கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ (ழி)லி-4

Akila vaikundam

Moderator
Staff member
4

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு வந்து சேரும் பொழுது மதியம் தாண்டியிருந்தது.


மணமக்களுக்கு சம்பிரதாயம் ஒவ்வொன்றாய் செய்து முடிக்க மாலை ஆனது…

திருமணத்திற்காக வந்த உறவினர்கள் ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட ஒரு சிலர் கிளம்பிச் சென்றனர்.


செல்வாவும் அவனுடைய தந்தையும் திருமணத்துக்கான செலவுகளை கணக்குப் பார்த்து வெளியே அமர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க உள்ளே மீனா அலங்காரத்துடனே தனித்து விடப்பட்டாள்.

உள்ளறையிலோ விஜய் உறங்கி கொண்டிருக்க ஹாலில் அமர்ந்திருந்த மீனாவிற்கு எங்காவது சாய்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.

ஆனால் இங்கிருப்பது ஒரே ஒரு படுக்கை அறை என்ன செய்வது என்று உட்கார்ந்த இடத்திலேயே சுவற்றில் சாய்வாக அமர்ந்து கண்ணை மூடினாள்

எதேச்சையாக திரும்பிப் பார்த்த செல்வா மீனாவின் நிலையை பாத்து என்ன செய்வது என்று மனம் கலங்கியது அங்கிருந்தபடியே உள் அறையை எட்டிப் பார்க்க அங்கே விஜய் தூங்கிக் கொண்டிருந்தான் இப்பொழுது உடனடியாக தந்தையிடம் இருந்து எழுந்து செல்லவும் முடியாது


தம்பியை போய் எழுப்பி விடவும் முடியாது ஆண்டவா ஏதாவது செய் என்று வேண்டிக் கொண்டவன்

மானசீகமாக மீனாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது இவனின் வருத்தம் அவனின் தாய்க்கு கேட்டதோ என்னவோ

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த ராஜாத்தி எதேச்சையாக முன்னறைக்கு வர அங்கு மீனா சுவற்றில் சாய்ந்தபடி கண்ணயர்ந்து இருக்க உள்ளே எட்டிப்பார்க்க விஜயோ சாஷ்டாங்கமாக கட்டிலில் படுத்திருக்க வந்ததே அவருக்குக் கோபம்

நேராக வந்து விஜயை கோபமாக எழுப்பத் தொடங்கினார் டேய் எதிரிடா முதல்ல என்று


அவன் தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தவன் ஏன்மா இப்போ எழுப்பி விட்டிங்க தூக்கம் வருது என்று மீண்டும் உறங்கச் செல்ல அவனின் கையை பிடித்து தூக்கி உட்கார வைத்தவர்


அங்க பாரு உன் அண்ணி மண்டபத்தில் இருந்து வந்து துணி கூட மாத்தாம உக்காந்து கிட்டு இருக்கா நீ எனனனா இங்கே படுத்து தூங்கிட்டிருக்க


கல்யாணத்துக்கு வந்தவங்க யாராவது பாத்தா நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க முதல வெளியே போடா அவ உள்ள வரட்டும் என்று கூற

அம்மா இது நானும் அண்ணனும் யூஸ் பண்ணிட்டு இருந்த ரூம் தானமா இப்ப திடீர்னு என்னை வெளியே போகச் சொன்னா நான் எங்கம்மா போய் படுத்து தூங்கறது

ம்ம்... போய் ஹால்ல படுத்து தூங்கு அப்படி இல்லன்னா மொட்டை மாடில படுத்து தூங்கு இப்ப மட்டுமில்ல இனி எப்பவுமே உனக்கு அங்கதான் படுக்கை புரிஞ்சுதா என்று ராஜாத்தி கூறவும்

அதிர்ச்சியாக எழுந்து நின்றவன் என்னம்மா சொல்றீங்க டெய்லி நான் ஹால் இல்லனா மொட்டைமாடில படுக்கனுமா எந்த ஊர் நியாயம் இது என்று கத்த ஆரம்பிக்கவும்

யோசிக்காமல் அவனின் வாயிலேயே ஒரு அடி போட்டவர் கத்தாதே எதுக்கு இப்போ கத்தற…

நம்ம வீட்ல என்ன பத்து பெட் ரூமா இருக்கு இருக்கறது இது ஒண்ணுதான் இதுல எப்பவும் போல
நீ வந்து படுத்து கிட்டா அவ எங்கடா போவா முதல்ல வெளிய வா அவ டிரெஸ் மாத்தட்டும்…


அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு படிக்கட்டுக்கு கீழ் இருக்கிற பாத்ரூம்ல போயி அண்ணியை டிரஸ் சேஞ்ச் பண்ண சொல்லுங்க ப்ளீஸ் என்று கெஞ்சினான்

பாரு விஜய் இவ்ளோ தான் உனக்கு மரியாதை நீ முதல்ல எந்திரி இன்னைக்கு தலைக்கு மேல வேலை இருக்கு இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்திலே அண்ணியோட வீட்டிலிருந்து எல்லாருமே வீடு பார்க்க வந்துருவாங்க


அவங்க எல்லாருக்கும் சமையல் ரெடி ஆயிட்டு இருக்கு எல்லாம் சரியா பண்றாங்களா-னு போய் பார்த்துட்டு வா அதுக்குள்ள அண்ணி ரெடி ஆகணும் முதல்ல எழுந்திரு என்று கையை பிடித்து வெளியே இழுத்து வந்தவர் மீனாவின் அருகில் வந்து மீனா டயர்டா இருந்தா உள்ள போய் படுத்துக்கோ உங்க வீட்ல இருந்து வர்ற நேரம் எழுப்பி விடறேன் என்று கூறிவிட்டு செல்ல விஜய்யோ அவளை முறைத்துப் படியே பின்கட்டு பக்கம் சென்றான்


மீனாவிற்கு அறைக்குள் வந்ததும் தான் உயிர் வந்தது போல் இருந்தது வந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாள் ஒருமாதிரியான தர்மசங்கடம் இப்பொழுது நிம்மதியாக அவளின் ஆடைகளை மாற்றி விட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள்.

இடையில் ஒரு முறை வந்து செல்வா அவளைப் பார்த்தான் தூங்கும் பொழுது சிறு குழந்தை போல் தூங்கும் அவள் அழகை ரசித்தவன் பின்பு யாராவது வருகிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மெதுவாக அவள் நெற்றியில் மென் முத்தம் கொடுத்தவன் யாரும் பார்க்காத வண்ணம் வெளியே வந்தான்.


இப்படியாக மணி எட்டை நெருங்கும் வேளையில் மீனாவின் வீட்டிலிருந்து அவள் உறவினர்கள் மற்றும் தாய் தந்தை சகோதரிகள் என ஒட்டுமொத்த குடும்பமும் அவளுக்கு சீர்வரிசை எடுத்துக் கொண்டு அவளின் வீடு பார்க்க வந்தனர்.

அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு மீனாவிற்கு கொண்டுவந்த கட்டில் பீரோ என சீர்வரிசைகள் அனைத்தையும் இறக்கி வைத்து அவர்கள் பத்து மணி மாதிரி கிளம்பிச் சென்றனர்.

ராஜாத்தி அவர்கள் சென்ற பிறகுதான் கொண்டு வந்த சீர் வரிசைகள் அனைத்தையும் பார்த்தார்


பெண் வீட்டிலிருந்து ஒன்றுமே வராது என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு சிறு அதிர்ச்சிதான் காரணம் ஓரளவிற்கு சீர்வரிசை பாத்திரங்கள் பொருட்களும் கொடுத்திருந்தனர்

அதுமட்டுமின்றி அப்பொழுதுதான் மீனாவையும் கவனித்தார் மீனா அலங்காரங்கள் அனைத்தும் களைத்து சாதாரண ஒரு காட்டன் புடவையில் இருந்தாள்


அவள் கைகள், கழுத்து என அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தும் தங்கமாக இருந்தது.
பரவாயில்லை மருமகள் வெளியே சொல்லி கொள்வதுபோல் நகைகளும் சீர் பாத்திரங்களும் கொண்டு வந்திருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டவர்


அன்றைய நாளில் அடுத்த சம்பிரதாயமான முதலிரவிற்கு ஏற்பாடுகள் செய்ய மற்ற பெண்களுடன் சென்றார்.


இங்கு அவர்களுக்கு தேவையான பால் பழங்கள் மட்டும் இனிப்பு வகைகளை தயார் செய்து அருகில் கொண்டுவந்து வைக்க மீனாவிற்கு தான் சற்று பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது
படுக்கையறையை வீட்டு வெளியே வரவேயில்லை.


விஜய்யோ மொட்டை மாடியில் நின்றபடி தாயிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு தனியாக பாய் தலையணை பெட்ஷீட் எனக் கொண்டு வந்து கொடுத்த தாயிடம் அம்மா ப்ளீஸ் மா ஹால்லயாவது படுத்துகிறேன் மொட்டைமாடி வேணாம்மா ரொம்ப கொசு கடிக்கும் என்று கெஞ்ச


அவரோ கொசுவத்தி பத்த வைச்சிகிட்டு படுத்து தூங்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று கூற


இது அநியாயமா என்று கூறிக்கொண்டிருக்கும் போதே உறவினர்கள் ஒவ்வொருவராக மொட்டை மாடிக்கு வர தொடங்கினர்


அனைவரையும் சுற்றி பார்த்த விஜய் இத்தனை பேரும் இங்க என்னோடவா தூங்கப்போறாங்க என்று தாய்க்கு மட்டும் கேட்பது போல் கேட்க


அவங்க மட்டுமல்ல நானும் அப்பாவும் கூட இங்க உன் கூட தான் தூங்கபோறோம் என்றவள்


அம்மா என்று பல்லைக் கடித்தவன் எதுவுமே பேசாமல் அவனுடைய பாய் தலையனையை எடுத்து ஒரு மூலையில் சென்று விரித்துப் படுத்துக் கொண்டான் அவனைப் பார்த்து சிரித்த ராஜாத்தி யோ சற்று நேரத்திற்கெல்லாம் செல்வாவை அழைத்து முன்னாடி கதவை தாள் போட்டுக்கோ நான் மேல போய் படுத்துக்கிறேன் என்று சொல்ல அவனும் எதுக்குமா கொசுக்கடியில் மொட்டைமாடியில தூங்கறீங்க எல்லாரும் கீழ வாங்க இல்லனா நாங்களும் மேலே வரோம் என்று கூற…

அறிவில்லாம பேசக்கூடாது பெரியவனே வீட்டுக்கு வந்த முதல் நாளே மருமகளை கொசுக்கடியில் தூங்க விடப் போறியா சொல்லு


நீங்க ரெண்டு பேரும் ஏதாவது கதை பேசிட்டு தூங்குங்க அதுமில்லாம வீட்டுக்கு நிறைய சொந்தக்காரங்க வந்து இருக்காங்க எல்லாரும் படுக்கணும்னா இங்கே இடம் பத்தாது மொட்டை மாடினா பிரச்சினை இல்ல புரிஞ்சுதா


நாங்க ஏதாவது கதை பேசிகிட்டே இருப்போம் நீங்க ரெண்டு பேரும் காலையிலிருந்து கல்யாணம் ரிசப்ஷன்னு டயர்டா இருப்பீங்க தொந்தரவு இல்லாம தூங்குங்க
என்று நாசுக்காக அவனிடத்தில் புரிய வைத்தவர் மணமக்களுக்கு தனிமையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பின்புறக் கதவை இழுத்துப் பூட்டியவர் மொட்டை மாடிக்கு சென்று இளைய மகனின் அருகிலேயே அவருக்கும் அவருடைய கணவருக்கும் படுக்கையை போட்டவள் தூங்காமல் அமர்ந்து இருந்த சில உறவினர்களுடன் கதை பேச சென்றார்.

செல்வா முன்னறை கதவிற்கு தாள் போட்டவன் படுக்கையறை வர அங்கேயேயோ மீனாவை தங்க பதுமை போல் அலங்கரித்து வைத்திருக்க அவனுக்காக
படபடப்புடன் காத்திருந்தாள்

இவனைக் கண்டதும் பயத்தில் எழுத்து நிற்க அறையின் கதவை பூட்டிய படியே பயப்படாத உட்காரு என்று சிரித்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.


நீ ரொம்ப அழகாயிருக்க மீனா பாத்துகிட்டே இருக்கலாம் என்று கூற


ம்ம்….


ஆமா யாரு உனக்கு இப்படி எல்லாம் அலங்காரம் பண்ணி விட்டது என்று அவன் தோளில் கிடந்த ஒரு மல்லி பூச்சரத்தை தூக்கி பின்புறம் விட்டபடி கேட்க


அவன் விரல் பட்டதும் சற்று உடல் கூச கழுத்தை தோள்களில் வைத்து அழுத்திக் கொண்டு எல்லாம் உங்க சொந்தக்காரங்க தான் என்று தயங்கிய படி கூறினாள்



பிறகு அவளின் கையை மெதுவாக எடுத்து தனது மடியின் மீது வைத்துக்கொண்டு மீனா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்

அதுக்கு முன்னாடி நீ போட்டிருக்கிற டிரஸ் கஷ்டமா இருந்தா மாத்திக்கோ நான் முன்னாடி ரூம்ல கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு இருக்கேன் என்று கூறியவன் ஹாலில் சென்று டிவியை ஆன் செய்தவள் ஒரு செய்தி தொலைக்காட்சியை சத்தமின்றி வைத்துவிட்டு கீழே செல்லும் செய்திகளை வாசிக்க தொடங்கியிருந்தான்


உள்ளே மீனாவும் அவசரமாக புடவை மாற்றியவள் கழுத்திலும் கைகளிலும் தேவைக்கு அதிகமாக போட்டிருந்த நகைகளையும் கழற்றி பத்திரப்படுத்திக் கொண்டாள் அதன்பிறகு தயங்கியபடி முன்னறைக்கு வர அவளைப் பார்த்ததும் சிரித்தவன் அவளுக்கும் அமரும் வகையில் சோபாவில் இடம் கொடுத்தான்.


அவன் பக்கத்தில் கூச்சப்பட்டு கொண்டே அமர சற்று நேரம் அவளும் தொலைக்காட்சியைப் பார்த்தாள்.. பிறகு அவளுக்குத் தூக்கம் வருவது போல் இருக்க தூங்கி வழிய ஆரம்பித்தாள்.


அவளின் முகத்தை கண்டவன் தூக்கம் வருதா மீனா என்று கேட்க அவள் ஆமாம் என்று தலையசைத்தாள் பிறகு வேகமாக இல்லை என்று தலையாட்ட

தூக்கம் வந்தா போய் தூங்கு மீனா எனக்குமே ரொம்ப டயர்டா இருக்கு பெரியவங்க சொன்ன மாதிரி எதுவும் இன்னைக்கு வேணாம் நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்க உனக்கு கொஞ்சம்
இந்த வாழ்க்கை செட் ஆனதுக்கப்புறம் நமக்குள்ள எல்லாம் இருக்கட்டும்னு நினைக்கிறேன் உனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே என்று கேட்க


அவள் மனதில் பெரிய நிம்மதி வந்தது ஏனென்றால் அவளுக்குமே திருமணம் ஆன அன்றே கணவனுடன் தாம்பத்தியம் என்ற விஷயம் அவ்வளவு இனிப்பானதாக இல்லை

சற்றுத் தெளிந்த அவளின் முகம் பளீரென புன்னகை சிந்தியது
சரி ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களே என்று கேட்க


அதான் யோசிச்சிட்டு இருக்கேன் ஏன்னா இன்னைக்கே சொல்லி ஏன் உன்னை பயமுறுத்தனும்னு பாக்கறேன்
என்று அவன் இழுக்க



என்னைக்கு இருந்தாலும் நீங்க சொல்லித்தான ஆகணும் அப்படின்னா அதை இன்னிக்கே சொல்லலாமே ஓரளவுக்கு இந்த குடும்பத்தை பத்தி தெரிஞ்சதுதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் எதுக்கு என்கிட்ட மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லுங்க நீங்க சொல்றபடி நான் கேட்டு நடந்துக்கிறேன் என்று அவள் கூற


எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உன் வாயால இதை கேக்கும் போது உனக்கு வயசு தான் கம்மி ஆனா நீ ரொம்ப மெச்சூடான பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் என்றவன்

சரி நான் சொல்ல வந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிடறேன்

அது வந்து…. அது வந்து…. என்று இழுக்க

ம்ம்... சொல்லுங்க என்று ஊக்கப்படுத்தினாள்.

எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல மீனா நான் சொல்றத கேட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டா வாழ்க்கை முழுசும் நரகமாயிமோனு பயமா இருக்கு

ஆனாலும் நம்முடைய வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் ஆரம்பிக்கிறது தான் எனக்கு சரின்னு படுது


இப்போ இந்த வீட்டோட வருமானம் ரொம்ப கம்மிதான் அது இந்த வீட்டுல சாப்பாடு செலவு, வாடகை , தம்பியோட படிப்பு, இதுக்கெல்லாம் தான் சரியா இருக்கு


அதுமட்டுமில்லாம இது சிங்கிள் பெட்ரூம் இருக்கிற வீடுதான்


நாங்க ரொம்ப சின்ன வயசிலேயே இந்த வீட்டுக்கு வந்துட்டோம் அப்போ
தான் இந்த வீட்டை கட்டி இருக்காங்க தனி வீடுங்கறதால வந்தோம்...

முதல்ல காலனி மாதிரி தான் குடியிருந்தோம் அங்க நிறைய பிரச்சனை அம்மாவோட அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க யாராவது டெய்லி சண்டை போடுவாங்க அதான் இந்த மாதிரி தனி வீடா பாத்து குடிவந்தோம் வாடகை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் தனியா இருக்கிறதுனால நம்மளோட பிரைவசி பாதிக்காது


நாங்க குழந்தைகளாய் இருக்கும் போது இந்த சிங்கிள் பெட்ரூம் கரெக்ட்டா இருந்தது வளரவளர நானும் தம்பியும் பெட்ரூம்ல படுத்துப்போம் அப்பாவும் அம்மாவும் ஹாலில் படுப்பாங்க இதுவரைக்கும் எங்களை இது பாதிக்கல

இப்போ நீ வந்துட்ட இந்த வீட்டுல விஜயும் இருக்கிறான் சோ நம்ம கொஞ்ச நாள் இந்த வீட்டில அட்ஜஸ்ட் பண்ணி இருந்து தான் ஆகனும்

அவன் படித்து முடித்து ஒரு வேலைக்கு போனா கொஞ்சம் பெரிய வீடா பார்த்து வாடகைக்கு போகலாம் அப்படி இல்லன்னா பின்னாடி இடம் இருக்கு ஹவுஸ் ஓனர் கிட்ட பேசி ஒரு ரூம் கூட எடுத்து தர சொல்லலாம் ஆனா எதுவா இருந்தாலும் வாடகை ஏறும் அதனால்தான் அந்த யோசனையை தள்ளி வச்சிருக்கோம் நீ கொஞ்ச நாள் அது புரிஞ்சுகிட்டு இந்த வீட்டில அட்ஜஸ்ட் பண்ணி இருக்கனும்

அப்புறம் விஜய் ரொம்ப சின்ன பையன் ரொம்ப விளையாட்டுப் பையன் கடைக்குட்டி வேற ஏதாவது வாய் தூடுக்கா பேசினாலோ ஏதாவது கோபமா நடந்து கிட்டாலோ அதை பெரிசு படுத்தாத


என் அம்மா பத்தி நான் உன்கிட்ட ஏதும் சொல்லப் போறதில்ல அம்மாவுக்கு பெண் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம் சொல்லப்போனா வயசு வித்தியாசத்தை பாக்கம ரெண்டாவதா குழந்தையை பெத்துகிட்டதே அது பெண் குழந்தையா இருக்காதாங்கற ஒரு எதிர்பார்ப்பில தான்


அதனால அவங்க ஏதும் உன்னை சொல்லப் போறதும் இல்ல உன்ன ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க முடிஞ்ச அளவு வீட்ல ஏதாவது பிரச்சனைனா அதை என்கிட்ட கொண்டு வரணும்னு பார்க்காத


நீயே சமாளிச்சு கோ நமக்குள்ள கொஞ்ச நாளைக்கு எதுவும் வேணாம்னு தோணுது விஜய் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போய் நம்மளோட பொருளாதாரம் கொஞ்சம் சரியானதுக்கப்புறமா குழந்தை அந்த மாதிரி பாத்துக்கலாம்


இந்தக் குடும்ப இதுவரைக்கும் ஒத்துமையா நல்லவிதமா போயிருக்கு அது உன்னால கலைஞ்சதா உடைஞ்சதா இருக்க கூடாது அதில உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான்.

மீனா அதுவரை பொறுமையாக அவன் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டவள்

இப்போ என்ன சொல்ல வரீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்ல தான் இருக்கப் போறோம் உங்க தம்பி படித்து முடித்து வேலைக்குப் போற வரைக்கும்
நமக்காக ஒரு குழந்தை வேணாம்,,
அதான என்று இவ்வளவு நேரம் அவன் சுற்றிவளைத்த விஷயங்களை இரண்டே வரியில் சொல்லி முடித்தாள்.

அவளின் புரிதலை பார்த்து மிரண்டுபோனவன்
இத தான் நான் சொல்ல வந்தது என்று கூற



அப்புறம் என்னால இந்த வீட்டுக்குள்ள என்னைக்கு சண்டை வராது,நம்ம குடும்பம் பிரிய என்னைக்கும் நான் காரணமா இருக்க மாட்டேன்... சரி இப்போ போய் நாம தூங்கலாம்ல என்று அவனைப் பார்த்துக் கேட்க


அவனோ என் மேல உனக்கு எந்த கோபமும் இல்லல என்று கேட்க


ம்ச்...இல்ல என்றாள்.

சரி நீ போய் தூங்கு நான்கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு வந்தர்றேன் என்று அனுப்பி வைத்தவனுக்கு மீனாவை பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது

கடவுளின் பாக்கியம் தான் அதனால்தான் தன்னை இத்தனை பெண்கள் வேண்டாம் என்று நிராகரிக்கும் கூட தனக்கான ஒரு பெண்ணை அவர் தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார் என்று நினைத்தவன் சற்று நேரம் தொலைக்காட்சியை பார்த்து விட்டு மீனாவின் அருகில் சென்று அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு நிம்மதியாக உறங்கினான்.


காலையில் எப்பொழுதும் நேரமாகவே எழுந்து பழகியதால் செல்வா வழக்கம்போல சீக்கிரமாகவே எழுந்துவிட்டான் அருகில் உறங்கும் மனைவியை பார்க்க அவளோ அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்


ஆதுரமாய் அவளின் தலையை நீவி விட்டவன் அவளுக்கு நன்கு போர்த்தி விட்டு பின் கதவையும் முன் கதவையும் திறந்து விட்டான்

சற்று நேரத்திற்கெல்லாம் தனது தாய் வந்து உறவினர்களுக்கு எல்லாம் சமையல் வேலையை ஆரம்பிக்க இவன் என்னென்ன வேண்டும் என்று கேட்டபடி கடைக்கு செல்ல ஆயத்தமானான்.


உறவினர்கள் பல பேர் ஊர் செல்ல தொடங்கியிருந்தனர்...சிலபேர் இன்னும் மேலே தூங்கிக் கொண்டு இருக்கின்றனர்

தாயாரோ டேய் இன்னைக்கு நீ போக வேண்டாம் அப்பா போகட்டும் நீ வீட்ல இரு என்று கூற

எப்பவுமே நான் தான ம்மா போறேன் அதனால இன்னைக்கும் நான் போயிட்டு வரேன் என்று கூறியவன்

அம்மா உங்களுக்கு ஹெல்ப்புக்கு வேணா மீனாவை எழுப்பி விடட்டுமா என்று கேட்க


ராஜாத்தியோ ஒன்னும் வேணாம் டா நேத்து தான் இங்க வந்திருக்கறா மறுநாளே வேலையைக் கொடுத்து அவளை பயமுறுத்தனுமா சொல்லு?

மெதுவா அவளா வந்து பழகி செய்யும் போது செய்யட்டும் அப்படி இல்லன்னா வழக்கம் போல எப்போதும் நானே செஞ்சுட்டுப் போறேன்

இப்ப நீ முதல்ல கடைக்கு போயிட்டு வா வந்ததும் எல்லாரும் மருதமலை கோயிலுக்கு போயிட்டு வரணும் அவங்க அம்மாவும் அப்பாவும் வரேன்னு சொல்லி இருக்காங்க நீ வந்ததும் மீனாவ கொஞ்சம் எழுப்பி விடு அவளையும் சீக்கிரமாக கிளம்ப சொல்லு அது ஒன்னு மட்டும் போதும் என்று கூறியவர் அவளை கடைக்கு அனுப்பி விட்டு மளமளவென அடுப்பு வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்


இங்கு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருந்த விஜய்க்கு வெயில் சுள்ளென்று முகத்தில் பட எரிச்சலுடன் எழுந்தவன் சோம்பல் முறித்த படி கீழே வந்தான்


தாயார் கொடுத்த காபியை பருகியபடியே முன்னறைக்கு வர கிளம்பிச் செல்லும் ஒவ்வொரு உறவினர்களுக்கும் தலையசைத்து வழியனுப்பி வைத்தான்.

டம்ளர் வாங்க வந்து தாயிடம் அம்மா அப்பா எங்கே என்று கேட்க

உங்க அத்தையை பஸ் ஏத்தி விட பஸ் ஸ்டாண்ட் போயிருக்காங்க …

அப்போ அண்ணன்?என்று சற்று திறந்திருந்த படுக்கையறை எட்டி பார்த்தபடி கேட்க

விஜயின் பின்தலையில் ஒடி அடி வைத்த ராஜாத்தி என்னடா இது கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம பெட்ரூமை எட்டிப் பார்க்கிறது என்று கோபப்பட்டார்.

தலையை தேய்த்து விட்ட படியே நேத்து வரைக்கும் அது என்னோட பெட்ரூம் தெரியும்ல்ல


இனிமே அது உன் அண்ணன் அண்ணியோட பெட் ரூம் அதையும் தெரிஞ்சுக்கோ என்று கூற

அம்மா காலையிலேயே என்ன ரொம்ப டென்ஷன் பண்றீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் எங்காவது போயிடுவேன்


சந்தோஷமா போடா எனக்கு ஒரு தலைவலி குறையும்...ஆனா அதுக்கு முன்னாடி இன்னைக்கு ஒருநாள் மட்டும் எங்க கூட மருதமலை கோவிலுக்கு வந்துட்டு அப்புறமா போ

அம்மா எதுக்குமா கோவிலுக்கு நா வரல நீங்க எல்லாம் போயிட்டு வாங்க


டேய் காலைலேயே என்கிட்ட வம்பு இழுக்காதே இன்னைக்கு உங்க அண்ணனையும் அண்ணியையும் கோவிலுக்கு கூட்டிட்டு போக அவங்க வீட்டுல இருந்து ஆளுக வராங்க நாம போகலைன்னா மரியாதையா இருக்காது அதனால பேசாம கிளம்பு


கிளம்பு கிளம்புனா எப்படி கிளம்பறது என் டிரஸ் எல்லாம் பெட்ரூம் ல இருக்கு என்று கூற


உடனே பெட்ரூம் உள்ளே சென்ற ராஜாத்தி அவனின் ஒரு சட்டை பேன்ட்டை எடுத்து வந்து அவனின் முகத்தில் தூக்கி எறிந்து

இந்தா இதானே உன் டிரஸ் போ போய் பின்னாடி இருக்குற பாத்ரூம்ல குளிச்சுட்டு கெளம்புற வழியை பாரு
இல்லனா உன் சித்தப்பா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க கூட போய் டிரெய்ன் ஏத்தி விட்டுட்டு வா என்று கூறியபடி சமையல் அறைக்குள் செல்ல


கோபமாக தாயை முறைத்தவன் கீழே விழுந்திருந்த அவனின் ஆடைகளை கையில் எடுத்துக்கொண்டு வர படுக்கையறை கண்ணில் பட்டது.அங்கு எட்டிப்பார்க்க உள்ளே மீனா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவன்.மெதுவாக கதவை இழுத்து சாத்தினான் பிறகு அதன் லாக்கை விடுவித்தன் காலால் கதவை ஒரு உதை விட அது வேகமாக திறந்து பெருத்த சத்தத்தோடு சுவற்றில் போய் மோதியது.

சத்தத்தில் பதறி எழுந்த மீனா பயந்தபடி சுற்றும் முற்றும் பார்க்க அப்பொழுதுதான் அவளுக்கு நிதர்சனம் உறைத்தது அவளின் தாய் வீடு என்று ஆழ்ந்து உறங்கி விட்டாள் ஆனால் இது அவளின் தாய் வீடு அல்ல அவளின் புகுந்த வீடு மாமியார் என்ன சொல்வார்களோ என்று பயந்தபடி எழுந்தவள் வாசலை எட்டிப் பார்க்க வாசலில் யாரும் இல்லை,உடனே நேராக குளியலறையில் புகுந்து கொண்டாள்.

கதவில் ஃபுட்பால் விளையாடிய விஜய் மீனாவைப் பயமுறுத்தியதை நினைத்து சிரித்துக் கொண்டு வர எதிர்ப்புறம் அவளின் தாய் கை கட்டியபடி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளைக் கண்டதும் ஒன்றும் தெரியாதது போல் தலைகுனிந்தபடி ராஜாத்தியை கடந்து செல்ல விஜயை எட்டி பிடித்து அவனின் காதை பிடித்து திருகியவள்


எதுக்குடா இப்போ அவளை பயன்படுத்திட்டு வர்ற என்று கேட்டார்


நான் யாரை பயமுறுத்தினேன் நான் பாட்டுக்கு குளிக்க போறேன் கோவிலுக்கு போகனும்ல வழிவிடுங்க என்று காதை பிடித்துக் கொண்டிருந்த தாயின் கைகளை நாசுக்காக தட்டி விட்டான்


பொய் சொல்லாதே நான் கதவ தொறந்து வச்சுட்டு தான் வந்தேன் மறுபடியும் கதவு போய் சுவத்துல அடிக்குதுனா என்ன அர்த்தம் யாரோ கதவுல போய் ஃபுட்பால் ஆடிருக்காங்கனு அர்த்தம்


நீதான் இந்த வேலையை அடிக்கடி செய்வ எதுக்குடா அப்படி பண்ணின அவ தூங்கிட்டு இருக்கா இல்ல என்று அவனை மிரட்ட

பின்ன நேத்து வரைக்கும் அந்த ரூம்ல இவ்ளோ நேரம் நான் தூங்கிட்டிருந்தேன் ஆனா இன்னைக்கு ஒரே நாள்ல மஹாராணி மாதிரி அவ தூங்கிட்டு இருக்கா அப்புறம் எனக்கு கோவம் வராதா என்று கூற


டேய் அவ இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு டா உனக்கு அண்ணிடா யாரோ ஒருத்தி மாதிரி அவளை பார்த்து பொறாமை படற
யாராவது பார்த்தா சிரிக்கப் போறாங்க என்று கூற


அவளை பார்த்தாளே எனக்கு அண்ணினு தோணல அண்ணன் மூஞ்சிக்காக அவளை விட்டு வைச்சிருக்கேன் இல்லன்னா என்று கூற


வாயில் ஒரு அடி போட்டவர் என்னடா மரியாதை இல்லாம அவ இவனு பேசிகிட்டு ஏதோ வாய் தவறி வந்திடுச்சினு கவனிக்காத மாதிரி விட்டா மறுபடியும் அதே மாதிரி பேசற ஒழுங்கா மரியாதையா பேச பழகிக்கோ இதை மட்டும் பெரியவன் கேட்டா எவ்ளோ சங்கடபடுவான்…

அண்ணனுக்காக எல்லாம் மரியாதை குடுக்க முடியாது ….என்று சத்தமாக கூறியவன்

மரியாதை கொடுக்கிற மாதிரி நடந்துக்கிட்டா நா ஏன் மரியாதை கொடுக்காம இருக்க போறேன்…என்று தனக்குள்ளாக கூறிக்கொண்டான்

இங்க பாரு விஜய் அவ என்ன பண்ணினாலும் அவளுக்கான மரியாதையை நாம குடுத்து தான் ஆகனும்... இல்லன்னா வேற வழி இல்ல உன் அண்ணன் கிட்ட சொல்லி உன்னை என்ன பண்ணணுமோ அதை நான் பண்ணுகிறேன் என்றவரிடம்


அண்ணன்கிட்ட என்னம்மா சொல்லுவீங்க சொல்லுங்க...என்று சத்தமாக கேட்ட விஜயை பார்த்து ராஜாத்தி சற்று நக்கலாக

ஹான்….அது என்று அவர் தொடங்குவதற்குள் அவர்கள் இருவருக்கும் பின்புறமும் நின்றிருந்த செல்வா என்னமா என் கிட்ட சொல்லனும் சொல்லுங்க என்று கேட்டபடி நின்றிருக்க


தனது இளைய மகன் மீனாவை மரியாதை இல்லாமல் பேசியதை பெரிய மகன் கேட்டிருப்பானோ என்று பயந்த ராஜாத்தி மகன்கள் இருவருக்கும் இதனால் சண்டை வர வேண்டாம் என்று பெரியவனை சமாளிக்கும் பொருட்டு அது ஒன்னும் இல்லடா செல்வா


நம்ம மீனா பாக்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்காளாம்
அது மில்லாம இவனை விட வயசு கம்மியா இருக்காம் இவனுக்கு அதனால அவளைப் பாத்து அண்ணினு கூப்பிட மாட்டானாம் பேர் சொல்லி தான் கூப்பிடுவேன்னு காலையிலிருந்து எங்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கான்


அதான் உன் அண்ணன்கிட்ட சொல்லு அவன் சரினா எப்படியோ கூப்பிட்டுக்கோனு சொல்லிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீ வந்து நிக்குற நீ வந்ததை நான் பாக்கல


நீ வந்ததை பாத்திருந்தா உன் கிட்டயே நான் கேட்க சொல்லி இருப்பேன் என்று அவர் ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறி வைக்க


செல்வா விஜயைப் பார்த்து டேய் விஜய் நீ அவளைப் பெயர் சொல்லி கூப்பிட்டாலும் மரியாதை இல்லாமல் கூப்பிட்டாலும் நாலுபேர் முன்னாடி அவளை நீ அறிமுகப்படுத்தும் முறை என்னோட அண்ணின்னு தான்


அதனால நீ அவளை எப்படி வேணாலும் கூப்பிடலாம் மரியாதை மனசுல இருந்தா போதும்


அதுக்கு ஒரு உறவு முறை கொடுத்து தான் மரியாதை கொடுக்கணும்னு அவசியமில்லை புரிஞ்சுதா

இப்போ என்னை நீ என்னைக்கு மரியாதையா பேசி இருக்க ஆனாலும் நான் உனக்கு அண்ணன் தானே அதுபோல மீனாவும் உனக்கு அண்ணி தான்


அதனால உனக்கு எப்படி விருப்பமோ அப்படி கூப்பிடு அதுக்காக அம்மா கிட்ட எல்லாம் சண்டை போட்டுட்டு இருக்காதே என்றவன்


அம்மா கேட்டதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் எல்லாம் சரியா இருக்கானு பாருங்க என்று கூற அவர் விட்டால் போதும் என்று வாங்கிக் கொண்டு சமையலறை ஓட

விஜயோ வெளியில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொள்ள இவர்கள் சம்பாசனை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த மீனா வாசற்படியில் நின்று செல்வாவை முறைத்துக் கொண்டு நின்றாள்.

தொடரும்...
 
Top