கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 2

உயிர் 2

ஏய் அஞ்சலி என்ன அவ்ளோ ஆர்வமா வகுப்பு கவனிக்கிற.நான் கூப்பிடுறது கூட காதுல விழாத அளவுக்கு கிலாஸ்ல மூழ்கி போட் இருக்க....என்று திவ்யா அவளை திட்ட அதற்கு ஏற்றாற் போல ஹாஜிராவோ அவ என்னைக்குடி கிலாஸ் டைம்ல நம்மல திரும்பி பார்த்திருக்க நம்ம சாக போறோம்மா கூட என்ன ஏதுன்னு கிலாஸ் முடிச்சி புக்க மூடி வைச்சிட்டு நிதானமா வந்து தான் கேட்பா .....ஏன்டி அவள சும்மா சும்மா வம்புக்கு இழுக்குறீங்க என்று அஞ்சலிக்கு ஆதரவாக பேசிளாள் மேகலா ...

ஆமா ஆமா படிக்கும் போது நீ கூப்டா கூட தான் ஏன்னு கேட்க மாட்டாள் இவ வந்துட்டா அவக்கு சப்போர்ட் பன்னிட்டு இதுவரை அமைதியாக அவர்களின் சம்பாசனைகளை கேட்டு கொண்டு இருந்தவள் இப்போது வாய் திறந்தாள்...அம்மா தாய்களா என்னங்கடி உங்க பிரச்சனை ...சரி நீ சொல்லு எதுக்கு என்ன கூப்பிட்ட என்று திவ்யாவிடம் ஆரம்பிக்க அவளோ ஆ... எங்க அண்ணா வந்திருக்குடி நீ தானே டாக்டருக்கு படிக்கனும் னு ஆசைன்னு சொல்லுவ அதான் அவன்ட பேசுனா ஏதாவது ஐடியாகிடைக்குன்குற நல்ல எண்ணத்துல தான் சொல்ல கூப்பிட்டேன்...அதுக்குள்ள என்னோட தொண்டை தண்ணியே வத்தி போச்சி....

வாய்விட்டு அழகாக கண்ணக்குவி விழ சிரித்த அஞ்சலியோ அடியே நான் கிலாஸ கவனிச்சா தானேடி உங்களுக்கு ஏதாவது டவுட் வந்தா அதை கிளியர் பன்ன முடியும்..உதவி செய்யலாம்னு நினைச்சா .....என்ன மேகலா நான் கவனிக்காம விட்டுமா ....ஏனென்றால் மேகலா படிப்பில் கொஞ்சம் குறைவு தான் .அவளுக்கு பொறுமையாக அனைத்தையும் விளக்கி கூறி அவளை புரிந்து கொள்ள செய்து மனப்பாடம் செய்ய வைக்கும் பொறுப்பை யாரும் சொல்லாமலே எடுத்து கொண்டாள் அஞ்சலி எனவே அவள் இவ்வாறு கேட்டதும் பதறி போன மேகலா தாயே வேணாம்...நீ மலையிறங்கு சாமி இவளுங்க கதை எல்லாம் கேட்காத என்று நான் என்றும் அஞ்சு பக்கம் தான் என சொல்லி விட்டாள்.....அனைவருமே அவளை பார்த்து சிரித்தனர்....

அன்றைய பொழுது அழகாக செல்ல வேதியியல் ஆசிரியை அழைப்பதாக வந்து சொல்ல அங்கு விரைந்தனர் நண்பர் குழு...
என்னங்கடி ஒருத்திய கூப்பிட்டா கும்பலா தான் வருவீங்களோ ...

சரி விடுங்க எங்களை கண்ணு வைக்கிறத விட்டுட்டு கூப்பிட்ட கதைட சொல்லுங்க மிஸ் என சலுகையாய் சொன்னாள் ஹாஜிரா...வாயாடி வாயாடி என அவளிடம் வம்பிழுத்தவர் வர்ற சுதந்திர தினத்திற்கு இந்த தடவை ஊர் முன்னாடி பஞ்சன் பன்றாங்களாம் ..நம்ம எச் எம் சிஸ்டர் தான் பொறுப்பு எடுத்திருக்காங்க நாம வந்தே மாதரம் சாங்குக்கு டான்ஸ் ஆடனுமாம் ...நீங்க நாலு பேரும் ஓகே இன்னும் மூனு பேர் வேணும்...நல்லா ஆடுற ஆளுங்களா பார்த்து கூப்பிட்டுட்டு ஸ்கூல் முடிஞ்சதும் என்ன லேப்ல வந்து பாருங்க...

ஓகே மிஸ் என்று தைரியமாக சொல்லி வெளியில் வந்தாலும்...சற்று நடுக்கம் எடுக்க தான் செய்தது...காரணம் இவர்கள் தனி காம்பௌன்டில் தான் இருக்கின்றனர்.....ஊருக்கு நடுவில் பள்ளி விடுதி என்று இருந்தாலும் ஊராரில் இருந்து தனித்து தான் இருக்கின்றனர்...இம்முறை ஊருக்கு முன்னால் ஆடனும் என்றால் சற்று பயம் வந்தது...

மேலும் அஞ்சலிக்கு என்னவோ படபடப்பாக இருந்தது...இனம்புரியா உணர்வு ஏதோ மேலோங்கியது...

தொடரும்
 
Top