கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ ( ழி) லி-7

Akila vaikundam

Moderator
Staff member
7


உள்ளே சென்றவன் காவ்யாவை எங்கே அமர வைப்பது என மீனாவை பார்க்க உள்ள பெட்ல என்று கூற

நேராக படுக்கை அறைக்குள் சென்று அவளை சாய்வாக அமர வைத்தவன் காவ்யாவின் கால்களை நீட்டி கால்களின் கீழ் ஒரு தலையணையை வைத்து விட்டு எதுவுமே பேசாமல் அவனின் ரூமுக்கு சென்று விட்டான்.


அவன் சென்றதும் வேகமாக காவியாவின் அருகில் அமர்ந்த மீனா என்ன ஆச்சு என்று அதிர்ச்சியில் கேட்டாள்

அவளோ நடந்தவற்றை அழுதபடியே கூறத் தொடங்கினாள்

காவ்யா இப்போது பணிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்


மீனாவின் முத்த தங்கை கௌசல்யா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்...இப்பொழுதே அவளுக்கு வரன் தேட தொடங்கி விட்டனர் தம்பி மூர்த்தி பத்தாம் வகுப்பு படிக்கிறான்.



பள்ளிக்குச் செல்லும் வழியில் தினமும் ஒரு பையன் அவளை காதலிப்பதாகக் கூறி அவளைத் தொல்லை செய்ய இதை வீட்டில் சொன்னால் தனது தாய் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்தபடி காவ்யா வீட்டில் சொல்ல வில்லை


கோபமடைந்த மீனா அம்மாகிட்ட சொல்லல சரி நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நான் மாமா கிட்ட சொல்லி அந்த பையனை என்னன்னு கேட்டு இருப்பேன்ல்ல என்றவளிடம்


நீயே இங்க ரொம்ப கஷ்டப்படுறேனு அம்மாகிட்ட போன் பண்ணி புலம்புவ இதுல வந்து நான் உன் கிட்ட எப்படி சொல்லறதுக்கா என்று அழுதபடி கேட்டாள்


அவளின் பதிலை கேட்ட மீனா அவளை இழுத்து அணைத்தாள் சரி அழாத மேல சொல்லு எப்படி காயம் ஆச்சு என்று கேட்க அவள் மேற்கொண்டு கூறத் தொடங்கினாள்.


டெய்லி என்ன லவ் பண்ண சொல்லி ரொம்ப டார்ச்சர் அக்கா நான் அக்சப்ட் பண்ணலனு இப்போ கொஞ்ச நாளா அவனோட ப்ரண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து டெய்லி என் பின்னாடி வர்றது இன்னைக்கு எனக்கு ஹாப் டேனு தெரிஞ்சிகிட்டு மதியமே ஸ்கூல் வாசலுக்கு வந்துட்டான்…


என்ன பாத்ததும் வழக்கம்போல எங்கிட்ட கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டான் இன்னைக்கு கோபத்துல அவனை ஒரு அறை விட்டுட்டு வேகமா முன்னாடி நடந்து போய்ட்டு இருக்கும் போது பின்னாடியே அவன் பிரண்ட்ஸோட வண்டில வந்தவன் ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பாத்து என் மேலே வேணும்னே வணாடியை கொண்டு வந்து விட்டுடான்

அடிபட்டு நான் கீழ விழுந்துட்டேன், மறுபடியும் வண்டியை என் கால் மேலேயே விட்டுட்டான் கா என்று ஒ வென்று அழுதாள்…

அந்த நேரத்தில் தனது தங்கையின் நிலையை எண்ணிய மீனாவிற்கு தானாகவே கண்கள் கலங்கியது


பிறகு தங்கையை தேற்றியவள் அப்புறம் என்னாச்சு என்றாள்.



அப்புறம் அவன் ஏற்கனவே ஆட்டோ ரெடி பண்ணி வச்சி இருப்பான் போல அந்த ஆட்டோல என்னை தூக்கி போட்டுட்டு போறதுக்காக என்ன தூக்கினாங்க


கால்ல வேற அடிபட்டிருக்கா ரத்தம் வேற போயிட்டே இருந்தது நா வரமாட்டேனு அவன தூக்க விடாம சத்தம் போட்டுட்டு போராடிட்டு இருந்தேன்


கூட்டம் சேர்ந்ததும் நா அவனோட சொந்த கார பொண்ணுனு பொய் சொல்லி அவங்க மூலமாவே ஆட்டோல உக்கார வச்சிட்டான்.

ஆட்டோ கிளம்பும் போது சின்ன மாமா அந்த வழியே வந்தத பாத்துட்டு மாமானு கத்தினேன்…


மாமா என் சத்தத்தைக் கேட்டுட்டு ஆட்டோ பின்னாடியே ஃபோலோ பண்ணிட்டு வந்து ஆட்டோ முன்னாடி வந்து மறைச்சிட்டு நின்னாங்க


ஆட்டோ டிரைவர் நான் அவரோட சொந்தக்கார பொண்ணு அடிபட்டிருக்கு வழிவிடுங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்னு சொன்னதுக்கு யாரு யாரு டா சொந்தகார பொண்ணு அவ எங்க வீட்டு பொண்ணுனு சொல்லி எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனார்


அங்க எனக்கு காயத்துல தையல் போட்டுட்டு கட்டு போட்டு விட்டாங்க என்னை நம்ம வீட்டுல தான் கொண்டு போய் விட்றேனு சொன்னாங்க நான் தான் வீட்டுக்கு போனா அம்மா கிட்ட உளறிடுவேன் அப்புறமா அம்மா என்ன ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்கனு பயந்துட்டு நான் வீட்டுக்கு போகனும்னு அழுதேன் அதனால சின்ன மாமா இங்க கூட்டிட்டு வந்தாங்க என்று கூற


விஜய் சரியான நேரத்திற்கு அங்கு செல்லவில்லை என்றால்,அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று தன் தங்கையை காப்பாற்றவில்லை என்றால் தனது தங்கையின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பகீரென்றது.


அதன் பிறகு அவளை சமாதானப்படுத்தி சற்று நேரம் தூங்க வைத்தவள் தனது தாய்க்கு போன் செய்து காவ்யா பள்ளியிலிருந்து வரும் பொழுது இருசக்கர வாகனம் ஒன்று இடித்து விட்டது கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் கூறி அவளின் பெற்றோரை வரச் சொல்லியிருந்தார்


சற்று நேரத்திற்கெல்லாம் ராஜாத்தி வந்தவர் கட்டுபோட்டபடி உறங்கிகொண்டிருக்கும் காவியாவை பார்த்து என்ன என்று மீனாவிடம் விசாரித்தார்.


மீனா தாயிடம் என்ன சொன்னாலோ அதையே மாமியாருக்கும் கூறினாள் உடனே


ராஜாத்தி படிக்கப் போற புள்ளைங்க ரோட்ல கண்ண வச்சு நடக்கணும் எவன் கிடைப்பானு பாத்துட்டு நடந்தா இப்படித்தான் காலை உடைச்சு கிட்டு கிடக்கனும் என்று பேசி வைக்க

மேலிருந்து கீழே இறங்கி வந்த விஜய் தனது தாய் கூறிக் கொண்டிருக்கும் வார்த்தையை கேட்டவனுக்கு சற்று அதிர்ச்சி


தனது தாய் உடல்நலம் சரியில்லாத பெண்ணை இப்படி கூட பேசுவார்

தனது அண்ணியிடம் இது போல அவரின் தங்கையைப் பற்றி பேசினால் அண்ணி எப்படி பேசாமல் இருப்பார்கள் என்று யோசித்தபடி அங்கே நின்று இவர்கள் பேச்சை கவனிக்கத் தொடங்கினான்

இந்தப் பேச்சைக் கேட்டு மனமுடைந்த மீனாவும் அவ சின்ன பொண்ணு
ஸ்கூலுக்கு போற வழியில அடிபட்டு வலியோட இங்க வந்து இருக்கா நீங்க என்ன இப்படி வாய்க்கு வந்தபடி பேசுறீங்க

அவ காதுல கேட்டா அவ எவ்வளவு சங்கடப்படுவா


அவ சங்கட படுவானு நான் வாய மூடிக்கிட்டு இருந்தா நீ வந்து இங்க உட்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கிற மாதிரி உன் தங்கச்சிக யாராவது ஒருத்தி என் சின்னவன் பின்னாடியே வந்து நாட்டாமை பண்ணிக்கிட்டு இருப்பாளுக என்று கூற


விஜய்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தனது தாய் இப்படி எல்லாம் பேசுவாரா என்று…


அசிங்கமா பேசாதீங்க அத்தை எங்கப்பா எங்களை அப்படி எல்லாம் வளர்த்தல யாரையும் மயக்கி தான் நாங்க வாழனும்னு அவசியம் எங்களுக்கு இல்லை கொஞ்ச நேரம் பொறுத்துக்கங்க என்னோட அம்மாக்கு ஃபோன் பண்ணிருக்கேன் அவங்க வந்ததும் என் தங்கச்சியை கூட்டிட்டு போயிடுவாங்க

நீங்களே ஆசைப்பட்டு எங்க கிட்ட கெஞ்சிக் கேட்டா கூட இந்த வீட்டுக்கு என் தங்கச்சிக வர்றதை நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் ஒத்துக்க மாட்டேன் நான் ஒருத்தி இருந்து கஷ்டப்படறது போதாதா நிம்மதியே இல்லாம இப்படி ஒரு வாழ்க்கை வாழ தான் அவசர அவசரமா என் அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு போல


நீ ஏம்மா பேசமாட்ட என் பையன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொண்டு வந்து கொடுக்கறான் நீ வீட்ல உட்கார்ந்து சாப்பிடற இல்ல பேசதான் செய்வ உனக்கு எப்படி நிம்மதி வரும் எங்கிருந்து வரும்... புத்தி நல்லதா இருந்தா தானா எல்லாம் உன்னை தேடி வரப் போகுது, வந்து மூணு வருஷம் ஆச்சு வயத்தில ஒரு புழு பூச்சி தங்கிச்சா அப்பவே தெரிய வேணாம் உன் புத்தி எவ்வளவு நல்ல புத்தினு என்று பேசிவிட்டு அவர் உள்ளே செல்ல தாய் வருவதை அறிந்த விஜய்யோ சத்தமில்லாமல் பின்பக்கமாக சென்று படிக்கட்டில் அமர்ந்து விட்டான்.


சற்று நேரத்திற்கெல்லாம் மீனாவின் தாயாரும் தந்தையும் ஒரு வாடகை வாகனத்தில் வர காவ்யாவின் நிலையை கண்டு கண்ணீர் விட்டனர்

அதன் பிறகு காவ்யாவை நன்கு திட்டினார் ரோட்டுல ஒழுங்கா பார்த்து வரமாட்டியா வண்டி வந்து இடிக்கற அளவுக்கு ரோட்டில் நடக்கறியா என்று


காவ்யா அழுதபடியே தாயிடம் அவளின் நிலையைப் பற்றி கூறுவதற்காக வாய் திறக்க மீனா குறுக்கிட்டு இனி பாத்து கவனமா நடந்து போவாம்மா திட்டாதீங்க அவளை நல்லா பாத்துக்கோங்க அவளோட மெடிசின் சீட்டு,மாத்திரை எல்லாமே அவளோட புத்தகப் பையில் இருக்கு போல அதை பார்த்து கரெக்டா மாத்திரை மருந்து கொடுங்க என்று தாய் தந்தையுடன் சேர்ந்து தங்கையை மெதுவாக அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்தவள் தங்கைக்கு மட்டும் கேட்கும் வகையில் தாயிடம் எக்காரணம் கொண்டும் இந்த விஷயத்தை கூறாதே நான் உன்னோட மாமா கிட்ட சொல்லி அந்த பசங்களை பற்றி விசாரித்து மிரட்டி வைக்க சொல்றேன் என்று நம்பிக்கையையும் உறுதியையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.


தனது குடும்பத்தாரை அனுப்பி வைத்த பின் வெளியே நின்றபடியே மேலே எட்டிப் பார்த்தாள் விஜயின் செட் நன்கு தெரிந்தது ஏனோ இன்று அவளுக்கு விஜயிடம் எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் பத்தாது என்று தோன்றியது அவன் காப்பாற்றியது தனது தங்கையின் உயிரை மட்டுமல்ல

அந்த சிறு பெண்ணின் எதிர்கால வாழ்க்கையையும் தான் காப்பாற்றியிருக்கிறான் என்று நினைத்தபடி உள்ளே சென்றாள்... சற்று நேரத்திற்கெல்லாம் மழைத்துளிப்பது போல் இருக்க ராஜாத்தி மீனாவை அழைத்து மொட்டை மாடிக்கு சென்று துணி எடுத்து வா என்று அனுப்பினார்


இவள் மொட்டைமாடிக்கு செல்வதற்கு முன்பே சிறு சிறு மழை துளி விழ ஆரம்பித்தது.

வேகமாக மேலே சென்றவள் அவசர அவசரமாக துணிகளை எடுத்துக் கொண்டிருக்க தனி ஒருத்தியாக கஷ்டப்படுவதை பார்த்த விஜய்யும் வந்து உதவினான்.

துணி எடுத்து முடிக்கவும் வேகமாக மழைத்துளி விழவும் சரியாக இருந்தது மழைக்கு ஒதுங்க விஜயின் அருகே வந்து நின்றவள் அவன் கையிலிருக்கும் துணிகளை தனது கைகளுக்கு மாற்றி கொண்டவள் தேங்க்ஸ் என்று கூற அவனும் பரவால்ல என்று கூறியபடி லேப்டாப்பில் ஓபன் செய்து படிக்க ஆரம்பித்து விட்டான்


மழைத்துளி பெரியதாகவும் விஜயின் ரூமிலேயே ஒரு சேரின் மீது துணிகளைப் போட்டு விட்டு இவளும் ஒரு சேரை இழுத்துப் போட சைடு கண்களினால் மீனாவை தான் பார்த்தான்


சற்று நேரத்துக்கு முன்பு தான் மீனாவை அவனின் தாய் எந்தளவு பேசினார் என்பதை காதால் கேட்டிருக்கிறான் ஆனால் அதை சற்றும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாக இருக்கும் அவளைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம் தான் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் வேலைகளை செய்து கொண்டிருக்க தயங்கியபடி தேங்க்ஸ் என்று மறுபடியும் கூற…


ம்ம்…..


நீங்க மட்டும் சரியான சமயத்துல என் தங்கச்சியை பார்க்கலைன்னா அந்த ஆட்டோவை மறிச்சி அவளை காப்பாத்தலனா இந்நேரம் என்ன ஆயிருக்கும் நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு நீங்க அவ வாழ்க்கையை மட்டும் காப்பாத்தல எங்க எல்லாரோட நிம்மதியையும் சந்தோஷத்தையும் சேர்த்து காப்பாற்றியிருக்க
அதுக்காக உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது

நான் எத்தனையோ தடவை மரியாதை இல்லாம பேசிருக்கேன் எத்தனையோ முறை உன்னை கோபப்படுத்தி இருக்கேன் உங்க அம்மாகிட்ட மாட்டி விட்டு அவங்க கிட்ட திட்டு வாங்க வைச்சிருக்கேன் ஆனா நீங்க அது எதையும் மனசுல வச்சிக்காம என் தங்கச்சியை காப்பாத்தினதோட இல்லாம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் செலவு பண்ணி அவளை பத்திரமா இங்க கொண்டு வந்து சேத்திருக்கீங்க அதுக்காக மிகப்பெரிய நன்றி என்று சொல்லியவள் எழுந்து கையை எடுத்து அவனை பார்த்து கும்பிட அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது


ஏனென்றால் மீனாவை இதுவரை அவன் அப்படிப் பார்த்ததே கிடையாது எப்போதுமே சண்டக்கோழி போல் சிலிர்த்து தான் பார்த்திருக்கிறான் இப்படி இறங்கி வந்து பார்த்ததே இல்லை மற்றொரு நேரமாக இருந்திருந்தால் அவளின் இந்த செயலுக்கு நன்றாகவே கிண்டலடித்திருப்பான்


ஆனால் சற்று முன் அவன் தாய் பேசியதை முழுவதுமாக கேட்டதால் அவனுக்கு ஏனோ அவளை மேலும் காயப்படுத்த தோன்றவில்லை அதனால் சாதரணமாக உன் தங்கச்சினு இல்ல அந்த இடத்துல யார் இருந்தாலும் காப்பாத்தி ரத்த காயம் ஏதாவது இருந்தா கண்டிப்பா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயி கொண்டு போயி அவங்க வீட்ல விட்டிருப்பேன் அதுக்காக நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேணாம் கொஞ்சம் குறைஞ்சிருச்சு என்று சொன்னவர் கிளம்பறியா என்பது போல் கையை தூக்கி வாசல் பக்கமாக காட்டினான்


ஏனோ இன்று விஜய் இப்படி முகத்தில் அடித்தது போல் வெளியே செல் என்று சொல்லும்போது கூட மீனாவிற்கு அவன் மேல் கோபம் வரவில்லை அதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது சரி என்று தலையை ஆட்டியவள் சேரில் கிடந்த துணிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜாத்தி வந்து வாசலில் நின்று கத்தத் தொடங்கி இருந்தார்

துணி எடுத்துட்டு வரச்சொன்னா படிக்கிற பையன் கிட்ட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது


கீழ அடுப்புல பாலை வச்சிட்டு வந்து இங்க உக்காந்து அரட்டை அடிச்சி கிட்டு இருக்க அது பொங்கி பாத்திரம் கரிஞ்சி போயி கிடக்குது அதுகூட தெரியாம இவன் கிட்ட உனக்கு வெட்டி அரட்டை இனி பால் பாத்திரம் யாரு உங்க அப்பாவா வாங்கி தருவான் போ கீழ போய் எல்லாத்தையும் சுத்தம் பண்ணு என்றவரிடம்

மீனா நான் எப்போ அடுப்புல பால் வெச்சேன் என்று யோசித்தபடி வேகமாக துணிகளை அள்ளிக் கொண்டு கீழே ஓடினாள்.


விஜய் தாயை சந்தேகமாக பார்க்க

என்னடா அப்படி பாக்கற ஏனோ அவள திட்டறதுக்காகவே மேல வந்த மாதிரி ஆமா படிக்கிறத விட்டுட்டு அவகிட்ட என்ன அரட்டை? என்ன சொன்னா அவ என்று கேட்க

மழை வருதுன்னு வந்து உக்காந்தா…..ஆமா பால் வேணும்னா அடுப்புல அவ வச்சிட்டு வந்திருக்கலாம் நீங்க அங்க தான இருக்கீங்க பால் பொங்கும் போது வேணா தெரியாம இருக்கலாம் பாத்திரம் கருகும் போது கூடவா வாசம் வரல ஆச்சரியமா இருக்கு

சரி கிளம்புங்க எனக்கு படிக்கணும் என்று ராஜாத்தியிடம் கூறியவன் லேப்டாப்பை எதையோ அடிக்க ஆரம்பித்தான்

ராஜாத்தி எதுவும் பேசாமல் கீழே சென்றதும் மீண்டும் லேப்டாப்பில் இருந்து தலைதூக்கிப் பார்த்த யோசனையாக சில நேரம் அமர்ந்தவனுக்கு காவ்யாவை கடத்தியது நியாபகம் வந்தது உடனே அவன் கல்லூரி நண்பர்களிடம் அது பற்றி கூற யார் என விசாரித்து யாருக்கும் தெரியாத வண்ணம் சிறப்பாக கவனிக்க சொன்னான் அதன் பிறகே அவனுக்கு சற்று நிம்மதி…


கீழே வந்த மீனாவிற்கு தலையே சுற்றியது ஆம் பால் அனைத்தும் பொங்கி சமையல் மேடை முழுவதுமாக கொட்டி பால் பாத்திரம் கரிந்து பார்த்ததுமே இனி உபயோகப்படுத்த முடியாது என்று தோன்றியது


அது மட்டுமின்றி சமையல் மேடை அடுப்பு,அருகில் இருந்த எல்லாம் துடைத்து சுத்தம் செய்ய மாலை ஆகிவிட்டது.


வேலை முடித்து அக்கடா என்று அமரும்பொழுது ராஜாத்தி வந்து பால் பாத்திரத்தையும் சுத்தமாக விளக்கி வை பால் பாத்திரம் புதிதாக வாங்க முடியாது, ஒருமுறை இதுபோல் உன்னை சுத்தம் செய்து உபயோகப்படுத்த வைத்தால் தான் அடுத்த முறை இதுபோன்று தவறு செய்ய மாட்டாய் என்று அவளுக்கு தண்டனையும் கொடுத்துவிட்டு சென்றார்.

அதை ஊறவைத்து தேய்த்தால் கூட இரண்டு மூன்று நாட்கள் ஆகும் எப்படி ஒரே நாளில் பாத்திரத்தை சுத்தம் செய்வது என்று கவலையில் உட்கார்ந்து இருந்தாள் மீனா,


ஒருவழியாக செல்வா வரும் வரை பாத்திரத்தை சுத்தம் செய்வதிலேயே பொழுது கழிந்தது..


இரவு செல்வா வரவுமே இன்று தனது தங்கைக்கு நடந்த விபத்தினையும் விஜய் காப்பாற்றியதையும் ஒன்றுவிடாமல் கூறிய மீனா யார் அவர்கள் என்று விசாரித்து சட்ட நடவடிக்கைகள் ஏதாவது எடுக்க வேண்டும் என்றாலும் எடுங்கள் என்று அவனிடம் கூறினாள்


செல்வாவிற்கு கேட்டதுமே பயங்கர கோபம் நேராக விஜயிடம் சென்றவன் யாரது நம்ம வீட்டு பொண்ணை கடத்திட்டுப் போனது நீ ஏதாவது விசாரிச்சியா என்று கேட்டான்

ம்ம்... விசாரிச்சு நல்லா கவனிக்கவும் செஞ்சாச்சு இனிமே காவாயா பின்னாடி மட்டுமில்லை யார் பின்னாடியும் போகமாட்டாங்க பொண்ணுக பின்னாடி போகனும்ங்கற நினைப்பே வராது அந்த அளவுக்கு சரி பண்ணி ஆச்சு நீ வொரி பணிக்காத

சரி மீனாக்காக மூணு இன்ஸ்டியூட் ல இருந்து கம்ப்யூட்டர் கோர்ஸ்க்காக அப்ளிக்கேஷன் வாங்கி வச்சிருக்கேன் உனக்கு எது ஒகேனு பாத்து சொன்னா நான் அப்பிளிகேஷன் அனுப்பி வைச்சிடுவேன் என்று விஜய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அப்ளிகேஷனை அவன் பக்கம் நகர்த்தி வைக்க


அவன் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நெற்றியில் கை வைத்து தேய்க்க விஜயோ என்ன யோசிக்கிற அவ நாள் ஃபுல்லா வீட்டிலிருந்து கிட்டு தேவையில்லாம அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கா


இன்னைக்கு நான் வீட்ல இருந்ததால இதெல்லாம் எனக்கு தெரிஞ்சது உனக்கு தெரியுமா தெரியாதா ஏதாவது சொல்லி இருப்பா தானே அம்மாவை பத்தி...


இல்லடா விஜய் அவ இதுவரைக்கும் அம்மாவ பத்தியெல்லாம் எதுவுமே சொன்னதில்லை எதுவா இருந்தாலும் அம்மா முன்னாடி தான் சொல்லுவா அதுவும் எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை இருக்கிறது தான்


அதனால நான் எதையும் பெருசா எடுத்துக்கறதில்ல இப்போ எனக்கு என்ன பிரச்சினைனா அப்பாவோட வேலை இந்த மாசத்தோட முடியுது...இனி அப்பாவோட சம்பளம் வீட்டுக்கு வராது... இனி வாடகை சாப்பாட்டு செலவுமே என்னோட சம்பளத்திலிருந்து தான் பாக்குற மாதிரி இருக்கும் இந்த சமயத்துல


அவ கோர்ஸ் ஜாயின் பண்ணனும்னா அட்மிஷன் பிஸ் எடுத்து வைக்கணும் அப்புறம் மாசா மாசம் அவ படிப்புக்குனு ஒரு அமௌண்ட் எடுத்து வைக்கனும் அதான் யோசிக்கிறேன்



அதுவுமில்லாம இன்னைக்கு தான் என் பிரெண்ட் ஐ பார்த்து பேசினேன் இங்க பக்கத்துலதான் ஒரு ஸ்டேஷனரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆபிஸ் ஆரம்பிக்கப் போறானாம் கொஞ்சம் பெரிய அளவில் ஆரம்பிக்கறான் போல அதுக்காக ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து வைச்சிருக்கானாம் அங்கிருந்து கேக்குற கடைகளுக்கு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்க்கு டெலிவரி கொடுக்குற மாதிரி


ஸ்டாக் மெயின்டெயின் பண்றதுக்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்னு ஃபீல் பண்ணறான்

நான் யோசிக்காமல் மீனா பேரை சொல்லிட்டு வந்திருக்கேன் அவன் அடுத்த மாதம் மாதிரி ஃபுல்லா செட் ஆயிடும் அதுக்கப்புறமா கூட்டிட்டு வானு சொன்னான் அதான் யோசிக்கிறேன்


அப்போ படிக்க வைக்க விருப்பம் இல்ல வேலைக்கு அனுப்ப முடிவு பண்ணிட்டே ஓகே ரைட்... என்று அப்ளிகேஷனை அவன் பக்கம் இழுத்து டேபிளில் வைத்த விஜய் ட்டேம் பிஸ் கேட்டிருந்தேனே நீ ஒண்ணுமே சொல்லல என்று கூற

இல்ல ரெடி பண்ணி வச்சிட்டேன் காலையில் அம்மா கிட்ட கொடுத்துட்டு போறேன் வாங்கிக்கோ என்று கூறிவிட்டு செல்வா சென்று விட்டான்…


விஜயோ செல்லும் அவள் அண்ணனை பார்க்க பாவமாக இருந்தது வயது முப்பது தான் ஆயிற்று ஆனால் அதற்குள் அவனுக்கு தான் எவ்வளவு பொறுப்புகள் இந்தப் பருவ தேர்வு முடிந்து விட்டால் அதன் பிறகு ஓர் ஆண்டுகள் மட்டுமே அதன் பிறகு இவனுக்கான வழியை இவனே தேடிக் கொள்வான்.


அதுவரை முடிந்த அளவு அண்ணனுக்கு சிரமம் கொடுக்காமல் நானே ஏதாவது செய்து தனது படிப்புக்கான பணத்தை ஈட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்


இப்பொழுது ஓரளவுக்கு ஷேர் மார்க்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து இருந்தது ,புரிதலும் இருந்தது அதனால் அதில் ஏதாவது முயற்சி செய்யலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறானா


இப்படியாக அந்த வாரம் முடியும் தருவாயில் மீனாவின் கடைசித் தங்கைக்கு வரனொன்று தகித்து வந்திருப்பதாகவும் அந்த வரன் எல்லோருக்குமே திருப்தி அதனால் உடனடியாக நிச்சயம் வைத்திருக்கிறோம் அனைவரும் வரவேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர்


விஜய் தான் செல்வாவிடம் கேட்டான் அவங்க வீட்ல ஒரு பொண்ண கூட முழுசா படிப்பை முடிக்க விட மாட்டாங்களா நல்ல குடும்பம் போ... உன் மச்சினிச்சிக தான நீயாவது அவங்களுக்காக பேசலாம்ல அத விட்டுட்டு உன் மாமனார் என்ன சொன்னாலும் எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டு என்று கூற


செல்வாவும் என்ன செய்ய சொல்ற விஜய் நம்மகிட்ட ஏதாவது வசதி வாய்ப்பு இருந்தாலாவது அவங்களால படிக்க வைக்க முடியலனா கூட நான் படிக்க வைக்கிறேன்னு சொல்லி பொண்ணுகளோட படிப்பு செலவை ஏத்துக்கலாம்


ஆனா பாரு நம்ம பொழப்பே இப்படி இருக்கும் போது நான் எப்படி டா அவங்களுக்கு போய் ஹெல்ப் பண்ண முடியும் என்று அவன் அவர்களின் நிதர்சனத்தை கூற


என்னவோ போடா அண்ணா என்ன சொன்னாலும் அதுக்கு ரெடிமேடா ஒரு பதில் வெச்சிருக்க உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியாது நீயாச்சு உன் மாமனார் குடும்பம் ஆச்சி ...நா போறேன் என்று சென்று விட்டான்.


அந்த வார இறுதியில் செல்வாவும் மீனாவும் தங்கையின் நிட்சயத்திற்காக சென்றனர்


அங்கு தங்கைகள் இருவரும் மீனா இரண்டு நாட்கள் இருந்துவிட்டு செல்லட்டும் என்று கூற செல்வாவும் சரி என விட்டுவிட்டு வந்தான்.

இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது அந்த இரண்டு நாளில் மீனா இல்லாமல் அந்த வீடு எவ்வளவு பாடு பட்டது என்று


ராஜாத்தியால் நிஜமாகவே ஒரு வேலையையும் செய்து முடிக்க முடியவில்லை இவ்வளவு நாள் மீனாவை அதட்டி உருட்டி வேலை வாங்கியவருக்கு எல்லா வேலையும் அவரே செய்ய வேண்டிய கட்டாயம்.


இரண்டு நாட்களாக வீட்டில் வேலை நடந்ததை வைத்தே ஆண்கள் மூவருமே தெரிந்து கொண்டனர் இந்த வீட்டின் முதுகெலும்பாக இருப்பது மீனா மட்டுமே என்று


செல்வாவிற்கு எப்பொழுதுமே தெரியும் தனது தாயை கஷ்டப்படுத்த கூடாது என்றுதான் அவர் மீனாவை பற்றி என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை


மற்ற இரு ஆண்களுக்குமே இன்று தான் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது ராஜாத்தியால் சமைக்க முடியவில்லை
இதுநாள் வரையிலும் என்றுமே கடையில் வாங்கி சாப்பிட்டது இல்லை ஆசைக்காக வேண்டுமானால் சாப்பிட்டிருக்கிறார்கள் பசிக்காக சாப்பிட்ட தில்லை ஆனால் இன்று பசிக்காக அனைவருக்குமே கடையிலிருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.


மீனாவிற்கு இந்தக் இரண்டு நாட்கள்தான் மிகவும் சந்தோஷமாக இருந்தது அவளின் வீட்டில் தாய் அவளை ஒரு வேலையும் செய்ய விடவில்லை தங்கைகளும் அப்படித்தான் அந்த வீட்டில் மகாராணியை போல் நடத்தினர்

இரண்டு நாட்களுமே ஓய்வு மட்டுமே,சாப்பாடு, துக்கம் மட்டுமே இரண்டாம் நாள் இரவு வருமே அவளுக்கு இந்த இரவு விடியவே கூடாது என்றுதான் தோன்றியது ஆனால்


மறுநாள் காலையிலேயே மீனாவை செல்வா அழைக்க வந்து விட்டான்.

விருப்பமே இல்லாமல் தாய் வீட்டை விட்டுப் பிரிந்து வந்தாள்.


திருமணமான புதிதில் தான் தாய் வீட்டிற்கு வந்தால் எப்போதடா புகுந்த வீடு சென்று தனது கணவருடன் சேர்ந்து இருப்போம் என்று எதிர்பார்ப்பாள் ஆனால் இப்போதெல்லாம் அப்படி எல்லாம் இல்லை தாய் வீட்டிற்குச் செல்ல ஒரு சிறு சாக்கு கிடைத்தால் கூட செல்ல தயாராக இருக்கிறாள் ஆனால் அவளுக்கு அப்படி ஒரு காரணம்தான் கிடைக்கவே கிடைக்காது கண்ணீருடன் கணவருடன் அவளின் புகுந்த வீட்டிற்கு வந்தாள்.


இங்கு வரும் பொழுதே விஜய்க்கும் ராஜாத்திக்கும் பயங்கரமாக சண்டை வந்து கொண்டிருந்தது என்ன என்று செல்வா கேட்கும்பொழுது


விஜயோ எனக்கு கொஞ்சம் பணம் வேணும் அது அம்மா கிட்ட கேட்டுட்டு இருக்கேன் என்று சொல்ல


செல்வா குறுக்கிட்டு எதுக்குடா பணம் காலேஜ் ஃபீஸ் தான் எல்லாமே கரெக்டா கட்டியாச்சே அப்புறம் எதுக்கு பணம்..


ஷேர் மார்க்கெட்டிங்ல இன்வெஸ் பண்ண போறேன்
ஜஸ்ட் ரெண்டு மூணு நாள்ல போட்டு எடுக்கற மாதிரி ஒரு சின்ன பிசினஸ் என்று கூற


ஷேர் மார்க்கெட்டிங்கா…. எதுக்குடா ரிஸ்க் இப்ப இருக்கிற பிரச்சினைல , அதும் அம்மா கிட்ட எப்படி பணம் இருக்கும் சொல்லு அப்பா எவ்வளவு சம்பளம் வாங்கறாருங்கற விஷயம் உனக்கே நல்லா தெரியும் தெரிஞ்சிருந்தும் கேக்குறியே என்று செல்வா கேட்க





கேளுடா நல்லா கேளு என்கிட்ட பணத்தை கேட்டா நான் எங்கே போவேன் என்று ராஜாத்தி குறுக்கிட்டார்


நா ஒன்னும் உங்க பணத்தை கேக்கலமா அப்பாவோட சம்பள பணத்தை சேர்த்து வச்சு இருக்கீங்கல்ல அதுல இருந்து எடுத்து குடுங்க என்று பிடிவாதமாக கேட்டான் விஜய்.

டேய் அது ஏதோ வீட்டுச் செலவுக்காக எடுத்து வைச்சிருக்கேன் உன் கிட்ட எடுத்து கொடுத்துட்டு திடீர்னு சம்பளத்தில இருந்து தூண்டு விழும் போது எப்படி சமாளிக்கிறது என்றார்.


அதையெல்லாம் உன் பெரியபிள்ளை பார்த்துப்பான் முதல்ல எனக்கு பணம் கொடுங்க என்று வம்பு பேச


சரி விஜய் அம்மாவோட காலையிலேயே சண்டை போடாத நான் எதாவது ஏற்பாடு பண்ண முடிஞ்சா ஏற்பாடு பண்ணி பாக்குறேன் ஆமா எவ்வளவு பணம் வேணும் என்று செல்வா கேட்க



ஒரு அம்பது ஆயிரம் ரூபா வேணும்
கொஞ்சம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை ஆனா எனக்கு கண்டிப்பா பணம் வேணும் என்று உறுதியாக கூறி விட்டு விஜய் சென்று விட்டான்.


குழப்பத்துடன் நெற்றியைத் தேய்த்தபடி உள்ளே செல்ல
இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனாவும் அவனின் பின்னே வந்தவள்


உங்க கிட்ட அவ்ளோ பணம் இருக்கா நீங்க பாட்டுக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டீங்க என்று கேட்டாள்.

என்னையென்ன பண்ண சொல்லற
பாத்தல்ல அம்மா கிட்ட எப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்கானு அவங்க சண்டையை அடைக்க வழி தெரியல அதனால அப்படி சொன்னேன்

அவங்க சண்டைக்குள்ள நீங்க ஏன் போறீங்க இப்போ உங்களுக்கு தான் தேவையில்லாத டென்ஷன்…
என்னமோ பண்ணுங்க நான் சொன்னா மட்டும் நீங்க கேட்கவா போறீங்க என்ற மீனா வீட்டு வேலைகளை செய்ய கிளம்பினாள்.

சாதாரணமாக வீட்டில் இருந்தாலே இரவு வரை வேலைகள் தீராது இப்பொழுது இரு நாட்கள் வேறு தாய் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறாள்

அந்த இரண்டு நாள் வேலையை ஒரு வாரம் வரை வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போனவளுக்கு இல்லை இல்லை ஒரு வாரம் அல்ல இரு வாரம் வரை நீ வேலை செய்ய வேண்டும் என்பது போல் மாமியார் அவளுக்கு வேலைகளை இழுத்து வைத்திருந்தார்.


அடுப்பு முழுவதும் குழம்பை கொட்டி வைத்தும் பாலை பொங்க விட்டும் அடுப்பில் கை வைக்கவே முடியாது அவ்வளவு கறைகள்.

சமையல்கட்டில் பொருட்கள் அனைத்தும் எல்லாம் கீழேயும் மேலேயும் கொட்டப்பட்டிருந்தது


கடையில் வாங்கி சாப்பிட்ட கவரை கூட மாமியார் குப்பையில் எடுத்துப் போடவில்லை பார்த்ததும் ஒரு நிமிடம் தலையில் கைவைத்து யோசித்தவள் பிறகு மடமடவென அவளின் வேலைகளை செய்யத் தொடங்கினாள்.


ஆபீஸ் கிளம்பிய செல்வா சாப்பிட வரவும் எல்லாவற்றையும் எடுத்து வைத்த மீனாவிடம் செல்வா அவளின் முகத்தை பார்த்து


மீனா நான் கிட்ட கொஞ்ச நாள் முன்னாடி வேலைக்கு போற விஷயம் பத்தி சொல்லி இருந்தேன் நீ இதுவரை எனக்கு பதிலே சொல்லல …


இல்லங்க வீட்டு வேலையே சரியா இருக்கு இதுல வேலைக்கும் போயிட்டு வீட்டு வேலையும் பாக்கனும்னா அதான் கொஞ்சம் யோசிக்கிறேன் என்றவளிடம்



கொஞ்ச நாளைக்கு வேணா போயேன் மீனா விஜய்க்கு வேலை கிடைக்கிற வரைக்கும் நான் அதுக்கு அப்புறமா நீ வீட்ல கூட இருக்கலாம்
நான் கூட உனக்கு காலையில ஏதாவது ஹெல்ப் பண்றேன்னே என்று அவளை சம்மதிக்க வைத்தவன்


இன்னைக்கு சாயங்காலம் வந்து சொல்றேன் எப்போ இருந்து வேலைக்கு போகணும்னு ஏதாவது முக்கியமான வேலை ஏதாவது இருந்தா அதை மட்டும் செஞ்சு வை


மீதி வேலையை மெதுவா பார்த்துக்கலாம் என்று வீட்டில் அவளுக்கு இருக்கும் வேலைகளை மனதில் நினைத்துக் கொண்டு கூறினான்.


அவளும் சரி என தலையாட்டினாள் அந்த வாரத்திலேயே அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் அவனுடைய நண்பனின் ஆபிஸ் இருந்தது.


ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து அதையே குடோன் ஆக மாற்றி இருந்தார், பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவைப்படும் பேப்பர் பேனா நோட்டு புத்தகங்கள் புத்தகப் பை என அனைத்தையும் கொள்முதல் செய்யும் இடத்திலிருந்து வாங்கி அதை சில்லரை வியாபாரிகளுக்கு கை மாற்றுவது தான் அவரின் வேலை


இங்கு மீனாவின் வேலை வரும் பொருட்களை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கணக்குப் பார்ப்பது...


எந்தெந்த பொருட்கள் விற்பனையாகுதோ அதையும் குறித்து வைத்து மீண்டும் அப்பொருட்களை வர வைக்க வேண்டியது மிக சுலபமான வேலைதான் பெரியதாக கல்லூரியில் படித்த அனுபவம் எல்லாம் தேவை படாததால் இந்த வேலை அவளுக்கு கிடைத்தது.


அவளுக்கு வேலை தரப்போகும் ஓனர் அந்த வீட்டில் ஒரு பாதியை ஆபீஸ் ரூம் ஆகவும் மறுபாதியை குடோனாகவும் மாற்றி பின்புறம் இருந்த இடத்தில் அவர் குடியிருக்கிறார்


வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் இந்த ஒரு வீட்டின் மூலம் இவ்வளவு பலன்களையும் அனுபவித்திருக்கிறார்


கொஞ்சம் கஞ்சனும் கூட அதனால் தான் நன்கு படித்த பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு கணிசமான தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டும் ஓரளவுக்கு படித்த பெண் என்றால் அவர் சொல்லும் சம்பளத்திற்கு வேலைக்கு வருவார்கள் என்று எண்ணி தான் அவர் மீனா போல இருக்கும் பெண்களை வேலைக்கு தேடிக் கொண்டிருந்தார்


அந்த சமயத்தில் எதேச்சையாக செல்வாவிடம் பேச்சுக் கொடுக்க செல்வா அவன் மனைவிக்கு ஒரு வேலை தேடிக் கொண்டிருப்பதை மறைமுகமாகச் சொல்ல உடனடியாக அந்த வேலையைப் பற்றிய சிபாரிசை செல்வாவிற்கு அவன் உணர்த்த இப்பொழுது மீனாவிற்கு வேலை கிடைத்துவிட்டது.

மறுநாள் காலையிலேயே செல்வா வந்து அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவிட இதைப் பார்த்துக்கொண்டிருந்த விஜயும் சில வேலைகளை செய்ய தொடங்கினான்


ராஜாத்தி இப்பொழுது எந்த வேலையும் செய்வதில்லை எப்பொழுது கேட்டாலும் அவருக்கு முடியவில்லை இல்லையென்றால் வேலை செய்ய முடியாது என்பது மட்டுமே பதிலாக இருப்பதால் அவரை இப்பொழுது மூன்று ஆண்களுமே எந்த வேலையும் சொல்வதில்லை



முடிந்தால் அவர்களை செய்வார்கள் அப்படி இல்லை என்றால் மீனா செய்து தரும் வரை காத்திருப்பார்கள்


இப்பொழுது ஒன்பது மணிக்குள்ளாக அவளுடைய வேலை எல்லாம் முடித்தபின் செல்வா அவளை வேலைக்கு அழைத்து செல்ல காத்திருந்தான்


போகும் வழியில் செல்வா அவளை பணி செய்யும் இடத்தில் இறக்கி விடுவான் பின்பு அவனுக்கு ஆபீஸ் முடிந்து வரும் பொழுது அவளுக்கு வேலை முடிந்து இருந்தால் அழைத்துக்கொண்டு வந்து வருவான் இல்லை என்றால் ஏதாவது ஒரு ஆட்டோ பிடித்து அவளே வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தி இருக்கிறான்.


இவர்களின் குடும்ப தேவைக்காக இப்பொழுது அவளும் ஒரு தூணாக மாறிப்போனாள். இவ்வளவு நாள் தனது கணவன் மட்டுமே தூக்கிச் சுமக்கும் இந்தக் குடும்பத்தை இவளும் தோள் கொடுத்து தாங்கிக் கொள்ளப் போகிறாள் அவளுக்கு இது சற்று பெருமையே


முதல் நாள் வேலை எப்படி இருக்குமோ என்று பயந்தபடி மீனா கிளம்பி வெளியே வர வீட்டில் இருந்த அனைவருமே ஆச்சரியமாக அவளைத்தான் பார்த்தார்கள்


மிக சாதாரணமாக ஒரு காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் முடிகளை பின்னலிட்டு தலையும் கொஞ்சம் மல்லிகைப்பூ நெற்றியில் ஒரு பொட்டு மட்டும் வைத்திருந்தவள் அவ்வளவு அழகாக எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தாள்.


இந்த மூன்று ஆண்டுகளில் திருமணம் தவிர்த்து வேறு எந்த நாட்களில் மீனா ஒப்பனை செய்து யாருமே பார்க்கவில்லை


எப்பொழுதுமே தூக்கிக் கட்டிய ஒரு வாயில் புடவையும் எண்ணெய் வழியும் முகம், உச்சி மண்டையில் இடப்பட்ட கொண்டை இதைத்தான் பார்த்திருக்கின்றனர்

அவளின் வயதிற்கேற்ற எந்த ஒரு ஆசையும் கிடையாது...எந்த ஒரு ஒப்பனையும் அவள் செய்து கொண்டதே கிடையாது,


வந்த நாள் முதல் இன்றுவரை செல்வாவிற்க்கும் அவனின் குடும்பத்தாருக்கும் மட்டுமே பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஆனால் இதுவரை அந்த வீட்டில் இருக்கும் யாருக்குமே அவளின் தியாகமும் அவள் செய்யும் வேலைகளும் கண்ணில் படவே இல்லை


இப்பொழுது சமீபமாக தான் விஜய் அவளை சற்று கவனிக்க தொடங்கி இருக்கிறான் அதற்கும் காரணம் அவனுடன் படிக்கும் சக பெண்கள் அவர்கள் உடுத்தும் ஆடை அவர்கள் செய்து கொள்ளும் ஒப்பனை இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவ்வப்போது விஜய்க்கு தானாக தோன்றும்…

மீனாவிற்கும் இவர்கள் வயது தானே இருக்கும் அவள் மட்டும் ஏன் இது போல அவளை அலங்கரித்துக் கொள்ள தோன்றவில்லை.

ஒருவேளை அவள் தங்கள் வீட்டை தவற வேறு வீட்டிற்கு மருமகளாக சென்றிருந்தால் இதுபோல எல்லாம் அவளுக்கு கிடைத்திருக்குமோ என்னவோ

தங்கள் வீட்டிற்கு அவளை கூட்டி வந்து மிகவும் கொடுமைப் படுத்துகிறோமோ என்றும் தோன்றியது


நல்லவேளை வயதை காரணம் காட்டி தனது அண்ணன் அவளை வேண்டாம் என்று கூறவில்லை அப்படி கூறியிருந்தால்


மீனாவை தவிர்த்து வேறு எந்த ஒரு பெண் வந்து இருந்தாலும் இன்று அவர்களின் ‌ தாய் செய்யும் சேட்டைகளுக்கு அவள் எப்போதே சண்டை இட்டு தனிக்குடித்தனம் சென்றிருப்பாள், அந்தவகையில் அண்ணனின் முடிவை நினைத்து அவ்வப்போது மனதுக்குப் பாராட்டியும் கொள்வான்.

வெளியே வந்தவள் அனைவரையும் பார்த்து என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க என்று கேட்டாள்

உடனே அனைவரும் ஒரு போல ஒன்னும் இல்ல என்று தலையசைத்த படி அவரவர் வேலையை செய்ய


செல்வா மூன்று வருடம் கழித்து தனது மனைவியை ரசனையாக பார்த்தான்.

விஜய்யோ மீனாவை பார்த்து ஆல் த பெஸ்ட் மீனா என்றான் ராஜாத்தி அவரின் பங்கிற்கு சாமி படத்தின் முன்பு இருந்த விபூதியை எடுத்து வந்து அவளின் நெற்றியில் வைத்து விட்டவர் பார்த்து பத்திரமா போயிட்டு சீக்கிரமா வீடு வந்து சேரு வேலைய கெட்டியா புடிச்சுக்கோ விட்டுடாதே என்று அறிவுறுத்தினார் சரி என்று தலையசைத்து விட்டு மாமனாரிடமும் கூறிவிட்டு செல்வாவின் பின்னால் வந்து அமர்கிறாள்.

அவளுக்கு முதல் நாள் வேலை எப்படி இருக்குமோ என்று சிறு படபடப்பும் இருக்கிறது


கணவனின் பின்னால் தினமும் இது போல் பயணம் செய்யலாம் என்ற சந்தோஷமும் இருக்கிறது கணவன் வண்டி எடுக்கவும் பேலன்ஸ் கிடைக்காமல் கனவின் மீதி போய் மோதுகிறாள் ஏனோ அவளுக்கு என்று உடலில் சிறு ரசாயன மாற்றமும் ஏற்படுகிறது.

அவன் வண்டி ஓட்டிக் கொண்டே இருக்கும் பொழுது நன்றாக அவள் பக்கம் தள்ளி அமர்ந்த மீனா செல்வாவின் தோள்களில் கைகளை வைத்தபடி



ஏங்க உங்ககிட்ட ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே என்றவளிடம்


ம்ம்...சொல்லு….


விஜய் படிச்சு முடிச்சு வேலைக்கு போற வரைக்கும் நான் வேலைக்கு போனா போதும்ல்ல அதுக்கு அப்புறமும் போகணுமா?


இல்ல மீனா கொஞ்ச நாள் வேலைக்கு போனா போதும் …ஆமா ஏன் தீடிர்னு இது போல கேக்கற...



இல்ல நான் ஏன் கேட்கறேன்னா விஜய் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பிச்சதுமே நாம குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சோம் இப்போ நா வேலைக்கு வந்துட்டதால மறுபடியும் அதை தள்ளிப் போட்டிடுவீங்களோனு எனக்கு பயமா இருக்கு அதுதான் கேட்டேன்


எல்லாருமே என்னை கேக்கறாங்க குழந்தையில்லையினு... ஆளாளுக்கு வந்து ஒவ்வொரு மருத்துவம் சொல்றாங்க வெவ்வெறு ஹாஸ்பிடலுக்கு ரெக்கமெண்ட் பண்றானுங்க

இங்க போய் பாரு அங்க போய் பாரு இல்லன்னா இந்த கோயிலுக்குப் போ இந்த பரிகாரம் செய் அந்த பரிகாரம் செய்யுனு நம்மளோட நிலைமை என்னனு புரிஞ்சுக்காம


இந்த மாதிரி ஆளுங்க கூட பரவால்ல கொஞ்ச அக்கறையோடு விசாரிக்கறாங்க ஆனா நம்ம வீட்டை சுத்தி இருக்கிறவங்க அத்தனை பேரும் என்ன வேற மாதிரி பேசுறாங்க

இதையெல்லாம் இவ்ளோ நாளா நான் உங்க கிட்ட சொல்லாம இருந்தேன் விஜய் படிப்ப முடிஞ்சதும் அப்புறமா எப்படி இருந்தாலும் குழந்தை பெத்துக்க போறோம்


அதுக்கப்புறம் எல்லாருக்கும் அந்த குழந்தையை வைத்து பதில் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்

ஆனா இப்ப நீங்க என்னை வேலைல சேர்த்து விடும் போது கொஞ்சம் பயம் வருது குழந்தை விஷயத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிடுவீங்களோனு அப்படி பண்ண மாட்டிங்கல்ல என்று கவலையாக கேட்டாள்


வண்டியை நிறுத்தி விட்டு திரும்பியவன் உன் மேல சத்தியமா சொல்றேன் விஜய் வேலைக்கு போன அடுத்த நிமிஷமே நாம நம்மளோட குழந்தைகளுக்கான பிளானை கண்டிப்பா பண்ணலாம் அது வரைக்கும் இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் நம்மளோட இருக்கட்டும் அது வரைக்கும் என் கூட சேர்ந்து என் குடும்ப பாரத்தை தாங்கிக்கோ...என்றவன்



இதான் நான் சொன்ன இடம் மீனா ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சிடும்னு சொல்லி இருக்காங்க...எனக்கு ஒவர் டைம் இல்லனா நானும் அந்த நேரத்துக்கு தான் வருவேன் உன்னை நான் பிக்கப் பண்ணிக்கிறேன் , ஓவர்டைம் இருக்கிற சமயத்தில் நான் உனக்கு கூப்பிட்டு சொல்லிடுறேன் விஜய் ப்ரீயா இருந்தா அவன் வந்து உன்னை கூப்பிட்டுப்பான் அப்படி இல்லன்னா நீ ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடு செலவுக்கு கைல காசு வச்சிருக்கியா ஒருவேளை 6 மணி தாண்டற மாதிரி இருந்தா எனக்கு போன் பண்ணி சொல்லிடு...ஆமா கைல போன் இருக்குல்ல….என்று கேட்டவன் அவள் ஆமாம் என்று தலையசைப்பதை பார்த்தவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவள் கையில் திணித்தான். பத்திரமா வச்சுக்கோ ஏதாவது வேணும்னா வாங்கி சாப்பிடு என்று கூறியபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.


தொடரும்....
 
Top