கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -13

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம் -13

தடுமாறி விழப் போனவளைத் தாங்கியபடி அவன் நிற்க… அவளோ அவனைக் கூர்ந்துப் பார்த்துக் கொண்டே அவனிடம் "தவரூபனுக்கு மீசை சின்னதா தானே இருக்கும்.இப்போ என்னடான்னா இவ்வளவு பெரிய மீசை சொரசொரப்பான தாடின்னு ஆளே மாறிப் போயிட்டே" என்று அவளையும் அறியாமல் ஆண்மகனின் கன்னங்களில் தன் மிருதுவான கரங்களால் அவனை வருட…

இத்தனை நாட்களாய் மனதில் வைத்திருந்த அன்போடு கூடிய காதலை அவள் அவனைத் தொடும் தருணம் அவனே சிலாகித்து கண்களை மூடிய படி அவளிடம் இன்னுமாய் நெருங்க….

இதுவரை எந்த ஆண்மகனையும் தொடாதவள் அவனிடம் கொஞ்சம் உரிமையாய் அவன் கன்னத்தை அவள் வருட … அந்த வருடலில் ஏற்பட்ட கூச்சத்தில் அவள் வெட்கமாய் கண்களை மூடி கூச்சத்தில் நாணலிட்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் நேரம் அவன் தன் முகத்தை நெருக்கமாய் கொண்டு வர… இவனின் சூடான மூச்சுக் காற்று அவள் மேல் படவும் சட்டென்று நினைவு வந்தவளாய் முகத்தை திரும்பியவள் அவன் முகத்தை அருகில் காணவும் "ரூபா என்னச் செய்ற?" என்று கத்தவும்…

அவன் பதற்றமாய் பிடித்துக் கொண்டிருந்தவளை "டமார்…" என்று கீழே விட்டான்.

அவளும் தொப்பென்று கீழே விழுந்தாள்.விழுந்தவள் "ஐயோஓஓஓஓ … அம்மாஆஆஆ…" என்று கத்தினாள்.

பதறியபடி நின்ற ரூபன் அதை வெளிக்காட்டாமல் இருக்க… தான் போட்டிருந்த சட்டையை உதறி விட்டான்.

கீழே விழுந்தவள் வலியில் இடுப்பைக் கை வைத்தபடி…

"டேய் ரூபா எதுக்குடா இப்படி என்னை கீழே தள்ளி விட்டே?"

"வேற என்னச் செய்யச் சொல்லுறே? நீ கீழே விழுந்திடக்கூடாதுன்னு தான் நான் உன்னை பிடிச்சேன்.நீ என்னடான்னா என் கையில இருந்து எழுந்திருக்காமல் அப்படியே ஊஞ்சல் நினைச்சுட்டு தொங்கி ஆடிக்கிட்டு இருக்கே, நல்லா வெயிட் வேற போட்டுருக்கே என்னால எப்படி ரொம்ப நேரம் தாங்க முடியும்? அதான் வெயிட் தாங்க முடியாமல் கீழேப் போட்டுட்டேன்" என்றான் அசால்ட்டாக…

"எவ்வளவு திமிரு இருந்தா என்னை பார்த்து குண்டுன்னு சொல்லாமல் சொல்லுவே? இருடா நெட்டான் உன்னை வந்து என்ன செய்றேன்னு பாரு?" என்று எழுந்துக் கொள்ள…

அவளுக்கு வலித்தது வலி தாங்க முடியாமல் "அம்மாஆஆஆ" என்று கத்தினாள்.

"ஏய் அறுந்த வாலு உன் இடுப்பு என்ன கண்ணாடியா? கீழே விழுந்ததும் இப்படி உடைஞ்சு நொறுங்குன மாதிரி கத்துறே? " என்று அவன் கிண்டல் செய்யவும்...

இவளுக்கோ அவனைப் பார்க்க பார்க்க… ஆத்திரமாய் வந்தது.

"ஏன் என்னைப் பார்த்து இப்படி பேச மாட்டே? எல்லாம் உன்னால வந்தது நீ மட்டும் என் அறைக்கு வராமல் இருந்திருந்தால் நான் இப்படி கீழே விழுந்து இருக்க மாட்டேன்ல" என்று அவள் அவன் மேல் பழியைப் போட….

அதைக் கேட்டவன் "நீ சொல்றதும் சரிதான்.நானும் இதுக்கு காரணம் தான் என் கையைப் பிடி நான் உனக்கு உதவி செய்றேன்" என்று கையை நீட்டினான்.

அவள் அவனையும் நீட்டிக் கொண்டிருந்த கையைப் பார்க்க… அவனோ "ம்ம்ம்… பிடிச்சு எழுந்திரு"

அவளும் சரியென்று அவன் கையைப் பிடித்து எழுந்திருக்க… அவன் அவளைப் பிடித்து தூக்கி நிறுத்தவும் அவள் அவன் நெஞ்சில் சாய… அவனுக்கும் ஏனோ இனம்புரியா உவகையாய் இருந்தது.ஆனால் அவன் அதை வெளிக்காட்டவில்லை.

அவளைத் தாங்கிப் பிடித்து அருகில் உள்ள கட்டிலில் உட்கார வைத்தான்.

"நீ இங்கே இரு.நான் போய் யாரையாவது கூடிட்டு வரேன்" என்று அவசர அவசரமாய் வெளியே வந்தான்.

வந்தவன் நீண்ட பெரூமூச்சை விட்டவன் தன் நெஞ்சை தன் கையால் தொட்டுத் தடவி 'ரிலாக்ஸ் ரூபா ரிலாக்ஸ் ரூபா இன்னைக்குத் தானே இவளைப் பார்த்தேன். அதுக்குள்ளே எப்படி மனசு கிடந்து துடிக்குது இனிமேல் அத்வதாகிட்ட நெருங்கிப் போகக் கூடாது பக்கத்தில போனாலே என்னையே மறந்துறேன் ஷ்ஷ்ஷ்ஷாப்பா… முடியலை எல்லாத்துக்கும் பொறுமை வேணும்' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு வெளியில் போய் வேலைச் செய்துக் கொண்ட ஒரு சேவகியை அழைத்து அத்வதாவைப் பற்றி சொல்லி தன்னோடு அழைத்துச் சென்றான்.

அவர் அவனை வெளியில் நிற்கச் சொல்லி விட்டு அத்வதாவிற்கு இடிப்பில் தைலத்தைப் போட்டு தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து விட்டு வெளியே வர… அப்பொழுதும் அவன் அங்கே தான் நின்றுக் கொண்டிருந்தான்.

அந்த சேவகியிடம் அத்வதாவிற்கு "பரவாகிலா"(பரவாயில்லையா)
என்று கேட்டான்.

அதற்கு அந்த சேவகி அவனிடம் "சன்ன கொலிட்டா சரியாகிடே"(சின்ன சுளுக்கு தான் சரியாடுச்சு)என்று சொன்னார்.

அவரிடம் அத்வதாவிற்கு "வித் டன்டோடிகி கரிதிசி"(சாப்பாடு கொண்டு வாங்க)என்றான்.

அதற்கு அந்த சேவகியும் சரியென்று சென்று சென்று விட்டார்.

இவன் உள்ளே செல்ல… அத்வதா படுத்துக் கொண்டிருந்தாள்.

இவனைக் கண்டதும் அவள் எழுந்துக் கொள்ள நினைக்கும் போது "எழுந்துக்காதே அத்வதா படுத்து ரெஸ்ட் எடு"

அவளோ ஒன்றும் சொல்லவில்லை.அமைதியாக இருந்தாள்.அவன் தள்ளிவிட்ட கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அவன் அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் உள்ள இருக்கையை அவளுக்கு அருகில் இழுத்துப் போட்டு அவளைப் பார்க்க உட்கார்ந்தான்.

சேவகி அத்வதாவின் உணவை எடுத்து வந்து அங்குள்ள மேசையில் வைத்துச் சென்றாள்.

அதை அத்வதாவும் கவனிக்கத் தான் செய்தாள்.ஆனால் அவள் தனது அமைதியை தொடர்ந்தாள்.

தவரூபன் அத்வதாவிடம் "அத்வதா உனக்காக சாப்பாடு கொண்டு வரச் சொன்னேன். சேவகி சாப்பாடு கொண்டு வந்துட்டாங்க எழுந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு"

அவள் எதுவும் சொல்லவில்லை.

அவனே தொடர்ந்து பேசினான்."ஹேய் சாரி வதா சும்மா உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு தான் பார்த்தேன்.கடைசியில உனக்கு வேதனையைக் கொடுக்கிற மாதிரி ஆயிடுச்சு என் மேல கோபத்துல இருக்கேன்னு சாப்பிடாமல் இருக்காதே சாப்பிடு ப்ளீஜ்" என்று அவன் கெஞ்ச… அவளுக்கு புதிதாய்,இன்பமாய்,ஆச்சரியமாய் இருந்தது.

அதனால் இதையே தொடரலாம் என்றெண்ணி அந்த அமைதியை தொடர…

"வதா கடைசியா கேட்கிறேன். சாப்பிடுறியா? இல்லையா?" என்று அவன் கெஞ்சலாய் கேட்க…

இவளுக்கோ இந்த விளையாட்டு நன்றாக இருக்க… சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தைத் திருப்பியவாறே படுத்துக் கொண்டாள்.

கடைசியில் அவன் முடிவாக "நீ சாப்பிடலைன்னா போ எனக்கு பசிக்குது நான் சாப்பிடப் போறேன்" என்று எழுந்தவன் மேசைக்கு அருகில் சென்று பார்க்க… ஒரு பெரிய தட்டில் கர்நாடகாவின் ஸ்பெஷல் உணவுகளான பிசிபேளாபாத் ஒரு கிண்ணத்திலும் தட்டில் ரொட்டி, வெள்ளைச் சாதம், ரசம், பொறியல், கூட்டு, அப்பளம்,பாயாசம் என பலவகை உணவுகளின் கலவையாக இருக்க… தவரூபனால் பசியைத் தாங்க முடியவில்லை.

அதனால் தட்டை எடுத்தவன் தட்டின் ஓரத்தில் கொஞ்சமாய் இடம் இருக்க… அதில் பிசிபேளாபாத்தை ஓரம் வைத்து விட்டு அதை முகர்ந்துப் பார்த்து வாசனையை தனதாக்கிக் கொண்டவன் "அத்வதா வாசனை செமையா இருக்கு"

அவன் சொன்னதைக் கேட்டு இவள் தலையை திருப்பி அவன் என்னச் செய்கிறான்? என்று பார்க்க… கையில் தட்டோடு அவளை நோக்கி வர … அதைக் கண்டு அவள் கண்டும் காணாதது போல் இருந்தாள்.

கோபத்தில் அவள் முகம் சிவப்பதை தனக்குள்ளே இரசித்துக் கொண்டவன் அவள் முன்னே சாப்பிட ஆரம்பித்தான்.பிசிபேளாபாத் இரண்டு கவளம் சாப்பிட்டவன் "அத்து என்னா டெஸ்ட் செம? உனக்கு தான் சாப்பிட கொடுத்து வைக்கலை இங்கே பாரு பாயாசம் என்னைப் பார்த்து வா… வான்னு கூப்பிடு" என்று அவன் பாயாசத்தை எடுக்கும் நேரம் அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த பசி தாங்க முடியாமல் எழுந்துக் கொண்டவள் அவன் வாயில் வைக்கப் போன பாயாசத்தை அவனே எதிர்ப்பாரா நேரத்தில் அவன் கையைப் பிடித்து தன் வாய்க்கு அருகில் கொண்டு வந்து அதை அவள் சாப்பிட்டாள்.

அவள் செய்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டு "என்னப் பண்ணுற வதா?"

"நீ என்னப் பண்ணுறேன்னு உனக்குத் தெரியலை. எனக்கு சாப்பிடக் கொண்டு வந்தேன்னு சொல்லிட்டு நீ நல்லா மொக்கு மொக்குறே கொடு இங்கே" என்று அவன் கைகளில் இருந்த சாப்பாட்டை வாங்கி அவள் சாப்பிடத் தொடங்கினாள்.

"ஹேய் இரு" என்று அவன் பேசுவதைக் கேட்காமல் சாப்பிடத் தொடங்கினாள்.அவள் சாப்பிடுவதைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.அவனது சிரிப்பைக் கண்டுக் கொள்ளாதவாறு அவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் இருமல் வர அவன் அவளின் தலையை தட்டி விட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.அதையும் குடித்து விட்டு கைகழுவி விட்டு அவனிடம் "எதுக்குடா நான் சாப்பிட்டுட்டு இருக்கும் போது என்னைப் பார்த்து சிரிச்சுகிட்டே இருக்க?"

"நான் சொல்வேன் நீ கோபப்படக்கூடாது"

"ம்ம்… சொல்லு கோபப்பட மாட்டேன்"

"சேவகி நம்ம ரெண்டுபேருக்கும் சேர்த்து தான் சாப்பாடு எடுத்து வந்தாங்க.ஆனால் நீ நான் சாப்பிட்ட எச்சில் சாப்பாடு தான் சாப்பிடுவேன் அடம் பிடிச்சு சாப்பிட்ட பாரு அங்கே புரிஞ்சுக்கிட்டேன் மாமன் மேல உள்ள பாசத்தை…"என்று சொல்லிச் சிரித்தான்.

அவளோ கோபமாய் அவனைப் பார்த்தவாறு "இதை ஏன் என்கிட்ட முதலிலேயே சொல்லலை?"

"நான் சொல்ல வந்தேன் நீ தான் நான் சொல்றதைக் கேட்காமல் சாப்பிட்டு இருந்தே" என்று அவன் முகத்தைச் சோகமாய் வைத்துச் சொல்ல…

"உ...ன்னை என்னச் செய்றேன்னு பாரு"என்று எழுந்து அவனை அடித்துத் துரத்த முற்பட அவன் வெளியே ஓட… அவளும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தாள்.இடுப்பில் லேசாக வலி இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவனை துரத்தினாள்.

அரண்மனையின் நடுவில் உள்ள ஹாலில் அவன் ஓடி வர… இவளும் பின்னாலேயே வர … சட்டென்று தரையில் கிடந்த தரைவிரிப்பில் கால் தடுக்கி அவன் மேலேயே விழ… அவன் நிலை தடுமாறி கீழே விழ அவனுக்கு முதுகுக்கு மேல இவள் விழுந்தாள்.

அப்பொழுது கிருஷ்ண உடையாரும் குமாரி ராணியும் மருத்துவமனைக்கு போய் விட்டு அரண்மனைக்குள் நுழைய… இவர்கள் இருவரும் கிடப்பதைப் பார்த்துக் கொண்டு வந்தனர்.அவர்களுக்கு பின்னால் ஆரலியும் வந்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் உள்ளே நுழைவதை இவர்கள் இருவரும் கவனிக்காமல் போக… அத்வதா இது தான் நல்ல சமயம் என்று அவன் முதுகுலேயே இரண்டு அடிப் போட்டாள்.அவனோ அலறியபடி…

"ஏய் குண்டம்மா எழுந்திரு என்னால உன் வெயிட்டை தாங்க முடியலை.இதுல அடிக்க வேற செய்றியா? "

"டேய் நெட்டான் யாரைப் பார்த்து குண்டம்மா சொன்னே? உன்னை என்னைச் செய்றேன்னு பாரு" என்று அவன் மேல் அழுத்தமாய் படுத்துக் கொண்டு மொத்து மொத்து என்று மொத்தினாள்.

"ஏய் விடுடி வலிக்குது எழுந்திரு"என்று அவன் கதறிக் கொண்டிருக்க… அவளோ தன் வேலையை செவ்வென செய்துக் கொண்டிருந்தாள்.

தாத்தாவின் வீல் சேர் சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்க்க… அங்கே தாத்தாவும் பாட்டியும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ஆரலிக்குத் தான் முகமே சரியில்லை.

தாத்தாவைக் கண்டதும் அத்வதா அவன் மேலேயிருந்து எழுந்துக் கொள்ள… அடுத்து தவரூபனும் எழுந்துக் கொண்டான்.

தாத்தா இருவரிடமும் "ரெண்டு பேரும் வளர்ந்து என்ன பிரயோஜனம் இருக்கு? இன்னும் குழந்தை மாதிரியே சண்டை போட்டுட்டு இருக்கீங்க?"

உடனே அத்வதா "தாத்தா எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்"என்று ரூபனைக் கைக்காட்ட…

தவரூபனோ "தாத்தா நான் வெளி நாட்டுல இருந்து வந்திருக்கேன் அவள் என்னை கவனிக்கிறதை பாருங்க அடிச்சு கொடுமைப்படுத்துற" என்று அவன் தன் பக்க நியாயத்தைச் சொல்ல…

பாட்டியோ "ரெண்டுபேரும் முதல்ல சண்டையை நிறுத்துங்க .இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் வீட்டுக்கு எல்லோரும் வந்துட்டு இருக்காங்க"என்று கொஞ்சம் கடுமையாய் சொல்லவும் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து "வெவ்வே" என்று கிண்டலடித்துச் சென்றனர்.

போகும் போது தவரூபன் தாத்தாவிடம் "தாத்தா நீங்களும் ஓய்வு எடுங்க.நான் போய் ப்ரெஷ்ஷாகி விட்டு உங்களை வந்துப் பார்க்கிறேன்" என்று தாத்தாவிடம் கைகாட்டி விட்டுச் சென்றான்.

தாத்தா பாட்டியிடம் "ஏன் குமாரி அவங்க ரெண்டுபேரையும் துரத்தி விட்டுட்டே?"

"ஐயோ நான் இப்போ சத்தம் போடலைன்னு வைங்க ரெண்டுபேரும் இப்படியே ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போட்டு சண்டைப் போட்டுட்டு இருப்பாங்க.அதான் ரெண்டுபேரையும் இங்கிருந்து அனுப்பியாச்சு வளர்ந்து ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்க்கிறோமே கொஞ்சமாவது நல்லபடியா பேசலாம்ல அதெல்லாம் கிடையாது சண்டைக் காரங்க மாதிரி சண்டைப் போட்டுட்டு இருக்காங்க"

தாத்தா சிரித்துக் கொண்டே "ஒருவொருக்கொருவர் அந்நியமா இருந்தால் தானே நலம்,விசாரிப்பு எல்லாம் தேவைப்படும்.நெருங்கினவங்களா இருந்தால் ஏன் சந்திக்கலைன்னு கோபத்தைக் கூட இப்படிக் சண்டைப் போட்டு காட்டாலாமே!"என்று தாத்தா இருவரையும் புரிந்தவராய் சொல்ல…

பாட்டியோ "அட போங்கங்க நான் ஒன்னு சொன்னால் நீங்க ஒன்னு சொல்லுறீங்க நான் போறேன்"என்று அவர் செல்ல… ஆரலி தாத்தா சொன்னதையும் இவர்கள் இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டதையும் நினைத்துப் பார்த்தவள் இனிமேல் அத்வதாவிடம் அத்தானை நெருங்க விடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவள் இப்பொழுது அரண்மனைக்கு திரும்ப வந்ததே தவரூபன் இந்தியாவிற்கு வரப் போகிறான் என்று சித்தி சொன்னதால் தான் அவள் அவன் வந்த நாளே வந்திருந்தாள்.ஆனால் இத்தனை வருடங்கள் கழித்தும் அத்வதாவிடம் மட்டும் இத்தனை உரிமையாய் அவன் சண்டைப் பிடிப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

விருந்திற்குச் சென்ற அனைவரும் வீட்டிற்கு திரும்ப வந்து அவனைச் சந்தித்து நலம் விசாரித்து விட்டுச் சென்றனர்.

இரவு தாத்தாவின் அறைக்கு வந்தான்.அவர் உட்கார்ந்திருந்தார்.அவரிடம் எப்பொழுதும் போல் பல கதைகள் பேசி சிரித்தான்.அப்பொழுது அவன் தாத்தாவிடம் அவன் புதிதாக ஆரம்பிக்க உள்ள இல்லத்தைப் பற்றிச் சொன்னான்.

அவனது யோசனையைக் கேட்டு அவருக்கு ஆச்சரியமாக இருந்தது."என்னச் சொல்ற ரூபா இது போல எனக்கு தோன்றியதே கிடையாதே! நல்ல யோசனையா இருக்கு நீ அதையே செய்ப்பா" என்றார்.

அவன் சொன்ன யோசனை இது தான். பெரிய பணக்காரங்களில் உள்ள வயதானவர்களைப் பார்க்க யாரும் இருப்பதில்லை.அவர்களால் தன்னிச்சையாய் எதுவும் செய்ய முடிவதில்லை.அதோடு அவர்களை வெளியேவும் விடுவதில்லை.அவங்களுக்கு பிடிச்ச மாதிரி யாரும் சமைச்சு கொடுக்கிறது இல்லை.

இன்னும் சிலபேர் வீட்டில பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவங்க தனிமையில் இருக்காங்க.இதனால் அவர்கள் தனிமையில் இருந்து மனஉளச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

இந்த மாதிரி உள்ளவர்களை பக்கத்தில் உள்ள எதாவது ஒரு சுற்றுலாத்தளத்திற்கு அனுப்பி வைத்து அவர்களை கவனித்து குடும்பத்தோடு இருக்கிற மாதிரி ஒரு பீல் கொண்டு வருவதற்காக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவங்களை வைக்கும் போது அவங்க ரொம்ப கவனமா பார்த்துப்பாங்க.

இதுக்காக அவங்க விருப்பப்படி எதாவது ஒரு நிதி மாதிரி கொடுத்தாங்கன்னா ஆதரவற்றோர்ல உள்ளவங்களுக்கு ஒரு வருமானம் கிடைக்குது இவங்களுக்கு நிம்மதி வெளியே போயிட்டு வந்த சந்தோஷமும் கிடைக்குது அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா இதை மாசத்துல ஒருநாள் செய்யலாம் முடிந்தால் குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்று அவன் தன்னுடைய யோசனையைச் சொல்ல…

தாத்தாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.இந்த சின்னவயதில் தவரூபன் மற்றவர்களுக்கும் உதவ நினைப்பதை நினைத்து மகிழ்ந்தார்.அவனிடம் இந்த முறையை உடனே செயல்படுத்தச் சொன்னார்.

மறுநாள் தன்னோடு இல்லத்திற்கு வர அழைப்பு விடுத்தார்.அவனும் வருகிறேன் என்று சொல்லிச் சென்றான்.தாத்தாவின் அறையில் இருந்து வெளியே வந்தவன் அத்வதாவின் அறைக்கு செல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்தவன் போகலாம் என்ற முடிவோடு அவள் அறைக்கு சத்தம் காட்டாமல் மெதுவாய் வந்தான்.

திறந்திருந்த அறையில் அவள் மும்மூரமாக ஓவியம் வரைந்துக் கொண்டிருந்தாள்.ஏதோ ஒரு ஆணிண் படத்திற்கான ஆரம்பம் போல் இருந்தது.

அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.கையில் உள்ள தூரிகையை தன் உதடுகளில் பிடித்துக் கொள்ள அந்த வர்ணம் அவள் கன்னங்களில் அங்கும் இங்குமாய் லேசாய் தெளித்தவாய் இருக்க… அந்த ஓவியத்தின் காகிதத்தை கையில் ஏந்தி மேலும் கீழுமாக திருப்பித் திருப்பி பார்த்து விட்டு அதை இடத்தில் வைத்து விட்டு உதடுகளில் இருந்த தூரிகையை கையில் எடுத்துக் கொண்டு அந்த காகிதத்திடம் "இங்கே பாரு நான் வரையப்போறேன். நான் நினைத்தது சரியென்றால் இந்த ஓவியம் அழகாக வரும்.நான் நினைத்தது தவறென்றால் இந்த ஓவியம் சரியாக வராது சொல்லுவதை சொல்லி விட்டேன் அப்புறம் நீ விட்ட வழி" என்று அவள் வரையத் துவங்கினாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமான பேச்சைக் கேட்டு 'இவள் இன்னும் மாறவில்லை அப்படியேத் தான் இருக்கிறாள்' என்று அவன் நினைத்து சிரித்து விட்டுச் செல்ல…
அவளோ அவன் தன் மனதில் இருக்கின்றானா? என்ற சோதனையில் தான் அவனை வரைந்துக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள்…

அவள் தாத்தாவோடு இல்லத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டு நிற்க… அவர்களோடு தவரூபனும் வந்து நிற்க அவனுக்கு பின்னால் ஆரலியும் வந்து நின்றாள்.

(தொடரும்)

தாங்கியபடி அவன் நிற்க… அவளோ அவனைக் கூர்ந்துப் பார்த்துக் கொண்டே அவனிடம் "தவரூபனுக்கு மீசை சின்னதா தானே இருக்கும்.இப்போ என்னடான்னா இவ்வளவு பெரிய மீசை சொரசொரப்பான தாடின்னு ஆளே மாறிப் போயிட்டே" என்று அவளையும் அறியாமல் ஆண்மகனின் கன்னங்களில் தன் மிருதுவான கரங்களால் அவனை வருட…

Top