எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 19
"மாறனை பிடித்து வைத்திருக்கிறேன்" என்று நிலா சொன்னதும் மூக்கில் விரல் வைக்காத குறையாக வியந்தாள் வெண்பா.
'மாறனை ஒருவர் பிடித்து வைக்க முடியுமா?
ஆட்சியும் பலமும் இருக்கும் ஒருவனாலேயே இன்னும் அவனை எட்டிப் பிடிக்க முடியாத போது, தொழிலதிபரான ஒரு பெண்ணால் எப்படி முடியும்? இதில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது' என்பதை உணர்ந்து கொண்ட வெண்பா உடனே உரியவருக்கு தகவல் தெரிவிக்க முனைந்தாள்.
"என்ன வெண்பா சொல்ற நிலா? புத்திசாலின்னு நினைச்சா இப்படி அவன் வலையில் போய் சிக்கி இருக்கிறாளே" என வேதனைப்பட்டார் எதிர்க்கட்சியின் பெரிய கையான தமிழரசன்.
"இவ அவன் வலையில சிக்கி இருக்காளா இல்ல அவன் தான் இவள் வலையில சிக்கியிருக்கானா என்று தெரியல, நிலா மாறனை அறையற சத்தம் போன்ல எதிரொலித்தது. அய்யாசாமி என்ன செய்வார்னு யூகிக்கவே முடியாது. நம்ம குழந்தையை இத்தனை காலம் பத்திரமா பாத்துகிட்ட நிலாவ பாதுகாக்க வேண்டியது உங்களோட பொறுப்பு தான்" என்று தழுதழுத்த குரலில் கூறினாள் வெண்பா.
"பிரபா விஷயத்தில் தான், ஒரு தாயாக நீ தைரியம் இல்லாமல் உடைஞ்சு போற.. ஆனா நிலா விஷயத்துல நீ ஒரு ஐபிஎஸ் ஆபீஸரா யோசிக்கணும் வெண்பா. இப்படி உடைஞ்சு போக கூடாது. தைரியமா இரு. இந்த விஷயத்தை வெளியில் இருந்து பார்த்து சரியான தெளிவான திட்டம் போட்டு வேலை பார்க்கணும் பேபிம்மா" என்றவனது குரல் பெரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்தது.
தனது மேலதிகாரியை உடனே பார்க்க விரைந்தாள் வெண்பா. "அங்கிள் இத்தனை காலம் டிபார்ட்மெண்ட்ல எனக்கு எவ்வளவோ உதவியா உறுதுணையாக இருந்திருக்கீங்க. இப்ப என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில ஒரு உதவி கேட்டு வந்து இருக்கேன். இதை மறக்காமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று நின்றவளை ஆதரத்துடன் பார்த்தார் ஐ.ஜி
"வெண்பா சின்ன வயசுல இருந்து உன்ன பாத்துட்டு இருக்கேன். நீ என்னுடைய மகள் மாதிரி. இதை நான் சும்மா வாய் வார்த்தையா சொல்லல. நீ என்ன கேட்டாலும் என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா செய்றேன்" என வாக்குறுதி கொடுத்தார்.
ஆதி முதல் அந்தி வரை தன்னுடைய பிரச்சினைகளை ஒன்று விடாமல் சொல்லாவிட்டாலும், நிலாவிடம் ஒரு குழந்தை இருப்பதையும் அதற்கும் தனக்குமான உறவை மேலோட்டமாக சொல்லிவிட்டு அந்த குழந்தைக்கு மாறனாலும் அய்யாசாமியாளும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும் அதை தடுக்க போன விக்னேஷின் தற்போதைய நிலையையும் எடுத்துரைத்தாள் வெண்பா.
"இதுல நாம யாரும் தலையிட முடியாது வெண்பா. இந்த விஷயத்தை கையில் எடுத்தோம்னா காத்திருந்து பழி வாங்குவாங்க. அவங்களுக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தா அதிகாரம் படைச்ச யாராவது நமக்கு தெரிந்திருந்தால், இதை சென்ட்ரலில் இருந்து மூவ் பண்ணலாம். நானும் எனக்கு தெரிந்த என்னுடைய நண்பர்களிடம் இது பற்றி சில ஹிண்ட்கள் கொடுத்து வைக்கிறேன். அதற்கு அடிப்படையா ஸ்ட்ராங்கான ஆதாரங்கள் சிலது கொடுத்தால் போதும்.
ஏற்கனவே உன் தலைமையில் அமைச்ச சிறப்பு விசாரணை குழு எந்த நிலைமையில் இருக்கு? நீங்க எந்த அளவுக்கு முன்னேறி இருக்கீங்க?" என கேட்டார்
மிக மிக ஆபத்தான தகவல்கள் சிலதை மட்டும் தன் வசம் தனியாக வைத்துக் கொண்ட வெண்பா, மற்ற அனைத்து ஆதாரங்களையும் ஐஜியிடம் சமர்ப்பித்தாள். தகப்பனே ஆனாலும் முழுவதுமாய் நம்ப கூடாது என்பதை அவளது பணியில் அவள் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்.
காய்கள் மிக மிக வேகமாக நகர்த்தப்பட்டன. ஐஜியின் மூலம் மத்திய குற்றப் பிரிவினருக்கு அய்யாசாமி தொடர்பான மிகப் பலமான ஆதாரங்கள் கிட்டின.
தற்போதைய எதிர்க்கட்சியுடன் நல்லுறவு கொண்டிருந்த மத்திய அரசும், ஆளுங்கட்சிக்கு எதிராக இந்த விஷயம் வலுவான எதிர்ப்புகளை உருவாக்கும், இன்னும் ஒரு வருடத்தில் வரக்கூடிய தேர்தலில் இது தங்களுக்கு சாதகமாக அமையும் என யோசித்ததால் அதிகாரிகளுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் போடாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்.
இன்னொரு புறம் எதிர்க்கட்சியில் மிக செல்வாக்காக இருந்து கொண்டிருக்கும் தமிழரசனும் மத்திய அரசின் மூலம் அழுத்தம் கொடுக்கவே, அது மிக நன்றாகவே வேலை செய்தது.
சிறு கோடு போட்டால் அதில் ரோடு போட்டு விடும் துடிப்பு மிக்க அதிகாரிகள் நிறைந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஒரு ரோடு கிடைக்கவும் அதில் விமானத்தையே செலுத்தும் முனைப்போடு தீவிரமாக துப்புத் துலக்க துவங்கினர்.
மாறனை தனது பாதுகாப்பு பணியாளர்களிடம் பத்திரமான இடத்தில் வைத்திருந்த நிலா அதன் பின்னே விக்னேஷை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விரைந்தாள்.
காரில் சென்று கொண்டு இருக்கும் போதே, மாறனை அவள் சிறை எடுத்த நிகழ்வு மனதில் படமாக ஓடியது.
மாறனை ஆட்களை வைத்து பிடிப்பது என்றால் அதெல்லாம் இயலாத காரியம். இவளிடம் 10 அல்லக்கைகள் இருந்தால் மாறனிடம் ஆயிரம் அல்லக்கைகள் இருந்தார்கள்.
ஆனால் நிலாவைக் கொல்ல மாறன் துணிந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு நிறையவே இருந்தது. இருந்தாலும் அவன் மனதில் இவள் மீதாக ஏறி இருந்த ஆசையில் ஒரு துளி அளவு மிச்சம் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என நினைத்தாள் நிலா.
அவனை அலைபேசியில் அழைத்தவள், மா.. மாற.. மாற... மாற....ன்ன்... மாறன்... உங்க அப்பா என்ன கொல்றதுக்கு ஆட்களை அனுப்பி இருக்காரு. நா.. நா.. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்களோட காதல் வலையில் இருந்து தப்பிக்க முடியாதுனு புரிஞ்சுகிட்டேன். ஆனால் இப்போ என்னை கொல்ல உங்க அப்பா ரொம்ப தீவிரமா முயற்சி செய்யிறாரு.
லாரி வச்சு இடிச்சு கூட கொல்ல பார்த்தாரு. அதிலிருந்து எப்படியோ தப்பிச்சிட்டேன். ஆனா இன்னைக்கு என்ன கொல்றதுக்கு ஆட்கள் துரத்திட்டு இருக்காங்க. நீங்க நினைச்சா மட்டும் தான் என்னை காப்பாத்த முடியும். தயவு செஞ்சு வந்து என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்.. ப்ளீஸ்... மாறன் தயவு செஞ்சு வாங்க.. நான் நீங்க சொல்றபடி எல்லாம் கேட்கிறேன்.. உங்களயே கல்யாணம் செஞ்சுக்கிறேன்.. ப்ளீஸ்... ஹெல்ப் மீ... மாறன்" என்று கண்ணீர் ஆறாக ஓட மிகவும் பயந்து நடுநடுங்கிப் போனவள் போல பிதற்ற ஆரம்பித்திருந்தாள்.
லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்தது மாறனுடைய ஆட்கள் தான் என்றாலும், "சும்மா ஒரு மிரட்டி மிரட்டிட்டு வாங்க என் செல்லத்துக்கு ஒரு கீறல் கூட விழக்கூடாது" என்று தான் சொல்லி அனுப்பி இருந்தான்.
இப்போது கைக்கு எட்டவே எட்டாது என்று நினைத்திருந்த வாநிலா அதுவே அழைத்து அழுகிறதே! மென்னிலா வெளியில் கடினமானவளாக காட்டிக் கொண்டிருந்தாலும், அவள் ஒரு மென்மையான நிலா என்றே தான் மாறன் நினைத்திருந்தான். அல்லது அவள் மென்மையான நிலாவாக இருக்க வேண்டும் என்றுதான் அவன் விரும்பினான்.
எப்போதும் அவனை அலட்சியமாக பார்ப்பவள், தூக்கி எறிந்து பேசுபவள் இன்று உயிர் பயத்தில் அவனிடம் அழுவதை கேட்டு அவனது இதயம் கூட ஒரு நொடி நின்று துடிக்கத் தான் செய்தது.
அவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்பதை எல்லாம் தாண்டி தனது தந்தையின் அத்தனை ரூபங்களும் தெரிந்தவன் ஆதலால் கண்டிப்பாக இதை எல்லாம் அவர் செய்யக் கூடியவர் தான் என்பதாலேயே நிலாவின் கதறலை நம்பினான் மாறன்.
அய்யாச்சாமியும் நிலாவையும் விக்னேஷையும் தீர்த்து கட்ட அத்தனை விதமான வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இருந்தால் பிரபாவை இப்போது காப்பாற்றியது போலவே காப்பாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்களைக் கொன்றால் தான் தன்னுடைய எதிரியை பழிக்கு பழி வாங்க முடியும் என்ற தீரா வஞ்சம் அய்யாச்சாமியின் நெஞ்சில் வெறியேற்றி கிடந்தது.
எனவே தான் பிரபாவைக் கொல்ல ஆள் அனுப்பினார். ஆனால் அதை விக்னேஷ் தடுத்து விடவே அடுத்து மருத்துவமனையில் இருக்கும் விக்னேஷையும் நிலாவையும் கொன்று விடுவதற்கு தகுந்த திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்.
அவருக்கு ஓர் அடி முன்னால் எடுத்து வைத்திருந்தாள் நிலா. தன்னை அய்யாசாமியின் ஆட்கள் கொல்ல வருவது போல பேசி தான் துரத்தப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று சொன்ன இடத்திற்கு மாறனை வரவழைத்தாள்.
பதட்டத்தில் உடன் இருந்த ஒன்று இரண்டு அல்லக்கைகளோடு ஓடி வந்திருந்த மாறன், அனைவரையும் பிரிந்து போய் தேடச் சொல்லி இருந்தான்.
"எங்க இருக்கான்னு தெரியல இந்த ஏரியால தான் எங்கேயோ ஓடிக்கொண்டிருப்பா, அப்பாவோட ஆட்கள் அவளை பிடித்து ஏதாவது செய்வதற்கு முன்னாடி நிலாவ காப்பாத்தி ஆகணும்."
"அண்ணே உங்களுக்கு.... ஏதாவது... நான் உன் கூட இருக்கிறேன்..."/என்றவனது கன்னத்தில் பொளீர் என்று அறை விழுந்தது.
"என்னய என்ன எதுக்கும் கையாலாகாதவன்னு நெனச்சியா டா? என்ன பாத்துக்க எனக்குத் தெரியும். ஒழுங்கா போய் நிலாவ தேடுங்கடா" என ஒவ்வொருவரையும் பிரித்து அனுப்பிவிட்டு தனியாக வந்த மாறன் தொக்காக சிக்கினான்.
என்னதான் பெரிய ரவுடி, பல தகிடு தத்தங்கள், திருட்டு வேலைகள் செய்பவன் என்றாலும், முறையாக பயிற்சி பெற்று ராணுவத்தில் பல்லாண்டுகள் உழைத்து உரமேறி இருந்த முன்னாள் ராணுவ வீரர்களான நிலாவின் பாதுகாவலர்களிடம் அவனது பாச்சா எதுவும் பலிக்கவில்லை.
அவனை அலேக்காக தூக்கியவள் நேரடியாக அய்யாச்சாமிக்கு எச்சரிக்கை விடவும் தயங்கவில்லை.
தன் அரசியல் எதிரியின் வாரிசை கொன்று பழிவாங்க துடித்திருந்த அய்யாசாமி தன்னுடைய சொந்த வாரிசு கடத்தப்படவும் திகைத்து தான் போனார்.
அதோடு நிற்கவில்லை நிலா. இந்த நாட்டில் எவ்வளவு பெரிய தவறு செய்தவர்களாக இருந்தாலும் அரசியல் பலம் இருந்தால் அவர்கள் தப்பி விடலாம் என்ற எழுதப்படாத விதியே இருப்பதை உணர்ந்தவள், எனவே பற்பல நாடுகளிலும் இருந்த பல்வேறு ஹேக்கர்களை தொடர்பு கொண்டாள்.
மிகத் திறமை வாய்ந்த ஹேக்கரான நிலாவின் நட்பில் இருந்த அனைத்து ஹேக்கர்களும் அவளுக்கு உதவ முன் வரவே, அய்யாச்சாமியின் தகுடு யுத்தங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவருக்கு என்று பிரித்து அனுப்பினாள்.
வெண்பாவின் மூலமும் தமிழரசன் மூலமும் ஏற்பட்ட அழுத்தங்களால் மத்திய குற்றப்பிரிவு தங்களது விசாரணையை தீவிரப்படுத்திய அதே நேரம், அய்யாச்சாமியின் நிழல் உலக வாழ்க்கை ஒவ்வொன்றாக உலகின் ஒவ்வொரு திக்கில் இருந்தும் இணையத்தில் வெளியாக ஆரம்பித்து இருந்தது.
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது விக்னேஷை பார்ப்பதற்காக மருத்துவமனையை வந்தடைன்திருந்தாள் நிலா.
அவள் மருத்துவமனையில் இருந்து செல்லும்போது பிரசன்னா, அருவி, வெண்பா, பிரபா என்று ஒரு கூட்டமே விக்னேஷின் அறைக்கு முன் நின்று இருந்தனர்.
ஆனால் இத்தனை நாட்கள் இவ்வளவு வேலைகளைப் பார்த்துவிட்டு அவள் திரும்பி வரும்போது அவனது அறைக்கு முன் ஒரு ஈ காக்கா கூட இல்லை.
சரி என அறைக்குள் நுழைந்தவள் அங்கே நோயாளியின் பார்வையாளராக அமர்ந்திருந்தவரை கனவிலும் கூட எதிர்பார்த்து இருக்கவில்லையாதலால் அதிர்ந்து போய் நின்றாள்.
அவளது அதிர்ச்சியை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது மீண்டும் அவளை புரியாத பார்வை பார்த்து வைத்தான் விக்னேஷ்.
அவனது பார்வையில் மாற்றத்தை கண்டு சாத்துக்குடி பிழிந்து கொண்டிருந்த கனகசபாபதியும் திரும்பிப் பார்த்தார். அவரது பார்வையிலும் ஒரே குழப்பம்.
"யாருமா நீ" என இருவரும் ஒரே நேரத்தில் கேட்கவும் அமாவாசை நிலவாக கறுத்துப் போனது மென்னிலாவின் பௌர்ணமி முகம்.
"அப்பா, அவனுக்குத்தான் எதிர்பாராத விபத்து நடந்தது அதனால என்னை அடையாளம் தெரியல. உங்களுக்கு என்னப்பா ஆச்சு? முதல்ல நீங்க எப்படி இங்க வந்தீங்க? நீங்க ஏன் இவன் பக்கத்துல உக்காந்து இருக்கீங்க?" என அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் நிலா.
அவள் கேள்விக்கணைகள் ஒன்றின் மீது ஒன்றாக நின்று ஒரு விமான உயரத்திற்கு எழும்பி, ராக்கெட் வேகத்தில் பறப்பதை ஒன்றுமே தெரியாதது போல அண்ணாந்து முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பி பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் மைக்கேல் மதன காமராஜன்.
அறைக்குள் ஒரு உருவம் அசைவதைக் கண்டு திரும்பியவள், அங்கே மைக்கேலைக் கண்டதும் "என்ன மைக்கேல், இதெல்லாம் உங்க வேலை தானா?" என்பது போல சுட்டு எரிப்பது போல பார்த்தாள்.
"மேடம் அருவி மேடம் தான் என்ன இங்க காவலுக்கு இருக்க சொன்னாங்க. மத்தபடி நீங்க நினைக்கிறது போல் எல்லாம் எதுவும் இல்ல மேடம். இவங்க ரெண்டு பேரும் யாருன்னே எனக்கு தெரியாது மேடம்ம்ம்ம்' என்று ஒரேடியாக சாதித்தார் மைக்கேல்
உண்மையில் மைக்கேல் மதன காமராஜன் நிலாவுக்கு தூரத்து உறவு தனது மகள் ஒரு தொழில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சாதிக்க ஆரம்பிக்கும் போது ஏதேனும் பொழப்புக்கு வழி சொல்லுங்க" என்று கனகசபாதியைத் தேடி வந்திருந்தார் மைக்கேல் மதன காமராஜன்.
நடக்க வேண்டிய வயதில் எதுவும் நடக்காமல் போனதால் நாற்பது வயது கடந்தும் பிரம்மச்சாரியாக ஒண்டிக்கட்டையாக சுற்றிக் கொண்டிருந்தவர், எப்படியோ கனக சபாபதியைத் தேடி வந்திருந்தார்.
தங்களை கிட்ட அண்டவிடாமல் இருக்கும் மகளை கண்காணிக்கும் வழி தெரியாது தவித்துக் கொண்டிருந்த கனகசபாபதி மைக்கேல்ஐ கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
அவரது அறிவுறுத்தலின் படி, தன்னுடைய அடையாளம், சொந்த பந்தம் என அனைத்தையும் மறைத்து புதிதாக வேலைக்குச் சேர்வது போல நிலாவிடம் வேலைக்கு சேர்ந்தார் மைக்கேல் மதன காமராஜன்.
அருவி சொல்வதும் சொல்லாததுமான நிலாவின் அத்தனை நடவடிக்கைகளையும் அவ்வப்போது கனகசபாதியிடம் சொல்வதும், நிலாவை பத்திரமாக பார்த்துக் கொள்வதும் என ஒரு பொறுப்பான உறவினராக நடந்து கொண்டு இருந்தார்.
அப்படித்தான் விக்னேஷிடம் செயலற்று நின்றிருந்த நிலாவின் பாவனைகளையும் அதன் பின் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதையும் அவர்களது மோதலையும் தற்போது மெல்லியதாய் வளர்ந்திருக்கும் சிறு நேசப் பூவையும் கூட மோப்பம் பிடித்து கனகசபாபுதியின் காதில் போட்டுவிட்டார்.
இது போதாதா அவருக்கு? காட்டுக்குதிரை என கடிவாளம் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி திரிந்து கொண்டிருந்த நிலாவை ஸ்தம்பிக்க வைக்கவும் ஒருவன் கிடைத்திருக்கிறான் எனும்போது அவனை விட்டு விட அவருக்கு மனமில்லை.
விக்னேஷைப் பற்றி மைக்கேல் மதன காமராஜன் சேகரித்து அனுப்பிய தகவல்கள் எல்லாம் மிகவும் உவப்பானதாக இல்லை என்றாலும், நிலாவிற்கு சரியான துணை அவனே என்று அவரை எண்ண வைத்திருந்தது.
அவனும் தானாக உழைத்து ஒரு தொழில் நிறுவனத்தை கட்டமைத்து சாதித்து இருக்கிறான். நிலாவை போலவே அவன் செய்வதெல்லாம் தவறு என்று தோன்றினாலும் அதற்குள் ஒரு சிறு அறம் இருக்கத்தான் செய்கிறது . அவளைப் புரிந்து கொள்ளவும் அவளது நோக்கங்களை அறிந்து அவளோடு வாழவும் இப்படிப்பட்ட ஒருவனால் தான் முடியும் என்று முடிவே செய்து விட்டார் கனகசபாபதி.
அந்த நேரத்தில் தான் விக்னேஷ் பிரபாவை காப்பாற்ற முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலும் அவரை வந்து அடைந்திருந்தது.
கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய வருங்கால மாப்பிள்ளையை கவனித்துக் கொள்ள கிளம்பி வந்து விட்டார்.
அதிலிருந்து ஆரஞ்சு ஜூஸூம் ஆப்பிள் பழமுமாக அவனை அமுல் பேபி போல கொஞ்சி கொண்டிருக்கிறார்.
ஒரு வாரமாக அந்த பக்கம் நிலா எட்டிப் பார்க்காத கடுப்பில் இருவருமே "யாருமா நீ? உனக்கு என்ன வேலை" என்று கேட்கவும் கடுப்பான நிலா விருட்டென அறையை விட்டு வெளியில் வந்தாள்.
அவ்வளவு நேரம் சேர்த்து வைத்திருந்த தைரியமும் தன்னம்பிக்கையும், ஒரு பெரிய ரவுடி கூட்டத்தையே தனி ஒருத்தியாய் சமாளித்த திறமையும், தன்னை பெற்றவரும் தனக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி பூவை மலரச் செய்தவனும் செய்த புறக்கணிப்பால் ஒன்றும் இல்லாது காற்றில் கரைந்து போனது போல உணர்ந்தவள் , இப்படியே அங்கிருந்த நாற்காலியில் மடங்கிச் சரிந்தாள்.
தேக்கி வைத்திருந்த துக்கமும் கோபமும் ஆற்றாமையும் கண்ணீராய் வெளிப்பட அவள் கண்களில் இருந்து கரகரவென நீர்முத்துக்கள் சுறந்தன.
இரு சொட்டுக்கள் தரையைத் தொடும் முன் இரண்டு கரங்கள் இருபக்கமும் அக்கண்ணீர் துளிகளைக் கைகளில் ஏந்தின.
புறச்சூழல் உணர்ந்து மெல்ல நிமிர்ந்தவளின் எதிரில் ஒரு பக்கம் கனகசபாதியும் மறுபுறம் விக்னேஷும் கண்கள் பணிக்க அமர்ந்திருந்தனர்.
பைரவி தொடர்வாள்.