என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -11
அவளின் கோப முகத்தைக் கண்டு அத்தாவிடம் தாத்தா "என்னம்மா சொன்னான்? ஏன் இவ்வளவு கோபமா இருக்கே?"
"தாத்தா அவன் எப்பவும் என்னை டென்ஷன் ஏத்துற மாதிரி தான் பேசுறான் எனக்கு அவனை பிடிக்கவேஇல்லை"
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவர் "உன்கிட்ட யாரு இப்போ அவனை பிடிச்சு இருக்கான்னு கேட்டாங்க"
"தா...த்தா கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசினவுடன் அவனையே மாதிரி நீங்களும் என்னை கிண்டல் பண்ணுறீங்க"என்று அவரிடம் கடிந்துக் கொண்டாள்.
"சரிம்மா இப்போ நான் எதுவும் சொல்லலை. அவன் படிப்பு முடிஞ்சதும் ஊருக்கு வருவான் அப்போ எல்லாம் பேசிக்கலாம் அவன் வந்து பேசும் போது எல்லாம் நீ புரிஞ்சுப்பே அவன் நல்ல பையன்" என்றார்.
இவளோ மனதினுள் 'அவன்கிட்ட பேசினால் எனக்கு பைத்தியம்ல புடிக்கும்.இதுல வேற அவனுக்கு நல்லவன்னு ஒரு சர்ட்பிகேட் வேற ஐயோ!"என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள்.
அவளது யோசனையான செய்கையைப் பார்த்த தாத்தா 'காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்'என்று நினைத்தார்
ஒரு வருடம் கடந்த நிலையில் கிருஷ்ண உடையாருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.வயோதிகத் தன்மையால் உடலில் ஆரோக்கிய சீர்கேடு உருவானது.
மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்.இப்பொழுது அவரால் முன்னே மாதிரி நடக்க முடியவில்லை.வீல் சேரில் செல்வது தான் வசதியாக இருந்தது.அதனால் அவருக்கு எப்பவும் மற்றவரின் துணை தேவைப்பட்டது.அத்வதா பள்ளிக்குச் சென்று வந்த பின் தாத்தாவைக் கவனிப்பது தான் அவளது முக்கியமான வேலையாகிப் போனது.
அதனால் தாத்தா எங்கே சென்றாலும் அவருடன் அவள் செல்வது வழக்கமாகிப் போனது.அப்படி வாரத்தின் இறுதி நாட்களில் அவர்கள் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு கிருஷ்ண உடையார் செல்வது வழக்கம்.அப்பொழுது அவருடன் அத்வதாவும் உடன் சென்றாள்.அங்கு சென்றால் கிருஷ்ண உடையார் அங்கிருப்பவர்களின் ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான எல்லாமும் நிறைவாய் கிடைக்கிறதா? என்று அவர் கேட்டு விசாரிப்பது வழக்கம்.
அங்கு தங்கிருப்பவர்கள் பெரும்பாலனவர்கள் குடும்பத்தோடு நல்ல ஒற்றுமையாக மதிப்போடு வாழ்ந்தவர்கள்.ஒருசிலர் பிள்ளைகள் கைவிடப்பட்டதாலும் ஒரு சிலர் தாய் தந்தை இறந்து பிள்ளைகள் மட்டும் தனியாக இருக்க… அவர்களின் படிப்போடு அவர்களுக்கு உறவை இழந்தவர்களுக்கு ஒரு புது உறவு கிடைக்க இங்கே தங்கிப் படிக்க வைக்கப்படுவர்.அதனால் எல்லா வயதில் உள்ள பெண்கள் மட்டும் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம் அது.அவளும் முதன்முறையாக அந்த இல்லத்திற்கு சென்றாள்.
அங்கு உள்ளவர்களைப் பார்க்கும் போது இறைவன் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தந்துள்ளான் என்றெண்ணி அவள் இறைவனுக்கு நன்றி சொன்னாள்.
அத்வதா அங்குள்ள ஊழியர்களிடம் தாத்தா பேசிக் கொண்டிருக்கும் போது இவள் அங்குள்ள பெரிய தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க நடந்துக் கொண்டிருக்கும் போது எதிரே தலையில் கட்டோடு ஒரு சின்னப் பெண்ணொருத்தி வந்து அவளை நன்றாக இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
இவள் திடீரென்று நடந்த நிகழ்வில் அதிர்ச்சியாய் அப்படியே நிற்க...அவளை இறுக்கப் பிடித்தவாறே "அக்கா வந்துட்டியா நான் உனக்காக எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா? ஏன் இவ்வளவு நேரமா வரலை?சொல்லு அக்கா" என்று தன் தலையை உயர்த்தி அவளைப் பார்த்துக் கேட்க…
இவளோ ஒன்றும் புரியாமல் கட்டிக் கொண்ட அந்தப் பெண்ணையே பார்க்க… அவர்களுக்கு முன்னால் இரு வேலை செய்யும் ஊழியர்கள் வந்து நின்றனர்.
அவள் விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டவர்கள் அந்தப் பெண்ணின் கையைப் பற்றி "இங்கே வாம்மா அவங்களை விடு" என்றனர்.
அதற்கு அந்தப் பெண்ணோ "முடியாது நான் வர மாட்டேன்.என் அக்கா வந்துட்டாங்க நான் அவ கூடத் தான் இருப்பேன்" என்றாள்.
இவளோ அந்தப் பெண்ணைத் தடுக்காமல் அங்கு நின்று அவளிடம் பேச்சுவார்த்தை நடத்துபவர்களிடம் "என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு? எங்க கூடிட்டு போறீங்க?" என்று விசாரித்தாள்.
அதற்கு இருவரில் ஒருவர் "மேடம் இந்தப் பொண்ணைப் பற்றி விவரமா சொல்றேன்.முதல்ல இந்தப் பொண்ணை தூங்க வைக்கனும் பிறகு எல்லாத்தையும் சொல்றேன்" என்றார்.
அதற்கு அத்வதா "சரி நான் கூடிட்டு வரேன்"என்று அவர்களிடம் சொல்லி விட்டு கட்டிக் கொண்டு நிற்கும் பெண்ணிடம் "உன் பெயர் என்ன? "
அதற்கு அந்தப் பெண்ணோ "நீ என் அக்கா தானே உனக்கு என் பெயர் தெரியாதா? " என்று திரும்ப அவளிடமே கேட்க….
அதற்குச் சிரித்தவள் "சரிம்மா அக்கா பெயரை மறந்துட்டேன் நீ சொல்லு" என்று நாடிப்பிடித்துக் கேட்க...
அதற்கு அவளோ சிரித்துக் கொண்டு "அக்கா நான் மானவி" என்றாள்.
"ம்ம்ம்… அப்படியா குட் கேளா நான் சொல்றதை நீங்க கேட்கனும் வாங்க நாம உங்க போகலாம்" என்று மானவியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
மானவியோ "அக்கா நீ வெளியே போனேல்ல எனக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கே?"
"உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கித் தரேன்"
"அப்படியா! எனக்கு நிறைய சாக்லேட் வேணும் அப்புறம் என்னை மாதிரியே ஒரு பொம்மை வேண்டும்" என்று அவள் உயரத்திற்கு காட்டினாள்.
"ம்ம்ம்… சரி எல்லாமே வாங்கித் தரேன் ஆனால் ஒன்னேஒன்னு நீ செய்யனும் இங்கே உள்ளவங்க என்னச் சொல்றாங்களோ அதை கேட்கனும் சரியா?"
"அக்கா நீ என் கூட இருந்தால் நான் நீ சொல்றதை நான் கேட்பேன் சரியா? " என்றாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு வந்ததிலேயே மானவியின் அறை வர அங்கே ஒரு டாக்டர் உட்கார்ந்திருந்தார்.
மானவியைக் கண்டதும் "எங்கே பாப்பா போயிட்ட உனக்காக எவ்வளவு நேரமா நான் காத்திட்டு இருக்கேன்னு தெரியுமா? "
"டாக்டர் அங்கிள் நான் என் அக்காவை கூடிட்டு வந்துட்டேன் பாருங்க" என்று அத்வதாவின் பிடித்திருந்த கையை ஆட்டி சிரித்தபடிக் காண்பித்தாள்.
"சரி வாம்மா வந்து பெட்ல படுங்க"என்றதும்
அவளும் அத்வதாவின் கையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் படுக்க… மானவியோ அத்வதாவைப் பார்த்து "அக்கா என் கூடவே இரு" என்று அவள் கையை இறுக்கமாய் பிடித்துக் கொள்ள டாக்டர் அவளுக்கு ஊசிப் போட்டார்.
ஊசிப் போட்ட பத்து நிமிடங்களில் தூங்கியும் போனாள்.பக்கத்தில் இருந்த டாக்டர் அத்வதாவைப் பார்த்து "ரொம்ப நன்றிம்மா" என்றார்.
அவளோ அதற்கு ஒரு புன்னகை மட்டும் பதிலாய் கொடுத்தாள்.
"டாக்டர் மானவிக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க…
"நீங்க?" என்று அவர் கேள்வியோடு நிறுத்த…
பக்கத்தில் வேலை செய்யும் பெண்ணோ மெதுவாக டாக்டரின் காதருகில் "டாக்டர் அவங்க கிருஷ்ண உடையார் ஐயாவுடைய பேத்தி" என்றார்.
அதைக் கேட்ட அவர் சிரித்தபடி "சொல்லுங்க" என்றார்.
"டாக்டர் மானவிக்கு ஏன் இந்த நிலைமை?"
"இரண்டு நாட்களுக்கு முன்னால் இவங்க குடும்பத்தோடு மலைப்பிரதேசத்திற்கு போய் இருக்காங்க போய்ட்டு வர்ற வழியில ஒரு லாரி இடிக்கவும் அவங்க வந்த கார் பெரிய மரத்துல போய் இடிச்சு கார் கவிழ்ந்து விழுந்துச்சு அப்படி கிடக்கும் போது எல்லோரும் மயக்கத்துல இருக்கும் போது இந்தப் பொண்ணோட அக்கா மட்டும் முணங்கல் சத்தம் கேட்டு மயக்கம் தெளிஞ்சு விழிச்சுப் பார்க்கும் போது மானவி மட்டும் வலியில முனங்கிட்டு இருந்திருக்கா இவளுக்கு பக்கத்தில் இருந்ததால் மானவியை கைப் பிடிச்சு ஜன்னல் வழியா வெளியே வர உதவி பண்ணி இருக்காங்க.
மானவி வெளியே வந்ததும் அக்கா நீயும் வான்னு கூப்பிட அந்தப் பொண்ணு நீ மெதுவா போய் யாரையாவது உதவிக்கு கூப்பிடுன்னு சொல்ல….
இவளும் மெதுவா நகர்ந்து போவதற்குள் பெட்ரோல் டாங்கும் லீக் ஆனதுனால கார் இந்தப் பொண்ணு கண்ணு முன்னாலேயே வெடிச்சு இவளோட அப்பா, அம்மா, அக்கா, பாட்டி,தாத்தா எல்லோரும் இறந்துப்போயிட்டாங்க இதை எல்லாம் நேர்ல பார்த்த அதிர்ச்சியில் இந்தப் பொண்ணு கடந்த இரண்டு நாளா தூங்கவே இல்லை அக்கா வருவா வருவான்னு தனக்குள்ளே சொல்லிச் சொல்லி இந்த மாதிரி ஆயிட்டா இது இப்படியே தொடர்ந்ததுன்னா மூளை நரம்புகள் அப்படியே ஸ்டோக் ஆயி பைத்தியம் பிடிக்கிற நிலைமை வரலாம் அதனால முதல்ல இவங்களை நல்ல தூங்க வைக்கிறதுக்காக ஊசிப் போடலாம்னு பார்த்தால் இங்கிருந்து ஓடிப் போய்ட்டா நல்லவேளை நீங்க வந்து உதவி பண்ணீங்க" என்றார்.
அவரது இந்தப் பேச்சைக் கேட்டவள் "இந்த விஷயத்தை எல்லாம் உங்ககிட்ட சொன்னது யாரு? "
"மானவி தான் எல்லோத்தையும் எல்லார்கிட்டேயும் சொன்னாள்"
இதை எல்லாம் கேட்ட அத்வதாவிற்கு ரொம்ப வேதனையாக இருந்தது.விளையாட வேண்டிய அவள் படும் இன்னல்களைப் பார்த்து அவளுக்கும் கவலையாக இருந்தது.அவளது தலையை மெதுவாக தடவி விட்டுச் சென்றாள்.
'மானவி உனக்கு என்னால் முடிந்த உதவியை கண்டிப்பா செய்வேன்" என்று அவள் பார்க்க மானவி அவளின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு இருந்தாள்.
தாத்தா அவளை அழைக்கவே அங்கிருந்து சென்றாள்.தாத்தாவோடு அவள் அங்கு இருப்பவர்களிடம் தாத்தா நலன் விசாரிக்க இவளும் உடன் சென்றாள்.
அங்கு இவர்கள் உள்ளே நுழையும் போது ஒரு வயதானவரைச் சுற்றி மற்ற பெண்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இவர் ஏதோச் சொல்ல… அதைக் கேட்டு மற்றவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அங்கங்கே தனியாய் ஏதோ பலத்தை யோசனையில் அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் இவரின் இந்த செயல்பாடு அவரின் பக்கம் அவளை ஈர்த்தது.
அத்வதா அவரைக் கண்காணிப்பதைக் கண்ட அந்த பாட்டி வந்து முதலில் கிருஷ்ண உடையாரிடம் பேசி அப்படியே அத்வதாவிடம் வந்து பேசலாம் என்று எண்ணி அவர்களை நோக்கி வந்தார்.
முதலில் கிருஷ்ண உடையாரிடம் நலம் விசாரித்து விட்டு "ஐயா இவங்க உங்களோட பேத்தியா?"
அவரோ சிரித்துக் கொண்டு "ஆமாம்" என்றார்.
அவராக வந்து பேசியதைக் கண்ட அத்வதா அவரிடம் "பாட்டி எப்படி உங்களால மட்டும் தன்னையும் சுற்றி இருக்கிறவங்களையும் இவ்வளவு சந்தோஷமாக வைக்க முடியுது?" என்று தன் மனதில் உள்ள எண்ணத்தைப் பற்றி அவரிடம் கேட்க…
அவள் கேட்ட கேள்வியைப் பார்த்து சிரித்தவர் "எல்லாம் மனசு தான் காரணம் அதை நாம எப்படி வைச்சு இருக்கோமோ? அது நம்ம பேச்சையும் கேட்கும் மற்றவங்களையும் விரும்ப வைக்கும்"என்று சொல்லித் திரும்பியவர் "இதுக்குத் தான் என்னை வந்ததிலிருந்து என்னை துருதுருன்னு பார்க்கிறயா?" என்று சொல்லி விட்டு அத்வதாவைப் பார்க்க…
அவளோ அவசரமாக மறுத்து "இல்லை பாட்டி சும்மாத் தான் பார்த்தேன்" என்றாள்.
"அப்போ சும்மாத் தான் பார்த்தியா? நானும் ஏதோ என் அழகைப் பார்த்து தான் என்னையே வைச்சக் கண்ணு மாத்தாமல் பார்க்கிறியோன்னு நினைச்சேன்னு" சொல்ல…
அதைக் கேட்டு அவளும் தாத்தாவும் சிரித்துக் கொண்டனர்.அதற்கு அத்வதா "நீங்க சொன்ன மாதிரி அழகு தான்"என்று சொல்ல….
"அது தான் எனக்கு தெரியுமே" என்று சொல்லி அவர் நடக்கும் போது இவள் அவசரமாக "பாட்டி உங்க பேரு என்னன்னு சொல்லாமல் போறீங்க"
"என் பெயரை இங்க யார்கிட்ட
கேட்டாலும் அவங்களே சொல்லு வாங்க" என்று சென்று விட்டார்.
அவர் சென்றதும் தாத்தா அத்வதாவிடம் அவங்க பேரு காந்திமதி ரொம்ப ஜாலியா பேசுவாங்க ஆனால் அவங்களை ஏத்துக் கொள்ள அவங்க வீட்டு ஆளுங்களுக்கு விருப்பம் இல்லை என்ன செய்யுறது? ஒரு இடத்தில விரும்பப்படுறவங்க இன்னொரு இடத்துல மறுக்கப்படுறாங்க இது தான் எல்லோருடைய நிலைமை" என்றார்.
அதைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
(தொடரும்)