கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -8

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -8


இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டு தங்கள் அறையில் போய் இருந்தவர்கள் தான் அதற்குப் பிறகு இருவரும் வெளியே வரவில்லை.



மறுநாள் காலை தவரூபன் எழுந்துக் கொள்ளும் பொழுது அந்த அரண்மனையே ரொம்ப பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.


அதைப் பார்த்த தவரூபனுக்கு ஆச்சரியமாக இருந்தது.'நேற்று வரை எல்லாம் நல்லாத் தானே இருந்தது.ஆனால் இன்னைக்கு ஏன் இவ்வளவு அலங்காரம்?' என்று யோசித்தபடி வெளியே வந்தவன் 'இன்னைக்கு அந்த இராட்சசி கண்ணுல படவேக் கூடாது' என்று எண்ணிக் கொண்டு அவன் அம்மாவைப் பார்த்து என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அம்மாவின் அறையைப் போய் பார்க்க அம்மா அங்கே இல்லை.


'என்ன செய்ய? ' என்று யோசனையோடு நடந்து வர அவனுக்கு முன்னால் வந்த வேலையாட்களிடம் "அரண்மனை இன்னைக்கு என்ன விசேஷம்?ஏன் ரொம்ப பரபரப்பாக இருக்கீங்க? " என்று தன் மனதில் உள்ள ஆவலைப் பற்றிக் கேட்க…


"அது இன்னக்கு காலையிலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம் ஒன்னு நடந்திச்சு அதோடு ரதன் இளவரசரும் வர்றாங்க" என்றான்.

'ஓ மாமா வர்றதுனாலத் தான் இவ்வளவு ஏற்பாடா?' என்று வியந்துபடி நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று குளித்து அவனும் ரெடியாகி சாப்பிட ஹாலுக்கு வந்தாள்.ஹாலில் மொத்த குடும்பமே இருந்தது.


ஊரிலிருந்து தேவியும் அவளுடைய குடும்பத்தினரும் வந்தினர்.பிரகத்தன் தவரூபனைக் கண்டதும் இருவரும் கட்டிக் கொண்டனர்.ஆரலியும் விண்காவும் ஹாஸ்டலில் இருந்து அரண்மனைக்குத் திரும்பி இருந்தனர்.


அவர்களும் தவரூபனிடம் பேசினர்.அவர்கள் எல்லோரும் ஒரே பள்ளியில் பயில்வதால் ஒருவொருக்கொருவரிடம் ஏற்கனவே நல்ல அறிமுகம் இருந்தது.தவரூபன் மேல் படிப்பிற்குச் வெளிநாட்டுக் செல்வதால் அவனுக்கு முன்னாலேயே தேர்வு முடிந்து அரண்மனைக்கு வந்து விட்டான்.


அதோடு அவன் இந்த முறை தான் தன் அம்மாவோடு மாமா வீட்டிற்கு வந்திருக்கிறான்.அவன் எப்பொழுதும் வெளிநாட்டில் உள்ள தன் சித்தி வீட்டிற்கோ அல்லது தன்னுடைய இன்னொரு மாமா வீட்டிற்கோ செல்வது வழக்கம்.இந்த முறை திரும்பவும் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க இருப்பதால் இங்கு வந்தான். அத்வதா இங்கே அருகில் படிப்பதால் அவளைப் பற்றிய அறிமுகம் அவனிடம் இல்லை.


பிரகத்தனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் அவன் கவனித்தான்.அந்த இடத்தில் எல்லோரும் இருந்தனர்.ஆனால் அத்வதாவும் பாட்டியும் அத்தையும் மட்டும் இல்லாமல் இருப்பதைக் கவனித்தவன் 'இதைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம்' என்று நினைக்கும் போது அங்கே வந்தார் அவனின் தாய் பிருந்தா.


"என்ன ரூபா இன்னைக்கு சீக்கிரமா எழுந்திட்டே?"

"அ...ம்மா" என்று சுற்றி இருப்பவர்களைப் பார்த்து கண்ணைக் காட்ட…

அவரோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு 'ம்ம்ம்… புரியுது சுற்றி இருக்கிறவங்க முன்னாடி அசிங்கப்படுத்தாதேன்னு சொல்லாமல் சொல்லுற'என்று நினைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டே வந்தார்.


அவனருகில் வந்து நின்றதும் அவன் அம்மாவின் காதருகில் மெதுவாய் "அம்மா எல்லோர் முன்னாடியும் இப்படி பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்"


"சாரிப்பா மறந்துட்டேன்"


"அது சரி என்ன எல்லோரும் ஊர்ல இருந்து மொத்தமா வந்து இறங்கி இருக்காங்க? என்ன விஷேசம்?"


"எல்லாம் சாருன்னே பண்ண வேலை தான் காரணம்"

பிருந்தா அப்படி சொன்னதும் அவரைப் பார்த்து விழித்தவன் "அம்மா என்னப் பேசுறீங்க? இவங்க எல்லோரும் வர்றதுக்கு நான் என்ன வேலை பண்ணேன்"


"ஆமாம்டா உனக்கு ஒன்னுமே தெரியாது பாரு"


"அம்மா எனக்கு ஒன்னுமே தெரியாது. என்ன விஷயம்னு நீங்களாவது சொல்லுங்களேன்" என்றான்.


அதற்கு அவர் " என்ன விஷயம்னு நீ தெரியாமல் இருக்கிது தான் நல்லது" என்றதும்


தேவி பிருந்தாவிடம் "அங்கே என்ன அம்மாவும் மகனும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க? "


"ஒன்னுமில்லை தேவி சந்தேகம் கேட்டுட்டு இருந்தான்.அத க்ளியர் பண்ணிட்டு இருந்தேன்"


"என்ன சந்தேகம்?"


"ஒன்னுமில்லை அத்தை அம்மா எதாவது விளையாட்டா பேசுவாங்க" என்று தவரூபன் பதிலளித்தான்.


அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரதனின் கார் உள்ளே வந்துக் கொண்டிருப்பதாக வேலையாள் வந்து சொல்ல… எல்லோரும் வாசலுக்குச் சென்றனர்.


அப்பொழுது முதல் மாடியிலிருந்த படியிலிருந்து குமாரி ராணியும் மாதேவியும் இறங்கி வந்துக் கொண்டிருந்தனர்.


அவர்கள் வந்ததும் எல்லோரும் ரதனை வரவேற்க வாசலில் நின்றனர்.வெளியூர் பயணமாக ஒரு மாதம் சென்றவர் இன்று தான் வீடு திரும்பிக் கொகெக்டிருக்கிறார்.


தேவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் முறைக்காக அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளைப் பொறுத்தவரை ரதனை அவளுக்குப் பிடிக்கும் ஏனென்றால் அவள் விருப்பமாய் கேட்கும் எதையும் அவளது தந்தை கிருஷ்ண உடையார் மறுத்தாலும் ரதன் அத்தான் வாங்கிக் கொடுப்பார்.அதனால் அவளுக்கு ரதன் அத்தானை பிடிக்கும்.


தவரூபனுக்கு அத்வதாவைப் பற்றிய எண்ணம் இன்னும் அதிகமானது.உறவுகள் அனைத்தும் ஒன்றாய் நிற்க… அவளை மட்டும் அங்கே இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஏதோ போல் இருந்தது.


'நேற்று அவ மேல உட்கார்ந்ததுல உடம்பு எதாவது சரியில்லைமா போயிடுச்சா? 'என்று பலவாறு தன்னுள் நினைத்துக் கொண்டு நின்றிருந்தான்.


ஆரலி அப்பாவைக் கண்டதும் அவரைக் கட்டிக் கொள்ள மகளை தூக்கிக் கொண்டு கொஞ்சிக் கொண்டார்.


ரதன் தவரூபனைப் பார்த்ததும் அவன் நேராக ரதனைக் கட்டிப் பிடித்து "மாமா" என்று அன்பாய் அழைத்தவன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினான்.


அவரும் ஆசிர்வதித்து விட்டு கிருஷ்ண உடையாரைப் பற்றி விசாரிக்க… அவர் கோயிலுக்கு சென்றிருப்பதாக மாதேவி சொன்னாள்.



அதோடு எல்லோரிடமும் விசாரித்து விட்டு ரதன் மாதேவியிடம் "என் பொண்ணு எங்கே?"


"மேல நம்ம அறையில தான் இருக்கா உங்க மேல ரொம்ப கோபமா இரூக்காள்.என்னன்னு நீங்க வந்து கேளுங்க" என்று மாதேவி மகிழ்ச்சியோடு சொல்ல…


"அப்படியா! என் பொண்ணை இப்போவே நான் பார்த்தே ஆகனும்" என்று ரதன் படிகளில் ஆரலியையும் தன்னோடு தூக்கி வேகமாய் செல்ல… பின்னால் மற்ற பெண்கள் சென்றனர்.


தவரூபனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.இந்தப் பொண்ணு வெளியேவும் வராமல் என்னத் தான் நடக்குது என்று தனக்குள்ளே போட்டு யோசித்து குழப்பமடைந்தான்.


மேலே சென்ற ரதன் தன் மகளைக் காண அவள் அங்குள்ள படுக்கையை சுற்றி கட்டப்பட்டிருந்த பட்டாடைகளுக்கு நடுவில் அழகு தேவதையாய் உட்கார்ந்திருந்தாள்.


அவளைக் கண்டதும் ஆரலியை கீழே இறக்கி விட்டு அவளைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.


அவரது இந்த செய்கை ஆரலிக்கு அவள் சித்தி தேவி சொன்னது தான் நினைவுக்கு வந்தது.


"ஆரலி உன்னோட அப்பாக்கு உன்னைவிட அத்வதா மேலத் தான் பாசம் ஜாஸ்தி.அதனால் தான் அவர் அத்வதாக் கண்டதும் உன்னை விட்டுட்டு அவகிட்ட போய்டுவாங்க. அவ இருக்கிறவரைக்கும் உனக்கு இங்கே மதிப்பே கிடையாது" என்று தேவி சொன்ன வார்த்தைகளே மனதில் ஓட அவள் அங்கேயே நின்றுக் கொண்டாள்.


அவரைக் கண்டதும் எழுந்து ஓடி வந்தவள் "அப்பா" என்றுக் கட்டிக் கொள்ள முற்பட அப்போது பாட்டி அத்வதா "அங்கேயே நில்லு.அப்பாக்கிட்ட வரக் கூடாது"


பாட்டி அப்படி சொன்னதும் முகம் வாடி நின்றாள்.அவள் வாடி நிற்பதைக் கண்ட ரதன் அவளருகே சென்று அவரே தன் பெண்ணை தூக்கி கட்டிக் கொண்டார்.


"அத்தை அப்பா மகளுக்கு இடையே உள்ள பாசத்தை எந்த சம்பிரதாயம் தடுக்காது தடுக்கவும் கூடாது" என்று சொல்லி விட்டு அத்வதாவை நெற்றியில் முத்தமிட்டு "என் பொண்ணு பெரியவளா வளர்ந்துட்டாளே!" என்று ஆச்சரியமாகச் சொல்லி விட்டு சிரித்தார்.


அதைக் கேட்ட குமாரி ராணி 'மாமானாருக்கும் மருமகனுக்கும் இந்த விஷயத்துலக் கூட ஒன்னா ஒத்துப் போகும்' என்று நினைத்தார்.


அவளோ முகத்தை சுழித்துக் கொண்டு "அப்பா அம்மாவும் இதே தான் சொல்லி என்னை அறையை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு சொல்லுறாங்க.எனக்கு கஷ்டமா இருக்கு நீங்களே என்னன்னு கேளுங்கப்பா" என்றாள்.


அதற்கு ரதனோ சிரித்துக் கொண்டு "அம்மா சொன்னால் நல்லதுக்குத்தான் நினைச்சுக்கோ
கஷ்டமே தெரியாது" என்றார்.


அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவளும் அமைதியாகி விட மாதேவி ரதனிடம் "இவ்வளவு நேரம் என்ன ஒரு பிடிவாதம்? அப்பாவும் தாத்தாவும் சொன்னா மட்டும் ஓகேன்னு சொல்லுறது நல்ல பொண்ணு" என்றார்.


"அப்பா பாருங்கப்பா"என்று
மகள் சிணுங்க….


"சரி சரி விடும்மா நம்ம அம்மா தானே" என்றதும் அவளும் சிரிக்க எல்லோரும் சிரித்தனர்.


இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆரலிக்கு 'சித்தி சொன்னது உண்மை தான்.என்னைப் பற்றி யாரும் நினைக்கவே இல்லை அவளைத் தான் எல்லோரும் கொண்டாடுறாங்க' என்று மனதில் தோன்ற அவள் அமைதியாக நின்று விட…


அவளைக் கண்ட அத்வதா "ஆரலி வா எப்போ வந்தே? இங்கே வா"என்று அழைத்ததும் ரதனும் மாதேவியும் " உள்ளே வாடாக் கண்ணு.ஏன் அங்கேயே நிற்கிற? " என்றதும் அவள் உள்ளே வந்தாள்.


ரதன் அவளை ஒரு கையில் பிடித்துக் கொள்ள… அத்வதாவை தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்க்க அந்த சிறு மனதில் சின்னதாய் பொறாமையோடு வெறுப்பு எண்ணம் அவள் மனதில் தோன்றியது.


சிரிப்போடு தங்கையை கண்ட அத்வதா அவள் முகம் வாடிப்போய் இருப்பதைப் பார்த்து "அப்பா என்னை மட்டும் தூக்கி வைச்சுட்டு ஆரலியை ஏன் தூக்கலை?அவளையும் சேர்ந்து தூக்குங்க" என்று மகள் கட்டளையிடவும் ரதனும் ஆரலியை தன் ஒற்றைக் கையால் தூக்கி இரண்டு பேரையும் ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டார்.


அப்பொழுது அங்கே வந்த கிருஷ்ண உடையார் ரதனின் பாசத்தை எண்ணி மனதில் மகிழ்வோடு அவரிடம் நெருங்கி வர கிருஷ்ண உடையாரைக் கண்டதும் ரதன் அவரை வணங்கி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.


கிருஷ்ண உடையார் ரதனை அடுத்த இளவரசனாக அறிவித்ததிற்கு காரணமே அவருடைய குணத்தின் மறு உருவமாய் ரதனைக் கண்டார்.என்னத் தான் ஆட்சி போன்ற விஷயங்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் நடத்தும் டிரஸ்ட்களை நேர்மையாக நடத்துபவரை தான் அவர் நியமிக்க எண்ணி ரதனை நியமித்தார்.



அதேபோல் எந்த இடங்களுக்கு சென்றாலும் தன் குடும்பத்தையும் மனதிலே சுமந்து அவர்களுக்காக வாழ்பவனாகவும் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்குபவனாகவும் ரதன் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார் கிருஷ்ண உடையார்.


"ரதன் அத்வதா பெரியவளாகி விட்டாள்.இதை விழா எடுத்து சிறப்பாக கொண்டாடலாம் நம்ம குடும்பத்திலுள்ள எல்லோரையும் அழைச்சு பெரிய விருந்தே வைச்சுடலாம்"


"நானும் அதே தான் நினைத்தேன் மாமா. ரொம்ப சந்தோஷம் அப்படியே செய்திடலாம்" என்று மரியாதையாக பதிலாளித்தார்.


"எல்லோருக்கும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்" என்றார் கிருஷ்ண உடையார்.


"இப்போ சாப்பிடு பொழுது நீங்களே அதே அறிவிச்சுடுங்க"

"சரி அப்படியே செய்யலாம்" என்று எல்லோரும் கீழே செல்ல… குமாரி ராணி அத்வதாவுடன் இருந்துக் கொண்டார்.


அத்வதா "பாட்டி நானும் வரேன்"


"அதெல்லாம் முடியாது ஏழு நாட்களுக்கு எங்கேயும் போகக் கூடாது"


"அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போலாம் அப்படித் தானே"


"எங்கேயும் போகக் கூடாது.முக்கியமா நேத்து சண்டைப் போட்ட பாரு அந்த மாதிரி ஆண் பிள்ளைகள்கிட்ட சண்டை போடக் கூடாது"


"பாட்டி அதை ஞாபகம் படுத்தாதீங்க.அந்த லூசுனாலத் தான் நான் இப்போ இப்படி உட்கார்ந்து இருக்கேன்" என்று அவள் கோபமாய் பேச….


அவள் சொன்னதைக் கேட்ட பாட்டி சிரித்தபடி… "அட அதனால இல்லைம்மா இந்த வயசுல இது எல்லோருக்கும் நடக்கும்"


"யாருக்கு எப்படியோ? ஆனால் எனக்கு அவனால் தான்"


"சரி விடும்மா அதை எல்லாம் பத்தி பேசிகிட்டு நீ நல்லா ரெஸ்ட் எடு"


"போங்க பாட்டி எனக்கு ரெஸ்ட் எடுக்கவே பிடிக்கலை"


"அப்போ என்னச் செய்யப் போற?"


"கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கவா? "


"ம்ம்… படி ஆனால் கொஞ்ச நேரம் தான். அப்புறம் ரெஸ்ட் எடுக்கனும் இந்த நேரத்தில் ஓய்வு ரொம்ப முக்கியம்" என்று சொல்ல அவளும் சரியென்று ஒத்துக் கொண்டாள்.


ஹாலில் எல்லோரும் சாப்பிட உட்காரும் பொழுது கிருஷ்ண உடையார் அத்வதா பெரியவளான விஷயத்தையும் அதோடு விழாவைப் பற்றியும் எல்லாத்தையும் சொன்னார்.


தவரூபனுக்கு அப்பொழுது தான் அத்வதா வராமல் இருந்த காரணமே தெரிந்தது.அவனும் ஓரளவிற்கு பெரியவனாயிற்றே அதனால் அவனுக்கும் அவளது விஷயம் புரிந்தது.அம்மா சொன்ன காரணம் புரிந்து அம்மாவைப் பார்க்க அவரும் அவனைத் தான் பார்த்து சிரித்தார்.


நாட்கள் வேகமாய் செல்ல… அத்வதாவிற்கு விழா எடுப்பதற்கான நாளும் வந்தது.அரண்மனை முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஊரிலிருந்து விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு விழா கோலகலாமாக தொடங்கப்பட்டது.


பதினாறு நாட்கள் பார்க்காமல் இருந்த தவரூபன் விழா அன்று மேடையில் அமர்ந்திருப்பவளைப் பார்த்து அவனே ஆச்சரியப்பட்டான்.முதலில் கண்டவனுக்கு சின்னப் பெண்ணாய் தெரிந்தவள் இரு வாரத்தில் இன்று வளர்ந்து குமரிப் பெண்ணாய் அழகுற அமர்ந்திருப்பவளைக் கண்டு இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் பார்த்துக் கொண்டிருப்பதை மேடையில் அமர்ந்திருந்த அவளும் கவனிக்கச் செய்தவள் மனதினுள்ளே 'எப்படி பார்த்துட்டு இருக்கான்னு பாரு வர்ற கோபத்துல ரெண்டு கண்ணையும் நோண்டி விட்டுடுவேன்' என்று அவனைப் பார்த்து இவள் முணுமுணுத்துக் கொண்டு இருக்க…



அவனோ அவள் தன்னைத் தான் ஏசுகிறாள் என்று அவள் உதடுகள் அசைவதைப் பார்த்து புரிந்துக் கொண்டவன் மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.அவன் தன்னைப் பார்த்து கேலியாக சிரிக்கிறான் என்று தவறாய் புரிந்துக் கொண்டவள் அவனைப் பார்த்து உதடுகளை குவித்து அங்கும் இங்கும் சுழித்து தலையை திருப்பிக் கொள்ள அவளது செய்கையைப் பார்த்த மாதேவி அவள் காதருகில் "அத்வதா அமைதியா உட்காரு எல்லோரும் உன்னைத் தான் பார்த்துட்டு இருக்காங்க"


"ம்ம்…" என்று பதிலளித்தாள்.

அவனுக்கு புரிந்தது அத்தை ஏதோ அவளிடம் சொல்கிறார் என்று புரிந்துக் கொண்டவன் கையை மேலே உயர்த்தி ஆட்காட்டி விரலை உயர்த்தி வெவ்வே என்று அவன் அவளைப் பார்த்து கிண்டல் செய்ய… அவளுக்கு இருக்க முடியவில்லை.அவனோடு ஆரலி,விண்கா,பிரகத்தன் என்று அந்த வீட்டில் உள்ள சிறுசுகள் எல்லோரும் அவனைச் சுற்றி நின்று சிரித்தும் விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தனர்.


அவனும் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.ஆனால் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் அவளைப் பார்க்க அவளோ வந்த விருந்தினர்களை விசாரித்தும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டும் போட்டோவில் நின்றுக் கொண்டு என்று அவள் பிசியாக இருந்தாள்.


ஆனால் அவன் தான் அவளையே கண்காணித்துக் கொண்டிருந்தான்.அவள் மற்றவர்களிடம் சிரித்து பேசுவதை கண்டவன் அவள் ஒருமுறைக் கூட அவனிடம் சிரித்துப் பேசவில்லை ஏன் இப்போது கூட அவனைப் பார்த்து சிரிக்கவில்லை.அதை நினைத்தபடியே அவளை பார்க்க அப்பொழுது அவள் அவனைப் பார்த்து கை நீட்டி போடா என்பது போல் சைகைச் செய்ய… இவனுக்கு கோபம் தான் வந்தது.



அதோடு அவளை அவன் பார்க்கவில்லை.பிருந்தா அத்வதாவுடன் போட்டோ எடுக்க அழைத்ததற்கு அவன் வர மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்து விட பிருந்தா தன் கணவோடு போட்டோ எடுத்துக் கொண்டார்.


அதை அத்வதாவும் கவனிக்கத் தான் செய்தாள்.'என்ன திமிரு? இருக்கட்டும் இனிமேல் இவன் கூட பேசக் கூடாது' என்று முடிவெடுத்து அவன் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை.


விழா சிறப்பாய் கோலாகலமாய் முடிந்தது.


அடுத்தடுத்த நாட்களிலும் அவள் வெளியே வரவில்லை. ஒரு வாரம் கழிந்த நிலையில் கிருஷ்ண உடையாரின் அறையில் உள்ள பால்கனி தோட்டம் பக்கமாய் இருந்தது.அதில் வந்து அவள் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அங்கே தவரூபன் ஆரலி, விண்கா, பிரகத்தனுடன் தோட்டத்தில் ஓடிப் பிடித்து கொண்டிருந்தனர்.அத்வதா அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது எதேச்சையாக அவள் பக்கமாய் திரும்பிய தவரூபன் அவள் நிற்பதைப் பார்த்து அப்படியே நின்றான்.


அவன் விளையாடமல் அப்படியே நிற்பதைக் கண்ட ஆரலி "அத்தான் ஏன் ஓடாமல் அப்படியே நிற்கிறீங்க?"


"ஒன்னுமில்லை"


"அப்புறம் என்ன ஏன் அமைதியா இருக்கீங்க?"


"அ...து அத்வதா பற்றி என்ன நினைக்கிற? "


"அவள்…" என்று நிறுத்தியவள் மேலே அத்வதா நிற்பதைக் கண்டவள் "அவளுக்கு எப்பவுமே தான் என்ற கர்வம் ஜாஸ்தி"


"என்னச் சொல்ற ஆரலி?"

"ஆமாம் அத்தான்.எல்லோரும் எங்கே படிக்கிறோம்? ஆனால் அவ வீட்டுக்கு செல்லம்ங்கிறதுனால அப்பாம்மா பக்கத்தில் இருக்கிற ஸ்கூல்ல சேர்த்தாங்க.அப்புறம் தாத்தா அவ சொல்றதைத் தான் கேட்பாங்க இப்போக் கூட அவளுக்கு மட்டும் தான் தாத்தா ரூம்க்கு போக அனுமதி இருக்கு எங்களுக்கு கிடையாது" என்று எதிர்மறையாய் பதிலுரைத்தாள்.



அவன் சந்தேகமாய் அவளைப் பார்க்க… "உண்மையைத் தான் சொல்றேன்" என்றதும் அங்கே விண்காவும் பிரகத்தனும் வந்தனர்.


அவர்கள் இருவரும் அதே தான் சொன்னார்கள்.ஆனால் அவன் மனதில் அவள் அப்படி மோசமாக இருக்க மாட்டாள் என்று நினைத்தான்.


இப்பொழுது மேலே பார்க்க அங்கே அவள் இல்லை.இவர்கள் எல்லோரும் ஒன்றாக விளையாடுவதைப் பார்த்த அத்வதாவிற்கு மனது வருத்தமாக இருந்தது.


'இப்பொழுது வந்த தவரூபனிடம் நெருக்கம் காட்டும் இவர்கள் ஏன்? தன்னை அவர்களோடு சேர்த்துக் கொள்ளவே இல்லை' என்பதை நினைக்கும் போது அவளுக்கு அதற்கான விடையும் காரணமும் தெரியாமல் அங்கிருந்து யோசனையோடு சென்று விட்டாள்.


தவரூபன் அத்வதாவைப் பற்றி தாத்தாவிடமே விசாரிக்க முடிவெடுத்தான். எல்லோரும் விளையாடி முடித்ததும் அவன் தனது அறைக்கு போகும் போது தாத்தா தனது அறையில் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அறையின் வாயிலில் நின்றுக் கொண்டு "தாத்தா உள்ளே வரலாமா?"


அவனை அங்கே கண்டதும் "உள்ளே வா தவரூபா அங்கே நின்று அனுமதி கேட்டுட்டு இருக்க?"


"அது… வந்து தாத்தா உங்க ரூம்ல நான் வரும் போது அனுமதி கேட்டுட்டு வர்றது தானே நல்லது"


"ம்ம்… உண்மையிலேயே இது நல்ல பழக்கம் தான்.அப்புறம் இங்கே இந்த ஊரு பிடிச்சு இருக்கா? "


அதற்கு அவன் சிரித்தான்.


அவனது சிரிப்பை பார்த்த தாத்தா "என்ன பிடிச்சும் பிடிக்காத மாதிரி இருக்கா? "


"எப்படி தாத்தா நான் பதில் சொல்லாமலேயே புரிஞ்சுக்கிறீங்க?"


இப்பொழுது அவர் சிரித்தார்.


அவர் சிரிப்பைக் கண்டவன் "ஏன் தாத்தா சிரிக்கிறீங்க?"


"என்ன விஷயம் தெரியணும்னு இப்போ எங்கிட்ட வந்து இருக்கே"


அவன் ஆடிப் போய் விட்டான்.அவன் மனதில் உள்ள விஷயத்தை தாத்தா இப்படி அவனிடமே நேரில் கேட்பார் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.


அவன் அதிசயமாய் அவரைப் பார்க்க…


இப்பொழுது அவர் அமைதியாக இருந்தார்.உள்ளே வந்தவன் அப்பொழுது தான் அந்த அறையை சுற்றிப் பார்த்தான்.


அவ்வளவு அழகாக நேர்த்தியாக இருந்தது.அந்த பெரிய அறையில் நிறைய இடங்களை அடைத்துக் கொண்டு பெரிய அலமாரிகளில் புத்தகங்களாய் இருந்தது.அதைப் பார்த்து அதிசயித்தவன் "தாத்தா உங்க ரூம்ல பெரிய லைப்ரரியே வைச்சு இருக்கீங்க? "


"அப்படியா! "

"ஆமாம் தாத்தா. நான் அங்கே போய் பார்க்கவா? "


"ம்ம்ம்" என்றார்.


அவனும் ஆர்வமாய் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகங்களாக எடுத்துப் பார்த்தான்.நிறைய சரித்திர நாவல்கள், உலக விஷயங்கள் என்று எல்லாமே கலந்து இருந்தது.அதை எல்லாம் பார்த்துக் கொண்டே "ஏன் தாத்தா? யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டேங்கிறீங்க? "


"புத்தக பிரியர்களுக்குத் தான் இங்கே அனுமதி இருக்கு.இங்கே இருக்கிற பொருட்களை கலைச்சு விடுறவங்களுக்கு அனுமதி கிடையாது"


"அப்போ அத்வதாவுக்கு மட்டும்"என்று அவன் நிறுத்த…


அவனைப் பார்த்து சிரித்தவர் "எல்லோரும் அவளைப் பற்றி எங்கிட்ட எதாவது சொல்லுவாங்க.வந்த நீ மட்டும் தான் சொல்லலை இப்போ நீயும் சொல்ல வந்துட்டே சொல்லு" என்று சிரித்தார்.


"அவளுக்கு உள்ளே அனுமதி இருக்கா? "


"இருக்கு ஏன்னா அவ இங்கே வர்றதே இந்த புத்தகங்களை படிக்கவும் அதை இப்படி அழகா நீட்ட
அடுக்கி வைச்சு அழகுப் பார்க்கிறதும் அவளுக்கு பிடிச்ச விஷயம் அதனால அவ எப்பொழுதும் என்னோட அறைக்கு வருவதற்கு அனுமதி இருக்கு.இப்போ உனக்கு பிடிச்ச மாதிரி" என்றார்.


தவரூபனுக்கு புரிந்தது.'புத்தகத்தை நேசிப்பவர்களுக்குத் தானே அதைப் பற்றி பார்க்க நாட்டம் இருக்கும்.அப்படித் தான் அவன் இங்கே பார்க்க வேண்டும் என்று கேட்கும் போது தாத்தா மறுக்கவில்லை' என்பதை பார்த்து புரிந்து சிரித்தான்.


"சரிங்க தாத்தா இதுல இருந்து நான் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்துட்டு போறேன் படிச்சுட்டு வைச்சுறேன்" என்றான்.

அவரும் சரியென்று தலையசைக்க அவன் எடுத்து விட்டு அங்கிருந்து சென்றவன் மனதிலோ இப்படித் தான் அத்வதாவைப் பற்றி மற்றவர்களுக்கும் தவறான எண்ணம் இருக்குமோ? என்று அவன் தவறை சரியாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தான்.அத்வதாவிடம் பேச வேண்டும் என்று தனக்குள்ளே நினைத்து வைத்தான்.


மறுநாள் விடியற்காலையிலேயே அவன் அறைக்கு வந்த பிருந்தா "ரூபா அப்பா போன் பண்ணாங்க.உடனே உன்னை இப்போ கிளம்பி வரச் சொன்னாங்க உன்னுடைய மேற்படிப்பிற்காக நாளை மறுநாள் மீட்டிங் இருக்காம் அதனால இப்போவே கிளம்பி போனாத் தான் சரியாக இருக்கும்னு சொன்னாங்க.டிக்கெட் டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டாங்களாம்" என்று அவர் மூச்சு விடாமல் சொல்ல...


அவனோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க…

"என்ன ரூபா நான் சொல்லிட்டு இருக்கேன்.நீ அமைதியாய் இருக்க?"


"அம்மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தங்கிட்டு போகட்டுமா?"


அவன் கேட்ட கேள்வியில் யோசனையோடு பார்த்தவர் "என்னாச்சு எதாவது பிரச்சினையா? "

"இல்லம்மா எந்த பிரச்சினையும் இல்லை"


"அப்புறம் என்ன யோசனை? இப்போ அவசரமா அப்பா வரச் சொல்லுறாங்க கிளம்பு அடுத்த லீவ்ல வந்து இருக்கலாம்"


அம்மா கட்டாயப்படுத்தி சொல்வதால் மேலும் கட்டாயப்படுத்தாமல் அதோடு இந்த மீட்டிங்கை முடித்து விட்டோ அல்லது அடுத்த விடுமுறையில் நிச்சயம் வந்து அத்வதாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து சரியென்று ஒத்துக் கொண்டான்.


அவன் தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த பெரிய ஹாலில் வந்து எல்லோரிடமும் பயணம் சொல்லி விட்டு செல்லலாம் என்று பார்க்க… எல்லோரும் அங்கே இருந்தார்கள் அவளைத் தவிர…


எல்லோரிடமும் பயணம் சொல்லி விட்டு கிளம்பியவன் தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு தாத்தாவிடம்,"தாத்தா உங்ககிட்ட நான் எப்போ பேசனும் நினைச்சு நான் போன் பண்ணால் நீங்க கண்டிப்பா எங்கிட்ட பேசனும்" என்று அவன் சொல்ல…


அதற்கு கிருஷ்ண உடையார் "நீ எப்போ எங்கிட்ட பேச விரும்பினாலும் கண்டிப்பா பேசலாம்" என்றார்.


மாதேவியிடம் "அத்தை அத்வதாகிட்ட சொல்லனும்"


"நான் அவகிட்ட நீ ஊருக்கு போறேன்னு சொன்னேன் அவ எதுவும் சொல்லாமல் அமைதியா அவ அறையிலேயே இருந்திட்டா"


"அப்படியா அத்தை.நான் அவளை போய் பார்த்துட்டு வரட்டுமா?"


"சரிப்பா போய் பயணம் சொல்லிட்டு வா" என்று அவர் அனுப்பி வைக்க….


ஆரலிக்கு தவரூபன் போய் அத்வதாவிடம் பேசுவதில் விருப்பம் இல்லாமல் "நானும் அத்தானோடு போறேன்" என்று அவன் பின்னாலேயே சென்றாள்.


அத்வதா அவள் அறையில் அன்று அவன் பாதிக்கு மேல் வரைந்த அதே படத்தை இப்பொழுது அவள் அதே பாதியில் வரைந்துக் கொண்டிருந்தாள்.


"அத்வதா" என்று அவன் அழைக்க….


சட்டென்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க… அங்கே அவன் நின்றுக் கொண்டிருந்தான்.


அவன் அவளைத் தேடி வருவான் ஊ என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை.


"அத்வதா" அவன் திரும்பவும் அழைக்க…


"உள்ளே வா"


அறையின் உள்ளே வந்தவன் "அத்வதா நான் மேற்படிப்பிற்காக வெளிநாட்டுக்கு போறேன்.கிளம்புறேன்"


"ம்ம்ம்… சரி" என்றாள்.


"ஊருக்கு போறேன்ல அதனால எனக்கு இந்த ஓவியத்தைக் கொடு" என்றான்.


அவளோ அவனை கண்களை விரித்து பார்த்து மனதினுள் 'போட்டோல நிற்கும் போது என் பக்கத்துல நிற்க மாட்டான் ஆனால் என்னோட ஓவியம் மட்டும் வேணுமா?'என்று நினைத்துக் கொண்டு "எதுக்கு?"


"ப்ரீயா இருக்கும் போது வரைவேன்.நான் எடுத்துக்கிறேன்" என்று அவள் சரியென்று ஒத்துக் கொள்வதற்கு முன்னே அந்த ஓவியத்தின் காகிதத்தை எடுத்து சுருட்டி தன் பின்னால் மாட்டியிருந்த பையில் வைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமல் "பாய்" என்று கையசைத்து விட்டு வேகமாய் சென்று விட்டான்.


அவள் அடுத்து யோசித்து பேசுவதற்கு முன் அவன் சென்று விட்டான்.பின்னால் வந்து நின்ற ஆரலிக்கு அவன் செய்தது ஒன்றும் விளங்காமல் அவன் பின்னாலேயே ஓடிச் சென்றாள்.


தவரூபன் எல்லோரிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.


(தொடரும்)
 

Mohanapriya M

Well-known member
Rendu peroda manasulaiyum oru orama start agiruchu pola lovvvvvv 😍 rooban adhvadha va purinjukitamari aarali um ava akka va purinjukita nalla irukum 🙄 thatha character wow ❤️
 
Top