என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம்-14
அத்வதா ரூபனைப் பார்க்க… அவனும் அவளைப் பார்த்தான்.அவனுக்கு பின்னால் ஆரலி வந்து நின்றதை இருவரும் சேர்ந்து பார்த்தனர்.
தாத்தா மூவரையும் பார்த்துச் சிரித்தார்."தாத்தா நம்ம ஷாப்பிங்கோ, இல்லை விருந்து நிகழ்ச்சிக்கோ போகலை இல்லத்திற்கு போறோம்.அது இங்கே உள்ளவங்களுக்கு தெரியுமா தாத்தா?" என்று கேட்டாள்.
"எங்களுக்கு எல்லாம் தெரியும்.தெரிஞ்சு தான் வர்றோம் அப்படின்னு சொல்லுங்க தாத்தா"
"ஏன்டா ரூபா அவ பக்கத்துல தானே இருக்கா நீ சொன்னது அவளுக்குத் தான் கேட்குமே இதை நான் வேற சொல்லனுமா?" என்று அவர் தவரூபனைப் பார்த்து கேட்டார்.
அவனோ தாத்தாவைப் பார்த்து கண்ணடித்தான்.தாத்தா அவனைப் பார்த்து சிரித்தார்.அவர்கள் இரண்டுபேரையும் இவள் கவனிக்கவில்லை.
அத்வதா தாத்தாவின் வீல் சேரின் கைப்பிடிகளைப் பிடித்து தள்ளிக் கொண்டு வரும் நேரம் அவன் அருகில் வந்து "இன்னைக்கு தாத்தா என்னோட பொறுப்புல இருக்கட்டும்" என்று அவன் கைப்பிடியைப் பிடித்தான்.
அவன் சொல்வதைக் கேட்டு கோபமுற்ற அத்வதா "எப்பொழுதும் தாத்தாவை நான் தான் கவனித்துக் கொள்வேன்.இன்னைக்கு நீ புதுசா வந்துக் கேட்டதும் ஒத்துக்கொள்வேனா?" என்றாள்.
இவர்கள் இருவரும் தாத்தாவை கவனித்துக் கொள்ள சண்டைப் போடுவதைக் கண்ட ஆரலி 'இவங்க ரெண்டுபேருக்கும் வேறு வேலையே இல்லை.இந்த தாத்தாவை வேலைக்காரங்களிடம் சொன்னால் அவங்க கவனிச்சுட்டு போறாங்க அதை விட்டுட்டு நான் பார்க்கிறேன் நீ பார்க்கிறேன்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க'என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து சிரித்தாள்.
"ம்ம்… ஓகே தாத்தாவே சொல்லட்டும்.இன்னைக்கு யார் அவங்ககூட வரட்டும் என்பதை தாத்தாவே முடிவெடுக்கட்டும்"என்று தாத்தாவைப் பார்த்துச் சொன்னான் தவரூபன்.
உடனே தாத்தா "அத்வதா என்றைக்கும் நீ தானே என்னைப் பார்த்துக் கொள்வாய்.இன்று ரூபன் கூட நான் இருக்கிறேன்" என்றார்.
அதைக் கேட்டதும் அத்வதாவிற்கு அழுகையாய் வந்தது.அதை அடக்கிக் கொண்டவள் "தாத்தா நான் வரலை.நீங்க மட்டும் போய்ட்டு வாங்க" என்றாள்.
அதைக் கேட்டதும் 'அப்பாடா இவ வராமல் இருந்தால் தான் நல்லது'என்று நினைத்தாள்.
தாத்தா அத்வதாவைக் கண்டு "அத்வதா அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.உனக்காக அங்கே எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க வாங்க போகலாம்"என்று தாத்தா கண்டிப்புடன் சொல்ல… நால்வரும் ஒன்றாகச் சென்றனர்.
காரில் தவரூபனுக்கு அருகில் வந்து ஆரலி அமர்ந்துக் கொண்டாள்.அவளிடம் அவன் படிக்கும் படிப்பைப் பற்றியும் விண்கா மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.
அத்வதாவிற்கு அவர்கள் இருவரும் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அமைதியாக வந்தாள்.
தவரூபன் ஆரலியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அவள் மேலே இருந்தது.ஆரலியிடம் பேசும் பொழுது "ஆரலி இந்த மாதிரி விஷயமெல்லாம் உன் அக்காக்கு தெரிய வாய்ப்பில்லை தானே" என்று அவளை வம்பு இழுக்க அவன் பேசினான்.
அதற்கு ஆரலி "அத்வதாவிற்கு நம்ம பள்ளியைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.ஆனால் எல்லா பள்ளிலேயும் ஒரே மாதிரி தானே!"
அதைக் கேட்டு வாயைப் பொத்தி சிரித்த அத்வதா "இந்த அசிங்கம் தேவையா நண்பரே"
அவனோ அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
அதைக் கேட்ட அத்வதா "இப்போ என்னைப் பார்த்து கழுதைன்னு சொல்லுறியா?"
"நான் ஒன்னும் அத்வதா கழுதைன்னு சொல்லலையே"
"இதோ இப்ப சொன்னேல்ல"
"நீ கேட்ட… நான் சொன்னேன் இதுக்கெல்லாமா கோபப்படு வாங்க"
"போடா நெட்டான்"
"போடி குண்டு" என்றதும்
"தாத்தா இங்கப் பாருங்க இவன் என்னைப் பார்த்து குண்டு சொல்றான்.என்னைப் பார்த்தால் குண்டு மாதிரியா இருக்கேன் அதான் நான் வரமாட்டேன்னு சொன்னேன் நீங்க தான் என்னை வரச் சொன்னீங்க இப்போ பாருங்க தாத்தா இவன் இதே மாதிரி அங்கே பேசினால் எல்லோரும் என்னை பார்த்து சிரிப்பாங்க" அவள் தாத்தாவிடம் கோபமும் கெஞ்சலாய் சொன்னாள்.
உடனே தவரூபன் "ஏற்கனவே எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பாங்க நான் சொல்லித் தான் தெரிய வேண்டியது இல்லை"
"தாத்தா…" அவள் கத்த…
"டேய் ரூபா சும்மா இருடா அவளைப் போட்டு கிண்டல் பண்ணாமல் வா"
"ஓகே தாத்தா நீங்க சொன்னதுனால விடுறேன்" என்றான்.
அதற்கு பிறகு இல்லத்திற்குச் சென்றனர்.இல்லத்திற்கு போன பிறகு ஆரலியும் ரூபனும் ஒன்றாக
சுத்தினர். அத்வதா காந்திமதி பாட்டி மற்றும் சாந்தனா, மானவியோடு பேசிக் கொண்டு இருந்தாள்.
அவள் அவர்களோடு இருப்பதைக் கண்டு அவர்களுக்கு எதிராக உட்கார்ந்தவன் அவள் சிரிப்பதையும் கைகளை ஆட்டிக் கொண்டு பேசுவதையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஆரலி ரூபனோடு நெருக்கமாக உட்கார்ந்திருந்தாள்.அவன் ஒன்றும் சொல்லவில்லை.அவன் கவனம் முழுவதும் அத்வதாவின் மேல் இருக்க ஆரலியை அவன் கவனிக்கவில்லை.
ஏதேச்சையாக திருப்பிப் பார்த்த அத்வதா அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளுக்கு ஏனோ ஒருவித தயக்கமாய் இருந்தது.ஆனால் அவள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் ஆரலி அவனை விட்டு நகர்ந்துச் சென்ற நேரம்…
திடீரென்று அவர்கள் நால்வரின் முன்னால் வந்து நின்றான் தவரூபன்.முதலில் பாட்டியிடம்
"வணக்கம் பாட்டி என்கிட்ட பேசமாட்டீங்களா?"என்று கேட்டதும் அத்வதா எழுந்து நின்றுக் கொண்டாள்.
"அப்படி எல்லாம் ஒன்னுமில்லை தம்பி"அவர் சிரித்துக் கொண்டு பதிலளித்தார்.
மானவி அவனிடம் "சாருக்கு நீங்க சொந்தமா? "
"ம்ம்… அப்படி கேட்கக் கூடாது.உன் அக்காக்கு நான் என்ன முறைன்னு கேளு"என்று அவள் அருகில் வந்து தோளில் கைப் போட்டான்.
அவனின் இந்த செயலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.சட்டென்று தோள்களை உலுக்கி விட்டு நகர்ந்து செல்ல முற்படும் போது அவனின் கை பலமாக அவளைப் பிடிப்பது போல் அவன் பிடித்துக் கொண்டிருப்பது போல் போட்டுக் கொண்டிருந்தவன் இன்னும் நெருங்கி நின்றான்.
அவனின் செயல்களை சாந்தனாவும், காந்திமதி பாட்டியும் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
அவளைப் பார்த்து "என்னை இவங்ககிட்ட அறிமுகப்படுத்த மாட்டியா? "
"ஹான்… கண்டிப்பா" என்று அவனை முறைத்துக் கொண்டு "பாட்டி இவங்க தவரூபன்.என்னோட மாமா" என்று அறிமுகப்படுத்தினாள்.
"இப்போ புரிஞ்சுதா குட்டிப் பொண்ணு நான் யார் என்று?" என்று மானவியைப் பார்த்து கேட்டான்.அவளும் ஆமாம் என்பது போல் தலையத்தாள்.
அப்பொழுது ரூபனைத் தேடி ஆரலியும் அவர்கள் அருகில் வந்தாள்.தவரூபன் அத்வதாவிற்கு அருகில் நிற்பதைப் பார்த்து கோபமுற்றவள் "அத்தான் தாத்தா கூப்பிடுறாங்க" என்று பொய் சொன்னாள்.
ஆரலியைக் கண்டதும் அத்வதா சிரித்துக் கொண்டு "இவ என்னோட தங்கச்சி ஆரலி" என்று அவர்களிடம் அறிமுகப்படுத்த அவள் அதை மதிக்கவோ கண்டுக் கொள்ளவோ இல்லை.
மாறாக அவனை இங்கிருந்து அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தாள்.ஆரலியின் மரியாதை அற்ற செயல் அவளுக்கு ஏதோ ஒன்று போல் அவமானமாய் இருந்தது.
அவளது முகமாற்றத்தைக் கண்ட தவரூபன் ஆரலியிடம் "ஆரலி ஒருத்தவங்க கிட்ட நம்மளைப் பற்றி அறிமுகப்படுத்தினாள்.பதிலுக்கு நாம மரியாதை செலுத்தனும்னு உனக்கு தெரியாதா?" அவன் கொஞ்சம் அதட்டலாய் கேட்டான்.
அதற்கு ஆரலியோ "இவங்கெல்லாம் மரியாதை கொடுக்கிற அளவுக்கு இவங்க ஒன்னும் பெரிய ஆள் இல்லை" என்றாள்.
அவளது பதில் அங்குள்ள எல்லோருக்கும் ஒரு அசவுகரியத்தை கொடுக்கத் தான் செய்தது.
அவள் மேலிருந்து தன் கையை எடுத்தவன் ஆரலி பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.அதனால ரூபன் அவளை விடுவதாக இல்லை.அவளிடம் "ஆரலி அவங்க பெரிய ஆளாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை விட வயதில் மூத்தவர்கள் அதற்காக அவங்களுக்கு மரியாதை கொடு" என்றான் கண்டிப்போடு….
அவனது இந்த கண்டிப்பான பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை.ஆனால் ரூபன் தன்னிடம் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று வெளிக்காக "வணக்கம்" என்று மரியாதையாகச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆரலி சென்றது அத்வதாவிற்கு வருத்தமாக இருந்தது.ஆனால் என்னச் செய்ய? ரூபனின் அவளை விடாமல் பிடித்துக் கொண்டான்.அதனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாது.அதோடு அவன் மற்றவர்களிடம் மரியாதையாக நடந்துக் கொண்டது அவன் மேல் அவளுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.
எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்துச் சேர்ந்தனர்.ஆரலி ரூபன் மீது கோபமாக இருப்பாள் என்று அவள் நினைத்தாள்.
ஆனால் அன்றிரவே இருவரும் தோட்டத்தில் ஒன்றாய் சிரித்துப் பேசிக் கொண்டு நடந்தனர்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.தவரூபன் அவளை விட ஆரலியிடம் நன்றாய் பழகுவதாய் எண்ணிக் கொண்டாள்.
இவளோடு எப்போதும் சண்டை,வாக்குவாதமாய் இருப்பதால் அவள் அப்படி நினைத்துக் கொண்டாள்.
ஆனால் மனதில் அவனை நினைத்துக் கொண்டு ஓவியம் வரைவதை அவள் விடவே இல்லை.காரணம் அவள் ஒரு விஷயத்தில் மனம் லயித்துப் போய் இருந்தால் தான் அந்த ஓவியத்தை அவளால் சரியாய் வரைய முடியும் என்று அவள் நம்பினாள்.அதனால் அவன் மேல் மனம் நாடுகிறதா? என்பதைக் கண்டுக் கொள்ள அவள் வரைவதை தொடர்ந்துக் கொணௌடிருந்தாள்.
இல்லத்திலிருந்து வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு…. தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.அதனால் அரண்மனையில் எல்லோரும் பதற்றமாகவே இருந்தனர்.
தாத்தாவை மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டில் வைத்தே மருத்துவம் பார்த்தனர்.அத்வதாவும் தாத்தாவை ஒரு தடவை தான் போய் பார்க்க முடிந்தது.அதற்கு மேல் அவளை பார்க்க அனுமதி இல்லை.அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
ஒருவாரம் இதே நிலைமையே தொடர்ந்தது.கடைசியில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.இதைக் கேட்டு அத்வதா மிகவும் வேதனையடைந்தாள்.அவளிள் மிகப் பெரிய தைரியமே அவளுடைய தாத்தா தான். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.எந்த நேரமும் தாத்தாவை நினைத்து அழுதுக் கொண்டிருந்தாள்.
அதை அவள் பாட்டி முன்னால் காட்டுவது கிடையாது.பாட்டி இன்னும் வேதனையடைவார் ன்று அமைதியாக இருந்தாள்.அவளின் முகமாற்றத்தை அவனும் கவனிக்கத் தான் செய்தான்.ஆனால் அவள் அவனின் கண்களில் படும்படி அவள் வரவே இல்லை.தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.
மருத்துவனைக்குச் செல்லும் போது கிருஷ்ண உடையார் தன் பேத்தியை அழைத்தார்.அத்வதாவும் அவருக்கு அருகில் வந்து நின்றாள்.அத்வதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெதுவாக "தாத்தாக்கு ஒன்னும் இல்லை.நீ பயப்படாதே சீக்கிரம் வந்துடுறேன்" என்று புன்னகைக்க முடியாமல் புன்னகைத்துச் சொன்னார்.
அதைக் கேட்டு அவளுக்கு ஆறுதலாய் இருந்தாலும் மனதில் சொல்லா வண்ணம் துயரம் வந்தது.அதனால் உதடுகள் புன்னகையைச் சிந்தினாலும் கண்கள் தன்னால் கண்ணீரைச் சுரந்தது.அவளுக்கு வீட்டில் உள்ள எல்லோரும் அடுத்தடுத்தாய் சூழ்ந்துக் கொண்டனர்.
தவரூபன் அருகில் வந்ததும் அவனைக் கண்களால் அழைத்தார்.அவன் தன் தலையை குனிந்து நிற்கும் போது யாருக்கும் கேட்காதவாறு "அவளை பத்திரமாய் பார்த்துக்கோ"என்று அவளைப் பார்த்து தாத்தி முணுமுணுத்தார்.
அவர் சொன்னதைப் புரிந்துக் கொண்டவன் சிறு தலையசைப்போடு நம்பிக்கைத் தரும் முறையில் தாத்தாவின் கைகளை அழுத்தமாய் பிடித்தான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை எவரும் அறியவும் இல்லை.கவனிக்கவும் இல்லை.
ஆனால் இதைப் பற்றி தாத்தா ஏற்கனவே ஒருவரிடம் பேசி விட்டார்.
எல்லோரையும் சந்தித்து விட்டு மருத்துவமனைக்குச் சென்ற கிருஷ்ண உடையார் இரண்டு நாட்கள் கழித்து உயிரற்ற உடலாய் அரண்மனைக்கு வந்தார்.
அவர் உலகத்தைச் சென்றதை ஏற்றுக் கொள்ளும் மனம் பக்குவத்தில் இல்லாமல் இருந்தாள் அத்வதா.அந்த அரண்மனையில் பாட்டிக்கு அடுத்ததாக தாத்தாவை எண்ணி அழுதுக் கொண்டிருந்தாள்.
தாத்தா இறந்து ஒரு வார நாட்கள்
கடந்தன.ஆனால் அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.தவரூபனால் அத்வதாவிற்கு எந்த ஆறுதலும் சொல்ல முடியவில்லை.அவள் தன் தாயின் மடியில் இருந்ததை விட தாத்தாவின் மடியில் செல்லப் பேத்தியாக இருந்தது தான் அதிகம்.மாதேவி சாப்பாடுக் கொடுத்தாலும் சாப்பிடாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.
அவளது நிலைமையை எண்ணி கவலைப்பட்ட ரதன் அத்வதாவை கிருஷ்ண உடையாரின் அறைக்கு அழைத்து வந்தார்.அவள் வேண்டாம் என மறுத்தும் அவளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார்.தாத்தாவின் அறையைக் கண்டதும் தாத்தா அமரும் நாற்காலியைப் பார்த்து… "அப்பா தாத்தா இந்த நாற்காலில உட்கார்ந்து தான் என்கிட்ட பேசுவாங்க. ஏன் அப்பா இந்த அறைக்கு என்னை கூடிட்டு வந்தீங்க தாத்தாவோட மூச்சுக் காற்றும் அவங்களோட நினைவும் இங்கே நிறைந்து இருக்கு" என்று அழத் தொடங்கினாள்.
அவளது தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த ரதன் "அத்வதா தாத்தாவைப் பற்றி இவ்வளவு யோசிக்கிற நீ ஏன் தாத்தா விட்டுச் சென்ற விஷயங்களையும், சொல்லித் தந்த நற்காரியங்களையும் செய்றது மூலமாகத் தான் தாத்தாவோட செல்லப் பேத்தியாக இருக்க முடியும்.இல்லைன்னா தாத்தாக்கு இப்படி உன்னை பார்த்தால் பிடிக்குமா? பிடிக்காதுல்ல அதனால தாத்தா சொன்ன விஷயங்களை நீ உன் செயலில் காட்டு அதன் மூலமாகத் தான் தாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார் நீ இப்போ பாட்டிக்கு ஆறுதலா இரும்மா"என்றார்.
அப்பா சொன்னதை நினைவில் கொண்டவள் "சரிங்க அப்பா நீங்க சொல்றது மாதிரியே இருக்கிறேன்" என்றாள்.
மறுநாளிலிருந்து அத்வதா தாத்தாக்கு செய்பவனை எல்லாம் பாட்டிக்கு செய்யத் தொடங்கினாள்.முதலில் வேண்டாம் என மறுத்தவர் பின்பு அவளது உண்மையான அன்பைப் பார்த்து ஒத்துக் கொண்டார்.
அத்வதா மறுபடியும் இல்லத்திற்குச் சென்று அங்கே உள்ளவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை
பார்க்கத் தொடங்கினாள்.
தாத்தா இறந்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அடுத்த பட்டத்து இளவரசனை நியமிக்க வேண்டிய நாளும் வந்தது.
(தொடரும்)