8
மீனா க்கு அன்றைய நாள் ஒன்றும் பெரிதாக சொல்லிக் கொள்வது போல் இல்லை முதல் நாள் என்பதால் செல்வாவின் நண்பன் பிரசாத் அவளைப் பெரிதாக வேலை வாங்கவில்லை…
மாலை செல்வா வரவும் உடன் வந்து விடுவாள் இப்படியாக அவளின் அன்றைய வேலை நாட்கள் கழிந்தது.
அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாட்களின் காலையிலும் அவளுக்கு வீட்டு ஆண்கள் உதவி செய்ய வீட்டு வேலையும் முடித்துவிட்டு வேலைக்கு செல்பவள் மாலை வரை வேலை செய்துவிட்டு செல்வாவின் பின்னே வருவதுபோல் ஒரு வாரம் கடந்தது
இப்படியாக சென்று கொண்டிருந்த ஒரு நாள் ஒரு இரவு நேரத்தில் எதேச்சையாக காற்று வாங்குவதற்காக அவள் மொட்டை மாடி செல்ல
அங்கு விஜய் மிகவும் டென்ஷனாக இருப்பது போல் தெரிந்தது அவள் பார்த்த பத்து நிமிடத்திற்குள் இரண்டு சிகரெட்டினை புதைந்திருந்தான்…
அவள் அங்கிருப்பதை அவன் கவனிக்கவில்லை வாசல் வரை வருவது பிறகு அவனுடைய ரூமுக்குள் செல்வது திடீரென இரு கையாலும் தலையைக் கோதிக் கொள்வதும் டேபிளில் தலை வைத்து படுப்பது என அவனின் நடவடிக்கைகள் எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தது
அவன் படும் பாட்டை பார்த்து மனம் கேளாமல் அவன் ரூம் அருகில் செல்லவும் அவளைக் கண்டதும் எரிந்து விழுந்தான் எதுக்கு இந்த நேரத்துல வந்து இருக்க வீட்ல யாரும் இல்லையா என்றான்.
இவள் உடனே சிரித்தபடி அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவள் பொறுமையாக மறந்துட்டீங்களா இன்னிக்கு உங்க அப்பாவோட ஆபீஸ்ல மாமாக்கு கடைசி நாள் சென்ட் ஆப் பார்ட்டிக்காக உங்க அப்பா உங்க அம்மா உங்க அண்ணா மூணு பேரும் போய் இருக்காங்க
என்னை வீட்டை பார்த்துக்கறதுக்காக விட்டுட்டு போனாங்க நீங்க இருந்த விஷயம் அவங்களுக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நானும் அவங்க கூட போயிருப்பேன்
ஆமா... என்ன ஆச்சு ஏன் இவ்வளவு டென்ஷன் விருப்பம் இருந்தா என்கிட்ட செல்லலாம் என்று சொன்னாள்.
முன்பாக இருந்தால் அவளிடம் எதுவும் சொல்லமாட்டான் அன்று தாய் பேசியதைக் காது வழியாக கேட்டிருக்கிறான்
இப்பொழுது இவன் படிப்பு முடிக்க வேண்டும் என்பதற்காக இவளே தானாக வேலைக்கு செல்கிறாள் அப்படி இருக்கும் பெண்ணிடம் சொல்லலாம் தப்பில்லை என்று நினைத்தவனுக்கு
நான் அம்மா கிட்ட பணம் கேட்டேன் இல்ல அண்ணன் கூட தரேன்னு சொன்னானே...
ஆமா அதுக்கு என்ன
இப்போ …
அண்ணன் இன்னும் அந்த பணம் எனக்கு கொடுக்கல...என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிய படி சொன்னேன்.
ஒஒஒ…. இதான் பிரச்சனையா என்று சுருதி இறங்கியவள் சரி அதுக்கும் நீங்க இப்படி இருக்குறதுக்கும் என்ன
சம்பந்தம் , இப்படி விடாமல் ஸ்மோக் பண்ணிட்டு இருந்தா...சரி ஆயிடுமா?
யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில வந்து ஒளிஞ்சிகிட்டா பணம் கிடைச்சிமா...இன்னைக்கு நைட்டு உங்க அண்ணன் வந்ததும் என்னன்னு கேட்டு ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்….
நெஜமா சொல்லு மீனா காலைல குள்ள பணம் ரெடி ஆயிடுமா….
அது எப்படி காலையில குள்ளமுடியும் நாம ஒன்னும் அவ்வளவு வசதியானவங்க கிடையாதே ஒரே நாள் ராத்திரியில் ஐம்பதாயிரம் ரெடி பண்றதுக்கு…
சரி அப்படி என்ன அவசரம் உடனே நீங்க சொன்ன ஷேர் மார்க்கெட்ல பணம் போடனுமா என்ன…. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்ல...என்னவளின்
அப்படி வெயிட் பண்ண முடியாது மீனா நான் அந்த மாதிரி ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்
யார்கிட்டயாவது சொன்னா மனசு கொஞ்சம் சாந்தி படும்னு நினைக்கிறேன் நீ எனக்கு ஒரு வாக்கு கொடு
நான் உன்கிட்ட சொல்ல போற விசயத்தை நீ யார்கிட்டயும் எப்பவும் சொல்லமாட்டேன்னு,அண்ணன் கிட்ட கூட... என்று யாசகம் கேட்பவன் போல் அவளின் முன்பு தனது உள்ளங்கையை நீட்டியபடி நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் தானாக அவனின் உள்ளங்கை மீது தனது கையை வைத்து யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் அதேசமயம் என்னால ஏதாவது பண்ண முடிஞ்சாலும் நான் உனக்காக பண்றேன் தைரியமா என்கிட்ட நீ செல்லலாம் என்று சொன்னாள்.
அன்னைக்கு அம்மா கிட்ட பணம் கேட்டு சண்டை போடும்போது அண்ணன் வந்து பணம் தரேன்னு சொன்னதால எப்படியும் அவன் பணத்தை கொடுத்திடுவான்னு நினைச்சி ஃப்ரண்ட் மூலமா ஒருத்தர் கிட்ட மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி ஷேர் மார்க்கெட்டிங்ல இன்வெஸ் பண்ணிட்டேன் என்று சொல்லவும்
படீரென எழுந்தாள் என்ன சொல்றீங்க என்று அதிர்ச்சியில் கேட்க
எப்படியும் ரெண்டு மூணு நாள்ல ரொட்டேஷன் பண்ணிக்கலாம்னு நினைச்சி தான் வாங்கினேன்,ஆனா பணம் ரெடி ஆகல...
கண்டிப்பா லாபம் கிடைக்கும் னு நினைச்சி தான் இன்வெஸ் பண்ணினேன்
ஆனால் முதல் தடவை அது பத்தி சரியா தெரியாததால
ஏமாந்துட்டேன்.
இப்போ எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவரு நாளைக்கு காலைல குள்ள நான் பணம் கொடுக்கணும் அப்படி இல்லன்னா வீட்டுக்கு வந்து அசிங்க அசிங்கமா பேசிடுவேனு மிரட்டி இருக்காரு
அது மட்டும் இல்ல என்னோட வண்டி என்னோட மொபைல் போன் எல்லாத்தையுமே புடிங்கி வச்சிகிட்டாரு காலையில வந்து பணத்தை குடுத்துட்டு வாங்கிக்கோனு அதுமட்டுமில்ல ஜாமின் போட்ட என் பிரண்டையும் மிரட்டி இருக்கிறாரு நான் பணம் கொடுக்கலைன்னா அவன் வீட்டிலேயும் போய் பிரச்சனை பண்ண போறதா இப்போ எனக்கு மட்டும் பிரச்சினை இல்லை என்னால அவனுக்கும் பிரச்சனை
ஒரு வாரமா பயங்கரமான டார்ச்சர் அந்தாளு கிட்ட இருந்து என்னால வட்டியும் கட்ட முடியல அசலும் கட்ட முடியல என்ன பண்ண போறேன்னு தெரியல அம்மாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்னோட பேசுவதையே நிறுத்தி விடுவான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல என்று குரல் தழுதழுக்க கூறினான்.
சிறிது நேரம் யோசித்த மீனா தனது கையில் இருந்த வளையல் இரண்டையும் கழட்டி அவனிடம் கொடுத்தாள்
அவனும் இல்ல எனக்கு வேணாம் என்று கூற
பரவால்ல வாங்கிகோ எமர்ஜென்சிக்கு தான் தங்கமே அதனால வச்சுக்கோ என்றவளிடம் பாவமாக
இந்த வளையல் பத்தாது மீனா அந்த ஆளுக்கு கிட்டத்தட்ட எழுபது ஆயிரத்துக்கும் மேல கொடுக்கனும் வட்டியோடு சேர்த்து
இந்த இரண்டு வளையல் பத்தாது இது கடைசியா எவ்வளவு போகும் என்று அவளிடமே கேட்டான்
அவளோ இன்னைக்கு மார்க்கெட் ரேட்டுக்கு வித்தா கூட ஒரு நாப்பது ஆயிரம் மாதிரிதான் போகும் மறுபடியும் முப்பது ஆயிரத்துக்கு மறுபடியும் மாதிரி ஒரு ரெண்டு மூணு பவுன் தேவைப்படுமே என்று யோசித்தவள் ஒரு நிமிஷம் இரு என்று வேகமாக தனது அறைக்குள் சென்று பீரோவில் இருந்த அவள் கழுத்துச் செயினை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்
வேணாம் மீனா எனக்கு இது வாங்க ரொம்ப கில்ட்டியா இருக்கு இந்த மூணு வருஷத்திலே கண்டிப்பா இந்த வீட்டில் இருந்து உனக்காக எந்த நகையும் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க இது உங்க அம்மா வீட்டில் போட்ட நகைக தானே
எனக்கு வேணாம் மீனா நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் நீ எடுத்துட்டு போயி உள்ளவை
பரவால்ல விஜய் இதை வாங்கிகோ
நா வேணும்னா ஒரு சிம்பிள் ஐடியா கொடுக்கவா இதை அண்ணியோட நகையா... அவங்க அம்மா அப்பா வீட்டுல போட்டதா நினைக்காத…
இது உன்னோட ஃப்ரண்ட் கொடுக்கிறதா நினைச்சுக்கோ அப்போ உனக்கு கில்ட்டி ஃபீல் வராது தானே... கொஞ்சம் யோசிச்சு பாரு உன் பிரண்ட் அவனே உனக்காக ஐம்பது ஆயிரம் ரூபாய்க்காக ஜாமீன் போட்டு இன்னைக்கு பிரச்சினையில மாட்டி இருக்கறான் ஆனா நான் இந்த வீட்டிலேயே இருக்கேன் உன் அண்ணி உன்னை எப்படி நான் அப்படியே விட முடியும்
உன் பிரண்டுக்கு உன் மேல இருக்குற அக்கறை கூட எனக்கு உன்மேல இருக்காதா…
ப்ளீஸ் வாங்கிக்க விஜய் என்று அவன் கையை பிடித்து இழுத்து அவன் கையில் வைத்து திணித்தாள்
அவன் வாங்க தயங்கினாலும் அவனின் தேவைக்காக வாங்கிக் கொண்டவன்.
இங்க பாரு நீ அண்ணியா குடுத்து இருந்தா கண்டிப்பா நான் வாங்கி இருக்க மாட்டேன்
ஆனா பட்டுனு சொல்லிட்ட எனக்கு ஃப்ரெண்ஸ்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க பிரண்டாக இருந்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று அந்த சமயத்திலும் அவளை கேலி செய்தான்
உன்ன ...என்று அவனின் தலையில் அடிக்க போனவள்
இனிமே இந்த மாதிரி பிரச்சனைல எல்லாம் தேவையில்லாம மாட்டிக்காத விஜய் அண்ணா உனக்காக எவ்வளவு கஷ்டப்படுறாரு கொஞ்சமாவது மனசுல வெச்சுட்டு
இனி இது மாதிரியான ரிஸ்க் எல்லாம் எடு... காலையில உன் பிரச்சினை எல்லாம் சரி ஆனதுக்கு அப்புறமா ஒரு போன் மட்டும் பண்ணி சொல்லு என்று திரும்பி கீழே போக போனவளை
ஹேய்...மீனா என்று கூப்பிட்டான்.
அவள் என்ன என்று திருப்பி பார்க்க
நீ பாட்டுக்கு கையில் இருக்கிறது பீரோல இருக்கிறதெல்லாம் எடுத்துக் கொடுத்துட்ட அண்ணன் கேட்டா என்ன பண்ணுவ என்று கேட்டான்
அதற்கு அவள் உன் அண்ணா அவ்ளோ வொர்த் எல்லாம் இல்ல என் கையெல்லாம் பார்த்து பேச மாட்டாரு நீ தைரியமா இருக்கலாம் அப்புறம் பீரோல என்ன இருக்குனு இதுவரைக்கும் அவர் ஆராய்ச்சி எல்லாம் பண்ணினது இல்ல
அப்படியே ஏதாவது கேட்டாலும் நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன் அந்த சமயத்தில் நீ உள்ள பூந்து குட்டையை குழப்பாமல் இருந்தாலே போதும் என்று கூறி விட்டு கீழே இறங்கிச் சென்றாள்.
செல்லும் அவள் முதுகையே பார்த்து சத்தமாக ஏய் என்ன பிரண்டு ன்னு சொல்லிட்ட இனி நான் உன்னோட ஃப்ரண்ட் நீயும் அதே மாதிரி எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்கணும், எப்படி எனக்கு ஒரு பிரச்சனை வந்ததும் உன் கிட்ட சொல்லி ஹெல்ப் வாங்கினேனோ அதே மாதிரி உனக்கு எப்போ எந்த பிரச்சனை வந்தாலும் உடனே உனக்கு முதல்ல என் ஞாபகம் தான் வரனும் எதுவா இருந்தாலும் இனிமேல் என்கிட்ட மறைக்கக்கூடாது மீனா டீலா என்று கத்தினான்
அவளோ நடந்துகொண்ட படியே கையை மேலே தூக்கி அசைத்து விட்டு கீழே இறங்கிச் சென்றாள்
அவள் சென்றதும் கையில் இருந்த நகைகளை கண்களில் நீர் பெருக்குடன் பார்த்துக் கொண்டிருந்தான்
இந்த மூன்று வருடத்தில் எவ்வளவு டார்ச்சர் செய்து இருப்பேன் எத்தனை முறை மரியாதை இல்லாமல் நடத்தி இருப்பேன் ஆனால் இவளோ துடைத்துப் போட்டு விட்டு தனக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்ததும் யோசிக்காமல் அவளின் நகைகளைக் கொடுத்துவிட்டு செல்கிறாள்
அதுவும் என்னை தோழியாக ஏற்றுக்கொள் என்றபடி மனதில் நினைத்து சிரித்தவன்
நீ உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட் மீனா என் அண்ணா ரொம்ப கொடுத்து வச்சவன் கவலையே படாத இனிமே இந்த வீட்டில உனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் உன் வாழ்க்கை ஃபுல்லா அவன் உனக்கு துணை வருவான் இப்போ வாங்கினதுக்கு வட்டியும் முதலுமா கண்டிப்பா உனக்கு கைமாறு செய்வேன்…
நீ செய்தது உனக்கு வேணும்னா சாதாரண உதவியா தெரியலாம் ஆனால் இதுல என் வாழ்க்கை மட்டுமில்ல என் நண்பனோட வாழ்க்கையும் சேர்ந்து இருக்கு நீ ரெண்டு பேர் லைஃப் பை சேவ் பண்ணி கொடுத்து இருக்க என்ன பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் கடவுள் நீதான் அந்த கடவுள் தேவதை ரூபத்தில் என் வீட்டிலேயே இருந்தும் கூட இவ்வளவு நாள் பூஜிக்க மறந்துட்டேன் இனிமே அந்த தேவதையை எப்படி எல்லாம் பார்த்துக்கணுமோ அப்படியெல்லாம் நான் பார்க்கிறேன்
என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டவன் பல நாள் கழித்து அன்றிரவு நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் காலை எழுந்ததுமே விஜயின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து விட்டு அவளுக்கு போன் செய்து சொன்னான்.
பிரச்சினை எல்லாமே முடிஞ்சுது கையில கொஞ்சம் பணம் மிச்சம் இருக்கு எப்படி உனக்கு தர்றது என்று கேட்டான்
அதற்கு அவளோ நீ ஆசைப்பட்ட ஷேர் மார்க்கெட்டிங்லேயே அதை இன்வெஸ் பண்ணு லாபம் வந்தாலும் சரி நஷ்டம் வந்தாலும் சரி பார்த்துக்கலாம் தைரியமா செய் என்று அவனை ஊக்கப்படுத்தினாள்
நன்றி கூறி போனை வைத்தவன்
அதன்பிறகு ஒவ்வொரு நாளும் மீனாவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய ஆரம்பித்தான் அவளை தன்னுடைய உயிர் தோழியாக நினைக்கத் தொடங்கி இருந்தான்.
தாயிடம் தோழர்களிடம் பகிர முடியாத விஷயங்களை கூட சாயங்கால நேரத்தில் அவளிடம் பகிரத் தொடங்கினான்
இப்பொழுது அவனுடைய செட்டில் பாதிக்குமேல் காலி செய்துவிட்டான் மிக முக்கியமான பொருட்கள் எல்லாவற்றையும் பழையபடி மீனாவின் படுக்கை அறையிலேயே கொண்டு வந்து வைத்து விட்டான்.
இரவு தூங்கும் போது மட்டுமே மாடிக்குச் செல்வது மத்தபடி எல்லா நேரத்திலும் கீழேதான் இருப்பது.
காலையில் நேரமாக எழுந்து அவனுடைய உடற்பயிற்சிகளை முடித்த பின் நேராக சமையல் கட்டிற்கு அவளுக்கு உதவ வந்துவிடுவான் காய் வெட்டி தருவது பாத்திரம் செய்து கொடுப்பது என சிறு சிறு வேலைகளை செய்வான்.
இப்பொழுது ராஜாத்தியால் மீனாவை ஒரு வார்த்தை கூட சொல்ல முடிவது இல்லை ஏனென்றால் அவளுடைய வேலைகளில் அவள் சரியாக இருக்கிறாள்
காலை எழுந்ததும் வேலைக்கு சென்று விட்டு மாலை வருவதாக கட்டும் வீட்டை சுத்தம் செய்வதாகட்டும் சமையல் வேலை ஆகட்டும் இப்படி பல வேலைகளையும் அவள் சரியாக செய்வதால் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை
அது மட்டுமன்றி இப்பொழுது மூன்று ஆண்களுமே அவளுக்காக தினமும் உதவி செய்கிறார்கள் ராஜாத்தி தான் இப்பொழுது வேலை இல்லாமல் அமர்ந்திருக்கிறார்
இந்த சமயத்தில் அவளை ஏதாவது ஒன்று சொன்னால் கண்டிப்பாக எல்லோருமே அவளிடம் சண்டைக்கு வந்து விடுவார்கள் அதனால் எதார்த்தத்தை புரிந்து கொண்டு ராசாத்தியும் பழையபடி மீனாவின் மேல் அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டார்
அவருக்கு இப்பொழுது ஓரே ஒரு மனக்குறை மீனாவிற்கு குழந்தை இல்லையே என அதனால் இப்பொழுது கடின சொற்களெல்லாம் பயன்படுத்தாமல் செல்வாவிடம் தனிமையில் பேசுகிறார்
ஏதாவது மருத்துவமனை சென்று பாருங்கள் அப்படி இல்லை என்றால் ஏதாவது கோவிலுக்கு வேண்டுதல் வைக்கலாம் என்று…
இந்த சமயத்தில் மீனாவின் தங்கையின் திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது அப்பொழுதுதான் செல்வா மீனாவின் நகைகளை ஆராய்கிறான் அவளிடம் சில நகைகள் இருப்பது தெரியும் இப்பொழுது கொஞ்சம் குறைவது போல் தெரிய என்ன என்று விசாரிக்கிறான் அப்பொழுது அவள் உண்மை எதையும் மறைக்காமல் அவனிடம் கூற முதல் முறையாக தனது தம்பியை நினைத்து கவலை கொள்கிறான்.
அதுமட்டுமின்றி மீனாவின் மேல் மிகப் பெரிய மரியாதையும் வருகிறது உடனடியாகவே அவள் கைகளைப் பிடித்தபடி கேட்கிறான் மீனா எனக்கு உடனே உன்ன மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொடுக்கறியா என்று
இதற்காக வார்த்தைக்காக தானே மூன்று ஆண்டுகளுக்கு மேல் மீனா காத்துக் கொண்டிருக்கிறாள் வேண்டாம் என்றா கூறுவாள் திடீரென உணர்ச்சிவசப்பட்டவள் சுற்றும் முற்றும் யார் இருக்கிறார்கள் என எதுவும் ஆராயாமல் அவனை கழுத்தோடு சேர்த்து அணைக்கிறாள்
இருவருக்குமே மிகவும் உணர்ச்சிபூர்வமான நிமிடமாக இருவருமே எதிர்கொள்கின்றனர் அதன்பிறகும் அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது
குழந்தைக்காக அவர்கள் ஒரு மாதம் வரை காத்திருக்க மீனா இடத்தில் இருந்து எந்த ஒரு பாசிட்டிவான பதிலும் வராததால் சற்று சோர்ந்து விட்டான்
உடனே ஒரு பெண் மருத்துவரை சென்று பார்க்கலாம் என்று அவன் கூற மீனா தான் அவனை சமாதானம் செய்தாள்
மூணு வருஷமா நாம குழந்தை வேணாம்னு தள்ளிப்போட்டு இருக்கோம் அப்படி இருக்கும்போது திடீர்னு எப்படிங்க இன்னும் ரெண்டு மாசம் பார்ப்போம்ங்க
அதுக்கப்புறமா ஹாஸ்பிடல் போலாமே என நான் பத்திரிகைகள் எல்லாம் படிச்சிருக்கேன் அந்த மாதிரி ஹாஸ்பிடல் எல்லாம் போனா நிறைய செலவாகும்னு வேற சொல்றாங்க எதுக்கும் ஒரு ரெண்டு மாசம் வெயிட் பண்ணலாம் எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஏதாவது நல்லது நடக்கும்னு தோணுது என்று நம்பிக்கை கொடுத்தாள்.
இந்த சமயத்திலேயே விஜயின் கடைசி வருட படிப்பு முடித்து நல்ல இடத்தில் ஒரு வேலையும் கிடைத்தது.
இப்பொழுது விஜய்யோ மீனா விடமும் செல்வாவிடம் உறுதியாக கூறுகிறான்
மீனா இனிமே வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அதற்கு மீனா தான் மறுக்கிறாள்
அவளுக்கு இனி வீட்டில் எப்படி வெட்டியாக இருப்பது என்று யோசிக்கிறாள் வேலைக்கு சென்று பழகிவிட்டதால் இனி வீட்டிலேயே இருக்க போர் அடிக்கும் என்று அவளும் யோசிக்கிறாள்
ஒரு குழந்தை தன் வயிற்றில் உருவாகும் வரை வேலைக்கு செல்கிறேன் அங்கு எனக்கு கடினமான வேலைகள் எல்லாம் இல்லை வீட்டில் சும்மா இருப்பதற்கு அருகிலிருக்கும் ஆபீஸில் சென்று அமர்ந்து விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் கேட்க எல்லோருமே ஒரு மனதாக சம்மதிக்கின்றனர்
இப்பொழுதெல்லாம் செல்வா அவளை காலையில் செல்லவில்லை என்றால் விஜய் தான் அழைத்து செல்கிறான்..
மாலையில் பலநாட்கள் செல்வாற்கு பதிலாக விஜய்தான் மீனாவை அழைத்து வருவது அவர்கள் இருவரின் நட்பையும் ராஜாத்தி மட்டுமல்ல செல்வாவும் மிக நன்றாகவே புரிந்து கொண்டான்
விஜயிடம் ஏதாவது சொல்வது என்றால் கூட அதை மீனாவிடம் சொல்லும் அளவிற்கு அவர்களின் நட்பு அந்த வீட்டில்
அழகாக இருந்தது.
ஒரு நாள் மாலை வேளையில் மீனாவை அழைத்துக் கொண்டு விஜய் வேகமாக வர ஒரு ஸ்பீடு பிரேக்கரில் வண்டி ஏறி இறங்கியது உடனே மீனாவும் பேலன்ஸ்க்காக விஜயின் தோளை இறுக்கிப் பிடித்தவள்
வண்டியை கொஞ்சம் மெதுவா ஓட்டு
இந்த மாதிரி நேரத்துல வண்டியிலேயே போக கூடாதுன்னு சொல்லுவாங்க நான் உன் பின்னாடி இவ்ளோ வேகமா வந்துட்டு இருக்கேன் மெதுவா போ….என்றவளை யோசனையுடன் பார்த்தவன்
இந்த மாதிரி நேரத்திலனா என்ன மீனிங் என்று கேட்டான்
அடி வயிற்றை தடவிக்கொண்டே அவள் வெட்கப்பட திரும்பி உட்கார்ந்தவன் ஹேய் நிஜமாவா சொல்ற நான் சித்தப்பாவா ஆகப்போறேனா என்று சந்தோஷத்தில் கண்கலங்கியபடி கேட்டான்
அதற்கு அவள் இல்லை என்று தலை அசைத்தாள் அதுக்காக ஸ்டெப்ஸ் எடுத்திருக்கோம் எப்போ வேணாலும் வரலாம்என்று கூறினாள்.
எப்போ வேணும்னாலும் வரலாம்னா ஆனா அப்போ இவ்ளோ நாளு வேணாம்னு….?
சாரி பர்சனல்ல தலையிடறேன்னு நினைச்சுக்காத என்று தயங்கி தயங்கி விஜய் கேட்க
கண் கலங்கியபடி மீனா ஆமாம் என்று தலை அசைத்தாள்.
எதுக்கு ...என்று கேட்டான்.
அவளிடம் பதிலில்லை
எனக்காகவா என்று மீண்டும் கேட்டான் ….
ஆமாம் …..என்பது போல் தலையசைத்தாள்.
சத்தியமா எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு
மீனா...என்ற விஜய் அதிர்ச்சியில் அவளை பார்த்து கேட்டான்.
நீ படிச்சு முடிச்சு வேலைக்கு போனதுக்கு அப்புறம்தான் எங்களுக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளனும்னு நானும் உன் அண்ணாவும் கல்யாணம் ஆன முதல் நாளே சேர்த்து எடுத்த முடிவு என்றாள்.
விஜய்க்கு மீனாவின் பதிலைக் கேட்டு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஒரு பக்கம் இவ்வளவு நாள் மீனா எல்லாரிடமும் பழிச்சொல் வாங்கியது தன்னால் தானா என்ற குற்றவுணர்ச்சியில் கண்கள் கலங்க
மற்றொரு பக்கம் தனக்காக தான் தனது அண்ணனும்,அண்ணியும் இத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்டு இது நாள் வரை அவர்களுக்காக ஒரு வாரிசை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரியவும் சந்தோஷத்திலும் கண்கள் கலங்கியது….
எதுவுமே பேசாமல் அவளை வண்டியில் உட்கார வைத்தவன் மெதுவாக வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்
இப்பொழுது இது பற்றி அவன் அண்ணனிடம் சென்று கேட்கவும் முடியாது ஏனென்றால் இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் அந்தரங்கம் அதை மீனா எதார்த்தமாக விஜயிடம் உளறி விட்டாள்
அதை அப்படியே எடுத்துச் சென்று அவனால் அண்ணனிடம் கேட்க முடியாது ஆனால் இவர்கள் இருவருக்கும் தனிமையை ஏற்படுத்தி கொடுக்க தான் ஏதாவது பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இப்பொழுது மீனாவிடம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையே நேராக சென்று கேட்க முடியாது அதனால் ஒரு பத்து நாட்கள் வரை பொறுமை காத்தான்
அதன்பிறகு அதே போல் ஒரு நாளில் அவளை வேலையிலிருந்து திருப்பி அழைத்து வரும் பொழுது மிக சாதாரணமாக கேட்டான்
ஏனென்றால் அவனுக்கு தனது அண்ணனிடமும் தாயிடமும் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதோ,இல்லை கேட்பதோ கொஞ்சம் கூச்சமாக இருக்கும் ஆனால் மீனாவிடம் அப்படி கிடையாது
மீனா அவனின் சிறந்த தோழியாக இருக்கிறாள் எதுவாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே நேரடியாக பதில் கூறுபவள்
அதனால் அந்த தைரியத்தில் அவளிடம் ஏதாவது குட் நீயூஸ் உண்டா என்று கேட்டான்.
அதற்கு அவள் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல விஜய் என்று சோகமாக கூற
எதுவுமே பேசவில்லை,
அடுத்த ஐந்தாவது நாள் ஊட்டியில் தனியாக ஒரு ரிசார்ட் வாடகைக்கு எடுத்தவன் அவர்கள் இருவரையும் ஹனிமூனுக்காக அனுப்பி வைத்தான்.
செல்வா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை கண்டிப்பாக நீங்கள் இருவரும் சென்றுதான் ஆகவேண்டும் என்று அனுப்பி வைத்தான் திரும்பி வரும் பொழுது எங்கள் எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தியுடன் மட்டும் தான் வர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து அனுப்பி வைத்தான்.
அவர்கள் ஹனிமூனுக்கு சென்ற பிறகு விஜய்யிடம் வந்து ராஜாத்தி சண்டையிட்டார்.
சின்ன பையன் மாதிரி நடந்துக்கோ எதுக்கு இப்படி அதிகப்பிரசங்கித்தனம் வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க
அவங்க ரெண்டு பேரையும் எதுக்காக இப்போ இவ்ளோ செலவு பண்ணி அனுப்பி வச்ச…. என்று கேட்ட தாயிடம்
எல்லாமே உங்களுக்கு பயந்துதான் அம்மா நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது எனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு ஆச்சு புரிஞ்சுதா
சின்ன பையன் சின்ன பையன்னு சொல்லி இன்னும் எத்தனை நாள் என்னை பொறுப்பு இல்லாதவனா வெச்சிருக்க போறீங்க சொல்லுங்க
உங்க சின்ன பையன் படிக்கணும் உங்க சின்ன பையன் லைஃப்ல செட்டில் ஆகணும் உங்க சின்ன பையன் லைஃப்ல வெல் செட்டில் ஆகனும்
ஆனா உங்க பெரிய பையன்..? உங்க பெரிய பையனோட வாழ்க்கை என்னவாகனும் சொல்லுங்க அம்மா அவன் காலத்துக்கும் இப்படியே நமக்காக உழைத்து கொட்டி கொட்டி அவனோட இளமையும் வாழ்க்கையும்
முடியனுமா ?
அவனுக்குன்னு தனி வாழ்க்கை
அவங்களுக்குனு ஒரு வாரிசூ வேணாமா?
உங்களுக்கு தெரியுமா அம்மா நமக்காக தான் இத்தனை நாளும் அவங்களுக்காக ஒரு வாரிசு வர்றதை கூட தள்ளிவச்சிருக்காங்க
அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனதுமே சேர்ந்து முடிவெடுத்திருக்காங்க எதுக்காக எல்லாமே நமக்காக….நம்ம குடும்பத்துக்காக….எனக்காக என்று மண்டியிட்டு அழுதான்.
பிறகு தாயைப் பார்த்து
எத்தனை நாள் அண்ணியை குழந்தை இல்லைன்னு கஷ்டபடுத்திருப்பீங்க
என் காதுபடவே அவங்களை எத்தனையோ நாள் ஜாடை பேசிருக்கீங்க
அவதான் மலடுனா அவ வச்ச செடியும் மலடா போச்சு மரம் மலடா போச்சுன்னு ஜாடையா அண்ணியை எத்தனை தடவை மலடுனு சொல்லி இருக்கீங்க
ஒரு தடவையாவது உங்க முன்னாடி வாய் திறந்து உண்மையை சொல்லி இருப்பாங்களா நான் மலடு இல்லை இந்த குடும்பத்துக்காகவும் உங்க சின்ன பிள்ளைக்காகவும் தான் நான் இந்த பேச்சை உங்க கிட்ட வாங்கிகிட்டு இருக்கேன்னு….
அப்படி அவங்க சொல்லி இருந்தா எங்கம்மா உங்க முஞ்சை கொண்டுபோய் வெச்சு இருப்பீங்க சொல்லுங்க
இவ்வளவு நாளா அவங்க பட்ட கஷ்டம் போதும் ம்மா இப்போ தான் எனக்கு நல்ல சம்பளம் வருதே கொஞ்சநாள் அவங்களுக்கான வாழ்க்கையை அவங்க வாழ்ந்துட்டு வரட்டுமே
அதுக்கப்புறம் எப்படியும் இங்கு வந்து ரெண்டு பேரும் வேலைக்குப் போக தான் போறாங்க
நீங்க எப்பவும் போல அண்ணிய கரிச்சி கொட்ட தான் போறீங்க அவங்களும் பொறுமையா எல்லாத்தையும் வாங்கிகிட்டு நம்ம குடும்பத்துக்காக வேலை செஞ்சுகிட்டு இருக்க தான் போறாங்க ப்ளீஸ்மா
அவங்க வந்ததுக்கப்புறம் தயவுசெஞ்சு செலவு ஆயிடுச்சு இந்த மாச சம்பளம் இல்லைனு எதுவும் சொல்லி அவங்கள காயப்படுத்தாதீங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்
விஜய் சென்ற பிறகு ராஜாத்தி நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் என்ன மாதிரியான பெண் இவள் இப்படியும் கூட இந்த காலத்தில் பெண்கள் இருக்கிறார்களா தனது கொழுந்தனுக்காக, புகுந்த வீட்டின் கஷ்டத்திற்காக தன்னைத்தானே உருக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா?
இவ்வளவு நல்ல பெண்ணையா இவ்வளவு நாளும் தான் கரித்துக் கொட்டினோம் என்று நினைத்தவருக்கு அவரை நினைத்து அவரின் மேலேயே கோபம் வந்தது
அதன் பிறகு அன்று முதல் வீட்டு வேலைகளிலும் மற்ற வேலைகள் எதிலும் கவனம் செலுத்த தொடங்கினார்
மீனா இங்கு வந்த பிறகு அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்
அவரின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்க்காக ஹனிமூன் முடித்துவிட்டு மிக விரைவிலேயே வந்தார்கள்..
இப்பொழுது மீனா செல்வா தம்பதிகள் மட்டுமல்ல குடும்பத்தில் இருந்த அனைவருமே அவர்களின் வீட்டு புது வரவிற்காக காத்திருந்தார்கள்
ஆனால் அந்த மாதமும் மீனாவிற்கு குழந்தை வரம் ஏமாற்றத்தை கொடுக்க கவலையுடன் பேசாமல் வேலைக்கு சென்று விட்டாள்.
இங்கு செல்வா விற்கும் ஏமாற்றம் தான் இந்த முறை கண்டிப்பாக மனைவி நல்ல செய்தியை சொல்வான் என்று எதிர் பார்த்தவனுக்கு மீனா சற்று ஏமாற்றத்தை கொடுக்க
சரி இனி அவளாக நல்ல செய்தி சொல்லும் வரை நாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்.
ராஜாத்தியோ இப்பொழுது மருமகளை அதிகமாக வேலை செய்ய விடுவதே கிடையாது நீ நல்லா ரெஸ்ட் எடு நல்லா சாப்பிடு என்று அவளுக்கு பிடித்தவை எல்லாம் செய்து போட தொடங்கினாள்
இப்பொழுது விஜயின் வருமானமும் வீட்டில் சேர்ந்து இருக்க வீட்டில் செழிப்பாக சத்தான ஆகாரங்கள் அனைவருக்கும் கிடைக்க தொடங்கியது.
இங்கு விஜய்க்கு வேலையில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் வரத் தொடங்கியது
இப்படியான ஒரு நாளில் செல்வா விஜய்க்கு ஃகால் செய்து தான் இரவு வர லேட்டாகும் மீனாவை ஆட்டோவில் எல்லாம் வர விட வேண்டாம் நீ சென்று கொஞ்சம் அழைத்துக் கொள் என்று கூற சரி என்று மணி ஆறு மணிகாக அவன் காத்திருக்கும் பொழுது மீனாவோ ஒரு ஐந்தரை மணிவாக்கில் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
ராஜாத்தியிடமும் விஜய்யிடமும் எதுவுமே கூறாமல் நேராக படுக்கை அறையில் புகுந்து கொண்டாள்
ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த விஜயோ அவள் எதையோ மறைப்பதாக தோன்றியது... அவளிடம் புதியதாக ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவன் படுக்கையறையை பார்த்துக்கொண்டு இருந்தான்
அவள் எப்போழுது வெளியே வருவாள் என காத்திருக்க ஆரம்பித்தான்
ஆனால் அன்றைய நாள் முழுவதுமே அவள் வெளியே வரவில்லை செல்வா வேலை முடித்து வந்ததும் கூட அவள் வெளியே வந்து எட்டிப் பார்க்கவில்லை விஜய்யோ பூட்டிய அறை வாசலின் கதவையே பார்த்தபடி யோசனையுடன் ஹாலிலேயே தாய், தந்தையுடன் படுத்து உறங்கி விட்டான்.
தொடரும்...