.. நீங்க பேசுறது ஒழுங்கா கேக்கல.. நான் வெளியே வரேன்... நீங்க கேன்டீன் வந்துடுங்க" என்ற படி அங்கிருந்து நழுவி விட்டாள்.


ஆதிரா சென்ற உடன் புத்தகத்தின் மற்ற பக்கத்தை புரட்டினாள் உமா.. அதில் ஒரு புகை படத்தில் தன் தாய் தந்தையின் முகத்தை தெரிந்து கொள்ள முடிந்தது அவளால்..


அடுத்த பக்கத்தில் யாரோ ஒரு இளவயது ஆண் அவளின் ஒரு புறமும்.. மறு புறத்தில் அவளின் தந்தையும் நின்று கொண்டு இருந்தனர்...


"யார் இவன்.. எனக்கு அருகில் ஏன் நிற்கிறான்" என்ற கேள்விகள் எழுந்தாலும், ஆதிராவிடம் கேட்போம் என்று அடுத்த பக்கத்தை திருப்ப, மிரண்டே போனாள் உமா.


ராட்சசன் போல் தலையில், பாதி உடைந்த கிரீடம்..உடல் எங்கும் ரத்தம் கசிய.. கை கால்களில் கொப்புளங்கள் போல் வீங்கி இருக்க..


முகம் முழுதும் சிறு கீறல்களோடு...ஒரு பக்கம் காது இல்லாமல், இல்லை இல்லை பாதி அறுக்க பட்டு... முகத்தில் வன்மமும்,கோவமும் நிறைந்து...கருப்பு துணியால் தன் தலையை மறைத்து... உக்கிரமாக நின்று கொண்டு இருந்தான் அவன்.


அவனை பார்த்த மாத்திரத்தில் இனம் புரியா பயம் உமாவின் மனதை ஆட்கொள்ள...கைகள் நடுக்கம் காண துவங்க..."ஆஆஆ" என்று கத்திய படி அந்த புத்தகத்தை கீழே தவற விட்டாள்...


அந்த உருவத்தின் பதட்டம் அவளை ஆட்கொள்ள.. கண் மூடி பின்னால் தலையின் மேல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் உமா.


அவளின் அந்த அமைதியை கலைக்கும் வண்ணம் காற்று வீச.. அதில் ஜன்னலின் திரைகள் எல்லாம் பறக்க.. அதில் கண் திறந்து பார்த்தாள் உமா...


அதே விம்பங்கள் கண் முன் காட்சியாய் உருவெடுக்க ஆரம்பிக்க...மீண்டும் தோன்றியது எதோ நிகழ்வுகள்...


மண்டபம் போல் அலங்கரிக்க பட்டு இருக்கும் மேடை... ஒரு புறம் அக்கினி குண்டத்துடன் தயாராக காத்திருக்கும் மேடை... மலர்களால் தங்களை அலங்கரித்து கொண்டு...வாழை மரங்கள் இரு பக்கமும் கட்ட பட்டு...காத்திருக்கும் அந்த மண்டபம்.


மறு புறம் தங்கத்தால் ஆனா பூக்களால் அலங்கரிக்கப்பட்டு..பட்டு மெத்தை விரிக்கப்பட்டு...ராஜா மரியாதயுடன் காத்திருக்கும் அந்த சிம்மாசனம். அதில் கவலையே வடிவாய்.. மனதில் குழப்பங்ககே உருவாய் அமர்ந்து இருந்தாள் அவள்... உமையாள்.


திருமண மேடையையும், அரியசான மேடையுயையும் மாறி மாறி பார்த்து கொண்டு குழம்பி போய் இருக்கும் அவளை ராட்சஸ சத்தத்துடன் நெருங்கினான் அவன்.


உடல் எங்கும் காயங்களுடன்...முதுமை சிறிது எட்டி பார்க்க.. கையில் நீளமான வாளுடன்.. கண்ணில் கோவத்துடன் நெருங்கினான் அவன், உமையாளை.


அவனை கண்டவுடன் பயம் குடி கொள்ள.. அரியணையில் சற்று உள் நோக்கி அமர்கிறாள் உமையாள்.


"அவளை நெருங்கியவன்... என்ன செய்கிறாய் உமையாள்...இது அனைத்தும் உனது பிழையே... உன்னால் தான் இந்த நிலை இப்போது... அவனை மறந்து விடு... உன்னுடைய ஊழ் எதுவோ அதன் படி நடந்து கொள்..இல்லையேல் முடிவுகள் விபரீதமாக இருக்கும்... சம்யுக்தன் தான் உன்னுடைய ஊழ்" அவளை மிரட்டிய படி அந்த அரசபையின் நடுவில் சென்று நின்ற அவன்... அந்த அவையே அதிரும் வண்ணம் சிரித்தான்... அவன்


அந்த பார்வையின் மிரட்சியில் அவள் இருக்க..அப்போது கதவை திறந்து கொண்டு வந்தான் சத்யன்


அவனை கண்ட உடன் தாய் பசுவை கண்ட கன்று போல் கண்ணில் நீருடன் அவள் இருக்க.. அதை காண பொறுக்காத சத்யன்.. ஓடி போல் அவளை அள்ளி அணைத்து கொண்டான்


அவனின் கரத்திலேயே சில வினாடிகள் கழித்தவள்.. பின் pesa தொடர்ந்தாள்


"டாக்டர் எனக்கு அப்போ அப்போ ஏதேதோ கண் முன்னாடி வந்து போகுது.. எனக்கு ஒன்னும் புரியல மாட்டேங்குது" என்றாள் குழப்பாக


அதற்கு ஒரு புன்னைகையை மட்டும் உதிர்த்த சத்யனை என்ன பார்த்த உமா என்றான் நிதானமாக


அவள் கண்ட கட்சி அனைத்தையும் அவள் கூறி முடிக்க..."ரொம்ப குழப்பிக்காத உமா.. எல்லாம் சரி ஆகிடும்"என்றான் ஆறுதலாக


இல்லை என்னோட கேள்விகளுக்கு பதில் வேணும் என்றாள் உமா திடமாக


அவளின் பிடிவாதம் புரிந்தவன்...


"சரி உமா.. கேளு ஆனால் என்னால் முடிந்த கேள்விக்கு தான் பதில் சொல்லுவேன், சரியா?"என்றான் சத்யன்


சற்றும் தாமதிக்காமல் "அவரு யாரு?" என்றாள் உமா பதட்டமாக


நான் அதை சொல்ல கூடாது உமா... நீயே தான் தெரிஞ்சிக்கணும்" என்றான் நிதானமாய்


என்னை எதுக்கு உமையாள்ன்னு கூப்பிட்டாரு... என்னோட பெயர் உமா தானே "வினவியவளை பார்த்து புன்முறுவலிட்டவன்


"அடுத்த கேள்வி" என்றான், பதில் அளிக்க விருப்பம் இல்லாதவனாய்


அந்த சம்யுக்தன் யாரு? " என்றாள் உமா, பதட்டமாக


இப்போ நீ பார்வையில் ஒருவரை பார்த்தா சொன்னியே அவரோட மகன் தான் சம்யுக்தன்" என்றான் சத்யன்


கடைசியா எனக்கு தெரியும் கட்சிகள் எல்லாம் என்ன? விபத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்களா?


இல்லை... அது எல்லாமே நம்மளோட முன் ஜென்மத்தோட தொடர்பு உடையது" என்றான் முகத்தில் புன்னகையுடன்


நம்ம முன் ஜென்மமா...அப்போ உங்களுக்கும் எல்லாம் தெரியுமா? என்றான் அதிர்ச்சியாய்


இதை எல்லாம் காலம் வரும் போது நீ தெரிஞ்சிக்குவ...இப்போ அமைதியா இரு " என்றான் பொறுமையாய் அவளின் தலையை வருடிய படி


அதோடு ஆதிராவும் உள்ளே வந்து விட..உமாவிடம் இருந்து தள்ளி அமர்ந்தவன் மனதில் தப்பித்தோம் என்று தான் தோன்றியது


உமாவும் அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை... நேரம் அவளுக்கு கிடைக்கவும் இல்லை







அவள் கூறியதை நம்ப முடியாமல் அவளையே இரண்டு நிமிடம் உற்று நோக்கியாவின் " என்ன பார்த்த உமா... அதுல உனக்கு என்ன புரிஞ்சுது" என்றான் நிதானமாக


அவள் கண்ட கட்சி அனைத்தையும் கூறி முடிக்க.. அதை கேட்டவனுக்கு உதட்டின் ஓரத்தில் சிறு புன்னைகை எட்டி பார்த்தது


"உனக்கு நான் எப்படி சொல்லுறதுனு தெரியல உமா.. ஆனால் இது எல்லாமே உன்னுடன் சமந்த பட்ட விஷயங்கள் தான்..நீ அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தான்" என்றான் அதே நிதானம் மாறாமல்


"என்ன தெரிஞ்சிக்கணும்...நான் பார்க்குற ஆளுங்க எல்லாம் யார்... இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?" என்றாள் உமா, குழப்பம் மாறாமல்


ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தவன், இது எல்லாமே நீதான் தெரிஞ்சிக்கணும் உமா.. நான் இதுல உனக்கு உதவ கூடாது" என்றான் விரக்தியாய்


அவனின் முகத்தையே வியப்பாய் பார்த்த உமா.. "அப்போ உங்களு இதோட அர்த்தங்கள் தெரியுமா?"


விரக்தியை ஆம் என்று தலையாட்டினான் சத்யன்...


 

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 5

மாலை நேரம் ஐந்து மணி இருக்கும் போது, தன் வீடு நோக்கி புறப்பட்டாள் உமா. அவள் அங்கிருந்து செல்லும் வரை சத்யன் அவளின் கண்முன்னே வரவே இல்லை. இவளே தேடி சென்ற போதும் கூட அவனை சந்திக்க முடியாமல் போனது உமாவிற்கு.

கார் ஒன்று இவளுக்காக காத்திருக்க, அதன் அருகே ஆதிரா நின்று கொண்டு இருந்தாள்.

"அக்கா,நாம இப்போ நேரா வீட்டுக்கு போவோம்.. மத்தது எல்லாம் நான் வீட்டுக்கு போய் சொல்றேன்" என்ற படி புறப்பட்டனர் இருவரும்.

சிறிது நேரத்திலேயே கார் ஒரு வீட்டின் முன் நின்றது.. அது கடற்கரையை ஒட்டி ஒரு புறம் கண்ணாடியினால் ஆனா இரண்டு மாடி வீடு.. அதை பார்த்த உமா மிரண்டு போக,

"இது யார் வீடு?" என்றாள் சந்தேகமாய்.

"நம்ப வீடு தான்கா... அப்பா அம்மா போன மாதம் வரைக்கு நாம சந்தோசமா இருந்த வீடு இது... போன வாரம் வரைக்கும் நம்ப அத்தை வீட்டுல தான் இருந்தோம்.. நம்ப அம்மா அப்பா வாழ்ந்த இந்த வீட்லேயே இருக்கலாம்ன்னு இங்கயே வந்துட்டோம்" என்றாள் ஆதிரா.

அதில் அவளை பார்த்து சிரித்த உமா... "ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.. பாம்பன் பாலம் மாதிரி சொல்லிகிட்டே போற" என்றாள் குறும்பு தட்ட.

விபத்து முடிந்து முதல் முறை சிரிக்கும் அவளை காண கண் இரண்டு போத வில்லை ஆதிராவிற்கு.

வந்தவர்களை வரவேர்க்க மூவர் வந்து நிற்க.. அதில் கிட்டத்தட்ட நாற்பதை தொட்ட பெண்மணியை நெருங்கியவள்,

"அக்கா இவங்க தான் ரமா அக்கா... நம்ப வீட்டுல பத்து வருஷமா சமையல் வேலை பண்ணுறாங்க" என்றவள் அடுத்த, சுமார் ஐம்பதை தொட்ட ஆண் ஒருவரை காண்பித்தவள்,

"நம்ப வீட்டுக்கு ஆல் இன் ஆல் இவர் தான்.. தோட்டகாரர், உதவியாளர்ன்னு எல்லாமே இவர் தான்" என்றாள் ஆதிரா.

அடுத்து ஒருவரை நெருங்கியவள், "இவரு நம்ப வீட்டு டிரைவர்... காய்கறி எல்லாம் இவர் தான் வாங்கிட்டு வருவாரு" என்றவள்... உமாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

வீட்டை மொத்தம் சுற்றி காண்பித்தவள், இறுதியாக உமாவின் அறைக்கு முன் நிற்க.

"அக்கா இதோ.. உன்னோட அறை... இல்லை இல்லை.. உன்னோட குட்டி உலகம்.. நீ இத அப்டி தான் சொல்லுவ" என்றாள் சந்தோசம் பொங்க... கூறியவள் உமாவிற்கு தனிமை அளித்த படி சென்று விட்டாள் ஆதிரா.

அறையின் கதவை திறக்க, கண் முன் இருந்த அழகை, வர்ணிக்க மொழி இல்லை பேதைக்கு.

நுழைவில் கால் விரிப்பான் ஒன்றில் சிரித்த படி இருந்தது ஒரு குரங்கு ஒன்று... அதில் தன் பாதங்கள் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் அடி வைத்து உள்ளே சென்றவள் கண்ணில் தொகையை விரித்த படி இணைந்து நின்று கொண்டு இருக்கும் இரண்டு மயில்களின் புகைப்படம் கண்ணில் பட.. அதன் மேல் மயில் இறகு ஒன்று தங்க கம்பியால் சுற்ற பட்டு, சுவரொட்டி மேல் ஓட்ட பட்டு இருந்தது.

அதை தன் கைகளால் வருடியவள், எதிரே இருக்கும் படுக்கையை நெருங்க... நட்சத்திரம் போன்ற மின் விளக்குகள் படுக்கை மேல தொங்க விடப்பட்டு இருந்தது..

படுக்கையின் இரு புறமும் புதிதாய் பூத்த மலர்கொத்துகளுடன் புத்துணர்வுடன் சிரித்த படி இருந்தன.

பார்வையை சற்று சுழற்ற.. அங்கு இருந்த ஒரு கல் பொம்மை அவளின் கவனத்தை ஈர்க்கவே செய்தது.

நீர் வீழ்ச்சி போன்ற ஒன்றில் இருந்து, பெரிய காதை ரேக்கையாய் மாற்றி பரந்த படி ஒரு யானை குட்டி நீராடி வெளி வருவது போன்ற ஒரு சிற்பம் அது.

அது அவளுள் எதோ ஒரு பரவசத்தையும், ஒரு ஈர்ப்பையும் ஏர் படுத்த... அதை கையில் ஏந்தியவன், அறையில் இருக்கும் பால்கனி கதவை திறந்தவளுக்கு, அவளை வரவேற்ற படி காற்றில் ஆடி கொண்டு இருந்த ஊஞ்சல் கண்ணில் பட..

அதுவும் அதன் சங்கிலியில் செயற்கை பூக்கள் பிணைக்க பட்டு.. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கவும் பட்டு இருந்தது.

அதை கைகளால் வருடிவளின் நினைவை திசை திருப்பியது, கதவை திறந்த படி உள்ளே வந்த அந்த ஒருவன்.

இள வயது வாலிபன் ஒருவன், சிவப்பு சட்டையில், நீல ஜீன்ஸ் அணிந்து கொண்டு, கையில் வெள்ளை கோட் ஒன்றை அணிந்து கொண்டு, முகத்தில் மலர்ந்த புன்னகையுடன், உமாவை நோக்கி அடி எடுத்து அவளை நெருங்க... அவனின் கால் தடங்கள் கூட காதை கிழிக்கும் கோர பறை ஒளியாய் அவளுக்கு பட்டது.

வந்தவன் "என்ன உமா.. இப்டி பாக்குறே...எப்படி இருக்க... அப்பாவும் உன்னை வந்து பாக்குறேன்னு சொன்னாரு" என்றான் கோர்வையாக.

தன்னையே விசித்திரமாய் பார்க்கும் அவளை கண்டவன் ஒரு நிமிடம், நிறுத்தி அவள் பேச அவகாசம் கொடுத்தவனாக,

"நீங்க யாரு? இங்க என்ன பண்ணறீங்க?" என்றாள் உமா குழப்பமாக.

அதில் அதிர்ந்தவன்... "உண்மையிலேயே உனக்கு என்னை தெரியலையா?" என்றான் உமாவை நெருங்கிய படி.

"எனக்கு நடந்த விபத்துல நினைவு எல்லாம் மறந்து போச்சு... நீங்க யார்னு எனக்கு தெரியல" அவனின் நெருக்கம் பிடிக்காமல், இரண்டடி பின்னால் சென்றவளாய்.

"நான் கூட ஆதிரா எதோ விளையாடுறான்னு நெனச்சேன்.. உண்மையிலேயே உனக்கு என்னை தெரியலையா.. நான் தான் முகுந்தன்... உன்னோட வருங்கால கணவன்" என்றான் அழுத்தம் திருத்தமாக.

அதில் சொல்வது அறியாது திகைத்து போய் நின்றவள் நினைவிற்கு ஏதேதோ கட்சிகள் வந்து செல்ல... கண்கள் இருண்டு கொள்ள.. நின்ற இடத்தில் மயங்கி விழுந்து விட்டாள் உமா.

அவள் தரையில் விழும் முன் அவளை லாவகமாய் தன் கையில் தங்கி, படுக்கையில் இட்டவன்... தண்ணீர் தெளித்து விட்டு.. அவள் கண் விழிக்க காத்திருந்தான் முகுந்தன்.. சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு கண்விழித்தவள் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓட.. என்ன கூறுவது என்றும் தயங்கியவளை தன் மார்போடு அணைத்து கொண்ட முகுந்த்.

"ஒன்னும் இல்லை உமா.. கவலை படாத.. எல்லாம் சரி ஆகிடும்" என்றான். தலையை வருடிய படி.. ஆதிராவிடம் சில குறிப்புக்கள் கூறியவன், பின்னர் வந்து சந்திப்பதாக கூறி விட்டு சென்றும் விட்டான்.

அவன் அணைப்பில் இருந்த சில வினாடிகள் கூட மூச்சை முட்டி, சுவாசிக்கவும் கடினம் என்றே தோன்றியது உமாவிற்கு...

சத்யன் அருகில் இருக்கும் போது தோன்றும் ஒரு இணக்கம்.. வருங்கால கணவன் அருகில் இருக்கும் போது வரும் ஒரு அருவெறுப்பு என்று இரண்டு மன நிலையும் புரியாமல் இடையில் மாட்டி கொண்டாள் உமா.

அடுத்தநாள் கல்லூரி செல்ல வேண்டி ஆதிரா கிளம்பி விட்டாள், செல்லும் முன் உமாவிற்கு தேவையான அனைத்தையும் செய்ய மறக்க வில்லை அவள்.

தனிமை ஆட்கொள்ள.. பேச்சு துணைக்கும் ஆள் இல்லாமல் போக.. அறையை சுற்றி சுற்றி வந்தவள் மனது முழுதும் அந்த ராட்சசனின் நினைவுகளே குடி கொள்ள..

"அதுவும் அவன் தன்னுடைய விதியை பற்றி ஏன் பேச வேண்டும்" என்ற கேள்விகள் அவளை ஆட்கொள்ள...

சத்யனை தேடியது அவளின் மனது.. ஏனோ அவளின் கேள்விகளுக்கு பதில் மொத்தம் அவனிடம் உள்ளதாக நம்பினாள் உமா.

ஊஞ்சலில் தலை சாய்த்த படி அமர்ந்தவள் கண் எதிரே தோன்றின அதே காட்சி அலைகள்.

அந்த அழகிய அந்தி மாலை நேரத்தில், சூரியனை வழி அனுப்பி, நிலவை வரவேற்க நட்சத்திரமும், மேகக் கூட்டமும் தயாராகி கொண்டு இருக்கும் அந்த ஆனந்த வேளையில்,

முகில் கூட்டமும், நட்சத்திரமும் கூட குழம்பும் வண்ணம், சந்திர ஒளி முகத்தில் மின்ன அரண்மனை படியில் இருந்து இறங்கி வந்தாள் அவள்.

சந்தன பட்டுடையில், உடல் முழுதும் தங்க பூக்கள் பாதிக்க பட்டு... முத்தும் பவளமும் சேர்த்து கோர்த்தெடுத்த கொலுசுடன்,தலையில் மயில் தோகை விரிந்து, மலர்ந்து காட்சி அழைக்கும் கிரீடத்தில் ஒளி வீசும் வெந்நிற கற்கள் பதித்து, மெல்லிடை அதிகம் அலுங்காமல், பார்ப்போரை சொக்க வைக்கும் மான் விழியுடன் இறங்கி வந்தாள், 'உமைறா' சாம்ராஜ்யத்தின் அடுத்த மஹாராணி உமையாள்..

வந்தவள் நேரே தந்தை உமையதேவனிடம் செல்ல...

உற்சாகம் போங்க தன்னை நெருங்கி வந்து நின்ற மகளை ஆரதழுவியவர்,

"வா, மகளே... இன்று இந்த உமைறா சாம்ராஜ்ஜியத்திற்கே நல்விடியல் தோன்றும் நாள்" என்றார் மகிழ்ச்சியாய்.

அதன் அர்த்தம் புரியாதவள்,

"உங்கள் கூற்றின் அர்த்தம் என்ன தந்தையே" என்றாள் நிதானமாக.

"இன்று உனக்கும் சம்யுக்தனுக்கும் நாம் நிச்சயம் நடக்கும் நன்னாள் இது" என்றார் கர்வ புன்னகையுடன்.

அவர் கூறியதை மெய்யாக்கும் வண்ணம் அங்கு, கம்பீர வெண் பட்டில் தங்க ஜரிகை வேஷ்டியில், மார்பை மறைக்கும் தங்க ஆபரணத்துடன் ராஜ தோரணையில் நின்று இருந்தான் சம்யுக்தன்.

உமையாளின் அழகில் தன்னை தொலைத்து, அவளுள் தன்னை மீட்டெடுத்தவன்,உமையாளை நெருங்கி,

அவன் கைக்குள் சிறை பட்டு
கிடைக்கும் அந்த வெள்ளி குடுவையை அவள் முன் நீட்டினான் அவன்.

"என்ன இது? " என்பதை போல் உமையாளின் வேல் விழி அவனை வினவ,

"நீயே பிரித்து பார்" என்ற படி அதை அவளின் கையில் திணிக்கவே செய்தான் சம்யுக்தன்.

அதில் சற்று எரிச்சல் வந்தாலும்... வாங்கி அதை திறக்க... அதில் நீல நிறத்தில் வைர கல்பதித்த மோதிரம் ஒன்று இருந்தது... அதுவும் அந்த கல்லில் எதோ திரவியம் போன்ற ஒன்று அங்கும் இங்கும் ஆடிய படியே இருந்தது..

அதை அவள் ரசித்து கொண்டு இருக்க, தொடர்ந்தார் ஒலிவேந்தன்.

"இது அறிய வகை வைர கல் மகளே.. இது இலங்கையில் மட்டுமே கிடைக்கும்.. அதுவும் அதன் உள் இருக்கும் திரவியம் உடல் சூட்டிற்கேற்ப நிறம் மாறும் தன்மையும் உடையது.. உனக்காகவே சம்யுக்தன் இதை இலங்கை சென்று மோதிரமாக வடிவமைத்து வாங்கி வந்துள்ளான்" என்றார் பெருமையாக.

அந்த வைர மோதிரம் அவளை அதிகம் ஈர்க்கவில்லை என்ற போதும், சபை நாகரீகம் கருதி அவள் அமைதிக்காக்க,

அந்த நேரத்தை படு கட்சிதமாக பயன் படுத்தி கொண்டான் சம்யுக்தன்.

அவள் அசந்த நேரத்தில், அந்த மோதிரத்தை எடுத்தவன் அவளின் கரம் பிடித்து அதை அவளுக்கு அணிவித்தவன், வியந்து விழிக்கும் அவளின் விழி பார்த்து, காதல் கணை தொடுக்க, மயங்க மறுத்து மங்கை அவள் விழித்த படியே நின்றாள்.

நடந்த நிகழ்வில் மனம் நெகிழ்ந்த உமையத்தேவன், சபையினரை நோக்கி,

இந்த இனிமையை கொண்டாட விழா எடுக்க படும் என்று ஆனந்தமாய் முழங்க.. உமையாளோ பேச்சிழந்த மடந்தையாய் விக்கித்து நின்றாள்.

நகரத்தின் மைய பகுதியில் ஒரு பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு, ஊராரின் ஆசியோடு அவர்களின் வருங்கால ராஜாவையும், ராணியையும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடக்க,

அனைவரும் அவ்விடம் குழுமி இருவரையும் வாழ்த்தி வணங்கி தங்களால் ஆனா பரிசுகளை கொடுத்து கொண்டு இருந்தனர்.

இருவருக்கிடையில் திரைச்சீலைகள் சேலை தொங்க விட பட்டு இருக்க...

வெறுப்பின் உச்சியில் குழுமி கொண்டு இருந்தான் சம்யுக்தன், வேறு வழி இன்றி அவ்விடம் வெறுப்பு தீ கொழுந்து விட, அவன் அமர்ந்து இருக்க.,

மறுபுறமோ அன்பே வடிவாய், அழகே உருவாய், கருணையே உள்ளமாய் மக்களை வரவேற்றாள் உமையாள்.

சேற்றில் வேலை செய்து, வியர்வை மனம் வீச அது சம்யுக்தனின் நாடி நிரம்பில் எல்லாம் சென்று அவனை கூச வைக்க,

உமையாலுக்கோ, மண்ணின் மணமாற மக்கள் இடையே இருப்பது, எதோ கூண்டு கிளியை உலகம் சுற்ற வைத்தது போன்ற பரவசம் அவளுள்.

பெண்கள் ஒரு புறம் ஆண்கள் ஒரு புறம் என்று மக்கள் தங்கள் அன்பை வெளி காட்ட,

சம்யுக்தன் அதை கையிலும் கூட வாங்க வில்லை.

உமையாலோ தன் கேசம் மறைத்து மண்ணை முத்தம் இடும் நீண்ட சேலை நுனியால் படு உற்சாகமாக அவற்றை பெற்று கொண்டு இருந்தாள்.

வரிசையில் வந்த பெண் ஒருத்தி மட்டும், தயங்கிய படி உமையாளை பார்க்க, அவளின் பார்வை எதோ செய்யவே செய்தது உமையாளை.

சுற்றம் உணர்ந்து அந்த பெண் உமையாளின் காலை தொட்டு பிடிக்க... அந்த கணம் உடலின் உறுப்புக்கள் எல்லாம் ஆட்டம் காண... வந்தது யார் என்பதை புரிந்தும் கொண்டது அவளின் மனது.

தலையை எதோ ஒரு கிழிந்த சேலையால் மூடி கொண்டு, முகத்திலும் மூக்கு வரை கவசத்தால் மறைத்து இருக்க...

அவளை நெருங்கி நின்ற அந்த தருணம் ஆண் அவனின் மூச்சு காற்றும் கூட அவளை திக்குமுக்காட செய்து, அவனுள் அவளை தொலைத்து நிற்கும் அந்த வேளையில் புரிந்தே கொண்டாள் வந்தவன் சத்தியசீலன் என்று.

கண்ணில் குறும்பும் காதலும் ஒரு சேர மின்ன, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் கையை பிடித்து அவளின் விழி மேல விழி பதித்து குனிந்து முத்தம் இட்டவனின் முதல் சபரிசமே கூறியது அவனின் மனதின் காதலை அவளுக்கு.

அந்த முதல் சபரிசத்தில் இருவரும் லயித்து போய், வானில் உலவும் அந்த அற்புத வேளையில், இருவரின் காலடியிலும் வந்து விழுந்து கொய்ய பட்ட சிரம்... அதுவும் ஒலிவேந்தன் வாளின் சீற்றத்தால்....,,,,

அதில் ஆடிவிட, அவள் பார்வை சத்யசீலன் மேலே பட, அவனோ அக்கினி ஜுவாலை கண்ணில் எரிய, கோவக் கனல் முகம் எங்கும் பரவ அவனை சிவக்க வைக்க அவ்விடம் எழுந்து ஒலிவேந்தனை தாக்க முற்பட்டவனை தடுத்தது உமையாளின் வைர மோதிரம் மின்னும் அவளின் பஞ்சு விரல்கள் தான்.

காட்சியில் தெரிந்த அந்த நீல வைர மோதிரம் அவளின் நினைவில் நிற்க, ஒன்றும் புரியாமல் இருந்தவள், திடீரென இடத்தை விட்டு எழுந்தவள், மேஜையில் இருக்கும் குட்டி மயில் வடிவில் இருக்கும் பெட்டியை துறந்தவள், அதிர்ச்சியில் உறைந்தே நின்றாள்.

அந்த காட்சியில் அவள் கண்ட அதே நீல வைர மோதிரம்.. அதனுள் ஆடி கொண்டு இருக்கும் திரவியத்துடன்... அது இன்றும் கூட அவளின் கை அளவிற்கு சரியாக தான் பொருந்தியது.

அதே நேரம் சரியாக அறையின் கதவை யாரோ துறக்கும் சத்தம் கேட்டு அவளின் விழி திசை திரும்ப,

அவளின் காதல் நாயகன், மனம் விரும்பும் மன்னவன் வந்து சேர்ந்தான் அவளிடத்தில்,

அவளின் கையில் இருக்கும் மோதிரமும், அவள் விழி சொல்லும் மொழியும் அவள் கூற இயலாமல் இருக்கும் கதைகள் அத்தனையையும் கூறி விட.

புரிந்த அடுத்த நொடி அவளை தன் மார்போடு அணைத்து கொண்டான், சத்யன்.

அவன் அணைப்பில் வந்த அடுத்த நிமிடம், தன்னுள் இருந்த அத்துணை கேள்வியும் கண்ணீராய் உருவெடுக்க, அவன் தோளில் அழுதபடி கரைந்து கொண்டு இருந்தாள் உமா.

அவளின் அந்த கண்ணீரும் சற்று நேரத்தில் கோவமாய், விரக்தியாய் உருவெடுக்க, சத்யன் மார்பில் தன் பிஞ்சு கைகளால் முடிந்த அவரை அவனிடம் குத்தியவள், அவனின் அந்த மாய அன்பு வலையில் இருந்து விடு பட எண்ணி அவனை முட்டி தள்ள.

அதற்கு எல்லாம் அசாரூபவான அவன்... முகத்தில் சிறு புன்னகையும், மனதில் நிறைவும் கொண்டவனனாய், அவனின் இறுக்கத்தை மேலும் கூட்ட.

கசங்கிய அல்லியாய் அவனின் சிறை வாசத்தை அனுபவித்து கொண்டு இருந்தாள் உமா.

போனால் போகட்டும் என்று இறுக்கத்தை குறைக்க, அதை சரியாய் பயன் படுத்தி கொண்டு அவனை விட்டு விலகி, ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள் உமா, குழந்தை போல் கோவிந்த முகத்துடன்.

அதில் சத்யனுக்கு காதலும், சிரிப்பும் ஒரு சேர வர.. அவளை ஆசையாய் பார்த்தவன் எண்ணங்கள் எல்லை மீற, பாவம் ஆண் மகன் அவன் எத்துணை காலம் தான் கடலென பெருகும் காதலை அடக்கி கொள்வான்.

இன்று மடையை உடைத்து கொண்டு பெருகும் அவனின் காதல் தடைகள் அனைத்தையும் உடைக்க செய்ய.,

அவளின் உச்சியில் தன் விரலால் வருடியவன், அடுத்த நொடி தன் இதழால் கோலம் இடவே துவங்கி விட்டான்.

எத்துணை வீரம் படைத்தாலும், தனக்கானவன் முன் தன்னை மொத்தமாக இழந்து விடும் பெண்ணவளின் பெண்மை என்றுமே வியப்பு தான்.

அவனின் கோல ஊர்வலம் முகம் எங்கும் நடக்க, சற்று முன் இருந்த கோவம், வருத்தம், இயலாமை, குழப்பம் அனைத்தும் காதலில் காய்ந்து அவளின் கண்ணீராய் கரைந்து கொண்டு இருக்க,

பெண் அவளின் கண்ணீரில், உலகத்தையும் அழிக்கும் சக்தி கொள்ளும் ஆணவனுக்கு காதல் கூட நொடியில் பறந்து, பதறவே செய்தான் அந்த காதல் கள்வன் சத்யன்.

கண்கள் மூடி கண்ணீரில் தன் மனதை கரைய வைத்தவளின் கண்ணில் முத்தமிட்டவன், அவளுடன் அமர்ந்து கொண்டு அவளை தான் மார்போடு அணைத்து கொண்டவன்,

"என்ன ஆச்சு உமா? எதுக்குடி அழுகுற?" என்றான் மயிலிறகாய் அவளின் தலையை வருடிய படி.

அவனின் அருகாமையும், அன்பும் அவளை மேலும் உருக்க... மேலும் அழுதவளை, இதயத்தின் ஓசை கூட துல்லியமாகக் கேட்கும் அளவிற்கு தன் மார்போடு அணைத்து கொண்டான் சத்யன்.

நிமிடங்கள் காற்றில் கரைய, மங்கை அவளின் மன துயரமோ மாயமாய் போக, அவனின் அணைப்பில் காதலை உணர்ந்தவள், கேட்க நினைத்த கேள்வியையும் மறந்து மயங்கி தான் கிடந்தாள் மன்னவன் மடியில்.,

அவளின் கையில் இருக்கும் மோதிரத்தை வருடியவன்... அவளை தன் அணைப்பில் வைத்த படியே.

"இது எப்படி உமா உனக்கு கெடச்சுது?இத பத்தி யார்டி சொன்னது? என்றான் மெதுவாக.

நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், கண்ணில் இப்போது காதல் போய் கோவம், அவர் தன்னால் முடிந்த வரை தன் தளிர் கைகளால் அவனை அடித்தவள், ஓய்ந்து இருக்கும் வேளையில்,

அவளின் கன்னத்தை விரலால் வருடி, அவளின் அடிகளுக்கு பதிலாக கன்னத்தை தன் எச்சிலால் அலங்கரித்தான் அவன்.

"நீங்க மொதல்ல தள்ளிஉக்காருங்க... இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னுமே புரியல...நீயாவது சொல்லேன்" என்றாள் அவனின் கன்னத்தை கொஞ்சலாக கிள்ளிய படி.

கோவத்தில் ஆரம்பித்தவள் கொஞ்சிய படி முடிக்க, ஆண் வன்மனது தான் தறிகெட்டு கிடந்தது, கண்களும் அவள் மேனியில் அத்து மீற, அனைத்தையும் படு சிரம பட்டு அடக்கியவன், தெளிந்தவனாய்.

"யாராவது வந்தார்களாடி?" என்றான் கூர் விழியோடு.

"ஆம்"என்ற படி தலை அசைத்தவள்,

முகுந்தன் வந்தது, பின் அவளுக்கு தோன்றிய காட்சி என அனைத்தையும் அவனிடத்தில் கூறியவள், அவனின் பதிலுக்கு பாவை அவள் காத்திருக்க.

பாவம் இவன் என்ன கூற முடியும்.. அவளே அனைத்தையும் அறிந்து பின் தெளிய வேண்டியது தானே விதி... குழப்பும் சூழல் கண்ணை ஒரு நிமிடம் இருக்க மூடி பின் திறந்தவன்.

பௌர்ணமி வர இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... அதுக்குள்ள உனக்கே எல்லாம் தெரியவரும்... மீறினால் உன் கேள்விகளுக்கு பதில் அனைத்தும் நான் தருவேன் என்றான் அவளின் கை மேல் தான் கையை ஆதரவாய் வருடிய படி.

இந்த சில கணங்களே அவளுக்கு எதோ இதமான நிம்மதியும், நம்பிக்கையும் தந்து விட, மறு வார்த்தை இல்லாமல் அவனை நம்பினால் அவள்.

காலம் கடந்தும் கூட, நம்பிக்கையில் இவர்களின் காதல் திளைக்க,

இம்முறை கோட்டை கடக்குமா, இல்லை மீண்டும் சிக்கி கொள்ளுமா மாய உலகில்...

தொடரும்.....

-அர்பிதா💖


 

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 6


மனதில் குழப்பங்களும், விடை தெரியா பல கேள்விகளில் உமா உழன்று கொண்டு இருந்தாலும்...

"நான் உடன் இருப்பேன்" என்ற சத்யனின் வார்த்தையை முழுமையாய் நம்பியவள், நடப்பதை எதிர் கொள்ளும் திடத்துடனே இருந்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும் படி ஆதிரா கூறியும் கூட, கேட்காமல் அடுத்த நாள் மருத்துவமனை சென்றாள் உமா. தொலைந்தும், தெரிந்தும் மின்னல் கீற்றாய் இருக்கும் நினைவுகளுடன்.

திருவிழாவில் குழந்தை தொலையாமல் இருக்க, அதன் கையை பற்றும் தாய் போல் உமாவின் கையை பற்றி கொண்டு மருத்துவமனை நுழைந்தாள் ஆதிரா.

ஒரு பெரிய மீட்டிங் அறை ஒன்றில் இருவரும் நுழைய, அங்கு வயதில் மூத்தவர்கள் சிலர், இவர்களுக்காகவே காத்திருந்தனர்.

அவர்கள் அனைவரையும் கவனித்தவளின் விழி பார்வை, ஒரு பெண்ணின் மேல் மட்டும் நிலை கொண்டு, அசையவும் மறுத்து, மறந்துபோய் சம்பித்து இருக்க,

அந்த பெண்ணோ, அவளின் விழியின் மிரட்சியை உணர்ந்தவர்,

"எப்படி இருக்க உமா? இப்போ பரவாயில்லையா? நான் இன்னைக்கு காலைல தான் லண்டன்ல இருந்து வந்தேன்... கான்பரன்ஸ் ஒன்னுக்கு போயிருந்தேன்.. அதுக்குள்ள உனக்கு இப்டி ஆயிடுச்சி" என்றார் உண்மையான மன வருத்தத்துடன்.

விழித்தபடி நின்று கொண்டு இருக்கும் உமாவை பார்த்த ஆதிரா, அவளே முன் வந்து,

"அக்கா, இவங்க...."

"நாயகி" என்றாள் உமா, அவள் கண்ட காட்சியின் நினைவாய்,

"உனக்கு எப்படி அக்கா.... " என்றாள் ஆதிரா, சற்று அதிரிச்சியாக,

"நேத்து நீ தானே போட்டோ காமிச்சு சொன்னே" என்றாள் சமாளிக்கும் விதமாக.

"இருக்கும்" என்று ஆதிரவும் விட்டு விட, அங்கு இருக்கும் மற்றவர்களின் நலன் விசாரிப்பும், அறிமுகமும் நடந்தே முடிந்தது.

மற்ற முக்கிய அறைகளை உமாவிற்கு காட்டிக் கொண்டு இருந்தாள் ஆதிரா,

அதில் ஒரு அறையில் வாசல் கதவில் மட்டும் மயிலிறகும், யானை வடிவ பொம்மையும் தோரணமாய் தொங்க, அதில் ஈர்க்க பட்டு, அங்கு செல்ல விரும்பியவள்,

"ஆதிரா உனக்கு கிளாஸ்க்கு நேரம் ஆகுது பாரு... நீ போ, நான் மத்ததை பார்த்துக்குறேன்" என்றாள் உறுதியாக.

அவளின் உறுதியை நம்பியவளாய், சரி, என்று ஆதிரா சென்று விட,

அவளை ஈர்க்கும் அந்த அறைக்குள் சென்றாள் உமா,

அறையில் இருந்த திரை சீலை அவளின் கவனத்தை ஈர்க்க, அதை நெருங்கியவள் அதை தன் கையால் வருட.

அதே காட்சி பிம்பங்கள், அவள் கண் முன் படமாயின.

இருள் சூழ்ந்த அந்த இருளில், எங்கு இருக்கிறோம் என்பதையும் உணராமல், எதையோ, யாரையோ தேடிய படி வந்து கொண்டு இருந்தாள் உமையாள்.

மெல்லிய நிலவொளியில், காட்சிகள் அரைகுறையாக புலபட... அது மாட்டு தொழுவம் என்பதை மட்டும் புரிந்து கொண்டவள், அங்கு இருக்கும் வைக்கபோரின் அருகில் நெருங்க,

"தேவதையே!", என்று ஒலித்தது அவளை மொத்தமும் வசீகரிக்கும் அவனின் குரல்.

அன்று விழாவில், தங்களின் முதல் முத்தத்தை பதித்தவன், சில நாட்கள் உமையாளின் கண்ணில் படாமலே இருக்க, அவனை தேடி வந்தே விட்டாள், காதலில் கலந்த காரிகையவள்.

வந்தவனின் விழியில், காதலும், ஏக்கமும் ஒரு சேர ஊற்றெடுக்க,

பெண் அவள் சர்வத்தையும் மறந்து அதில் மிதக்கவே செய்தாள்.

அவனின் விழி விசையில் மேலும் இருந்தாள், தன்னை முற்றிலும் இழக்க கூடும் என்று உணர்ந்தவள்,அவ்விடம் விட்டு செல்ல எத்தனிக்க.

அவளின் இ்ளம்பஞ்சு கரத்தை, தன் இருகிய கரத்தால் பற்றி அவளை நிறுத்த.

"நாட்டின் ராணியின் கையை பிடிப்பது அநத்தம் என்று உங்களுக்கு தெரியாதா" என்றாள் மெலிந்த குரலில்.

"நாட்டின் ராணியின் கரத்தை இல்லை, என் ராணியின் கரத்தை என்று சொல்லுங்கள் தேவதையே" என்றான் உறுதி குரலில்.

"உங்கள் ராணியா?" என்றாள் உண்மை புரியும் மனதை மறைத்த படி,

"ஏன் என் மனம் உமக்கு புரியவில்லையா...!" என்றான் இறுக்கத்தை கூட்டிய படி.

"புரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை" என்றாள் உமா சத்தியசீலன் கைக்குள் சிறை பட்டு இருக்கும் தன் கையை விடுவிக்க முயற்சித்த படி.

அவளின் வார்த்தையிலும், செயலிலும் கோவம் கொண்டவன், அவளை இழுக்க,

மொத்தமாக அவனின் மார்பின் மீது மோதி, கசங்கிய, கலங்கிய மலர் மாலையாய் அவன் தோல் சேர்ந்தாள் உமையாள்.

அப்போதும் அவனின் முகம் பார்க்க மறுத்து, விழி கலக்க விருப்பம் இன்றி, தரையில் தடம் படித்த படி இருக்கும் அவளின் தாடையை பிடித்த சத்யசீலன்,

"இன்னுமா உனக்கு என்னை புரிய வில்லை? " என்றவனின் பேச்சில் வலியும், வருத்தமும் ஒரு சேரவே ஒலித்தது.

அவனின் வருத்தம் தோய்ந்த குரலில் உருகிய பெண்ணவள், அவனின் விழி பார்க்க,

ஆற்றாமையும், காதலும், வலியும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து ஒளிர, எதோ கூற முடியாத வலி ஒன்று இதயத்தை தாக்க, அவனை இமைக்க மறந்து அவள் இருந்த நேரத்தில்,

அவளின் கையை பற்றி இருந்தவனின் கரம் அவளின் இடையை தழுவி, முகம் சேர்த்து, அவள் இதழில் நிற்க, தன் விரல் கொண்டு அவளின் செவ்விதழை வருடியவன் தீண்டலில்,

காதல் இல்லை என்றவளும், அவனின் வசியத்திற்கு உட்பட்டு, மயங்கி, கிரங்கியே நின்றாள் பெண்ணவள்.

அதை தனக்கு சாதகமாக்க எண்ணியவன்,

"இப்டி என்னுள் நீ கரைந்து கிடக்கும் கலக்கம் கூட நாம் காதலை உனக்கு உணர்த்த வில்லையா!!!!" என்றான் அவள் எதிர் பார்க்காத தருணம்.

கட்டுப்பாட்டில் இருக்கும் இதயம், ஆணவனின் அருகில் மட்டும் தறி கெட்டு போவதும், அவனுள் தொலைந்தும் கிடைக்க, அந்த இதயத்தை கடிந்தவள்,

அவனை விட்டு விலகி செல்ல... முன் இருந்த இறுக்கம் அகன்று அவளுள் வெட்கம் குடி கொள்ள, அதில் ஆணவனின் கோவமும் கரைந்து, அவளை ரசித்திருக்க,

"அவன் சரியானவன் அன்று... உனக்கும் நாம் ராஜ்யத்திற்கும் தீங்கு மட்டுமே விளையும்" என்றான் உரக்க.

அதில் நின்றவள், சம்யுக்தனை தான் கூறுகிறான் என்பதை உணர்ந்தவள்,

"அவருள் என்ன பிழை... என்னையும் நாட்டையும் நன்கு கவனித்து கொள்ளும் பொறுமைசாலி அவர்" என்றாள் மார்தட்டி கொள்ளும் விதமாக.

விரக்தி புன்னகை ஒன்றை உதிர்தவன், எதையோ பேச முற்பட.

தூரத்தில் இருந்து "எறிவளைதடு" ஒன்று அவனின் கழுத்தை தாக்கி, பின் எய்தவன் கையிலேயே போய் தஞ்சம் புகுந்து கொள்ள,

அது வந்த திசை நோக்கியவள் கண்ணில் கோவகனலில் எரிந்து கொண்டு நிற்கும் சம்யுக்தன் பட,

மயங்கி தரையில் விழுந்து கிடந்த சத்தியசீலனை கவனிக்க தவறி விட்டாள் உமையாள்.

பொறுமைசாலி என்று கூறியவனின், பொறுமை மொத்தமும் தெரிந்தே விட்டது பெண் அவளிற்கு.

மயங்கியவனின் பிம்பம் கண்ணில் நிற்க, கண்ணில் நீர் கசிய, சத்யா என்றவள் துவண்ட அல்லியாய் கீழே அமர, அதே நேரம் அறையின் உள்ளே வந்தான் சத்யன்.

கலங்கிய தன் ஆசை காதலியை கண்டவன்,

"என்னடி ஆச்சு... மயக்கம் ஏதும் வருதா.. ஏன் இப்டி உக்காந்து இருக்க?" என்றான் பதட்டமாய்.

"உன்... உனக்கு.." வார்த்தை சிக்கி கொண்டு வர மறுக்க.

அவசரமாய் அவனின் பின் கழுத்தை பார்த்தாள் உமா,

அங்கு அந்த எறிவளைதடுவின் வெட்டு காயம் இன்றும் அவனின் மேனியில் இருக்க... அதை அவள் கரம் கொண்டு வருடியவள்,

"வலிக்குதா?" என்றாள் வருத்தமும் காதலும் பொங்கிய படி.

அதில் மகிழ்ந்தவன், கண்ணிலும் மனதிலும் காதல்குடி கொள்ள, அடுத்த சில நொடிகள் காதலில் கழித்தனர் இருவரும்.

அதை கலைக்கவே வந்து கொண்டு இருந்தான், இவர்கள் காதலின் ஒரே எதிரி.

அறைக்கு வெளியே கால் ஷூவின் கால் தடம் கேட்க,

வருவது யார் என்பதை புரிந்தே கொண்டான் சத்யன். அவன் வந்து அறை கதவை திறக்கும் முன் அருகில் இருக்கும் அலமாரியின் அருகில் ஒளிந்து கொள்ள, அந்த நேரம் உள்ளே நுழைந்தான் முகுந்தன்.

நுழைந்தவன் கண்ணில், தரையில் மிரண்ட படி கிடக்கும் உமா மீது பட, அவளை நெருங்கியவன்,

"என்னடி ஆச்சு? ஏன் இப்டி உக்காந்து இருக்க? இந்த ரூம்க்கு உன்ன யார் வர சொன்னது?" என்றான் பதட்டமாக.

அப்போதும் அவளிடம் மிரட்சி குறையாமல், கண்ட காட்சியின் தாக்கத்தில் அவள் இருக்க,

"சத்யனை பார்த்தியா?" என்றான் நேரடியாக.

அதில் மேலும் அதிர்ந்தவள்,

"இ..இல்லையே!!!" என்றாள் தடுமாறிய படி.

"அவன் கொஞ்சம் சரி இல்லை... அவனை இனி சந்திச்சாலும் பேச வேண்டாம்.. தள்ளியே இரு" என்றான் உறுதி குரலில்.

தன்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டவனிடம் இருந்து தள்ளி எப்படி நிற்க முடியும் அவளால்.. இருந்தாலும் சரி என்றே தலை அசைத்து வைக்க,

"சரிவா, அம்மா உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க" என்றவன் அவளை கை பற்றி கூட்டி செல்ல.

செல்பவாளின் பார்வையோ, அலமாரி மீதே குடி கொண்டது.

*****

சூரியன் தன் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி உச்சியில் வந்து, தன் தீ கதிர்களால் பூமியின் வெப்பத்தை அதிகம் ஆக்கி கொண்டு இருக்க,

குழப்பத்தின் வெப்பம் சூழ அமர்ந்து இருந்தாள் உமா.

தனக்காக அமைக்கப்பட்டு இருந்த அறையில், எதையோ வெறித்த படி, எங்கோ கவனத்தை வைத்த படி அமர்ந்து இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் அலைபேசி.

விபத்தில் அலைபேசி சுக்குநூறாகி போய் விட, சத்யன் தான் ஆதிராவிடம் ஒரு புது கைபேசியை வாங்கி கொடுத்து அத்துடன் தன் காதல் சின்னமான தங்க கம்பியால் பிணைக்க பட்ட மயிலிறகையும் அனுப்பி வைத்தான்

அந்த கைபேசி தான் இப்போது சிணுங்க, அதில் புது எண் ஒன்று மின்ன,

"உமா, உடனே கேன்டீன் வாயேன்... நீ தெரிஞ்சுக்க வேண்டிய அடுத்த விஷயம் என்னனு நான் காமிக்குறேன்" என்ற படி ஒலித்தது சத்யனின் குரல்.

அதோடு எதையும் பேசாமல் அவன் அலைபேசியை துண்டித்து விட,

"இது வரைக்கு தெரிஞ்ச விஷயத்துக்கே விளக்கம் கிடைக்கலையாம், இதுல அடுத்த விஷயம் வேறயா?"

"என்னை பைத்தியம் ஆக்காம விட மாட்டாங்க போல" என்றவள் சலித்த படி கேன்டீன் நோக்கி சென்றாள் உமா.

அங்கு ஒரு பெஞ்ச் ஒன்றில், ஒரு ஆணின் தோளில் தலை சாய்த்த படி ஆதிரா அமர்ந்து இருக்க,

அவனோ அவளின் தலையை வருடிய படி, அவளிடம் எதையோ பேசி கொண்டு இருந்தான்.

அதை கண்ட உமாவிற்கு அக்காவாக கோவம் வந்து விட, கோவமாய் அவர்களை நோக்கி அடி எடுத்தவளின் முன் அதே காட்சி படலம் ஓட துவங்கியது.

இருள் சூழ்ந்த வேளையில், காலின் கொலுசுகளின் ஓசையும் கேட்காத வண்ணம், பதுங்கி நடந்த படி வந்து கொண்டு இருந்தனர் உமாவும், ஆதிரையும்.

ஆதிரையின் உடல் முழுவதும் ஒரு கருப்பு துணி ஒன்றால் தலை வரை மூடி இருக்க,

"மதிமரனுக்கு தகவல் அனுப்பி விட்டாய் தானே.. இந்த நேரம் நாம் சொன்ன இடத்திற்கு அவர் வந்து இருப்பார் அல்லவா?" என்றாள் உமையாள் , ஆதிரைக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"சத்யசீலனிடம் ஓலையில் தகவலை கூறும் படி கூறி விட்டேன் அக்கா" என்றாள் திடமாக.

சத்யசீலனின் பெயரை கேட்ட உமாயாளிற்கு தான், மனதில் ஒரு இனம் புரியாத பரவசம் ஆட்கொள்ள, அன்று மாட்டு தொழுவத்தில் பார்த்ததே கடைசி...காயம் ஆனா பின்பு அவனை காணவே முடியவில்லை உமையாளால்...

அதற்குள் கோட்டையின் பின் புறத்தை அடைந்த இருவரும்,

"சிறிது காலம் நான் கூறிய இடத்தில் தலைமறைவாக வாழுங்கள்... பின் இந்த நாட்டின் ராணியாக நான் பதவி ஏற்ற பின் உங்களை அழைத்து கொள்கிறேன்.. அதுவரை ஜாக்கிரதையாக இருங்கள்" என்றவளின் பேச்சில் தாயின் பாசமும், அன்புமே மிகுதியாய் இருக்க,

ஆதிரா அவளை புரியும் துயர் தாளாமல், அவளை இருக்க அணைத்து தன் மன வலியை அழுது கண்ணீரில் கரைக்க,

"செல்லலாமா!!! விடியலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமே உள்ளது... இப்போது பயணத்தை துவங்கினால் தான் விடிவதற்குள் எல்லையை கடக்க முடியும்" என்றான் மதிமாறன்.

"சரி" என்ற படி ஆதிராவை பிரிய மனம் இல்லாமல் அவனுடன் அனுப்பி வைத்தாள் உமையாள்.

செல்லும் அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தவளுக்கு, ஏனோ தன்னில் ஒரு பாதியை வெட்டி எடுத்து செல்வது போல் தோன்ற, அழுத படி மண்ணில் விழுந்தாள் உமையாள்.

அவளை இந்த நிலையில் பார்க்க மனம் இல்லாத சத்தியசீலன், இரண்டு நிமிடம் அவளை விட்டு தள்ளி நின்றவன், இறுதியாய் அவள் முன் காட்சி அளிக்கவே செய்தான்.

முகத்தை மூடி கொண்டு, அந்த இருள் வேளையிலும் வசீகரிக்கும் ஆணவனின் கண்களை கண்டு கொள்ளாமலா இருப்பாள் உமையாள்.

உடனே அடையாளம் கண்டு கொண்டவள், எழுந்து அவ்விடம் விட்டு செல்ல முயல,

இருட்டில் பாதை சரியாக தெரியமல் போக, கல் ஒன்றில் கால் வைத்து அதில் இடறி விழ போனாள் உமையாள்.

அவள் விழும் வேளையில் அவளை லாவகமாக கையில் ஏந்தினான் சத்தியசீலன்.

எங்கோ விழுந்து விட போகிறோம் என்று எண்ணியவள், அவள் கண்களை மூடி இருக்க, அடுத்த நொடி காற்றில் பார்ப்பது போல் தோன்ற கண்களை திறக்க, மிக அருகில் தன்னை கையில் ஏந்தி இருக்கும் அவனை கண்டவள்,

அவனின் விழியில் தன்னை தொலைத்து, சுற்றம் மறந்து, மயங்கி கிடக்க.,

ஆணவன் மட்டும், மயங்க தவறுவனா என்ன,.. நிலவும் குளிர் காற்றை அள்ளி தந்து இருவரையும் ஆட்டி வைக்க,

முதலில் தெளிந்த உமையாளோ, அவனிடம் இருந்து தன்னை பிரித்து கொண்டு அவ்விடம் விட்டு ஓடியவள், இருளில் மறைந்து மயமாகவே செய்தாள்.

கண்ட காட்சியிலேயே ஆதிராவுடன் அமர்ந்து இருப்பவன் யார் என்பது புரிந்து போக,

இருவரையும் நெருங்கினாள் உமா,

தங்கள் மேல் நிழலாட உணர்ந்த இருவரும், தலை தூக்கி யார் என்று கூட பார்க்காமல்,

"இப்போ இப்போ எதுவும் ஆர்டர் பண்ண மாட்டோம்... அப்பறம் வாங்க" என்றான் மாறன், கொஞ்சம் எரிச்சலாகவே.

அதில் உமாவிற்கு சிரிப்பு வந்தாலும், அடக்கியவள், முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டவள்.

"ஹ்ம்ம்" என்றாள் அவர்களின் கவனத்தை ஈர்க்க.

அதில் இறுதியாக உமாவை பார்த்த இருவருக்குமே, பயத்தில் முகம் சுருங்கி வாடி போக.

"அக்கா.. இ..இது... வ..வந்து..." என்று திணறிய ஆதிரவை பார்த்த உமா.

"யார் இவன்?" என்றாள் பொய் கோபத்துடன்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த சத்யன்,

"பாவம் பசங்கள மிரட்டாத உமா... பாரு எப்படி பயப்படுறான்னு"என்றான் ஆதிராவின் அருகில் நின்ற படி.

"அக்கா" என்று ஆதிரா தயங்கிய படி நிற்க.

இறுக்கத்தை குறைக்க நினைத்த உமா முகம் முழுதும் புன்னகை மலர, அதுவே அவளின் சம்மதத்தையும் தந்து விட.

ஆதிராவிற்கு தான் தலைகால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சையில் கூத்தாடி கொண்டு இருந்தாள்.

அம்மா அப்பா இல்லாத இந்த நேரத்தில், அக்காவும் நினைவை இழந்த இந்த நிலையில், தங்கள் காதலை எப்படி கூறுவது என்றே பேசி கொண்டு இருந்தனர் இருவரும்.

எதையும் கூறாமலே, அவர்களின் குழப்பம் தீர்ந்து விட, உமாவும் கூட சம்மதம் தந்து விட... மகிழ்ந்தே போனாள் ஆதிரா.

உமாவிற்கு கூட காலம் கடந்து காதலில் இருக்கும் அவர்களை பார்க்க வியப்பும், மகிழ்ச்சையாகவும் இருக்க... உள்ளம் நிறைந்து போனது அவளுக்கு.

சத்யனின் இந்த சிறிய குருவி கூட்டின் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க.

அதை ஒரு ஜோடி கண்கள் தூரத்தில் இருந்து முறைத்த படியே இருந்தது.

காலம் கடக்கும் இவர்களின் காதல் கைசேர்ந்து கொள்ளுமா.

இல்லை அடுத்த ஜென்மத்தை நோக்கி அடி எடுத்து வைக்குமா..

தொடரும்......

-அர்பிதா💖


 
Top