என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -14
கிருஷ்ண உடையாரின் இறப்பிற்கு பின் ரதனுக்கு அடுத்ததாக பட்டத்து இளவரசனை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்தது.
மாதேவியின் தங்கை தேவி தன் கணவனுக்குத் தான் பட்டத்து இளவரசன் பதவி கிடைக்கவில்லை.ஆனால் தன்னுடைய மகன் பிரகத்தன் தான் அடுத்த ஆண் வாரிசாக இருப்பதால் அவனுக்குத் தான் நிச்சயம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பினாள்.
இதற்கிடையில் தவரூபன் அப்பாவின் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தான்.
பட்டத்து இளவரசனை அறிவிக்கப் போகிறார்கள் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அத்வதாவிற்கும் தவரூபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் போவதாக பிருந்தா சம்பந்தம் பேசி திருமணத்தைப் பற்றி பேச வந்தார்.
மாதேவியிலிருந்து இந்த விஷயம் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தைப் பற்றி நேராக பிருந்தாவிடமே கேட்டார் மாதேவி.
"என்ன திடீர்னு அத்வதா கல்யாணத்தைப் பற்றி பேச வந்து இருக்கே?"
"அது அண்ணி நான் திடீர்னு வரலை.அண்ணன் தான் உடனே போன்ல அழைத்து அத்வதாவை தவரூபனுக்கு நிச்சயம் பண்ண சம்மதமான்னு கேட்டாங்க நானும் உடனே கிளம்பி வந்துட்டேன்"
என்றார்.
அருகில் இருந்த தேவிக்கு அத்வதாவின் திருமணச் செய்தியைக் கேட்டு பிடிக்கவேயில்லை.அதனால் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மாதேவி யோசனையோடு "பிருந்தா இன்னும் அவளுக்கு திருமணம் பண்ணுவதற்கான வயசு வரலையே"என்றார்.
அவர் அப்படிச் சொல்வதும் அங்கே வந்த "ரதன் அதெல்லாம் கல்யாண வயசு வந்தாச்சு அத்வதாவிற்குத் தான் பத்தொன்பது வயசு பிறக்கப் போகுதே பின்னே என்ன?"
"என்ன இருந்தாலும் அவகிட்டயும் இதை பற்றி பேசி அவளுக்கும் விருப்பமான்னு கேட்கலாமே" என்று மாதேவி தயங்கி தயங்கிச் சொன்னார்.
ரதன் எதாவது அதிரடி முடிவு எடுப்பதாக இருந்தால் இப்படித் தான் யாரிடமும் எந்த முடிவும் கேட்காமல் விஷயத்தை செய்து முடித்து விட்டு சொல்வார்.அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களின் நிலைமை அவ்வளவு தான் இதை நினைத்து தான் மாதேவி தயங்கி பேசினார்.
"மாதேவி அத்வதாவிற்கு எது நல்லதுன்னு என்னையும் மாமாவைத் தவிர வேற யாரால் யோசிக்க முடியும்.அதனால் இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
ரதன் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு நெகிழ்ந்தவர் "என்னங்க என்னச் சொல்லுறீங்க? அப்பாவா சொல்லிட்டு போனாங்க?" என்று அவர் ஆச்சரியமும் சந்தோஷத்துடன் கேட்டார்.
"ஆமாம் இதைப் பற்றி மாமா என்கிட்ட ஏற்கனவே பேசி முடிவு பண்ண விஷயம்"
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேவிக்கு எரிச்சலாக இருந்தது.'இந்த மாமா எப்பொழுதும் ஏன் பொய் சொல்கிறார்? அப்பா என்ன முன்னாடியே கணித்து விட்டா சொல்லி சென்றிருக்கிறார்?' என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது…
ரதன் அதோடு "அத்வதா தவரூபன் திருமணம் முடிந்த கையோடு தவரூபனுக்கு அடுத்த பட்டத்துஇளவரசனுக்கான பட்டம் கொடுக்க வேண்டும்" என்றார்.
அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்தனர்.பிருந்தாவுக்கும் இந்த விஷயம் இப்பொழுது தான் தெரிய வந்தது.அவரும் அதே அதிர்ச்சியோடு இருந்தார்.அப்பொழுது மேலிருந்து கீழே இறங்கி வந்த ஆரலியின் காதிலும் விழுந்தது.அவளும் அங்கேயே நின்று விட...
இதை எல்லாம் கேட்ட தேவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
உடனே ரதனிடம் "மாமா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இந்த பட்டத்து இளவரசன் உங்க குடும்பத்துக்கு மட்டும் சொந்தம்னு நினைச்சு உங்க தங்கச்சி மகனுக்கு கொடுக்கிறீங்க? இந்த மாதிரி நீங்க பண்ணுறது தப்பா தெரியலையா? " அவள் ஆவேசமும் கோபமாய் கேட்டாள்.
தன் கணவனை தன் தங்கையே எதிர்த்து கேள்வி கேட்டதை பொறுக்க முடியாத மாதேவி "தேவி யார்க்கிட்ட பேசுறோம்னு யோசிச்சு பேசு"
"நான் யார்க்கிட்ட பேசுறேன்னு எனக்கு நல்லா தெரிஞ்சுத் தான் பேசுறேன்.எப்படி உன் பொண்ணுக்கு கிடைக்கப் போகுற ராணிப்பட்டம் கிடைக்காமல் போயிடும் நினைச்சு தானே அவசரப்படுறா?"
"தேவி நீ பேசுறது எதுவும் சரியில்லை".
"என்ன சரியில்லை? நம்ம குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததுனாலத் தானே அடுத்த பட்டத்து இளவரசனை தேர்ந்தெடுக்கிறோம்.அதான் என்னோட மகன் பிரகத்தன் இருக்கிறானே அவன் இருக்கும் போது எதுக்கு தவரூபனை பட்டத்து இளவரசனாக அறிவிக்கனும்? அவன் பட்டத்து இளவரசனாக இருப்பான்" என்றாள்.
அவளது ஆணவமான பேச்சைக் கேட்டு மாதேவி அப்படியே வாயை மூடிக் கொண்டாள்.
ஆரலி தவரூபனுக்கும் அத்வதாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்கு விடையைத் தெரிந்துக் கொள்ள அவள் அங்கேயே சத்தம் காட்டாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட ரதன் "தேவி இந்த பட்டம் உன்னுடைய குடும்பத்திற்கானது மட்டும் கிடையாது என்னுடைய குடும்பத்திற்கானது நான் சொன்னால் நீ என்னச் செய்வே? என்னுடைய தாத்தா பட்டத்து இளவரசராக இருந்தது உனக்கு தெரியாதா? அப்பொழுதும் இந்தப் பக்கம் மாமாவும் அந்தப் பக்கம் என்னோட அப்பாவும் ஆண் வாரிசாக இருந்தாங்க. ஆனால் என்னோட தாத்தா மாமாவைத் தானே அடுத்த பட்டத்து இளவரசனாக அறிவித்தார்கள்" என்றான்.
அதைக் கேட்டு தேவி கொஞ்சம் ஆடித் தான் போனாள்.ஆனால் அதற்கும் அவர் பதில் தந்தாள்.
"அது வந்து தாத்தா இரண்டாவது மனைவிக்கு பிறந்தவங்க அதனால கொடுத்து இருக்க மாட்டாங்க"
"நீ சொல்றதும் உண்மை தான் தேவி.என்னோட அப்பா இரண்டாவது மனைவிக்கு பிறந்தவங்க தான்.பாட்டிக்கு குழந்தையே பிறக்காமல் இருந்ததினாலத் தானே இரண்டாவது கல்யாணம் பண்ணாங்க. ஆனால் அவரும் என் தாத்தாவோட நேரடி ஆண் வாரிசு தானே அப்படி இருந்தும் என்னோட தாத்தா ஏன் மாமா பட்டத்து இளவரசனாக அறிவித்தார்கள்? என்று உனக்கு காரணம் தெரியுமா?" என்று ரதன் அடுத்தடுத்த கேள்விகளை கேட்டார்.
தேவி பதில் தெரியாமல் விழித்து நின்றாள்.ஆனால் தன் மகனை அடுத்த பட்டத்து இளவரசனாக முடி சூட்டுவதில் உறுதியாக நின்றாள்.
இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தில் தங்களது அறையில் இருந்த எல்லோரும் வெளியே வந்தனர்.
அத்வதா கல்லூரியில் ஏதோ சிறப்பு வகுப்பு இருப்பதால் சென்று இருந்தாள்.குமாரி ராணியும் இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த பேச்சுக்களை கேட்டுக் கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
பிரகத்தன், விண்கா, திவாகர் என அரண்மனையில் உள்ள அனைவரும்
அங்கே வந்தனர்.
குமாரி ராணியைக் கண்டதும் ரதன் பேசாமல் அமைதியாக இருந்தார்.அவரைப் பொறுத்தவரை இந்தக் குடும்பத்தின் அடுத்த பெரியவராக அவர் இருப்பதால் ரதன் அமைதியாக நின்றார்.
தேவி அம்மாவின் அருகில் வந்து "அம்மா மாமா இப்போ தான் ராஜாவாகி விட்டதால் அவரே எல்லா முடிவையும் எடுக்கிறார்.இது எல்லாம் சரி வராது நான் சொல்றதைக் கேளுங்கம்மா" என்று அவள் தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்கும் முன் அவளைப் பார்த்து கை நீட்டி "நீ எதுவும் என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லை.நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் வந்தேன், நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"
"என்ன கேள்வி அம்மா?" என்று தேவி ஆர்வமாய் கேட்டார்.
"அரண்மனையில் உள்ள முடிவுகளை எப்பொழுதிலிருந்து பெண்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்பட்டது?"
என்று கோபமாய் கேட்டார்.
"அம்...மா அ..து" என்று அவள் பதில் சொல்லத் தயங்கி நின்றாள்.
"ரதன் உன்னோட மாமா என்ற முறையை விட அவர் இந்த அரண்மனையோட ராஜா அவர் தான் அதனால அவர் என்ன சொன்னாலும் அதை இங்குள்ளவங்க அமைதியா கேட்டு இருக்கனும் இல்லைன்னா அவங்க சொன்னால் இந்த அரண்மனையில் இருந்த வெளியே போக வேண்டும்.இது இப்போ உள்ள சட்டம் கிடையாது காலம் காலமா பின்பற்றக் கூடிய வழக்கம்.அது என்னோட மகள் என்று இல்லை வேற யாரும் அதை பின்பற்றவில்லை என்றால் இந்த அரண்மனையோட மூத்த ராணியாக நானே வெளியேற்றி விடுவேன்" என்று குமாரி ராணி கண்டிப்பும் கடுமையுடன் சொன்னார்.
அவரை இந்த மாதிரி பேசி யாருமே பார்க்காததால் எல்லோரும் குமாரி ராணியின் பேச்சைக் கேட்டு அமைதியாக நின்றனர்.
ரதனிடம் குமாரி ராணி "நீங்க செய்ய வேண்டிய அடுத்த ஏற்பாட்டை பாருங்க.இங்கே தேவையில்லாதவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"
தேவிக்கு அம்மாவின் பேச்சு பெருத்த அவமானமாக இருந்தது.அதனால் அந்த அவமானத்தை தன்னிடம் இருந்து துடைத்து எறிய முடிவெடுத்தவர் தனது அம்மாவையையும் எதிர்த்து பேச முடிவெடுத்தார்.
"அம்மா அப்படி நாங்க இவங்களுக்கு கீழே இருக்க நாங்க இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.அதனால எங்களுக்கான பங்கை கொடுங்க" என்று தான் என்ன வார்த்தையைப் பேசினோம் அதனால் வரப் போகிற பிரச்சினைகளை அறியாமல் தேவி ஒரு வேகத்தில் பேசினார்.
அதைக் கேட்டு கோபமுற்ற குமாரி ராணி கண்கள் சிவக்க தேவியை முறைத்தவர் "என்ன வார்த்தை சொல்லிட்டே தேவி? நீ அரச பரம்பரையை சேர்ந்த பெண்ணா? என்று சந்தேகமா இருக்கு" என்று ராணி சொன்ன வார்த்தையைக் கேட்டு அதிர்ந்த தேவி…
"அம்மா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?" என்று அதிர்ச்சியோடு கேட்டார்.
"வேற என்னச் சொல்லச் சொல்லுறே தேவி? நான் தான் உன்னை வளர்த்து எடுத்தானா? என்று எனக்கே சந்தேகமா இருக்கு" என்றவர்…
"இதுவரைக்கும் இந்த அரண்மனையோட வழக்கம் உனக்குத் தெரியலைன்னா இப்போ நான் சொல்றேன் நல்ல காதுக் கொடுத்து கேட்டுக் கொள். இந்த அரண்மனையின் மூலமா உள்ள எந்த சொத்துக்களையும் பங்காக பிரிக்க இங்கே யாருக்கும் உரிமை கிடையாது.
அதை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கு.அதன் மூலமா வேற எந்த சொத்து வாங்கினாலும் அவங்க இந்த குடும்பத்தில் குடும்ப உறுப்பினராக வரைக்கும் தான் செல்லும்.அப்படி அவங்களை இந்த குடும்பத்தில் இருந்து விலக்கி விட்டால் நேராக அந்த சொத்து ராஜாவின் கண்காணிப்பின் சென்று விடும்,அதோடு பட்டத்து இளவரசரை இப்போ இருக்கிற ராஜா மட்டும் தேர்வு செய்ய மாட்டாங்க ஏற்கனவே ராஜாவாக இருந்தவர்களும், நம்ம கம்பெனியோட மத்த பங்குதாரர்கள் அதாவது ஜமின் வம்சத்தை சேர்ந்தவங்களும் சேர்ந்து எடுக்கிற ஒரு சேர முடிவு இது இதில் உன்னோட தனிப்பட்ட விருப்பம் மட்டும் முக்கியம் கிடையாது. நான் சொல்றது சரி தானே பிரகத்தா இது உனக்கும் தெரியும் தானே" என்று பிரகத்தனைப் பார்த்து குமாரி ராணி கேட்கவும் தேவி அப்படியே ஆடிப் போய் விட்டாள்.
பிரகத்தன் ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.அவன் தலையசைப்பை பார்த்து தேவி அவனைப் பார்த்து "பிரகத்தா ஏன் இதைப் பற்றி ஒன்னும் சொல்லலை?"
"அம்மா தாத்தா இருக்கும் போது நடந்த இரகசிய சந்திப்பை யாரும் யாரிடம் பற்றி பேசவோ சொல்லவோ கூடாது ஏன்னா இது தான் இந்த குழுவிற்கான முடிவு அதனால் தான் எதுவும் சொல்லலை" என்று அமைதியாக நின்றான்.
பக்கத்தில் இருந்த திவாகரிடம் "என்னங்க உங்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி தெரியுமா?" என்று பாதி பலம் போனது போல் கேட்டார் தேவி.
அதற்கும் அவர் "ஆமாம் எனக்கும் இந்த சந்திப்பைப் பற்றி தெரியும்" என்று அவரும் அமைதியாகி விட்டார்.
தேவி ஒன்றும் சொல்லவோ பேசவோ முடியாத நிலைமையில் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அவளைப் பார்த்து குமாரி ராணி "இந்த விஷயம் இவர்களுக்கு அடுத்ததாக ராணியான எனக்கு மட்டும் தான் தெரியும் ஏன் மாதேவிக்கு கூட தெரியாது.தெரியவும் வாய்ப்பு கிடையாது.நீ ராஜாவை மரியாதையாக பேசாத காரணத்தினால் உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்திற்கே தண்டனை இருக்கு.அது என்னவென்று சீக்கிரம் உங்களுக்கு தெரிய வரும்,அதே போல் தான் அத்வதா - தவரூபன் திருமணம் யார் தடுத்தாலும் நடந்தே தீரும்.அதில் எந்தவித மாற்றமும் கிடையாது அதனால் இதை யாரும் தடுக்க பார்க்காதீங்க" என்று இதுவரை ஒரு வார்த்தை சத்தமாகவோ, எதிர்த்தோ பேசாத குமாரி ராணியின் பேச்சைக் கேட்டு எல்லோரும் அப்படியே அதிர்ந்துப் போய் நின்றனர்.
மாதேவியிடம் "மாதேவி இனி யாரிடமும் எதற்காகவும் கெஞ்ச வேண்டியது உன்னுடைய வேலை கிடையாது.இனிமேல் நீ தான் அடுத்த ராணி அதனால் அதற்கான மதிப்போடு நடந்துக் கொள்.எல்லோரையும் அதே மாதிரி நடத்து" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
ரதன் அங்கிருந்து சென்று விட்டார்.மாதேவி பிருந்தாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்.
எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றனர்.தேவியை சமாதானம் செய்ய அங்கே யாரும் இல்லை.ஆரலி என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் எது நடக்கக் கூடாது என்று இத்தனை நாட்களாய் நினைத்தாளோ அது இன்று நடக்கப் போவது உறுதியாகிப் போனதை எண்ணி கோபமுற்றாள்.அதோடு சித்தி இத்தனை நாட்களாய் அவளிடம் சொன்ன வார்த்தை இன்று நிஜமாகிப் போனதை நினைத்தவள் 'எப்படி இருந்தாலும் அத்வதா அடுத்த ராணியாக்க விட மாட்டேன் அதோடு தவரூபன் அத்தான் எனக்குத் தான்' என்று முடிவெடுத்தவள் இதற்கான அடுத்த திட்டத்தை செயல்படுத்தி அத்வதாவை வஞ்சிக்க முடிவெடுத்தாள் ஆரலி.
இங்கே யாரைப் பற்றி இவ்வளவு நேரம் பேசினார்களோ அதற்கு சம்பந்தப்பட்ட இருவரும் அங்கே இல்லை.
ஆரலி தன் மனதில் உள்ள எண்ணத்தை நிறைவேற்றுவதின் முதல் படியாக அவள் அத்வதாவின் அறையில் உட்கார்ந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
இத்தனை வருடங்களில் அவள் ஒருமுறையேனும் அத்வதாவின் அறையை நிதானமாக சுற்றிப் பார்த்ததில்லை.
அன்று அவளுக்காக காத்திருப்பதால் சுற்றி அவளது அறையை பார்த்தாள்.அந்த அறையின் வர்ணமே வித்தியாசமாக இருந்தது.இவளின் அறையைப் போல் பளிச்சென்ற வண்ணம் இல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வண்ணம் இருந்தது.
அந்த வண்ணத்திற்கு ஏற்ப அழகாய் இயற்கை ஓவியமும் வரையப்பட்டு இருந்தது.எல்லாப் பொருட்களும் சுத்தமாய் இருந்தது.அலங்காரப் பொருட்கள் எதுவும் அவ்வளவாய் இல்லாமல் அன்று மலர்ந்த பூக்கள் மட்டும் ஜாடியில் இருந்தது.
அதன் அருகில் சென்றதும் இனிமையான மணத்தைக் கொடுத்தது.அடுத்து திரும்பும் பக்கம் எல்லாம் புத்தகங்களாய் இருந்தது.
அங்கே ஒரு ஓரமாய் ஓவியம் வரையப்பட்டு அழகாய் அடுக்கப்பட்டு இருந்தது.அடுக்கப்பட்டு இருந்த ஓவியமும் சுவற்றில் வரைந்திருந்த ஓவியங்களும் ஒரே வரைபடுதலைக் கண்டு ஆரலி விளங்கிக் கொண்டது இது தான்.
அத்வதா தான் இதை அனைத்தையும் வரைந்திருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டாள்.அடுத்து ஒரு ஓவியம் துணியால் மூடப்பட்டு இருந்தது.அது என்னவென்று அவள் பார்க்கும் ஆர்வத்தில் துணியை அவள் விலக்கிப் பார்க்க…
அங்கிருந்த ஓவியத்தை பார்த்து அவள் அப்படியே உறைந்துப் போய் நின்றாள்.அங்கே தவரூபன் அழகாய் முன் வரிசைப் பற்கள் தெரிய வசீகர அழகோடு சிரித்துக் கொண்டிருந்தான்.அவனின் அந்த ஓவியம் அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது,நேரிலே அவனைக் கண்டு விட்டது போல் இருந்தது.
அவனது ஓவியத்தை இவ்வளவு தத்ரூபமாய் அவள் வரைந்திருப்பதைக் கண்டதும் அத்வதா தவரூபனின் மேல் காதல் கொண்டுள்ளாள் என்பதை அறிந்து ஆரலிக்கு கோபமும் ஆத்திரமும் ஒரு சேர வந்தது.
அப்பொழுது யாரோ அறையை நோக்கி வரும் காலடிச் சத்தம் கேட்டு அது நிச்சயம் அத்வதாவாக இருக்கும் என்றெண்ணி அந்த ஓவியத்தை பழைய படி துணிப் போட்டு மூடி விட்டு அங்குள்ள ஷோபாவில் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள்.
அத்வதா தன் அறைக்குள் நுழைய அங்கே ஆரலி அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
(தொடரும்)