Kanchana G. Kannan
New member
வசந்தா காலையிலேயே பரபரப்போடு இருந்தாள். பிறந்த வீட்டிற்க்கு சாதாரணமாகவே போகும்போதே சுகுமாரனை ஒரு வழி ஆக்கி விடுவாள்.
"என்னங்க எழுந்திரிங்க. இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போறோம்ல." என்று அதிகாலையிலே எழுப்பிவிடுவாள்.
“என்னம்மா லஞ்ச்க்கு தானே போறோம். ஏன் இப்போவே கெளம்பனும் “ என்றால் விடமாட்டாள்.
“என்னங்க பேசுறீங்க. நான் போய் எவ்ளோ நாளாச்சி. கரெக்டா சாப்பிடுற டைம்க்கு தான் போகணுமா. எவ்ளோ பேச வேண்டியிருக்கு” என்று ஆரம்பித்து விடுவாள்.
இன்று கேட்கவே வேண்டாம். தனது மகன் வந்ததிலிருந்து அம்மா வீட்டிலிருந்து ஏற்கனவே பத்து முறை போன் வந்து விட்டது. அதுவும் இன்று மொத்த குடும்பமும் சேர்ந்து கோவிலுக்கு போவது என முடிவானவுடன் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி.
மகனுடன் கலந்து பேசிவிட்டு, அப்பா அம்மாவுடனும் அண்ணன்களுடனும் இன்று கல்யாணப்பேச்சை எடுத்து விடவேண்டும் என்று தீர்மானமாக இருந்தாள். அரண்மனை மாதிரி இருக்கும் இந்த வீட்டையும் ராஜா மாதிரி இருக்கும் தன் மகனையும் அவளது அண்ணன் மகள் காவ்யாவிடம் ஒப்படைத்து விட்டால் நிம்மதி என்று நினைத்திருந்தாள்.
அதுவும் அவன் அமெரிக்காவிலிருந்த இந்த இரண்டு வருடங்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருந்தாள். மகன் எங்கே காதல் அது இதுவென்று யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்று. அந்த கால பட்டதாரிதான் என்றாலும் பழமையில் ஊறியவள். நம் இனம் குடும்பம் பழக்க வழக்கம் என்று எதையும் விட்டு கொடுக்கமாட்டாள்.
கோவில் பூஜைக்கு தேவையானது எல்லாம் எடுத்து கொடுத்து காரில் வைக்குமாறு வேலையாட்களுக்கு உத்தரவிட்டாள் வசந்தா.
அதோடு வீட்டில் அனைவருக்கும் புதிதாய் எடுத்த உடைகளையும் எடுத்து காரில் வைக்க சொன்னாள். அண்ணன்கள் மற்றும் குடும்பங்களுக்கு வாங்குவது என்றால் வசந்தா குஷியாகிவிடுவாள். ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து வாங்குவாள். அதிலும் காவ்யா என்றால் ஒன்றுக்கு இரண்டாய் வாங்குவாள். மித்ரா கூட சொல்வாள்.
"அத்தை நீ ஏன் ஒரு பையனோட நிறுத்திட்ட. இன்னொரு பையன் இருந்தா எனக்கும் ப்ராப்லம் சால்வ் ஆகியிருக்கும்ல" என்பாள்.
காலையிலேயே கிளம்பி தேமேவென்று செய்தித்தாள் படித்து கொண்டிருந்த கணவனை
“ஏங்க இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க. போய் கார்ல எல்லாம் கரெக்ட்டா வைக்கறாங்களான்னு பாருங்க" என்று விட்டு, மகனை எழுப்ப மாடிக்கு அவனது அறைக்கு சென்றாள்.
போனமாதம் தான் அவருக்கு ரீஜினல் மேனேஜர் ஆக பதவி உயர்வு கிடைத்தது. ‘எத்தனை பதவி கிடைத்தாலென்ன? மனைவியிடம் நல்ல கணவன் பதவி எந்த கணவனுக்கும் கிடைக்காது போல’ என்று நினைத்து சுகுமாரன் உள்ளுக்குள் சிரித்துகொண்டார்.
அந்த பெரிய அறையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மரக்கட்டிலில் தலையணையில் முகம் புதைத்து ஜெட்லாக்கில் இன்னும் குழந்தையாய் அசந்து உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் தலையை வாஞ்சையுடன் வருடியபடியே மெதுவாய் எழுப்பினாள்.
"அரவிந்த். எழுந்திரு கண்ணா. நானும் அப்பாவும் ரெடி ஆயிட்டோம். தாத்தா வீட்லயும் எல்லாரும் கெளம்பிட்டாங்களாம் "
அம்மாவின் குரலில் தூக்கம் களைந்தாலும் அவளது ஸ்பரிசத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க நினைத்தவன் “அம்மா, நீ இப்படி என்ன எழுப்பி எவ்ளோ நாளாச்சி." என்றான்.
மகனின் பாசத்தில் நெகிழ்ந்த வசந்தா "நீ தான் அம்மா சொல்ல சொல்ல கேட்காம US க்கு போன." செல்லமாய் கோவித்துக்கொண்டாள்.
"என்னம்மா பண்றது. என்னோட டீம்ல அப்போ என்னதான் செலக்ட் பண்ணாங்க. என் டீம் ரெப்புட்டேஷன் மெயின்டைன் பண்ணனும்னா நான் போயே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் ரெண்டே வருஷம் தான். அப்பறம் சென்னை ஆபீஸ் தான். அப்பாவும் ரிடையர் ஆகிடுவாரு. நாம சென்னைல செட்டில் ஆகிடலாம்"
மகன் எதிர்காலம் பற்றிய திட்டதோடு பேச, வசந்தா மெதுவாய் ஆரம்பித்தாள்.
" அதெல்லாம் சரிதான் தம்பி. ஆனா அம்மா சொன்ன உன் கல்யாணம் விஷயம் பத்தி யோசிச்சியா? போன்ல கேட்டப்போல்லாம் சரியாய் பிடி குடுத்து பேச மாட்டேன்னுட்டே. உனக்கு வயசு 28 ஆகுது. 30க்குள்ள பண்ணனும்ன்னு நம்ம ஜோசியர் சொல்லி இருக்காரு. காவ்யாக்கும் இந்த வருஷத்தோட படிப்பு முடியுது.இன்னைக்கு மாமாட்ட கல்யாணம் பத்தி பேசலாம்னு இருக்கோம். உனக்கு ஓகே தானே? " கண்களில் சந்தோசம் மின்ன கேட்கும் அம்மாவின் பார்வையை நேருக்குநேர் சந்திக்க முடியாமல்
"கமான் அம்மா. 2 வருஷம் கழிச்சி இப்போதான் எல்லாரையும் பார்க்கபோறேன். இன்னைக்கே பேசணுமா. 15 டேஸ் இங்கேதானே இருக்கபோறேன். மெதுவா பேசலாம். நான் போய் மொதல்ல ரெடி ஆகுறேன்" என்றபடியே அம்மாவிடமிருந்து தப்பித்து ஓடினான்.
"எல்லாம் ரெடிமா. அரவிந்த் வந்துட்டா ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்" என்றார் சுகுமாரன் மாடிப்படிகளில் இறங்கிவந்து கொண்டிருந்த மனைவியிடம்.
அதை காதிலே வாங்காமல் மனம் சற்றே சஞ்சலப்பட கணவனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
" ஏங்க கல்யாணப்பேச்சை எடுத்தாலே நழுவிடுறான்."
"அவன் புத்திசாலி. என்ன மாதிரியா ? " என்றார் கிண்டலாக.
எப்போதும் இதுபோல் அவர் பேசினால் முறைக்கும் வசந்தா இன்று நிஜமாகவே கவலையாக இருப்பதைக்கண்டு அவளை தேற்றும் விதமாக
"வசு. விடுமா ரொம்ப யோசிக்காத. எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்றார்.
மனதில் சிறு சஞ்சலத்துடன் பூஜை அறையில் விளக்கேற்றி 'கடவுளே நான் நினைத்தபடி எல்லாம் நடக்கணும்' என்று வேண்டிக்கொண்டு மகனுக்கு காத்திருந்தாள்.
" அம்மா நான் ரெடி!! குட்மார்னிங் பா !” என்றபடியே மாடிப்படிகளில் துள்ளலாக இறங்கி வந்த மகனை பெருமையுடன் பார்த்தார் சுகுமாரன்.
அரவிந்த் ஆறடிக்கும் மேல் உயரம். சற்றே மாநிரத்தில் உயரதிக்கேற்ற உடல்கட்டுடன் அழகிய தமிழ் மகன் அவன். அத்தோடு அந்த குறும்பு பேச்சும் சிரிக்கும் கண்களும் தான் காவ்யாவை அவன் மீது அளவிலா காதலோடு கட்டி போட்டது.
ஒருவழியாக மூவரும் காரில் ஏற சுகுமாரன் தான் காரை ஓட்டினார். ஒருமணி நேர பயணம். தம்பதியினர் இருவரும் சிறிது நேரம் மகனின் அமெரிக்கா வாழ்க்கை, அவனது நண்பர்கள், ஆபீஸ் என பேசிக்கொண்டிருந்தனர்.
கார் ஸ்பீக்கரில் இளையராஜாவின் இன்னிசையில் SPB அழகாய் உருகிக்கொண்டிருந்தார்.
"காதலின் தீபமொன்று . ஏற்றினாளே என் நெஞ்சில்."
காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த அரவிந்த் வசதியாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கண்களை சற்றே மூடினான். அவனது நினைவுகள் பலவருடங்கள் பின்நோக்கி சென்றன.
ஆம். அவன் நெஞ்சிலும் ஒருத்தி காதலின் தீபத்தை ஏற்றினாள். அது நேற்று இன்று இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே. காவ்யா. அவளை நினைத்தாலே சில்லென்று மழைச்சாரல் பட்டது போல எப்பவும் உணர்வான். இப்போதும் உணர்ந்தான்.
காவ்யா ஒரு தேவதை. அழகிய தேவதை. அமைதியே உருவான அதிர்ந்து பேசாத அன்பால் அனைவரையும் வசப்படுத்தும் அதிசய தேவதை. மாமன் மகளாய் விளையாட்டு தோழியாய் இருந்த போதே அவளுக்கு அரவிந்த் மேல் அவ்வளவு பாசம்.
சிறு வயதில் விடுமுறை நாட்களில் இருவரும் ஒருவரையொருவர் விட்டு பிரியவே மாட்டார்கள். ஐந்து வயது சிறியவள் என்றாலும் அவனிடம் ஒரு தாயாய் அன்பு காட்டுவாள். ஆனால் அவர்கள் வளர வளர படிப்பு மற்ற சனி ஞாயிறு வகுப்புகள் என்று வசந்தா குடும்பம் தாய் வீட்டிக்கு வருவது குறைந்தது. அதுவும் அவன் பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய வருடம் வசந்தாவும் அவனும் வீட்டை விட்டு நகரவே இல்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு வந்தபோதுதான் எதோ வித்தியாசமாய் உணர்ந்தான். காவ்யா தன்னுடன் அதிகம் பேசுவதில்லை. எப்போவாவது கண்ணில் பட்டாலும் நிமிர்ந்து பார்த்து பேசுவதில்லை. கண்களில் ஒருவித வெட்கமும் உதட்டோரத்தில் ஒரு மெல்லிய புன்னகையுமாய் ஓடிவிடுவாள்.
அதன்பிறகு அவனுக்கு டெல்லியில் ஒரு பெரிய பொறியியல் கல்லாரியில் இடம் கிடைக்க படிப்பு இன்டெர்ன்ஷிப் என்று அவன் தஞ்சாவூர் வருவதே கணிசமாய் குறைந்தது. கோடைவிடுமுறையில் மட்டும் வருவான். அவன் வந்ததுமே வசந்தா தாய் வீட்டிற்கு திட்டமிட்டு விடுவாள். அரவிந்தும் தாத்தா வீட்டுக்கு போனதுமே காவ்யாவைதான் தேடுவான்.
அந்த நாள் அரவிந்துக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது. அவன் பி.இ. முடித்துவிட்டு எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா பலக்லைக்கழகங்களில் விண்ணப்பித்து இருந்தான். அதுவும் அவனுக்கு மிகவும் விருப்பமான ஸ்டாண்போர்ட் யூனிவர்சிட்டியில்.
வசந்தாவிற்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. சுகுமாரன் மகன் பக்கம்தான். "வசு, நீ அவனை பிரிஞ்சி இருக்கறது கஷ்டம்ங்கறதால அவன் கனவை கெடுக்காதமா. புரிஞ்சிக்கோ. ரெண்டே வருஷம் தானே. ஓடிப்போய்டும். " என்று அவளை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அந்த பஞ்சாயத்தை அம்மா வீட்டிலும் வைத்தாள்.
அவன் தாத்தா வீட்டிலும் அனைவரும் வசந்தா சொன்னதையே தான் சொன்னார்கள். அதிலும் மணிமாறன் “எதுக்குப்பா. அவ்வளவு தூரம் போய்கிட்டு. நம்ம நாட்டுலயே பெரிய பெரிய யூனிவெர்சிட்டியெல்லாம் இருக்குல்லப்பா. அம்மாவும் உன்ன பிரிஞ்சி ரொம்ப கஷ்டப்படுவா. உனக்கும் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டம் தானே” என்றார். அவர் காவ்யாவை கூட படிப்பதற்காக தஞ்சாவூர் தாண்டி எங்கும் அனுப்பவில்லை. அவள் அப்போது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள்.
அந்த பெரிய ஹாலில் அவன் நடுவில் அமர்ந்திருக்க சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டு ஆளாளுக்கு அவனை வறுத்து எடுத்தனர். “தாத்தா.. அது வந்து” என்று சட்டென்று நிமிர்ந்து பார்த்த அரவிந்த், ஹாலை ஒட்டி இருந்த அறையின் வாசலில் கதவோரம் நின்று கொண்டு காவ்யா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்ததை கண்டான். அந்த அழகிய கண்கள் முழுதும் தவிப்பு அப்பியிருந்தது.
ஏன் இப்படி என்னவனை போட்டு பாடாய் படுத்தி எடுக்கிறீர்கள் என்று கேட்கும்படி இருந்தது. அது ஒருவித புதுவிதமான மகிழ்ச்சியை தர, மெலிதாய் புன்னகைத்து விட்டு அருகில் அமர்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் செல்லமாய் முத்தமிட்டு
"அந்த யூனிவர்சிட்டில படிக்கணும்ன்றது என்னோட பலநாள் கனவு. படிச்சி முடிச்சதும் கண்டிப்பா திரும்பி வந்துடுவேன். வேற நாட்டுல செட்டில் ஆகமாட்டேன். உங்கள எல்லாம் விட்டுட்டுட்டு என்னால மட்டும் எப்படி இருக்க முடியும்? “ என்று ஓரக்கண்ணால் காவ்யாவை பார்த்தான். அவன் கடைசியாய் சொன்னது தனக்குக்குத்தான் என்று உணர்ந்து, வெட்கம் பிடுங்கி தின்ன தன்னை கதவிற்கு பின்னால் முழுவதுமாக மறைத்துக்கொண்டாள். அதை பெரிதாய் ரசித்தவன் அன்று முழுதும் வானத்தில் பறப்பதை போல உணர்ந்தான்.
மகள் குடும்பம் வந்தாலே வீடும் சமையலும் அமர்க்களப்படும். தெருவே மணக்கும் வகையில் விருந்து நடக்கும். அன்றும் அப்படிதான். அனைவரும் ஒரு பிடி பிடிக்க காவ்யா வயிறு சரியில்லை என்று வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டாள். சற்றே கவலையுடன் யாரிடமும் கேட்க முடியாமல் மெதுவாக மித்ராவை கேட்டான்.
“ஏய் மித்ரா. காவ்யாக்கு என்ன ஆச்சு? ஏன் சாப்பிடவேயில்ல ?” என்றான்.
“ஓஹோ.. தலைவி சாப்பிடலன்னு தலைவருக்கு கவலையாஇருக்கோ?” என்று நக்கலடித்தாள்.
“வாலு.. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. '”
“அத்தான். அக்கா யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காளே”
“இப்போ சொல்ல போறியா. இல்ல நீ மேத்ஸ் டெஸ்ட்ல பெயில் ஆனத உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லவா?”
“பாஸ்.. பொறுமை .. பொறுமை.. அக்கா சொல்ல வேணான்னுதான் சொன்னா. ஆனா நான் சொல்லமாட்டேன்னு சொல்லலையே.. அது வந்து.. அவ உங்களுக்குகாக விரதம் இருக்கா” என்றாள்.
“விரதமா? எனக்காகவா? எதுக்கு” மித்ரா சொல்ல சொல்ல அரவிந்த் கண்கள் சற்றே கலங்கின. என் கண்மணியே என்மீது இத்தனை காதலா? என் உயிரே… உன்னை கைப்பிடிக்கும் நாள்தான் என் வாழ்வில் பொன்னாள் என்று மருகினான்.
ஆனால் இன்று…