என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம்-3
அடுத்தடுத்த வேலைகளில் மும்மூரமாய் இருந்தவள் வேலைகளை முடித்து விட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினாள்.எப்பொழுதும் போல் சோர்வாய் வந்து ஷோபாவில் அமர….
அவளுக்கு அருகில் வந்து சாந்தனா தண்ணீரைக் கொடுத்தாள்.அதை வாங்கி அப்படியே முழுவதுமாக குடித்தவள் "ரொம்ப தாங்ஸ்ம்மா" என்று சாய்ந்துக் கொண்டு அமர்ந்தபடி "அம்மா உங்ககிட்ட சந்தோஷமான விஷயம் ஒன்னு சொல்லப் போறேன்.பாட்டியையும் மானவியையும் வரச் சொல்லுங்க"என்றதும்
இரண்டுபேரையும் வரச் சொல்லி விட்டு அவளது கைப்பையை எடுத்து அதில் உள்ள டிபன் பாக்ஸை எடுத்தார்.அது கனமாக இருக்க அதை திறந்துப் பார்த்தால் அதில் காலையில் கொடுத்து விட்ட சாப்பாடு அப்படியே இருந்தது.அதைப் பார்த்து சாந்தனா அத்துவிடம் "என்னம்மா இது காலையில் கொடுத்து விட்ட சாப்பாடு அப்படியே இருக்கு".
"அம்மா இதை விடுங்க.நான் சொல்ற விஷயத்தை கேளுங்க"
"என்ன அத்து நீ நான் சொல்றதை கேட்கமாட்டியா?"
அப்பொழுது அங்கே வந்த பாட்டியும் மானவியும் வந்தனர்.மானவி "இங்கே என்ன சத்தம்"
உடனே அதற்கு அத்து "பேசிகிட்டி இருக்கோம் மாமா" என்று கிண்டலாய் சொல்ல… அங்கே எல்லோரும் சிரிக்க….
மானவி "அக்கா இதென்ன உலகத்துல இல்லாத புது அதிசயமா இருக்கு? ஆபிஸ்ல இருந்து டென்ஷனா வரக் கூடிய என் அக்கா இன்னைக்கு சிரித்த முகமா கிண்டல் எல்லாம் பண்ணுற அப்படி என்ன சந்தோஷமான விஷயம்?"
"பாருங்க அம்மா மானவி தான் என்னை எப்பொழுதும் சரியா புரிஞ்சுப்பா" என்று தங்கச்சியை மெச்சிக் கொள்ள…
"ம்ம்… சரி முதல்ல சந்தோஷமான செய்தியை சொல்லு"
"அம்மா நான் புது கம்பெனிக்கிட்ட டீலிங் பேசிட்டு இருந்தேன்ல அந்த கம்பெனி நம்ம கம்பெனியோட சேர்ந்து வொர்க் பண்ண ஒத்துகிட்டு இரண்டு வருஷம் கான்ட்ராக்ட்ல சைன் பண்ணிட்டாங்க அம்மா"
சாந்தனா "என்ன சொல்ற உண்மையாகவே ஒத்துக்கிட்டாங்களா? "
"ஆமாம் அம்மா என்னால இதை நம்ப முடியலை.அவ்வளவு சீக்கிரமா இந்த வேலை முடிஞ்சிடுச்சு"
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மானவி "அக்கா டி.ஆர் கம்பெனியா ஓகே பண்ணாங்க"
"ஆமாம் அவங்க தான் ஓகே பண்ணாங்க"
"அந்த கம்பெனியோட எம்.டி ஜை பார்த்தியா? "
"இல்லை அவரோட பர்ஸ்னல் அசிஸ்டென்ட் வந்து தான் எல்லாம் பேசி ஓகே பண்ணாங்க.ஆனால் எம்.டியோட சைனை ஏற்கனவே அவங்க வாங்கிட்டு வந்துட்டாங்க"
"ம்ம்… அதானே பார்த்தேன் அவரை இது வரைக்கும் யாரும் பார்த்ததில்லையாம்.முடிஞ்ச வரைக்கும் தன்னோட வேலையாட்களை வைச்சுத் தான் வேலையை முடிச்சிடுவாராம் அவர் நேர்ல வந்து எந்த டீலிங்கும் வைக்கிறது இல்லையாம்"
"அப்படியா! இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்? " என்று அத்து கேட்க….
"அக்கா இதெல்லாம் ஒரு பொது அறிவுத் தானே"
"பொய் சொல்லாதே! மானவி திடீர்னு எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சது?"
"அக்கா கூகுள்ல போட்டால் எல்லாம் தெரியும்"என்றாள்.
"ம்ம்ம்… உண்மை தான் "
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட சாந்தனா "கடைசியில ஏன் சாப்பிடலைன்னு ?
கேட்டால் அதுக்கு மட்டும் பதிலில்லை"
"அம்மா வேலைல இருந்துட்டேன். அதனால தான் என்னால சாப்பிட முடியலை"
"இனிமேல் இந்த சாக்கு போக்குலாம் சொல்லுற வேலை எல்லாம் வைச்சுக்காத ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை கவனிக்கிற பாரு.இனிமேல் வேலை ரொம்ப அதிகமாக இருக்கும் அதனால இதே பதிலை சொல்லாதே!"என்று அவளை கண்டிக்க…
அவளோ சிரித்தபடி "அம்மா நீங்க சொல்றதை நான் இனிமேல் கவனமா நினைவில் வைச்சுக்கிறேன்" என்றாள்.
மானவி அத்துவிடம் "அக்கா அதெல்லாம் விடு முதல்ல இதுக்காக நீங்க கொடுக்கிற டீரீட் என்ன?"
"ட்ரீட் என்ன தெரியுமா? நீ ரொம்ப நாளா என்கிட்ட கேட்டு ஆசைப்பட்ட ஒன்னு. என்னன்னு சொல்லு பார்ப்போம்?"
"என்ன கேட்டேன்?"
"நீதான் சொல்லனும்"
"ஐ...யோ அக்கா நான் எதாவது ஒன்னு கேட்டால் பரவாயில்லை.பார்க்கிறது படிக்கிறதுன்னு எல்லாத்தையும் கேட்பேன் இதுல எதை என்னை ஞாபகம் வைச்சுக்க சொல்லுற?அதனால நீயே சொல்லிடு"
அவளது தலையில் லேசாக கொட்டியவள் "மண்டு எல்லாத்தையும் கிண்டலா பேசுறது.நீ ரொம்ப நாளா கேட்டல்ல நாம எங்கேயாவது லாங் டிரைவ் போகலாம்னு. அதனால ஒரு மூணு நாள் ஜாலியா கொடைக்கானல் போய்ட்டு வரலாமா?"என்று கேட்டதும் தான் தாமதம்
"ஆஆஆ…. என்று கத்தியவள் உண்மையாவ சொல்ற? என்னால நம்ப முடியலையே நம்பாமலும் இருக்க முடியலை அக்கா"என்று எழுந்துக் கொண்டு குதிக்க…
அவர்களுக்கு அருகில் இருந்த பாட்டி "ஏய் மானவி இப்போ எதுக்கு இப்படி கத்துற? "
"ஐ...யோ பாட்டி என்னால நம்ப முடியலை. அக்கா உண்மையாத் தான் சொல்றாளான்னு" என்று கேட்க…
அதற்கு பாட்டி"ஆமாம் மானவி நீ சொல்றது உண்மை தான்.இவ நம்மளை ஏமாத்துனாலும் ஏமாத்துவாள்" என்றார்.
"இல்லை பாட்டி நான் ஏமாற்ற மாட்டேன் உண்மையிலேயே நாம எல்லோரும் கொடைக்கானல் போறோம்.ரேகா ரெண்டு நாள்ல வந்திடுவாள் அவ வந்ததும் பொறுப்பை அவகிட்ட கொடுத்துட்டு நாம புல்லா என்ஜாய்ண்மெண்ட் பண்ணலாம்"
"அக்கா ரெண்டு நாள்ல கிளம்பிறோமா? "
"ஆமாம் மானவி.நெக்ஸ்ட் வீக்ல இருந்து புது புராஜக்ட் ஆரம்பிச்சிடும் அதனால அது வொர்க் பிஸியாக இருக்கும்.இன்னும் இரண்டு நாள்ல போகலாம்" என்றாள்.
அதற்கு மானவி "அக்கா அப்போ நான் காலேஜ்க்கு லீவ் சொல்லிடுறேன்" என்றாள் ஆனந்தமாய்….
சாந்தனாவும் பாட்டியும் அவளது சந்தோஷத்தைக் கண்டு அவர்களும் மகிழ்ந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து ரேகா கம்பெனிக்கு வந்தவுடன் ரேகாவிடம் எல்லா விஷயங்களையும் விவரமாக சொன்னாள்.அதற்கு ரேகா அத்துவிடம் "அத்து நீ எந்த மீட்டிங்கும் அட்டன் பண்ணமாட்டியே! என்னைத் தானே அட்டன் பண்ண சொல்லுவே.இந்த தடவை டி.ஆர் கம்பெனியிலிருந்து வர்றாங்கன்னு சொன்னவுடன் ஓகேன்னு சொல்லிட்டே,அன்னைக்கே கேட்டிருப்பேன் அப்பா பக்கத்தில் இருந்தாங்கன்னு தான் கேட்கலை"
"உண்மை தான் ரேகா.நானும் முதல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன்.ஆனால் அவங்க நாம இன்னொரு நாள் மீட்டிங் வைக்கலாம்னு சொன்னால் டீலிங் வேண்டாம்னு சொல்லிட்டால் என்ன? அதன் மூலமாக நமக்கு வரக் கூடிய நஷ்டத்தைப் பத்தி நான் யோசிச்சேன். அதனால நான் மீட்டிங் அட்டன் பண்ண ஒத்துக்கிட்டேன், எந்த பிரச்சினையும் வராதுன்னு நினைச்சேன் எதுவும் வரலை ரேகா"
"ஓகே அத்து எப்படியோ நீ உன்னுடைய அடையாளத்தை வெளியே கொண்டு வந்தால் எனக்கு சந்தோஷம் தான்.எனிவே நீ முதல்ல சைன் பண்ண வொர்க் சக்ஸஸ்ஸாக என்னுடைய வாழ்த்துக்கள்"என்று கைக்கொடுக்க…. அவளும் அதை சந்தோஷமாய் ஏற்று கைக் கொடுத்தாள்.
ரேகாவிடம் சொல்லி விட்டு மூன்று நாள் பயணமாக குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றனர்.அங்கே முக்கியமான இடங்களான கொடைக்கானல் ஏரி,ப்ரயண்ட் பூங்கா, குணா குகை,சவுக்குத் தோப்பு, ப்யர் சோழா அருவி, சாக்லேட் பேக்டரிகள் என்று எல்லா இடங்களையும் சந்தோஷமாக சுற்றிப் பாத்தனர்.
பயணம் இனிமையாய் முடிந்து சென்னையில் உள்ள வீட்டிற்கு தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த காரில் வந்துக் கொண்டிருந்தனர்.
வழியில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் அவர்கள் வந்துக் கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது.
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் காரிலிருந்து இறங்கி என்னவென்று பார்க்க டயர் பஞ்சராகி இருந்தது.அதை காரில் இருந்தவர்களிடம் சொல்ல…. சாந்தனா பதற்றமாகி "என்னாச்சு தம்பி திடீர்னு இப்படி சொன்னால் எப்படி?" என்று கேட்க…
அவரது பதற்றத்தைப் புரிந்துக் கொண்ட அத்து "அம்மா பயப்படாதீங்க! இந்த மாதிரி எந்தவித பிரச்சினை எதுவும் வந்தால் நம்ம தைரியமா இருக்கனும் தான் பகல்ல நம்மளோட பயணத்தை வைச்சேன்"
"அது சரி தான் இருந்தாலும் இப்போ என்ன செய்ய? "
"அம்மா பயப்படாதீங்க நான் டிரைவர் அண்ணன்கிட்ட கேட்கிறேன்"என்று டிரைவரிடம் விசாரித்தாள்.
"அண்ணே வண்டிக்கு பஞ்சரை சரி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?"
"தெரியலைம்மா. இங்கே பக்கத்தில எதாவது பஞ்சர் கடை இருக்குதான்னு பார்க்கிறேன், அவங்களைப் பார்த்து சரி பண்ண எப்படியும் ஒருமணி நேரத்திலிருந்து ஒன்னரை மணி நேரமாவது ஆகும்.அதுவும் இல்லாமல் நீங்க வீட்டுக்கு போய் சேர ஒரு மணி நேரம் தான் ஆகும். அதனால நீங்க எனக்காக காத்திருக்காமல் வழியில் எதாவது வண்டி கிடைத்தால் கூட போய்டுங்க உங்க லக்கேஜ் வேண்டுமானால் நான் வீட்டுல வந்து ஒப்படைச்சிடுறேனே!"என்றார்.
இந்த யோசனைத் தான் சாந்தனாவிற்கு சரியென்று பட்டது.'நின்றுக் கொண்டிருக்கும் காரில் நான்கு பெண்கள் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பது நல்லதல்ல' என்று எண்ணியவர் அத்துவிடம்
"அத்தும்மா நாம டிரைவர் தம்பி சொன்ன மாதிரியே செய்யலாம்.ரொம்ப இங்கே நிற்க வேண்டாம்"
"சரிம்மா அப்படியே செய்யலாம்"என்று சாந்தனா சொன்ன முடிவிற்கே அத்துவும் ஒத்துவர நால்வரும் காரை விட்டு இறங்கி தங்களுடைய கைப்பைகளை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்ததனர்.
நல்லவேளை அந்த இடம் ஆள் நடமாட்டமும் முன்னால் சில பெரிய கட்டிடங்களும் இருந்தன.அதைக் கண்ட சாந்தனா "பரவாயில்லை கார் கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நின்றது.இங்கே எதாவது வண்டிக் கிடைச்சால் போய் விடலாம்" என்றார்.
அதையே மற்ற மூவரும் ஒத்துக் கொள்ள… டிரைவர் காரை லாக் செய்து விட்டு அவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
இவர்கள் நால்வரும் கொஞ்சம் முன்னால் நடந்து காலியாக வந்த வண்டியை பார்த்து கையை அசைத்துக் காட்டி நிப்பாட்ட முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
ஆட்கள் இல்லாமல் வந்த வண்டிகள் இவர்களைக் கண்டதும் வேகமாக சென்றது. இதைக் கவனித்த மானவி "வண்டி வரும் இடத்திலிருந்து கொஞ்சம் முன்னால் சென்றுப் பார்க்க அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் ஆட்கள் இல்லாமல் வந்துக் கொண்டிருந்த வண்டியை இவர்கள் பக்கமாக நிறுத்தி "ஏதோ இவர்களைப் பார்த்து சைகைச் செய்து ஏதோ பேசினர். வண்டியும் இவர்களைக் கண்டதும் வேகமாகச் சென்றது.
இதைக் கவனித்த மானவி நேராக அத்துவிடம் சென்று நடந்த விஷயத்தைச் சொன்னாள்.
"அக்கா இவனுங்க யாரு? நாம போக வேண்டியதை ஏன் தடுக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டே ஆகனும்"
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.நீ அமைதியாய் இரு அவங்க வேற எதுக்காவது பேசினோம்னு சொன்னாங்க என்றால் நாம் தான் தேவையில்லாத பிரச்சினையை இழுத்த மாதிரி வரும்" என்று சாந்தனாவும் அத்துவும் சொல்ல…
அதைக் கேட்ட… மானவி சரியென்று தலையசைத்து விட்டு அமைதியாக நின்றனர்.நேரம் கடந்ததே தவிர எந்த வண்டியும் நின்றபாடில்லை.பஞ்சர் கடைப் பார்க்கச் சென்ற டிரைவரும் வரவில்லை.சாந்தனாவிற்கு ஏதோ மனதிற்கு நெருடலாய் இருந்தது.அவர் அத்துவிடம் "டிரைவர் தம்பிக்கு போன் போட்டு பாரேன்.எப்போ வருவாங்கன்னு? " என்றதும்
"சரிம்மா" என்று அவளும் டிரைவருக்கு போன் செய்ய… டிரைவரின் நம்பர் நாட் ரீச்சபிளாகவே இருந்தது.
அதை சாந்தனாவிடம் அத்து சொன்னாள்.அப்பொழுது தள்ளி நின்றுக் கொண்டிருந்த இரண்டு பேர் அல்ல நான்கு பேராய் அவர்கள் பக்கம் வந்தனர்.மானவி எதையும் யோசிக்காமல் நேராய் அவர்களிடம் சென்று "எதுக்காக எங்களை போக விடாமல் தடுக்கிறீங்க? " என்று கத்த….
இதை எதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத அத்து என்ன செய்வதென்று புரியாமல் நிற்க… அதில் ஒருத்தன் எதிர்ப்பக்கம் இருந்த பெரிய கட்டிடத்தைக் காட்டி "இதோ இந்த பில்டிங்ல உள்ள முதலாளித் தான் சொன்னாங்க நீங்க அவரைப் பார்க்காமல் இங்கிருந்து போக கூடாதுன்னு சொன்னாங்க அதனாலத் தான் நீங்க போக முடியாமல் வர்ற வண்டியை எல்லாம் தடுத்து நிறுத்துறோம்.உங்க டிரைவரும் வர மாட்டான்.நீங்க உள்ள போய் பார்த்தால் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் இல்லைன்னா இங்கேயே இருக்க வேண்டியது தான்" என்று மிரட்டலாய் சொல்லி விட்டுச் சென்றனர்.
அதைக் கேட்டு அனைவரும் பயந்து நிற்க…. மானவி அம்மாவிடம் "அம்மா நான் அப்பவே சொன்னேன்.நீங்க தான் கேட்கலை இப்போ பாருங்க அவனுங்க வாயாலேயே சொல்லிட்டு போறானுங்க.இப்போ என்ன செய்ய?"
மூவரும் யோசனையில் நிற்க… சாந்தனா அத்துவிடம் "இப்போ என்னச் செய்ய அத்து? யாருன்னு தெரியாமல் அங்கே என்ன ஆபத்து இருக்குன்னு தெரியாமல் எப்படி உள்ளே போறது? "
"உண்மை தான் அம்மா. ஆனால் இதை விட்டால் நமக்கு வேற வழியில்லை இங்கே எவ்வளவு நேரம் நிற்க முடியும் டிரைவர் அண்ணா போனும் என்னாச்சுன்னு தெரியலை நாம போகலாம் அம்மா"
"போலாம் சாந்தனா நாம நாலு பெண்கள்னு பயப்படாதே ! பெண்கள் எதுவும் தைரியமா சமாளிக்கனும் போகலாம்" என்று பாட்டியும் சொல்ல…
"அதான் பாட்டியே சொல்லிட்டாங்கல்ல அப்புறம் வாங்க தைரியமாக போகலாம்" என்று மானவியும் சொல்ல… நால்வரும் அவர்கள் சொன்ன அந்த இடத்திற்குச் சென்றனர்.
வாயிலில் பெரிய கேட் மூடி இருந்தது.இவர்கள் முன்னால் வரவும் வாசலில் இருந்த வாட்ச்மேன் எதுவும் கேட்காமல் கதவை திறந்தான்.நால்வரும் சுற்றிப் பார்வையை சுழல விட்டப்படி நடந்தனர்.அந்த இடம் பெரியதாக இருந்தது.
அங்கே இவர்கள் உள்ளே நடக்க… அந்த இடம் முழுவதும் நவீனமயமாக உள்ள ஒரு கம்பெனி போல் இருந்தது.இவர்களுக்கு இன்னும் யோசனையாகவே இருந்தது.இவர்கள் அங்கே உள்ள பெரிய ஹாலில் எங்கே செல்வது என்று தெரியாமல் நிற்க….
அங்கே இவர்களை நோக்கி ஒரு பெண் வந்தாள்.வந்தவள் இவர்களிடம் " நீங்க ரெண்டாவது மாடிக்குப் போங்க" என்று சொல்லி விட்டு இவர்களது பதிலை எதிர்ப்பார்க்காமல் வந்த வேகத்திலேயே சென்றாள்.
யாரிடமும் எதுவும் கேட்க முடியாததால் இவர்களும் துணிந்து ரெண்டாவது மாடிக்குச் சென்றனர்.
நால்வரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.ஒருவரை கண்களால் பார்த்துக் கொண்டனர்.சாந்தனா சிறு தலையசைப்போடு போகலாம் என்று மட்டுமே சொன்னார்.
நேராக இருந்த லிப்ட்டில் ஏறாமல் படிக்கட்டு வழியாக ஏறிச் சென்றனர்.இரண்டாவது மாடிக்குச் செல்ல… அங்கே இருந்த கதவை திறந்து மானவி முதலில் உள்ள சென்றனர்.அங்கே பெரிய ஹால் இருந்தது.அந்த ஹாலின் கடைசியின் ஒரு முனையில் ஒரு கதவு இருந்தது.அந்த கதவிற்கு அருகில் வாட்டசாட்டமான ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான்.
இவர்களைக் கண்டதும் அங்கே ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த ஷோபாவைக் காட்டி "அங்கே போய் உட்காருங்க பாஸ் இப்போ மீட்டிங்ல இருக்காங்க.மீட்டிங் முடிந்ததும் உள்ளே போகலாம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
இவர்கள் நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கே அமர்ந்தனர்.நேரம் வேகமாக கடக்க… அந்த ஆளு சொன்னது போல் யாரும் அவர்களை சந்திக்க வரவில்லை.போனவனும் திரும்ப வரவில்லை. சாந்தனா யோசனை பலமாக இருக்க….
பொறுமையிழந்த மானவி "அம்மா இங்கே உள்ளவங்களுக்கு நம்மளை பார்த்தால் பைத்தியங்காரங்க மாதிரி தெரியுதா? எதுக்காக இவங்க நம்மளை ஏதோ குற்றவாளி மாதிரி ட்ரீட் பண்ணுறாங்க.பணம் இருந்தால் இவங்களால என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா? என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது,நான் போய் யார் அவன் பெரிய ஆளான்னு பார்க்கிறேன்" என்று எழுந்துக் கொள்ள….
சாந்தனா அவசரமாக "மானவி கொஞ்சம் பொறுமையா இரு.என்ன இடம்? என்றே நமக்கு தெரியலை இதுல அவசரமா நம்மாள முடிவு பண்ணக் கூடாது"
அவளோ சாந்தனா பேச்சைக் கேட்காமல் அத்துவைப் பார்த்து "அக்கா நான் யார்னு போய் பார்க்கப் போறேன். நீ என்ன சொல்ற? " என்றதும்
அத்து போ என்பது போல் யோசனையோடு தலையசைக்க….
சாந்தனா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.ஆனால் மனம் முழுவதும் ஏனோ பயத்தை நிரப்பிக் கொண்டு இருந்தது.இருந்தாலும் அத்துவைப் பார்க்கும் பொழுது ஒரு நம்பிக்கை இருந்தது. மானவி நேராக அங்கே இருந்த கதவை திறந்து உள்ளே பார்க்க…. அவள் கதவை திறந்ததும் அங்கிருந்த அனைவரும் அவளையே பார்த்தனர்.
அங்கிருந்தவர்களைப் பார்த்து மானவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவளோ 'எவனாவது வில்லன் மாதிரி ஆண்மகன் இருப்பான்' என்று எண்ணியவளுக்கு அங்கே வயதான பணக்கார பெண்கள் பத்து பதினைந்து பேர் அங்கே போடப்பட்டிருந்த நீண்ட பெரிய டேபிளைச் சுற்றி போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்திருந்தனர்.
அவர்களின் தோற்றத்தைப் பார்த்தும், அவர்கள் அணிந்திருந்த நகை,உடையை பார்த்தே அவர்களின் பணத்தை புரிந்துக் கொண்டவள் 'இவர்கள் ஏன் இப்படி செய்யப் போகிறார்கள்' என்ற மனதில் தோன்றிய கேள்வியோடு தைரியமாக "இங்கே யாருங்க எங்களைப் பார்க்கனும்னு சொன்னவங்க?" என்று மனதில் இருந்த கேள்வியை கேட்டாள்.
அந்தக் கூட்டத்தில் இருந்து எழுந்து வந்த வயதான பெண் ஒருவர் "பொண்ணு அவன் பார்க்கனும்னு நினைச்சவ இங்கே வரலை.அதனால அவன் இங்கிருந்து போய்ட்டான்,நீங்க எல்லோரும் இப்போ திரும்ப போகலாம்" என்றார்.
அவரது பதிலைக் கேட்டு கோபமடைந்த மானவி "என்ன பேசுறீங்க? இவ்வளவு நேரம் எங்களை அலைக்கழிச்சுட்டு இப்போ பார்க்க மாட்டேன்னு சொல்ற அவ்வளவு பெரிய ஆளா இவன்? "
என்று கோபமாக கேட்க…
அதற்கு அந்த வயதான பெண் சிரித்தப்படி "இங்கே பாரு பொண்ணு எங்க மேல நீ கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.அவன் இங்கிருந்து போய்ட்டான்.நீ நின்னுட்டு இருக்கிறதே வேஸ்ட்" என்றார்.
அவர் சொன்ன பதிலைக் கேட்டு கோபமடைந்தவள் "அவன் அவன்னு சொல்லுறீங்களே அவனுக்கு பெயர் இல்லையா? " என்று கேட்க…
அதற்கு சிரித்தவர் "அதை சொல்ல எங்களை அனுமதி இல்லை.ஆனால் அவனை பேரன் தான் கூப்பிடுவோம்,நீயும் அப்படியே சொல்லு"என்று சொல்லிச் சிரிக்க… அங்குள்ளவர்களும் சிரிக்க இதற்கு மேல் இங்கே நின்றுக் கொண்டு இருந்தால் பிரயோஜனம் இல்லை என்று அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.அவள் வந்ததைக் கண்டதும் தான் சாந்தனாவிற்கு நிம்மதியே வந்தது. உடனே மூவரும் எழுந்துக் கொள்ள… பாட்டி மானவியிடம் "என்னாச்சு?"
அவளோ கோப முகமாய் "நம்மளை என்ன நினைச்சு இருக்காங்கன்னு தெரியலை பாட்டி"
சாந்தனா பதற்றமாய் "உள்ளே என்ன நடந்துச்சு? மானவி அதைசொல்லு"
அத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.மானவி நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்."அம்மா இங்கே என்ன நடக்குதுன்னு? ஒன்னுமே புரியலை"
சாந்தனா முழுவதையும் கேட்டவர் "இங்கே எதையும் யோசிக்க நேரமில்லை மானவி நாம முதல்ல இங்கிருந்து கிளம்பனும் வா அத்து போகலாம் ஏதோ நாம புண்ணியம் பண்ணி இருக்கோம். அதனால எந்த அசம்பாவிதமும் நடக்கலை" என்று இருவரையும் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க …பாட்டி பின்னால் நடந்தார்.
அத்துவிற்கு அவள் கடைசியாக சொன்ன வார்த்தை தான் ஒன்றை நினைவுப் படுத்தியது.
இவர்கள் நால்வரும் கீழே இறங்கி வர மானவி "அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க"
அதற்கு சாந்தனா "எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்"என்று வேகமாக நடந்தார்.
அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியே வர அவர்கள் வந்த காரின் டிரைவர் வண்டியை சரிப்பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் நேராக சென்ற சாந்தனா "தம்பி வண்டி ரெடியாயிடுச்சா? "
"வண்டி ரெடியாயிடுச்சும்மா. நீங்க இன்னும் வீட்டுக்கு போகலையா? "
"இல்லை பக்கத்தில் ஒரு இடத்திற்கு போய்ட்டு வந்தோம்"
"அப்படியா! வண்டில ஏறுங்க உடனே கிளம்ப வேண்டியது தான்" என்றார்.
மானவி டிரைவரிடம் "அண்ணே உங்க போனுக்கு கால் பண்ணோம்.ஏன் எடுக்கலை? "
"அது போன் கையில வைச்சுட்டு நடந்து வரும் பொழுது எதிரே வந்த ஒருத்தர் என் மேல இடிச்சு கீழே விழுந்திடுச்சு.அதோட போன் ஆன் ஆகலை, கொஞ்சம் நேரம் கழிச்சு தான் ஆன்னாச்சு" என்றார்.
"ஓ… அப்படியா! " என்றாள்.
இங்கே நடந்த பேச்சு எதுவிற்கும் அவள் பதில் சொல்லவில்லை.அமைதியாக யோனையோடு அமர்ந்துக் கொண்டாள்.கார் வேகமாக சென்னையை நோக்கி புறப்பட்டது.
(தொடரும்)