கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உள்ளத்தை கொள்ளை கொண்டவன் அத்தியாயம்_1

காலை கதிரவன் தனது கதிர்களை பரப்பி விடியலை உணர்த்த....அய்யம்பாளையத்து கிராமத்தில் நெற்க்கதிர்களுக்கு களை எடுக்க அந்த கிராமத்து மக்கள் வயலுக்கு சென்றனர்... நெற்கதிர்கள் அழகாக தலை அசைக்கும் அந்த இளம்காலை பொழுதில்...... சங்கர் தனது மகள் இனியாவை தேடி ஊர் முழுவதும் சுற்றினார்

"ஏன் ஆத்தா... இந்த இனியா பிள்ளைய பாத்தியா??? காலைல எழுந்ததும் ஆள காணல"... என்று வயலில் களை எடுக்கும் ராஜாத்தி பாட்டியிடம் கேட்டார்

"அவ ஆமை மாதிரி ஒரு இடத்துல இருந்தா இங்கதான் இருக்கானு சொல்லிப்புடலாம்... உன்ற புள்ளைத்தான் தேனீ மாதிரி சுத்திட்டு இருக்கவளாச்சே அவளை எங்கன்னு சொல்ல... அது இருக்கட்டும் இவ்வளவு காலையில அந்த புள்ளைய எதுக்கு தேடுறவன்"...

"இன்னிக்குதான் ஆத்தா... அந்த புள்ளைய பள்ளிகூடம் சேர்க்கணும்.... அதத்தான் நேத்து நைட் சொன்னேன்... அதான் காலைல எழுந்தோன ஓடிவந்துடுச்சி" என்றார்...

"அதானே பார்த்தேன்.... அம்மா இருந்து வளர்த்துன பிள்ளையா இருந்தா, சொல் போச்சிக்கேக்கும் இதுதான் யார்பேச்சியும் கேக்காதப்புள்ள பிறகு எங்குட்டு போய் பள்ளிகூடம் சேர்ப்ப... அப்டியே சேத்துனாலும் வாத்தியார கல்லால அடிசிட்டு இவ வீடு வந்து சேர்ந்துருவா" என்றவர்.....

"இதுக்குதான் சங்கரு ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு ஊரே அம்மூட்டு தடவை சொன்னிச்சி, நீதான் கேக்கமாட்டேனு சொல்லிபுட்ட இந்நேரம் அவ இருந்தா இந்த பிள்ள இவ்வளவு ஆட்டம் ஆடுவாளா என்றார்
உனக்கு அந்த புள்ளைய குறை சொல்லலைனா தூக்கம்வராதே... உனக்கு இதுவே பொழப்பாபோச்சி ஆத்தா... என்றவர் இனியாவை தேடி போனார்...

அப்பா பாப்பா அங்க கண்ணக்கு தாத்தாகிட்ட இருக்கு நீங்க போய் கூட்டிகிட்டு ஸ்கூல் போங்க நான் ஸ்கூல் கிளம்பறேன் என்றான் இதயகனி....

இந்தவருடம் தான் ஆரம்பப்பள்ளியை முடித்துவிட்டு 6வது படிக்க அய்யம்பாளையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நல்லிபாளையத்திற்கு செல்கிறேன்...

அவன் போனதும் இனியாவை தேடி போன சங்கர்.... அவள் இவரை பார்த்ததும் ஓடி ஒழிந்துகொள்ள...இனிம்மா வா ஸ்கூல்க்கு டைம் ஆச்சில...

போப்பா நான் வரமாட்டேன் அங்கலாம் போகமாட்டேன் அங்க உன்னோட இனியை அடிப்பாங்க

அடிக்கமாட்டாங்கடா செல்லம் அப்பா சொல்றேன்ல.... அடிச்சா நீ அப்பாகிட்ட சொல்லு நான் வந்து கேக்கறேன்

நீ என்னனு கேப்ப... அவங்கதான் என்னை அடிச்சிருவாங்கலே அப்புறம் எதுக்கு நீ வந்து கேக்கணும்

பாப்பா தப்பு பண்ணதானே டீச்சர் அடிப்பாங்க நம்ப இனிதான் நல்லா புள்ளைல அப்புறம் எதுக்கு அடிக்கறாவ...

டேய் சங்கரு ஊருக்கே பஞ்சாயத்து சொல்றவன்தான் பேரு சின்ன பிள்ளைகிட்ட கெஞ்சிட்டுருக்கான் போடா பிள்ளைய நாலு தட்டுதட்டி இழுத்ததுட்டு போ என்றார் சங்கரின் தந்தை கனகசாமி...

கணக்கு நீ என்ன ஏமாத்திட இங்க வந்தா அப்பாகிட்ட பேசி என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டேனு சொல்லிப்புட்டு இப்போ மாத்தி பேசற தாத்து..

அம்முகுட்டி படிச்சதானே நாளைக்கு டாக்டர் ஆகி இந்தகிழவனுக்கு வைத்தியம் பாக்கமுடியும் இல்லனா நானும் உன்ர அம்மா மாதிரி செத்துபோய்டுவேன்ல... உன்னோட கணக்கு போனா பரவாலையா என்றார்

அவள் அழுகையுடனே... தாத்தா இப்டிலாம் பேசாத நான் போறேன் என்றவள் சங்கருடன் போனாள்..

பாப்புக்கு அப்பா மேல கோவமா???

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்.... சாப்பாட்டை ஊட்டி விட்டு அவளுக்கு தலை சீவிவிட அது அவர்க்கு நல்லாக வராமல் போனதால் கோணல் மாணலாக ஒரு குதிரை வால் சடையை போட்டுவிட்டு புதுசாக வாங்கிவைத்த ஸ்கூல் பேக், சிலேட் எல்லாம் எடுத்துகொடுத்தவர்... வா தங்கம் போலாம் என்றார்

அதுவரை அமைதியாக இருந்தவள்... மறுபடியும் அழுக ஆரம்பித்துவிட்டாள்

ரொம்ப செல்லம் குடுத்தால் பிள்ளை பள்ளிகூடம் பக்கமே போகாது என்று நினைத்தவர்... அவள் அழுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

ஒரு கடையில் கை நிறைய மிட்டாய் வாங்கி அதை இனியாவிடம் குடுத்து .. பாப்பு... இதை உன்னோட படிக்கறவங்களுக்கு குடும்மா...
அப்பா போய்ட்டு வரேன்.... நானே சாயந்தரம் வந்து கூடிடு போறேன் பாப்பா சமத்துல அழுகாம போகணும் என்றார்

அவள் அழுகையுடன் அவர்கையை இறுக பிடித்துக்கொண்டு வேகமா அழுக ஆரம்பித்துவிட்டாள்

அப்பா, அப்பா போகதப்பா நானும் உன்னோடவே வந்தறேன்...அப்பா அப்பா.... அப்பா என்று அழுக

அவள் கையை மெதுவாக பிரித்துவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்...

அவள் ஓடி போய் அவர்கையை பிடிக்க. அவர் மறுபடியும்... கொண்டுவந்து உள்ள விட்டுவிட்டு போனதால் அவளால் அதற்கு மேல் சங்கரின் கையை பிடிக்கமுடியவில்லை..

ஆனால் அப்பா அப்பா என்று தேம்பி தேம்பி அழுதவள்..... அவள் பக்கதில் ஒருவன் வந்து உக்காரவும் அவனை பார்த்துவிட்டு மறுபடியும் அப்பா அப்பா என்று அழுக ஆரம்பித்துவிட்டாள்...

பாப்பா எதுக்கு அழுகரிங்க...

எனக்கு அப்பா வேணும்...

சாயந்தரம் அப்பா வந்து கூடிடு போவாங்கள இப்போ அழாம உன்னோட கிளாஸ்க்கு போ...

எனக்கு அப்பாதான் வேணும்....

சரிடா குட்டி இந்த மிட்டாய் வாங்கோ அழக்கூடாது...

என்கிட்ட இருக்கு.... ஆமா நீ யாரு

நான் அர்ஜுன்...

நீ என்ன படிக்கற

4த்

அப்டினா

உனக்கு ஒன்னு ரெண்டு தெரியுமா

ஓ தெரியுமே

எங்க சொல்லு

ஒன்னு ரெண்டு மூணு நாலு

ம்ம்ம் நான் நாலாவதுதான் படிக்கிறேன்...

அப்போ நீ என்னவிட பெரியவனா

ஆமா பாப்பா

எதுக்கு என்ன பாப்பா சொல்ற எங்க அப்பா அண்ணாதான் என்னை அப்படி கூப்பிடனும் நீ கூப்பிடாத...

அப்போ உன்னோட பேர் என்ன

இனியா

ஓ ஸ்வீட்...

எனது

இல்லை நல்லா இருக்கு உன்னோட பேர்... ஆமா ஏன் தலையை இப்படி சீவிருக்க..உங்க அம்மாவுக்கு தலை சீவ தெரியாதா

எனக்குதான் அம்மாவே இல்லையே அப்புறம் எப்படி அவங்க சீவுவாங்க...

ஓ உனக்கு அம்மா இல்லையா....

உனக்கு இருக்காங்களா

ம்ம்ம் இருக்காங்க... சரி இனி.... நீ கிளாஸ்க்கு போ நானும் போறேன் என்றான்...

அவள் மறுபடியும் அழுக ஆரம்பிக்க....அவனும் அவளுடன் சென்று கிளாஸில் விட்டுவிட்டு வந்தான்...

ஆனால் இனியாவோ கிளாஸே அதிரும்படி அழுதாள்..

அவளிடம் வந்த ஒருவன் ஹோய் எதுக்கு அழற கண்ணை தொடை என்று அதட்டவும்

அவன் பேசியதில் பயந்தவள் அமைதியாக இருந்தாள்....

உன்னோட பேர் என்ன... இங்க இருக்கவங்களும் உன்னைமாதிரி படிக்கதானே வந்துருக்காங்க யாரது அழறாங்களா... நீ மட்டும் என்ன.... கம்னு இருக்கனும் இல்லை கண்ண நோண்டிடுவேன் என்று அவள் கண்ணருகே இருவிரலை மடக்கி நோன்டுவதுபோல் கொண்டு போனான்....

அதில் பயந்தவள் வாயில் கையைவைத்து மூடிக்கொண்டாள்.... அப்போது டீச்சர் வரவும் அவன் பசங்களோடு போய் கீழே உக்கார்ந்தான்...

அவளை பார்த்துக்கொண்டே இருந்தவன்.... அவள் அசந்த நேரம் அவளை பார்த்து கண் அடிதான்....
 
Last edited by a moderator:

Latha S

Administrator
Staff member
ஹாய் மா,

வாழ்த்துகள்... நல்ல ஆரம்பம்... ப்ளீஸ் தயவுசெய்து உங்கள் கதையின் ஃபான்ட் சைஸ் பெரிதாக போடவும்.... இம்முறை நான் மாற்றிவிட்டேன்... 18 அல்லது 22
 
Top