கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ ( ழி)லி-12 முடிவு

Akila vaikundam

Moderator
Staff member
12


விழா சிறப்பாக முடிந்து உறவினர்கள் அனைவரும் உணவருந்தி விட்டு சென்று விட இங்கு வீட்டில் மிகப் பெரிய பூகம்பமே ஆரம்பித்தது


இனி குழந்தையை மீனாவிடம் கொடுக்கவே கூடாது என்று விஜய்யிடம் ஹேமா சண்டையிட்டாள்


துணைக்கு ராஜாத்தியையும் அழைத்துக் கொண்டாள்


அத்தை நீங்களே சொல்லுங்க அக்கா பண்றது சரியா என்னதான் பெரியம்மா பெரியப்பாவா இருந்தாலும் குழந்தை பெற்றது நான் தானே கொஞ்சமாவது அந்த உரிமையை எனக்கும் கொடுக்கணும் இல்ல



வந்திருந்தவங்க என்னை எவ்ளோ கேவலமா பேசிட்டு போறாங்க பார்த்தீங்கல்ல என்று


ராஜாத்திக்கு புரியத்தான் செய்கிறது ஹேமாவின் நிலைமை ஆனால் அவரால் என்ன செய்ய முடியும் அவருக்கு இரு பிள்ளைகளுமே முக்கியம் செல்வா மீனாவைப் பொருத்தவரை குழந்தைகள் இல்லாததால் சரணை அவர்களின் குழந்தையாக நினைக்கத் தொடங்கி விட்டனர்

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை
விஜய் ஆரம்பத்தில் கொடுத்த இடம் அப்படி.இன்று கைமீறி போய்விட்டது…

விஜயோ ஹேமாவிடம் கெஞ்சிக் கேட்கிறான் தயவு செய்து பிரச்சினையை இத்தோடு விடு


அவளோ விடுவதாக இல்லை குழந்தையை உடனடியாக நமது அறைக்கு எடுத்து வா இனி அவங்களின் அறையில் நம்முடைய மகன் தங்கபோவதில்லை என்று உறுதியாக கூறி விடு என்றும் சொல்கிறாள்.



விஜய்யும் ஹேமாவிற்கு இணையாக அவர்கள் எவ்வளவு ஊட்டி வளர்த்தாலும் குழந்தை நம்முடையது என்றைக்கு இருந்தாலும் அது நம்மிடம் தான் வரும் ஏன் தேவையில்லாமல் பேசுகிறாய்


அவர்களுக்கு உடனடியாக ஒரு குழந்தை வந்தாலே போதும் இந்த குழந்தையை கண்டு கொள்ளப் போவதில்லை அதன் பிறகு நாம் தானே அதை வளர்த்த போகிறோம் எதற்காக ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிது படுத்திக் கொண்டிருக்கிறாய் என்று அவளிடம் பதிலுக்கு சண்டையிடுகிறான்.


ஹேமா ஒரு முடிவு எடுக்கிறாள் இனி இவனிடம் பேசிப் பயனில்லை நாம்தான் காய் நகர்த்த வேண்டும் என்று யோசித்தவள் யோசிக்காமல் அவர்களுடைய ஆபீசுக்கு சென்று அவளுடைய வேலையை ராஜினாமா செய்கிறாள் அதுமட்டுமின்றி விஜய்க்கும் மாற்றல் கேட்கிறாள்.


மற்றவர்களுக்காக என்றால் இது நடக்காத காரியம் ஆனால் ஹேமா அங்கேயே பல ஆண்டுகாலம் வேலை செய்திருப்பதால் விஜய்க்கும் நல்ல பேர் இருப்பதால் சத்தமில்லாமல் உயரதிகாரி சம்மதிக்கிறார்..அவளிடமே எந்த ஊர் வேண்டும் என கேட்க
அது தமிழ்நாடு இல்லாமல் வேறு மாநிலமாக இருந்தால் நன்று என யோசித்து பெங்களூரை தேர்வு செய்கிறாள். விஜய்க்கு இது தெரியாத வாரு பார்த்து கொள்ள சொல்கிறாள்.

கடைசி நேரத்தில் சொன்னால் போதும் இப்பொழுது சொன்னால் அவன் கண்டிப்பாக ஆட்சேபனை தெரிவிப்பான் என்பதை கூறிக்கொண்டு வீடு வருகிறாள்.


அதன்பிறகு ஹேமா குழந்தையை உடனடியாக மீனாவிடம் இருந்து பெற முடியாது என்று புரிந்து கொண்டவள் மீனாவிடம் இணக்கமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.


அவ்வப்போது மீனாவிற்கு உதவுவது போலவே சரணை வாங்கி அவளிடத்தில் பழக்கப் படுத்த ஆரம்பிக்கிறாள்.


ஆனால் இந்த சில நாட்களில் தான் மீனாவை பற்றி நன்கு அறிந்து கொள்ளவும் முடிகிறது ஹேமாவால்


மீனாவின் நல்ல குணம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது அவளின் அன்பை ஒரு வட்டத்திற்க்குள் அடைக்க முடியாது என புரிகிறது

அவளின் பாசம் கருணை எல்லாமே ஹேமாவிற்கு புரியத் தொடங்குகிறது தான் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணும் அளவிற்கு மீனாவின் செயல்கள் நடத்தைகள் இருக்கிறது.இவ்வாறாக
மூன்று மாதம் கழி விஜய்க்கு முறையாக ப்ரமோஷன் உடன் டிரான்ஸ்பர் கிடைக்கிறது அதற்காக மூன்று மாத கால அவகாசம் அவனுக்கு கொடுக்கப் படுகிறது


அவனுக்கோ சற்று அதிர்ச்சி அதுவும் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து பெங்களூர் செல்ல வேண்டுமா என்று மிகவும் கவலை கொள்கிறான்... இப்பொழுது அவனுடைய பிரமோஷனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனுடைய வேலை பறிபோய்விடும் என்பது போல் ஹேமாவும் உயர் அதிகாரியும் சேர்ந்து செய்து வைத்திருக்கிறார்கள்.


இதை கேள்வி பட்ட மீனாவும் செல்வாவும் மன நிம்மதியின்றி தவிக்கின்றனர்.

இப்பொழுது விஜய்யையும் ஹேமாவையும் கூட இவர்களால் பிரிந்து இருக்க முடியும் ஆனால் சரணை கண்டிப்பாக பிரிந்திருக்க முடியாது.

எப்படி சென்று அவர்களிடம் சொல்வது நீங்கள் செல்லுங்கள் மகனை எங்களிடத்தில் விட்டுச் செல்லுங்கள் என்று…

தனிமையில் இருவரும் அழுது புலம்புகின்றனர் மீனாவிற்கும் செல்வாவும் செல்வாவிற்கு மீனாவும் ஆறுதலாக இருக்கின்றனர்.

மகனைப் பிரிந்து விடுவோம் என்ற ஏக்கத்தில் செல்வாவின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது முப்பத்தி ஆறு வயதை நாற்பத்தி ஆறு வயதாக காட்டுகிறது.


செல்வாவின் கம்பீரம் குறைந்தது வேகம் குறைந்தது சுறுசுறுப்பு குறைந்து ஏதோ நோயாளி போல் கூன் விழுந்த படி நடக்கிறான்

ஏனோ தானோ என்று வேலைக்குச் செல்கிறான் பணியில் கவனம் இல்லாததால் நிறைய தவறுகள் செய்ய அங்கே அவனுக்கு கெட்ட பெயர் உண்டாகுகிறது


விஜய் பணிமாற்றம் பற்றி கூறி இதோ ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகிவிட்டது

இப்பொழுது விஜய் பெங்களூர் செல்ல வேண்டிய கட்டாயம் அவன் செல்ல வில்லை என்றால் மிகப் பெரிய இழப்பீட்டை கம்பெனிக்கு இவன் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது

ஆயிற்று மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்து முழு மூன்று மாதம் முடிந்தது கடந்த ஆறு மாதத்தில் மீனாவை பற்றி ஹேமா நன்றாகவே புரிந்து கொண்டாள்


அது மட்டுமின்றி செல்வாவின் நிலையை கண்ட ஹேமாவிற்கு அவர்களின் மீது இரக்கம் வருகிறது இப்படி இருவரின் உயிரின் வலியுடன் நான் இங்கிருந்து செல்ல வேண்டுமா
அப்படி சென்று தான் என்ன சாதிக்க போகிறேன் என்றும் தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறாள்.


ராஜாத்திக்கும் கவலை தான் ஆனால் என்ன செய்வது மகனின் எதிர்காலம் போய்தான் ஆகவேண்டும் பெற்றவர்கள் குழந்தையை எடுத்துச் செல்கிறேன் என்று முன்வரும்போது தடுக்க நான் யார் என்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்

மீனா ஜாடைமாடையாக விஜயிடம் வந்து கேட்டு பார்க்கிறாள் ஹேமாவிடம் கேட்டு பார்க்கிறாள் விஜய் இப்பொழுது சூழ்நிலைக் கைதி மனைவியை மீறி ஒரு வார்த்தை கூட அவனால் சொல்ல முடியாது அப்படி சொன்னால் அவன் பாடு மிகப்பெரிய திண்டாட்டமாயிடும் எப்படி அவன் சென்று கூறமுடியும் நம்முடைய மகனை மீனாவிடம் கொடுத்து செல்லலாமா என்று அதனால் அவன் மௌனம் காக்கிறான்.


இங்கோ மீனாவும் செல்வம் ஒரு முடிவெடுக்கிறார்கள் அவர்கள் அங்கு சென்ற பிறகு இந்த வீட்டில் சரண் இல்லாமல் தங்களால் வாழ முடியாது அதனால் நாமும் ஏதாவது ஒரு கண்காணாத தேசமாக சென்று பிழைத்துக்கொள்ளலாம் இந்த வேலையை விட்டால் கூட பரவாயில்லை நம்முடைய தகுதிக்கு தகுந்தார்போல் சின்னதாக ஒரு வேலையை செய்து பிழைத்துக் கொள்ளலாம்


நீங்களும் வேலை மாற்றத்திற்கு வாய்ப்பிருந்தால் முயற்சி செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் வேலையை விட்டு விடுங்கள் என்று மீனா செல்வாவிடம் கூற செல்வாவிற்கு அதுதான் சரி என்று படுகிறது


இனி கண்டிப்பாக இந்த வீட்டில் சரண் இல்லாமல் செல்வாவாலும் வாழவே முடியாது அப்படி இருக்கும் பட்சத்தில் மீனா கூறுவது சரிதான் என்று அதற்கான முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தான்


இதோ இன்று இரவு பெங்களூர் செல்லும் விமானத்தில் விஜய்,ஹேமா,சரண் மூவரும் பெங்களூர் செல்கிறார்கள் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது

மீனாவிற்கு காலையிலிருந்து உள்மனம் சொல்லிக்கொண்டிருக்கிறது ஒருமுறை சென்று மீனாவிடம் விஜய் இடமும் நேராக பட்டென்று சரணை கேட்டால் கொடுத்து விட்டுச் செல்வார்கள்


நாம் ஜாடைமாடையாக கேட்பதால் தான் அவர்களுக்கு புரிவதில்லை நேரடியாகவே கேட்டு பார்த்தால் என்ன என்று தோன்ற நேராக அவர்களின் அறைக்குள் செல்கிறாள்.


அங்கோ எல்லாவற்றையும் சரி செய்தபடி விஜய்,ஹேமா இருவருமே மௌனமாக கட்டிலில் அமர்ந்திருக்க விஜயின் மனம் முழுவதுமே பாரமாக இருக்கிறது கிட்டத்தட்ட அவனுடைய வயது இப்பொழுது இருபத்தி ஒன்பது இதுவரை தன் குடும்பத்தை விட்டு அவன் பிரிந்தது கிடையாது


இப்பொழுது வேலைக்காக பெங்களூர் செல்கிறான் இனி எப்பொழுது இங்கே வருவான் என்று அவனுக்கு தெரியாது


இதுநாள் வரை இந்த வீட்டில் இருந்த சந்தோஷம் நிம்மதி எல்லாம் போவது போல அவனுக்கு தோன்றுகிறது


ஹேமாவும் எல்லாவற்றையும் தயார் செய்து குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருக்கிறாள்

இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட கார் வந்ததும் அதில் ஏறி சென்று விடுவார்கள் அந்த நேரத்தில் மீனா உள்ளே வர இருவருமே அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்


சாதாரணமாக பேச்சை ஆரம்பிக்கிறாள் மீனா பெங்களூர் போயிட்டு எப்ப வருவீங்க என்று


அதற்கு விஜய்யோ லீவ் எப்போ கிடைக்குதோ அப்போ எல்லாம் கிளம்பி வந்திடுவோம் அப்படி இல்லனா கூட முடிஞ்ச அளவுக்கு வாரம் ஒரு முறையாவது நான் வர பாக்கறேன்.

நீ மட்டும் வந்தா அது எப்படி சரியா இருக்கும் நீ வரும்போது ஹேமா சரண் எல்லாரையும் கூட்டிட்டு தான் வரணும்


ஆமா அங்க போனா சரண் என்னை மறந்திடுவானா என்று ஹேமாவை பார்த்து கேட்க ஹேமாவிற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை


மகன் அவளை மறக்க வேண்டும் என்றுதானே அவனை அவ்வளவு தூரம் அழைத்துச் செல்கிறாள் பதில் கூறத் தெரியாமல் ஹேமா தரையை பார்க்கிறாள்


உடனே கையிலிருக்கும் பிள்ளையோ இவளின் சத்தத்தை கேட்டு அம்மா என்று இவளிடம் கையை தூக்கி போட மறு பேச்சுப் பேசாமல் அவளிடத்தில் ஹேமா
கொடுக்கவும் தூக்கி கொஞ்சிய மீனா


சரண் இடத்தில் பட்டுகுட்டி வெளியூர் போறீங்களா...என்ன மறந்திடுவீங்களா பட்டு என்று உச்சி முகர்ந்தவள்


கண் கலங்க பட்டு நீ இந்த அம்மாவ விட்டுட்டு போறியா... நீ இல்லாம அம்மாவும் அப்பாவும் எப்படி உயிர் வாழப் போகிறோம் இந்தப் பட்டு தானே எங்களோட வாழ்க்கையோட ஆதாரமான நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கோம் இப்ப இந்த பட்டு எங்கள விட்டுட்டு போனதுக்கு அப்புறம் நாங்க எப்படி வாழப் போறோம் உன்னை மறக்க முடியாமல் நானும் உன் அப்பாவும் நடைபிணமா ஒரு வாழ்க்கை வாழ போறோம்….


ஏன் பட்டுமா நீ என் வயிற்றில் பிறக்கல அப்படிப் பிறந்து இருந்தால் யாரும் உன்கிட்ட இருந்து என்னை பிரிச்சிருக்க முடியாது இல்ல, இந்தப் பாவி வயிறு மலடா போயிருச்சுன்னு தானே நீ ஹேமா வயித்துல பொறந்த

அது ஹேமாவுக்கு புரியவே இல்ல நீ என் புள்ள நீ எனக்கானவன் உன்னை நான் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று அவனிடம் கூறுவது போல் ஜாடையாக பிள்ளையை மீனா கேட்க அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹேமாவும் விஜய்யும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்து நின்றனர்.

பிள்ளையை வைத்துக் கண் கலங்க பேசியபடி இருந்த மீனா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிள்ளையுடன் ஹேமாவின் கால்களில் விழுந்தாள்.


ஹேமா நான் என்ன தப்பு செஞ்சி இருந்தாலும் என்ன மன்னிச்சிடு உனக்கு என் மேல கோபம் இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சு பழி தீர்த்துக்கோ அதுக்காக பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிஞ்சி எங்களை நடைபிணமா ஆக்கிடாத….

சரண் இல்லாத வாழ்க்கையை எங்களால கண்டிப்பா வாழவே முடியாது

கண்டிப்பா நீங்க அங்க போய்த்தான் ஆகனும்னா நீங்க பிள்ளையோட என்னையும் கூட கூட்டிட்டு போயிடுங்க,
அங்கு ஒரு வேலைக்காரியா நான் இந்தப் பிள்ளையை பார்த்துகிட்டு
மீதி வாழ்க்கையை வாழ்ந்திடறேன்



அவர் இல்லாம கூட என்னால தனியா வாழ முடியும் ஆனா சரண் இல்லாம என்னால வாழ முடியாது…

அந்தக் கடவுளுக்கு தான் இரக்கம் இல்ல அதனாலதான் ஒன்பது வருஷம் ஆகி கூட என் வயிற்றை தரிசா போட்டு வைத்திருக்கான்

ஆனா உங்களுக்கு கூடவா என் மேல இரக்கம் இல்ல


நீங்க நினைச்சா சரணை என் கிட்ட இருந்து பிரிக்காம என் வாழ்க்கையை அழகாக்கலாமே...

தயவு செஞ்சு அவணை என்கிட்டே இருந்து பிடிச்சு கூட்டிட்டு போயிடாத என்று காலை பிடித்து கதறினாள்

மீனாவின் சிறுபிள்ளை தனத்தை பார்த்துக்கொண்டிருந்த விஜய்யோ கோபமாக என்ன பண்ணிக்கிட்டு இருக்க இது என்ன புது பழக்கம் கால்ல விழுகிறது என்று கடிந்து கொண்டவன் அவளை எழுப்பி அமர வைத்தான்.


சத்தம் கேட்டு ராஜாத்தி கேசவன் செல்வா அனைவருமே மீனா செய்யும் சிறுபிள்ளை தனத்தை கையாலாகாத தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


எல்லோருக்குமே தெரிகிறது மீனா செய்வது சிறுபிள்ளைத்தனம் என்று அவள் இப்படி நடந்து கொள்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டும் என்று கேட்கிறாள் இது எங்கேயுமே நடைமுறையில் வராது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் அவளின் வளர்த்த பாசம் அவளை இப்படி எல்லாம் பேச வைக்கிறது…

குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி மீனா கதறிக் கொண்டிருக்க அதை காண சகிக்காத செல்வா மீனாவின் தோள்களின் மீது கையை வைத்து அழுத்தி குழந்தையை கொடுத்துவிட்டு வா என்று கண் ஜாடை செய்தான்


மீனாவும் சத்தமாகவே இல்லங்க நான் வரமாட்டேன் எனக்கு இவங்க ஒரு பதில் சொல்ற வரைக்கும் நான் இங்கிருந்து வரமாட்டேன் என்று கூறியவள் திடீரென விஜயை பார்த்தவள் ஒரு கையில் குழந்தையும் மறுகையில் தனது புடவை முந்தியையும் விரித்து பிடித்தவள் யாசகம் கேட்பது போல் பிடித்துக்கொண்டு


விஜய் நீ எனக்கு ஒரு தடவை சொன்ன நியாபகம் இருக்கா உனக்கு எப்போ என்ன வேணாலும் கேளு அதை நான் கண்டிப்பா தருவேனு வாக்கு தந்தல்ல இப்போ கேக்கறேன்



இவனை எனக்கு குடுக்குறியா இவன் இல்லாம என்னால வாழ முடியாது நீ ஒருமுறை பிரச்சனைல இருந்தப்போ யாரையும் கேக்காம நான் உனக்கு உதவினேன்ல...அது போல இப்போ நீ எனக்காக உதவி பண்ணு... கண்டிப்பா நான் பண்ணின உதவியை சொல்லிக் காட்டறதுக்காக இதை சொல்லல ஆனா அந்த உதவிக்காக ஏதாவது செய்யணும்னு நீ ஒவ்வொரு முறையும் என்கிட்ட சொல்லவ உனக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன் அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்க போறேனோனு தெரியலனு புலம்புவல

நீஜமாவே என்னோட நன்றிகடனை தீர்க்கனும்னா உன் பையனை கொடுத்து தீர்த்துக்கோ விஜய் என்று அவனின் கைகளைப் பிடித்தபடி கெஞ்சத் தொடங்கினாள்.


விஜய்யால் மீனா கேட்கும் நன்றி கடனை எப்படி கொடுக்க முடியும் ஹேமாவின் அனுமதி இல்லாமல் பிள்ளை பெற்றவள் அவள் ஆயிற்று மீனா கேட்பதில் எந்த ஒரு நியாயமும் கிடையாது எப்படி அவனால் இதை செய்யமுடியும் என்று யோசித்தவன் அவளின் கைகளிலிருந்து தனது கையை உருவிக் கொள்ள வெளியில் அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வந்து தயாராக நின்றது.


கேசவனும் ராஜாத்தியும் டிரைவருடன் சேர்ந்து லக்கேஜ்களை எடுத்து வாகனத்தில் வைக்க அது வரை பொறுமை காத்துக் கொண்டிருந்த சரணுக்கு என்ன புரிந்ததா வீல் என கத்தி அழ தொடங்கினான்


அவன் அழுகை சத்தத்தை பார்த்து பொறுத்துக் கொள்ளாத செல்வா அவனை அணைத்தபடி முன் அறைக்கு சென்று சமாதானப்படுத்த மனமே இல்லாமல்
ஹேமாவும் விஜய்யும் வெளியே வர ஹேமா விஜயை பார்த்து குழந்தைகளை வாங்கு என்பது போல் ஜாடை செய்தாள்


விஜய்யோ தனது அண்ணனிடம் வந்தவன் அவனை ஒரு கையால் கட்டி அணைத்து அண்ணா அம்மாவை பாத்துக்கோ முடிஞ்ச அளவு சீக்கிரமா வர பாக்குறேன் என்ன சொல்றதுன்னு தெரியல நீ எனக்கு அண்ணன் உனக்கு எல்லாமே தெரியும் நான் சொல்லி தான் உனக்கு புரியனும்னு அவசியம் இல்லை என்று கூறியவன் அண்ணன் இடத்திலிருந்து தனது மகனை வாங்கினான் .


சரணோ எதோ நடக்கிறது என்று நினைத்து கதறி அழ

அவன் அழ அழவே விஜய் எடுத்துச் செல்ல

சரண் பிரிந்து செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாத மீனா உள் அறைக்குச் சென்று அழ ஆரம்பிக்க பின்னே சென்ற செல்வாவும் அவளை சமாதானப் படுத்துவதற்காக அவளை ஆறுதல் படுத்த ஒரு கட்டத்தில் அவனும் கதறி அழ ஆரம்பித்தான்.


ஒன்பது வருடங்களாக தனக்கு ஏன் ஒரு குழந்தை இல்லை இடையில் சரணை தங்களுடன் ஏன் பழக வைத்தாள் இப்பொழுது ஏன் சரணை எங்களிடமிருந்து பிரிக்கிறான், அவர்களின் வாழ்க்கையில் சரண் வராமல் இருந்திருந்தால் கூட குழந்தை ஏக்கம் வந்திருக்காது


இப்பொழுது ஒரு மழலையின் பாசத்தை காட்டி விட்டு அதை ஏன் பிடுங்குகிறான் என்று புரியவே இல்லை செல்வாவிற்கு…


காரில் ஏறி அமர்ந்த விஜய்க்கு தனது அண்ணனின் அழுகை சத்தத்தை கேட்டதும் காரிலிருந்து இறங்குவதற்காக கதவை திறக்க ஹேமா விஜயின் தொடை மீது கை வைத்து வேண்டாம் என்பதுபோல் தடுத்தாள்


ராசாத்தியும் கதவின் அருகே வந்தவள் அவனை உள்ளே அமர வைத்து கதவை பூட்டி அவனை நான் பார்த்துகிறேன் நீ போயிட்டு வா எல்லாம் கொஞ்ச நாள்தான் சரியாயிடும் என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்


அண்ணனின் அழுகைச் சத்தம் விஜயின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது இதுவரை அண்ணனை இப்படி பார்த்ததே கிடையாது தைரியமானவன் கம்பீரமானவன் தன்னுடைய குடும்பத்தை இன்றுவரை தோளில் தூக்கி சுமப்பவன்


அவளை கதற விட்டு தான் இங்கிருந்து செல்ல தான் வேண்டுமா கடவுளின் மீது அவனுக்கு மிகவும் கோபம் வந்தது


என்ன மாதிரியான கடவுள் எனக்கு கொடுத்த குழந்தையை என் அண்ணனுக்கு கொடுத்திருக்கக் கூடாதா அப்படி இல்லை என்றால் இவர்கள் பாசத்தை புரிந்து கொள்ளும் மனைவியாவது எனக்கு கொடுத்திருக்கக் கூடாதா என்று கடவுளை தான் திட்டி தீர்த்தான்


விமானம் நிலையம் செல்லும் வரை அண்ணனின் அழுகைச் சத்தம் காதுகளில் கேட்டுக் கொண்டிருப்பது போல் இருந்தது ஹேமாவிற்கு மனம் முழுவதுமே பாரமாக இருக்கிறது குழந்தை அழுது அழுது ஹேமாவின் மடியில் உறங்கி இருக்கிறான்

ஒரு வழியாக அவர்கள் பயணித்த வாகனம் விமான நிலையம் வந்து சேர்ந்தது.

வாகன ஓட்டுனரோ பின் இருக்கையில் இருந்த அவர்களுடைய லக்கேஜ்களை வெளியே எடுத்து வைக்க ஹேமா குழந்தையை மடியில் வைத்தபடி உள்ளேயே அமர்ந்திருந்தாள்

விஜய்யோ முதலில் கீழே இறங்கியவன் அவள் இடத்தில் இருந்து குழந்தையை வாங்குவதற்காக கை நீட்ட அவள் இல்லை என்பதுபோல் மறுத்தாள்

உடனே சுற்றும் முற்றும் பார்த்த விஜய்யோ மீண்டும் காரின் உள்ளே அமர்ந்து ஏர்போர்ட் வந்துருச்சு இறங்கு என்ன ஆச்சு என்று கேட்டாள் கேட்கும் பொழுதே அவனின் குரல் தழுதழுத்து இருந்தது.

நா வரல விஜய் நீ போயிட்டு வா என்று கூறினாள் உடனே நெற்றியை சுருக்கியவன் நீ வரலைன்னா என்ன அர்த்தம் நீதான இந்த ப்ரமோஷன் வேணும்னு ஹெட் ஆஃபீஸ் ல ரெக்வஸ்ட் கொடுத்த நீதானே பெங்களூரில் செட்டில் ஆகணும்னு சூஸ் பண்ணின இப்போ வரலைன்னா என்ன அர்த்தம் என்று கேட்டான்.


அங்க ரெண்டு உயிர் வலியில் துடிச்சிட்டு இருக்கும் போது அதை பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம என்னோட வழியை பார்த்து நான் போனா நான் எல்லாம் என்ன மாதிரியான பொம்பளை…

எனக்குதான் உங்களோட பாசம் புரியல உங்களோட ஒற்றுமை புரியல


உனக்குமா தெரியல?
என் கன்னத்தில் ரெண்டு அறை வைச்சு புரியவைத்து இருக்கலாம் இல்ல


அங்க ரெண்டு பேரும் இந்தக் குழந்தைக்காக துடிச்சி கிட்டு இருக்காங்க


அவங்க கிட்ட இருந்து இவனைப் பிரிச்சி கொண்டு போய் நான் என்ன பெருசா சாதிக்க போறேன்…


நம்ம சரண் ஒவ்வொரு தடவை சிரிக்கும் போதெல்லாம் அவங்களோட அழுகை சத்தமும் அந்த அழுகை மூஞ்சியும் தானே எனக்கு ஞாபகத்துக்கு வரும் அப்புறம் எப்படி நான் சந்தோஷமா இருக்க முடியும் சொல்லு


பாசமா இருக்கற அண்ணன் தம்பியை பிரிச்சாச்சி பெத்த புள்ளையா பார்த்துகிட்டே பெரியம்மா பெரியப்பாவை என் புள்ளைகிட்ட இருந்து பிடிச்சாச்சு

ஒரு அம்மா அப்பா கிட்டே இருந்து அவங்க செல்ல பையனை பிடிச்சாச்சு இது எல்லாம் செஞ்சும் கூட உன் மனைவிங்கற காரணத்துக்காக பொறுத்துட்டு இருக்க இப்போ கூட நான் மனசு மாறலனா நான் என்ன மனுஷி…

அந்த வீடு என்னை நல்லா தானே பாத்துக்கிச்சு அந்த மனுஷங்க எல்லாருமே என்னை உள்ளங்கையை வச்சு தான தாங்கினாங்க என்னை தினம் தினம் தலையில் வைத்து தானே கொண்டாடினாங்க அவங்களை எல்லாம் நான் ஏன் பிரியனும்... நான் போறேன் விஜய் நம்ம வீட்டுக்கு போறேன்


நீ பெங்களுர் போய் வேலை செய்ய முடியாதுனு சொல்லி ஃபார்மாலிட்டீஸ் எல்லாத்தையும் முடிச்சுட்டு வா ஒருவேளை அவங்க காமன்ஷேசன் எத்தனை லட்சம் கேட்டாலும் நாம கொடுத்துக்கலாம் உறவுகளை பிரிந்து அப்படி நாம தனியா சம்பாதிச்சி வாழவேணாம் என்று கூற


உண்மையாவா சொல்ற என்று விஜய் கண்களில் நீருடன் அவளைப் பார்த்து கேட்க


சத்தியமா சொல்றேன் விஜய் நான் இப்போ நம்ம வீட்டுக்கு போக போறேன் என்று கூற அவளை இழுத்து சேர்த்து அணைத்தவன் முகமெங்கும் முத்தமிட்டான் பிறகு இருக்கமாக கட்டி அணைத்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தவன் சந்தோஷமாக ஏர்போர்டின் உள்ளே சென்றான்.

இங்கு வீட்டிலோ விஜய்க்கும் மீனாவிற்கும் அழுகை மட்டு பட தொடங்கியது நிதர்சனம் புரிந்தது கடவுள் தங்களுக்காக ஒரு குழந்தையை கொடுத்தால் மட்டுமே அவர்களின் மனம் இனி சாந்தியடையும்


அவர்களின் அழகையை பார்த்து புரிந்து கொண்ட ராஜாத்தி அவர்களிடத்தில் வந்து என்ன மன்னிச்சிடுங்க எப்பவோ நீங்க ஒரு குழந்தையை தத்து எடுக்க ஆசைப்பட்டிங்க நான் தான் அப்போ தடுத்தேன்

இப்போ நீங்க விருப்பப்பட்டா தாராளமா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கோங்க என்று கூற

செல்வாவோ வேண்டாம் என்பது போல் மறுத்தான்


அம்மா இனி யார் மேலயும் பாசம் வைக்க நான் தயாரா இல்ல அதனால இனிமே இந்த குழந்தையை பற்றிய பேச்சே இந்த வீட்டுல வேண்டாம்


எனக்கு மீனா குழந்தை மீனாக்கு நான் குழந்தை


நாங்களும் ஏதாவது வெளியூரா பாத்து போகலாம்னு இருக்கோம்,விஜய்,சரண் இல்லாத இந்த வீட்ல இனி என்னால இருக்க முடியாது என்று கூற


ராஜாத்தி கோபமாக அப்போ நானும் அப்பாவும் என்னடா பண்றது இந்த பெரிய வீட்டில் இருந்து கிட்டு ஒருத்தர் முஞ்சை இன்னொருத்தர் பாத்து கிட்டு இருக்கவா... அன்னைக்கு ரொம்ப சின்ன வீட்டில் இருந்தோம் எல்லாருமே அவ்ளோ சந்தோஷமா இருந்தோம் இன்னைக்கு எங்க பார்த்தாலும் பணம் இருக்கு பெரிய வீடு இருக்கு ஆனா ஒருத்தர் கூட சந்தோஷமா இல்ல

நாம அந்த பழைய வீட்டுக்கே போலாம் டா இனி எப்படியும் சின்னவனும் ஹேமாவும் இங்க வரப் போறதில்லை எதுக்காக நமக்கு இவ்ளோ பெரிய வீடு என்று ராஜாத்தி கூற


செல்வாவோ ஏதா இருந்தாலும் காலைல யோசிச்சு சொல்றேன் என்று கூறியபடி அவரவர் அறைகளில் அடைந்து கொண்டனர்


சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்க கட்டிலில் ஓரத்தில் சாய்ந்து கொண்டிருந்த மீனா சரண் அழுகிற மாதிரி இருக்குங்க என்றாள்


அதற்கு அவனும் ஆமா எனக்கும் அவன் அழறது போல கேக்குது என்றவன் யோசனையாக எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் என்று ஆச்சரியத்துடன் செல்வா கேட்க மீனா வேகமாக கதவை திறக்க வாசலில் நின்றபடி சரண் அழுதுகொண்டிருந்தான்.


டேய் பட்டு என்று அவனை அள்ளி கொஞ்சிய மீனா நீ எப்படி இங்க என்று ஹாலில் தேட ஹேமா சோபாவில் அமர்ந்து கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராஜாத்திக்கும் கேசவனுக்கு முகமெல்லாம் பல்லாக புன்னகையில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

என்ன ஹேமா நீ இங்கிருக்க பெங்களூர் போகலயா என்று மீனா கேட்க


அதான் அழுதே போக விடாம பண்ணிட்டீங்களே அப்புறம் என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க என்று போலியாக கோபித்துக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றாள்


சரண் என் கிட்ட இருக்கான் வாங்கிட்டு போ என்று கூற

அவனை உங்க புள்ளன்னு தான சொன்னீங்க அப்புறம் எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க நீங்களே வச்சுக்குங்க உங்க பிள்ளையை என்று கூறிவிட்டு அவளின் அறைக்குச் செல்ல


மீனாவிற்கும் செல்வாக்கும் சந்தோஷமே தாளவில்லை மீனா ஆனந்தக் கண்ணீரில் பிள்ளையை கொஞ்சியபடி செல்வாவின் நெஞ்சினில் சாய செல்வாவோ சந்தோசத்தில் இருவரையும் ஒரு போல சேர்த்து அணைத்தான்.


அதன் பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே தங்கியது முறையாக பெங்களூர் சென்ற விஜய்க்கு ஆறுமாதம் பணி செய்து பின் விரும்பிய இடத்தில் பணி செய்யலாம் என்று அவனுக்கு அறிவுறுத்த ஆறுமாதம் பொறுமையாகப் அங்கேயே தங்கி வேலை பார்த்தான்

இடையில் ஓரு முறை கூட இங்கு வரவில்லை... ஹேமா அவனை வர சொல்லி சண்டையிட்டால் நீதானே என்னை இதுபோன்ற ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய் அதனால் இது உனக்கான தண்டனை என்று சிரித்தபடியே கூறினான்,அத்தோடு இல்லாமல் யாரும் தன்னை தேடியும் வரக்கூடாது என்று அன்பு கட்டளையையும் வைத்தான் அதனால் யாரும் அவனைத் தேடிச் செல்லவும் இல்லை.

இப்படியாக விஜய் அவனின் பணியை சிறப்பாக செய்து விட்டு மீண்டும் கோவைக்கு மாற்றலாகி வந்தான்.

அவன் வரும் நாளை வீட்டில் அனைவருமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவன் உள்ளே வரவும் ராஜாத்தி அவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க
சரணோ இப்பொழுது நடக்கத் தொடங்கியிருந்தான் ஓடி வந்து விஜயின் காலை கட்டிக்கொள்ள பாசத்துடன் தனது மகனை தூக்கி கொஞ்சியவன் தனது மனைவி எங்கே என்று தேட

அவளோ இவனை கண்டு பொய் கோபத்துடன் உள்ளறைக்கு சென்று ஒளிந்து கொண்டாள்

பிறகு தன் அண்ணனை வந்து பாசமாக இருக்கி கட்டி அணைத்தவன் சாரி அண்ணா உங்களுக்காகவாது ஒருமுறை நான் கோயம்புத்தூர் வந்திருக்கலாம் என்று கூறினான்

அதற்கு செல்வாவும் பரவாயில்லை அதான் எல்லா வேலையும் முடித்துவிட்டு ஒரேடியா இங்க வந்துட்டல்ல அப்புறம் எதுக்கு விடு என்று கூற

அவனின் அண்ணியை கண்களால் தேடினான் கடைசியாக அழுது அல்லவா வழி அனுப்பி வைத்தாள்
எப்படி அவளை ஏதிர் கொள்வது என இவன் தயங்கி நிற்க மீனாவும் சற்று தயங்கிய படியே அவனின் எதிரில் வந்தாள், முகத்தில் தனியாக ஒரு களை இருந்தது...என்ன அது என்று ஆராய்ந்த படியே

அவளைப் பார்த்து என்ன மீனா புதுசா என்ன பார்த்து வெட்க படுற மாதிரி இருக்கு என்று கேலி பேசிய படி முன்வர அப்பொழுதுதான் கவனித்தான் மீனாவின் வயிறு சற்று மேடிட்டு இருப்பதை ஆச்சரியத்துடன் அவன் அண்ணனை பார்க்க அவன் அண்ணன் வெட்கப்பட்டுக் கொண்டு மீனாவின் பின்னே ஒளிய

இது எப்போ என்று அவன் தாயைப் பார்த்து விஜய் சந்தோஷமாக கேட்க


முழுசா நாலு மாசம் ஆச்சு என்று ராஜாத்தி கூறினார்


நாலு மாசமா வயிறு கொஞ்சம் பெரிசா தெரியுதில்ல என்று ஆச்சர்யமாக விஜய் கேட்க


ஒண்ணா இருந்தா சின்னதா இருக்கும் இங்க இரட்டை குட்டி இருக்குல்ல என்று தாய் கூற


நிஜமாவா என்று மீனாவை பார்த்து கேட்க வெட்கப்பட்டு கணவனின் பின்னே ஒளிவது அவளின் முறை ஆயிற்று


சரியாக ஆறு மாதம் கழித்து மீனா அழகாக இரட்டை பெண் பிள்ளைகளை மீனா பெற்றெடுக்க ஹாசினி, ஹரிணி எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் இப்பொழுது ஹேமா இரண்டாவது குழந்தைக்காக கருவுற்று இருக்கிறாள்.

மீனாவால் மூவரையும் வைத்து சமாளிக்கவே முடியவில்லை மூவரும் மாறி மாறி குறும்பு செய்து கொண்டே இருக்க இப்பொழுது ஹேமா இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அக்குழந்தைக்கு சரண்யா என்று பெயர் சூட

ராஜாத்திக்கும்,மீனாவிற்க்கும் நாலு பேரையும் மேய்க்கும் வேலை தான்
ஹேமாவோ குழந்தைகள் விஷயத்தில் தலையிடுவதே இல்லை இப்பொழுது கணவனின் ஷேர் மார்க்கெட் பாத்துக் கொள்வது அவள் தான்…

இப்படியாக சரண் பள்ளிக்கு செல்ல தொடங்கியிருக்கிறான்

ஒரு மாலை வேளையில் மீனா தனது மாமியாரிடம் எப்படியோ அத்தை ஒரு ஆளு ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சி
இனி அடுத்தடுத்து போக ஆரம்பிச்சுடுவாங்க உங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் நிம்மதி என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது களைப்பாக ஹேமா வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள் பின்னாடியே வேகமாக விஜய் ஓடிவர என்னாச்சு ஹேமாவிற்கு என்று கேட்க விஜய்யோ ஹேமா கருவுற்று இருப்பதாக கூறுகிறான் உடனே மீனாவோ ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் மூன்றாவதாகவா என்று கேட்க

மூனாவது,அப்புறமா நாலாவது...டுவின்ஸ் என்று தனது இருவிரலை ஸ்டைலாக ஆட்டி காட்ட

மீனா தான் சரிசரி இதான கடைசி நாலோட ரெண்டு ஆறா வளர்த்த போறோம் அவ்வளவு தானே என்று மகிழ்ச்சியாக கூற…


ம்ம்... இன்னும் நாலு கூட பெத்துக் கொடுப்பேன் ஒழுங்கா பெங்களூர் போக வேண்டிய என்னை கால புடிச்சு கெஞ்சி போகவிடாம பண்ணுங்க இல்ல அதனால வருஷத்துக்கு ரெண்டு பெத்து கொடுத்துக்கிட்டே இருப்பேன்


அவங்களை எல்லாம் வளர்த்தறது தான் நான் வாழ்க்கை பூரா உங்களுக்கு குடுக்கற பனிஷ்மென்ட் என்று கூறியபடி உள் அறைக்குச் செல்ல


மீனாவோ தனது தலையில் கை வைத்தபடி விஜயைப் பார்த்து தெரியாம அன்னைக்கு பெங்களூர் போகவிடாம பண்ணிட்டேன் தயவு செஞ்சு நீ மட்டுமாவது போ நாட்டோட ஜனத்தொகையாவது கொஞ்சம் குறையும் என்று கூற விஜய்யோ போங்க அண்ணி என்னை வெட்கப்பட வைக்கறதே உங்க வேலையா போச்சி என்று கூறியபடி அவனின் அறைக்குள் ஓட

இங்கு நான்கில் ஒன்று கத்த ஆரம்பித்தது அம்மா இந்த சரணை பாரு எல்லாரையும் அடிச்சுகிட்டு இருக்கான் என்று கூற

ராசாத்தியை பார்த்த மீனாவோ அய்யோ அத்தை இவங்களையே என்னால சமாளிக்க முடில இன்னும் ரெண்டு வரப் போகுது அவங்களையும் சேர்த்து எப்படி தான் நான் சமாளிக்க போறேன்னு தெரியல என்று சந்தோஷத்தோடு கூறியவள் சண்டையிடும் குழந்தைகளை பிரித்து விட ஓடினாள்.


ஒரு குழந்தைக்கு தாயாக மாட்டோமா என்று காத்திருந்த மீனாவிற்கு இப்பொழுது அரை டஜன் பிள்ளை செல்வத்தைக் கொடுத்து அந்த ஆண்டவன் அவளை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாம் அவர்களிடமிருந்து விடை பெறுவோம்

முற்றும்

அகிலா வைகுண்டம் ❤️
 
Top