தீட்சுவை ஹாஸ்டலில் இறக்கி விட்ட பிறகு அதியனின் புது பைக் தன் வீட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வீட்டிற்குச் செல்லும் வழியில் மொபைல் கடையைப் பார்த்தான் அவன்.
'எப்படியும் என் எருமைத் தம்பி புதுசா லாஞ்ச் ஆன ஒரு மொபைல் தான் வேணும்னு கேட்கப் போறான். வீட்டுக்கு போயிட்டு அவன கூட்டிக்கிட்டு திரும்ப இவ்வளவு தூரம் வந்து, மறுபடியும் இங்கே இருந்து வீட்டுக்கு திரும்பி போகணும்.
இன்னிக்கு இருக்கிற டிராபிக்ல எப்படி இவ்வளவு தூரம் மறுபடியும் போயிட்டு போயிட்டு திரும்பி வர முடியும்? பேசாம நானே அவனுக்கு ஒரு புது மாடல் போன் வாங்கிட்டு போயிட்டா மேட்டர் ஓவர்..' என்று சோம்பேறித்தனம் செய்தவன், அந்தக் கடைக்கு முன்பு கொண்டு போய் பைக்கை நிறுத்தினான்.
அந்தக் கடையில் இருந்ததிலேயே நல்ல மாடல் போன்கள் எல்லாம் அவன் முன்னால் வரிசைப் படுத்தப் பட்டது. அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட போனுக்கு மட்டும் வொயர் லெஸ் ஹெட் போன் ஒன்று இலவசமாய் கிடைக்க, அந்த ஹெட்போனை வாங்கிப் பார்த்தவனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அந்த ஹெட்போன் காதில் இருப்பதே தெரியாத அளவுக்கு ரொம்பவும் சின்னதாக இருந்தது. அதற்கு ஆசைப்பட்டு அந்த போனை வாங்கிக் கொண்டான் அதியன்.
"எவ்வளவு நாளா இப்படி ஒரு ஹெட் போன் வாங்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இத கண்டிப்பா அந்த பன்னாடைக்கு கொடுக்கக் கூடாது, நாமளே வச்சுக்கலாம்" என்று முடிவு செய்து கொண்டான்.
அவன் வீடு வந்து சேர்கையில், கடைக்குப் போகத் தாயாராகி உட்கார்ந்திருந்தான் கபிலன்.
அண்ணனைப் பார்த்ததும் சந்தோஷமாக ஓடி வந்தவன், "நான் ரெடியா இருக்கேன்டா, போகலாமா?" என்றான்.
அவனைச் சீண்டிப் பார்க்கும் ஆசையில், பைக்கில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, "எங்க?" என்றான் அதி.
"ஈவ்னிங் போன் வாங்க போகலாம்னு நீதானடா சொன்ன? உன்னை நம்பி அம்மா அக்கவுண்ட்ல இருந்து நான் அதிகமாகவே பணம் அனுப்பி விட்டேன்டா. இப்ப திடீர்னு இப்படி சொல்ற?" என்றான் கோபத்துடன்.
"அப்படியா நான் சொன்னேன்? எனக்கு ஞாபகமே இல்லையே?!.." என்று அக்மார்க் ஆக்டிங்கை வெளிப்படுத்தினான் அதியன்.
"டேய்.. நம்பிக்க துரோகி, மரியாதையா என்னோட காசு எல்லாத்தையும் திருப்பி கொடுடா. நானே கடைக்குப் போய் எனக்குத் தேவையானதை வாங்கிக்கிறேன்."
"ஏதோ நீயே சாம்பாதிச்சு அனுப்புன பணத்த நான் ஆட்டைய போட்ட மாதிரி சீன் போடற? அம்மா பணம்தானடா, உனக்கு அதுல எவ்வளவு உரிமை இருக்கோ, அதே அளவு எனக்கும் இருக்கு. அதனால இந்த விஷயத்த இப்பவே மறந்துட்டு வேற வேலை இருந்தா போய் பாரு.." என்றான் அதி.
'விட்டால் கொன்று விடுவான்' என்பதைப் போலக் கபிலன் முறைக்க, அதியனுக்கு இப்போதுதான் தன் வாட்ச்சின் நியாபகமே வந்தது.
'இவ்வளவு நேரம் இது சும்மாவா இருக்கு?' என்று ஒரு நொடி அதில் கண் பார்வையைத் திருப்பிய நேரம், இந்தப்பக்கம் கபிலன் கோபத்தோடு திரும்பி வீட்டினுள் செல்ல எத்தனித்தான்.
அதியன் அவன் கையைப் பிடித்து அவன் உள்ளங்கையில் புது போனை வைக்க, அதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவன், தன் அண்ணனை அப்படியே கட்டிக் கொண்டான்.
"தேங்ஸ்டா அதி" என்றவன் போன் பாக்ஸைப் பிரித்துக் கொண்டே வீட்டினுள் சென்றான்.
நொடிப்பொழுதில் குணம் மாறிவிட்ட அவனைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்த அதி, வரவேற்பறையில் இருந்த அப்பாவிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.
"என்ன அதியா, புது பைக் வாங்கி இருக்க போல? உன் பழைய பைக் என்னாச்சு?" என்றார்.
'ஐயோ எதாவது மனசுல நினைச்சா, ஸ்ட்ரைட்டா அப்பா நம்பருக்கே இந்தப் படுபாவி மெஸெஜ் அனுப்பிடுவானே. இப்ப எப்படி எதையும் நினைக்காம இருக்கிறது?' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்
அவன் மனம், 'லூசுக்கூவ, இப்பவே நீ பேசவேண்டியது எல்லாத்தையும் மனசுல நினைச்சுக்கிட்டுதான்டா இருக்க' என்று அவன் அறிவுக்கு எடுத்து உணர்த்தியது.
அடுத்த நொடியே அதியன் எதுவும் நினைக்காமல், தன் அப்பாவைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
"என்னடா சிரிக்கிற? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. உன் போக்கு எதுவும் சரியில்லையாமே, அம்மா சொல்லுறா" என்றார்.
அதற்கும் அவன், "ஹே..ஹே.. ஓஹோ.. ஓஹோ.." என்று பைத்தியம் போல் சிரித்தான்.
வாத்தியாருக்குக் கோபம் வந்து குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு, "விளையாடுறியா? ஏன்டா பைக் வாங்குன?" என்று கோபத்தோடு கத்த, அவர் போட்ட சத்தத்தில் கிச்சன் உள்ளிருந்த கிரகலட்சுமி வெளியே ஓடிவந்தார்.
'ஊரு ஒண்ணு கூடிடுச்சே..' என்று உள்ளுக்குள் மிரண்ட அதியன் அப்போதும் சம்பந்தம் இல்லாமல் கெக்கபெக்கேவெனச் சத்தமாகச் சிரித்தான்.
"அவ்வளவு கூடிப்போச்சாடா உனக்கு?" என்று அப்பா கைகளை உயர்த்த,
அவரைப் பிடித்துக் கொண்ட கிரகலட்சுமி, "கொஞ்சம் பொறுங்க நான் பேசிப் பார்க்குறேன். டேய் அதி, ஏண்டா இப்படி பண்ற? நீ முன்ன மாதிரி இல்ல, உன்ன நினைச்சா எங்களுக்கு பயமா இருக்கு. எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுடா" என்றார் வருத்தத்துடன்.
தன் அம்மா கெஞ்சுவது தெரிந்தும் அதியன் எதுவும் பேசாமலேயே சிரித்துக் கொண்டே இருந்தான்.
கபிலனும் தன் அண்ணனின் செயல்களைக் கண்டு மிரண்டு, "டேய் அண்ணா, என்னடா ஆச்சு உனக்கு? அம்மா இவ்ளோ ஃபீல் பண்ணி புலம்புறாங்க, கிறுக்கு புடிச்சி மாதிரி சிரிச்சிகிட்டே நிக்கிற? என்னாச்சுடா உனக்கு?" என்று அவன் தோளைத் தட்டி உலுக்கினான்.
அப்போதும் அதியன் சிரிக்க கிரகலட்சுமி பயத்தோடு, "இதுக்கெல்லாம் நாம குலதெய்வ கோவிலுக்குப் போகாததுதான் காரணம். நாம அங்க போயே மூணு வருஷம் ஆச்சு.
நான் எத்தனை முறை சொன்னேன், குலதெய்வ கோவிலுக்கு ஒரு தடவ போகலாம்னு, யாராச்சும் கேட்டீங்களா? இப்ப பாருங்க, என் புள்ள எதைக் கேட்டாலும் சிரிக்கிறான்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு, ஏதோ காத்து கருப்பு அடிச்சு என் புள்ள வாய திறக்க விட மாட்டேங்குது" என்று முந்தானையை கண்களில் ஒற்றிக் கொண்டே புலம்பினார் கிரகலட்சுமி.
அதுவரை அண்ணனைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த கபிலன், 'ஆத்தி, பேய் கூடவா இவ்வளவு நேரம் பழக்கம் பேசினோம்?' என்று மெதுவாகப் பின்னால் நகர்ந்தான்.
எப்போதும் கூட்டுக் களவாணியாக அதியனோடு சுற்றும் கபிலனே, பயந்து ஜகா வாங்குவதைப் பார்த்த அப்பாவுக்கும் கொஞ்சம் பயம் வரத் துவங்கியது.
"சரிடி இந்த வாரத்துல ஒரு நாள் நாம நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். நீ கவலைப் படாத, பூசாரிட்ட பேசச் சொல்லி என் மாமாகிட்ட தகவல் சொல்லிடுறேன்" என்றார்.
அதைக் கேட்டு அதியனின் மனம் தட்டுத் தடுமாற, 'எதையும் யோசிச்சிராத, சிரி.. சிரி..' என்று அவன் மூளைக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
அவன் இன்னும் அதிகமாய் சிரிப்பதைக் கேட்ட அம்மா, "போதும்யா, நீ உள்ளே போய் படுத்துக்க" என்று அனுப்பி வைத்தார்.
தப்பித்தால் போதும் என்று உள்ளே சென்றவன் பெட்டில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, 'எல்லார் முன்னாடியும் இப்படி சிரிச்சு ஏமாத்த முடியாது, இந்த வாட்ச்சை எப்படி கன்ட்ரோல் பண்ணறதுனு முதல்ல நான் கண்டுபுடிக்கனும்.
என் மனசு எதையும் நினைக்காம இருந்தால், யாருக்கும் எந்த மெஸேஜும் போகாது. எப்படி எந்த சிந்தனையும் இல்லாம இருக்குறது?' என்று யோசிக்கலானான்.
அவன் எப்படி மனதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அவனையும் மீறி ஏதாவது ஒரு விஷயம் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
'இது சரியா வராது, பேசாம இன்னிக்கி ஆபீஸ்ல விட்டுப் போன வேலையவாது செய்யலாம்' என்ற முடிவோடு லேப்டாப் பேகினை எடுத்தான்.
வாத்தியார் வீட்டுப் பிள்ளையாதலால், 'எக்காரணம் கொண்டும் தன் கடமைகளிலிருந்து பின்வாங்கக் கூடாது' என்ற ஞானம் அவன் புத்தியில் இளவயது முதலே விதைக்கப்பட்டிருந்தது.
ஆகவேதான், டீம் ஹெட் தன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டார் எனத் தெரிந்தும் தன் வேலைகளைச் செய்ய உட்கார்ந்தான் அதியன்.
அப்போதுதான் அவன் லேப்டாப் பேகிலிருந்த வயர்லெஸ் ஹெட்போன் அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்து ஓரமாய் வைத்தவன், கணினியைத் திறந்து அன்றைய தினம் முடித்திருக்க வேண்டிய வேலைகளைப் பார்த்தான்.
'அட நாதேரி நாயே, இந்த வேலைய முடிக்கச் சொல்லிட்டுதானடா நான் தீட்சுகூட கிளம்பிப் போனேன். அதைக்கூட செய்யாம யார் கூட பேஸ் புக்ல, பேக் ஐடி வெச்சுகிட்டு கடலை போடப் போனான்?..
ஒரு வேலையும் உருப்படியா செய்யிறது இல்லை. செம்மறி ஆட்டுக் கூட்டம் மாதிரி நானும் ஆபீஸ் போறேன்னு தினமும் பேக்கை எடுத்து மாட்டிட்டு வந்து என் கழுத்த அறுக்குறான்..' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு தீபக்கிடமிருந்து போன் வந்துவிட்டது.
'அடங்கொப்பத்தா, அதுக்குள்ள போட்டுக் குடுத்துட்டியா?" என்று யோசனையுடன் போனை எடுத்தான்.
எதிர்முனையில் தீபக், "டேய் லூசுப் பண்ணாட, உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா. ஐயோ பாவமே, நம்ம நண்பன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பொண்ண உஷார் பண்ணி இருக்கானே.
முதல் முதலா அவுட்டிங் போற அந்த பிசாசு, நல்லபடியா போயிட்டு வரணும்னு சாமிய வேண்டிக்கிட்டு, அது செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் நான் செஞ்சேன்.
அந்தப் பாவத்துக்குடா என்ன எப்படி எல்லாம் திட்டித் தீக்குற? நான் பேக் ஐடி வச்சிருந்தத நீ பார்த்தியாடா? இல்லை நீ தான் எனக்கு பேக் ஐடி கிரியேட் பண்ணி கொடுத்தியா?" என்று உணர்ச்சி வேகத்தில் பொங்கி எழ,
அதியன், "டேய் சத்தியமா நான் அப்படி நெனைக்கவே இல்லடா, இந்த வாட்ச் அதுவா டைப் பண்ணிடுச்சு மச்சான்" என்று நண்பனை அமைதிப்படுத்த முயன்றான்.
"பக்கத்து வீட்டு நாயி நம்ம வீட்டு வாசலுக்கு வந்து கக்கா போனா நாம நாயத் திட்டுவோமா? நாயோட ஓனர திட்டுவோமா?" என்று லாஜிக்கோடு கேள்வி கேட்டான்.
"நாயோட ஓனரத்தான்.."
"அப்ப மூடிட்டு வாங்கு.. ஒண்ணு ரெண்டு மெசேஜ் வந்திருந்தாக் கூட உன்னை மன்னிச்சு விட்டிருப்பேன்டா. சுமாரா இருபத்தஞ்சு மெஸேஜ் அடிச்சுத் தள்ளியிருக்கு உன் நாயி?
உன்னால ஆபீஸ்லதான் எனக்குத் தூக்கமில்ல, வீட்டுலயும் என்ன நிம்மதியா தூங்க விட மாட்டியாடா நீ? இன்னொரு தடவ எனக்கு மெசேஜ் வந்தது, என் சாவுக்கு நீதான் காரணம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு செத்து போயிடுவேன் பாத்துக்க" என்று கத்தியவன், அதியன் பதில் சொல்லும் முன்பாக போனைக் கட் செய்துவிட்டான்.
'அப்பாடா வச்சுட்டான்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், 'ஆனா அவன திட்டாம வேலை பார்க்க முடியாதே, இதிலிருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்?' என்று யோசித்தவன் கண்களில் அந்த ஹெட்போன் பட்டது.
செல்போன் மூலம் அதை கனெக்ட் செய்து தன் காதில் மாட்டிய அதியன், தனக்கு விருப்பமான பாடல்களை ஓட விட்டபடியே வேலை பார்க்க ஆரம்பித்தான். பாட்டில் அவன் மனம் லயித்துப் போனதாலும், வேலையில் கவனம் இருந்ததாலும், அவன் நினைவு எங்கேயும் செல்லவில்லை.
அதனால் அந்த வாட்சும் யாருக்கும் எந்த மேஸேஜும் அனுப்பவில்லை.
இடையில் கிரகலட்சுமி அதியனைச் சாப்பிட அழைக்கவும், "வேலை இருக்குமா, எனக்கு இங்க கொண்டு வந்து தந்திடுங்க" என்று சொல்லி வெளியில் செல்வதிலிருந்தும் எஸ்கேப் ஆகிவிட்டான்.
வெகு நேரம் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்து முடித்தவன், 'இதை வச்சு நாளைக்கு ஆபீஸ்லயும் பொழுத ஓட்டிரனும்' என்று தனக்குத் தானே தனித் திட்டம் தீட்டிக் கொண்டான்.
காலையில் கண் விழித்ததும் அவன் சிந்தையில் தோன்றியது தீட்சண்யா மட்டுமே..
அதியன், 'என் செல்லக் குட்டி எழுந்துருச்சா என்னன்னு தெரியலையே?' என்ற நினைப்புடன் கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.
அடுத்த நொடியே அவனுக்கு மெஸேஜ் வந்த சத்தம் கேட்க, எடுத்துப் பார்த்தான்.
'உன் செல்லக் குட்டி எழுந்துருச்சு.. குட் மார்னிங்டா அதி, குட் மார்னிங் செல்லக்குட்டி வாட்ச்' என்ற மெஸேஜை அனுப்பி இருந்தாள் அவனின் ஆருயிர் காதலி.
அதைப் பார்த்தவனுக்கு, 'இனம்புரியா இம்சை செய்யும் வாட்ச்சும் நானும் உனக்கு ஒன்றா?' என்று பொசசிவ்னஸ் தலை தூக்கிற்று.
'எனக்கு மட்டும் குட் மார்னிங் சொல்ல வேண்டியது தானே, எதுக்கு வாட்ச்க்கு சொல்றா?' என்று அவன் மைண்ட் வாய்ஸில் நினைத்திருந்த அத்தனையும் அவள் செல்போனுக்குச் சென்று விழுந்தது.
தன் காதலனின் செல்லக் கோபம் புரிந்த காரிகை, "அடேய், வாட்ச் கூட எல்லாம் போட்டி போடுவியா? உன்னோட லவ்வுக்கு அளவே இல்லைடா" என்று பதில் மெஸேஜ் அனுப்பினாள்.
'மறுபடியும் நான் நினைச்சது போயிடுச்சா? அடியேய் இப்ப நான் குளிக்கப் போறேன். போன தூரமா தூக்கிப்போட்டு போயிடு, இந்தப்பய அவன் பாட்டுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடப் போறான்' என்று கலாய்க்க, அடுத்த நொடியே அவள் ஆஃப்லனைக்குத் தாவினாள்.
'இனி எதுவும் நினைக்க கூடாது..' என்ற உறுதியான முடிவுடன் குளிக்கச் சென்றான் அதியன்.
குளித்து வந்ததுமே ஹெட் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டவன், 'இனிமே யார் பேசினாலும் எனக்குக் கேட்காது, நானும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல.
என் வாட்ச்சுக்கும் வேலை மெனக்கெட்ட வேலையா மெஸேஜ் அனுப்பாது, இனி எந்த அந்நிய சக்தியாலும் என்னை டிஸ்டர்ப் செய்ய முடியாது..' என்று தன்னைத் தானே பெருமை பீற்றிக் கொண்டான்.
போனில் தனக்குப் பிடித்த பாடலை போட்டுவிட்டு வெளியில் வந்தவனுக்கு, கிரகலட்சுமி டேபிள் மேல் தயாராக டிபன் ஐட்டங்களை அடுக்கி வைத்திருந்தார்.
எப்போதும் கலகலவென்று பேசிச் சிரிக்கும் பிள்ளை இன்று தன் போக்கில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிட, அவன் அம்மாவுக்குத்தான் மனது பாரமாகிப் போனது.
ரோட்டில் தன் முன்னால் பின்னால் யார் ஹாரன் அடிக்கிறார் என்று தெரியாமல் அவன் பாட்டுக்குப் பாட்டே கதி என்று பயணித்தான்.
அவனைச் சுற்றிப் பயணித்த சிலர், "சாவுகிராக்கி வீட்டுல சொல்லிட்டு வந்துட்டயா? உனக்கெல்லாம் எந்த கேனப்பயடா லைசென்ஸ் கொடுத்தா? அடுத்தவன் உயிர எடுக்கனே வருவீங்களாடா?" என்று கொஞ்சிட, அது ஓரளவுக்குப் புரிந்தாலும் அதியன் சிரிப்புடனே வண்டியை ஓட்டினான்.
ஆபீஸ் வந்த பின்னும் அதே போல் செயல் பட்டுக் கொண்டிருந்தான்.
'எவன் திட்டினால் என்ன? திட்டிட்டு உயிரோட வீடு போய் சேரட்டும். அவன் பேசுறதக் கேட்டு நான் கோபப்பட்டா, என் கூட இருக்கற பொண்டாட்டி அவங்கள போட்டு தள்ளிரும். கொலைகார பட்டம் வாங்குறதுக்கு பதிலா, லூசு மாதிரி சிரிச்சு பைத்தியக்காரப் பட்டம் வாங்குறது எவ்வளவோ பரவாயில்ல. எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்..' என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்தான் அதியன்.
அவனவன் தன் போக்கில் முடிவெடுத்து, அதை தன் இஷ்டப்படியே செயல்படுத்தி விட்டால் அதன் பிறகு கடவுளுக்கு என்ன மரியாதை?
பாட்டுக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்த அதியனுக்கு ஆப்பு அடிக்கும் படி, டீம்ஹெட் அனைவரையும் மீட்டிங் ரூம் வரச்சொல்ல, 'ப்ளானாவது மண்ணாவது!..' என்று நொந்து போனான் நம்மவன்.
'நானே ஒதுங்கிப் போனாலும் ஏன்டா ஏழரையக் கூப்பிட்டு கவட்டுக்குள்ள சொருகுறீங்க?' என்று திட்டிக் கொண்டே மீட்டிங் நடைபெற இருக்கும் அறையை நோக்கிச் சென்றான் அதியன்.
அமெரிக்க ராணுவப் படையிடமிருந்து கூட ஒருவன் தப்பி விடலாம், ஆனால் காதலியின் கண்களிலிருந்து அவ்வளவு சுலபத்தில் தப்ப இயலாது.
காலையிலிருந்து அவன் அங்க அசைவுகள் அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த தீட்சண்யா, "என்னடா டென்சனா இருக்கற? இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்த, அதுக்குள்ள என்ன வந்துச்சு என் செல்லத்துக்கு?" என்றாள்.
"இவ்வளவு நேரம் யார் கூடவும் பேசாம பாட்டு கேட்டுட்டே என் மைண்ட என்னோட கண்ரோல்ல வச்சிருந்தேன். இப்ப மீட்டிங்ன்ற பேர்ல மூன்றாம் உலகப்போர இங்க ஆரம்பிச்சு வைக்கப் போறானுங்க, அதான் பயமா இருக்கு" என்றான் அதியன்.
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீ வந்து அமைதியா உட்கார்ந்து இரு, யார் கூடவும் பேசாதே, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் பேசு, அவ்வளவுதான் தட்ஸ் ஆல்" என்றாள்.
"ஈசியா சொல்லிட்ட, இது எவ்வளவு பெரிய டாஸ்க் தெரியுமாடி?"
"நாமதான் யாரையும் பாப்போம்ல, வாடா" என்று விளையாட்டுக் காட்டிக்கொண்டே அவனை அந்த அறைக்கு அழைத்துப் போனாள்.
வந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு இடம் பிடித்து அமர, இவனும் கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்து கொண்டான்.
'எதையும் நினைக்கக் கூடாது, பேசாம கை ரேகையெல்லாம் கவுண்ட் பண்ண ஆரம்பிச்சிடலாம், பொழுது போயிடும்..' என்று தன் கை ரேகையை எண்ணிக் கொண்டிருந்தான்.
"ஹாய் ப்ரெண்ட்ஸ், இப்ப நாம செஞ்சுகிட்டு இருக்கிற ப்ராஜெக்ட் ரொம்ப நல்ல படியாக முடிய போகுது. அடுத்து நமக்கு புதுசா ஒரு பெரிய புராஜெக்ட் வருது, அதுக்கு நாம எல்லாரும் கண்டிப்பா ஹார்டு ஒர்க் பண்ண வேண்டியிருக்கும்" என்று ஆரம்பித்தார் டீம்ஹெட்.
'இப்பவே ஹார்டு ஒர்க் தானயா பண்ணிட்டு இருக்கோம்?' என்று அதி நினைக்க, அது அவருக்கே மெஸேஜாகப் போய் விழுந்தது.
அதை எடுத்துப் பார்த்தவர், அவனையும் ஒரு ஓரப் பார்வை பார்த்து விட்டு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
"ப்ராஜக்ட் ஆரம்பிச்ச கொஞ்ச நாளைக்கு மட்டும் நாம சனி ஞாயிறும் ஒர்க் பண்ணனும், அதே மாதிரி ஈவினிங் இந்த வேலையை முடுச்சுட்டு லேட்டா போங்க" என்றார்.
'ஏற்கனவே சனிகிழமை இங்கதான் கிடக்குறோம், தினமும் நைட்டு பதினோரு மணிக்கு கூர்காவுக்கு டாட்டா சொல்லிட்டுதான் வீட்டுக்குப் போறோம். இனி இங்கயே ஆளுக்கொரு குழி வெட்டி படுத்து தூங்கிட்டு, அப்படியே காலையில எழுந்து கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்துட வேண்டியது தான்' என்று அதி நினைக்க, அதுவும் மெஸேஜாக போய் அவர் போனில் விழுந்து விட்டது.
இம்முறை அவர் தன் பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டு அவனைப் பார்க்க, சிரிப்பும் அழுகையும் கலந்த முகத்துடன் அதியன், 'சாரி சார்..' என்று வாயசைத்தான்.
"உங்களுக்கு ஏதாவது பர்சனல் ப்ராப்ளம் இருந்தா முன்னாலயே என்கிட்ட சொல்லுங்க, உங்களுக்கு வேணுங்கிற வசதிய செஞ்சுத் தர ஏற்பாடு பண்றேன்.." என்றவர் இம்முறை அவன் பதில் வருவதற்கு முன்பே போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டார்.
'சுச்சூ போனாலே ஏன் இவ்ளோ நேரம் பாத்ரூம்ல இருக்கனு கேப்பீங்க, நீங்க எங்களுக்கு எக்ஸ்ட்ரா பெசிலிட்டி செஞ்சுத்தர போறீங்களா? யாராவது கேட்டா சத்தமா சிரிச்சிட போறாங்க சார்' என்று அவன் கட்டுப்பாட்டையும் மீறி மனம் பேசிவிட, அது அப்படியே அந்தப் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டது.
அதைப் படித்துப் பார்த்தவர், மற்ற பணியாளர்களின் முகத்தையும் உற்றுப் பார்த்தார். அதியன் பேசிக் கொண்டிருப்பது அங்கிருக்கும் அத்தனை பேரின் குரல் என்று அவருக்குப் புரிய, கொஞ்ச நேரம் யோசனையுடன் அவனையே பார்த்திருந்தார்.
என்ன நினைத்தாரோ, திடீரென்று தன் குரலை உத்தரவிடும் தொனியிலிருந்து நட்பாக மாற்றி, "இந்த பிராஜக்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல அபீஷியல் பார்ட்டி வச்சுக்கலாம்.
பெரிய பிராஜெக்ட்ட ஆறு மாசத்துல முடிச்சுட்டீங்கனா, எல்லாருக்கும் கோவா டூர் அரேஞ்ச் பண்ணித் தரச் சொல்லி கேக்குறேன். எப்பவும் வேலை வேலைன்னு ஓடுற மாதிரி இல்லாம, இனி நீங்களும் அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க" என்றதும்,
அத்தனை பேரும், "ஓ..." என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அவர் முடிவால் மகிழ்ச்சி கொண்ட அதியனும், மெல்லச் சிரித்து தன் நன்றியைத் தெரிவித்தான்.
மீட்டிங் முடிந்த அடுத்த நொடியே அவன் தன் காதில் ஹெட் போனை மாட்டியதைப் பார்த்த தீட்சண்யா, "எதுக்கு இது?" என்றாள்.
"இது இல்லைனா என் மனசு வேற எதையாவது நினைக்கும். இந்த வாட்ச் உடனே அவங்களுக்குப் போட்டுக் கொடுத்திடும், தேவையில்லாத மனஸ்தாபங்கள் வருது. அதான் இப்படி ஒரு ஐடியா..
இது என்னை விட்டு போகாதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம், இதோட போராடுறதுக்குப் பதிலா, இது கூடவே வாழப் பழகிக்கிறது தான புத்திசாலித்தனம்?" என்றான் அதி.
"அப்போ மீட்டிங்ல சொன்ன பார்ட்டி கூட?.." என்று தீட்சண்யா இழுக்க, 'ஆமாம்' என்று தலையாட்டினான் அதி.
"இது எத்தனை நாளைக்குடா வரும்?" என்றாள் வருத்தத்துடன்.
"இப்போதைக்கு இதை விட்டா வேற எந்த வழியும் இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை" என்று சொல்லிக் கொண்டே இயர் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டான்.
இருவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.. இரவு வரை வேலையே கதி என்று கிடந்த அதியன் கிளம்பும் போது, தீட்சண்யா இன்னும் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
திரும்பி தீபக் இடத்தைப் பார்த்தான், அது காலியாக இருந்தது..
'பொட்டப் புள்ளை மாங்கு மாங்குன்னு நைட் வரைக்கும் வேலை செய்யுது, இவன் பொழுது சாய்ஞ்சா வயசுக்கு வந்த புதுப் பொண்ணாட்டம் வீட்டுக்கு ஓடிடுறான். இந்த நாய வச்சுகிட்டு இந்த புராஜெக்ட்டே டண்டனக்கா டனக்குனக்கானு கிடக்கு. இந்த லட்சணத்துல இன்னொன்னு?!' என்று தன்னை மறந்து நினைத்து விட, அடுத்த கணமே அவன் போன் அடித்தது.
'மண்டைக்கி மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன், இந்த பெருச்சாளி அதுக்குள்ள போட்டு கொடுத்துருச்சா?' என்று புலம்பிக்கொண்டே போனை அட்டன் செய்தான்.
தீபக், "டேய் லூசுப் பயலே, உன்னோட இதே ரோதனையாப் போச்சு. உன் காதலிய புகழ்ந்து பேசறதோட நிறுத்தமாட்ட? சிவனேன்னு இருக்குற என்னை ஏன்டா வார்த்தைக்கு வார்த்தை வாரி விடுற?
ரெண்டு பேரும் ரொமான்ஸ்ன்ற பேர்ல மூஞ்ச மூஞ்ச பாத்துக்குற கருமத்தப் பத்தி நான் ஏதாவது சொல்லியிருக்கேனா? இல்ல உன் மூஞ்ச ரொம்ப நேரம் பாக்க பயந்துதான் வீட்டுக்கு ஓடுறேன்ற உண்மைய என்னிக்காவது உங்கிட்ட சொல்லி இருக்கேனா?" என்றான்.
அதியன், "சத்தியமா நான் எதுவுமே நினைக்கல, நீ போன வச்சுட்டு தூங்கு மச்சி.." என்று இம்முறையும் தட்டிக் கழிக்க முயன்றான்.
"அதெல்லாம் முடியாது, நான் சொல்ல வந்தத சொல்லியே தீருவேன்.."
"டேய் அடம்புடிக்காதடா, வேணும்னா உனக்குனு தினமும் திட்டுறதுக்கு ஒன் ஹவர் அப்பாயின்மெண்ட் போட்டுத் தர்றேன். இப்ப விட்டுடேன்?"
"நீ என்ன சமாதானம் சொன்னாலும் என் மனசு கேக்காது, உன்ன இப்பவே ப்ளாக் பண்ணப் போறேன். உலகத்துலயே முதல் தடவ ஆம்பளைக்கு ஆம்பள ப்ளாக் பண்ற சம்பவம் என் லைப்லதான் நடக்கும்.." என்று எதிரில் இருப்பவனைப் பேச விடாமல் புலம்பிக் கொண்டிருந்தான் தீபக்.
"சரி சரி, உன் ராமாயணத்த நான் நாளைக்கு பொறுமையா உட்கார்ந்து கேக்கிறேன். இப்ப எனக்கு டைம் ஆச்சு போனை வச்சுட்டு போய் தூங்குடா" என்று தீபக் பதில் சொல்லும் முன்பாக காலை கட் செய்தான்.
உலகத்தையே காப்பாற்றப் போராடும் போராளி போல கணினியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த தீட்சுவிடம்,"செல்லக்குட்டி வீட்டுக்கு கிளம்புடி, நாளைக்கு வந்து மீதி வேலைய பார்க்கலாம். வா, நான் உன்னை டிராப் பண்றேன்.." என்றான்.
ஏற்கனவே ஆபீஸை முக்கால் வாசிப்பேர் காலி செய்திருக்க, "ரெண்டே நிமிஷம்டா, பேக்கப் எடுத்துட்டு வந்திடுறேன்.." என்றவளுக்கு அவனும் தன்னாலான உதவிகளைச் செய்தான்.
காலையிலிருந்து ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்ததால், புதுவித வலியோடு இருந்த அவன் செவியினுக்கு அவள் பேசும் காதல் மொழி தேனைத் தடவினார் போல் சுகமாய் இருந்தது.
அவளை ஹாஸ்டல் வாசல் வரை கொண்டுபோய் விட்டவன், பிரிய மனமே இல்லாமல் விடை கொடுத்துவிட்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான். ஹெட் போனில் பாட்டு கேட்டபடி வீடு வந்து சேர்ந்தவனை மற்ற மூவரும் வினோதமாகப் பார்க்க, அவனோ வந்த வேகத்திலேயே குளிக்கச் சென்றுவிட்டான்.
குளித்து முடித்து சாவகாசமாய் சாய்ந்தமர்ந்த நேரம் கபிலன் வேகவேகமாக ஓடி வந்து, "அதி ஃபிளாஷ் நியூஸ் பார்த்தையா? வா வா" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.
"விடுடா, இப்பெல்லாம் புடலங்காய் ரெண்டு ரூபா கூடுச்சுனாக்கூட ஃபிளாஷ் நியூஸ்ல போடுறாங்க. நான் வரல" என்றான் அதி.
"இல்லடா நீ வந்து பாரேன்" என்று வலுக்கட்டாயமாக அவனைப் பிடித்து இழுத்துச் சென்றான் கபிலன்.
அங்கே அவனுடைய அப்பா அம்மா கூட, அவனுக்கான குலதெய்வ வேண்டுதலை மறந்து, சோகமும் பயமும் கலந்த முகத்துடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அப்படி என்ன மேட்டரு?" என்று இவனும் அதைப் பார்க்க, அதிர்ச்சியில் அவன் மூளையே உறைந்து போனது.
டிவியில் ஒரு பெண் தன் கணீர் குரலில்,
'முக்கியச் செய்திகள்: சென்னையில் உள்ள ஒரு சிபிஎஸ்சி பள்ளியில் தீவிரவாதிகள் புகுந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கின்றனர்..
மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் சென்னை மேயரின் குழந்தை, நடிகர் தேவாவின் குழந்தை, இரண்டு தொழிலதிபர்கள் குழந்தைகளும் அடக்கம்.
தீவிரவாதிகளிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தத் தயார் நிலையிலிருந்த போதும், இதுவரை அரசுக்கு அவர்கள் இயக்கத்தின் சார்பில் எந்த கோரிக்கையும் வரவில்லை. மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள் நம் தொலைக்காட்சியோடு..' என்று முடிந்தது..