கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன்-10

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம்-10

ரேகா தன் நிலையைப் பற்றி அத்வதாவிடம் சொன்னாள்.

"அத்து அப்பா சென்னையில் உள்ள பிரிண்ட் கம்பெனியில் வேலை செய்துட்டு இருந்தாங்க, அந்த கம்பெனியோட ஓனர் வெளியூருக்கு போய் தன் மகனோட இருக்கப் போறதுனால அந்த கம்பெனியை அப்பாவை எடுத்துக்க சொன்னாங்க.அப்பா யோசிச்சு பதில் சொல்றேன்னு சொல்லி சரின்னு சொல்லி அம்மாவோட நகையை வித்தும் கடன் வாங்கியும் பணத்தை ரெடி பண்ணி அந்த கம்பெனியில வாங்கிட்டாங்க.வாங்கின பிறகு தான் தெரிஞ்சது அதுல லட்ச கணக்குல கடன் இருக்கிறது தெரிஞ்சது அந்த கடனைக் கட்ட அப்பாகிட்ட பணம் இல்லை.அதோட அந்த கம்பெனியையும் நடத்த முடியலை வாங்கின கடனைக் கொடுக்க இப்போ ஏதோ ஒரு வேலைக்குப் போறாங்க அதுல கடனைத் தான் அடைக்க முடியும் என்னை படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க" என்று கவலை தொய்ந்த முகத்தோடு சொன்னாள்.

இதைக் கேட்ட அத்வதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.ஆனால் அவள் கைகள் ரேகாவின் கைகளை அழுத்தமாய் பிடித்துக் கொண்டன.

அரண்மனைக்கு வந்தும் அவளுக்கு ரேகாவுடைய நிலைமையே மனதில் இருந்தது.அதனால் கவலையோடு அமர்ந்திருந்தவளின் முகத்தில் அது வெளிப்படையாய் தெரிந்தது.

அவளைப் பார்த்த தாத்தா அவளிடம் வந்து "அத்வதா என்னம்மா எதாவது பிரச்சினையா? முகமே சரியில்லை"

"ஒன்னுமில்லை தாத்தா"

"பொய் சொல்லாதே! அத்வதா எனக்குத் தெரியும் என்ன பிரச்சினைன்னு தாத்தாகிட்ட சொல்ல மாட்டியா?" என்று அவள் அருகில் வந்து உட்கார்ந்து தலையை வருடிக் கொடுக்க…

"போங்க தாத்தா நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன்.அம்மாவும் பாட்டியும் என்னை இப்படி இரு அப்படி இருன்னு சொல்றாங்க அது எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் நீங்க அமைதியாகத் தானே இருக்கீங்க"

"அது தான் கோபமா? இல்லை வேற என்ன விஷயமோ இருக்கு? சொல்லும்மா"

அவள் அமைதியாய் இருந்தாள்.

தாத்தா அவளிடம் "உனக்கு இந்த தாத்தாகிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு சொல்லாதே" என்று எழுந்துக் கொள்ள நினைக்கும் பொழுது...

அவரது கையைப் பிடித்து "சொல்றேன் தாத்தா" என்று ரேகாவின் நிலைமையைப் பற்றி சொன்னாள்.

அதைக் கேட்டு யோசனையாய் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் அத்வதாவிடம் "இதுல ரேகாவுக்கு எந்த வகையில உதவும்னு நினைக்கிற"

"அது… தாத்தா" என்று அவள் தயங்க….

"சொல்லும்மா எப்படி அவளுக்கு உதவாலாம்னு சொல்லு"

"அது தாத்தா அம்மாக்கு தெரிந்தால் எதாவது சத்தம் போடுவாங்களே!அதான் யோசனையாய் இருக்கு"

"அத்வதா மற்றவங்களுக்கு உதவுவதற்கு எப்பவும் யோசிக்கக் கூடாது.அதோடு இந்த விஷயம் நம்ம இரண்டு பேர்க்கு மட்டும் தான் தெரியும் சரியா? "

அவர் சொன்ன பதிலைக் கேட்டு திருப்தியடைந்தவளாய் "சரிங்க தாத்தா நான் சொல்றேன்.ரேகாவுடைய அப்பாக்கு கடனை அடைக்கவும், அவ படிக்க விரும்புற படிப்பையும் நம்ம படிக்க வைக்கலாமா தாத்தா? " என்று சொல்லி விட்டு தாத்தாவைப் பார்க்க….

அவரோ அவளைப் பார்த்து சிரித்து "என் மனசில் உள்ள அதே யோசனையைத் தான் நீயும் சொல்லி இருக்கிறேம்மா நாளைக்கு இதுக்கான வேலையைப் பார்க்கலாம்.நீ கவலைப் படாமல் இரு"என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தார்.

அதன்படி மறுநாள் ரேகாவின் தாய் வந்து கிருஷ்ண உடையாரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.அதற்கு மறுநாள் ரேகாவின் தந்தை அத்வதாவின் தாத்தாவைப் பார்க்க வந்தருந்தார்.அவரோடு ரேகாவும் வந்திருந்தாள்.

ரேகா அத்வதாவுடன் வெளியே பேசிக் கொண்டிருக்க….
உள்ளே தாத்தாவும் ரேகாவின் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தன.

அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு அத்வதாவை உள்ளே அழைத்தார் தாத்தா.அவளிடம் "அத்வதா நாம செய்ற உதவிக்கு பலனை எதிர்ப்பார்த்தா செய்யனும்"

"இல்லை தாத்தா பலனை எதிர்ப்பார்த்து செய்தால் அது எப்படி உதவி ஆகும்? "

"அதைத் தான் நானும் சொல்றேன்.ஆனாலும் கேட்க மாட்டேங்கிறீங்க " என்று ரேகாவின் தந்தையப் பார்த்து சொல்ல...

அதற்கு அவர் "ராஜா அது உங்களோட பெருந்தன்மையா இருக்கலாம்.ஆனால் இவ்வளவு பெரிய உதவி செய்தும் அதுக்காக நான் எந்த பதிலும் செய்யாமல் இருக்கிறது சரியில்லை ராஜா"

"சரிங்க உங்களுக்கு என்னச் செய்யனும்னு தோணுதோ அதை செய்ங்க ஆனால் ரேகாவுடைய படிப்பிற்கு மட்டும் எந்த பதிலையும் செய்வேன்னனு சொல்லக் கூடாது" என்றார்.

"நீங்க சொன்ன மாதிரியே செய்யலாம்ங்க.இந்த கம்பெனியை திரும்ப நடத்த நீங்க பண்ற உதவி பெரிய உதவி.அதனால இந்த கம்பெனியில் உங்களை ஒரு பங்குதாரராக வைக்கிறேன்"

கிருஷ்ண உடையார் சிரித்தார்."உங்க விருப்பம் எதுவோ அதையே செய்ங்க ஆனால் என்னை பங்குதாரராக போட வேண்டாம் என் பேத்தியே அதுக்கு இருக்கட்டும்.இப்போ அதுக்கான வயசு இல்லை பிறகு பார்த்துக்கலாம்"

"சரிங்க ராஜா நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்" என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க…

ரேகா அத்வதாவைக் கட்டிக் கொண்டாள்."அத்வதா நீ செய்த இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு எனக்குத் தெரியலை" என்று கண்ணீரோடு கட்டிக் கொண்டு அழுதாள்.

அவளது தோள்களை தடவிக் கொடுத்தவள் "ரேகா ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? நீ என்னோட தோழி உனக்கு எதாவது ஒரு கஷ்டம்னா அது எனக்கும் தான் அதனால இப்படி எல்லாம் பேசாதே உன் விருப்பப்படி வெளிநாட்டில போய் உன் மேற்படிப்பை படிக்கனும் சரியா?" என்று அவள் புன்னகை முகமாய் கேட்க ரேகா இன்னும் இறுக்கமாய் கட்டிக் கொண்டு

"கண்டிப்பா அத்து நீயும் என்கூட வருவ தானே"

"ம்ம்…. வருவேன்.ஆனால் எப்படியும் நீ இந்த வாய்ப்பை விடாமல் உன் படிப்பை முடிக்கனும் சரியா?"

"கண்டிப்பா நீ சொல்றதை நான் செய்வேன்.அதே மாதிரி உன் மனசுல எந்த சந்தோஷமான விஷயமா இருந்தாலும் எந்த கஷ்டமாக இருந்தாலும் அதை என்கிட்ட சொல்ல யோசிக்கக் கூடாது" என்று அவள் கேட்க இவள் இன்பமாய் ஒத்துக் கொண்டாள்.

தாத்தாவும் ரேகாவின் அப்பாவும் இவர்கள் இருவரின் நட்பை எண்ணி மகிழ்ந்தனர்.

நாட்கள் செல்ல…. ஒருநாள்

அத்வதா தாத்தாவின் அறையில் உட்கார்ந்து அவருடைய புத்தகஅலமாரியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த அறையில் இருந்த போன் அடித்தது.இவள் எடுக்கவா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது வந்த போன் நின்றது.திரும்பவும் அடிக்க அந்த போனை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றாள்.

மறுமுனையில் பெருத்த அமைதி நிலவியது.இவள் மறுபடியும் "ஹலோ யாருங்க பேசுறது?"

மறுமுனையில் மெதுவாய் "நான்தான் பேசுறேன்"

"நான் தானா உங்க பெயரு அது தானா? யாருங்க பேசுறது?"

சிரிப்பு சத்தம் கேட்டது.இவளுக்கோ யாரு என்பது அறிவதிலேயே இருக்க….

"என்னைத் தெரியலையா" என்று கேட்க….

"ஹலோ போன்ல பேசும் போது எப்படிங்க பார்க்க முடியும்? இதுல வேற தெரியலையான்னு ஒரு கேள்வி" அவள் அசால்ட்டாய் கேட்க…

மறுமுனையில் சிரிப்பு சத்தம்.இவளுக்கு எரிச்சலாகி ஏன்டா போனை எடுத்தோம்? என்பது போல் எண்ணம் வர 'திரும்பவும் ஒரு முறை யாரென்று கேட்டு விடலாம் அப்போத் தான் தாத்தா வந்தால் போன் போட்ட விவரத்தைச் சொல்ல முடியும்"என்று பொறுமையாக "உங்க பேரு என்னன்னு சொன்னால் தான் நான் தாத்தாகிட்ட சொல்ல முடியும்"

"அப்படியா! தாத்தா இல்லையா வெளியே போய் இருக்காங்களா?"
அவன் கேள்வியோடு நிறுத்த…

"ஹலோ அவரு எனக்கு மட்டும் தாத்தா உங்களுக்கெல்லாம் தாத்தா கிடையாது.ஒழுங்கா சாருன்னு சொல்லுங்க"

"அப்படியா! எனக்கும் அவரு தாத்தா தான்"

"இது எல்லாம் இப்போ தேவை தானா?நீங்க யாரு?அதை முதல்ல சொல்லுங்க"

"என்னை யாருன்னு தெரியலை இராட்சசி?" என்று மெதுவாய் குரலை தாழ்த்தி சொன்னதும் இராட்சசி அழைப்பில் குரலைத் தெரிந்துக் கொண்டவள் மெதுவாய் அவன் பெயரை உச்சரித்தாள்.

"தவ… தவரூபன் தவரூபனா பேசுறது"

அவனோ "ம்ம்ம்…" என்றான்.

அவள் அமைதியாய் நின்றாள்.அவனோ "இன்னும் என் பெயரை ஞாபகம் வைச்சு இருக்கியா?"அவள் பதிலே சொல்லவில்லை.

"இவளோ நேரமா நல்லத் தானே பேசுனே? இப்போ ஏன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கே? என்கிட்ட பேச உனக்கு விருப்பம் இல்லையா?"

"ம்ம்.. ம்ஹீஹீம்" என்று ஆமாம் இல்லை என்று அடுத்தடுத்து தலையசைத்தாள்.

அவள் பதிலைக் கேட்டு "ஒன்னு ஆமாம்ன்னா ஆமாம் அப்படி தலை ஆட்டு இல்லைன்னா இல்லை சொல்லு அதை விட்டுட்டு இரண்டுக்குமே ஒரே மாதிரி தலையை ஆட்டுறே?"

அவன் அப்படிச் சொன்னதும் பக்கத்தில் இருக்கிறானா? என்ற யோசனையில் அங்கும் இங்கும் பார்க்க...

"உன் பக்கத்துல இருக்கிறேன்னு தேடிப் பார்க்கிறியா? நான் இன்னும் ஊர்லத் தான் இருக்கேன்"என்று சொல்லி சிரித்தான்.

அவளுக்கோ அவமானமாய் போய் விட்டது.உடனே கோபத்தோடு "எனக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லை நான் போனை வைக்கிறேன்"

"உண்மையை சொன்னால் எப்போ பார்த்தாலும் கோபப்படுறதே உன் வேலையா போச்சு" என்று அவன் சொன்னதைக் கேட்டவள்

அவன் மேலும் அவளை மட்டம் தட்டி பேசுவது போலவே அவள் எண்ண கோபமாக அவனிடம் "இனிமேல் நான் உன்கூட பேச மாட்டேன் போடா" என்று அவள் போனை வைக்கும் நேரம் உள்ளே வந்த கிருஷ்ண உடையார் "யாரு போன் பேசினாங்க?" என்று கேட்க…

அவளோ கோபமாய் "உங்க பேரன் தான் நீங்களே பேசுங்க நான் போறேன்" என்று போனை டேபிள் மேல் வைத்து விட்டு "மூஞ்சைப் பாரு" என்று தனக்குள்ளே பேசுகிறோம் என்று நினைத்து தாத்தாவின் காதில் விழும் படி சொல்லிக் கொண்டு போனாள்.

அவளைப் பார்த்தபடியே போனை எடுத்து காதில் வைத்து "ஹலோ தவரூபா என்னடா சொன்னே அத்வதா கோபமா போற"

" நான் ஒன்னுமே சொல்லலை தாத்தா சும்மா கிண்டல் பண்ணேன் அதுக்கு போய் கோபமா பேசுறா"

"அப்படி ஒன்னும் நீ பண்ண மாதிரி தெரியலையே அவன் உன்னை சொல்லி திட்டிட்டு போறதை பார்த்தால்" என்று சொல்ல…

"ஏன் தாத்தா என்னைப்பத்தி ரொம்ப கேவலமா சொல்லிட்டு போறாளா?"

"ஒன்னும் பெரிசா இல்லை உன் முகத்தை பார்க்கனுமாம் அதை தான் கொஞ்சம் திட்டுற மாதிரி சொல்லிட்டு போற" என்றார்.

"தாத்தா எப்படித் தாத்தா உங்களால மட்டும் இப்படி எல்லாம் பேச முடியுது"என்று அவன் சிரிக்க…

"எல்லாம் உன்கூட சேர்ந்தது தான் என்னச் செய்யச் சொல்லுற? "என்று அவர் சொல்லிச் சிரிக்க…

"போங்க தாத்தா உங்களுக்கு கிண்டல் பண்ண தெரிஞ்ச மாதிரி உங்க பேத்திக்கு தெரியலை என்னச் செய்ய? " என்று அவன் சலித்துக் கொண்டு சொல்ல…

தாத்தா அவன் எண்ணம் லேசாய் புரிந்தவராய் "எல்லாம் உன் கூட பேசிவரும் போது புரிஞ்சுக்குவா கவலைப்படாதே தவரூபா"

"போங்க தாத்தா நீங்கத் தான் சொல்றீங்க எங்கே?" என்று அவர்கள் எப்போதும் போல் பலகதைப் பேசி சிரித்தனர்.

தவரூபன் தாத்தாவிடம் போனில் பேசிவிட்டு தன் கைப்பேசியில் ஆரலி அவளுடைய பிறந்த நாள் போட்டோவை தவரூபனுக்கு அனுப்பி இருந்தாள்.அதில் ஒரு போட்டோவில் அத்வதா சிரித்துக் கொண்டு நின்ற போட்டோவும் இருந்தது.அதை மட்டும் தனியாய் எடுத்து பத்திரப்படுத்தியவன் அதை எடுத்துப் பார்த்து நிழலாய் உள்ள அவளிடம் பேசினான்.

"அத்வதா மூணு வருஷமா உன்னைப் பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு இன்னைக்குத் தான் உன்னோட போட்டோ என் கைல கிடைச்சிடுச்சு இத்தனை நாளா என் மனசில இருந்த கேள்விக்கும் விடை கிடைச்சி இருக்கு.உன்னை அன்றைக்கு பெரிய பெண்ணாக மேடையில் பார்க்கும் போது எனக்குள்ளே ஏற்பட்ட உணர்விற்கு என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.ஆனால் இன்றைக்கு உன்னை பார்க்கும் அதே குறுஞ்சிரிப்பு குழந்தைத்தனத்தோடு உன்னைக் கண்டதும் எனக்கே எனக்கானவளாக கண்டுக் கொண்டேன்.உன்கிட்ட பேசனும் ஆசைப்பட்டேன் இன்னைக்கு அதுவும் நான் நினைச்ச மாதிரியே பேசிட்டேன், இது எல்லாமே நீ எனக்கானவள்னு எனக்கு தோண வைக்குது அது உண்மையாகும்னு நான் நினைக்கிறேன் கூடியசீக்கிரம் உன்னை வந்து சந்திப்பேன்" என்று நிழலாய் உள்ளவளிடம் அன்பாய் ஆவலாய் கண்களில் குறும்பாய் சொன்னான்.

அவளிடம் பேசிவிட்டு எழுந்து தன் அலமாரியில் பாதுகாப்பாய் வைத்திருந்த அந்த ஓவியத்தை எடுத்தான்.அன்று அவள் வரைந்து விட்டு இருந்த அதே நிலையில் அந்த ஓவியம் இருக்க இப்போது அதை எடுத்து வரைவதற்காக அதை மாட்டி அவன் வரையத் தொடங்கினான்.

எழில் கொஞ்சும் அருவியில் இருந்து நீர்த்திவலைகள் கொட்ட அந்த சாரலை ஒரு பெண் அதை இன்பமாய் தன் முகத்தில் தாங்குவது போல் இருப்பதற்காக ஒரு பெண்ணின் தலையை மட்டும் அவள் வரைந்திருந்தாள்.ஆனால் தவரூபன் அந்தப் பெண்ணின் முகத்தை அத்வதாவாக நினைத்து வரையத் துவங்கினான் காதலோடு….

(தொடரும்)
 
Mohanapriya M

Well-known member

😍😍
 
Top