என்னவன் நீயடா!
ப்ரீத்தி பவி
பரந்து விரிந்த இந்த வானவெளியில் பகல் பொழுது முழுதையும் தனித்து நின்று ஆட்சி செய்யும் எனக்கு, எனது தனிமையே வலிமை என்பது போல தனது நீண்ட கரங்களால் நிலத்தை ஆக்கிரமிக்க உயர்ந்து எழுந்து கொண்டிருந்தான் பகலவன்.
சிறிய அளவானாலும் கண்களுக்கு அழகாக வாசல் தெளித்து கோலம் போடப்பட்டிருந்த அந்த ஓட்டு வீடு, கம்பீரமாக நின்றது. வராண்டா, இரண்டு படுக்கையறை, நடுவே ஒரு முற்றம், கடைசியாக சமையலறை என அளவான, கச்சிதமான அந்த வீட்டின் கொல்லைப்புறம் முழுவதும் நறுமணப் பூச்செடிகளால் நிறைந்திருக்க, சோக ஓவியம் போல பூத்துச் சிரித்துக் கொண்டிருந்த அந்த மலர்களுக்கு நடுவே வாடிய ஒற்றை மலராய் கைகளிரண்டால் கன்னத்தை தாங்கியபடி அமர்ந்திருந்தாள் சிந்தியா.
கடந்த ஒரு மாதமாகவே இந்தத் தனிமை தான் அவளது உற்ற தோழியாய் இருக்கிறது. அதன் காரணம் தான் என்ன? ஆயிரம் உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளின் வாழ்வில் முதல் நாயகன் அவர்களது தந்தையாகத் தான் இருப்பார். அப்பேர்ப்பட்ட தந்தை இறந்து விட்டால்? அது தான் சிந்தியாவின் வாழ்வில் நடந்தது.
“அப்பா இங்கப் பாருங்களேன்! நீங்களும், நானும் சேர்ந்து ஆசையா வச்ச நம்ம வெள்ளை ரோஜா இன்னைக்கு ரெண்டு பூ பூத்திருக்கு. இத பார்க்குறப்ப எனக்கு உங்க நியாபகமாவே இருக்குப்பா. இனிமே என் வாழ்க்கையில் நீங்க திரும்ப வரமாட்டிங்களாப்பா? இனிமே என்னை இளவரசி மாதிரி பார்த்துக்க யாருப்பா இருக்கா?” என்று ரோஜா செடியின் அருகே அமர்ந்து தன் தந்தையிடம் பேசுவது போல் பேசிக்கொண்டிருக்க…
“சிந்து..உள்ள வாடா. வந்து இந்த காபிய குடிச்சிட்டு காலேஜ்க்கு கிளம்பு. அப்பா நம்மள விட்டுட்டு எங்கையும் போகலடா. நம்ம கூடவே தான் இருக்காரு வா” என்றபடி மகளை அணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற தாயின் கண்களிலும் இரு சொட்டு கண்ணீர் நின்றது.
கல்லூரிக்குக் கிளம்பி வந்த சிந்தியா, பேருந்து நிறுத்தத்தில் தனக்கான பேருந்து வரவும் ஏறி அமர்ந்தாள். சன்னல் வழியே வெறித்தபடி அமர்ந்திருந்தவள், கல்லூரி நிறுத்தம் வரவும் இறங்கி அமைதியாக உள்ளே சென்றாள்.
தோழிகளுடன் அமர்ந்திருந்தாலும், நெஞ்சத்தில் ஏதோ வெறுமை சூழ சூனியத்தை வெறித்தது போல பாடத்தை கவனித்தவள், மதிய உணவு இடைவேளையில், வகுப்பறை மரத்தடியில் இருந்த கல் திட்டில் அமர்ந்திருக்க, அவளை நோக்கி வந்த ஒரு மாணவன், “சிந்தியா உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” என்று அவளிடம் நீட்ட, ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள்,
“எனக்கு பா..பார்..சலா? எனக்கா இருக்காது. வேற யாருக்காவது இருக்கும்? நீங்க நல்லா விசாரிச்சுப் பாருங்க” என்றபடி எழுந்து செல்ல எத்தனிக்க,
“நீங்க தானே சிந்தியாஆறுமுகம்?” என்றதும், “ம்ம்” என அவள் தலையாட்ட, “அப்போ இது உங்களுக்கு வந்தது தான்” என அவள் கைகளில் கொடுத்து விட்டு அவன் வேகமாக சென்று விட, குழப்பத்துடன் அந்த பார்சலை பார்த்தவள், தனது பையில் வைத்துக் கொண்டாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவளுக்கு அப்போது தான் அந்த பார்சல் நினைவு வர, பையிலிருந்து மெல்ல வெளியே எடுத்தவள் மேலுறையைப் பிரிக்க, உள்ளே ஒரு பரிசுப் பெட்டி இருந்தது. அந்தப் பெட்டியை திறந்து பார்க்க.. உள்ளே ஒரு சிடியும், கடிதமும் இருந்தது.
அதிலிருந்த கையெழுத்து பரிச்சயமானது போல் தோன்றினாலும் யாரின் எழுத்து என அவளது நினைவில் இல்லை. கடிதத்தை வாசித்தாள்.
“என் அன்பு சிந்தியா. தந்தையை இழந்து தனிமையைத் துணையாக அமைத்துக் கொண்டாயே! உன் தனிமைக்கு இனிமை சேர்க்க எனது இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்.”
கடிதத்தை படித்தவளின் கைகள் நடுநடுங்க.. நெற்றியில் வியர்வைத் துளிகள் படிந்திருக்க, சிடியை எடுத்து ப்ளேயரில் போட்டு உயிர்ப்பிக்க… மெல்ல தென்றல் தழுவது போல் அவளது செவிகளை குளிர்வித்தது அதில் ஒலித்தப் பாடல்கள். அத்தனையும் அவளது விருப்பத் தெரிவு. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் சிறு புன்னகையுடன் அதனை கேட்ட படி இருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.
காலை எழுந்து, வழக்கம் போல ரோஜா செடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அதன் அருகே சிந்தியா செல்ல, அழகிய சிவப்பு ரோஜாத் தொட்டியுடன் ஒரு கடிதம் இருக்க, மனதில் ஒரு இனம் புரியா படபடப்பு தோன்ற மெல்ல அந்த கடிதத்தை பிரித்துப் பார்த்தாள்.
“என் அன்பு சிந்தியா. வெள்ளை ரோஜா அழகு தான். உடன் இந்த சிவப்பு ரோஜாவும் இணைந்து அழகு சேர்க்கட்டுமே!” வாசித்தவளின் கண்கள், ‘யாரும் இருக்கிறார்களா?’ என சுற்றிப் பார்க்க, யாரும் இருப்பதற்கான தடயமே இல்லை. புதிய ரோஜாவிற்கும் சேர்த்து நீர் ஊற்றியவள், கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.
அன்று முழுவதும் ‘இந்த வேலையை யார் செய்வது?’ என சிந்தித்துப் பார்த்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை. இந்த விசயத்தைப் பற்றி தாயிடம் கூற வேண்டுமென எண்ணிக் கொண்டே வீடு வந்து நுழைய,
“சிந்து..உன் பிரெண்டாமே! ஒரு பையன் வந்து இந்த நாய்க்குட்டிய இங்க விட்டுட்டு போனான்.” என தாய் கூறவும் அதிர்ந்தவள், அந்த நாய்க்குட்டியின் அருகே சென்று பார்த்தாள்.
உடல் முழுவதும் வெள்ளையும், அங்கங்கே கருப்பு புள்ளிகளையும் கொண்டு அழகாக இருந்தது அந்தக் குட்டி நாய். அதன் கழுத்தில் ஒரு சிறிய மணி தொங்க, அதில் ஒரு மிகச்சிறிய காகிதம் சொருகி இருந்தது.
காகிதத்தை பார்த்தவளின் மனதில் மணியடித்தது. மெல்ல நாய்க்குட்டியை தூக்கி அந்த காகிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்க்க, “உன்னுடன் நாள் முழுவதும் நான் இருக்க வேண்டுமென ஆசை தான் கண்மணியே! ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. அதுவரை உனதருகே இருக்க இந்த குட்டி நண்பன். உனக்கே உனக்காக.”
படித்து முடித்து குனிந்து பார்க்க..நாய்க்குட்டி அவள் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. சிந்தியாவிற்கு ஏனோ அதனை தூக்கிக் கொஞ்ச ஆசை தோன்ற, உடனே அதனை செய்து விட்டாள்.
நீண்ட நாட்கள் கழித்து நாய்க்குட்டியை தூக்கி வைத்துக் கொஞ்சும் மகளின் குழந்தைத்தனமான முகத்தைப் பார்த்த அவளது தாய்க்கு உள்ளம் நெகிழ்ந்தது. நாய்க்குட்டியை கொடுத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்.
“அம்மா இவனுக்கு என்ன பேருமா வைக்கலாம்?” என்று கேட்டவள், “ஒய்ட்டினு வைப்போம்..சூப்பர் நேம்” என தானே கேள்வி கேட்டு, தானே பதிலையும் கூறிக் கொண்டாள்.
பத்து நாட்கள் கடந்திருந்தது. இப்போதெல்லாம் சிந்தியாவிற்கு எந்த பரிசுப் பொருளும், கடிதமும் வருவதில்லை. ஆனாலும் அவளது பொழுதுகள் அந்த சிடியில் இருந்த இசையைக் கேட்பதிலும், ரோஜாவிற்கு நீர் விடுவதும், ஒய்ட்டியுடன் விளையாடுவதும் என பொழுதுகள் அழகாக கழிந்தது.
முன்பு போல இப்பொழுதும் தனிமையில் தான் இருக்கிறாள். ஆனால், வெறுமைக்கு பதிலாக இந்தத் தனிமை இன்பத்தையும், இதத்தையும் தந்தது. அவளை அறியாமலே மெல்ல, மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தாள் சிந்தியா.
இப்போதும் பேருந்தில் தான் செல்கிறாள். ஆனால், முன்பு போல எதையோ வெறித்து பார்த்தபடி அல்ல.யார் நமக்காக இதையெல்லாம் செய்வது?’ என்ற யோசனையிலும், அவளே அறியாத உதட்டோர சிரிப்புமாக அவளது பயணம் கழிகிறது.
‘அந்த நபரை சந்திக்க முடியாதா?’ என எதிர்பார்ப்பிலும், ஏமாற்றத்திலும் அவளது நாட்கள் செல்ல.. அன்றொரு நாள் மாலை. ஒய்ட்டியை அழைத்துக் கொண்டு சிந்தியா, அருகிலுள்ள பூங்காவிற்குச் செல்ல..
நல்ல பிள்ளையாக வேடிக்கைப் பார்த்தபடி வாலாட்டிக் கொண்டே வந்த ஒயிட்டி, திடீரென சிந்தியாவின் பிடியிலிருந்த சங்கிலியுடன் இழுத்துக் கொண்டு ஓட..
“ஒயிட்டி நில்லு”.. என்ற படி பின்னாலே சிந்தியா ஓடினாள். முதுகுப்புறத்தைக் காட்டியடி பச்சை சட்டை அணிந்து ஒருவன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்க வேகமாக அவனருகே சென்று அவன் மேல் தாவியது ஒயிட்டி.
உரையாடலை நிறுத்தி விட்டு அவன் குனிந்து பார்க்க, ஒயிட்டி மேலும் அவனிடம் ஒன்டிக் கொண்டு துள்ளிக் குதித்தது. “ஹே ஒயிட்டி!” என்றவன் அதனை தூக்கிக் கொஞ்ச.. குனட்டிய படி அவனுக்கு முத்தம் கொடுப்பது போல முகத்தின் அருகே வாயைக் கொண்டு சென்றது.
“நோ ஒயிட்டி” என்றவன், காலடி சப்தத்தில் நிமிர்ந்து பார்க்க, முகத்தில் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள் சிந்தியா. “ஒ..ஒயிட்டிய உங்களுக்குத் தெரியுமா?” என ஆச்சரியத்துடன் அவள் கேட்க..
“ஒயிட்டியோட முன்னாள் ஓனருக்கு அதைத் தெரியாம போகுமா?” என அதனைக் கொஞ்சியபடி , கண் சிமிட்டி அவன் கூற..
“ராகவ்…நீங்க என்ன சொல்றிங்க?..அப்போ அந்த சிடி, ரோஜாச்செடி”.. என அவள் திணற..
“எல்லாத்தையும் நான் தான் அனுப்பி வச்சேன். உன்னோட தனிமையைப் போக்க..ஆனா இப்போ?” என்று அவன் நிறுத்த… கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
“ஆனா இப்போ நானே வந்துட்டேன். உன்னோட தனிமையைப் போக்கி.. நமக்கான தனிமையை உருவாக்க நானே வந்துட்டேன் தியா” என்றவன், தரையில் மண்டியிட்டு “வில் யூ மேரி மீ?” என்றதும், “எஸ்” என கண்ணீர் ததும்பும் விழிகளுடன் சிந்தியா தலையசைக்க..அவளை அணைத்துக் கொண்டான் அவளது ராகவ்.
ஆம் . கடந்த ஒரு வருடமாக ஒரு தலையாக நம் சிந்தியா காதலித்து வந்த அவளது காதலன். அவளது தனிமையைப் போக்க வந்திருக்கும் அவளவன்.
“தியா..உங்க அப்பாவ போல இளவரசியா உன்னை என்னால பார்த்துக்க முடியாது.” என்றதும், அவனது அணைப்பிலிருந்து விலகி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். மெல்ல புன்னகைத்தபடி அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் “என்னோட மகாராணியா பார்த்துப்பேன்” என அவள் நெற்றியில் இதழ் பதிக்க… நாணத்தோடு அவன் தோள் சாய்ந்த படி நடந்தாள் சிந்தியா. அவர்களது கால்களை சுற்றியபடி பின்னே சென்றது ஒயிட்டி.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு..
காலை நேரம். சிவப்பு ரோஜா மொட்டுகள் இரண்டு மலரும் தருணத்தில் இருக்க.. தன்னவன் தந்த இசைத்தட்டில் ஒலித்த இசையை கேட்டபடி, அவனது காதல் பரிசை வயிற்றில் சுமந்த படி.. தனது தந்தையே மகவாக பிறப்பார் என்ற நம்பிக்கையில் ரோஜாக்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தாள் சிந்தியா. அவளது தனிமை இப்போது காதலுடன் கூடி முழுமையானது.