கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் காக்கும் மூலிகை சமையல், அத்தியாயம் -04

பிரண்டை



இது கிராமத்தில் வேலியில் படரும் ஒரு வகைக் கொடி.. இதில் பல வகை உண்டு..

இந்த பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டால் இரத்த மூலம் , மூல சம்பந்தப்பட்ட வியாதிகள் தீருவதோடு கை, கால் மூட்டு வலியையும் போக்கும்.. மேலும் நன்கு தூண்டும் ஆற்றல் பெற்றது..

இந்த பிரண்டையை புளிக்குழம்பு, சட்னி(துவையல்),மற்றும் பிரண்டை வத்தல் ஆகிய முறையில் சமைத்து உண்ணலாம்.. செரிமான கோளாறு நீங்கி நன்கு பசியை தூண்டும்...

பிரண்டை வத்தல்


பிரண்டையை மோரில் போட்டு பெருங்காயத்தை, மஞ்சள் தூள், மிளகு,சீரகம் சேர்த்து மோரில் ஒரு நாள் இரவு பகல் ஊறவைக்கவும்.. பிறகு எடுத்து நன்கு காயவைக்கவும். காயவைத்த பிரண்டை வத்தலை வாணலியில் நெய்விட்டு வறுத்து பொடி செய்து சுடு சாதத்தில் சாப்பிட உடல் சூடு தனியும். நன்கு பசி எடுக்கும். மூலச்சூடு, மூலம் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் இது சிறந்த தீர்வாகும்...

இப்போது மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கிறது சகோக்களே .. வாரம் இருமுறை சாப்பிடலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்..

தொடரும்..
 
Top