என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் - 19
"நான் பேசிட்டு இருக்கேன் நீ என்னவென்றால் என்னையே பார்த்துட்டு இருக்கே,இப்போத் தான் என்னை புதுசா பார்க்கிற மாதிரி.சரி அதை விடு நான் சொன்ன உடனே மைசூருக்கு கிளம்பிட்டே உன் நம்பி அங்கே மூன்று ஜீவன் இருக்கே அதைப் பத்தி கொஞ்சமாவது கவலைப்பட்டியா? நீ எங்கே போயிட்டேன்னு தேட மாட்டாங்களா? அத்தையை தவிக்க விட்ட மாதிரி அவங்களையும் தவிக்க விட்டுறாதே! அத்தைக்காவது சொந்தம் என்று நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்.ஆனால் அவங்களுக்கு உன்னை விட்டால் யார் இருக்காங்கன்னு யோசிச்சியா இல்லையா?" என்று அவன் அடுத்தடுத்த கேள்விகளை அவளைப் பார்த்து கேட்டவுடன் தான் அவளுக்கு வீட்டைப் பற்றிய நினைவே வந்தது.
அத்வதா எப்பொழுது மாதேவியையும், பாட்டியையும் பார்த்தாளோ அப்பொழுதே அவளுடைய சிந்தனைகள் யாவும் முடங்கிப் போனது போல் அப்படியே நின்றது.
ரூபன் கேட்கவும் தான் நிகழ்காலம் புரிய அவன் சொன்னதைக் கேட்டு "ம்ம்… இதோ இப்பவே சொல்றேன்.காந்திமதி பாட்டி நான் சொல்றதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்படுவாங்க, அப்புறம் தாங்ஸ்"
"எதுக்கு" என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
"வீட்ல உள்ளவங்களுக்கு தகவல் சொல்லனும் சொன்னீங்கல்ல அதான்"
அதைக் கேட்டவன் "ஹ..ஹா..ஹா" என்று சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிறீங்க" அவள் சற்றே கடுப்பாய் கேட்க…
"சிரிக்காமல் வேற என்னச் செய்யச் சொல்லுற? நீ நினைத்தால் மரியாதை தர… இல்லைன்னா வாடா போடான்னு பேசுறே,அதை நினைத்து தான் சிரிச்சேன்"
அவளோ மனதினுள் "இந்த ரண களத்திலும் இவனுக்கு ஒரு கிளுகிளுப்பு" என்று மெதுவாக சொல்கிறேன் என்று அவன் காதில் விழும்படியாய் மெதுவாய் சொன்னான்.
"பார்டா"
"என்ன?"
"நினைச்சேன் சிரிச்சேன்"
இவனோடு பேசிக் கொண்டிருந்தால் இப்படியே பேசிக் கொண்டிருப்பான் என்று எண்ணியவள் தன் அலைபேசியை எடுத்து சாந்தனாவிற்கு அழைத்தாள்.
அத்வதாவின் அழைப்பு வந்ததும் அழைப்பை எடுத்தவர் "என்னம்மா இந்த நேரம் போன் பண்ணுறே? இன்னைக்கு என்ன வேலை செய்ற நேரத்துல போன் செய்து இருக்கே?" என்று அவர் கேள்வி மேல் கேட்டார்.
அத்வதா தவரூபன் அலுவலகத்தில் அவள் வேலை செய்வது பற்றி யாரிடமும் அவள் சொல்லவில்லை.ரேகா தான் இப்பொழுது இதைப் பற்றி சொல்ல வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் எதைப் பற்றியும் சாந்தனாவிடமோ, பாட்டியிடம் என்று யாரிடமும் சொல்லவில்லை.
இப்பொழுது சாந்தனா இவ்வளவு கேள்விகளை கேட்கவும் தான் அவளுக்கு அனைத்தும் நினைவுக்கு வர… சாந்தனாவிடம் எல்லா விவரங்களையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னாள்.
அத்வதா சொல்லச் சொல்ல… கேட்ட சாந்தனாவிற்கு எல்லாம் மலைப்பாக இருந்தது.அவரும் பொறுமையாக நடந்த எல்லாத்தையும் கேட்டார்.
அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை தான் அவருக்கு பேரிடியாக இருந்தது."அம்மா நான் மைசூருக்கு போறேன்" என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.
சாந்தனாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் "அம்மா என்ன ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க? நான் அம்மாவை பார்க்க போவதில் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்று அவள் கேட்ட வார்த்தையில் வந்த கண்ணீரையும் அழுகையையும் அடக்கிக் கொண்டு அத்வதாவிடம்,
"என்னம்மா அத்து இப்படி சொல்லிட்டா? நீ உன் அம்மாவைப் போய் பார்ப்பதில் எங்களுக்கு சந்தோஷம் தானே தவிர வேறு என்ன இருக்க போகுது போய்ட்டு வா சந்தோஷமா போம்மா" என்றுச் சொன்னார்.
அவரின் பதிலைக் கேட்டு அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
"அம்மா பாட்டிக்கிட்டேயும், மானவிக்கும் விஷயத்தை சொல்லுங்க"என்றாள் மகிழ்ச்சியாய்…
"சரிம்மா பார்த்து பத்திரமா போய் அம்மாவை பாரு.மைசூருக்கு போய் சேர்ந்ததும் ஒரு போன் பண்ணி சொல்லிடு" என்றார்.
அதைக் கேட்டவள் "சரிம்மா" என்று அலைபேசியின் அழைப்பை துண்டித்தாள்.
சாந்தனா உட்கார்ந்து அழத் தொடங்கினார்.அவரின் அழுகைச் சத்தம் கேட்டு வந்த காந்திமதி பாட்டி அவரின் அழுகையைப் பார்த்து பதறியபடி அவருக்கு அருகில் வந்து "சாந்தனா என்னாச்சு? ஏன் இப்படி அழுதுட்டு இருக்கே?".
"அம்மா இனிமேல் அத்து நம்மக் கூட இருக்க மாட்டாள்.நம்ம குடும்பத்தோட ஆணி வேரே அவ தான்ம்மா அவளே நம்மளை விட்டு போய்ட்டாள்" என்று அழுதார்.
"சாந்தனா ஏன் இந்த மாதிரி பேசுறே? அத்தும்மாக்கு என்ன அவ நல்லாத் தானே இருக்கா?" அவர் பதறியபடி கேட்டார்.
"அம்மா அத்து போன் போட்டாள்" என்று அவள் சொன்ன விஷயத்தை எல்லாவற்றையும் சொன்னார்.
அதைக் கேட்ட பாட்டிற்கு சந்தோஷமாய் இருந்தது.சாந்தனா பேசுவதற்கும் அவர் அழுவதற்கும் சிறிதளவு கூட சம்பந்தமே இல்லை.அதனால் சாந்தனாவிடமே தன் குழப்பத்தைப் பற்றி கேட்டார்.
"சாந்தனா அத்து அவ அம்மாவோட சேரணும் தானே இத்தனை நாளா ஆசைப்பட்டோம்.இப்போ நீ ஏன் இதற்காக அழறே?"
"அம்மா அத்து அரண்மனைக்கு திரும்ப போகனும் தான் நாம எல்லோருமே நினைச்சோம், ஆனால் அத்து போயிட்டா இனி நம்மக்காக யாரு இருக்கா அம்மா? நான் பேசுறது சுயநலமா இருக்கலாம் ஆனால் அது தான் உண்மை.அத்து எப்போ அவ குடும்பத்தோடு போறாளோ அதன் பிறகு நம்ம குடும்பம் என்னவாக இருக்கும்னு நினைக்கிறீங்க? அவ ஒருத்தி தான் தனித்தனியா இருந்த நம்மை ஒன்றாக்கி ஒரு குடும்பத்தை உருவாக்கினாள், நாம ஒருவொருக்கொருவர் ஒத்துப் போகமல் பிரிஞ்சு நின்றப்போ அவ தான் நம்மை அரவணைத்தாள் அப்படி இந்த குடும்பத்தோட பெரிய நம்பிக்கையே போன பிறகு என்னச் செய்யப் போறோம்னு நினைத்து தான் அழுறேன்" என்றார்.
சாந்தனா சொன்ன வார்த்தைகள் எல்லாமே உண்மை தானே.அவருக்கும் அப்பொழுது தான் உண்மை புரிந்தது.அத்து எப்பொழுது அரண்மனைக்கு போகிறாளோ? பிறகு அவள் திரும்பி வருவது கடினம் தான்.அதோட அவ குடும்பமும் அதானே. அதற்குப் பிறகு இவங்களோட நிலைமை என்னவென்றால் கேள்விக்குறி தான்.
அத்து அவர்களுக்காக வேலைக்குப் போய் சம்பாதித்து கொடுத்தாள்.அதைக் கூட இவர்கள் தனியாக வேலைக்கு போய் சம்பாதித்து கொள்வார்கள்.ஆனால் அந்த ஒற்றுமையும், சகிப்புத் தன்மையும் அவளிடம் மட்டுமே இருந்தது.இவர்கள் மூவரும் ஒருவொருக்கொருவர் சண்டை பிடித்தாலும் நாம எல்லோரும் ஒரே குடும்பம் என்று சொல்லி அவர்களை அரவணைத்து இருந்தது அஅவள் தானே.
திரும்ப அவள் வரப் போவது இல்லை என்று இதை எல்லாம் நினைத்த பாட்டிக்கு கவலையாக இருந்தது.ஆனால் அவர் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.
அத்வதா சந்தோஷத்தோடு அவனைப் பார்த்தாள்.ஆனால் தவரூபனுக்கு அவளுடைய நிலைமையை நினைத்து கவலையாக இருந்தது.அத்வதா இன்னும் சிறு பிள்ளை தான்.அதனால் தான் அவள் நடக்கப் போகும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாள்.அதனால் தான் தாத்தா அவனிடம் அவள் எந்த நிலைமையில் இருந்தாலும் அவளுக்கு தக்க துணையாக இருக்க வேண்டும் அவனிடம் தாத்தா கேட்டது நினைவுக்கு வந்தது இதை எல்லாம் நினைத்தபடியே அவன் அவளை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்வதாவிற்கு ரேகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.அலைபேசியின் அழைப்பை பார்த்து அவள் ரேகாவிடம் பேசி எல்லாவற்றையும் சொன்னாள்.
நடந்தவற்றை எல்லாம் கேட்ட ரேகாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.எப்படியோ அவள் தன் குடும்பத்தோடு சேர்ந்தால் சந்தோஷம் தான் என்று அவள் நிம்மதியடைந்தாள்.
எல்லோரிடமும் பேசி முடித்தாகி விட்டது. இருவரிடமும் பெருத்த அமைதி நிலவியது.அத்துவிற்கு அவனிடம் ஆரலியைப் பற்றியும், அவனது குழந்தையைப் பற்றியும் கேட்கலாமா? என்று மனது நினைத்தது.ஆனால் எதாவது பேசி விட்டால் மனது தாங்காதே இப்பொழுது தானே அவன் நன்றாக பேசி இருக்கிறான் அதை கெடுத்துக் கொள்ள அவளுக்கு யோசனையாக இருந்தது.
இருவரும் போகும் வழியினை வேடிக்கைப் பார்த்த படி கண்கள் சென்றாலும் இரண்டு பேரின் மனமும் ஒருவரை பற்றி இன்னொருவர் எண்ணிக் கொண்டு வந்தனர்.
அத்வதாவின் மனதில் ரூபனின் குடும்பத்தை பற்றி கேட்கலாமா? என்ற யோசனையில் அவளும்…
எல்லோரைப் பற்றியும் தன்னிடம் விசாரித்தவள் தன்னைப் பற்றி அவள் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருக்கிறாளே! என்ற எண்ணத்தில் அவனும் இருந்தனர்.
பாதி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவனது கார் ஒரு ஹோட்டலை நோக்கி நின்றது.
கார் நின்றதும் ரூபன் காரிலிருந்து இறங்கினான்.அவளிடம் ஒன்றும் சொல்லாமல் அவன் நேராக உள்ளே போனான்.இவள் காரிலிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் திரும்ப அவளிடம் வந்தவன் "கார் எங்கே நிற்கிறது தெரியுதுல்ல பின்னால் வர மாட்டியா?"
அவளோ மனதினுள் ஆமா இவரோட அடிமை நான் இவர் எங்கே போனாலும் நான் பின்னாடியே போகனும் என்று அவனைப் பார்க்க…
"நான் உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் புரியுதா?"
"ம்ம்… புரியுது எனக்கு சாப்பாடு வேண்டாம் பசிக்கலை"
"உனக்கு பசிக்கலை என்றால் நான் என்ன செய்ய? எனக்கு பசிக்குதே அதுக்காக என் கூட இருக்கிறவங்களை பார்க்க வைத்து சாப்பிடுற பழக்கம் எல்லாம் உன்னை மாதிரி எனக்கு இல்லை நீ வர்றியா? இல்லை நான் கையைப் பிடிச்சு இழுத்துட்டு போகவா?" அவன் அதிரடியாய் கேட்க…
இவன் செய்தாலும் செய்து விடுவான் என்று பதறியவள் அவனிடம் "இதோ நானே வர்றேன்" என்று காரிலிருந்து வெளியே வந்தாள்.
"அந்த பயம் இருக்கட்டும்" என்று அவன் முன்னால் செல்ல… இவள் பின்னாலேயே நடந்தாள்.
அவர்கள் இருவரும் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
அவன் எதுவும் ஆர்டர் செய்யாமல் அமைதியாக இருந்தான்.இவளுக்கு மனதிலோ 'சும்மா இருந்தவளை சாப்பிட அழைத்து விட்டு இப்போ என்னன்னு பார்த்தால் வேடிக்கை பார்க்கிற மாதிரி உட்கார வைச்சுட்டானே!' என்று அவனைப் பார்க்க… அப்பொழுது சிப்பந்தி வந்து சாப்பாட்டு தட்டை கையில் ஏந்தி வந்து இவர்களின் முன்னால் வைத்தான்.
அதில் இருந்த சாப்பாடுகளைப் பார்த்து அவள் மனது அழகிய பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தது.
அவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க… ரூபன் அவளிடம் "சாப்பிடு வதா உனக்கு பிடிச்சதை தான் நான் கொண்டு வரச் சொன்னேன்" என்றான்.
மேசையின் மேல் அடுக்கப்பட்டிருந்த தட்டில் பிசிபேளாபாத்தும்,கர்நாடகாவின் ஸ்பெஷல் உணவு வகையான எல்லா கூட்டு, பொரியல் கலந்த அறுசுவை சாப்பாடு இருந்தது.
அவன் அவளைப் பார்த்து "ம்ம்… எடுத்து சாப்பிடு" என்று கையை நீட்டிச் சொல்லும் போது அவளிற்கு மட்டுமே அவனாய் பிடித்திருக்க…
"ரூபா இந்த சாப்பாட்டை பார்த்ததும் அன்னைக்கு நம்ம ரெண்டுபேரும் சின்னப் பிள்ளைத்தனமா சண்டை போட்டது தான் ஞாபகம் வருது, அப்போ கூட தாத்தா வந்து…" என்று தாத்தாவின் நினைவு வர… தொண்டை இரண்டும் அடைத்துக் கொண்டு கண்ணீர் வந்தது.
அவளின் நிலைமை அவனுக்கு புரியாமல் இல்லை.ஆனால் தினந்தோறும் அவளுக்கு பிடித்த இந்த உணவைத் தான் அவன் அவளின் நினைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.
"வதா சாப்பிடு நேரமாகுது நாம கிளம்பனும்ல" என்று பேச்சை மாற்றினான்.
ஆனால் அவளுக்கோ அவனின் இந்த பதில் அவன் அவளின் பழைய விஷயங்களை எல்லாம் மறந்து விட்டான்.அதை மறுக்கவே இந்த மாதிரி பதில் தருகிறான் என்றும் அவன் விரும்பியது ஆரலியைத் தானே என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு அவன் சொன்னான் என்பதற்காக பெயரளவில் சாப்பிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் திரும்பவும் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.அதுவரை இருந்த நிம்மதி போய் இப்பொழுது அத்வதாவிற்கு மனம் முழுவதும் பாரமாகி இருந்தது.
ரூபனை எப்படி ஆரலியோடு ஒன்றாக வைத்து பார்க்க முடியும் என்று அதை நினைத்தே அவளுக்கு அழுகையாய் வந்தது.
அவளும் இந்த விஷயத்தை வெளிக் காட்டி விடக்கூடாது என்பதாலேயே தான் அவள் இன்னும் ஒளிந்து இருந்தது.இப்பொழுது எல்லாமே மாறி விட்டது எதுவாக இருந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என்று அவள் தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.
யோசனையில் இருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.மனதில் உள்ள வலியை மறைக்க தன்னை அறியாமலேயே தூங்கிப் போனவள் அருகில் இருந்த ரூபனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அவள் சட்டென்று அவனது தோளில் சாயவும் என்னவென்று அவளை தலையை மெதுவாக தூக்கிப் பார்க்க அவள் கண்களை மூடி இருப்பதைப் பார்த்து தூங்கி விட்டாள் என்பதை அறிந்து அவளை தன் தோளில் வாகாக சாய்த்துக் கொண்டான்.
பின்பு தன் கையை அவள் தோள்களில் மேல் வைத்து இன்னும் அவளை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தான்.
பெண்ணவளின் அருகாமை அவனை கலங்கடிக்கச் செய்யாமல்
இல்லை.அத்வதா நான்கு வருடங்களுக்கு பிறகு இன்று தான் அவளை இவ்வளவு நெருக்கமாக அதுவும் தன்னருகே காண்கிறான்.
அன்று போலவே இன்றும் அப்படியே இருந்தாள்.ஆனால் அப்பொழுது சிறு பிள்ளை போல் இருந்தவள் இன்று வளர்ந்த அழகு சிலையாய் மிளிர்ந்தாள்.
மெதுவாக அவளின் கன்னத்தினை வருடியவன் அவளின் மென்மையைக் கண்டு பெரூமூச்சு விட்டான்.அவள் தூக்கத்தில் அவனின் கால்களுக்கு மேல் தன் கையைப் போட்டாள்.அந்த கையை எடுத்து தன் கைகளுக்கு மேல் வைத்து விரக்தி சிரிப்பு சிரித்தவன் "அன்றைக்கு உன்னை கரம் பிடிக்கலாம்னு எவ்வளவு ஆசையா நான் வந்தேன், என்னை ஏமாத்தி போனாதோடு இல்லாமல் அவ முன்னாடி என்னை அசிங்கப்படுத்த வைச்சுட்டல்ல ஆனால் இந்த தடவை அந்த மாதிரி எந்த தப்பும் நடத்த விட மாட்டேன்,உன்னையும் விட மாட்டேன்" என்று இருவரின் கையையும் இறுக்கமாய் பிணைத்துக் கொண்டான்.
அவளது உச்சந்தலையில் தன் முதல் முத்தத்தை முத்திரையாய் பதித்தவன் அவனும் அப்படியே சாய்ந்து படுத்துக் கொள்ள அவனும் அப்படியே தூங்கிப் போனான்.
கார் வேகமாக தன் பயணத்தை தொடர்ந்தது.இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் முதலில் கண் விழித்த அத்வதா யார் மேலே சாய்ந்திருப்பதை உணர்ந்து கண்ணைத் திறந்து பார்க்க....
ரூபன் மேல் தான் சாய்ந்திருப்பதை உணர்ந்து சட்டென்று தன்னை விலகிக் கொண்டவள் அவனைப் பார்க்க… அவனோ நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனை விட்டு விலகி உட்காரலாம் என்று அவள் விலகிச் செல்லும் நேரம் அவளின் கையை யாரோ பிடித்திருப்பது போல் தெரிய அவனின் கையோடு இவளின் கை பிணைந்திருந்தது.
அதையும் அதிர்ச்சியோடு விலக்கிக் கொண்டு வேகமாய் அவனை விட்டு தள்ளி உட்கார்ந்தாள்.
மனதினுள் 'அசந்து தூங்கப் போய் இரண்டு பேர் பக்கத்தில் வந்திருக்கிறோம் போல நல்லவேளை நான் கண் விழிச்சேன், இதே அவன் விழித்து இருந்தால் என்னைப் பற்றி தவறாகத் தானே நினைத்திருப்பான்' என்று ஆழ்ந்து அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது… அவனும் விழிப்பு வந்து கண் திறந்தான்.
அவளோ ஒன்றும் தெரியாதது போல் அவனை பார்க்காதவாறு தலையை திருப்பிக் கொண்டாள்.
அவளின் செய்கையைப் பார்த்து அவன் மெதுவாய் புன்னகைத்துக் கொண்டான்.அவன் எப்படி தூங்கினான்? என்று அவனுக்குத் தான் தெரியுமே, ஆனால் அத்வதா எதுவும் நடக்காதது போல் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
இரண்டு கையையும் ஒன்றாய் இணைத்து சோம்பல் முறித்தவன் "ஹாப்பா கை வலிக்குதே எப்படி மரத்துப் போன மாதிரி வலிக்குது" என்று அவன் கைகளை இந்தப்பக்கம் அந்தப்பக்கமாக திருப்பினான்.
அத்வதாவோ தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லாதது போல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
டிரைவரிடம் "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"சார் இன்னும் பதினைந்து நிமிசத்துல அரண்மனைக்குள்ள போய் விடுவோம்" என்றார்.
அத்வதாவிற்கு திக் திக் என்று பயமாக இருந்தது.இதயம் வேறு தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
தன்னைப் பார்த்ததும் அம்மாவும், அப்பாவும் தன்னிடம் எப்படி நடந்துக் கொள்வார்களோ? என்ற பயத்தில் அவளுக்கு வியர்த்து வழிந்தது.
அவளின் பதற்றத்தைக் கண்ட ரூபன் "என்னாச்சு வதா? ஏன் இப்படி வியர்க்குது?".
"வியர்க்குதா? இல்லையே? "என்று அவள் படபடப்பாய் பதில் அளித்தாள்.
"இந்த ஏ.சி கார்ல கூட வியர்க்குதுன்னு எனக்கே நல்லாத் தெரியுது,உனக்குத் தெரியலையா?"
"ம்ஹீம்… இல்லை" என்று அவள் தன் பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க… தலையை குனிந்துக் கொண்டாள்.
அவன் அவளிடம் தன் கைக்குட்டையை எடுத்து நீட்டினான்."வதா ரொம்ப வேர்க்குது பாரு துடைத்து விடு, இந்த தண்ணீர் குடி பயப்படாதே!" என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
இரண்டையும் வாங்கிக் கொண்டாள்.தண்ணீர் குடித்தவுடன் அவளுக்கு படபடப்பு கொஞ்சம் தணிந்ததாக இருந்தது.
"வதா அரண்மனையில் யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க, நான் உன்கூட இருப்பேன்" என்றான்.
அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.மெளனமாய் இருப்பதை தவிர வேறு வழியில்லை.
கல்லூரிக்குச் சென்ற மானவி வீட்டிற்கு வந்தாள்.சாந்தனாவும் பாட்டியும் ஒவ்வொரு இடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவள் "என்னம்மா இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிச்சிட்டீங்களா? அக்கா வர நேரமாயிடுச்சே சாப்பாடு எல்லாம் ரெடியா?"
அவள் தான் பேசிக் கொண்டிருந்தாள் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லை.
"பாட்டி நான் பேசிட்டே இருக்கேன், நீங்க எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க இருங்க நான் இப்பவே அக்காக்கு போன் போட்டு என்னன்னு கேட்கச் சொல்றேன்" என்று தன் அலைபேசியை எடுத்தாள்.
பாட்டி மானவியிடம் "அத்துவிற்கு போன் பண்ணாதே! அவ இனிமேல் இங்கு வர மாட்டாள்" என்றார்.
"என்னச் சொல்லுறீங்க பாட்டி அக்காவுக்கு என்னாச்சு? அவ எங்கே போயிட்டா?"
"அத்து அவ குடும்பத்தோடு சேர போயிட்டா"
"நீங்க என்னப் பேசுறீங்கன்னு எனக்கு புரியலை.விவரமா சொல்லுங்க"
சாந்தனா எல்லாத்தையும் மானவியிடம் சொன்னார்.அதைக் கேட்ட மானவியும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
சாந்தனா மானவியிடம் "என்ன மானவி எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்கே?"
"அம்மா என்னை என்ன பேசச் சொல்லுறீங்க? அக்கா அவ குடும்பத்தோடு போயிட்டான்னு கேட்க வருத்தமா இருந்தாலும் அவ நமக்காக எவ்வளவு விஷயம் செய்து இருக்கா அதை நினைக்கும் போது அக்கா அவ குடும்பத்தோடு சந்தோஷமா போகும் போது நாம அதை ஏத்துக்கிட்டு தனியா வாழலாம்மா.அக்கா ஏற்படுத்தின இந்த குடும்பத்தை நாமே அதையே பின்பற்றி ஒன்னா வாழலாம் பாட்டி,நான் சொல்றது சரி தானே" என்று கண்ணீரை தேக்கி வைத்து கேட்டாள்.
"ஆமாம் மானவி நீ சொல்றது சரி தான்.அத்து நம்ம ஒன்னா இருக்கனும் தானே விரும்புவ அவ நம்மக் கூட இல்லை என்றாலும் அவ விரும்புன விஷயத்தை நாம் செய்யலாம்" என்று மானவியைக் கட்டிக் கொண்டார்.
அத்து அவர்களுடன் இல்லை என்றாலும் அவளுக்காய் அவர்கள் மூவரும் ஒன்றாய் வாழ முடிவெடுத்தனர்.
அரண்மனையின் வாயிற்கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே சென்று வாசலில் நின்றது.
முதலில் ரூபன் காரிலிருந்து இறங்கினான்.அத்வதா காரிலிருந்தூ இறங்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
ரூபன் வந்து காரின் கதவை திறந்து விட்டு "வா அத்து உள்ளே போகலாம்"என்றான்.அவள் தயக்கமாய் அவனைப் பார்க்க…
அவனோ "ம்ம்… இறங்கு அத்வதா" என்றான்.
அவளும் காரிலிருந்து இறங்க ரூபன் முன்னால் செல்ல… இவள் பின்னே அரண்மனை உள்ளே சென்றாள்.
வாயிலில் நின்ற சேவகி அத்வதாவைக் கண்டதும் "அம்மா அத்வதாம்மா" என்று அதிர்ச்சியில் அவளைப் பார்த்தார்.
இவர்கள் வரவேற்பறைக்குள் நுழைந்ததும் உள்ளே மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.ரூபனைக் கண்டதும் "டா...டி டா...டி" என்று தட்டுத்தடுமாறி அழைத்தப்படி… அவனை நோக்கி தன் பிஞ்சுப் பாதங்களால் ஓடி வந்தது.
குழந்தை ஓடி வருவதைப் பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு பெண் உட்கார்ந்து இருந்தவர் எழுந்துக் கொண்டார்.
ரூபன் ஓடி வந்தக் குழந்தையை தன் இருகரங்களால் அள்ளி அணைத்துக் கொண்டான்."வசி வசி என் செல்லக்குட்டி"என்று அவன் கொஞ்சினான்.
குழந்தை ரூபனைப் பார்த்து "டாடி"என்று அழைப்பதைக் கேட்டு அவள் நினைத்ததை உறுதிப்படுத்திக் கொண்டாள்.ஆறடி உயரமாய் உள்ள அவனின் பின்னால் பயந்து நின்றுக் கொண்டிருந்தாள்.அதனால் முன்னால் ரூபன் தான் தெரிந்தான்.
குழந்தையை கையில் வைத்துக் கொண்டே சத்தமாக "அத்தை … மாமா… அத்தை … மாமா"என்று சத்தமாக அழைத்தான்.
அவனது அழைப்பின் சத்தத்தைக் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த மாதேவி "என்ன ரூபா சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு வந்து நிற்கிறே? என்ன விஷயம்?"
"அத்தை உங்களுக்கு முக்கியமான ஒருத்தரை அறிமுகப்படுத்தலாம்னு கூடிட்டு வந்து இருக்கேன்"
"யாரு?" என்று யோசனையோடு மாதேவி கேட்க...
அப்பொழுது மேலிருந்து ரதன் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தவர் அவனிடம் "இன்னைக்கு என்ன உன் குரல்ல அப்படி ஒரு உற்சாகம் இருக்கு?"
அவரைப் பார்த்து சிரித்தவன் "என்னவென்று தெரிய வேண்டுமென்றால் இதோ பாருங்க" என்று தன் பின்னால் பயந்து ஒளிந்து நின்றவளை தன்னை முழுவதுமாய் விலக்கிக் கொண்டு அவளைக் காட்டி நின்றான்.
மெலிந்த தேகத்தோடு அதற்கு சம்பந்தமே இல்லாமல் உடையணிந்து நீண்ட பின்னலிட்டு காதோரமாய் சின்னக் கம்மல் இட்டு ஒற்றைக் கையில் ஒரு பழைய கைக்கடிகாரத்தை அணிந்து சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவளைப் போல் நிற்கும் அந்தப் பெண் யார்? என்று இவர்கள் கூர்ந்து முகத்தை அங்கே அவர்கள் இருவரும் கண்டது தங்கள் மகளையா? என்று நம்பாமல் பார்த்தனர்.
அத்வதா மெதுவாக குனிந்த தலையை நிமிர்த்தி அழுது சிவந்த கண்களோடு "...ம்மா … அ...ப்பா…" என்று அவள் அழைத்து முன்னால் மாதேவியை நோக்கிச் செல்ல…
தன் கண்களையே நம்பாமல் நின்றவர் தன் முன்னால் நிற்பது தன்னுடைய மகளைத் தான் உண்மையில் பார்க்கிறோம் என்று உணர்ந்தவர் தன் கைகளால் வாயைப் பொத்தி அழுதார்.
அத்வதா ஓடி வந்து மாதேவியின் அருகில் வந்து "ம்மா…" என்றழைத்ததும் அதிர்ச்சியில் பேச முடியாதவராய் நின்றவர் தன் இரு கைகளையும் விரித்து 'வாம்மா' என்று சைகையால் சொல்ல… அவரை ஆனந்தமாய் அன்போடு ஆரத் தழுவிக் கொண்டாள்.
மகளைக் கண்டதும் படியில் இருந்து வேகமாய் இறங்கியவர் மனைவி, மகளின் அருகே வந்து மகளின் தலையை மெதுவாய் வருடிக் கொடுத்து "அ...த்வதா" என்றழைக்க…
அதுவரை தாயை கட்டியணைத்து இருந்தவள் தந்தையின் அழைப்பைக் கேட்டு திரும்பியவள் "அ...ப்பா" என்று அவரது இடையோடு தன் கைகளைப் போட்டு இன்னும் நெருக்கமாய் அவரை கட்டியணைத்தாள்.மகளைத் திரும்ப கண்டு விட்ட நிம்மதியான உணர்வில் அவளை பேரன்போடு அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
"அப்பாவையும் அம்மாவையும் விட்டுட்டு எங்கம்மா போனே?"
அவரது அந்த தவிப்பான வார்த்தையில் தவித்தவள் "அப்பா என்னை மன்னிச்சிடுங்க" என்று ஓவென்று அழுதாள்.அவளது அழுகையில் கண்ணீர் துளி ரதனின் சட்டையை நனைத்தது.
மகளின் கண்ணீரை உணர்ந்தவர் தன் நெஞ்சோடு சாய்ந்திருந்தவளை விலக்கி விட்டவர் "அத்வதா அழாதேம்மா அழாதே! அப்பா உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன் அழாதேம்மா" என்று மகளின் கண்ணீரை துடைத்து விட்டார் ரதன்.
பக்கத்தில் நின்ற மாதேவியிமும் "அம்மா என்னை மன்னிச்சிடுங்க நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்மா என்னை மன்னிச்சிடுங்க" என்று அவள் சொல்லி அழ…
மாதேவி அவளின் தலையை வருடிக் கொடுத்து "அழாதேம்மா அத்வதா அழாதே! இத்தனை நாளா நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்மா"என்றவர் பக்கத்தில் நின்ற சேவகியிடம் இனிப்பு கொண்டு வரச் சொன்னார்.
இத்தனை வருடங்களாய் இந்த ஒரு காட்சியைக் காண காத்திருந்தவனாய் நடப்பவை அனைத்தையும் ஓரமாய் நின்று அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரூபன்.
(தொடரும்)