6
மேலே செட் அமைத்த விஜய் முக்கியமான பொருட்கள் எல்லாமே அவனுடைய ரூமுக்கு மாற்றி விட்டான்.
முடிந்தளவு கீழே வருவதையும் மீனாவை சந்திப்பதையும் தவிர்க்க ஆரம்பித்தான்
ராஜாத்தி சமைப்பது ஏதாவது கொடுப்பது என்றாலும் கூட கீழே அவனை அழைப்பதில்லை அவரே சென்று கொடுத்து வருவார்
ஆனால் மீனா எப்படியும் ஒரு நாள் இரண்டு முறையாவது மொட்டை மாடிக்கு செல்வாள்
துவைத்த துணிகளை காய போடுவதற்கு, காய்ந்த துணிகளை எடுப்பதற்கு என
ஏதாவது ஒரு நாள் மழை வருவது போல் இருந்தால் விஜயே துணியை எடுத்துக் கொண்டு கீழே வைத்து விட்டு சென்று விடுவான் அப்படி இல்லை என்றால் துணிகளை எடுத்து தன்னுடைய ரூமில் வைத்துக் கொள்வான்
ராஜாத்தி செல்லும்பொழுது கீழே எடுத்து வந்து விடுவார் இப்படியாக நாட்கள் செல்ல செல்ல விஜய்க்கு இரண்டாம் வருட படிப்பு முற்றிலும் முடிந்து மூன்றாம் வருடத்தில் இருந்தான்
அவனுடைய பார்ட் டைம் ஜாப்பில் சம்பளம் பெரியதாக வரவில்லை ஆனால் ஷேர் மார்க்கெட்டிங் பற்றி நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடிந்தது…
மீனா விற்கும் செல்வா விற்கும் இயல்பாகவே தாம்பத்ய வாழ்க்கை ஆரம்பமானது, அவர்களுக்குள்ளாகவே பேசி குழந்தை மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு வேண்டாம் என்று தள்ளி வைத்திருந்தனர்.
இப்பொழுது மீனா அப்போது விஜயின் அறையை பெருக்குபவதும் ஆடைகளை மடித்து வைப்பது என ஒரு சில வேலைகளை வேண்டாவெறுப்பாக செய்யவும் ஆரம்பித்திருந்தாள் மாமியாரின் வாய்க்கு பயந்து ஏனென்றால் திருமணமாகி ஓராண்டு மேல் ஆகிவிட்டது விஜய் இப்பொழுது கடைசி கட்ட பருவத் தேர்வில் இருக்கின்றான்.
அவ்வப்போது அவன் ரூமில் பீர் பாட்டில் இருப்பதை பார்த்தாலும் இல்லை சிகரெட் துகள்களை பார்த்தாலும் அப்படியே எடுத்து வந்து ராஜாத்தியிடம் காமித்து விடுவாள் மீனா அவரும் மேலே சென்று பிடி பிடி என பிடித்துக் கொள்வார்
அவனின் புகைப்பிடிக்கும் பழக்கமும்
நாளுக்கு நாள் அதிகரிக்க இடையிடையே பீர் பாட்டில் அதிக அளவில் காணப்பட ராஜாத்திக்கு சற்று பயம் வர ஆரம்பித்தது
அவனை இப்படியே மாடியில் தனியாக வைத்தால் அவன் கெட்டு விடுவான் என்று யோசித்தவர் மாடியில் இனிமே தூங்குவதற்கு மட்டுமே மற்ற எல்லா வேலைகளையும் ஹாலிலேயே வைத்து செய்து கொள் என்றவர் ஹாலில் பாதியை மறித்து அவனுக்கு ரூம் போல் சற்று மாற்றி கொடுத்தனர்.
இப்போது மீனாவின் மேல் அவனுக்கு கோபம் மட்டுமல்ல சிறு அளவில் வெறுப்பும் வந்திருந்தது தனது தனிமையை குழைத்து விட்டதாக எண்ணியவன் பழையபடி மீனாவை சீண்ட ஆரம்பித்தான்.
கதவிற்கு தாள் போடாமல் அவள் பகல் நேரத்தில் தூங்கினால் வேண்டுமென்றே கதவில் புட்பால் விளையாடுவது,
அவள் பயந்து கதவை தாள் போட்டு தொங்கிக் கொண்டிருந்தால் வேகமாக கதவை தட்டி விட்டு ஓடுவது இப்படி ...
அவ்வப்போது பல வேலைகள் அவளுக்கு இழுத்து விடுவது, வேண்டும் என்றே எதையாவது கீழே கொட்டுவது , துவைத்து காயவைத்து துணியில் வேண்டுமென்றே கைகளை துடைப்பது இப்படி பலவாறாக அவனை சீண்டினான்
மீனா அவனுக்கு காபி கொடுத்தால் உப்பு போட்டுக் கொடுப்பது இல்லை என்றால் சர்க்கரை போடாமல் கொடுப்பது அவனுக்கு கொடுக்கும் உணவில் மட்டும் காரம்,உப்பு, என்று எதையாவது வேண்டுமென்றே அதிகமாக போட்டு அவனின் வயிற்றில் கை வைக்க
அவனோ பதிலுக்கு அவளுக்கு ஆங்கில மொழி தெரியாது என்று தெரிந்து கொண்டவன் அவள் முன்பாக வேண்டுமென்றே ஆங்கிலத்தில் அண்ணணுடன் பேசுவது, வேண்டுமென்றே செல்வாவை ஊர்சுற்ற அழைத்துச் செல்வது, தன்னுடன் தங்கவைப்பது என பழிதீர்த்தான்.
அவனின் சீண்டுதல் பொருக்காமல் அவ்வப்போது பயங்கரமாக சண்டையிட தொடங்கினான் இருவருக்குமே வாய் வார்த்தையில் மரியாதை என்பது துளியும் கூட இருக்காது ஏக வசனத்தில் பேசிக் கொள்கின்றனர்
ஆனால் அதை அவர்களுக்குள்ளாகவே முடித்துக் கொள்வர் இந்தப் பக்கம் இவன் ராஜாத்தி இடமும் கூறுவதில்லை அந்த பக்கமாக அவள் செல்வாவிடம் கூறுவதில்லை ஆனால் இருவருமே சண்டைக்கோழிகளாக தினம்தினம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து இருவருமே நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ராஜாத்தியோ அவ்வப்போது மீனாவிடம் ஜாடைமாடையாக கேட்டுக் கொண்டே இருக்கிறார் ஏதாவது விசேஷம் உண்டா என்று
மீனாவும் செல்வாவும் விஜயின் படிப்பிற்காக குழந்தை பெறுவதை தள்ளி வைத்திருப்பது அந்த வீட்டில் யாருக்குமே தெரியாது
மீனாவும் இதை மனம் முன்வந்து ஒத்துக் கொண்டதால் அவள் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள்
ஆனால் சுற்றியிருப்பவர்கள் அவளின் தாயார் என எல்லோரும் அதைப் பற்றியே பேச தொடங்க அவளுக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டால் என்ன என்று அவ்வப்போது செல்வாவை நச்ச தொடங்கி இருந்தாள்
இந்த சமயத்தில்
தான் விஜய் மூன்று ஆண்டுகள் கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தான்.
படிப்பு முடிந்து வேலைக்குச் செல்வான் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவனோ மேல்படிப்பு படிக்கப் போவதாக சொல்லி மேல் படிப்பிற்க்காக அப்ளிக்கேஷன் வாங்கி வந்து விட்டான்
அவனின் ஆசைக்கு குறுக்கே நிற்காத குடும்பத்தினர் அனைவரும் அவனுக்காய் மீண்டும் தியாகம் செய்ய தயாராக இருந்தனர் மீனா மீண்டும் இரண்டு ஆண்டுகள் குழந்தை பெறுவதை தள்ளி வைக்கிறாள்.
செல்வாவோ அவனின் ஒட்டு மொத்த சேமிப்பு பணத்தையும் எடுத்து மிகப்பெரிய தொகையை அட்மிஷன் பீஸாக கட்டி அதில் சேர்த்தும் விட்டான்
தாய்க்கோ இது மிகவும் தர்மசங்கடமான நிலைமை தான் தன்னுடைய இளைய மகனுக்காக மூத்த மகனும் மருமகளும் நிறைய தியாகங்கள் செய்வது அவருக்குப் புரிகிறது
ஆனால் இளைய மகனின் வாழ்க்கை என்று வரும்பொழுது அவர் சற்று சுயநலமாக யோசிக்கத் தொடங்கினார்
அதனால் எதையும் கண்டுகொள்ளாமல் மௌனமாகவே இருக்கிறார்
ஒருவேளை அவர் விஜயிடம் எடுத்துக்கூறி வேலைக்குச் சென்றுகொண்டே படி என்று கூறி இருக்கலாம்
அப்படி இல்லை என்றால் செல்வாவிடம் சேமிப்பு முழுவதுமாக செலவு செய்யாதே அவனுக்கு எஜுகேஷன் லோன் மாதிரி ஏதாவது போட்டு அவன் பொறுப்பை அவன் கையிலேயே குடு என்றாவது கூறியிருக்கலாம் அதுவும் அவர் செய்யவில்லை
அவருக்கு இப்பொழுது தனது இளைய மகன் எப்படியாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் இதை விட வேறு ஒரு நல்ல வீட்டுக்குச் செல்லவேண்டும்
மூத்த மகனையும் மறுமகளையும் தனியாக குடியமர்த்த வேண்டும் தானும் தனது கணவரும் இளைய மகனுடன் செட்டில் ஆக வேண்டும் என்று எண்ணியவர் சற்று சுயநலமாக யோசிக்கிறார்.
அதனால் கணவரின் சம்பளத்திலிருந்து சேர்த்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புத் தொகையை பற்றி அவர் வாயே திறக்கவில்லை
இதை கவனித்த கேசவன் கூட தனிமையில் ராஜாத்தியிடம் கேட்க
நம்ம கிட்டதான் ஓரளவுக்கு பணம் இருக்குதே அதை இளையவன் படிப்புக்கு செலவு செய்யலாமே என்று கேட்க
கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருங்க நம்ம கையில காசு இருந்தா தான் நமக்கு மரியாதை ,
நீங்க வேலைக்கு போயிட்டு இருக்கும்போது என் மருமக என்ன கொஞ்சம் கீழ தான் பார்கறா
என் புருஷன் சம்பாத்தியத்துல தான் எல்லாருமே சாப்பிடறீங்கனு நாளைக்கு நீங்க வேலையை விட்டு நின்னதுக்கு அப்புறமும் அவ இதே மாதிரி தான் பாப்பா
நம்ம கையில காசு இருந்தா தானே அவளை அதிகாரம் பண்ணிட்டு இங்க வாழ முடியும் எல்லாத்தையும் எடுத்து அவன் படிப்புக்காக கொடுத்துட்டா நம்ம கையில் என்ன இருக்கும், அவன் நல்லாத்தானே சம்பாதிக்கறான் அவன் செய்யட்டும் என்று
கணவரை அடக்கினார்.
இப்பொழுது விஜயின் கல்லூரி செலவு அதிகமாகிறது தந்தைக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் ரிட்டையர்மென்ட் என்று அவர்கள் முறையாக அறிவிக்க அவர்களின் வீடு செல்வாவின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது
விஜய்க்கு இது மிகவும் தர்ம சங்கடம் தான்... தாயிடம் நான் வேண்டுமானால் மேல்படிப்பு படிக்க வில்லை வேலைக்கு செல்கிறேன் என்று அவனே நிலமை அறிந்து கேட்க அவரோ இல்ல இல்ல நீ படி படிப்பை நிறுத்தாதே என்று கூறினார்
செல்வாவும் அதை தான் வழிமொழிந்தான். நீ நல்லா படிச்சா இது போல எவ்வளவோ பணம் சம்பாதிக்கலாம் அப்போ அண்ணன் கிட்ட பணம் இல்லனா கூட உன் கிட்ட உரிமையா வாங்கிப்பேன் அதனால படிப்பைவிட வேணாண்டா தம்பி
நீ படித்து முடித்ததற்கு அப்புறம் எங்க வேணா போயிக்கோ எவ்வளவு கடன் ஆனாலும் உனக்காக நான் செலவு செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூற
வீட்டில் பொருளாதாரப் பிரச்சினை மெதுவாக தலை தூக்கத் தொடங்கியது... என்ன செய்வது என்று எல்லோருமே விழிபிதுங்கி முழித்துக் கொண்டிருக்க
மீனாவின் கல்வித் தகுதியை வைத்து அவளை வேண்டுமானால்
வேலைக்கு அனுப்பலாம் என்று ராஜாத்தி செல்வாவிற்கு யோசனை சொல்ல
செல்வாவிற்கு அவளை வேலைக்கு அனுப்ப துளியும் விருப்பம் இல்லை அவளை எதுக்கும்மா வேலைக்கு அனுப்பனும் இன்னும் ரெண்டு வருஷம் தானே நம்மால சமாளிக்க முடியாதா அப்பா வேலையை விட்டா அவருக்கு கொஞ்சம் பணம் வர தானே செய்யும் அதை வைச்சு தம்பியோட மீது படிப்பு செலவை பார்க்க முடியாதா என்று எதார்த்தமாக செல்வா கேட்க
என்ன செல்வா அப்பா இன்னும் வேலையே விட்டே நிக்கல அதுக்குள்ள அவரோட பணத்துக்கு நீ கணக்கு போட்டுட்டு இருக்கிறியா
வேண்டவே வேண்டாம் நீ உன் பொண்டாட்டிய வீட்டுக்குள்ளேயே வச்சுக்கோ அவளை எங்கயும் அனுப்ப வேணாம்
சின்னவனோட படிப்புக்கு நாங்க என்ன பண்ணணுமோ அதை நாங்க பாத்துக்குறோம் உன்னை படிக்க வைத்து ஆளாக்கி விட்ட மாதிரி அவனையும் படிக்க வச்சு ஆளாக்க எங்களுக்கு தெரியும் அதனால உன் பொண்டாட்டியை வீட்லயே இருக்கட்டும்
என்று சண்டையிட்டார்
மீனாதான் செல்வாவிடம் இதுபோல் கேட்க சொல்லி யோசனை தந்திருப்பாள் என்று தவறாக எண்ணியவர்
ஒரு வாரம் வரை அதை மனதில் வைத்து மீனாவை படாதபாடு படுத்தி விட்டார்,
இப்போது அவளுக்கு குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்தையும் சுட்டிக்காட்டி அவளை அவ்வப்போது மட்டம் தட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமின்றி விஜயிடம் சென்று அண்ணன் உன்னோட படிப்பு செலவுக்கு காசு தர மாட்டேன்னு சொல்லிட்டான் என்று மொட்டையாக கூற
அவனுக்கு ஆச்சரியம் அண்ணன் தான் அம்மா இப்போ பர்ஸ்ட் டெர்ம் க்கு பணம் கொடுத்தான் என்று கேட்டான்
அதற்கு ராஜாத்தி அப்போ அவன் தம்பி மேல இருந்த பாசத்துல அவளை கேட்காம எடுந்துக் கொடுத்தான்...இப்போ அவளுக்கு தெரியவும் குடுக்க விடமாட்டேங்கறா
அது மட்டுமில்லாம அப்பாவோட வேலையை விட்டு வர காச வச்சு உன்னை படிக்க சொல்லியிருப்பா போல என்று மீனாவை பற்றி தவறாகக் கூற மேலும் மீனாவின் மேல் அவனுக்கு தவறான எண்ணம் உருவாயிற்று .
ராஜாத்தியா எல்லாமே யூகத்தின் அடிப்படையிலேயே கற்பனை செய்துகொண்டார் அவரைப் பொருத்தவரை பெரிய மகனை விட்டுச் செல்ல ஒரு காரணம் வேண்டும்
எதிர் காலத்தில் இளைய மகனுடன் சேர்ந்து இருக்க ஒரு வலுவான காரணம் வேண்டும் தானே ஆசைப்பட்டால் கூட இளைய மகன் தன்னை முத்த மகனிடம் விட்டு விடக்கூடாது என்று நினைத்தாள்,
அவளின் காரணம் மிக அல்ப விஷயம்... செல்வா கடனில் மிகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்
கணவர் வேலையை விடும் பொழுது அவருடைய பிஎஃப் ,கிராஜுவிட்டி என்று ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும் அந்தப் பணம் அவரைத் தவிர வேறு யார் கைக்கும் செல்லக்கூடாது
அவளிடம் மட்டுமே அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் மூத்த மகனுடன் இருந்தால் கண்டிப்பாக மனம் கேட்காமல் நாமே கூட எடுத்துக் கொடுத்து விடுவோம்
அந்த பணம் தன்னிடம் இருக்க வேண்டும் என்றால் மூத்த மகனை விட்டு சற்று நகர்ந்து செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்
இரண்டாவது காரணம் விஜய் படிக்கும் படிப்பின் பலன்... அவன் படிப்புக்கு எங்கு வேலைக்கு சென்றாலும் குறைந்தபட்சமாக ஐந்து இலக்க சம்பளம் தான் ஆரம்பத்திலேயே வாங்குவான்
அப்படி இருக்கும் பொழுது அவருடைய வாழ்க்கை இன்னும் சுகமானதாக இருக்கும்
மீனாவைப் போல் வசதி குறைந்த இடத்தில் இருந்து பெண் எடுக்காமல் நன்கு ஆடம்பரமான இடத்திலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்றும் அவரின் கற்பனை
காலம் அவரின் மனதை மாற்றி விட்டது சுயநலமாக யோசிக்க வைத்தது
அதனால் மருமகளை மிகவும் தவறாக சித்தரிக்க தொடங்கி இருந்தார் ஆனால் இதை எதுவுமே அறியாத மீனா எப்பவும் போல் அவள் உண்டு அவளின் வேலை உண்டு என்று கிடந்தாள்.
விஜய்க்கு மீனாவின் மேல் இருந்த கோபம், வெறுப்பாக மாறி, வெறுப்பு இப்பொழுது அவளை அருவருப்பாக பார்க்க வைத்தது
அவளை பார்க்கும் பார்வையில் ஒருவித நக்கலை கொண்டு வந்தான் விஜய்
அவளின் பிறந்த விட்டாரையும் குடும்பத்தையும் மாமியார் அடிக்கடி தவறாக பேசி தன்னை மட்டம் தட்டி வேலை வாங்கும் மாமியாரின் கொடுமை கொளுந்தனாரின் நக்கல் கலந்த பார்வை கணவரின் கண்டுகொள்ளாத தனம் இது மூன்றிலும் கிடந்து மீனா உழன்று கொண்டு இருந்தாள்.
ராஜாத்தி மீனாவிற்கு கொடுக்கும் வேலைகளையும் குழந்தை இல்லை என்பதை அவ்வப்போது குத்தி காட்டுவதையும் செல்வாவிடம் கூறமுடியாது அவனிடம் கூறினால் அவர் உங்க ரெண்டு பேத்துக்கும் வேற வேலையே இல்ல போங்க என்று கூறிவிடுவான்
மாமியாருக்கு இப்பொழுது அக்கம்பக்கத்து பெண்களிடமும் மீனாவிற்கு குழந்தைகள் இல்லை என்பதைப் பற்றி பேசத் தொடங்கியிருந்தார்
இதனால் அக்கம்பக்கத்தார் மீனாவிடம் வந்து அதை கூறும் பொழுது மீனா அதை கணவரிடம் கொண்டு சென்றாள்
ஆனால் செல்வாவோ உனக்கு குழந்தை ஆசை இருந்தால் சொல்லு இப்பவே பெற்றுக்கொள்ளலாம் அதுக்காக எங்க அம்மாவை தேவையில்லாம பேசாதே என்று மீனாவையே குற்றம் சொல்ல
கடைசியில் மீனா எல்லாத்தையும் பொறுத்துப் போகும் நிலைமைக்கு வந்து விட்டாள்.
இப்பொழுது மாமியார் காலை உணவை முடித்த பின் அக்கம் பக்கத்தில் இருக்கும் யாராவது ஒருவர் வீட்டில் சென்று அமர்ந்து கொள்வார்
மீனா என்ன செய்தாலும் குற்றம் அக்கம்பக்கத்து பெண்மணிகளிடம் எல்லாம் மருமகள் தன்னை மிகவும் கொடுமை செய்வது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்
மகன்கள் வெளியே சென்றவுடன் காலையிலேயே எங்காவது சென்று விடுவார் மதியம் வருவார் சாப்பிட்டு விட்டு மீண்டும் யார் வீட்டிற்காகவாவது வெட்டி பேச்சி பேச சென்றுவிடுவார்
சாயங்காலம் மகன்கள் வரும் வேளையிலும் மட்டும் ஏதாவது வேலை செய்வது போல் காட்டிக்கொள்வது
இதனால் அவரின் இரு மகன்களுமே மீனா தனது தாயாரை மிகவும் கொடுமைப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு அவர்களும் அவளை ஏதாவது சொல்வார்கள்
இதனால் மிகவும் மனம் உடைந்து மீனா இப்பொழுதெல்லாம் அவர் சாயங்காலம் வருவதற்குள் முடிந்த அளவு வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவாள்
அப்படி இருந்தும் கூட ராஜாத்தி வேண்டுமென்றே பீரோவில் இருக்கும் துணிகளை எல்லாம் கலைத்துப் போட்டு மடிப்பது போல் வேலை செய்வது கழுவிய பாத்திரங்களை எல்லாம் சீங்கிள் எடுத்துப்போட்டு பாத்திரம் தேய்ப்பது போல் நடிப்பது அப்படியும் இல்லையென்றால் வீட்டு கூட்டுவது போல் இடுப்பில் கை வைத்தபடி கூட்டவே முடியல என்று அனத்திக் கொண்டே கூட்டுவது எனப் பலவிதமாக மீனாவிற்கு மன உளைச்சலைக் கொடுத்தார் ராஜாத்தி…
அவரின் எண்ணம் எல்லாம் அவரின் டார்ச்சர் தாங்காமல் மீனாவே வேலைக்குச் செல்கிறேன் என்று கூறவேண்டும் மீனா வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் பொழுது தன் கணவருடைய பணம் சேமிப்பாக பத்திரமாக தன் கையிலேயே இருக்கும் இந்த ஒரு சிறு காரணத்திற்காக அவளை அத்தனை பாடு படுத்தினார்.
இப்பொழுது மீனாவிற்க்கும் தான் ஒரு வேலைக்குச் சென்றால் என்ன என்ற எண்ணம் வந்துவிட்டது
செல்வாவிற்கும் இவளை ஏதாவது ஒரு வேலைக்காக அனுப்பலாம் இல்லை என்றால் பகல் பொழுதில் ஏதாவது உபயோகமான படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் வர
மீனாவின் முன்பு இதைப் பேசினால் அவளை சங்கடப்படுத்தும் என்று எண்ணிய செல்வா தாய் மட்டும் தம்பி மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தனிமையில் பேசினான்.
இப்பொழுதெல்லாம் குடும்ப விஷயம் ஏதாவது பேச வேண்டுமென்றால் மூவருமே மொட்டைமாடிக்கு சென்று விடுவார்கள்…. விஜயின் ரூமில் அமர்ந்து பேசுவார்கள்.
ராஜாத்தி இரு மகன்கள் மனதையும் அந்த அளவு மாற்றி வைத்து இருந்தார் இப்பொழுது அவர்கள் மனதில் மீனா மிகவும் பொறாமை பிடித்த பெண் கொழுந்தனார் தனது கணவரை விட அதிக படிப்பு படிப்பது அவளுக்கு பிடிக்கவில்லை
அவள் கணவன் சம்பாதிக்கும் பணம் அவளுக்கு மட்டுமே சொந்தம் வேறு யாருக்கும் அதை கொடுக்கக்கூடாது
தனது கணவன் சம்பாத்தியத்தில் தான் அத்தனை பேரும் சாப்பிடுகிறார்கள் என்று எல்லோரையும் மட்டம் தட்டுகிறாள் என்று
ராஜாத்தி இரு மகன்கள் மனதில் ஏற்றி வைத்து இருந்தார்
அதனால் அவளின் முன்பு எந்த ஒரு விஷயத்தையும் யாரும் பேசக்கூடாது என்று முடிவெடுத்து இப்படி மொட்டை மாடியில் வந்து பேசுகின்றனர்…
மீனா ஆரம்பத்தில் மிகவும் வேதனை பட்டாள். அவ்வப்போது தாய்க்கு ஃபோன் செய்து புலம்புவாள் ஆனால் தாயோ இவளுக்கு தான் புத்தி கூறுவார்
இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் தம்பி இருக்கிறான் நீயும் அங்கே ஏதாவது சண்டை போட்டுவிட்டு இங்கே வந்தால் எப்படி மீனா சரியாகும் உன் இரு தங்கைகளுக்காகவாவது நீ பொறுத்துக் கொண்டிரு என்று புத்தி கூற இப்பொழுது தாயிடமும் புலம்பு வதை விட்டுவிட்டாள்.
செல்வா மீனாவை வேலைக்கு அனுப்பும் திட்டத்தை சொல்லவும் ராஜாத்தி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவ தான் அதிகமா படிக்கலையே அவளுக்கு வேலை எல்லாம் கிடைக்குமா என்று கேட்டார்
அதற்கு செல்வா இல்லம்மா அவ ஒரு வருஷம் காலேஜ் போய் இருக்கா அப்புறம் தான் படிக்க வைக்க வசதியில்லைனு நிறுத்தி இருக்காங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா போடுவா அது சம்பந்தமாக ஏதாவது வேலை பாக்கலாம் என்று கூற
ராஜாத்தியோ கண்கள் கலங்கியபடி என்ன மன்னிச்சிடு செல்வா நான் உன் கல்யாண விஷயத்துல ரொம்ப அவசரப் பட்டுட்டேன், படிப்பும் இல்லை, சரி பிறந்த வீட்டில் இருந்து ஏதாவது வசதி வாய்ப்புனு பார்த்தா அதுவும் இல்லை,சரி புத்தியாவது நல்ல புத்தியா இருக்கும்னு பாத்தா அதுவும் கேடு கெட்ட புத்தியா இருக்கு உன்னை படு பாதாளத்தில் தள்ளிட்டேன்
ஆனால் சின்னவனுக்கு இந்த மாதிரியெல்லாம் பொண்ணு பாத்திட கூடாது நல்லாபடிச்ச, வசதியான வீட்ல இருந்து தான் பொண்ணு எடுக்கனும் என்று நைசாக இளையவனுக்கு வசதியான வீட்டில் இருந்து மட்டும் தான் பெண் எடுக்க வேண்டும் என்ற அவரின் ஆசையை சொல்லி வைத்தார்.
மீனாவின் மீது தாய் வாசித்த குற்றப்பத்திரிக்கையை பொறுக்க முடியாத செல்வா பல்லைக் கடித்தபடி உங்க கண்ணுக்கு மட்டும் தான் அவ அப்படி தெரியறா ஆனா எனக்கு அப்படி தெரியலை அவ அளவுக்கு குணமும்,புத்தியும் இருக்குற பொண்ணு விஜய்க்கு வந்தாலே அவன் ரொம்ப கொடுத்து வச்சவன் தான் அதனால புத்தி சரியில்லைனு சொல்லாதீங்க, அதிகமா படிக்கல, வசதி இல்ல ன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன் என்று அப்பொழுதே தாய்க்கு நன்றாக கொடுத்து அவரின் வாயை மூட வைத்தான்…
ஆனால் இதை எப்பொழும் மீனாவின் முன்பு கூற மாட்டான்…
இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த விஜய் எரிச்சலுடன் இப்போ என்ன இத பத்தி பேசுறதுக்காக தான் இங்க வந்தீங்களா
எனக்கு நிறைய படிக்கணும் முதல்ல ரெண்டு பேரும் கீழ போங்க என்று எரிந்து விழுந்தான்.
ராஜாத்தி உடனே பல்லை கடித்தபடி விஜயை அடக்கினார் பெரியவன் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு தானே வந்து இருக்கான் நீ கொஞ்சம் பொறுமையாக இரு என்று அவனை அடக்கியவர்
செல்வாவைப் பார்த்து சரிப்பா நீ சொல்லு அவளை வேலைக்கு அனுப்பபோறியா இப்போ என்றாள்.
ம்ம்...ஆமாம்மா...இல்லனா ஏதாவது படிப்பு சம்பந்தமாக கோர்ஸ்ல சேர்த்துவிடலாம்னு இருக்கேன்.
எனக்கு நீ செகண்ட் சொன்னது தான் சரியா வரும்னு தோணுதுண்ணா
அவங்க வேலைக்கு போய் அந்தப் பணத்தை நாம செலவு பண்றதுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு
அதனால படிக்க வைக்கலாம் ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் இருக்கான்னு பாக்குறேன் அப்படி இல்லன்னா கரஸ்ல படிக்கட்டும்
படிப்பு என்று போகும்போது அவங்களோட கவனங்கள் மாறும் இன்னும் கொஞ்சம் மெச்சூர் ஆக வாய்ப்பிருக்கு
அம்மாகிட்டயும் எல்லாத்துக்கும் சரிக்கு சரியா நிக்க மாட்டாங்க
அம்மாக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்
ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்துகிட்டு ஒருத்தர் முஞ்சை ஒருத்தர் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் பாக்க வேண்டயது இருக்காது
ரெண்டு பேருக்குள்ளயும் இருக்கற மனஸ்தாபம் கொஞ்சம் குறையும்
ஒருத்தர கொஞ்சம் விலக்கி வைக்கிறது பெட்டர் சொலிஷன்
அதனால அவங்கள மேல படிக்க வைக்கலாம் என்று விஜய் கூறி முடித்ததவன் சரி எனக்கு படிக்க நிறைய இருக்கு என்று படி அவனின் லேப்டாப்பை திறந்து வைத்தபடி அமர்ந்து கொண்டான்
இங்கு ராஜாத்திக்கு அவளை படிக்க வைப்பதில் துளியும் விருப்பம் இல்லை ஏற்கனவே மருமகள் தன்னை மதிப்பதில்லை இனி படித்துவிட்டால் தன்னை சுத்தமாக மதிக்க மாட்டாள் அவளைப் படிக்க விடாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்…
இப்படியாக ஒரு மதிய வேளை மாமியார் உணவருந்திவிட்டு அக்கம்பக்கத்து பெண்களிடம் வம்பு பேச சென்றுவிட
மீனா அசதியாக இருக்க மதியம் உறங்கிக்கொண்டிருந்தாள்.
திடீரென மீனாவின் அறைக் கதவு தட்டப்பட விஜயை மனதிற்குள் திட்டத் தொடங்கினாள் மீனா இவனுக்கு வேற வேலையே இல்ல ஒரு நாள் கூட நான் நிம்மதியா இருந்தா பொறுக்காது என்று திட்டியபடியே கதவை திறக்க ஆட்டோவிலிருந்து அவளின் கடைசி தங்கை அமர்ந்திருந்தாள்.
ஒரு கையில் அவளின் புத்தக பையை தூக்கியிருந்தவன் மற்றொரு கையிலிருந்த பர்சை பேண்ட் பாக்கெட்டில் வைத்த படி விஜய் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
பதறியடித்து வேகமாக ஆட்டோ அருகே ஒடியவள் தங்கையிடம் என்னாச்சு காவியா
வீட்டுக்கு போகாம இங்க வந்து இருக்க அதும் அவனோட என்று கேட்க
அவளோ உள்ளிருந்த படி அழுது கொண்டே இருந்தாள்.
அழாத காவ்யா என்ன நடந்ததுன்னு சொன்னா தானே தெரியும் முதல்ல ஆட்டோல இருந்து இறங்கு என்று கூற
அவள் முடியல கா ரொம்ப வலிக்கிது என்று காலைக் காட்ட
அப்பொழுது தான் கவனித்தாள் மீனா
காலில் மிகப் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது கட்டையும் மீறி வெளியே ரத்தத்துடன் கூடிய மருந்து கலவை கறையாக படிந்திருக்க பார்க்கவே பயமாக இருந்தது மீனாவிற்கு
அதை பார்த்து காதை பொத்திக்கொண்டு அய்யய்யோ என்னாச்சு காவ்யா என்று சத்தமாக கத்தினாள்
இவளின் கத்தல் கேட்ட விஜய் மேலிருந்து கீழே தான் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்
நொடி நேரத்தில் அவளை சமன்படுத்தி கொண்ட மீனா சரி கீழ இறங்கு உள்ள போய் பேசிக்கலாம் என்று கூறியவள்
ஆட்டோ டிரைவரைப் பார்த்து அண்ணா தங்கச்சி கீழே இறங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று கூற
காவியா கீழே இறங்குவதற்கு உதவி புரிந்த ஆட்டோ டிரைவர் அவள் கீழே இறங்கியதுமே ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்
இப்பொழுது அவள் தங்கையோ ஒத்த காலில் நின்று கொண்டு மற்றொரு காலை மடித்திருக்க ஒற்றை காலில் சுத்தமாக நடக்கவும் முடியாமல் திணறினாள்.
பேலன்க்காக பிடிந்திருந்த மீனாவோ கொஞ்சம் நட காவ்யா நின்னுக்கிட்டு இருந்தா எப்படி என்று தங்கையிடம் கூறினாள்.
அவளோ வலிக்குது அக்கா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல என்று ஒரு தடவை எம்பிக்குதித்தவள் அடுத்த அடி வைப்பதற்குள் கீழே சாய்ந்தாள்.
சாய்ந்த காவ்யாவை பதறியபடி கடினப்பட்டு தூக்கி நிறுத்திய மீனா உதவிக்கு யாரை அழைப்பது என சுற்றுமுற்றும் பார்க்க தொடங்கி இருந்தாள்.
உள்ளே இருந்து இவர்கள் இருவரின் கஷ்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்த விஜய்யோ தனது சட்டையின் கை பகுதியை மடித்து விட்டபடி வேகமாக வெளியே வந்தான்
மீனாவின் அருகில் வந்தவன் கொஞ்சம் தள்ளிக்கோ என்று எங்கோ பார்த்த படி சொல்ல
அவனைப் பார்த்துக் கொண்டே காவ்யாவை விட்டு சற்று தள்ளி நின்றாள்.
காவியாவின் அருகே நின்று அவளைத் தோளோடு சேர்த்து பிடித்தவன் அவளைப் பார்த்து ஹாஸ்பிடல்ல ஸ்ட்ரெச்சரில் இருந்து ஆட்டோல உக்கார வைக்க ஒரு வார்டு பாய் ஹெல்ப் பண்ணினாருல்ல உனக்கு
ம்ம்...ஆமா...
என்னையும் கொஞ்ச நேரம் அப்படி நினைச்சுக்கோ சரியா என்று கூறியவன் அவளைத் தன் இரு கையால் தூக்கியபடி வீட்டின் உள்ளே சென்றான்.
தொடரும்...