செல்வாவும் மீனாவும் சிலகாலம் தங்களுடைய சிகிச்சையை தள்ளி வைக்கலாம் என்று ஒருசேர முடிவெடுத்தனர் .
ஏனென்றால் சிகிச்சைக்கு அவ்வளவு பணம் தேவைப்பட்டது செல்வாவின் சேமிப்பு ஒருபுறம் அப்படியே இருக்க இவர்கள் சிகிச்சைக்கு செல்கிறேன் என்று கூறும் முன்னே விஜய் இவர்களுக்காக ஹாஸ்பிடலில் அப்பாய்ன்மெண்ட் வாங்குவதும் இல்லாமல் முன் பணத்தையும் கட்டி விடுகிறான்,
இது இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய தர்மசங்கடத்தை கொடுக்கிறது
தங்களின் வாரிசுக்காக விஜய் செலவு செய்வதை மனம் ஏற்க மறுக்கிறது... அவனின் உழைப்பை இவர்கள் இருவருமே சுரண்டுவது போல தோன்றுகிறது.
இப்பொழுது ராஜாத்தி கூட அவரின் சேமிப்பு பணத்தை மீனா விற்கும் செல்வா விற்கும் தர முன்வருகிறார் அவருக்கு எப்படியாவது அவர்கள் மூலமாக தங்களின் குடும்பத்திற்கு மூத்த வாரிசு ஒன்று வர வேண்டும் என்பது மட்டுமே கவலை. பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஆனால் வாரிசு என்று ஒன்று வந்துவிட்டால் போதும் என்னும் மன நிலைமைக்கு ராஜாத்தி வந்து விட்டார்.
விஜயின் எண்ணமோ குடும்பத்திற்க்காக யார் செலவு செய்தால் என்ன நான் படித்து முடித்து வேலை செல்லும் வரை நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக கஷ்டப் பட்டது நியாயம் என்றால் எனக்கு இப்பொழுது இந்த குடும்பத்திற்கு செய்யும் கடமை இருக்கிறது என்று அவன் உரிமையாக சண்டையிட்டான்.
இப்படியாக நாட்கள் மெல்ல நகர்ந்து சென்றது…விஜய்க்கு வீட்டினர் மிக தீவிரமாக திருமணத்திற்காக பெண் பார்க்கிறார்கள் ஆனால் விஜயோ பணி செய்யும் இடத்தில் அவனுக்கான பெண்ணை தேர்தெடுக்கிறான்...இதுவரை அவளிடத்தில் அவன் காதலை சொல்லவில்லை ஏன் என்றால் அவள் இவன் பக்கம் திரும்புவதே இல்லை அப்படியே ஏதாவது பார்த்து பேசினால் கூட உடனே இருவருக்கும் சண்டை வருகிறது அதனால் காதலை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தி கொண்டு இருக்கிறான்.
மீனாவின் தங்கைக்கு திருமண நாள் நெருங்குகிறது…. தங்கைக்கு என்னல்லாம் வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தவள் காவ்யாவின் திருமணத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று படிக்கட்டின் அருகே அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறாள் மீனா
அப்பொழுது கீழே வந்த விஜய்யோ அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் மீனா அமர்ந்திருந்த படிக்கு ஒரு படி மேலாக ஒரு படியினில் அவனும் அமர்ந்துகொண்டு என்ன மீனா ரொம்ப யோசிச்சு கிட்டு இருக்க என்ன என்று கேட்கிறான்
அவளோ தனது கடைசி தங்கை திருமணத்திற்கு தான் என்ன செய்யலாம் என சில யோசனைகளை அவனிடத்தில் கேட்கிறாள்
அதற்கு அவனும் சில யோசனைகளை கொடுத்தவன் பல வருடங்கள் கழித்து இன்று அவளின் தாய் வீட்டின் நிலைமையை பற்றி கேட்டிருக்கிறான்.
என்ன மீனா காவியாவையாவது ஃபுல்லா டிகிரி முடிக்க வச்சிங்களா இல்ல அவளையும் படிப்பு முடியறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி தரீங்களா என்று கேட்க
அவளோ இல்லை அவ ரெண்டு டிகிரி முடிச்சிட்டா இப்போ நல்ல இடம் வரும்போது கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் சரினு அப்பா சொல்லுறாங்க,பெரிய தங்கை கூட கல்யாணத்துக்கு அப்புறம் அவளோட மீதி படிப்பையும் படித்து முடித்து விட்டாள் அவளோட கணவர் அவளுக்கு மிகப்பெரிய சப்போட்டா இருந்தாரு...என்று கூற
ஏன் மீனா உனக்கு நாங்க யாருமே சப்போட்டா இல்லல்ல இப்ப கூட ஒன்னும் ஆகல நீ படிக்கிறியா என்று கேட்க
ம்ச்….இல்லபா...எனக்கு படிக்கற இன்ட்ரஸ்ட் எல்லாம் எப்பவோ காணாம போயிடுச்சு ஒருவேளை கல்யாணம் ஆன புதுசுல என்ன நீங்க படிக்கத் தூண்டி இருந்தீங்கன்னா படிச்சு இருப்பேனோ என்னவோ இப்போ எனக்கு அந்த ஐடியா இல்லை என்று உள்ளத்தை மறையாது அவனிடம் உண்மையை கூறினாள்…
ம்ம்...
சரி உன் கடைசி தம்பி அவன் இப்போ என்ன செய்யான்
அவன் காலேஜ் கடைசி வருஷம் போய்க்கிட்டு இருக்கான் இன்னும் மேல படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கான் படிச்சு முடிச்சதும் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணனும் அந்த கவலை இப்பவே எனக்கு வருது என்று தனது தாய் வீட்டை பற்றி கவலை பட
உன் தம்பியை பற்றிய கவலையை விடு மீனா அவனுக்கு படிப்பு முடிஞ்சதும் என்கிட்ட சொல்லு அவனோட படிப்புக்குத் தகுந்த மாதிரி வேலையை நான் ஏற்பாடு பண்ணி தரேன் என்று கூற இவளுக்கு தம்பியைப் பற்றிய கவலை அப்போதைக்கு காலாவதியாகிறது
அதன் பிறகு அவளின் இரு தங்களைப் பற்றியும் விசாரிக்கிறான் பெரிய தங்கையும் மிகவும் பணக்கார வீட்டில் மருமகளாய் சென்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொடுப்பதை பெருமையுடன் கூறுகிறாள் மீனா
இளையவளும் ஒரு செல்வ செழிப்பான வீட்டிற்கு தான் செல்கிறாள் அவர்களுக்கு மாப்பிள்ளை ஒரே பையன் தான் அதனால் தான் தனது தந்தை உடனடியாக திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார் என்றும் கூற
பரவாயில்லையே இரண்டு தங்கைகளும் நல்லாவே செட்டில் ஆயிட்டாங்க இல்லையா என்று அவன் எதார்த்தமாக கேட்க
அதற்கு மீனா ஆமா இந்த வீட்டுக்கு நான் வந்ததுக்கு அப்புறம் எனக்கு நிறைய கமிட்மென்ட் இருந்தது இல்லையா அதனால என்னோட அப்பா இரு தங்கைகளுக்கும் பெண் பார்க்கும் போதே மாப்பிள்ளைக்கு கண்டிப்பா சொந்த வீடு இருக்கணும் அவங்க ஓரளவுக்கு செட்டில் ஆகியிருக்கனும்னு ஒரு கன்டிஷன் வச்சி தான் ஜாதகமே கொடுத்தாங்க
அவங்க ரெண்டு பேருமே நல்ல அதிஷ்டசாலிதான் என்று தங்களைப் பற்றிக் கூற
விஜய்யோ அப்ப நீ அதிர்ஷ்டசாலி இல்லைன்னு சொல்றியா மீனா என்று கேட்க
நிஜமும் அதுதான விஜய் எனக்காக இன்னும் நான் ஒருநாள் கூட வாழ ஆரம்பிக்கல மூத்த மருமகளாக வந்து நாள் முதல் இந்த வீட்டுல எல்லாத்தையும் நானே தூக்கி சுமக்கற மாதிரி ஆயிடுச்சு இதை கேட்கும்போது உனக்கு சங்கடமா தான் இருக்கும் ஆனால் இது உண்மை தானே என்று அவனிடம் அவள் திருப்பிக் கேட்க
அவள் கேட்கும் கேள்வியில் நிதர்சனம் இருப்பதை உணர்ந்து கொண்டவன் மௌனம் காத்தான்.
அதன் பிறகு மெதுவாக மீனாவிடம் கேட்கிறான் ஒருவேளை நீ என் அண்ணனை தவிர வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தா நீயும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருப்பாய் தானே என்று
அதற்கு அவளி ன் பதில் உடனடியாக வருகிறது ஆனால் இது போல் நான் சந்தோஷமாக இருப்பேனா என்று கேட்டால் அது சந்தேகம்தான்
என்னதான் இந்த குடும்பத்துல சண்டை வந்தாலும், பொருளாத ரீதியா கஷ்டப்பட்டாலும் இந்த வீடு எப்பவும் என்னை மகாராணி மாதிரி தான வைத்துக் கொண்டாடுகிறது இது எத்தனை வீட்டில் சாத்தியம் என்று திருப்பிக் கேட்க விஜய்யோ தனது அண்ணியை பெருமையாக பார்க்கிறான்….
சற்று கண் கலங்கிய படியே மீனா மீண்டும் இந்த வீட்ல மட்டும் தான உன்னைப் போல ஒரு நட்பு இருக்கு
எத்தனை அண்ணிகளுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் சொல்லு கொழுந்தனார் என்கிற உறவையும் தாண்டி ஒரு நல்ல நண்பனா எனக்கு நீ கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தானே
என் தங்கைகளுக்கு வேணும்னா பொருளாதார ரீதியா ஒரு சுக வாழ்க்கை கிடைச்சிருக்கலாம் ஆனா எனக்கு கிடைச்சது போல ஒரு கொழுந்தனார் அவர்களுக்கு இல்லையே... அந்த வகையில் அவர்களை விட நான் தான அதிர்ஷ்டசாலி என்று தனது கொழுந்தனை பார்த்து கேட்க
அவனுக்கு இப்பொழுது என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை இவளோ மேலும் தொடர்கிறாள்...இப்போலாம் வரவர எனக்கு ரொம்ப கில்ட்டி பீல் ஆகுது
ஒவ்வொரு முறையும் நீ எங்களோட மருத்துவச் செலவுக்காக பணம் எடுத்துக் கொடுக்கும் பொதெல்லாம் எனக்கு என்ன தோணுதுனா நட்பு,பாசம் என்கிற ஒரு மாயையை உன் மேல விழ வச்சு உன் ரத்தத்தை உரியற ஒரு அட்டை பூச்சியா நானும் உன் அண்ணாவும் ஆயிட்டேமோனு கவலை வருது விஜய்
நீ இனிமே எங்களுக்காக செலவு செய்ய வேண்டாம் உனக்குன்னு ஒரு திருமணம் ஆகப் போகுது அதுக்காக கொஞ்சமாவது சேர்த்து வை உன்னோட மனைவி என்ன மாதிரி கஷ்டப்பட வேண்டாம் யாருக்காகவும் அவளோட வாழ்க்கையை அவ காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டாம்
திருமாணதுமே குழந்தையை தள்ளிப் போடாதீங்க உடனே ஒரு குழந்தை பெத்துக்கோ அதுக்கப்புறம் விருப்பப்பட்டா இரண்டாவது குழந்தையைப் பற்றி யோசிஎன்று சில அறிவுரைகளையும் அவனுக்கு வழங்கினாள்.
அவள் கூறியவற்றை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த விஜய் மெதுவாக அவளிடம் கூறுகிறான்
அப்படின்னா நான் வேலைக்கு போற வரைக்கும் எனக்காக நீயும் அண்ணாவும் கஷ்டப்பட்டிங்களே அதுக்கு பேரு என்ன மீனா அப்போ நான் தம்பி பாசம் என்று ஒரு மாயையை அண்ணா மேல விழ வச்சி அவரோட உழைப்பை உரிஞ்சின ஒரு அட்டைப் பூச்சினு என்னையும் அந்த கணக்குல எடுத்துக்கலாமா?
என்னோட அண்ணா எனக்காக கஷ்டப்பட்டார் அதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நீயேன் மீனா எனக்காக கஷ்டப்பட்ட எனக்கு ஒரு பிரச்சனைனு தெரிஞ்ச உடனே உன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்த
இந்த நிமிஷம் வரைக்கும் நீ அதை பத்தி கேட்கவே இல்லை எனக்கும் உனக்கு புதுசா வாங்கிக் கொடுக்கணும் தோணவே இல்லை
இன்னைக்கு போல அன்னைக்கு நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் கூட கிடையாது உன்ன ஒரு புழுவை விட கேவலமா தான் பார்த்துட்டு இருந்தேன் அப்படி கேவலமா பார்த்துட்டு இருந்த எனக்கே நீ உதவ முன்வரும் போது
எந்த வகையிலும் கீழ் இறக்கி பார்க்காத
உங்களுக்காக நான் பணம் கொடுக்கிறதை மட்டும் எப்படி
உன்னால பெரிது படுத்தி பார்க்க முடியுது
மீனா இது நம்மளோட குடும்பம் இங்கு ஒருத்தருக்கு ஒன்னுனா கண்டிப்பா எல்லாருமே துடிக்கனும்
இது தான் நியதி
இது ஒரு கூட்டுக்குடும்பம் இந்த குடும்பம் உடைய கூடாதுன்னு தான் உன்னோட பல சந்தோஷங்களை பல ஆசைகளை நீ விட்டுக்கொடுத்த இதுவரைக்கும் இது வரைக்கும் நீயும் அண்ணாவும் செஞ்சிங்க ...இனி நீங்க ஓய்வெடுங்க இனி உங்களுக்காக செய்யறது
என்னோட கடமை என்று கூறியவன்
உனக்கு வளையல் வாங்கி தரனும்னு ரொம்ப நாளா ஆசை பட்டு கிட்டு இருக்கேன் நீயும் இன்னும் எத்தனை நாள்தான் இந்த கண்ணாடி வளையலை போடுவ
ஒரு வளையலை கழட்டித்தா உனக்கு நான் ஒரு அழகான வளையல் வாங்கி தரேன் என்று அவளை பார்த்து கை நீட்ட
அவள் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நிஜமாகவே எனக்கு ஏதாவது வாங்கித் தரணும்னு தோணினா நா கேட்கும் போது வாங்கித்தா
இல்லனா எனக்கு ஏதாவது தேவைபடும் போது நான் கேட்கிறேன் அப்போ நீ மறுக்காம எனக்கு வாங்கி குடு சரியா என்று கேட்டாள்.
ம்ம்…. சரி தான் அந்த காலத்துல தசரதன் கிட்டே கைகேயி வரம் கேட்ட மாதிரி வரம் கேட்கிறேன் அப்போ குடுனு சொல்லாம சொல்லற…
சரி கண்டிப்பா நீ கேட்கும் போது நீ கேட்ட வரத்தை நான் உனக்கு கொடுப்பேன் போதுமா என்று அவன் சிரித்தபடி கூற இவளோ
சரி உனக்கு ரொம்ப தீவிரமா பொண்ணு பார்க்கிறார்களே எந்த மாதிரி பொண்ணு எதிர்பார்க்கற என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள்.
கண்டிப்பா குணத்திலும் அழகிலும் உன்ன மாதிரி தான் இருக்கணும் ஆசைப்படுறேன் ஆனா ரெண்டுமே கிடைக்கிறது கஷ்டம் இல்லையா
அதனால ஏதோ கொஞ்சமா கொஞ்சம் வேலைக்கு போற மாதிரி எதிர்பார்க்கிறேன்
அதுவும் என்கூட என் ஆபீஸ்ல வேலை செய்ற மாதிரி இருந்தால் இன்னும் ரொம்ப சந்தோஷம் என்று அவன் கூற
இவளோ ஆச்சரியத்துடன் நெற்றி சுருக்கியவள் உன் கூடவே உன் ஆபீஸ்ல வேலை செய்யணும்னா உன் கூட வேலை செய்ற பொண்ண தான் பார்க்கணும் அப்போது கூட வேலை வேலை செய்ற யாரோ ஒரு பொண்ணை...ம்ம்... என்று சிரித்தபடி கேட்க
அவனும் வெட்கப்பட்டுக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினான்
அப்புறம் என்ன பிரச்சனை பொண்ணு யாரு என்னன்னு டீடைல்ஸ் குடு உடனே அடுத்த கட்ட வேலையை ஆரம்பிச்சுடலாம் என்று கேட்க
அவனோ இல்லல்ல பொண்ணு கிட்ட இன்னும் நான் சொல்லல சொன்னதுக்கப்புறம் போய் பொண்ணு கேட்கலாம் என்று கூறினான்
எத்தனை நாளா பொண்ணை சைட் அடிக்கற என்று கேட்க
ஒரு வருஷம் ஆச்சு என்று கூற
அடப்பாவி ஒரு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்க இன்னுமா அந்த பொண்ணு கிட்ட உன் லவ்வை சொல்லல முதல்ல பொண்ணு யாருன்னு போன் நம்பர் குடு நான் பேசுறேன் என்று கேட்க
இல்ல மீனா முதல்ல அவ கிட்ட பேசிட்டு அப்புறமா வந்து சொல்றேன் அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம் முக்கியமா என் அம்மாவுக்கு என்றவன்
பிறகு முகத்தை யோசனையாக வைத்துக் கொண்டு அவகிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும் அதுக்கு அவ ஓகே சொன்னா மட்டும்தான் அவளை திருமணம் செய்துக்க முடியும்,ஆனா அதை அவ எப்படி எடுத்துப்பானு தெரில...அது இல்லாம நா அவ கிட்ட சொல்லற விஷயத்துக்கு சம்மதிக்காம என்னை வேணாம்னு கூட சொல்ல வாய்ப்பிருக்கு அதனால கொஞ்சம் பொறுமையாக இரு மீனா என்று கூறினான்.
என்னடா இது கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா...அதும் அவ ஒத்துக்கறது கஷ்டமா என்னவோ போ உனக்கு ஒரு வாரம் தான் டைம் அதுக்குள்ள அந்த பொண்ணு கிட்ட பேசி என்ன எதுன்னு சொல்லற இல்ல நானும் அத்தையும் நேரா ஆபிஸ் வந்து யாரு என்னன்னு விசாரிச்சி நாங்களே இந்த விஷயத்தை டீல் செஞ்சிப்போம் புரியுதா என்று மிரட்டிவிட்டு மீனா எழுந்து சென்றாள்.
அதன் பிறகு ஒரு வாரத்திலேயே விஜய் அவன் காதலிக்கும் பெண்ணான ஹேமாவிடம் அவனின் காதலை சொன்னான்.
ஹேமா நன்கு படித்தவள் இருபத்தி ஐந்து வயது பெண் மீனாவை விட ஒரு வயது மட்டுமே இளையவள் ,நல்ல உயரம், தைரியம், எதையும் முகத்திற்கு நேராக பேசும் துணிச்சல் கொண்டவள்,வசதியான வீட்டில் ஒரே பெண்,நவ நாகரிகமாக உடை அணிபவள்,அதுவே அவளுக்கு அழகும் கூட,குணத்தில் அவள் ஒரு பேரழிகியும் கூட,அவளுக்காக பல ஆண்கள் காத்திருக்கின்றனர்,ஆனால் இவள் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை,விஜயை மட்டும் அவ்வவ்போது ரசனையாக பார்ப்பாள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயுடன் பணி செய்கிறாள் அவளுக்கும் விஜயை கண்ட நாள் முதல் காதல் ஆனால் விஜயாக வந்து சொல்லாமல் தான் எப்படி சொல்வது என தயங்கி கொண்டு இருப்பவள்.
விஜய்யிடம் மட்டும்தான் தயங்கிக் கொண்டிருக்கிறாள் அவளுடைய தாய் தந்தையிடம் எப்பொழுதோ கூறி சம்மதத்தை பெற்று விட்டாள்
அவர்களும் பெண்ணுக்கு ஏதோ ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் மூன்று மாதம் கழித்து திருமண ஏற்பாடுகளை செய்தால் மட்டும் தான் பெண்ணின் வாழ்க்கை சுகப்படும் என்று பொறுமை காத்து கொண்டிருக்கின்றனர்
இவளிடம் எப்பொழுது கூறிவிட்டார்கள் மூன்று மாதம் மட்டும் பொருத்துக்கொள் மகளே மூன்று மாதம் கழித்து நீ காதல் செய்யும் பையன் உன்னிடம் அவள் காதலை கூறவில்லை என்றால் நாங்களே நேராக சென்று உனக்காக மாப்பிள்ளை கேட்கிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்து இருக்கிறார்கள்
ஆனால் அதற்குள்ளாக எப்படியாவது உன்னுடைய காதலை நீ அவனிடம் கூறி அவனின் சம்மதத்தைப் பெற வேண்டும் அப்படி இல்லை என்றால் நாங்கள் மாப்பிள்ளை கேட்டு அவன் உன்னை வேண்டாம் என்னும் பட்சத்தில் நாங்கள் சொல்லும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று ஒரு ஒப்பந்தத்தையும் ஹேமாவிடம் போட்டிருக்கிறார்கள்
அதனால் ஹேமாவோ விஜய்யுடன் தன்னுடைய காதலை சொல்வதற்காக ஒவ்வொரு நாளிலும் நல்ல நேரத்தை பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் இப்போது அவளின் முன்பு தயங்கி தயங்கி விஜய் அவனின் காதலை சொல்லும்போது வேண்டாம் என்று கூற அவள் என்ன முட்டாள்?
விஜய் அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று அலுவலகக் கேன்டீனுக்கு கூட்டிச் சென்று ஆளுக்கொரு ஃகாப்பியை ஆர்டர் செய்தவன் தைரியமாக நான் உன்னை காதலிக்கிறேன் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நேரடியாகவே கூற
ஹேமாவோ தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்
விஜய் அவளிடத்தில் வந்து காதலை சொல்வதில் அவ்வளவு சந்தோஷம்
அவளோ இந்த வார்த்தையை கேட்க நான் ரெண்டு வருஷம் காத்துட்டு இருக்கேன் என்று கூற
அவனும் ஆச்சர்யமாக அப்படினா நீ என்னை விட சீனியரா என்று கேட்டான்
அவளோ புரியாமல் என்ன சீனியர் என்று கேட்க
நான் ஒரு வருஷமா தான் உன்ன லவ் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ ரெண்டு வருஷம்னா எனக்கு சீனியர் தான் என்று விஜய் சிரித்தான்.
பிறகு அவர்களுடைய கதைகளை சிலவற்றை பேசி முடித்தவர்கள் இருவருமே பரஸ்பரம் அவர்களின் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்
ஹேமாவிற்கு அவனுடைய குடும்பம் பெரியதாக வசதி இல்லாவிட்டாலும் கூட விஜய் திறமையானவன் அவன் இப்பொழுது ஷேர் மார்க்கெட்டை சைடு பிஸினஸாக செய்து கொண்டிருப்பது நன்றாகவே தெரியும் அதனால் எதிர்காலத்தில் பொருளாதாரப் பிரச்சினை வராது என்பதை உறுதியாக நம்பினாள் அதுமட்டுமின்றி அவள் வீட்டில் ஏற்கனவே நன்கு வசதி விஜய் தன்னை திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவளுடைய சொத்துக்கள் எல்லாமே அவர்களுக்கு தான் வரப்போகிறது அதனால் விஜய்யின் வசதி அவளுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை
விஜய்க்கு தான் சற்று பயம் அவளிடம் இரண்டு விஷயங்கள் பேச வேண்டும் ஒன்று ஹோமா தன்னுடன் கூட்டுக் குடும்பமாக கடைசி வரை ஒரே வீட்டில் இருப்பது
இரண்டாவது திருமணம் ஆனவுடனேயே தங்களுக்காக ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொள்வது
இரண்டுக்கும் அவள் ஒத்துக் கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் இந்த காதலை இங்கேயே இப்படியே முடித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் அவளிடம் அந்த இரண்டு கோரிக்கைகளையும் வைக்கிறான்
அவள் ரொம்ப சுலபமாக சொல்கிறாள் திருமணத்திற்கு பிறகு எக்காரணத்தைக் கொண்டும் நான் எனது வேலையை விடப் போவதில்லை எப்படி எனது தாய் வீட்டில் நான் சுகமாக இருக்கிறேனோ அதேபோல் தான் நான் அங்கேயும் வந்து இருக்க போகிறேன்
எனக்கு கிடைக்கும் எல்லா சலுகைகளும் அங்கு கிடைக்கும் பட்சத்தில் கூட்டு குடும்பத்தில் இருப்பது பற்றி கவலை இல்லை
அதுவுமில்லாமல் தான் சிறுவயதிலிருந்தே தனி ஒரு பெண்ணாக வளர்ந்து விட்டதால் அங்கு உனது அண்ணி எனக்கு ஒரு சகோதரியாக இருப்பாள் என்னும் பொழுது எனக்கு இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறிவிட்டாள்
குழந்தை தான் என்னை சற்று யோசிக்க வைக்கிறது ஆனாலும் எப்படி இருந்தாலும் குழந்தை பெற்று தானே ஆக வேண்டும் அதனால் திருமணம் ஆனவுடனேயே நீ ஆசைப்பட்டது போல் குழந்தையை பெற்றுக் கொள்கிறேன்
அதன் பிறகு கண்டிப்பாக நான் எனது வேலையைப் பார்ப்பேன் நீ மறுபடியும் குடும்ப வாழ்க்கை என்று ஒரு வட்டத்துக்குள் என்னை அடக்க கூடாது என்று மிகத் தெளிவாக கூறிவிட்டாள் இவை இரண்டையும் இவர்கள் பேசி முடிக்க அடுத்தபடியாக
பெரியவர்கள் அனைவரும் முறையாக இவர்களின் திருமணத்திற்காக பேச தொடங்கினர்.
ஹேமா வீட்டில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் அது என்னவென்றால் இருக்கும் வீடு மிகவும் சின்னது அதில் இரு தம்பதிகள் இருப்பது என்பது மிகவும் கடினம்
நீங்கள் விருப்பப்பட்டால் ஹேமாவிற்கு நாங்களே ஒரு பெரிய வீட்டினை வாங்கித் தருகிறோம் அப்படி இல்லை என்றால் நீங்கள் உடனே ஒரு பெரிய வீடாக பார்த்து வாடகை வீட்டிற்கு செல்லுங்கள்
அப்படி இல்லை என்றால் ஒரு வீட்டை வாங்குங்கள் என்று பிடிவாதமாகக் கூறி விட்டனர்
விஜய்க்கும் சில நாட்களாகவே தாங்கள் வீடு மாற வேண்டும் கொஞ்சம் பெரிய வீடாக இருக்க வேண்டும் என்று அவன் தேடிக் கொண்டுதான் இருக்கிறான்
ஏனென்றால் இப்பொழுது அவனுக்கு நல்ல வருமானமும் கூடவே சேமிப்பும் இருக்கிறது புது வீடாக இருந்தால் பற்றாகுறைக்கு லோன் போட வேண்டும் இல்லை பழைய வீடாக இருந்தால் மொத்த பணத்தையும் கொடுத்து வாங்குவதற்கு கூட அவன் தயாராக தான் இருந்தான்
அதனால் ஹேமா வீட்டினர் சொன்ன கோரிக்கை அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை புதுவீடு போன உடனேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இரு குடும்பத்தாரும் பேசி முடிக்க
குடும்பத்தில் இருந்த அனைவருமே ஒன்று சேர்ந்து புது வீடு பார்க்க தொடங்கினர்
அவர்கள் எதிர்பார்த்தபடி இரு மாதத்திற்குள்ளாகவே தனியாக இருக்கும் ஒரு பழைய வீடு ஒன்று விலைக்கு வர அதை அனைவரது கையில் இருந்த சேமிப்பையும் கொண்டு அந்த வீட்டை கேசவன் பெயரில் வாங்கினர்
ராஜாத்திக்கு தான் பெருமையே தீரவில்லை கடைசிவரை தன்னுடைய வாழ்க்கை இப்படி வாடகை வீட்டிலேயே கழிந்து விடுமோ என்று பல நாள் அவர் கவலை பட்டு இருக்கிறார்
ஆனால் இப்பொழுது இரு பிள்ளைகளும் சேர்ந்து நான்கு படுக்கையறை கொண்ட ஒரு மிகப்பெரிய வீட்டை அவருக்கும் அவரது கணவருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு தாயான அவருக்கு…
அதன்பிறகு ஒரு நல்ல நாளில் விஜய் ஹேமாவை மனைவியாக்கிக் கொண்டான்.
இப்பொழுது இவர்களின் வீடு தனி வீடு பெரிய வீடு எல்லோருக்கும் தனித்தனியான அறைகள் விருந்தினர் வந்து தங்குவதற்கும் கூட ஒரு படுக்கையறை அதிகமாக இருக்கிறது அவர்களின் புதிய வீட்டில்
ஆனால் முதலில் இருந்த அந்த ஒற்றுமை தான் சற்று குறைந்தது போல் தோன்றுகிறது ராஜாத்திக்கு
முதலில் என்றால் எல்லோருமே சாப்பிட்டுவிட்டு முன்னறையில் இருக்கும் டிவியில் ஒற்றுமையாக அமர்ந்த படி நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள்
ஆனால் இப்பொழுது அப்படி இல்லை அவரவர் தேவைக்காக பெட்ரூமில் தனித்தனியாக டிவி சுவற்றில் மாட்டியிருக்கிறார்கள்
அவர்கள் பார்பதற்கு இலகுவாக மாடியில் நான்கு குடைகள் மாட்டியிருக்கிறது... மூவரின் படுக்கையறைக்கும் தனித்தனியா ஒன்று வரவேற்பறையில் ஒன்று என தனித்தனியாக செட்டாப் பாக்ஸூம் வைத்திருக்கிறார்கள்
இப்பொழுது வீட்டு வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள் அதை நிர்வகிக்கும் வேலை மட்டுமே ராஜாத்திக்கு
அவரவர் அவரவர்கள் ரூமில் அடைந்து கொள்கிறார்கள் இந்த மீனா கூட இப்பொழுதெல்லாம் வெளியே வந்து உட்கார்ந்து ராஜாதி இடம் பேசுவதில்லை என்ற மனக்குறை வேறு ராஜாத்திக்கு வந்தது
இளையவர்கள் ஆன விஜயும் ஹேமாவும் காலையில் ஒன்றாக ஆபீஸ் செல்கிறேன் என்று புதியதாக வாங்கிய காரில் சென்று விடுகின்றனர்
செல்வாவிற்கு புதிதாக பெரிய வண்டி ஒன்று வாங்கியாயிற்று இப்பொழுது அவர்களின் குடும்பமே செல்வ செழிப்பாக இருக்கிறது ஆனால் முதலில் இருந்த சந்தோஷமும் நிம்மதியும் தான் காணாமல் போகிறது
இப்படி ராஜாத்திக்கு மனக்குறைகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஹேமா மசக்கை ஆகியிருப்பது அவர்களின் குடும்பத்திற்கு தெரிகிறது
மீண்டும் அந்த குடும்பம் சந்தோஷத்தில் பூரிக்க மீனாவின் மனதில் மட்டும் சிறு அளவிலான ஆதங்கம் பூஜை அறை சென்றவள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறாள்
திருமணமான ஏழு ஆண்டுகள் முடிந்தும் கூட எனக்காக ஒரு பிள்ளை பாக்கியம் கொடுக்காத நீ நேற்று திருமணமான பெண்ணுக்கு கொடுக்கிறாயே
அவளுக்கு சற்று காலம் பொறுத்து குடுத்து விட்டு அந்த மகவுவை நீ எனது வயிற்றில் கொடுத்திருக்கக் கூடாது ஆண்டவா இது எந்த மாதிரியான ஓரவஞ்சனை என்று கடவுளிடம் நேரடியாக கேட்கிறாள்
ஏதேர்சையாக அந்த வழியாக வந்த ஹேமா இதை கேட்டவள் அதிர்ச்சியில் அங்கேயே ஆணி அடித்ததுபோல் நிற்கிறாள்.
அதுவரை மீனாவின் மீது ஹேமாவிற்கு ஒரு பரிதாபம் இருக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் கழித்தும் கூட அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்று வருந்தி இருக்கிறாள்
விஜயிடம் அது பற்றி கேட்கும் பொழுது அவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சையில் தான் இருக்கிறார்கள் என்று அவன் கூறியிருக்கிறான்,
திருமணமான ஆரம்ப காலகட்டத்தில் தனக்காக தான் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்து இப்பொழுது அதனின் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ,
அதனால் தான் நமக்கு திருமணமான உடனேயே ஒரு குழந்தையைப் பெற்று அதை வளர்ப்பதற்காக தனது அண்ணிக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்
அதனால் தான் முதலில் குழந்தை பெற வேண்டும் என்று உன்னிடம் கேட்டுக் கொண்டேன் என்றும் கூறியதால் ஹேமாவுமே மறுப்பேச்சின்றி குழந்தைக்கு சம்மதித்தாள்.
மீனாவின் மீது ஹேமாவிற்கு எப்பொழுதுமே ஒரு நன்மதிப்பு உண்டு ஆனால் இப்பொழுது மீனா இப்படி பேசுவதை கேட்ட ஹேமாவிற்கு என்ன தோன்றுகிறது என்றால் இவளின் புத்தி இப்படி சிறுமையாக இருப்பதால் தான் அந்த ஆண்டவனே இவளுக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுக்க வில்லை என்று தோன்ற அதன்பிறகு மீனாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்கிறாள்.
குழந்தை பிறந்தாலும் கூட அதை வளர்க்க மீனாவிடம் கொடுக்கக் கூடாது இதனால் தன்னுடைய வேலையை விட்டாலும் கூட பரவாயில்லை எக்காரணம் கொண்டு தன்னுடைய குழந்தையின் மீது மீனாவின் நிழல்கூட படக்கூடாது
என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்கிறாள்.
ஹேமா வேண்டும் என்றே ராஜாத்தியிடம் நல்லுறவை ஏற்படுத்தி கொள்கிறாள்…
ஹேமாவின் பேச்சு நடத்தை எல்லாவற்றையும் கண்ட ராஜாத்தியின் மனமோ மீனாவை விட இந்தப் பெண் சிறந்த மருமகள் என்னும் ஒரு எண்ணத்தை ஹேமா ஏற்படுத்துகிறாள்
அதனால் மீனாவை புறம் தள்ளியவர் ஹேமாவை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார்.
மீனாவிற்கு ஏற்கனவே குழந்தை இல்லையே என்ற ஆதங்கம் வேறு அடிமனதில் இருக்கிறது இப்பொழுது மாமியார் தன்னை சற்று தள்ளி வைத்துவிட்டு இளைய மருமகள் ஹேமாவை தலையில் தூக்கி வைத்து ஆட எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பிக்கிறாள்.
யாரிடமாவது மனம் விட்டுப் பேசலாம் என்று நினைக்கிறாள் மீனா ஆனால் அவளிடம் யாரும் பேச தான் முன்வரவில்லை
மாமியாரே இளைய மருமகளை வைத்து தாங்குகிறார் கணவரோ வேலை உண்டு தான் உண்டு என்று இருக்கிறார்
விஜய் வேலை முடிந்து வந்ததும் ஹேமாவிற்கு மட்டுமே நேரம் செலவிடுகிறான்
தன்னுடைய மனக் குமுறலை வெளிப்படுத்த முடியாத மீனா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இப்பொழுது தானாகவே தனியறையில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பிக்கிறாள்
தன் முன்னால் இருக்கும் சுவற்றில் தன்னிடம் கதை கேட்க யாரோ ஒருவர் இருப்பதாக எண்ணிக்கொண்டு தினம்தினம் அந்த சுவற்றில் தன்னுடைய குறைகளை கூறத் தொடங்குகிறாள்
அவளின் படுக்கை அறையை கடந்து சென்ற விஜய் யாருடன் மீனா பேசிக் கொண்டிருக்கிறாள் என்று கதவில் தெரிந்த இடைவெளி வழியே பார்க்க மீனாவும் சுவற்றை பார்த்து பேசிய வண்ணம் அழுது கொண்டிருக்கிறாள்
முதல்முறையாக தங்கள் வீட்டிற்கு வந்து தங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்த ஒரு பெண்ணை அனைவரும் தங்களின் சுயநலத்துக்காய் கைகழுவி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் விஜய் அங்கேயே சிலைபோல நிற்கிறான்.
தொடரும்...