கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ(ழி)லி-3

Akila vaikundam

Moderator
Staff member
3


மீனா முறைப்பதை கண்ட விஜய் அவளை பார்த்து நாக்கை தூறுத்தி தனது ஆள்காட்டி விரலை தூக்கி பத்திரம் காட்ட

மீனாவின் கண்கள் கோபத்தில் மேலும் விரிந்தது.ஏற்கனவே மீனாவின் கண்கள் பெரிது இப்பொழுது இன்னும் பெரிதாக பார்க்கவே பயமுறுத்தியது.

எதேர்ச்சையாக செல்வா மீனாவை பார்க்க அவளின் பார்வை சென்ற இடத்திற்கு இவனின் பார்வையும் செல்ல அங்கு அப்பாவி முகத்துடன் விஜய் நின்று கொண்டிருந்தான்.

அதை பார்த்த செல்வா வாய்க்குள்ளாகவே சிரித்தவன் விஜயை தன்னருகே இழுத்து நிறுத்தி கொண்டவன் மீனாவிடம் ஜாடையாக தனது தம்பி என்று அறிமுகப் படுத்தினான் இப்பொழுது அவளின் முகம் சாந்தமானது

ஆனால் விஜய்யோ வைத்த கண் வாங்காமல் மீனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஏனோ அவனுக்கு மீனாவை பிடிக்கவில்லை.

முதலில் மிகவும் சிறுபெண் ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டான் ஆனால் இப்பொழுது இது சிறுபெண் எல்லாம் இல்லை நன்கு விபரம் தெரிந்த முத்திய கத்திரிக்காய் என்று தோன்றியது


வேண்டாம் என்று சொல்ல சென்ற தன் அண்ணனையே பத்து நிமிடத்தில் அவள் பேச்சை கேட்கும் படி செய்து விட்டாள்.

இவள் வீட்டிற்கு வந்தால் வீட்டில் நிம்மதி தங்காது என்று நினைத்திருந்தான்

அதனால் முடிந்த அளவு எப்படியாது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தான் அண்ணனிடம் பேசினால் வேலைக்காகாது...


தந்தை ….எப்பொழுதுமே எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர்.

தற்சமயம் ஒரே ஆயுதம் ராஜாத்தி மட்டுமே என்று நினைத்தபடி தனது தாயின் அருகில் சென்று நின்றான்.



அவரோ மகனுக்குத் திருமணம் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தவர் இப்பொழுது மகனும் மருமகளும் சேர்ந்து தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் என்று ஒரு சேர கூறவும் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும் தனது இளைய மகன்தான் மூத்தவனின் மனதை மாற்றி இருக்கிறான் என்று நினைத்தவர்.


அவனைப் பார்த்து சந்தோஷத்தில் சிரித்தார். பிறகு விஜயிடம் தம்பி அப்பாவோட வண்டியில பூ கவர் ஒன்னு முன்னாடி இருக்கு போய் எடுத்துட்டு வா போ என்று கூற அவனும் அங்கிருந்து நகர்ந்து சென்றான்

பிறகு வண்டியில் இருந்த பூவை எடுத்து வந்து தனது தாயிடம் கொடுக்கவும் தாயோ மீனாவிடம் சென்றவர் இப்படி திரும்பி நில்லு மா என்று கூற அவளும் திரும்பி நிற்க கையில் இருந்த மொத்த பூவையும் அவள் தலையில் வைத்தார்



பிறகு குங்குமம் வைப்பதற்காக கவரில் குங்குமத்தை தேட அப்போதுதான் நினைவு வந்தது குங்குமத்தை காலையில் எடுத்து வைக்க மறந்து விட்டார் என்று தெரியவும் செல்வாவை அழைத்து பெரியவனே கோயில்ல இருந்து கொஞ்சம் குங்குமம் எடுத்துட்டு வாடா என்று கூறவும் அவனும் வேகமாக சென்று பைரவரின் முன்புறம் இருந்த குங்குமத்தை சிறிதளவு எடுத்து வந்து தனது தாயிடம் நீட்ட



தாயோ அதை மீனாவின் நெற்றியில் வைக்க மீனாவிற்கு அது செல்வாவே வைத்தது போல் தோன்ற வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவந்தது


இவர்கள் எல்லோரும் இப்படி சந்தோஷத்திலிருக்க ஏனோ இந்த நிகழ்வு விஜய்க்கு பிடிக்கவில்லை மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து செய்த சிகை அலங்காரத்தை தனது இரு கரங்கள் கொண்டும் கலைத்துவிட்டு அவன் தனது வண்டியின் அருகே சென்று தனது கோபத்தை அனைத்தையும் வண்டியின் பெட்ரோல் டேங்க்கின் மீது காண்பித்தான்


அதன் பிறகு அவனுக்கு அங்கே நிற்க ஒரு நிமிடம் கூட பிடிக்கவில்லை நேராக எல்லோரிடத்திலும் வந்தவன் அம்மா நான் வீட்டுக்கு கிளம்புறேன் அண்ணா வரியா என்று கேட்க ராஜாத்தியோ பல்லைக் கடித்தபடி அவனிடம் வந்தவர் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இங்கு முக்கியமானது பேசிட்டு இருக்கோம்


நீ பாட்டுக்கு வந்து அவனை கூப்பிடுற என்று கோபப்பட

அப்போ அப்பாவை நான் கூட்டிட்டு போறேன் என்றவன் அப்பா இங்க வாங்கப்பா என்றான்.

அறிவு இருக்கா சின்னவனே
உனக்கு ?
எல்லாரும் பேசிட்டிருக்கும் போது அப்பாவ கூப்டா
அப்புறம் பொண்ணு வீட்ல எப்படி அப்பாவ மதிப்பாங்க என்று ராஜாத்தி கேட்க காலைல அப்பாவை கூட்டிட்டு வர மாட்டேன்னு சொன்னிங்க இங்கே வந்ததும் அப்பாக்கு மரியாதை வந்திடுச்சா நடிக்காதீங்கமா என்று மீனாவின் மீது இருந்த கோபத்தை ராஜாத்தியிடம் காண்பித்தான்.


டேய் என்னை கோபப்படுத்தாதே இப்போ என்னடா இங்கிருந்து நீ கிளம்பனும் அவ்ளோதான?
முதல்ல கிளம்பு என்று அவர் திருப்பி அவனிடம் கோபப்பட


எப்படி அந்த வண்டில மூணு பேரும் வருவீங்க யாராவது ஒருத்தர் என்னோட வாங்க அப்படி இல்லன்னா நான் பஸ்ல போறேன் என்றவன் தாய் எதிர்பார்க்கும் முன்னே இந்தாங்க என்று வண்டி சாவியை அவரின் கையில் திணித்தவன் அடிவாரம் செல்லும் பஸ் நோக்கி சென்றான்.


அவனின் கலாட்டாவை கவனித்துக்கொண்டிருந்த செல்வாவும் தனது தாயிடம் வந்தவன்

மெதுவாக
என்னாச்சும்மா அவனுக்கு என்று கேட்டான்.


அதற்கு அவர் இவனை என்னால புரிஞ்சுக்கவே முடியல டா என்னனு தெரியலடா வந்ததிலிருந்து எங்கிட்ட கோபத்தை காமிச்சுக்கிட்டே இருக்கான்
இப்போ என்னடானா நீ போகனுமாம் இல்லனா அப்பா போகனுமாம்
ரெண்டு பேருமே வரமாட்டாங்கனு சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டு பஸ்ல
போறேன்னுட்டு கிளம்பிட்டான் இப்போ என்ன செய்யறது சொல்லு இத்தனை பேர் முன்னாடி அவன் பின்னாடியா நான் ஓட முடியும் சின்னபுள்ளனு அடிக்காம வளத்தினதுக்கு ஏன் என்னை அடிக்காம வளத்தினனு இப்போ எனக்கு பாடம் நடத்தறான் என்று கண்கலங்க கூறினார்.


செல்லும் அவனையே கவலையுடன் பார்த்த செல்வா அவன் குழந்தைமா அவனுக்கு என்ன தெரியும் பெரியவங்களோட பேச்சுவார்த்தையை பத்தி போகபோக நடைமுறையை புரிஞ்சிப்பான்….என்று கூறிகொண்டிருக்கும் போதே கிளம்ப தயாராக இருந்த பஸ் ஒன்றில் விஜய் ஏற பஸ் கிளம்பியது….


பஸ் போகுது செல்வா...இப்போ என்ன செய்யறது

சரி விடுங்க மா கோவத்துல பஸ் ஏறிப் போய் அடிவாரத்தில் நிப்பானா இருக்கும் நாம கீழ போகும்போது பாத்துக்கலாம் என்று பெரியவன் கூறவும்



தாயாரோ கவலையாக ஒருவேளை அவன் கோவிச்சுக்கிட்டு வீட்டுக்கும் பஸ்லயே போயிட்டானா என்னடா செய்கிறது


சரி வீட்ல போய் வெயிட் பண்ணுவான் ம்மா நாம தான் இப்போ உடனே கிளம்பலாம் நீங்க அவங்ககிட்ட சீக்கிரம் பேசி முடிச்சிட்டு வாங்க என்று தனது தாயை துரிதப்படுத்த


வீட்டு சாவி என் கிட்டே இருக்குடா ஒருவேளை அவன் கோவத்துல நேரா வீட்டுக்கு போய்ட்டானா வெளியே கிடப்பான் டா இப்போ கைல காசிருக்கோ இல்லையோ காலையில வேற புள்ள சரியா சாப்பிடலை எவ்வளவு நேரம் வயசு பையன் வாசல்ல கிடைப்பான் சொல்லு என்று ஒரு தாயாய் தனது இளைய மகன் மீது கவலைகொள்ள


அப்போ ஒன்னு பண்ணுங்க சாவியை என்கிட்ட கொடுங்க எப்படியும் பஸ் கீழே போனாலும் பஸ் ஸ்டாப்க்கு கொஞ்ச தூரம் நடந்து தான் போகனும் அதுக்குள்ள நான் போய் அவனை புடிக்கறேன் அப்படி இல்லனாலும் கோவத்துல நடந்து போனாலும் போவான் போற வழில அவனை பாத்துக்கறேன் என்றவன் வீட்டு சாவியையும் வண்டி சாவியையும் வாங்கிக்கொண்டு தனது சகோதரனுக்காக அடிவாரம் நோக்கி வாகனத்தில் சென்றான்.

அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு ராஜாத்தி பெண் வீட்டாரிடம் வந்து அமரும் பொழுது பெண் வீட்டினர் என்னாச்சு ரெண்டு பிள்ளைங்கள அடுத்தடுத்து கிளம்பிட்டாங்க என்று கேட்டனர்


அவர்கள் மனதில் சிறு நெருடல் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை தங்களிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கிளம்பிவிட்டாரே அட்லீஸ்ட் தன் மகளிடம் ஆவது சொல்லி இருக்கலாமே என்று


மீனாவின் மனதிலும் அதுதான் தோன்றியது எனக்கு சம்மதம் சொல்லி முழுதாக பத்து நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் ஆகவே தனது தம்பிக்காக ஓடுகிறார் இவனை எப்படி திருமணம் செய்வது என்ற குழப்பமும் அவள் மனதில் இருக்கிறது


பதில் கூற தெரியாமல் சின்னவனுக்கு நாளைக்கு முக்கியமான பரிட்ச்சையாம்
படிக்கனும்னு கிளம்பிட்டான் அவசரத்துல சாவி வாங்கிட்டு போகல அதான் பெரியவன் கிட்ட குடுத்து விட்டேன் என்று நம்பும்படியாக ஒரு பொய்யை கூற அனைவரும் அப்போதைக்கு சமாதானம் ஆகினர் ஆனாலும் மீனாவிற்கு ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது



செல்வாவோ வேகமாக அடிவாரம் சென்றவன் பஸ் ஸ்டாப்பிலோ அல்லது பஸ் உள்ளேவோ எங்காவது தனது சகோதரன் எங்காவது நிற்கிறான் என்று பார்க்க அங்கு எங்கிலுமே விஜய்யின் முகம் தட்டுப்படவில்லை செல்வா யூகித்தது போல் தான் விஜய் கோபத்தில் வேகமாக நடந்து கொண்டிருந்தான்.


அவனுக்கு ஏனோ தனது அண்ணனின் இந்த திருமணம் பிடிக்கவில்லை ஊர் உலகத்தில் வேறு பெண்ணா இல்லை இந்த மீனாவை விட்டால் வேறு பெண்ணே இல்லையா?

அவளைப் பார்த்ததும் இப்படி விழுந்து விட்டானே என்ற கோபம் அண்ணனின் மீது


மீனாவின் மேல் சோல்லவே முடியாது
அவ்வளவு கோபம் பெண்பார்க்க வந்த அன்றே தன்னை இப்படி பைத்தியக்காரன் போல் நடக்க வைத்து விட்டாள் இவள் தனது அண்ணனுக்கு மனைவியாகி அதன்பின் என் வீட்டிற்கு வந்தாள் என்னை நிரந்தரமாகவே ரோட்டில் தங்க வைத்து விடுவாள் என்று அவளை வாய்க்குள்ளாகவே வசைபாடினான்.

பின்னால் விடாது ஹாரன் சத்தம் கேட்க யாரென்று திரும்பிப் பார்த்தால் அவனின் அண்ணன் செல்வா தான் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்


அவனை பார்த்ததும் திரும்பி மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினான் விஜய் செல்வாவோ தம்பியின் அருகில் வந்து அவனின் வழியை மறிப்பது போல் வாகனத்தை மறித்து நிறுத்தினான்


வர்றது தெரிஞ்சும் மறுபடியும் வேகமா போனா என்ன அர்த்தம் வண்டியில் ஏறி உட்காரு எதுக்கு இப்படி நடந்து போற என்று ஒரு அண்ணனாய் அவனைக் கண்டித்தான்


ன் எனக்கு நடக்க கூட உரிமை இல்லையா எல்லாமே உங்க இஷ்டம் தான் இல்ல…என்றவன் அவனைத் தாண்டி நடக்கத் தொடங்கினான்.

டேய் விஜய் நில்லு ஏன் உனக்கு இவ்ளோ கோபம் காலைல நல்லா தான கூட வந்த தீடிர்னு என்னாச்சி உனக்கு என்று கேட்ட படி அவனுக்கு ஈடு கொடுத்தபடி வாகனத்தை ஓட்டினான்.


எனக்கென்ன நான் காலையில் இருந்து இப்போ வரைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கேன் நீ தான் வந்ததும் ஒரு மாதிரி பேசுன இப்போ வேற மாதிரி பேசுற என்று தன் அண்ணனை பார்த்து கூறியபடி நடந்தான்

நா எப்போடா வேற மாதிரி பேசினேன் நீ ஏதோ தப்பா புரிஞ்சி கிட்ட…

இல்ல சரியா தான் புரிஞ்சிகிட்டேன்
நீங்க மூனு பேரும் ஒன்னு சேர்ந்து கிட்டிங்க என்னை விட்டுட்டிங்க


நீ கோவிலுக்கு வந்ததும் என்கிட்ட என்ன சொன்ன பொண்ணு பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்


இரு அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் நாம கிளம்பலாம்னு சொன்னியா இல்லையா


ஆமாண்டா சொன்னேன்



சரி அப்புறம் அம்மா என்னை திட்டி உன்கிட்ட அனுப்பி வச்சாங்க அதுக்கப்புறம் நீ பொண்ணு கிட்ட போய் உன்னை பிடிக்கலனு சொல்லிட்டு வரேன்னு போன

ஆனால் பத்து நிமிஷத்துல சிரிச்சுக்கிட்டே வர்ற

எனக்கு பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு நா கல்யாணத்துக்கு சம்மதிக்கறேனு சொல்லற
அப்போ என்கிட்ட பொய் சொல்லிருக்க…


உனக்கு பிடிச்சி இருந்தா நீ முதல்லயே சொல்லியிருக்க வேண்டியதுதானே எதுக்காக அம்மாகிட்ட என்ன மாட்டி விட்ட அம்மா என்னை எப்படி தீட்டினாங்க தெரியுமா கிள்ளி கூட வெச்சாங்க என்று தொண்டை கரகரப்பு கூறும் தம்பியை பார்த்து வண்டியை நிறுத்தி இறங்கியவன்

டேய் மொதல்ல நில்லு என்று அவன் தோளில் கைவைத்து நிறுத்தியவன் விஜயின் முகத்தை பார்த்து
நிஜமாவே நீ மீனாவோட வயசை சொன்னதும் நான் அவ கிட்ட என்னை பிடிக்கலன்னு சொல்லிடுனு சொல்ல தான் போனேன்


ஆனா அவ வயசை காரணம் காட்டி தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடாதீங்க எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களை தான் பண்ணிக்கணும்னு என் முகத்தை பார்த்து என் கண்ணை பார்த்து கெஞ்சறா எப்படிடா மூஞ்சிக்கு நேரா உன்னை எனக்கு பிடிக்கலனு சொல்ல முடியும்



ரெண்டாவது அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது டா போட்டோ பார்த்ததும் எனக்காகவே பிறந்தது போல் தோனிச்சி அதனாலதான் பொண்ணு பாக்குறதுக்கு சம்மதித்து நான் இவ்வளவு தூரம் வந்தது.


வரும் போது நீ சொல்லி தான் தெரியுது வயசு வித்தியாசம்


அவளோட பேசற வரை ஒரு உறுத்தல் இருந்தது பேசின பிறகு அது சுத்தமா காணாம போச்சு ஏன் வயசை காரணம் காட்டி இவ்ளோ அழகான பொண்ணை இழக்கனும்னு தோணிச்சி ஏன்னா அந்த வயசை தவிர வேறு எதுவுமே இல்ல டா அவள ரீஜெக்ட் பண்றதுக்கு புரிஞ்சுக்கடா நீ சின்ன பையன் உனக்கு இதெல்லாம் புரியாது என்று கூற


தோளில் இருந்த அவனின் கையை தட்டி விட்ட விஜய் நான் சின்ன பையனா? அப்போ என்ன விட அந்த மீனா இன்னும் சின்ன பொண்ணு அவ சொல்லறதை கேட்கற
நான் சொல்றத கேக்க மாட்டேங்கற

நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா செட்டாகாது புரிஞ்சுக்கோ எனக்கு அண்ணினு கூப்பிடவே வராது அவளைப் பார்க்கும் போதெல்லாம் என்னை விட சின்ன பொண்ணு இவளுக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்னு தான் தோனும்
என்று மேலும் கோபம் கொண்ட விஜயை கைநீட்டி தடுத்தவன்


இங்க பார் விஜய் மீனாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் இதுல வேற எந்த மாற்றமும் இல்லை இது தவிர வேறு எது வேணாலும் பேசு நாம பேசலாம் இப்போ

உண்மையிலேயே உனக்கு அண்ணன் மேல மரியாதை இருந்தா என்னோட பேச்சைக் கேட்கறதா இருந்தா என் பின்னாடி வண்டியில் உட்காரு வீட்டுக்கு போகலாம்

இதுக்கு அப்புறம் இந்த கல்யாணத்தை பற்றியோ மீனாவை பற்றியோ நீயும் நானும் பேச வேண்டாம் என்று அத்துடன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க


அண்ணன் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் மனதுக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டவனுக்கு காரணமே இல்லாமல் கண்கள் கரிக்க தொடங்கியது


தனது அண்ணன் திருமணத்திற்கு முன்பே வரப்போகும் அவனின் மனைவிக்காக தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டான்


அந்தப் பெண் வீட்டிற்கு அண்ணியாக வந்து விட்டால் அண்ணன் தம்பி என்று உறவே முறிந்து விடும் என்று நினைக்க நினைக்க கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது


தனது அண்ணனுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்தவன் அழுகையை அடக்க பெரும்பாடுபட்டு கொண்டான்


அதன் பின் திருமண வேலைகள் எதிலும் தலையிடவே இல்லை இது அண்ணனின் வாழ்க்கை ஆயிற்று எனக்கென்ன வந்தது என்பது போல் தன்னிச்சையாய் சுற்றத் தொடங்கி இருந்தான் விஜய்.

இங்கு கோவிலிலோ இரு குடும்பத்தாருக்குமே பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிந்துவிட அங்கேயே திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது


ஏதாவது ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணமும் அருகிலிருந்த ஒரு மண்டபத்தில் ஓரளவுக்கு நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என பேசி முடித்தனர்


எல்லா செலவுகளும் பாதிக்கு பாதி என்று பிரித்துக் கொள்ள மீனாவின் தாயோ தயங்கி தயங்கி பொண்ணுக்கு என்ன செய்யணும்னு கொஞ்சம் சொன்னா அதையும் எங்களால முடிஞ்ச அளவு பார்த்து பண்ணி விடுவோம் என்று கூற


ராஜாத்தியோ பெண்ணை நீங்க எங்களுக்கு கொடுத்தாலே போதும் எங்களுக்கு எதுவுமே வேணாம் என் மகனே பொண்ணுக்கு என்ன வேணுமோ அதை வாங்கி குடுத்துப்பான்

அப்படி ஏதாவது செய்யனும்னு விருப்ப பட்டா உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யணும்னு நினைக்கறீங்களோ அதை தாராளமா செஞ்சுக்கோங்க நாங்கள் தடுக்க மாட்டோம் ஆனா இத செய்யுங்கனு நான் என்னைக்கு கேட்க போறதில்லை எங்களுக்கு பெண் வீட்டுக்கு வந்தா போதும் என்று பெருந்தன்மையாக கூற மேலும் சந்தோஷமானது மீனாவின் குடும்பத்தாருக்கு.


அதன் பிறகு அணைவருமே அங்கிருந்து விடைபெற
மீனாவின் குடும்பம் வாடகைக்கு காரில் வந்திருந்தனர் அதனால் அனைவரும் அதில் ஏறி அவர்களின் இருப்பிடம் நோக்கிச் செல்ல இங்கு ராஜாத்தியும் அவரது கணவரும் அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் வீடு வந்தனர்


வீட்டுக்கு செல்லும் வழியில் மீனாவிற்கு தான் ஏதோ ஒரு நெருடல் மனதிற்குள்ளாக செல்வராகவன் தன்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட கூறிக் கொண்டு செல்லவில்லை என்று

மீனா வீட்டுக்கு மூத்த பெண் அவளுக்கு பிறகு மூன்று குழந்தைகள் என்பதால் சிறுவயதிலேயே பொறுப்பும் அதிகம் வயதிற்கு மீறிய அனுபவமும் அதிகம் மூன்று குழந்தைகளை தாயாய் இருந்து தாங்கியதாலோ

இல்லை வீட்டில் அனைத்து வேலைகளும் செய்வதாலோ இல்லை வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டாலோ என்னவோ சில விஷயங்கள் நன்கு புரியும் யாருமே அவளது வயதை வைத்து அவளை கணக்கிட முடியாது.அவ்வளவு தெளிவான பெண்…

மனதிற்குள் வைத்து குமைவதை விட தனது தாயிடம் சந்தேகத்தை கேட்டால் என்ன என்று வண்டியில் வைத்து தாயின் காதை கடித்தாள்


அம்மா கோவிலுக்கு என்ன பார்க்க வந்தாங்க பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க ஆனா போகும் போது என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்டாங்களே மா ஏம்மா இப்படி தான் அப்பாவும் உன்கிட்ட நடந்துகிட்டாங்களா?என்று அப்பாவியாக கேட்டாள்.

அதற்கு அவளின் தாயார் இங்க பாருமா கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா ஆம்பளைகளும் இப்படி தான் அம்மா,அப்பா, தம்பி ,அக்கா ,தங்கச்சினு இருப்பாங்க

கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கு ஏத்தது போல நாம தான் மாத்திக்கணும் அதனால இதுக்கு நீ பயப்படாதே கல்யாணத்துக்கு அப்புறம் பிடி உன்னுது அதை கெட்டியாக பிடிச்சிக்கறதும், விடறதும் உன் கையில இருக்கு சாமர்த்தியமாக நடந்துக்கோ அதை விட்டுட்டு கண்டத போட்டு குழப்பிக்காத நல்ல புள்ளையா கல்யாணத்துக்கு தயாராகு என்று தாயார் அவளிடம் கூற


மீனாவின் மனதிலோ தாய் சொல்வதும் சரிதானே திருமணத்திற்குப் பிறகு அவருடைய பிடி நம்முடைய கையில் எதற்காக நாம் பயப்பட வேண்டும் இப்பொழுது விட்டுப் பிடிப்பது போல் விட்டு விட்டு பிறகு ஒரேடியாக இழுத்து தன்னுடைய கொட்டகையில் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் மனதிற்குள்ளாக செல்வாவை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள்.

செல்வாவை நினைக்கும் போதே இலவச இணைப்பாக விஜய்யின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது

அவனின் முகம் ஞாபகத்திற்கு வருமே மீனாவின் சந்தோஷம் காணாமல் போயிற்று விஜய் அவளை மிரட்டியது மட்டுமே நியாபகத்திற்கு வந்தது அந்த வீட்டிற்கு சென்றவுடன் முதல் வேலையாக விஜய்யின் திமிரை அடக்கி அவனை செல்லாக்காசாக வேண்டும் என்று நினைத்தவள் அடுத்த முறை செல்வா தன்னிடம் பேசினால் விஜயை பற்றி ஜாடையாக சொல்லி வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு அடுத்தடுத்து கல்யாண வேலைகள் இரு குடும்பத்தாரிடமிருந்தும் வேகமான முறையில் நடைபெற்றது

பத்திரிக்கை அடிப்பது ,மண்டபம் பிடிப்பது, கோவிலில் சென்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வது என ஒவ்வொன்றிலும் பம்பரமாக செல்வராகவனும் அவனது தந்தையும் சுழன்று கொண்டிருக்க விஜய்யோ எதிலுமே கலந்து கொள்ளவில்லை


கடைசியாக செல்வா வந்து விஜயிடம் உன்னுடைய நண்பர்களுக்கு கொடுக்க எவ்வளவு பத்திரிக்கை வேண்டும் என்று கேட்க


என் பிரண்ட்ஸ் யாரையும் கூப்பிடல அதனால எனக்கு பத்திரிகை எதும் வேணாம் என்று மூஞ்சில அடித்தபடி கூற

செல்வா தனது தாயிடம் தனிமையில் புலம்பித் தீர்த்தான் அம்மா அவனுக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமில்ல நாம கொஞ்சம் அவசர பட்டுட்டோமோனு தோணுது


இவனோட கோபம் மீனாவை பாதிக்குமோனு பயமாயிருக்கு என்ன செய்யறது?

மேற்கொண்டு கல்யாண வேலையை செய்யலாமா?

இல்லனா இவனுக்காக விட்டிடலாமா ?

ரொம்ப குழப்பமா இருக்கு... என்ன செய்யறது மா சொல்லுங்க விஜய்க்கு பிடிக்காத இந்த கல்யாணத்தை நான் செஞ்சுக்கணுமானு எனக்கு இப்போ யோசனையா இருக்கு அம்மா என்று சொன்னவனிடம்

தாயோ டேய் அவன் சின்னப் பையன்டா பிடிவாதம் ஜாஸ்தி அவனுக்கு இதெல்லாம் இன்னும் புரியலை கல்யாணம்னா ஏதோ விளையாட்டா நினைச்சிட்டான்


ஈசியா போய் பொண்ணு பாக்கலாம் அப்புறமா பிடிக்கல வேணாம்னு சொல்லலாம்னு நினைச்சிட்டான் போல

இது இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம்னு அவனுக்கு புரியல அவனுக்கு நான் புரிய வைக்கிறேன் நீ கவலை இல்லாம உன் வேலையை பாரு என்று செல்வாவிடம் கூறி அனுப்பி வைத்தவர் விஜயை வந்து ஒரு பிடி பிடித்துவிட்டார்



உன் அண்ணனுக்கு கல்யாணம் நீ ஏன்டா இப்படி இருக்கற டிரஸ் எடுக்குறதிலிருந்து மண்டபம் பாக்கறது பத்திரிக்கை அடிக்கறதுனு
எல்லாத்துலேயும் அவனே தனியா கிடந்து கஷ்டப்படுகிறான் ஆனா நீ கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்துக்கற


என்னடா உனக்கு இப்போ பிரச்சனை அந்த மீனாவை பிடிக்கலைன்னு சொல்ல போற, ஆனா அவளை உன் அண்ணனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா அது ஏண்டா உன் புத்திக்கு உறைக்கல


அவங்க ரெண்டு பேரும் ஆயுசுக்கும் சேர்ந்து வாழ போறவங்க அவளுக்குள்ள புடிஞ்சிருந்தா தான் அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்,இப்போ சொல்லு மீனாவை அவனுக்கு புடிக்கனுமா இல்லன்னா உனக்கு பிடிக்கனுமோ சொல்லுடா…


ஆனா அம்மா அவ ரொம்ப சின்ன பொண்ணுமா படிக்க வேண்டிய வயசு அந்த பொண்ணுக்கு கல்யாணம்னா... தப்பில்லையா இது…. நீங்க தான் அந்தகாலத்து ஆளு ஆனா அவன் இந்த ஜெனரேஷன் அவனும் புத்தியில்லாம பண்ணறான்னா என்னால எப்படி பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியும் ஏதாவது சொன்னா சின்ன பையன்னு வாயை அடக்கிருவீங்க அதான் எதிலும் கலந்துக்காம ஒதிங்கியிருக்கேன் என்று விஜய் அவன் மனதில் உள்ளதை தாயிடம் கூறினான்



கோபபடுத்தாத விஜய்
ரெண்டு பேருக்குள்ளயும் வயசு வித்தியாசம்னு சப்பையான காரணத்தை சொல்லாத...
அந்த வயசு வித்தியாசம் யாருக்குமே தப்பா தெரியல உன்னைத்தவிர

யாருக்கு தப்பா தெரிஞ்சிருக்கனும்,பொண்ண பெத்தவங்களுக்கும் உங்க அண்ணனை கட்டிக்க போற அந்த பொண்ணுக்கும்,பொண்ணை பெத்தவங்களே
முன் வந்து பொண்ணு குடுக்கும் போது நாம ஏன் வேணாம்னு போகனும்


அதுமில்லாம மீனாவே வயசு எவ்வளவு ஜாஸ்தியா இருந்தாலும் பரவால்ல எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குனு உன் அண்ணன் கிட்ட சொல்லும்போது எப்படிடா வேணான்னு சொல்லிட்டு வருவான்

புரிஞ்சுக்கோடா அவன் எவ்வளவு சங்கட படறான் தெரியுமா


உனக்கு ஒரு விஷயத்தை இதுவரைக்கும் நான் சொன்னதே இல்ல இப்ப சொல்றேன் கேட்டுக்கோ


நீ பிறக்கும்போது பிரசவம் ரொம்ப சிக்கலாகி ஆபரேஷன் பண்ணி தான் உன்னை எடுத்தாங்க உன் அப்பா என்னை டிஸ்சார்ஜ் பண்ணினதும் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு அவங்க பாட்டுக்கு தினமும் வேலைக்கு போய்டு வாங்க


அக்கம் பக்கத்துல ஒருத்தர் கூட எனக்கு ஒத்தாசைக்கு இல்ல ஆனா உங்கண்ணன் தாண்டா ஸ்கூலுக்கு போகாமல் ராத்திரி பகலா முழிச்சிருந்து உன்னையும் என்னையும் பார்த்து கிட்டான்.

இன்னைக்கு வரைக்கும் சம்பாதிக்கிற பணத்துல அவனுக்காக ஒத்த ரூபாயை கூட எடுத்து வைக்கல எல்லாம் உனக்காகவும் நம்ம குடும்பத்திற்காகவும் தான் செலவு பண்ணிக்கிட்டு இருக்கான்.


நீ பொறக்கற வரைக்கும் கான்வென்ட் ஸ்கூல்ல தான் படிச்சுட்டு இருந்தான் நீ பொறந்துமே செலவைக் கட்டுப்படுத்த முடியலனு தெரிஞ்சுகிட்டு உடனே பெருந்தன்மையா கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போறேன்னு ஸ்கூல் மாறிப்போனான்


அதோட இல்ல டா உன்ன கான்வென்ட் ஸ்கூல்ல தான் சேர்க்கனும்னு அப்பாகிட்ட எவ்வளவு சண்டை போட்டானு தெரியுமா அவன் படிச்சது ஒரு கவர்ன்மென்ட் காலேஜ்ல



ஆனா நீ படிக்கிறது கோயம்புத்தூர்லேயே பெரிய காலேஜ் அதுக்கு எவ்ளோ பீஸ் குடுக்கறோம் ஞாபகம் இருக்கா நம்ம வசதிக்கு அது போல காலேஜை கனவுல கூட நினைச்சி பாக்க முடியாது ஆனா அவன் நிஜமாக்கிருக்கான்

அவன் சம்பளத்தில இருந்து சேத்து வைச்ச மொத்த பணத்தையும் உன் படிப்புக்காக கொடுக்கறான் இன்னைக்கு நீ போடற செருப்புல இருந்து தலைக்கு வைக்கற காஸ்ட்லி ஹேர் ஆயில் வரை அவன் உழைப்பு உன் அப்பாவோட வருமானம் சாப்பாட்டுக்கே சரியா போகுது அதையும் ஞாபகத்துல வச்சிக்கோ


இன்னிக்கு மட்டுமில்ல என்னைக்குமே அவன் உனக்கு செய்யறதுக்கு கணக்கு பார்க்க போறது கிடையாது செஞ்சதுக்கு பலனா எதையும் எதிர்பார்க்கப் போறது கிடையாது, ஆமாம் மொத்த முறையா உன்கிட்ட எதிர்பார்க்கிறது தம்பிங்கற ஒரு ஆதரவை தான்... இந்த கல்யாணத்துக்கு நாம மட்டும் கஷ்டப்பட்டு இருக்குமே தப்பி ஏதுவுமே கண்டுகலையேனு அவ்ளோ வருத்த படறான்…


நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் உனக்கு பார்த்து பார்த்து செஞ்சு கொடுத்த உன் அண்ணனுக்கு நீ என்னடா செய்யப் போற அவன் மொத மொதல்ல இந்த பொண்ணு பிடிச்சிருக்குனு வாய்திறந்து சொல்லறான் அதுவும் அவனா தேடிப் போகலை அதுவா தேடி வந்தது ஆனால் அதுகூட புரிஞ்சிக்க முடியாத சுயநலவாதியா நீ இருக்கில்ல


கொஞ்சமாவது மனிதத் தன்மையுடன் நடந்துகோடா

அவன் உனக்கு இவ்வளவு பண்ணிருக்கான் அந்த நன்றி கூட உனக்கு வேண்டாம் அட்லீஸ்ட் அவன் உன் மேல வச்சிருக்கிற அந்த பாசத்துக்காகவாவது மரியாதை கூட

அவனோட பாசத்தை புரிஞ்சிக்கலனா கூட பரவால்ல தயவு செஞ்சு இப்படி ஒதுங்கி நின்று அவனை காயப்படுத்தாத…. அவ்வளவுதான்
சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன் அதுக்கப்புறம் உன் விருப்பம்



இல்ல இன்னும் உப்புப் பெறாத காரணத்தை பிடிச்சுக்கிட்டு நான் இப்படித்தான் இருப்பேன் நீ என்னவோ சொல்லிக்கோனு நினைச்சா தாராளமாய் இருந்துக்கோ இனிமே எதுக்குமே உன்னை நான் கண்டுக்க போறது இல்லை என்று ராஜாத்தி கூறிவிட்டு சென்று விட



அதன் பிறகு விஜயோ தாய் சொன்னவற்றை எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தான்
எல்லாமே உண்மை தான்
செல்வா அவனுக்காக செய்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தவனுக்கு கண்கள் தானாக கலங்க தொடங்கியது அதன் பிறகு நேராக தனது அண்ணனிடம் சென்றவன் உரிமையான கல்யாணத்துக்கு ஏதாவது வேலை இருந்தா எனக்கும் குடு நானும் செய்வேன்ல என்று கேட்க



பொண்ணு வீட்டுக்கு கொஞ்சம் பத்திரிக்கை கொடுக்கணும் அப்பா கூட வேணா போயிட்டு வர்றியா என்று இயல்பாக கேட்க


ஒஓஓ…. அண்ணிக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்கல்ல சூப்பர் சூப்பர்….நானே போறேன் அப்படியே சைடுல கரெக்ட் பண்ண முடிஞ்சா நான் பண்ணிக்கிறேன் என்று சிரித்தபடியே கூற


அடி வாங்க போற ரெண்டும் சின்ன பொண்ணுங்க படிச்சிட்டு இருக்காங்க அங்க போய் உன் வாலுதனத்தை காட்டிட்டு இருக்காத சுருட்டி வைச்சுக்கோ புரிஞ்சுதா என்று அண்ணனாய் அவனை மிரட்ட


பார்க்கலாம் பார்க்கலாம் அண்ணி அளவுக்கு இருந்தா சைட் அடிக்கலாம் ஒருவேளை அவங்க அப்பா மாதிரி இருந்தா அப்படியே திரும்பி ஓடி வந்துடுவேன் என்று அவன் அண்ணியின் குடும்பத்தை கிண்டல் செய்ய….


போதும் பா ராசா நானே போய் அப்பாவோட அந்த பத்திரிக்கையை கொடுக்கிறேன் நீங்க எப்பவும் போல படிக்கிற வேலைய மட்டும் பாருங்க என்று தம்பியிடம் கூற


அவனும் ஐயோ அண்ணா நிஜமாவே சீரியஸா நினைச்சு கிண்ணியா அண்ணியையே சின்ன பொண்ணு வேணாம்னு சொல்லறேன் அவங்க தங்கச்சிகளை எப்படி நான் தப்பா பாப்பேன் சொல்லு அண்ணியோட தங்கச்சிக எனக்கும் தங்கச்சிக மாதிரி தானே உன் தம்பியை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா என்று பெரிய மனிதன் தோரணையில் கேட்க


என் தம்பி தங்கம்ங்கற விஷயம் எனக்கு தெரியும்டா சும்மா சொன்னேன் கோவிச்சுக்காதே என்று கூறியவன்


பிறகு சரி டேபிள் மேல பத்திரிக்கை எல்லாம் இருக்கு அப்பா வந்ததும் நீயும் அப்பாவும் போய் குடுத்திட்டு வந்துருங்க சரியா என்று கூறிவிட்டு சற்று நகர்ந்தவன்

மீண்டும் திரும்பி வந்து ரொம்ப தேங்க்ஸ்டா விஜய் நான் ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையே…

உனக்கு மீனாவை பிடிக்கலையேனு ஆனா நீ அவளை வாய்க்கு வாய் அண்ணி அண்ணின்னு கூப்பிட்டு என் பயத்தை எல்லாம் போக வச்சிட்ட ரொம்ப தேங்க்ஸ் டா என்று கூற

அண்ணா என்னதிது என் கிட்ட எல்லாம் தேங்க்ஸ் சொல்லிகிட்டு உரிமையா கன்னத்தில் பலமா ஒரு அறை வெச்சு புத்தி சொல்றத விட்டுட்டு வருத்தப்பட்டு இருந்தியா அண்ணா

நான்தான் உன் கிட்ட சாரி கேக்கணும் சாரி அண்ணா என்ன மன்னிச்சிடு நான் உன்னை புரிஞ்சுக்கவே இல்ல


இது உங்க லைஃப் உனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும் உனக்கு பிடிச்ச பொண்ணு தான் உன்னோட இருக்கணும் அதுகூட தெரியல எனக்கு என்று வருத்தப்பட


இல்லடா இது நீ என் மேல வச்சிருக்குற அளவுகடந்த பாசம் அண்ணனோட பாசம் வேற யாருக்கும் போக கூடாதுன்னு நினைச்ச அதோட பிரதிபலிப்புதான் நீ நடந்துகிட்டது எனக்கு உன் மேல கோவம் இல்ல டா பெருமையா தான் இருக்கு இப்படி ஒரு தம்பி எனக்கு கிடைச்சதுக்காக நான் அந்த கடவுளுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தீராது என்று கூறியவன்


சரி நான் ஆபீஸ் போயிட்டு வரேன் என்று கூறியபடி கிளம்பி சென்று விட இவனும் மீனாவின் வீட்டிற்கு பத்திரிகை எடுத்து செல்வதற்காக தனது தந்தையின் வரவுக்காய் காத்திருந்தான் விஜய்.


மாலை தந்தை சீக்கிரமாகவே வர இருவரும் மீனாவின் வீட்டிற்குச் சென்றனர் அங்கு மீனா செல்வா வருவான் என்று தன்னை மிகவும் பார்த்துப்பார்த்து அலங்கரித்துக் கொண்டு காத்திருக்க சென்று நின்றது என்னமோ விஜய்


அவனைக் கண்டதும் கோவிலில் சைகையால் மிரட்டியது,மாயாஜாலக்காரி என்று வசைபாடியது நினைவுக்கு வர விஜயை பார்த்ததும் உடனடியாக முகத்தில் கோபத்தை காண்பித்தாள் மீனா


விஜய்யின் தந்தையை விழுந்து விழுந்து கவனித்த மீனா விஜய்யை கண்டுகொள்ளவே இல்லை அவனின் தந்தைக்கு காப்பி பலகாரம் என எடுத்து வந்து கொடுத்தவள்


விஜய்யை திரும்பி கூட பார்க்க வில்லை மீனாவின் தாய் அவளை கண்டிக்க கடைசியாக சர்க்கரை போடாத டீயை கொண்டுவந்து விஜயிடம் கொடுத்தவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்


விஜய்க்கு அவள் முகத்திருப்பல் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாவெறுப்பாக அந்த டீயை வாங்கி வாயில் வைக்க அது சர்க்கரை இல்லாமல் துவர்ப்பும் கசப்பும் கலந்து இருக்க தந்தை முன்பும் அவளின் குடும்பத்தாரின் முன்பும் அவளிடம் கோபத்தை காட்ட கூடாது என்று எண்ணியவன் கடினப்பட்டு அதை முழுங்கி விட்டு நேராக வெளியே வந்து நின்று கொண்டான்.


மீனாவோ அவளின் இரு தங்கைகளுடன் சேர்ந்து இவனின் சிகை அலங்காரத்தையும் அவன் அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்து கேலி பேச விஜய்யோ மீனாவை பார்த்து தைரியமாக சிரித்தபடியே எவ்வளவு வேணாலும் கிண்டல் பண்ணிக்கோங்க இன்னும் கொஞ்ச நாள் தானே அதுக்கப்புறம் அங்க தான வருவீங்க அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூற



அவளும் சிரித்தபடியே ம்ம்….அங்க தான வருவேன் அப்புறமா உன்னை பாத்துக்கறேன் என்று எடுத்ததும் மரியாதையில்லாமல் கூற

அண்ணி கொஞ்சம் மரியாதையா பேசுங்க எனக்கு வா,போனு பேசினா பிடிக்காது என்று முகத்திற்கு நேராக கூற எனக்கு மரியாதை கொடுக்காத உன்னை நான் எப்படி மரியாதையா பேச முடியும் என்று நேராக அவனைப் பார்த்துக் கேட்டாள்


நான் எப்போ உங்களை மரியாதை இல்லாம பேசினேன்


அன்னைக்கு கோயில்ல வெச்சு மாயாஜாலகாரினு சொல்லல…. அப்புறம் நாக்க தூருத்திட்டு இப்படி மிரட்டல...என்று அவரைப்போலவே செய்து காட்ட


ஐயோ நான் ஏதோ விளையாட்டா பண்ணிட்டேன் அதை இன்னுமா ஞாபகம் வச்சிகிட்டு இருக்கீங்க

விளையாட்டா பண்ணாலும் வினையா பண்ணினாலும் செஞ்சது நீதானே….
எப்படி உன்ன பாத்தாலே
நீ என்னை மிரட்டினது நியாபகத்துக்கு வருதோ அதே போல என்னை நினைக்கும் போதெல்லாம் சக்கரை போடாத டீ நியாபகத்துக்கு வரனும்…


அப்போ சக்கரை போடாம வேணும்னு தான் எனக்கு அந்த டீயை கொடுத்தீங்களா என்று முறைத்தபடி கேட்க

ஆமா வேணும்னு தான் கொடுத்தேன் என் மேலேயும் உனக்கு கொஞ்சம் பயம் வரணும் இல்ல அதனால தான் இப்படி அடிக்கடி மொறைக்கறது,மிரட்டறது,கண்ண ஊருட்டறது இதெல்லாம் என்கிட்ட வெச்சுகாதே அப்புறம் ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி கொடுமையை அனுபவிக்க வேண்டியது வரும்
என்று கூற முதல் முறை மீனாவின் பேச்சு முதல் முறையாக அவனுக்கு பயத்தை கொடுத்தது


அதற்குள்ளாக அவனின் தந்தை வெளியே வரவும் அவரிடம் மிகவும் மரியாதையாகவும் அமைதியாகவும் பேச அவளின் இந்த இரட்டை வேடத்தை கண்டு வியந்து தான் போனான்


விஜய் அதன்பிறகு எதுவுமே பேசாமல் எல்லோரிடத்திலும் தலையை மட்டும் அசைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்


ஏதோ அடி மனதில் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டே இருந்தது தனது அண்ணனிடம் மீனாவை பற்றி தவறாக கூறவே முடியாது ஏனென்றால் அவருக்கு அவளை மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் மீனாவின் பேச்சு வேறு விதமாக இருக்கிறது


முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள் இல்லையா அதேபோல்தான் விஜய்க்கும் ஏனோ முதலில் மீனாவை பார்த்ததுமே பிடிக்கவில்லை

மீனோவோ ஒரு படி மேலே சென்று அவனின் பெயரே பிடிக்கவில்லை என்று தாயிடம் கூறிக்கொண்டிருக்கிறாள்.

அந்த அளவுக்கு இருவரும் சண்டை கோழிகளாய் சிலிர்த்துக் கொண்டிருந்தனர் இப்படியாக செல்ல அனைவரும் எதிர்பார்த்த அந்த திருமண நாள் வந்தது.

எல்லோரும் எதிர்பார்த்தபடி ஒரு கோவிலில் வைத்து மிக எளிய முறையில் செல்வராகவன் மீனாவின் கழுத்தில் தாலியைக் கட்டி திருமதி மீனா செல்வராகவன் ஆக்கிக்கொண்டான்.

அதன்பின் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்துமே எல்லோருக்கும் திருப்திகரமாக நடந்து முடிந்தது விஜய்யோ மீனாவின் தங்கைகளிடம் வேண்டும் என்றே மீனா பார்க்கும் பொழுது வம்பிழுத்தான்.

அவன் நண்பர்களுடன் சேர்ந்து வேண்டுமென்றே மீனாவின் குடும்பத்தாரை நன்கு வேலை வாங்கினான்

அதுமட்டுமின்றி மீனாவின் கடைக்குட்டி தம்பியை வேண்டும் என்றே அவ்வப்போது தலையில் கொட்டிக் கொண்டே இருக்க இதை மேடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மீனாவிற்கு விஜயை பார்த்தாலே பத்தி கொண்டு வந்தது


அதன் பிறகு அனைவரும் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுக்கலாம் என்று சேர்ந்து நிற்க
அவளின் குதி உயர்ந்த காலணிகளை வேண்டுமென்றே விஜியின் காலில் அழுத்தினாள் புகைப்படம் எடுப்பவர் அனைவரும் சிரிங்க என்று கூறும்பொழுது மீனா இதை செய்ய
வலியில் முகத்தை சுருக்கிய விஜய் வினாடியில் முகத்தை சிரித்தபடி மாற்றியவன்

அவளுக்கு மட்டும் கேட்பது போல் சற்று குனிந்து அவள் காதில் என்னதான் என் கால் மேல் ஏறி நின்னா கூட நீங்க எனக்கு மேல போக முடியாது அண்ணி என்றான் அவனின் இந்த பேச்சை கேட்ட மீனா காலை அவன் மீது இருந்து எடுத்துவிட்டு

நான் எதுக்காக உனக்கு மேல போகனும் எப்போ என் காலுக்கு கீழே உன் கால் வந்துருச்சோ அப்பவே உனக்கு மேல தான் நான் இருக்கேன் என்றாள்

இது அண்ணிங்கற மரியாதைகாக நானா ஏத்துகிட்ட வலி அதனால கொஞ்சம் அளவாவே சந்தோஷப்படுங்க என்று கூற

பதில் கூற வாய் திறப்பதற்க்குள் செல்வா மீனாவிடம் போட்டோக்கு நிக்க சொன்னா என்ன வளவளன்னு பேச்சு எதுவா இருந்தாலும் வீட்டில் வந்து பேசுங்க இப்போ ஒழுங்கா நில்லு என்று மீனாவை அடக்கினான்


விஜயும் மீனாவும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு திரும்பியவர்கள் கேமராவை பார்த்து சிரித்தபடி குடும்ப புகைபடத்திற்க்கு நின்றனர்.
 
Top