வினாடிக்கு வினாடி விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தின் கடைக்கோடி மூலையில், வினோத வாட்ச்சுடன் தன் இன்னுயிர் நண்பன் டாமியின் உயிரைக் காப்பாற்றப் போராட்ட களத்தில் இறங்கினான் அச்சிறுவன்.
ஆறடிக்கு வளர்ந்திருக்கும் அதியனே, 'அது எப்போது, என்ன செய்யும்?!' என்று விடை தெரியாத பலவிதக் கேள்விகளைச் சுமந்தபடி, இத்தனை நாட்களைக் கஷ்டப்பட்டுக் கடத்தி இருந்தான்.
பசியும், புன்னகையும் தவிர வேறு எதுவும் தெரியாத எட்டு வயதுப் பிள்ளை இவ்வளவு பெரிய ஆயுதம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யும்? என்று பயந்த அதியன் விழுந்தடித்துக்கொண்டு அச்சிறுவனிடம் ஓடி வந்தான்.
மலைபோல் குவிந்திருந்த இடிபாடுகளின் மேல் கடகடவென்று ஏறிய அப்பிள்ளை, ஏதோ ஓர் இடத்தில் நின்று, "டாமி.. டாமி.." என்று கத்தினான்.
அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கீழே மெல்லிய முனகலாய், பவ்.. பவ்.. என்று ஒரு நாய்க்குட்டி குரைக்கும் சப்தம் கேட்டது.
அவ்விடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்த அப்பிள்ளை, "டாமி.. டாமி.. எங்க இருக்க? எங்கிட்ட வாடா.." என்று அழுக ஆரம்பித்து விட்டது.
தன் எஜமானன் கண்ணிலிருந்து கண்ணீர்த் துளியைக் கண்ட பிறகு வாட்ச் தாமதிக்குமா? விருட்டென அவன் கையிலிருந்து இறங்கிய அது, அவனது நாய்க்குட்டி இருக்கும் திசையை நோக்கி ஒரு பெரிய துளையை உருவாக்கியது.
அவ்வளவு பெரிய பேராபத்து நிகழ்ந்திருந்தும், இடிபாடுகளுக்கு இடையே சிறு கீறலும் இல்லாமல் உயிர் பிழைத்து நின்றிருந்த நாய்க்குட்டி, தன் நண்பனை அடைவதற்கான பாதை கிடைத்ததும் படுவேகமாக மேலே ஏறி வந்தது.
அதை ஆசையோடு தன் கைகளில் அள்ளிக் கொண்ட சிறுவன், "டாமி.. என் செல்லக்குட்டி, உனக்கு ஒண்ணும் ஆகலையிலடா?.." என்று செல்லம் கொஞ்சித் தீர்த்தான்.
அவனருகில் வந்த அதியன், முதல் முறையாக தன் வாட்ச் இன்னொருவனுக்காக வேலை செய்யும் அதிசயத்தை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அதியனோடு வந்திருந்த ராணுவ வீரன், "சார், பக்கத்து ஏரியாவுல இருந்து மூணு தடவ கால் வந்திடுச்சு. கொஞ்சம் சீக்கிரமா உங்க வாட்ச்ச எடுத்துகிட்டு வாங்க. நாம வேகமா அந்த ஸ்பாட்டுக்கு போகணும்" என்றான்.
அதியனின் அகம், 'அதற்கு வாய்ப்பு இருப்பதாய் தோன்றவில்லை' என்று உள்ளுக்குள் முரசடிக்க,
இருந்தாலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கும் நோக்ககோடு, "தம்பி, உன் டாமி வந்திடுச்சுல, நான் இந்த வாட்ச்ச திருப்பி எடுத்துக்கலாமா?" என்று குழந்தையின் மனதை உறுத்தாமல் தன் பொருளைத் திரும்பக் கேட்டான்.
நாய்க்குட்டி மேலேயே தன் முழு கவனத்தையும் வைத்திருந்த அந்தக் குழந்தை, "எடுத்துக்கோங்க அங்கிள்" என்று சர்வசாதாரணமாய் அந்த வாட்ச்சைக் கழற்றி கொடுத்து விட்டது.
அதியன் அதைத் தன் கையில் கட்ட முயல, அவன் பிடியை விட்டு வழுக்கிச் சென்ற அதுவோ மீண்டும் அச்சிறுவனின் கையிலேயே தஞ்சம் அடைந்தது. இது அதியன் எதிர்பார்த்ததுதான் என்றாலும், இத்தனை நாட்களாய் தன்னுடன் இருந்த அதன் உதாசீனத்தை அவனால் தாங்க முடியவில்லை.
'நீ உன் புகழ் பாடிக் கொண்டிருந்த வேளையில் மற்றவர்களுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும்?' என்று அதியனின் மூளைக்குள் ஒரு பொறி தட்டியது.
அதை அவன் ஆழ்ந்து யோசிக்கும் முன்பாக குறுக்கிட்டது சிறுவனின் குரல்..
"இது ஏன் எங்கிட்ட வருது அங்கிள்?" என விவரம் தெரியாமல் கேட்டது அப்பிள்ளை..
அவனுக்கு விளக்கமாய் சொல்லி காலம் தாழ்த்த விரும்பாத அதியன், "டாமி மாதிரியே இந்த வாட்ச்சுக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்ச நேரம் முன்னால அவசரமா இன்னொரு இடத்துக்கு போகணும்னு நான் சொன்னேன்ல தம்பி? நீயும் இப்ப என்கூட வரணும்.." என்றான்.
"நானும் என் டாமியும் உங்களோட வரணுமா?" என்று தன் ஐந்தறிவு நண்பனையும் பேச்சில் இணைத்துக் கொண்டது குழந்தை.
"ஆமாப்பா.. இனிமே இந்த வாட்ச் உன்னோடதான் இருக்கும், இப்போதைக்கு எந்தக் கேள்வியும் கேட்காம நான் சொல்றதை செய். எல்லாரையும் காப்பாத்தினதுக்கு அப்புறம் மத்ததெல்லாம் நாம உக்காந்து பேசலாம்" என்ற அதியன் பாசத்தோடு தன் கைகளை நீட்டி அழைத்தான்.
மனதிற்குள் அதியனை சூப்பர் ஹீரோவாக நினைத்துக் கொண்டிருந்த பிள்ளை, எவ்வித தயக்கமும் இன்றி தன் டாமியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அதியன் கைக்குள் சென்றது.
அடுத்த நொடியே அச்சிறுவனும் அதியனும் பக்கத்து ஏரியாவிற்கு விரைந்தனர். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அதியன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே அச்சு பிசகாமல் செய்தது அக்குழந்தை.
பெரிய கட்டிடங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு குற்றுயிரும் குலை உயிருமாய் தவிப்பவர்களையும், அவர்களது வீடுகளைச் சேர்ந்த செல்லப் பிராணிகளையும் சேர்த்துக் காப்பாற்ற ஆரம்பித்தனர் இருவரும்.
'அடிபட்டு ரத்தம் கசிய வரும் எவரையும் பச்சைப் பிள்ளை பார்க்கக் கூடாது, பயந்துவிட்டால் உள்ளதும் போச்சு என்ற நிலையாகிவிடும்!..' என்று அவ்வப்போது அப்பிள்ளையின் கண்களை மூடி, பேச்சை மாற்றி ஏமாற்றி, மீட்பு வேலைகளைச் செய்வதற்குள் அதியனுக்குப் போதும் போதும் என்றாகியது.
ஆயினும் அவன் தலையெழுத்து அவனை அவ்வளவு எளிதில் சும்மா விட்டு விடுமா?
பகலில் உருவான அலைச்சலும், அழுத அசதியும் சேர்ந்து குழந்தையை உறக்கத்திற்கு ஆழ்த்திட, அடுத்து அதுவும் சேர்ந்து அதியனின் தலையிலேயே விடிந்தது.
'ஆட்டத்தின் நாயகனே தூங்கிவிட்டால், வாட்ச் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டுச் செயல்படாதே?' என்று அச்சங்கொண்டான் அதியன்.
உறங்கத் துடிக்கும் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டு பல உயிர்களை மீட்கும் பணியினைச் செய்ய வேண்டியிருப்பதால், அடுத்த சில மணி நேரத்திற்கு அதியனுக்கு மூச்சு விடக் கூட நேரமில்லாத அளவு வேலைகள் தொடர்ந்தது.
அவ்வப்போது குழந்தையை உசுப்பி, விளையாட்டு காட்டி, வேலையைச் செய்ய வைத்து, பேராபத்தில் பாதிக்கப் பட்டவர்களைக் குழந்தை பார்க்காமல் இருப்பதற்காகப் பேச்சை மாற்றி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளையைக் கொஞ்சம் உறங்க விட்டு என்று அனைத்தையும் அவன் செய்து முடிக்கும் போது நேரம் அதிகாலை ஐந்தரை மணியை நெருங்கி விட்டிருந்தது.
இரவெல்லாம் அலறிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி, அடுத்து எந்த பகுதியிலிருந்தும் அழைப்பு வராததால் தன் இரைச்சலை நிறுத்திவிட்டு அமைதியாக உறங்கத் துவங்கியது.
அதன் பிறகுதான் அதியனும் அவனுடன் வந்திருந்த ராணுவ வீரனும், கொஞ்சம் நிதானமாக அடிவயிறு வரைக்கும் மூச்சிழுத்துத் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்தது.
அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மார்பில் போட்டுக்கொண்டு தெரு ஓரமாய் உடையாமலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தான் அதியன்.
'ஆயிரம் வீரர்கள் இருந்தாலும் என் நண்பனுக்கு நான்தான் ஆஸ்தான காவல்காரன்' என்பதைப் போல அதியனின் காலடியில் வந்து அமர்ந்து கொண்டது அந்த நாய்க்குட்டி.
அதியனின் அருகில் அமர்ந்த ராணுவ வீரன், கண்கள் சிவக்க, கால்கள் துவள, முதுகு வலியோடு திணறும் அதியனைக் கண்டு நெஞ்சம் கனத்துப் போனான்.
"குழந்தைய எங்கிட்ட குடுங்க சார், நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கேன்" என்று அவ்வீரன் கேட்க,
'குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிட நேரம் உடலை ஓய்வெடுக்க விடலாமே' எனும் எண்ணத்தோடு பிள்ளையைக் கை மாற்ற எத்தனித்தான் அதியன்.
கைமாறியதன் காரணமாய் உருவான உடல் அசைவால் கண் விழித்த குழந்தை, 'ம்..' என்று முணங்கிக் கொண்டே மீண்டும் அதியன் மார்பைத் தேடிப் பாய்ந்தது.
அந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிள்ளையைக் கைவிட விரும்பாத அதியனும், "ஆனது ஆச்சு, இன்னும் அரை மணி நேரந்தான, எங்கிட்டயே இருக்கட்டும்" என்று சொல்லி விட்டான் அந்த ராணுவ வீரனிடம்.
ஓடியாடி வேலை செய்ததற்கு வெகுமதியாய் உலகம் போற்றும் உன்னத சக்தியை இழந்து விட்டு நிற்கும் அதியனுக்கு, தன் அன்பான வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் ஆறுதல் தராது என்பதை உணர்ந்து கொண்ட அவ்வீரன், அதியனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
"இங்க வரும்போது நம்ம கூட வந்த ஆள் ஐம்பதாயிரம் பேர் இறந்திருக்க வேண்டி வரும்னு சொன்னாரு இல்லையா? அவ்வளவு டெத் இருக்காதுனு எனக்கு தோணுது. மிஞ்சிப் போனா பத்தாயிரம் பேர் வரைக்குந்தான் போகும், இது உண்மையிலேயே எங்களோட பார்வையில மிகப்பெரிய சாதனை.
வழக்கமா இந்த மாதிரி நிலநடுக்கம் வந்தா என்ன மாதிரி ராணுவ வீரனுக்கு வர்ற முதல் கவலை, உள்ள சிக்கி இருக்கிற ஆட்கள எப்படி எந்தச் சேதாரமும் இல்லாம வெளியில் எடுக்குறதுன்றது தான்.
அதுக்கே நிறைய நேரம் போயிடறதுனால, உள்ள இருக்கிறவங்களுக்கு நிறைய ரத்தப்போக்கு உண்டாகிடும். எங்களுக்கும் அடுத்த இடத்துக்குப் போய்ச் சேர தாமதமாகி ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்.
ஆனா இங்க உங்க உதவியால ரெண்டு நாள் இழுத்துக்கிட்டு இருக்க வேண்டிய வேலை அத்தனையும் ஒரே ராத்திரியில முடிஞ்சிருச்சு. பில்டிங்க்குள்ள மாட்டிக்கிட்டு இருந்த அத்தனை பேருக்கும் இந்நேரம் ட்ரீட்மெண்ட் நடந்திருக்கும்.
நீங்க மட்டும் ஒத்துழைக்காம போயிருந்தா, இந்த இன்சிடன்ட் எவ்வளவு பெரிய சேதாரத்தை உண்டு பண்ணியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்க செஞ்ச உதவிய நானும் இன்னிக்கி உயிர் பொழச்ச மக்களும் மறக்கவே மாட்டோம்.
உங்கள மாதிரி ஒருத்தர இந்த வாட்ச் மிஸ் பண்ணப் போகுதுனுதான் எனக்கு தோணுது. எனிவே தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் சார்.." என்று தன்னையும் அறியாமல் அதியனின் சூப்பர் ஹீரோ பயணம் முடிவுக்கு வந்துவிட்டதை வார்த்தையால் வெளிப்படுத்தி விட்டான்.
"இத்தன நாளா நான் எவ்வளவு தூரம் கண்ண மூடிக்கிட்டு வேலை செஞ்சிருக்கேன்னு இந்தக் குழந்தைய பார்த்ததுக்கு அப்புறம்தான் புரியுது. வெள்ளம் வந்தப்போ நான் இந்த வாட்ச்சுக்கு கொடுத்த ஆர்டரே, மனுஷங்கள என் கண்ணுக்கு காட்டுன்றதுதான்.
அங்க எவ்வளவு மிருகங்கள் இருக்கு? அதெல்லாம் என்ன ஆச்சுனு அந்த நேரத்தில நான் யோசிக்கக் கூட இல்ல. ஒரு வேள அப்பவே எனக்கு அந்த அறிவு இருந்திருந்தா, மனுசங்கள காப்பாத்தி முடிச்சதுக்கு அப்புறம் குறைஞ்சபட்சம் ஒரு பத்து பதினஞ்சு குதிரைகளையாவது காப்பாத்த முயற்சி செஞ்சிருப்பேன்.
என்னோட அஜாக்கிரதையால அன்னிக்கி உயிர் பொழச்சு ஓரளவு தப்பிச்ச மிருகங்களும் சாப்பாடு இல்லாம, குளிர்ல நடுங்கி அணு அணுவா செத்துப் போயிருக்கும்ல?
இதோ இன்னிக்கும், நாம முதல்ல போன இடத்துல எல்லாம் எந்தெந்த மிருகம் எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு இருந்துச்சுனு தெரியல? திரும்பிப் போய் அத்தனையும் காப்பாத்தனும்னு ஆசைதான், ஆனா இந்நேரம் வரைக்கும் அதெல்லாம் உயிரோட இருக்குமா?" என்று உண்மையாய் மனம் வருந்திப் பேசினான் அதியன்.
"இதுல உங்க தப்புனு எதுவும் இல்ல சார், உங்கள மாதிரியே அன்னைக்கி வேற யாருக்கும் மிருகங்களோட உயிரும் முக்கியம்னு தோணல. பூமி மனுஷனுக்கு மட்டுமே சொந்தம்னு நமக்கு நாமே உருவாக்கிக்கிட்ட மாய பிம்பம்தான் இதுக்கெல்லாம் காரணம்.
உணவுச் சுழற்சினு ஒண்ணு இல்லாம போனா, நாம அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாக வேண்டி வரும்னு நம்மள்ல எத்தன பேருக்கு அக்கறை உண்டு சொல்லுங்க?
ஆறறிவு இருக்குறதால நாம ஏதோ உயர்ந்த ஜாதி மாதிரியும், வாயில்லா ஜீவன்களெல்லாம் கீழ் ஜாதி மாதிரியும் ஒரு வாழ்க்கைய வாழ நமக்குப் பழக்கி விட்டுட்டாங்க.
நாமளும் கொஞ்சம் கொஞ்சமா நமக்கு கத்துக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில வாழ ஆரம்பிச்சுட்டோம். அதனாலதான் நமக்கு ரோட்டுல ஒரு நாய் அடிபட்டு கிடந்தா பெருசா தெரிய மாட்டேங்குது.
செல்போன் சிக்னல் சிட்டுக் குருவிக்கு ஆபத்து, ஏசி யூஸ் பண்ணா ஓசோன்ல ஓட்டை விழும், பிளாஸ்டிக்கால மண்ணும் கடலும் பாழாகுதுனு எவ்ளோ எடுத்துச் சொன்னாலும் எவனாச்சும் அதையெல்லாம் யூஸ் பண்ணாம இருக்கானா? இல்ல அதுக்கு மாற்றுப் பொருள்னு யாராவது எதையாவது கண்டுபிடிக்கிறாங்களா?
பத்து வயசுக்கு கீழ இருக்குற குழந்தைங்க எல்லாம் கடவுள் மாதிரி, ஏன்னா அவங்களுக்கு உலக நடப்பு தெரியாது. அவங்க கண்ணுக்கு எல்லா உயிரும் சமமா தெரியும்.. அப்படித்தான் இந்த பையனுக்கும் அவனோட டாமி முக்கியமான ஒண்ணா தெரிஞ்சிருக்கு.
இவன சரியா ட்ரெயின் பண்ணினா உங்கள விட பெஸ்ட்டா வருவான் சார். அவனோட அம்மா அப்பா இழப்பத்தான் எப்படி தாண்டி வரப்போறான்னு எனக்குத் தெரியல.." என்று சொல்லிக் கொண்டே உறங்கும் குழந்தையின் தலையை வருடினான் ராணுவ வீரன்.
"அது இவனுக்கு பெரிய விஷயமா இருக்காதுனு நான் நினைக்கிறேன்.." என்றான் அதியன்.
அதிர்ச்சி கொண்ட வீரன், "அம்மா அப்பா டெத் பெருசா இருக்காதுனா சொல்றீங்க? ஏன் சார்?" என்றான்.
"இங்க நில நடுக்கம் வரும்போது ராத்திரி ரெண்டு மணி. இந்தக் குழந்தையோட வீட்ல இருந்த அத்தனைபேரும் ஸ்பாட் அவுட். ஆனா இவன் நம்ம கைக்கு கிடைக்கும் போது உடம்பு முழுக்க மண்ணும் தூசியும்தான் இருந்துச்சு.
அப்ப இவன் அந்த நேரத்துல வீட்டுக்குள்ள இல்லைனுதான அர்த்தம்? இவ்வளவு சின்ன பையன் அர்த்த ராத்திரியில தன் வீட்டுக்குள்ள இருக்காம ஏன் வெளியில போனான்?
பொதுவா நிலநடுக்கம் வர்றது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் முன்னாலேயே தெரிஞ்சிருக்கும். கட்டி போடப்பட்ட மிருகங்களைத் தவிர மத்த அத்தனையும் எப்பவோ தப்பிச்சு போயிருக்கும் இல்லையா?..
அப்படி இருக்கும்போது இவனுக்கு தன்னோட டாமி வீட்டுக்கு பின்னாலதான் இருக்குதுனு எப்படி அவ்வளவு உறுதியா தெரிஞ்சது? அப்ப இவனும் அதுகூட இருந்திருக்கலாமோ?..
அம்மா அப்பா செத்துட்டாங்கன்னு தெரிஞ்சும் அழுகாத பையன், தன்னோட டாமி பவ்னு சொன்ன அடுத்த நிமிஷம் எவ்வளவு அழுதான்? அது திரும்பி வந்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டான்?
இப்பவும் தனியா இருக்கோம்ங்கிற பயம் கொஞ்சமும் இல்லாம எவ்வளவு அசந்து தூங்குறான் பாருங்க? எனக்கென்னமோ இவனுக்கு தனிமை ஏற்கனவே ரொம்ப பழக்கமான ஒன்னா இருக்கும்னு தோணுது" என்ற அதியனின் கரம், வேதனையோடு அப்பிள்ளையின் முதுகினை வருடிவிட்டது.
அந்த வார்த்தைகள் சரி என்று ராணுவ வீரனுக்கும் தோன்றிட, ஆம் எனத் தலையாட்டினான் அவனும்.
அரக்கப் பறக்க அத்தனை பேரும் வேலை பார்த்ததின் காரணமாய் திருச்சி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. ஹெலிகாப்டர் உதவியோடு மீண்டும் சென்னைக்கு வந்த அதியன், குழந்தையையும் நாய்க்குட்டியையும் தன் அறையிலேயே படுக்க வைத்தான்.
வீடு வந்து சேர்ந்த தன் பிள்ளையின் முகத்தைக் கொண்டே அகத்தைப் புரிந்து கொண்ட கிரகலட்சுமி, அதியனைக் கட்டாயப்படுத்தி இரண்டு இட்லியை அவன் வாயில் திணித்துவிட்டார்.
முந்தைய நாளின் மொத்த அசதியும் அவன் உடலைச் சாய்க்க, படுக்கையில் போய் விழுந்தவன் திரும்ப கண் விழிக்கையில் நேரம் மதியத்தினை நெருங்கி இருந்தது.
எழுந்து அமர்ந்த பின்னும் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் துடிக்க, கண்களைக் கசக்கிக் கொண்டே ஹாலுக்கு வந்தான் அதியன்.
டிவியில் அத்தரப் பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கிரகலட்சுமி, "எந்திருச்சிட்டியா அதியா? சாப்பாடு வச்சுத் தரவா?" என்று பாசத்தோடு கேட்டார்.
"குளிச்சுட்டு வந்து சாப்பிடுறேன்மா, அவன் எங்க?" என்று குழந்தையைக் குறிப்பிட்டுக் கேட்டான்.
"கடைக்கி போயிருக்கான்" என்றார் கிரகலட்சுமி.
"கபிலன கேக்கலமா, அந்தச் சின்ன பையன கேட்டேன்.."
"அபி குட்டியா? உங்க அப்பா கூட கார்டன்ல விளையாடுறான்" என்றார்.
'அப்பாவுடனா?' என்று அதிசயித்த அதியன், ஹாலிலிருந்த ஜன்னல் வழியே கார்டன் பகுதியை எட்டிப்பார்த்தான்.
அங்கே அந்தக் குழந்தையும் அவன் அப்பாவும் நாய்க்குட்டியோடு பால் விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தினை கேட்ச் பிடிக்க முயன்று முன்னும் பின்னும் தாவும் டாமியின் செயல் அப்பிள்ளைக்கு ஏனோ அவ்வளவு சிரிப்பினை அள்ளித் தந்தது.
'நேற்று என்ன நடந்தது? அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது?' என்று எந்தக் கவலையும் இல்லாமல், முகம் கொள்ளா புன்னகையோடு சிரிக்கும் அந்தப் பிஞ்சு முகம் அப்படியே அதியன் மனதில் பதிந்து கொண்டது.
செய்து வைத்த சிலை போல நின்று கொண்டிருந்தவன் அப்பிள்ளையின் கண்களில் விழுந்து விட, "அங்கிள், இங்க வாங்க, இந்த கேம் செம ஜாலியா இருக்கு" என்று அழைத்தான்.
"இதோ வர்றேன்டா" என்றபடி அவனும் கார்டன் பக்கம் விரைந்தான்.
அதியனின் விரலைப் பிடித்துக் கொண்ட பிள்ளை, "குட் மார்னிங் அதியமான் அங்கிள்" என்றான்.
"டேய் தம்பி, இது மத்தியானம்டா, குட் ஆஃடர் நூன் சொல்லனும்" என்று அறிவு ஜீவியாய் அவன் பிழையைத் திருத்த முயன்றான்.
"அது எங்களுக்கு, நீங்க இப்பதான தூங்கி எந்திரிச்சீங்க, அதான் குட்மார்னிங் சொன்னேன்" என்று தன் ஜோக்கிற்குத் தானே சிரித்துக் கொண்டது குழந்தை.
"அங்கிள் பாவம்டா, ரொம்ப டயர்டா இருந்துச்சா, அதான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்.." என்றான் அதியன்.
"நான்லாம் எவ்வளவு லேட்டா தூங்கினாலும் காலையில சன் வர முன்னாலேயே எழுந்திடுவேன், இல்லனா சித்தி அடிப்பாங்க" என்றதும் அதியனுக்கு முகம் வாடிப்போனது.
தணிகாசலம், "இனிமே யாரும் உன்னை அடிக்க மாட்டாங்கடா, அப்படி யாராவது அடிக்க வந்தா சுத்தி இருக்கிற ஆர்மிக்காரங்க அவங்கள சுட்டுப் போட்ருவாங்க.." என்றார்.
குழந்தை, "ஒருவேள புல்லட் ப்ரூஃப் போட்டுட்டு யாராவது வந்துட்டா என்ன பண்றது தாத்தா?" என்று தன் அரும்பெரும் சந்தேகத்தைக் கேட்டான்.
"நீதான் ஒரு சிங்கக் குட்டிய உன் கூடவே வளக்குறேல, அவன் சும்மா விடுவானா?"
"ஆமால்ல, டேய் டாமி அப்படி யாராவது எங்கிட்ட வந்தா, நீ அவங்களோட புல்லட் ப்ரூப் டிரஸ்ஸ கடிச்சு கிழிச்சுடு, அதுக்கப்புறம் ஆர்மி அங்கிள்ட்ட சொல்லி சுட்டுடுவோம்" என்று தன் நண்பனுக்கு மாஸ்டர் ப்ளான் போட்டுத் தந்தான்.
அதைப் புரிந்து கொண்டது போல நாய்க்குட்டியும் பவ்.. என்று சொல்லித் துள்ளிக் குதித்தது.
அதியன், "அநியாயத்துக்கு சேட்டை பண்றடா" என்றிட
"நானா? இந்த டாமி எவ்ளோ சேட்டை பண்றான்னு பாருங்க, அப்புறம் பேசுங்க.." என்று டாமிக்கு முன்னால் இழுத்துச் சென்றான்.
நாய்க்குட்டியின் முன் அபி பந்தினை உருட்டி விட, தன் வாய்க்குள் அடங்காத அதைப் பிடிக்க டாமி முயற்சி செய்வது கண்டு அவனுக்கு ஒரே துள்ளாட்டம்தான்.
அதியன், "டேய் தம்பி, நீ சீட்டிங் பண்ற, உன் பந்து ரொம்ப பெருசா இருக்கு. டாமி குட்டி வாயால எப்படிடா அத புடிப்பான்? சின்ன பந்து எடுத்துட்டு வாடா.."
அவன், "ஐயயோ அங்கிள், இனிமே தம்பி தொம்பினு சொல்லி என்ன கூப்பிடாதீங்க. உங்க தம்பினு ஒருத்தன் இங்க சுத்திகிட்டு இருக்கானே அவன் ரொம்ப டெர்ரர் பீஸா இருக்கான்.
நானும் பாக்குறேன், காலையிலிருந்து அவன் சும்மா சும்மா என்கிட்ட சேட்டை பண்ணிக்கிட்டே இருக்கான். என்னால அவன் தொல்லைய தாங்கவே முடியல, நீங்க இனிமே என் பேர் சொல்லியே கூப்பிடுங்க.." என்றான்.
அப்போதுதான் அதியனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது..
'ஆமா இவன் பேர் என்ன? அபினு அம்மா சொன்னாங்கள்ல? அபிஷேக்கா இருக்குமா? அபிமன்யுவா இருக்குமா? இப்ப கேட்டா, 'நேத்து ராத்திரி முழுக்க அவனோட இருந்தும் பேர் கேக்கலையாடா?..' னு அப்பா கழுவி ஊத்துவாரே. இப்போதைக்கு அபி அபினே பேசி மெயின்டெயின் பண்ணுவோம்' என்று நினைத்துக் கொண்டிருக்கையில்,
அபியை பின்னாலிருந்து தூக்கிய கபிலன், "ஏன்டா நான் இல்லாதப்ப என்ன அடிக்க கூலிப்படைய ஏற்பாடு பண்றியா? அவன் அங்கிளு நான் டெர்ரர் பீஸா, இரு உன் குடல உருவுறேன்" என்று கிச்சு கிச்சு மூட்டிட குழந்தையின் சிரிப்புச் சத்தம் வாசல் வரை சென்று எதிரொலித்தது.
"அங்கிள் விடுங்க.. இனிமே அப்டி சொல்ல மாட்டேன், விடுங்க அங்கிள்.." என்று சிரித்துச் சிரித்து மாய்ந்த பிள்ளை முடிவில், "என்னையே அட்டாக் பண்ணிட்டீங்கள்ல, இருங்க இந்த வாட்ச்ச வச்சு திருப்பி அட்டாக் பண்றேன்" என்றிட அத்தனை பேரின் முகமும் அகமும் அதிர்ந்து போனது.
அபியின் வாட்ச் தன் தலைவனது உத்தரவிற்கு இணங்கி மெல்லத் தலை தூக்கியதும் கபிலன், "அடேய் அரை உழக்கு.. எக்குத்தப்பா எதுவும் செஞ்சுடாதடா, எனக்குனு நிறைய லட்சியம் எல்லாம் இருக்குது.
உன் வாட்ச் அட்டாக் பண்ணா அங்கிள் அல்ப்பாயிசுல போயிடுவேண்டா. இங்க பாரு, நான் உனக்காக கடைக்கு போயி க்ரீம் பிஸ்கட்டெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்.." என்று அப்படியே அந்தர்பல்டி அடித்துவிட்டான்.
அந்த டீலிங் பிடித்திருந்ததால் அபியும் அவன் வாட்ச்சும் அப்படியே அடங்கிவிட்டனர். க்ரீம் பிஸ்கெட்டை வாங்கிய அபி, பாக்கெட்டைப் பிரித்து அதியனுக்கு ஒன்று, கபிலனுக்கு ஒன்று, தணிகாசலத்திற்கு ஒன்று, தன் செல்ல டாமிக்கு ஒன்று என்று பிரித்துக் கொடுத்தான்.
மீதமிருந்த மூன்றில் ஒன்றை வீட்டிற்கு உள்ளே இருக்கும் பாட்டிக்கும், ஒன்றை தனக்கும் எடுத்து வைத்தவன், கடைசி பிஸ்கட்டைப் பக்கத்திலிருந்த டேபிளின் மேல் வைத்தான்.
பிறவியிலேயே குறும்பு குணம் கொண்ட கபிலன், "அந்த எக்ஸ்ட்ரா பிஸ்கட், கடைக்குப் போய் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தங்களுக்குத்தான் சொந்தம்" என்று சொல்லி அபியை வம்பிழுத்தான்.
அபி, "எக்ஸ்ட்ரா பிஸ்கட்டெல்லாம் இல்ல, இது என் வாட்ச்சுக்கு?" என்றான்.
கபிலன், "டேய் வாட்ச்செல்லாம் பிஸ்கட் திங்காதுடா, எனக்கு குடுத்திடு. அப்பதான் நான் மறுபடியும் கடைக்குப் போவேன், உனக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வருவேன்" என்று அபியின் கையைப் பிடித்து இழுத்தான்.
அவன் பிடியிலிருந்து வளைந்து நெளிந்து தப்பிய அபி, "ஏன் சாப்பிடாது? இது நேத்து நைட் ஃபுல்லா வேலை பார்த்து இருக்கு, அதுக்கும் வயிறு பசிக்கும்ல" என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், வாட்ச் அந்த பிஸ்கட் துண்டினை தன்னுள் இழுக்க ஆரம்பித்திருந்தது.
அதைக் கண்டு அதியனே தன் கண்ணைக் கசக்கிக் கொள்ள கபிலனின் நிலையைச் சொல்லவா வேண்டும்?
அபியோ, "நான் சொன்னேன்ல?" என்று தலையாட்டிவிட்டு வாட்ச்சை ஒரு கையாலும் டாமியை ஒரு கையாலும் தடவிக் கொடுத்தான்.
மனிதம் மரத்துப்போன கலிகாலத்தில், அன்பு எனும் சொல்லுக்கு ஆழமான அர்த்தத்தை உணர்ந்திருப்பது சிறு பிள்ளைகள் மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அங்கே நிரூபிக்கப்பட்டது.
அப்போது அவ்விடத்திற்கு வந்த டிஜிபி அதியனிடம், "ஹலோ மிஸ்டர் அதியன், நேத்து நீங்க செஞ்ச உதவி ரொம்ப ரொம்ப பெருசு. உங்கள மீட் பண்றதுக்காக ஒட்டு மொத்த ப்ரஸ்ஸும் கவர்மெண்ட்டுக்கு ஓவரா குடைச்சல் கொடுக்கிறாங்க.
சிஎம்கூட ஒரு ப்ரெஸ் கான்ப்ரன்ஸ் வைக்கப் பாருங்கனு சொல்லிட்டாரு. எப்ப வைக்கலாம்? எங்க வைக்கலாம்னு பார்த்து சொல்றோம், ரெடியா இருங்க" என்றார்.
அதியன், "நானே இது சம்பந்தமா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் சார். கொஞ்சம் தனியா வாங்களேன்.." என்று அவரை ஒதுக்குப் புறமாய் அழைத்துச் சென்றான்.
நெடுநேரமாய் காரசாரமாய் நகர்ந்த அவர்களின் விவாதம் ஒரு முடிவுக்கு வரும்போது அதியனின் முகம் அத்தனைத் தெளிவாய் இருந்தது.