என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம்-5
ஆட்டோவில் ஏறி போனில் வந்த விலாசத்திற்கு விரைந்தாள்.மானவியின் விஷயத்தைச் சொன்ன எண்ணிற்கு மறுபடியும் அழைக்க… போன் ரிங் போனதே தவிர எடுக்கவில்லை.திரும்பவும் அதே எண்ணிற்கு அழைத்தாள்.ரிங் அடித்தது மறுமுனையில் அழைப்பை ஏற்க இவள் "ஹலோ"
மறுமுனையில் "நீங்க இன்னும் வரலையா?சீக்கிரம் கிளம்பி வாங்க" பதற்றத்துடன் அவள் பேச
"இதோ வந்துட்டு இருக்கேன்"
"நீங்க உள்ளே வந்ததும் நேர் சந்துக்குள்ள வந்திடுங்க அங்கே கொஞ்சம் முன்னாடி வந்திங்கன்னா அந்த வீடு வந்திடும்" என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டாள்.
இவள் அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்னே போன் கட்டாகி விட இவள் திரும்பவும் அழைக்க அந்த எண்ணிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை.
இவள் வர வேண்டிய இடமும் வர அங்கே இறங்கினாள்.அவள் இறங்கிய இடம் வியாசர்பாடி.அங்கே நடுத்தர குடும்பத்திற்கு கீழே வசிப்பவர்கள் அங்கு அதிகம்.மனமும் முழுவதும் பதற்றத்தோடு சுற்றிப் பார்க்க நெருக்க நெருக்கமாய் உள்ள வீடுகளும் அங்கே வேகமாய் செல்லும் வாகனங்களும் நடந்துச் செல்லும் மனிதர்களும் இருந்தனர்.
அத்து போனில் குறிப்பிட்டு இருந்த விலாசத்தை ஒரு தடவை படித்து பார்த்து அவள் நின்றிருந்த இடத்திற்கு நேராக அந்த சந்தின் பெயரைப் பார்க்க அது இல்லை.திரும்பி நால்புறமும் பார்க்க ஓரிடத்தில் குறுக்குச் சந்தில் அந்த தெருவின் பெயர் இருந்தது.அந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.
போகும் பாதையில் நிரம்பி வழியும் சாக்கடை தண்ணீரில் நடந்தபடி மனம் முழுவதும் 'அது மானவியாக இருக்கக்கூடாது.மானவி இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் வர மாட்டாள்'என்று தனக்குள்ளே நினைத்தபடி வேகமாய் நடந்தாள்.அவள் மனதில் வைத்திருந்த எண்ணை நடக்கும் ஒவ்வொரு வீட்டின் வாசலில் உள்ளதா என எண்ணைக் கவனித்தபடி நடக்க…. ஒரு பத்து வீடு கழிந்த பிறகு அந்த வீட்டின் எண்ணைப் பார்த்து மூடியிருந்த வீட்டின் கதவை கைகளால் தள்ளி திறந்து பார்க்க ஒரே இருட்டாக இருந்தது.
போனில் இருந்த டார்ச் வெளிச்சத்தை ஆன் செய்து உள்ளே நடக்கத் தொடங்கினாள்.அங்கே நேராக நடக்க இருபக்கங்களிலும் ஒரு தனி அறை போல் கதவு மூடியிருக்க அதைப் பதற்றத்தோடு திறந்துப் பார்க்க அங்கே யாரும் இல்லை.இப்படியே நான்கைந்து அறைகளை வேகமாக திறந்தவள் ஆறாவது அறையை திறந்துப் பார்த்தாள்.
அங்கே …. மானவி போட்டிருந்த சுடிதார் அங்காங்கே கிழிக்கப்பட்டு கன்னத்தில் அடி வாங்கின கைரேகைககளோடு உதட்டின் ஓரத்தில் இரத்தம் வழிய மயங்கியபடி கட்டிலில் படுத்துக் கிடந்தாள்.
அதைக் கண்ட அத்துவோ சுற்றியிருந்த இடத்தைப் பற்றியும் நினைக்காமல் "மா...னவி" என்று கத்தியபடி அவள் அருகில் வந்து அழுதுக் கொண்டே கத்தி அழைத்தாள்.
"மா..னவி மானவி எழுந்திரு" என்று அவள் கன்னத்தை மெதுவாக தட்டி எழுப்பினாள்.
அவளோ சிறிதும் அசைவின்றி கிடந்தாள்.கண்கள் முழுவதும் கண்ணீரோடு அவளது தலையை தூக்கி தன் மடியில் படுக்கவைத்து தன் ஹேண்ட்பாக்கில் எப்பொழுதும் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவள் முகத்தில் தெளிந்து இன்னும் வேகமாக அவளுடைய தோள்களை பிடித்து தட்டி எழுப்பினாள்.
முகத்தில் தண்ணீர் பட்டதும் லேசாக கண் விழித்தவள் அவளை பார்க்காமலேயே "அ….க்...கா அ...க்...கா" என்று தட்டுத்தடுமாறி மாதிரி பேச…
அவளை தன் நெஞ்சோடு அணைத்தவள் "மானவி இங்கே எதுக்கு வந்தே? யார் உன்னை இங்கே கூடிட்டு வந்தது? என்ன நிலைமையில் நீ இருக்கிறேன்னு உனக்கு தெரியாது பாரு என்னை பாரு மாதவி ஐயோ இப்போ நான் என்னச் செய்வேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே"என்று அழுதுக் கொண்டே கேட்க…
அவளோ கண்களை பாதி திறந்தபடி அரைமயக்கத்தில் ஏதேதோ உளறினாள்.அப்பொழுது மானவியின் கைககளுக்கு அருகில் மடங்கியபடி ஒரு வெள்ளைத்தாள் கிடந்தது.அதை எடுத்து விரித்துப் பார்க்க அதில் ஏதோ எழுதியிருந்தது அதை படித்துப் பார்த்தாள்.
"உன் தங்கச்சியை முதல்ல காப்பாத்திட்டு அன்று நீ வராமல் போன இடத்தில் வந்து இன்று என்னை பாரு" என்று எழுதி இருந்தது.
அதை படித்து பார்த்தவளுக்கு இது யாரோ தன்னை பழிவாங்க செய்த செயல் என்று விளங்கியது.
அத்துவிற்கு அப்பொழுது தான் விளங்கியது. மானவியை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்பது தான்.இது எந்த இடம் கூட அவளுக்குத் தெரியாது.அந்த சிறிய அறையில் தனக்கு உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? என்றுப் பார்த்தால் அங்கே யாரும் இல்லை.
தன் கண்ணீரை துடைத்து மானவியை அந்த கட்டிலிலேயே படுக்க வைத்து விட்டு எழுந்துக் கொண்டாள்.ஆம்புலன்ஸ்ஸிற்கு போன் செய்தாள்.போன் செய்து விட்டு ரேகாவின் போனுக்கு அழைத்தாள்.
"ஹலோ"
"ரேகா… நான் இக்கட்டான நிலைமையில் மாட்டிட்டு இருக்கேன்"
"என்ன என்னாச்சு? "
"என்ன விஷயம்னு நான் நேர்ல வந்து பேசிக்கிறேன். இப்போ நமக்கு தெரிஞ்ச பிரெண்ட் சுலோச்சனா நடத்துற ஹாஸ்பிட்டல்க்கு போன் போட்டு ஆம்புலஸ்ஸிற்கு வரச் சொல்லி இருக்கேன்"என்று சொல்லி முடிக்கும் முன் ரேகா அவசரமாய்…
"அத்து உனக்கு எதாவது ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சா?"
என்று பதற்றத்தோடு கேட்க…
"ரேகா என்னை முதல்ல பேசவிடு.எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை மானவிக்காகத் தான் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி இருக்கேன்,அவளுக்கு என்ன பிரச்சினை? என்பதை நீ நேர்ல வந்து பார்த்தால் புரிஞ்சுப்பே நான் அனுப்பி இருக்கிற அட்ரஸிற்கு உடனே கிளம்பி வா" என்று அவளுடைய பதிலைக் கூட எதிர்ப்பாராமல் வைத்து விட்டாள்.
அந்த இடத்தில் இருந்த மற்ற அறைகளையும் போய் வேறு யாராவது இருக்கிறார்களா? என்று சோதனை செய்துப் பார்க்க அங்கே யாரும் இல்லை.அவளுக்கு பெரிய சந்தேகம் உண்டானது.
இந்த இடத்தில் யாருமே இல்லை.சுற்றியிருந்த அந்த இடத்தைப் பார்த்தால் இங்கு விபச்சாரம் ஏற்கனவே நடந்திருக்க வாய்ப்பு இருப்பது போலவே அங்குள்ள நிலைமை இருந்தது.அதோடு மானவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனும் இல்லை.வேறு எந்த ஆட்களும் இல்லை அதுவும் அவளுக்கு சந்தேகத்தை இன்னும் பலப்படுத்தியது.
மானவிற்கு அருகில் இருந்த ஒரு போர்வையை எடுத்து அவள் உடல் முழுவதும் மூடி தலையையும் மூடினாள்.வெளியே ஆம்புலன்ஸில் கொண்டு போகும் போது அங்குள்ளவர்கள் யாரும் மானவியின் முகத்தை பார்க்கக் கூடாது என்றெண்ணி முன்னரே இதை எல்லாம் செய்து முடிக்க... செய்த சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது.அதற்கு பின்னால் ரேகாகாவும் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
ஆம்புலன்ஸில் வந்தவர்கள் மானவியை சிறு செக்அக்ப் செய்து விட்டு அவளை வண்டியில் ஏற்றினர்.மானவியின் நிலைமை பார்த்து ரேகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவள் அத்துவிடம் "அத்து மானவிக்கு என்னாச்சு? "என்று கேட்க….
"ரேகா அவளுக்கு என்ன நடந்திச்சுன்னு அவளே வந்து சொன்னால் தான் நமக்கு தெரியும். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை? நீ அவகூட ஹாஸ்பிட்டல் போ நான் வரேன்"
"நீ எங்களோடு வராமல் எங்கே போற? "
"எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு,அதை முடிச்சுட்டு வரேன்.நான் அம்மாக்கு போன் போட்டு முழு விவரத்தையும் சொல்லாமல் அவங்க ரெண்டுபேரையும் அனுப்பி வைக்கிறேன் கொஞ்ச நேரம் அவங்களை சமாளித்துக் கொள்"என்று ஆம்புலன்ஸ்ஸில் மானவியோடு அவளையும் ஏற்றி விட்டாள்.
அத்து இன்னொரு ஆட்டோவில் ஏறி கையில் தான் படித்த காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வழியாக உள்ள அந்த நெடுஞ்சாலை நோக்கி சென்றாள்.
போகும் வழியில் சாந்தனாவிற்கு போன் செய்தாள்.
"ஹலோ அம்மா. நான் சொல்ற விஷயத்தை எதிர் கேள்வி கேட்காமல் கேட்டுக்கோங்க, நீங்க உடனே என்னுடைய ப்ரெண்ட் சுலோச்சனா ஹாஸ்பிட்டலுக்கு உடனே போங்க.அங்கே தான் மானவிக்கு இருக்காள் மற்ற விஷயங்களை நான் நேரில் வந்து பேசிக்கிறேன்" என்று சாந்தனாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராமல் வைத்து விட்டாள்.
சாந்தனாவிற்கு அத்து பேசிய விதத்திலேயே புரிந்து போனது 'ஏதோ பெரிய பிரச்சினை நடந்துக் கொண்டிருக்கிறது' என்று புரிந்து எதுவும் சொல்லாமல் சுலோச்சனா ஹாஸ்பிட்டலுக்கு செல்லத் தயாரானார்.பாட்டியிடம் அத்து சொன்னதை சொன்னார்.
ஒருமணி நேர பயணத்திற்குப் பிறகு அந்த நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள அந்த கட்டிடத்தின் வாயிலில் போய் இறங்கியவள் நேராக மேலே செல்வதற்கான வழியை நோக்கி நடந்தாள்.யாரிடமும் எதையும் கேட்காமல் அங்கே மாடியில் இருந்த பெரிய ஹாலை நோக்கி வேகமாக முகம் முழுவதும் கோப முகமாய் சென்றாள்.
எதிரே இருந்த கதவை வேகமாய் தள்ளியவள் உள்ளே சென்றாள்.அங்கே யாரும் இல்லை அந்த பெரிய ஹாலில் யாரும் இல்லாமல் போகவே அந்த ஏமாற்றத்தில் சத்தமாக கத்தினாள்.
"யாரு யாருடா நீ என்னையே ஏமாற்றனும்னு நினைக்கிறவன்?என் தங்கச்சி மேல எவ்வளவு தைரியம் இருந்தால்… கையை வைச்சு இருப்பே? வாடா வெளியே வாடா என்னைத் தானே பார்க்கனும்னு சொன்னே நானே உன்னைப் பார்க்க வந்துட்டேன் வெளியே வா" என்று அகங்காரமாய் கத்தினாள்.
எதற்கும் பதில் வராமல் போகவே அயர்ச்சியாய் திரும்பி கதவை திறக்கப் போகும் தருணம் அவளை அழைத்தது அந்த ஆணின் கம்பீரக்குரல்.
"அத்வதா... அத்வதா நில்லு என்னைப் பார்க்காமல் எங்கே அவசரமா போற?"என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்து முழுப்பெயரையும் உரிமையாய் சொல்லி அழைப்பவனின் குரல் ஏற்கனவே கேட்டு பழகிய அந்தக்குரலைக் கேட்டு அவள் அதிர்ச்சியாய் திரும்பிப் பார்க்க அங்கே அவனே அவன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனை அங்கே காண்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
ஆறடி உயரத்தில் அளவான உடல்வாக்கில் நேர்த்தியாய் உடையணிந்து முகத்தில் அதே சிறு புன்னகையோடு அவனை அங்கே கண்ட அதிர்ச்சியில் பல கேள்விகள் மனதில் சடாரென வந்து தோன்றிய படி இவள் மெதுவாய் தன் உதடுகளால் அவனது பெயரை உச்சரித்தாள்.
"தவ… தவரூபன் இவன் எப்படி இங்கே? " என்று மெதுவாய் தனக்குள்ளே சொல்ல…
அவளது வாய் உச்சரிப்பை புரிந்துக் கொண்டவன் ஒரு சிறு புன்னகை சிந்தியபடி…
"அத்வதா பரவாயில்லை இன்னும் என் பெயரை எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கே"என்றதும்
அவன் கையை தட்டி விட்டவள் "நான் உன்… என்று சொல்லும் பொழுது அவன் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கண்டு மரியாதையாய் "உங்க பெயரை சொல்லலை"
அவளது பதிலைக் கண்டு புன்னகைத்தவன் "என் பெயரை நீ சொல்லித் தான் எனக்குத் தெரியனும்னு அவசியம் இல்லை" என்றான்.
"இப்போ இந்த தேவையில்லாத பேச்சு தேவை இல்லைன்னு நினைக்கிறேன்"
"வேற என்ன பேசனும்னு நினைக்கிற? என்னை அசிங்கப்படுத்திட்டு போனியே அதைப்பத்தி பேசலாமோ? "
"இப்போ அதை எல்லாம் நினைச்சுப் பார்க்குற நிலைமையில் நான் இல்லை"
"ம்ம்ம்… சரி இப்போ என்ன கேட்கனும்னு நினைக்கிற? "
"என் தங்கச்சி மானவியை என்ன பண்ணீங்க? "
"ம்ஹீம் உன் தங்கச்சி ம்ம்ம்… என்று தலை ஆட்டியவன் நான் ஒன்னும் செய்யலை"
"நீங்க ஒன்னும் செய்யலைன்னா இதோ இதுக்கு என்ன அர்த்தம்?" என்று தன் கையில் உள்ள பேப்பரை எடுத்துக் காட்டியவள் "நான் உங்களை அசிங்கப்படுத்தினேன்னு என்னை பழி வாங்கத்தானே மானவியை யூஸ் பண்ணீங்க? "
அதைக் கண்டு அவன் "நான் உன்னை பழி வாங்க நினைத்தால் உன்கிட்ட நேரடியா மோதுவேன் இப்படி மானவி மூலமா பழி தீர்க்க நினைத்தால் அது என் வம்சித்திற்கே செய்ற துரோகம் அதை நான் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.உன்னை இங்கே வரவைப்பதற்காக நான் தான் எழுதி வைக்கச் சொன்னேன் அவ்வளவு தான்"
" உங்களுக்கு அது தேவையில்லைன்னா மானவி இருந்த இடத்தில் நீங்க எப்படி? "
"அதை நீ தெரிஞ்சுக்கனும் தான் உன்னை இங்கே வர வைச்சேன்"
"எனக்கு தெரிய வேண்டிய விஷயம் என்ன இருக்கு? "
"என்ன இருக்கா? கொஞ்சம் இல்லை நிறையவே இருக்கு.நீ தான் ரொம்ப புத்திசாலி ஆச்சே உன் தங்கச்சியை காப்பாத்த போனியே அங்கே ஒருத்தனும் இல்லையே ஏன்னு யோசிச்சியா? இல்லை காரணம் தெரியாமல் அமைதியா இருந்தியா?"
அவள் அமைதியாய் இருக்க….
"என்னைப் பார்த்ததும் உனக்கு கோபம் தான் வந்துச்சே தவிர இதுக்கு முன்னாடி உன்னை எங்கே பார்த்தேன்னு தெரிய வேண்டாமா? "
அவள் அதற்கும் அமைதியாய் இருந்தாள்.அவள் மனதிலும் இதே மாதிரி ஆயிரம் கேள்விகள் இருக்கிறது அதற்கு பதில் தெரியாமல் தானே அவளும் ஒரு வாரமாக மனதில் சுமந்துக் கொண்டு இருக்கிறாள்.
(தொடரும்)