கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளுந்தங்களி

mrida mohan

Well-known member
தேவையான பொருட்கள் :
ரெண்டு கைப்பிடி முழு உளுந்து, ஒரு கைப்பிடி பச்சரிசி,
வெல்லம் அவரவர் இனிப்புக்கு ஏற்ப
,
நல்லெண்ணெய் 25 ml (நான் கொஞ்சம் எண்ணெய் கம்மியா உபயோகிப்பேன், உங்களுக்கு தேவைன்னா நீங்க இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்)
உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை :

உளுந்தையும் பச்சரிசியையும் சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் விட்டு நைசாக அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும், வெல்லத்தை ஒன்னரை டம்பளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் (வெல்லத்தில் கல் இருக்கும் வாய்ப்பு இருக்கும், அதனால் வடிகட்டி எடுத்துக்கொள்வது நல்லது)

பின் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்து எடுத்த மாவையும், கரைத்து வைத்த தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும், அதோடு ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.

பின் அடுப்பு பற்றவைத்து வெல்லம் தண்ணீரில் கரைத்த மாவு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கை விடாமல் கிண்டவும், கொஞ்சம் கொஞ்சமாக மாவு வெந்து கெட்டி பதத்திற்கு வரும், இறக்கும் நேரம் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.😊


(சரண்யா ஹேமா அவங்க ரெசிபி, ஆனா நான் எனக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி செஞ்சேன், டேஸ்ட் டூ குட், நல்ல ஒரு ஸ்னாக்ஸ். அதோட உடம்புக்கும் ஆரோக்கியமானது, குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லாருமே சாப்பிடலாம்)
 
Top