கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் காக்கும் மூலிகை சமையல் அத்தியாயம் - 01

அன்பு நெஞ்சங்களுக்கு


உணவே மருந்து, மருந்தே உணவு
என்பது இருபதாம் நூற்றாண்டின்
அறிவியல் ஆய்வுகள் நடத்தி
கண்டுபிடித்து இருக்கும் உண்மை.
இந்த உண்மையைப் பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள்
உணர்ந்து அதை நடைமுறை
வாழ்க்கையிலும்
பயன்படுத்தினார்கள்.. அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு
முன்பாகவே எந்த தொழில்நுட்ப
சாதனமும் இல்லாமல் பல
அறிவியல் கண்டுபிடிப்புகளை
கண்டுபிடித்தவன் தமிழன்..
அதனால் தான் தமிழன்
அறிவியல் முன்னோடி
என்று கூட கூறுவார்கள்..


நோயில்லா நெறியை உணர்த்துவது
உணவு நெறியாகும் உணவில்
குற்றமுடைய உணவை விடுத்து
நல்ல உணவை உட்கொண்டால்
உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும்
குற்றம் உண்டாகாது என்பது
சித்தர்களின் வாக்கு...


உணவு உண்ணும் முறை


உணவு உண்ணும் போது
கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு
உண்ண வேண்டும்.. நின்று
கொண்டோ, படுத்துக்கொண்டோ,
கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ,
உணவு உண்ணக்கூடாது..


உணவு உண்ட பின்


உணவு உண்ட பின் ஒவ்வொருவரும்
சிறிது தூரம் நடக்க வேண்டும்..
அவ்வாறு நடப்பது செரிமானத்திற்கு
உதவும் என்று கூறப்படுகின்றது..
நூறு அடி தூரமாவது உலாவ
வேண்டும் என மருத்துவ நூல்
கூறுகிறது..


உணவு உண்பதற்கான
உன் கலங்கள்


உணவு உண்பதற்கான உன்
கலங்கள் உடலுக்கு ஏற்றதாக
இருக்க வேண்டும்.. பொன்,
வெள்ளி, மண்பாண்டம்,
வாழைஇலை, தாமரை இலை
இவற்றை தான் பயன்படுத்த
வேண்டும்..


அறுசுவை

அறுசுவை என்பது இனிப்பு,
துவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு,
கைப்பு, புளிப்பு இவற்றை
சித்தர்கள் முறையே ஆற்றல்,
வீறு, வளம், தெளிவு, மென்மை,
இனிமை, ஆகியவற்றை தரும்
என்று கூறுவர். இதையே
முன்னோர்கள் அறுசுவையாக அமைத்துக்கொண்டனர்...



உணவை காலத்திற்கும்,
இடத்திற்கும், உடலுக்கும்,
வயதிற்கும் ஏற்றவாறு திட, திரவ
உணவு என பிரித்து உண்டனர்..
பருவ காலத்திற்கு ஏற்றவாறு
உணவு வகைகளை உண்பது
உடலை பாதுகாக்கும் வழியாகும்..


மேலும் இதைப் இதைப்போன்ற
அறிய செய்திகளை வாரத்திற்கு
இரண்டு முறை தொகுத்து
வழங்கலாம் என்று இருக்கிறேன்..
உங்களது கருத்துக்களை கூற
வேண்டும் என அன்போடு கேட்டுக்
கொள்கிறேன்...



அந்த காலத்தில் எளிய சமையல்
முறைகளை கையாண்டு எவ்வாறு
நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை
வாழ்ந்தனர் என்பதைப்பற்றியும்,
அவர்கள் என்ன கீரைவகை, செடி,
கொடிகளை பயன்படுத்தினர்
என்றும், அதை எளிய முறையில்
எவ்வாறு நாம் அன்றாட உணவில்
சேர்த்துக் கொள்ளலாம் என்ற
குறிப்புகளும் தான் இதில் இடம்
பெறப்போகிறது..


அந்தக் காலங்களில் வீட்டுக்கு
வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை யாருக்கு எந்த நோய் என்றாலும்
அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள்.


ஆனால், இன்று அநேக வீடுகளில்
தாத்தா பாட்டிகளே இல்லை. பணம்,
வேலை என்று பிள்ளைகள் நகர
வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால்
தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம்
இன்றைய குழந்தைகளுக்கு
தெரியாமல் போய்விட்டது.



இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு
தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல்,
தலைவலி வந்தால் கூட இன்று
உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று
விடுகிறார்கள். ஆனால், அந்தக்
காலத்தில் தலைவலி முதல் பிரசவம்
வரை வீடுகளிலேயே கை
வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர்.
வீட்டில் வளரும் மூலிகைகளைப்
பறித்து உரல் அல்லது அம்மியில்
வைத்து அரைத்து கசாயம் போட்டு
கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை.
கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை
ஓடிப் போய் பிடித்து மடியில் உட்கார
வைக்க தாத்தாக்களும் இல்லை.
ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத
குறையைப் போக்க மூலிகை இருக்கிறது
நம்மிடம்...


இது ஒரு சிறிய முயற்சி தான்..
பயன்படுத்த முடியவில்லை என்றாலும்
கூட நமது பாரம்பரியத்தையாவது
தெரிந்து கொள்ளலாம் தங்கங்களே.....
 

Latha S

Administrator
Staff member
உணவே மருந்தில், மூலிகை உணவைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் வாணி... தெரியாத பல விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொண்டதில் சந்தோஷம்.
 
Top