2
அதன்பிறகு அனைவருமே காலை டிஃபனை முடித்து விட்டு கிளம்பி வெளியே வர
ராஜாத்தியா பெரியவனிடம் செல்வா நீயும் விஜயும் கொஞ்சம் முன்னாடி மெதுவாப் போங்க
நானும் அப்பாவும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வரோம் என்று கூற சரி என அவன் தலையை ஆட்டியபடி தம்பியை வாகனத்தை எடுத்துச் சொல்லி பின்புறம் அமர
இளையவன் விஜய் அம்மா ஏன் தனியா போகனும் வாங்க எல்லாருமே சேர்ந்து போலாம் என்று கூப்பிட
புரியாம பேசாத டா எல்லாரும் ஒரே மாதிரி சேர்ந்து போனா அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது
ஏன் சேர்ந்து போறிங்க,எதுக்கு போனிங்கனு வந்து கேட்டுகிட்டே இருப்பாங்க நீங்க ரெண்டு பேரும் முதல்ல போனீங்கன்னா பிள்ளைங்க எங்கயோ தனியா போகுதுகனு விட்டிடுவாங்க
என்னையும் அப்பாவையும் எங்க போறிங்கனு கேட்டா சும்மா கோவிலுக்கு போறேன்னு சொல்லிடுவேன் இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது டேய் பெரியவனே அக்கம் பக்கத்துல இருக்கறவங்க கண்ணெல்லாம் ஒரு போல கிடையாதுடா உன் தம்பி கிட்ட கொஞ்சம் சொல்லி புரியலை என்று அவனிடம் கூற
என்னோவோம்மா எல்லாத்துக்கும் ரெடியா ஒரு காரணம் வச்சி இருக்கீங்க என்ற விஜய் டேய் அண்ணா போகலாமா?
என்று கேட்க
எல்லாத்துக்கும் அம்மா கிட்ட கூட கூட பேசிலனா உனக்கு இன்னைக்கு நாள் போகாதே என்று கூறிய செல்வா அழகாக முழுகை சட்டை போட்டு டக் இன் செய்த படி ஃபார்மல் உடை அணிந்திருந்தான்
இளையவனா அதற்கு நேர்மாறாக முட்டி பகுதியில் சிறிது வெட்டபட்ட ஜீன்ஸூம் காலர் இல்லாத ஒரு டீ ஷர்ட்டும் அணிந்து அவனது கூலிங் கிளாசை முன்புறம் நெஞ்சு பகுதியில் ஸ்டைலாக மாட்டியிருந்தான். ஹெட்போனை காதில் மாட்டிய படி மொபைல் போனை பாக்கெட்டில் வைத்திருந்தவனை பார்த்த செல்வா
கோயிலுக்கு வரும்போது கூட கொஞ்சம் நீட்டா ட்ரஸ் பண்ண மாட்டியாடா என்ற பெரியவனிடம் இளையவன்
பொண்ணு பார்க்கும் போது கூட நீ நீயா டிரஸ் பண்ண மாட்டியா ஏதோ இன்டர்வியூக்கு போற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு என்று கேலி செய்ய
உன்னை திருத்தவே முடியாது கொஞ்சம் மெயின் ரோட்டல ஏதாவது இளநீர் கடை இருந்தா நிறுத்து அம்மா அப்பா வந்ததும் சேர்ந்து போலாம் என்று செல்வா கூற
என்னடா அண்ணா இளநி எல்லாம் வாங்கித் தர்ற கைல காசு வச்சிருக்கியா என்று கிண்டல் செய்ய
சொன்னதை செய்டா போடா என்று மூத்தவன் அவளின் தோளில் தட்டி வாகனத்தை இயக்க வைத்தான் இங்கு ராஜாத்தி அவர்கள் சென்ற ஐந்து நிமிடம் கழித்து கதவை பூட்ட வெளியே வர
அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் எங்கக்கா காலையிலேயே கிளம்பிட்டீங்க என்று கேட்க
அவரோ ஒன்னும் பாக்யா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையா அதான் மருதமலை வரைக்கும் போயிட்டு வரலாம்னு நானும் அவரும் கிளம்பியிருக்கோம் என்று சிரித்தபடியே கூற
பிள்ளைகள் கூட எங்கேயோ காலையிலேயே கிளம்பி போனத பார்த்தேன் என்று விடாமல் அந்தப் பெண்மணி கேட்க
அதற்கு ராஜாத்தி வயசு பிள்ளைங்க அதுக எங்காவது போகும்ங்க அதுக எங்க போகுதுனு சொல்லிட்டா போறாங்க எங்க போயிட்டு வரோம்னு வந்து சொன்னால்தான் உண்டு சரி பாக்யா நான் கிளம்புறேன் வெயில் ஏறதுக்குள்ள போயிட்டு வரனும் என்று அந்த பெண்மணியுடனான பேச்சை அத்தோடு நிறுத்தி அனுப்பி வைத்தார்.
பாக்யா சென்றதும் தனது கணவரிடம் ஒரு நிமிஷம் இங்க வந்து இப்படி உக்காருங்க என்று வண்டியை இயக்கி தயாராக இருந்த கேசவனை அழைத்தார்.
கேசவனுக்கு ராஜாத்தியை பற்றி நன்கு தெரியும் அவர் சில விஷயங்களில் அதிகம் சகுனம் பார்ப்பார் வெளியில் கிளம்பும் போது இப்படி யாராவது கேட்டு விட்டால் சற்று நேரம் அமர்ந்து விட்டு அதன் பிறகு தண்ணீர் அருந்திய பின் தான் வெளியே செல்வார் அதற்காக தான் இப்பொழுது கேசவனை கூப்பிடுகிறார் அதை புரிந்து கொண்டவர் எதுவுமே பேசாமல் வீட்டின் முன்புறம் இருந்த சிறிய திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டார்
கதவை திறந்து உள்ளே சென்று ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தவளிடம் வேண்டும் என்றே எதுக்கு பாக்யா இப்போ தண்ணி எல்லாம் என்று கேட்க
நீங்க கொஞ்சம் பேசாம இருங்க வெளியே போகும் போதே எங்க போறேன்னு கேட்டாச்சு போற இடம் விளங்குமா அறிவு வேணாம் அதுதான் எங்கேயோ போறோம்னு தெரியுதுல அப்புறம் என்ன வந்து கேள்வி கேட்காட்டி நல்ல பொம்பளைங்க என்று பாக்கியத்தை தீட்டியவர்
தண்ணி குடிச்சாசின்னா சொம்ப குடுங்க முதல்ல என்றபடி. அவரிடமிருந்து சொம்பை வாங்கி உள்ளே வைத்து கதவை பூட்டியவர் வேகமாக வந்து வாகனத்தில் ஏறி அமர்ந்தார்.
சீக்கிரமா வண்டியை எடுங்க வேற யாராவது வந்து கேட்கறதுக்குள்ள கிளம்பலாம் என்று அவசரப் படுத்த
அவரும் சரி என்று தனது டிவிஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்தபடி தனது மனைவியை அழைத்துக்கொண்டு மருத மலையை நோக்கிப் பயணித்தார்.
கோவிலுக்குச் செல்லும் பாதி தூரத்திலேயே தனது இரு மகன்களையும் கண்ட கேசவன் வண்டியை அவர்களிடத்தில் விட்டார்.
அவர்கள் இருவரும் இளநி கடையின் முன்பு வண்டியை நிறுத்திய படி போகும் வருபவர்களை எல்லாம் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
எதுக்குங்க போற வழியில நிறுத்துங்க என்று ராஜாத்தி கணவனிடம் கோபப்பட
இரண்டு பிள்ளைகளும் இங்கே தான் நிக்கறாங்க அவங்கள வீட்டுக்கு நீயும் நான் அங்க போயி என்ன பண்றது என்று அவர் திருப்பி இவரிடம் கோபப்பட
சரி சரி எதுக்கு இப்போ ரோட்ல கத்துறீங்க புள்ளைங்க நிக்கறாங்கனு பொறுமையா சொன்னா நான் புரிஞ்சுக்க மாட்டேனா என்று அவர் சமாதான கொடியை பறக்கவிட கேசவனும் நீ சரியான ஆளுதான் ராஜாத்தி...ம்ம்...இறங்கு ஒரு இளநீ குடிச்சிட்டு போகலாம்…
காலைலேயே இளநீயா எனக்கு வேணாம் என்று அவர் பிள்ளைகளிடம் வந்தவர்
ஏண்டா கோவிலுக்கு தான போக சொன்னேன் இதென்ன புது பழக்கம் ரோட்ல நின்னுகிட்டு
என்று கடிந்து கொள்ள
விஜயோ முந்திக்கொண்டு ஏன் கேக்கமாட்டிங்க நான் போகலாம் னு தான் சொன்னேன் உங்க மூத்த புள்ளைக்கி தான் உங்கள விட்டுட்டு வர மனசு வரல அதான் வெயிட் பண்ணறோம் என்று கூற
சரி அதான் நாங்க வந்துட்டோம்ல இப்போ எல்லாரும் சேர்ந்து போலாமா என்று ராஜாத்தி கேட்க சரி வாங்க போகலாம் என்றபடி நால்வரும் சந்தோஷமாக மருதமலை சென்றனர்
அடிவாரத்தில் இரு வண்டிகளுக்கும் டோக்கன் பெற்றவர்கள் நேராக வண்டியை மேலேயே எடுத்துச் சென்றிருந்தனர்.
புதிதாக கட்டப்பட்டு இருந்த ராஜ கோபுரத்தை பார்த்து ராஜாத்தி வாய் திறந்தார் எங்க எவ்ளோ அழகா கட்டி இருக்காங்க பாருங்க பாக்குறது ரெண்டு கண்ணு பத்தாது என்று கூற
கேசவனும் ஆமா ராஜாத்தி ரொம்ப அழகா கட்டியிருக்காங்க என்று அவரும் சொல்ல அனைவரும் ராஜகோபுரத்தின் வழியாக நடந்து சென்றனர்
அங்கு ஏற்கனவே பெண் வீட்டினர் தயாராக வந்திருந்தனர் மீனாவின் தாய் தகப்பனார் அவளின் கடைக்குட்டி தம்பி இந்த வரனை பேசி முடிக்க உதவிய கல்யாண தரகர் என அனைவருமே இவர்களுக்காக முன்மண்டபத்தில் காத்துக்கொண்டு இருந்தனர்
இவர்களை கண்டதுமே ப்ரோக்கர் எழுந்து இவர்களை நோக்கி வர செல்வராகவனை விட விஜயராகவன் தான் அண்ணனுக்கான எதிர்கால மனைவியை நேரில் காண ஆர்வமாக இருந்தான்.
போட்டோவில் பெண் மிகச் சிறு பெண்ணாக தெரிந்ததால் நேரில் பார்க்க எப்படி இருப்பாள் ஒருவேளை நேரிலும் மிகவும் குட்டிப் பெண்ணாக இருந்தால் தனது அண்ணனிடம் பேசி திருமணத்தை நிறுத்தி விட வேண்டும்
என்று எண்ணியிருந்தான்.
மீனாவும் போட்டோவில் பார்த்ததை போலத்தான் நேரிலும் மிகவும் சிறு பெண்ணாகக் காட்சியளித்தாள் அவளுக்கு தற்பொழுதுதான் பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது தொடங்கியுள்ளது வளர்ச்சியும் அவ்வளவாக இல்லை ஒரு ஐந்தடி போல்தான் இருந்தாள்.
மிகவும் ஒல்லி ஊதினால் பறந்து விடுவாளோ என்பது போல இருந்தது அவளின் தோற்றம்
மீனாவையும் செல்வராகவனையும் அருகில் அருகில் வைத்துப் பார்த்தால் ஏதோ அக்கா மகள் தாய்மாமனை போல் தோன்றும் அது மாதிரியாக இருந்தது
விஜயராகவன் அவன் உயரத்துக்கு தகுந்த உடல் வாகு கம்பீரமான ஆண் மகன் மீனாவோ நேரெதிர் பூஞ்சை உடம்பு சிறுபிள்ளை போன்ற தோற்றம்
அவளின் தோற்றத்தை பார்த்ததுமே ராஜாத்திக்கு என்ன தோன்றியது என்றால் இந்தப் பெண் எப்படி தனது மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தான் தோன்றியது
ஆனால் அதைக் காரணம் காட்டி பெண்ணை வேண்டாம் என்று கூறி விட்டால் மறுபடியும் மகனுக்கு பெண் தேட முடியாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்ட ராஜாத்தி மௌனம் காத்தாள்…
செல்வாவிற்கு மீனாவிடம் எந்த குறையும் தெரியவில்லை பார்க்க சிறு பெண் போல் தெரிகிறாள் அது மட்டும் தான் அவளின் படிப்பு வயது தெரிந்து கொள்ள அவனுக்கு பெரிதாக நாட்டமில்லை தனது தாயின் முடிவு எதுவோ அதுதான் அவனின் முடிவு ஏனென்றால் கடந்தை மூன்று ஆண்டுகளாக அவனது தாய் பல பெண்களைப் பார்த்து விட்டார்
சில சமயம் இவனையும் கூப்பிட்டு சென்றிருக்கிறார் ஆனால் பல பெண்கள் அவனை நிராகரித்ததால் தான் எந்த பெண்ணையுமே நிராகரிக்கக் கூடாது என்று அவன் ஒரு கொள்கை முடிவு எடுத்திருந்தான்
அது சாதகமாக போய்விட்டது ராஜாத்திக்கு
தனது மகனின் அருகில் வந்தவர் உனக்கு பொண்ணு புடிச்சிருக்கா செல்வா என்று கேட்க அவனோ
பிடிச்சிருக்கு அம்மா ஆனா ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியறா அதான் ஒரு மாதிரி இருக்கு
எல்லா பொண்ணுகளுமே கல்யாணத்துக்கு முன்னாடி சின்ன பொண்ணுக மாதிரிதாண்டா இருப்பாங்க கல்யாணத்துக்கப்புறம் ஒரு குழந்தை பிறந்ததுனு வெச்சுக்கோ உனக்கே அக்கா மாதிரி ஆயிடுவாங்க அதனால இது போல ஒல்லியா இருக்கிற பொண்ணா இருந்தா பின்னாடி ஓரளவுக்கு சரியா இருக்கும்
எல்லாம் சரி வயசு தான் கொஞ்சம் இடிக்குதும்மா வரும்போதுதான் விஜய் சொன்னான் எனக்கும் பொண்ணுக்கும் ஒன்பது வயசு வித்யாசம்னு
இது அன்னைக்கு போட்டோ அனுப்பும்போதே தரகர் சொல்லியிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்
அப்பவும் அவர் கிட்ட கேட்டேன் போட்டோல ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுதேனு
அவரு தான் இது ரொம்ப பழைய போட்டோ பொண்ணு இப்போ பாக்குறதுக்கு நல்லா வாட்ட சாட்டமா இருக்கும்னு பேசி மழுப்பி விட்டார்
இப்போ எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு மா எனக்கு இது சரி வராது னு தோணுது நீங்க சொல்லிட்டு வாங்க நானும் தம்பியும் அப்படி ஓரமா இருக்கிறோம் என்று கூறியபடி செல்வா தனது தம்பி வாகனத்தை நிறுத்தி இருக்கும் இடத்தை நோக்கிச் செல்ல
ராஜாத்திக்கு வந்ததே ஒரு கோபம் விஜய்யின் மீது
நேராக வந்தவர் யோசிக்காமல் யாரும் பார்க்காத வண்ணம் விஜயின் முழங்கைக்கு மேலான மிருதுவான இடத்தை பிடித்து திருகி பிடித்தார் நன்கு வலிப்பது போல…
அவன் வலியில் கத்துவதற்குள் பல்லைக் கடித்தபடி கத்தின அப்படியே கன்னத்துல ரெண்டு வச்சிடுவேன் பொது இடம்னு கூட பாக்க மாட்டேன் என்று அவனுக்கு மட்டும் கேட்பது போல் கோபமாக ராஜாத்தி சொல்ல வலியை தாங்கியபடி தனது தாயிடம் இருந்து தன் கையை உருவி எடுத்தான்.
என்னமா இது இப்படி வலிக்கிறது போல கிள்ளறீங்க…
பின்ன நீ பண்ணி வச்சதுக்கு உன்ன என்ன பண்ணறது….அவ்ளோ தூரம் சொல்லிவிட்டேன் வாய் மூடிட்டு இருக்கனும்னு கேக்காம
எல்லாத்தையும் அண்ணன் கிட்ட உளறிக்கொட்டி வச்சிருக்க இதுக்குதான் அப்பவே நான் சொன்னேன் நீ வரவேணாம்னு
நானும் அவனும் வந்து இருந்தா இன்நேரம் எல்லாம் பேசி முடித்து இருப்பேன் தெரியுமா இப்போ எப்படி நாம் மூஞ்சிக்கு நேரா போய் என் பையனுக்கு பொண்ணு பிடிக்கலனு சொல்லறது….
இவ்வளவு தூரம் வந்ததுக்கப்புறம் என் பையனுக்கு பொண்ணு பிடிக்கலனு போய் சொன்னேன்னு வெச்சுக்கோங்க அந்த தரகர் இனிமே உங்க அண்ணனுக்கு ஒரு பொண்ணு கூட பார்க்க மாட்டாரு
அதுக்கு அப்புறம் எப்படிடா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது ஏற்கனவே அவனுக்கு இருபத்தியெட்டு வயசு ஆச்சு இன்னும் ஒரு பொண்ணு கூட அமைஞ்சி வரலையேனு நான் கவலை பட்டு கிட்டு இருக்கேன்
இப்போ எல்லாம் அமைஞ்சி வரும் போது வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்கே...
அம்மா அண்ணனுக்கு பிடிக்கலைனு சொன்ன நான் என்ன பண்ணுவேன் எதுக்காக என்கிட்ட கோவ படுறீங்க
நீ தான உன் அண்ணன் கிட்ட சொல்லி வச்சிருக்க பொண்ணு உன்ன விட ரொம்ப சின்ன பொண்ணு கட்டிக்காதனு
நான் எப்போமா அப்படி சொன்னேன்…
வரும் போது சாதாரணமா கேட்டேன் பொண்ணு புடிச்சிருக்கானு
அதுக்கு அவன் எனக்கு எந்த ஐடியாவும் இல்ல அம்மாக்கு பிடிச்சி இருந்தா போதும்னு சொன்னான்
நா அதுக்கு பொண்ணுக்கு ரொம்ப வயசு கம்மி அம்மா சரின்னு சொன்னா கூட நீ கொஞ்சம் யோசிச்சு முடிவெடு ன்னு சொன்னேன் இது தப்பா
தப்புதாண்டா உன்னை யாருடா அதை சொல்ல சொன்னது முதலில் உன்னை யாரு அவன்கிட்ட பொண்ணு புடிச்சிருக்கான்னு கேக்க சொன்னது அவனுக்குப் பிடித்ததால தான இவ்வளவு தூரம் வந்தான் வர்ற வழியில அவன் கிட்ட பேசி அவன் மனசை மாத்திட்டல்ல
வரும்போது எவ்ளோ தெளிவா இருந்தான் தெரியுமா உன் பின்னாடி அனுப்பி வைச்சேன் பாரு என்ன சொல்லணும் என்று ராஜாத்தி அங்கேயே விஜயை வறுத்தெடுக்க தாயின் வாயடைக்க வழி தெரியாதவன்
அம்மா நீங்க அமைதியாகனும்னா நான் என்ன பண்ணனும் அதை மட்டும் சொல்லுங்கள் செய்கிறேன் என்று விஜய் இறங்கி வந்தான்.
நீ என்ன பண்ணுவேன்னு தெரியாது அந்த பொண்ணு வாயால உன் அண்ணனை புடிக்கலைன்னு சொல்ல சொல்லு
இல்லையா பேசாம இந்த பொண்ண புடிச்சிருக்குனு சொல்லி ஒழுங்கா தாலி கட்ட சொல்லு ரெண்டுல ஏதாவது ஒன்னு நடக்கனும் அப்படி இல்லையா இன்னைக்கு நீ வீட்டுக்கு வந்துடாதே அப்படியே என் கண்ணுல படாம எங்கயாவது போயிடு என்று கூறியபடியே இடத்தை விட்டு நகர்ந்தார்.
இங்கோ செல்வராகவன் எவ்வளவு நேரம் தனியாக நிற்பது என்று எண்ணியபடி தனது நண்பன் ஒருவனுக்கு கால் செய்து பேசத் தொடங்கியிருந்தான்
இங்கு விஜய்க்கு அவன் தாயாரிடம் இருந்து நன்றாக அர்ச்சனை
அங்கே பெண் வீட்டிலோ அவர்களுக்கு மாப்பிள்ளையையும் மாப்பிள்ளையின் குடும்பத்தையும் மிகவும் பிடித்துவிட்டது எங்கே தனது மகளை வேண்டாம் என்று கூறி விடுவார்களோ என்று பயந்தபடி மருதமலை முருகனுக்கு மாறிமாறி வேண்டுதல் வைத்தபடி இருக்கின்றனர்
மீனாவின் கண்களோ செல்வாவின் பின்னே செல்கிறது…
வந்தது முதலாகவே அவனை மட்டுமே பார்க்கிறாள்.
அவனோ இவளை கவனித்தது போலவே தெரியவில்லை
அவளுடைய வீட்டில் அவளுக்கு செல்வாவின் புகைப்படத்தை காட்டவில்லை அதற்குப் பதிலாக அவனின் படிப்பு,வேலை, அவனின் குடும்பம் பற்றிய விஷயங்கள், அவனின் சம்பளம் மட்டுமே, வயதை பற்றி கேட்டதற்கு உன்னை விட சற்று வயது மூத்தவன் என்று மட்டுமே கூறியிருந்தனர்
இந்த பெண் பார்க்கும் நிகழ்வுக்கு வரும் வரை அவளின் மனதில் ஏதோவொரு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது அதுவும் அவனைக் காணும் வரை மட்டுமே அவனைக் கண்ட பின் அவளுக்கு அது போல் எந்த ஒரு எண்ணமும் இல்லை மனம் முழுவதும் சந்தோஷம் மட்டுமே.இருக்கின்றது…
அவனைக் கண்டதுமே மீனாவிற்கு செல்வாவை மிகவும் பிடித்து விட்டது தன்னால் தான் படிக்க முடியவில்லை ஆனால் தனக்கு அமையப் போகும் கணவன் நன்கு படித்தவன், நல்ல வேலையில் இருப்பவன் ,அழகன், இப்படி ஒருவன் தனக்கு கணவனாக அமைந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தொடங்கி இருந்தாள்.
அவனுக்கு வயது அதிகம் என்ற எண்ணம் அங்கிருக்கும் யாருக்குமே ஒரு குறையாக தெரியவில்லை...விஜயைத் தவிர…
விஜய்யோ மிக இயல்பாக செல்வாவின் சென்றவன் கால் கட் செய் என்பது போல் ஜாடை செய்ய செல்வாவும் நண்பனிடம் அப்புறமா பேசறேன் என்று கூறியபடி காலை கட் செய்துவிட்டு என்ன விஜய் என்று கேட்டான்.
அம்மாகிட்ட என்னடா அண்ணா சொன்ன?
நான் என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலியே விஜய்….
பொய் சொல்லாதடா அண்ணா…
உனக்கு பொண்ணு பிடிக்கல இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நினைச்சா
அதை சொல்ல வேண்டியதுதானடா எதுக்குடா அண்ணா என்ன போட்டு கொடுத்த
நான் என்ன விஜய் போட்டு குடுத்தேன் எனக்கு இந்த பொண்ணு வேண்ம்னு மட்டும் தான் அம்மாகிட்ட சொன்னேன்
பொய் சொல்லாதடா பொண்ணுக்கு வயசு கம்மி நான் தான் அது சொன்னேனு அம்மாகிட்ட போட்டு குடுக்கல
ஓஓ….அது சொல்றியா
அம்மா என்கிட்ட பொண்ணு பத்தி சொல்லும் போது வயசை பத்தி சொல்லல
இப்போ பொண்ணுக்கு வயசு கம்மி அதனால எனக்கு வேணாம்னு சொன்னா உனக்கெப்படி தெரியும்னு கேப்பாங்க ஏன் பேச்சை வளக்கனும்னு
நீ சொன்னதா ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன் என்று கூற
இங்க பாரு டா அண்ணா நீ ஆரம்பிச்சு வச்சத இப்போ நீயே முடிச்சி வைக்கற என்ற விஜயிடம்
அவன் அண்ணன் நான் எதை ஆரம்பிச்சு வச்சேன் எதை முடிக்கனும் புரியலடா தம்பி என்று கூற
நீதான முதல்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட இப்போ நீ தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்ற
ஆமா…..
அப்ப ஒழுங்கா போய் அந்த பொண்ணு கிட்ட பேசி அந்த பொண்ணு வாயாலேயே உன்னை வேணான்னு சொல்ல வை
அது எப்படிடா விஜய் நான் போய் பொண்ணு கிட்ட சொல்ல முடியும் இத்தனை பேர் இருக்கும்போது
ரொம்ப சிம்பிள் பொண்ணு கிட்ட ஒரு அரை மணி நேரம் தனியாப் பேசணும்னு சொல்லி அப்படி ஓரமா கூட்டிட்டு போயி அந்த புள்ளைக்கு பத்தி சொல்லு
இங்க பாருமா பாப்பா உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உனக்கு அண்ணன் மாதிரி கூட கிடையாது அங்கிள் மாதிரி தெரிவேன் அதனால ஒழுங்கா என்னை புடிக்கலைன்னு போய் உன் அம்மாகிட்ட சொல்லு இல்லைனா நடக்குறதே வேறனு ஒரு மெரட்டு மிரட்டு அந்த பொண்ணு பயந்திடும்...
அப்புறமா பயத்துல அவங்க அம்மாகிட்ட எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலனு சொல்லும்
அவங்க நம்ம கிட்ட எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கலனு சொல்லறா எங்கள மன்னிச்சிடுங்கனு கிளம்பிடுவாங்க...
நாம உடனே தரகர் கிட்ட கூப்பிட்டு வச்சு எங்கள அசிங்கப்
படுத்திட்டிங்களேனு சொல்லுவோம்
தரகர் உடனே அவர் பார்த்த பொண்ணுக்கு உன்ன பிடிக்கலயேனு குற்ற உணர்ச்சியில அடுத்த வாரம் வேற ஒரு பொண்ணோட ஜாதகத்தை கொண்டு வந்து குடுப்பாரு
அந்த பொண்ணு உனக்கு ஓகேனா அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு டூம் டூம் தான் ஆனா நாம போறதுக்கு முன்னாடி தரகர் காதுல
போட்டு வைப்போம்
பொண்ணுக்கு கொஞ்சம் வயசு ஜாஸ்தியா பாருங்க அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது முடிச்சு இருக்கணும்னு
சரி எல்லாரும் உன்னையே பாக்கறாங்க ராஜாத்தி என்ன முறைக்குது நான் சொன்னது போல செய் போ என்று அண்ணனுக்கு ஐடியா கொடுத்து தம்பிகாரன் தூரத்திவிட
செல்வாவும் யோசித்துப் பார்த்தான் தம்பி சொல்லும் முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் சொன்ன விஷயம் சரி என்று புரிந்தவன் நேராக அமர்ந்திருக்கும் அனைவரிடத்திலும் சென்று பொதுவாக நான் பொண்ணுகிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும் என்று கேட்க
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க தரகர் தான் பெண்ணின் தந்தையை தனியாக அழைத்து இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சகஜம் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி கிட்டா பின்னாடி எந்த பிரச்சினையும் வராது பாருங்க அனுப்பி வைங்க என்று கன்வின்ஸ் செய்ய அவரும் ஒத்துக் கொண்டு
மீனாவை அனுப்பி வைத்தார்.
இங்கு ராஜாத்திக்கு நன்கு புரிந்தது இந்த தனியாகப் பேசுவது என்ற ஐடியாவை இளையவன் தான் கொடுத்திருப்பான் எப்படியும் தன்னுடைய மகனுக்கு திருமணம் நடக்கப் போவதில்லை என்று தெளிவாக தெரிந்ததால் மனதை திடப்படுத்திக் கொண்டார் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கேட்காமல் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வெளியே வர யாருக்கும் தெரியா வண்ணம் தனது புடவை முந்தானையால் அதைத் துடைத்துக் கொண்டார்
மீனாவிற்கும் செல்வாவிற்கும் தனியாக பேச ஒரு ஐந்து நிமிடம் அனைவராலும் ஒதுக்கப்பட்டது கோவில் பின்புறம் ஒரு மறைவான இடத்தில் இருவரும் எதிர் எதிரே நின்றபடி இருக்க செல்வாவோ எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்
ஏதோ பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு எதுவுமே பேசாம இருக்கிங்களே என்று கேட்ட மீனா இருவருக்கும் நடுவில் இருந்த மௌனத்தை உடைத்தாள்.
இல்ல அது எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல அது வந்து... என்று தயங்கினான் செல்வா.
ஆனா எனக்கு ஆரம்பிக்கிறதுல எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை
நா நேராவே சொல்லிடறேன் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அது உங்கள தான் பண்ணிக்கனும்னு தோணுது
என்னவோ தெரியல உங்களை பாக்குற வரைக்கும் எனக்கு எதுவும் தோணல ஆனா உங்களை பார்த்ததும் ஏதோ ஒன்னு பிடிச்சு போச்சு
அது நீங்க நிறைய படிச்சி இருக்கிறதாலையா இல்ல அழகா இருக்கிறதாலையானு தெரியல என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூற
செல்வாவும் இப்பொழுது இவளிடம் எப்படி உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது என்று யோசித்த படி அவளையே பார்க்க
மீனா சற்று பயந்த படி உங்களுக்கும் எனக்கு பிடிச்சிருக்கு தானே என்று அவனின் கண்களை பார்த்து கேட்க இப்பொழுது அவனுக்கும் மெதுவாக அவளை பிடிக்க தொடங்கி இருந்தது
கொஞ்சம் தள்ளி நின்று அவளை ரசிக்க ஆரம்பித்தான் அழகிய வட்ட முகம் பலாச்சுளைகள் போன்ற உதடுகள் அந்த உதடுகள் ஒவ்வொரு வார்த்தையும் பலமுறை யோசித்த படி தான் பேசுகிறது
தனியாகப் பார்த்தால் உயரமாக தெரிகிறாள் தன் அருகில் நின்றால் மட்டும் தான் சற்று உயரம் குறைவாக தெரிகிறாள் என்று யோசித்தவனிடம்
வந்ததுல இருந்து நான் மட்டுமே பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க எதுவுமே பேசல
நான் என் மனசுல இருக்கறத சொல்லிட்டேன் உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு தானே என்று மீண்டும் சற்று பயந்த படி அவனின் கண்களை பார்த்து மீனா கேட்டாள்
அவள் கேட்ட விதத்தில் கண்டிப்பாக யாராலும் மறுக்க முடியாது
அந்த கண்களில் தான் எவ்வளவு பயம் தயவு செய்து என்னை பிடிக்கவில்லை என்று மட்டும் கூறி விடாதே என்ற ஒரு கோரிக்கை அதில் அழுத்தமாக இருந்தது .
உடனே அவன் என்ன மன்னிச்சிடுங்க என் வயசு என்னன்னு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டான்
என்னை விட ஒரு ஆறு வயசு மாதிரி பெரியவங்கனு அம்மா சொன்னாங்க என்று கூற
இல்ல தப்பா சொல்லி இருக்காங்க நான் உங்களை விட ஒன்பது வயசு பெரியவன் எனக்கு இருபத்தியெட்டு வயசு ஆச்சு வயசு மட்டும் இருபத்தியெட்டு இல்ல இதுவரை எனக்கு பார்த்து பொண்ணுங்களோட லிஸ்டும் இருபத்தி எட்டு தான்
என்று தனக்குள்ளாகவே சிரித்தவன் எனக்கு பார்த்து பொண்ணுங்கள நீங்கதான் இருபத்தியெட்டாவது பொண்ணு அது தெரியுமா உங்களுக்கு என்றான்
ஆனால் மீனாவோ வெட்கப்பட்ட படி இந்த இருபத்தி எட்டு உங்களுக்கு ரொம்ப ராசினு நினைக்கிறேன் என்று பேச அவனும் சிரித்தான்
ரொம்ப நல்லா பேசுறீங்க ஆனா அந்த இருபத்தி ஏழு பொண்ணுங்க ஏன் என்ன வேணான்னு ரிஜெக்ட் பண்ணினாங்கன்னு கேட்க மாட்டீங்களா என்று கேட்டான்.
ஏன்னா மீனானு ஒருத்தி உங்களுக்காக காத்துகிட்டு இருக்கா அப்படி இருக்கும் போது நாங்க எப்படி உங்களுக்கு ஒகே சொல்கிறது என்று கூட நினைச்சிருக்கலாம்ல என்று மீனா கூற
பட்டென்று சிரித்த செல்வா தனது இரு கைகளையும் தூக்கி தலைக்கு மேலாக வைத்துக் கொண்டு சான்சே இல்ல மீனா உன்ன பிடிக்கலைன்னு சொல்றதுக்கு என்கிட்ட வயசை தவிர வேற எந்தக் குறையுமே தெரியல
சரி ஒரு உண்மையை சொல்லு நிஜமாகவே என்னை பிடிச்சதால தானே இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற
உங்க அம்மா அப்பாவோட கட்டாயத்துக்காகவோ இல்ல உன் குடும்ப கஷ்டத்திற்காகவோ என்ன கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதிக்கல தான் என்று சற்றே குனிந்த படி அவளின் முகத்தை பார்த்து கேட்க
அவளோ முதல்ல இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக் கிட்டதுக்கு காரணம் என் குடும்ப கஷ்டமும் அம்மாவோட கட்டாயத்துக்காகவும் தான்
ஆனா உங்களை பார்த்ததுக்கு அப்புறம் அவங்களே வேணான்னு சொன்னா கூட என்னால உங்களை விட முடியாது. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு
சரி நீங்கதான் என்னோட தனியாப் பேசணும்னு பர்மிஷன் வாங்கி கூட்டிட்டு வந்தீங்க நான் தான் பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே அது தெரியாம நான் பாட்டுக்கு ஏதோ உளறிட்டு இருக்கேன் என்றாள்.
ம்ம்... உன் வாயால என்னை பிடிக்கலனு சொல்லுன்னு கேக்கறதுக்காக உன் கிட்ட தனியா பேசணும் கூட்டிட்டு வந்தேன் ஆனா இப்போ என் வாயாலேயே உன்னை பிடிச்சிருக்குனு சொல்ல வச்சுட்ட நிஜமாவே நீ கிரேட் மீனா என்று கூறியவன்
இப்போ சீரியஸாகவே நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் இது ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்த பட்டது
நல்லா யோசிச்சு சொல்லு உனக்கும் எனக்கும் ஒன்பது வருஷம் வித்தியாசம் இருக்கு
என்னோட திங்கிங் வேற உன்னோடு திங்கிங் வேறயா இருக்கும் இன்னும் எனக்கு நீ ரொம்ப சின்ன பொண்ணா தெரியல
இப்போ நான் எடுக்கிற முடிவு சரியா தப்பான கூட தெரியல ஆனா என் முன்னாடி என் கண்ணை பார்த்து உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உன்னோடு மட்டும் தான் நான் வாழனும் அப்படின்னு சொல்ற பொண்ண விடவும் என்னால முடியல
அதுக்காக இவ்வளவு சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணனுமானும் ஒரு குழப்பம் இருக்கு நல்லா யோசிச்சு முடிவு சொல்லு நிஜமாகவே என்னை உனக்கு பிடிச்சிருக்கா இந்த வயசு என்னைக்குமே நமக்குள்ள ஒரு பிரச்சனையா இருக்காது தான் என்று செல்வா உறுதியாக அவளைப் பார்த்து கேட்டான்
அதற்கு மீனா இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே நமக்குள்ள இந்த வயசு வித்தியாசம் ஒரு பிரச்சினையா வரவே வராது ஆனால் இதைக் காரணம் காட்டி என்ன வேணான்னு சொல்லிடாதீங்க என்னால கண்டிப்பா தாங்க முடியாது
உங்களை பார்த்த அடுத்த நிமிஷமே உங்களை தான் கல்யாணம் பண்ணற மாதிரி கற்பனையெல்லாம் பண்ணிட்டேன் அதனால தயவுசெஞ்சு என்ன வேணான்னு சொல்லிடாதீங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு
இது என்ன மாதிரியான உணர்வுனு கூட எனக்கு சொல்ல தெரியல ஆனா இந்த நிமிஷம் இந்த ஃபீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று பெரிய மனுஷி தோரணையில் பேச
ம்ம்...நிறையா சிரியல் பாப்பியோ என்றான்
ம்ம்... சன் டிவில வர்ற எல்லா சிரியலுமே பார்த்திடுவேன் எதுவுமே மிஸ் பண்ண மாட்டேன் என்று அக்கறையாய் பதில் கூற
சரிதான் எங்க அம்மாவுக்கு ஏத்த ஜோடி தான் என்றவன்
சரி வா முன்னாடி எல்லாரும் நம்மளையே பாத்துட்டு இருக்காங்க என்று கூறியபடி முன்னே செல்ல
இவளோ நான் என் அம்மா கிட்ட என்ன சொல்லணும் என்று கேட்டாள்
நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ ஆனா நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அது மீனாவை தான் கல்யாணம் பண்ண போறேன் னு சொல்ல போறேன் என்று சிரித்தபடி அவளுக்கு முன்பாக சென்றான்.
மீனாவோ வெட்கப்பட்டுக் கொண்டே அவளின் தாயின் பின்னே வந்து ஒளிந்து கொண்டாள்.
விஜய்யோ இருவரையும் மாறி மாறி பார்த்தவள் ஏதோ புரிய தனது உள்ளங்கையை எடுத்து நெற்றியில் அடித்தபடி
டேய் அண்ணா இப்படி கவுந்துட்டியேடா என்று மீனாவை முறைத்தபடியே செல்வாவிடம் வந்தான்.
ஏனோ விஜய்க்கு மீனாவை பிடிக்கவில்லை தனது அண்ணனை சற்று நேரத்திலேயே அவள் வசம் ஆக்கிவிட்டாள் என்று நினைத்தவன் மாயாஜாலக்காரி என்று வாய்விட்டு சத்தமாக கூறினான்.
இந்த வார்த்தையை யார் கவனித்தார்களோ இல்லையோ மீனா கவனித்தாள் அவனின் உதடு அசைவை வைத்து அவன் சொன்ன வார்த்தையை கிரகித்துக் கொண்டவள் இப்பொழுது விஜயை உஷ்ணமாக முறைக்க தொடங்கியிருந்தாள்.
தொடரும்...