கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 1

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 1

ஆன்ட்டி ஹீரோ/ ஹீரோயின்- சிறிய விளக்கம்

ஆன்ட்டி ஹீரோ மற்றும் ஆன்ட்டி ஹீரோயின் பற்றி இன்றைய எழுத்தாளர்களின் மத்தியில் ஒரு தவறான புரிதலே நிலவி வருகிறது.

ஆன்ட்டி ஹீரோ என்பவன் பெண்களைத் துன்புறுத்துபவனாகவும், ஹீரோயினைக் கடத்தியோ இல்லை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டோ, அளவில்லாத வன்முறைகளை அவளுக்கு இழைப்பவனாகவோ சித்தரிக்கப் படுகிறான். அதை ரசிப்பதற்கென்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது. அப்படி எழுதப்படுகிற கதைகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது சரியான அணுகுமுறை தானா என்று நாம் அலசலாம்.

ஆன்ட்டி ஹீரோ அதாவது எதிர்மறை நாயகன் என்பதன் சரியான பொருளை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

சாதாரணமாக நாயகன் என்பவன் மிகவும் நல்லவன், வல்லவன், தனியொருவனாக உலகையே எதிர்க்கும் அளவு துணிவும், வல்லமையும், திறமையும் கொண்டவன். நினைத்ததை நடத்தியே முடிப்பவன், எந்தத் தவறுமே செய்யாதவன், குற்றம், குறையே சொல்ல முடியாதபடி தூய்மையான பண்புகள் உடையவன் என்ற இலக்கணம் வகுக்கப் பட்டது. எடுத்துக்காட்டாக மக்கள் திலகம் எம். ஜி.ஆர் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் அத்தகைய நாயகனாக அவரைக் காட்டுவதற்காகவே வடிவமைக்கப் பட்டவை. அப்படி நடித்து நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் அவர். அரசியல் செல்வாக்கும் பெற்று முதலமைச்சராகவும் ஆட்சி செய்தார். இன்று வரை தமிழக வரலாற்றின் ஒரு சிறந்த பொன் மனச் செம்மலாகவே நமது நினைவுகளில் நிறைந்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆன்ட்டி ஹீரோ பாத்திரங்களாக எடுத்துக் கொண்டு தனது நடிப்புத் திறனைக் காண்பித்தார்.

ஆன்ட்டி ஹீரோவைப் பற்றித் தொடர்ந்து அலசுவோம்.

அத்தியாயம் 1

மஞ்சள் நிற விளக்குகள் மரங்கள் மேல் வெளிச்சத்தை விசிறியடிக்க, 'இது ராத்திரி.. என் டைம் முடிஞ்சிடுச்சி' என்று உயர்ந்த மரங்கள் இலைகளைப் போர்த்தி அமைதியாய் நின்றன. மரங்களுக்கு நடுவே வெள்ளை நிற கட்டிடமாக கம்பீரமாக நின்றது, அந்த
ஐந்து நட்சத்திர ஹோட்டல்.. வேலட் பார்க்கிங்கிற்கு சாவியை வாங்கும் டிரைவர், கதவைத் திறந்து விடும் பெண், பணிவோடு விசாரிக்கும் ரிசப்ஷன் பெண் என உங்களை ராஜாவைப் போல உணர வைத்தே ஆக வேண்டும் என்று அங்கிருக்கும் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.


தலையசைத்து அவர்களின் மரியாதையை ஏற்றபடி, லிஃப்டிற்குள் சென்று இரண்டாவது மாடிக்கான பட்டனை அழுத்தி, காத்திருந்து, கதவு திறந்தால், கீழே இருந்த அமைதியின் அழுத்தத்திற்கு நேர்மாறாக, இங்கே ஆட்டம் பாட்டம் என்று அந்த ஹாலே திண்டாடிக் கொண்டிருந்தது. ஃபால்ஸ் ரூஃபில் ஓர் அடிக்கு ஒன்றாக வைத்திருந்த எல் இ டி விளக்குகள் வெளிச்சத்தை வாரி வழங்க, கண்கள் கூசின. சுற்றி இருந்த தூண்களில் வண்ண வண்ண ஆர்க்கிட் பூக்கள் அழகாய்ப் பின்னிக் கிடந்தன.


தங்கநிறத் துணியால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள், வட்ட மேஜைகளைச் சுற்றியிருந்தன. 'அம்மாடியோவ்!' என்று மூளையின் ஒவ்வொரு செல்லும் வாயைத் திறந்து பார்த்தாலும், இது எல்லாம் தாங்கள் பிறந்தது முதலே பார்த்து பழக்கப்பட்டது என்பது போல எந்த ஆச்சர்யமும் கண்களில் காட்டாமல், விக்னேஷும் பிரசன்னாவும் உள்ளே சென்றார்கள். அங்கிருந்த இருக்கை ஒன்றில் அவர்கள் அமர்ந்த, அடுத்த நொடி, கையில் தட்டோடு வந்த சிப்பந்தியிடம், 'கூல் டிரிங்க்ஸ்' என்று விசாரித்து ஆளுக்கு ஒரு கண்ணாடிக் குவளையைக் கையில் ஏந்திக் கொண்டார்கள்.. கண்கள்‌ மட்டும் நான்கு பக்கமும் சுழன்றன.

ஐம்பது வயது கடப்பதை ஒருவர் கொண்டாடும் பிறந்தநாள் பார்ட்டி இது.. இங்கேயிருக்கும் பலருக்கும் எதற்கு இந்த பார்ட்டி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தொழிலைப் பற்றி, பதவியைப் பற்றி, பணத்தைப் பற்றி, பெண்களைப் பற்றி பேசிக்கொள்ள ஓர் இடம். ஜாதி மத வேற்றுமைகள் கடந்து அவர்களை இணைத்த ஒரே சங்கிலி பணம்தான். இங்கிருப்பவர்கள் வருமானத்திலிருந்து வரி கட்டுபவர்கள் அல்ல; வரிப்பணத்தை வருமானமாக்கிக் கொள்ளும் வகையைச் சேர்ந்தவர்கள்.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் கல்யாண மாப்பிள்ளையின்‌ அக்கா கணவன்‌ போல அந்த கூட்டத்திலே முறுக்கியபடி நின்று கொண்டிருந்த மாறனை தூரத்தில் இருந்தே பார்த்தான் விக்னேஷ். கை விரல்கள் பத்தில் எட்டு, மோதிர விரல்களாய் உருமாறியிருக்க, சட்டைப்பையின் வழியே கட்சித் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.


விக்னேஷ் மாறனை கவனிக்கிறான் என்பதைப் புரிந்து, "இந்த குட்டித் தலை யாரைக் கை நீட்டுறாரோ அவங்களுக்குத்தான் அந்த கான்ட்ராக்ட்.. அந்த மோதிர விரலை உன்னைப் பாத்து நீள வைக்கிறது நம்மளோட டார்கெட்" காதினருகில் வந்து மெல்லிய குரலில் பிரசன்னா சொன்னான்.


"பெரிய தலை எங்கே காட்ட சொல்லுதோ அந்த பக்கம் விரல் நீட்ட வேண்டியது தானே குட்டித் தலையோட வேலை?" தன் ஜூஸை சிப்பிய படி விக்னேஷ் கேட்டான்.

"எல்லா இடத்திலும் அப்படிதான். ஆனா நம்ம ஏரியால இந்தக் குட்டி தான் எல்லாம்.." இந்த வாக்கியத்திற்குப்பின் நிச்சயம் ஒரு வெளியே சொல்ல முடியாத காரணம் இருக்கும்.

கண்களைச் சுருக்கி யோசித்த விக்னேஷ் ஒரு முடிவு எடுத்தவனாய் தோள்களைக் குலுக்கினான், "சரி..இந்த ப்ராஜெக்ட் கிடைச்சா லாபம் 2சி. அதில் இருபது பெர்சன்ட்னா, 40எல். அதில் இவனுக்கு என்ன வேணுமோ அதைக் கொடு.."

"மச்சி.. இந்த சிம்பிள் கால்குலேஷன் போடுறத்துக்கு ஏன் உன்னைக் கூப்பிடுறேன்?"

"ஏன்டா? முப்பது பெர்சன்ட் கேட்குறானா?"

"ம்ஹூம்.."

மாறனிடமிருந்து கண்களைப் பிரித்து பிரசன்னாவைப் பார்த்த விக்னேஷ், "டேய்.. அவனுக்கு என்ன தான் வேணுமாம். வைவால கேட்குறதுக்கு சொல்ற மாதிரி சுத்தி சுத்தி பதில் சொல்ற?" என்று கேட்டான்.

"யாரு நானா? ஹல்லோ.. வைவால சார் கேட்குறதுக்கு டான் டான்னு பதில் சொல்வேன்டா! ஐம் த பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் ஆஃப் அவர் பேட்ச்!" பிரசன்னாவிற்கு பொங்கியது.

சிர்த்தபடி நண்பனைப் பார்த்தவன், அவன் தோள்களைச் சுற்றி தன் இடக்கையைப்‌ போட்டான், "ம்ப்ச்.. அதான் மச்சி உன்னைக் கூட வச்சிருக்கேன். இப்போ உன் மோதிர ஸ்டேண்டுக்கு என்ன வேணுமாம்? ரொம்ப இழுக்காம அதைச் சொல்லு"

"மோதிரம் போட விரல் வேணுமாம்"

"எட்டு விரல்லதானே போட்டிருக்கான்.. இன்னும் ரெண்டு விரல் பாக்கி இருக்கே!"

"ஹலோ.. மோதிரம் போட பொண்ணு விரல் வேணுமாம். அதாவது சார் ஒரு பொண்ணை லவ் பண்றார். அந்தப் பொண்ணு இவரைக் கண்டுக்கவே மாட்டேங்குது.. அந்த பொண்ணு சாப்ட்வேர் கம்பெனி நடத்துது. இந்த ப்ராஜெக்ட்டை வச்சி அந்தப் பொண்ணைப் பிடிக்க ஐயா திட்டம் போடுறார்"

"ஸ்ஸ்.." தலையில் கை வைத்து அழுத்திக் கொண்ட விக்னேஷைப் பார்த்த பிரசன்னா, "சரி‌விடு.. இந்த ப்ராஜெக்ட் விட்டா இன்னொன்னு.. பாக்கலாம்" என்று சமாதானப்படுத்த முயன்றான்.

"என்ன விளையாடுறியா? எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட். இதுவரைக்கும் ப்ரைவேட் கம்பெனிஸ்க்குதான் நாம் ப்ரோக்ராம்ஸ் கிரியேட் பண்ணித் வந்திருக்கோம். முதல் தடவையா கவர்மென்ட்டோட வேலைக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. முதல்ல வர லாபமே அதிகம். அப்புறமும் மாதாமாதம் ஃபிக்ஸ்ட் வருமானம் வர மாதிரியான ப்ரோகிராம். நமக்கு தான் அது. அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லு".

"இதுல நம்ம என்னடா பண்ண முடியும்? பணம்னா பேரம் பேசலாம். இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் உனக்கு கிடைக்க நான்தான் காரணம்னு அந்த பொண்ணு கிட்ட சீன் போடனும்.. அதுல அந்த பொண்ணு இம்ப்ரஸ் ஆகனும்! இதான் மாறனோட ப்ளான்.. இது லவ் விஷயம் விக்கி.. உனக்குப் புரியாது!! "

சின்ன பிள்ளைக்கு சொல்வது போல் கையை ஆட்டி ஆட்டி விளக்கிய பிரசன்னாவை முறைத்தவன், "பொல்லாத லவ். இந்த ப்ராஜெக்ட் காக இவன் லவ்வை ஒத்துகிட்டா அவளோடது என்ன லவ்? அப்படி ப்ராஜெக்ட்க்காக அவ வந்தாலும் ஓகேன்னு நினைக்கிறதுக்கு இவனோடது என்ன லவ்?"

"இப்படிலாம் யோசிக்கிறதுனாலதான் நீ இன்னும் சிங்கிளா இருக்க.. ரொம்ப திங்க் பண்ணினா, லவ் செட் ஆகாது விக்கி. அவனோடது ரொம்ப டீப் லவ்வாம். அவளை இம்ப்ரஸ் பண்ணரொம்ப நாளாக ட்ரை பண்ணிகிட்டு இருக்கானாம். அந்தப் பொண்ணு கையிலேயே சிக்கலை.. அவளோட கடைக்கண் பார்வைக்காக, இவன் என்ன வேணும்னாலும் பண்ணுவானாம். இதுதான் நம்ம ஒற்றன் தந்த தகவல்"

முகவாயைத் தடவியபடி யோசித்தவன் , "சரி.. இரு.. நான் போய் அவன்கிட்ட பேசிப் பாக்குறேன்" என்று பிரசன்னாவின் முதுகில் தட்டியபடி எழுந்து முன்னே சென்றான்.


மாறனோடு பேச ஆரம்பித்தான். ஓரிரு நிமிடங்களில் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். முதலில் மாறனின் முகத்தில் ஒரு விலகல் இருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக அவன் கண்களில் சுவாரஸ்யம் குட்டி போட்டு வளர ஆரம்பித்தது.. அந்த வட்ட மேஜையில் இருந்தவர்களுக்கு இவர்கள் பேசுவது போர் அடித்திருக்கக் கூடும். மெதுவாகக் கழண்டு கொண்டார்கள்.


இருக்கையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னா மெலிதாகச் சிரித்தான். விக்னேஷின் பேச்சுத் திறமை பற்றி அவனுக்குத் தெரியும். உங்களோடு ஒரு மணி நேரம் பேசினால், 'ச்சச்ச.. உனக்கு இல்லாததா பா!' என்று உங்கள் சொத்தில் கொஞ்சம் கூட எழுதி வைத்துவிடுவீர்கள்..

அந்தப் பேச்சில் மயங்கித் தானே, காலேஜின் டாப் மூளையான பிரசன்னாவைக் கொத்திக் கொள்ளவென வரிசை கட்டி வந்த அமெரிக்கா,ஜெர்மனி, இங்கிலாந்து கம்பெனிகளை விடுத்து விக்னேஷோடு சேர்ந்து 'ஸ்டார்ட் அப்' கம்பெனி ஆரம்பித்திருக்கிறான் நம் பிரசன்னா..


அடுத்த அரைமணி நேரத்திற்கு பிரசன்னா தான் உட்கார்ந்திருந்த சேரிலேயே சாய்ந்தபடி கண்களைக் கொஞ்சமாக பேசிக்கொண்டிருக்கும் மாறன், விக்னேஷிடமும், அதிகமாக கையிலிருக்கும் ஃபோனில் விளையாடிக்கொண்டிருந்த கேன்டிக்ரஷ் விளையாட்டிலும் வைத்திருந்தான்.

அதுவரை கவனமாக விக்னேஷின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாறனின் முகம் திடீரென்று மின்னலடித்தது போல பளிச்சிட்டது. ஏதோ கடவுளே வந்து வரம் தந்தது போல விக்னேஷைப் பரவசத்தோடு பார்த்தான். 'இவன் இப்படி கூஸ்பம்ப் ஆகுற அளவுக்கு அப்படி என்ன சொல்றான் இந்த விக்னேசு!" என்று‌ வியந்தபடி பிரசன்னா பார்த்திருக்க, விக்னேஷ் மாறனின் கைகளை மீண்டும் பற்றிக் குலுக்கிவிட்டு இவனை நோக்கி வந்தான்.

"என்னடா சொன்ன?"

"நம்க்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்க 60% வாய்ப்பு இருக்கு.."

"பூஜ்ஜியத்துல இருந்தது எப்படி அறுபதாச்சி?"

"அந்தப் பொண்ணை குட்டித் தலையை லவ் பண்ண வைக்கிறேன்னு சொன்னேன்.."

"அதுக்கு நான்‌ஐடியா தரனுமா? ஐடியா க்ளிக் ஆகி, அந்த பொண்ணு ஓகே சொன்னா, நமக்கு ப்ராஜெக்டா? உன் ஃப்ரெண்டா இருக்கிறதுக்கு உன்‌ லவ்வுக்கு ஐடியா தரலாம். இப்படி ப்ராஜெக்ட் பிடிக்கிறதுக்காக யாரோ ஒருத்தன் லவ்வுக்கெல்லாம் ஐடியா சொல்லமுடியாது விக்கி"

"ஹாஹா.. உன்கிட்ட ஐடியா கேக்கவே இல்லையே.. நானே குடுத்துட்டேன்"

கண்களை அகல விரித்து அதிகப்படியான ஆச்சர்யத்தோடு நண்பனை நோக்கி, "ஹாஹா! காமெடி பண்ணாதேடா! உனக்கு லவ்னாலே அலர்ஜி! நீ லவ் ஐடியா சொல்லி, அது ஜெயிக்குமா? ஒன்று பண்ணலாம்.. ஐடியா சொதப்பிடுச்சின்னா, கம்பெனி பொறுப்பாகாதுனு ஒரு பொறுப்புத் துறப்பையும் நம்ம டீல்ல சேத்துக்கலாமா.."

"சொன்னேனே.. சக்ஸஸ் ரேட் அறுபது சதவிகிதம். மீதி நாற்பது அந்த பொண்ணைப் பார்த்துட்டு சொல்லிடுவேன்.."

"ம்.. அப்படி என்ன ஐடியா கொடுத்திருக்க?"


"ப்ராஜெக்ட் எனக்குக் கொடுத்தால் அந்த பொண்ணு உன் லவ்க்கு ஓகே சொல்லுவான்னு சொல்லியிருக்கேன்"

"ஏன்டா? அவ உன்னை எதுவும் லவ்வு கிவ்வு பண்றாளா?

"ச்சீ.."

"பின்னே.. உனக்கு ப்ராஜெக்ட் குடுக்கிறதால அந்தப் பொண்ணுக்கு என்ன லாபம்? அதுக்காக ஏன் அவ இவனை லவ் பண்ணப்போறா? இந்த ஐடியாவைக் கேட்டா குட்டித் தலையோட முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிஞ்சது?"

"சத்தமா‌ப் பேசாதே.." சுற்றிலும் பார்த்தவன், "சரி வா.. காரில் போய் பேசலாம்" என்று எழுந்தான்.

வேலட்டிடமிருந்து காரை வாங்கி இருவரும் அமர்ந்து, விக்னேஷ் கைகளில் கார் மெதுவாக நகர்ந்து, ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறும் வரை அமைதியாக இருந்த பிரசன்னாவால் அதற்குமேல் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. "சொல்லுடா.." என்று நண்பனின் முகம் பார்த்தான்.

கண்களை சாலையின் மீதே பதித்தவாறு சொன்னான், "அந்தப் பொண்ணைக் கடத்துறோம். ப்ராஜெக்ட் எனக்கு கொடுத்தாத் தான் பொண்ணை ரிலீஸ் பண்ணுவோம்னு சொல்றோம். குட்டித் தலை அந்தப் பொண்ணு முன்னாடி, அவளை காப்பாத்துறதுக்காக ப்ராஜெக்ட்டை நமக்கு சைன் பண்ணிக் கொடுப்பான். இம்ப்ரெஸ் ஆகி அந்தப் பொண்ணு தலையை லவ் பண்ணிடும்"

"பண்ணுமா?"

"பண்ணாதா? 40எல் கமிசன்‌ வர்ற ப்ராஜெக்ட்டை அவளுக்காக எந்த லாபமும் இவ்லாமல் எழுதிக் கொடுக்கிறானேன்னு ஒரு..‌ ஒரு ஃபீல் வராது?"

"இந்த ஐடியாக்கு குட்டித் தலை ஓகே சொல்லிடுச்சா?"

மேலும் கீழும் தலையை ஆட்டி ஆமென்று விக்னேஷ் சொன்னான்.

"யார் கடத்துவா? கடத்துறதுக்கு ஆள் பிடிக்கப் போறியா?" பிரசன்னா தொடர்ந்து கேட்டான்.

"அவனுக்கு அரசியல் பகுதி நேர வேலை தான்.. முழுநேர வேலையே ரவுடித் தொழில். கடத்துறதுக்கு நாம் ஏன் இன்னொரு ஆள் கிட்டே போகணும். நல்ல பசங்களாக் கொடுன்னு மாறன்கிட்டவே கேக்கலாம்.. "

"அது சரி. அடுத்த வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையேன்னானாம்.. கம்பனி ஆரம்பிச்சு எப்படியாவது ஜெயிக்கனும்னு சொன்ன.. பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சோறு தண்ணி இல்லாம வேலை பார்த்த.. அது போதாதுன்னு லஞ்சம், கமிஷன், தண்ணி பார்ட்டின்னு என்னென்னமோ பண்ணின.. இப்போ என்னடான்னா கடத்தல்னு அசால்ட்டா சொல்ற!. எங்க போய்‌ நிற்கப் போறோம்னு தெரியல!"

"ம்ப்ச்.. வில்லனா இருக்கிறது இவ்வளோ ஈசியா இருக்கும்போது நாம் ஏன் கஷ்டப்பட்டு ஹீரோவா இருக்கணும் பிரசன்னா?"

என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்த பிரசன்னாவின் தோளில் கை போட்டவன், "சியர் அப்..‌ நம்ம குட்டித் தலை மாறன், ரொம்ப நல்ல பையன். அவன் வாழ்க்கைல விளக்கேத்தி வச்ச புண்ணியம் கிடைக்கப்போகுதுன்னு சந்தோசப்படுவோம்.. மற்றது நடக்கும்போது நடக்கும்.."

சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாற, விதி, "ரைட்.. ஜூட்!" என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தது.

பைரவி தொடர்வாள்.
 

Kothaisuresh

Well-known member
அய்யா கேனத்தனமா ஐடியா குடுக்கலாம. இது சக்ஸஸ் ஆகும்?
 

Sspriya

Well-known member
குட்டி தல... மோதிர stand... 😂😂நல்லா இருக்கு பட்ட பெயர்... அப்டினா விக்கி தான் அந்த uncle hero வா 😜😜😜🙈
 
ஆரம்பமே அசத்தல்!!!.. குட்டி தல ரொம்ப டெரர்னு பார்த்தா இப்படி கவுந்துட்டாரே!!!.. என்ன பன்னி எப்படி பிராஜக்டை வாங்குறாங்கனு பார்க்கலாம்!!!.. சூப்பர் எபி!!!
 
Top