கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னைத் தேடும் நான்: அதியாயம்-5

sankariappan

Moderator
Staff member
என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ==5

என்னைத் தேடும் நான்

அத்தியாயம்---5

அன்று வெள்ளிக்கிழமை. சசி காலையிலேயே எழுந்து கொண்டாள். சமையல் வேலையை ஆரம்பித்துவிட்டாள். பார்கவி வெள்ளிக்கிழமை என்றால் காலை பதினொரு மணிக்குத் தான் சாப்பிடுவார்.

கீரைக் கூட்டு வைத்து. வழித் தொகையல் அரைத்து வைக்க வேண்டும். அப்புறம் வத்தல் வடகம் பொரித்து விட்டால் போதும்.

“அத்த.... உங்களுக்கு சுகர் இருக்கு. பதினொரு மணி வரைக்கும் சாப்பிடாமல் இருந்தால் எப்படி.? “ என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் பார்கவி வெள்ளிக்கிழமை தோறும் இப்படித்தான் விரதம் இருப்பாள்.

விளக்குகளை விளக்கி திரி போட்டு எண்ணை விட்டு தயார்படுத்தினாள். சசி. இது மாதிரி வீட்டு வேலைகளை அவள் மனம் உவந்து செய்வதுண்டு. மனசு ரம்மியமாக இருக்கும். தலைக்கு குளித்து, ஆத்துக் கட்டலில் நீளக் கூந்தலை உலரப் போட்டு, அவள் காரியங்களை செய்யும் போது பார்க்கவிக்கு மருமகளை பார்க்கப் பார்க்க பிடிக்கும். ஒரு குட்டி தேவதை வீட்டில் நடமாடுவது போல் தோன்றும்.

பார்கவி குளித்துவீட்டு வந்தாள். கணவர் அனந்து பேப்பர் வாசிப்பதில் மூழ்கி இருந்தார். ஸ்ரீ இன்னும் மாடியிலிருந்து வரவில்லை.

“சசி.. நீ போய் உன் புருஷனை எழுப்பு. நான் பால் காய்ச்சுகிறேன்.”

“கீரை வெந்திட்டு இருக்கு பார்த்துக்ககோங்க. நொடியில் வந்திடறேன்.”

சசி மாடிக்கு ஓடினாள். அவனை எழுப்பினாள்.

“எப்ப பார் நான் வந்து எழுப்பவேண்டியிருக்கு. நீங்களாக எழுந்து வந்தால் என்ன.? ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திட்டாங்க. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. உங்க கூட மல்லாட முடியாது.” என்று சலிப்புடன் சொன்னாள். “நீ வந்து எழுப்பனுமன்னு தான் சும்மா படுத்திட்டு இருக்கேன். நான் முதலில் உன் முகத்தை தான் பார்க்கணும். தெரியாதா நோக்கு? அப்ப தான் எனக்கு நாள் விடிஞ்சா மாதிரி இருக்கும்.”

“சரி சரி. வளிஞ்சது போதும். மணி ஏழு ஆகுது. எட்டு மணிக்கு அய்யா ஆபீஸ் போக வேண்டுமா வேண்டாமா?”

“போனும் தான். அதுக்கு முன்னாடி உன் கையை பிடிக்கலாமா?”

“நோ. இன்னிக்கு வெள்ளிக்கிழமை வீட்டில் ஸ்பெஷல் பூஜை. நான் மடியா இருக்கேன். தொட்டு வைக்காதீங்க.”

“இப்படியே சொல்லிட்டு இரு. அப்புறம் நான் காது கொடுத்து கேட்டேன்ன்னு பாடவே முடியாது.”

அதைக் கேட்க அவள் அங்கு இல்லை. அவன் சிரித்துக் கொண்டே பல்

தேய்க்கப் போனான். பல் தேய்க்கும் போதே அவனுக்கு சசியின் அழகு முகம் கண்ணில் தோன்றியது. எப்படி அவள் இவ்வளவு அழகாக இருக்கா.? பிரம்மன் ரொம்ப சலுகை காட்டி அவளுக்கு பலவித அழகுகளை கொட்டிக் கொடுத்துவிட்டான். அவன் முகம் கழுவிவிட்டு வெளியே வந்த போது சசியின் ஃபோன் அடித்தது. இரவு அவள் போனை இங்கு தான் வைத்திருந்தாள். எடுத்துப் போக மறந்துவிட்டாள். யார் கூப்பிடுவது என்று பார்த்தான். தமிழ் ஆசிரியர், விஜியின் கணவன் தமிழரசன்.....என்று தெரிந்தது. அவனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை.

“ச்சே இனிமே பேச மாட்டான் என்று நினைத்தால்......எதுக்கு ஃபோன் பண்ணுகிறான்.? வேறு வேலையே இல்லயா அவனுக்கு? விடாமல் அடித்தது. அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். “ஸ்ரீ..என்னடா பண்ணிட்டு இருக்கே? காப்பி ஆறுது சீக்கிரம் வா.....” என்று அம்மாவின் குரல் நீண்டு வந்தது. அவசர அவசரமாக போனை அவன் கட்டில் மெத்தைக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டு “வந்திட்டேன்..” என்று குரல் கொடுத்தபடி ஓடினான்.

அவனைப் பார்த்ததும் சசி கேட்டாள் “என்ன உங்க முகம் இப்படி வேர்த்திருக்கு? “ என்றாள். தப்பு செய்யும் போது வேர்வை துளிகள் துளிர்த்து விடும் போலிருக்கு என்றெண்ணிய ஸ்ரீ..

“ஓடி வந்தேன் இல்லே அதான்....அவசரபடுத்தினா எப்படி.?’ என்று சொல்லி சமாளித்தான். கட்டிலுக்கு அடியில் இருந்த சசியின் ஃபோன் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது.

ஃபோன் அடித்து ஓய்ந்தது. தமிழரசன் அவளை தொடர்பு கொள்ள முயற்சித்தது அவளுக்குத் தெரியாமலேயே போயிற்று. ஸ்ரீ அலுவலகம் கிளம்பி செல்லும்வரை அவள் தன் போனை பற்றி யோசிக்கவில்லை. வேலை சரியாக இருந்ததால் அவள் சிந்தனை வேலையிலேயே இருந்தது. வேலைகளை முடித்து விட்டு அவள் மேலே வந்தாள்.

அவள் ஒரு கம்பனிக்கு அப்ளை பண்ணியிருந்தாள். நேர்கானலுக்கு கூப்பிட்டிருந்தார்கள். இது பார்க்கவிக்குத் தெரியும்.

“அவன் கிட்டே இப்ப சொல்ல வேண்டாம். குதிப்பான். வேலை கிடச்சா சொல்லிக்கலாம்.” என்றுவிட்டாள் பார்கவி. அதுவும் சரிதான். வேலை கிடைக்கா விட்டால் இப்பவே சொல்லி பிரச்சனையை கிளப்புவானே? என்று அவளும் முடிவு பண்ணி இருந்தாள். அதனால் ஸ்ரீயிடம் சொல்லவில்லை.

நேர்கானாலுக்கு தேவையான ஃபைலஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு.. உடை மாற்றிக் கொண்டு அவள் கைப்பையையும் எடுத்துக் கொண்டாள். அப்ப தான் அவளுக்கு ஃபோன் நியாபகம் வந்தது. தேட ஆரம்பித்தாள். அரையெங்கும் தேடினாள் கிடைக்கவில்லை. எங்க போச்சு? ஒரே குழப்பமாக இருந்தது. கீழே போய்

“அத்த.. உங்க ஃபோனை கொடுங்களேன். என்னோடதை எங்க வச்சேன்னு தெரியலை. உங்க ஃபோனிலிருந்து என் நம்பரை அடிச்சா கண்டு பிடிச்சிடலாம்.” என்று வாங்கிக் கொண்டு மேலே சென்றாள். அவள் நம்பருக்கு அடித்தாள். சத்தம் கேட்டது. ஆனால் எங்கிருந்து வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. பிறகு ஒரு வழியாக கட்டிலுக்கு அடியிலிருந்து வருகிறதோ என்ற ஐயம் அவளுக்கு வந்தது. அங்கே எதுக்கு நான் கொண்டு போய் வைக்கப் போறேன்? என்று எண்ணியவளாக, எதற்கும் பார்க்கலாம் என்று மெத்தையை விலகிப் பார்த்தாள். அங்கு அவள் ஃபோனின் ரிங் டோன் சத்தமாக அடித்துக் கொண்டிருந்தது.

நான் அங்கு வைக்க வாய்ப்பே இல்லையே என்று எண்ணியளாக மிஸ்டு கால்களை பார்த்தாள். தமிழரசன் அவளை நான்கு முறை அழைத்ததை அது காட்டியது. நேரமும் அதில் தெரிந்தது. அப்ப.. கட்டிலுக்கு அடியில் ஃபோனை மறைத்து வைத்தது கணவன் ஸ்ரீ தான் என்று அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. தமிழரசனுடன் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? எப்படி இந்த மாதிரி லூசாக மாறிப் போனான் ஸ்ரீ. எரிச்சல் அடைந்தாள். ஃபோன் சத்தம் நின்றது. அவள் தமிழரசனுக்கு ஃபோன் செய்தாள்.

“ஹலோ சார்.....நீங்க நாலு முறை கூப்பிட்டு இருக்கீங்க. நான் கவனிக்கலை. ஸாரி சார். என்ன விஷயம்? எனி ப்ராப்ளம்.?”

“சசி....கொஞ்சம் இங்கே உடனே வர முடியுமா?”

“என்னாச்சு சார்.? பதட்டமா பேசறீங்க.”

“அம்மா ஊரில் இல்லை. விஜிக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரி போனும். எனக்கு நேரமில்லை. முக்கியமான மீட்டிங் இருக்கு. நீ அவளை ஆஸ்பத்திரி கூடி போக முடியுமா?”

“இதோ வரேன்...... கிவ் மீ .டென் மினிட்ஸ்.”

“ரொம்ப நன்றி சசி....”

விஜிக்கு என்னவாக இருக்கும்? ரித்விக் நன்றாக இருக்கிறானா? விஜியின் மாமியார் எங்கு போயிருப்பாங்க? அய்யோ நேர்கானலுக்கு வேற போணுமே. இந்த முறை போக முடியாது போலிருக்கே.. நேர்காணலை விட விஜி முக்கியம். அவசர அவசரமாக அவள் கீழே வந்தாள். மாமியாரிடம் விஷயத்தை சொன்னாள்.

“என்ன சசி? நீ நேர்கானாலுக்கு போக வேண்டாமா?’

“ஆமாம் போணும் தான். ஆனால் விஜியை ஆஸ்பத்திரி கூட்டிப் போவது முக்கியமாச்சே. இது போனால் போகட்டும். வேறு சந்தர்ப்பம் வராதா என்ன?” என்று சசி செருப்பை போட்டுக் கொள்ளப் போனாள்.

‘சசி இரு. இந்த நேர்காணல் உனக்கு முக்கியமில்லலையா? உறுதியா வேலை கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கே. தவற விட்டா எப்படி? நான் சொல்றேன் நீ நேர்கானலுக்குப் போ.”

“எப்படி அத்தே? நான் விஜியை பார்க்க போயே ஆகணும்.”

“நானும் வரேன்.”

“என்ன சொல்றீங்க அத்தே.? நீங்க எதுக்கு?”

“என்னை விஜி வீட்டில் விட்டிட்டு நீ நேர்கானலுக்குப் போ. நான் விஜியை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போறேன்.” என்றாள் பார்கவி. நம்ப முடியாமல் பார்த்தாள் சசி. அவளுக்கு நன்றி சொல்லத் தோன்றியது. ஆனால் வியப்பில் உதடுகள் ஒட்டிக் கொண்டன. மாமியாரா தாயா?

“முழிச்சிக்கிட்டு நிக்காதே. கிளம்பு.”

ஸ்கூட்டி பின்னால் பார்கவி உடக்கார. சசி வண்டியை எடுத்தாள். அந்த நேரம் ஸ்ரீ காரில் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஒரு ஃபைலை எடுக்க மறந்து போனான். அதுக்காக திரும்பி வந்து கொண்டிருந்தான். இவர்கள் அவசரத்தில் அவன் காரை இவர்கள் கவனிக்கவில்லை.

“எங்கே போறாங்க ரெண்டு பேரும்/” என்று சிந்தித்து குழம்பினான் ஸ்ரீ. வட்டமடித்து திரும்பி ஸ்கூட்டியை பின் தொடர்ந்தான். வண்டி விஜியின் வீட்டு வாசலில் போய் நின்றது. ஸ்ரீ சற்று தள்ளி அவர்கள் பார்க்கா வண்ணம் கரை நிறுத்தி இருந்தான். அம்மா பார்கவி இறங்கிக் கொண்டு கையை அசத்துவிட்டு உள்ளே போக திரும்பினாள். அதற்குள் தமிழரசன் இவர்களை நோக்கி வருவது தெரிந்தது. மூவரும் பதட்டமாக பேசிக் கொண்டு நின்றனர். பிறகு அம்மா உள்ளே ஓடுவது தெரிந்தது. சசியின் கையை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டான் தமிழரசன். பிறகு சசி அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றாள். இவன் அவசர அவசரமாக மனைவி பின்னால் தொடர்ந்தான்.

எவ்வளவு திமிர் இந்த சசிக்கு? அம்மாவை கைக்குள் போட்டுக் கொண்டு தமிழரசனை சந்திக்கிறாள். அவனிடம் எதுவும் அவள் சொல்லவில்லை. அம்மாவின் சப்போர்ட் இருப்பதால் தன்னை அவள் சட்டை செய்வதே இல்லை. இப்ப எங்கே போறா.?

ஒரு பெரிய நிறுவனத்தின் முன் வண்டியை நிறுத்திவிட்டு அவள் உள்ளே செல்ல முற்பட்டபோது ஒரு ஆண் ஓடி வந்து அவளை வரவேற்றான். அவளை தோளோடு அணைத்து முகமன் கூறி உள்ளே இட்டுச் சென்றான். அடப் பாவி என்னாச்சு இவளுக்கு? கண்ட கண்ட பயலகளோடு கூத்தட்டிக்கத் தான் கிளம்பினாளா? ஆத்திரம் அடங்காமல் அவன் காரை கிளப்பிக் கொண்டு ஃபைலை மறந்து நேர அலுவலகத்துக்கு சென்றான்.

எப்ப மாலை வரும்? என்று அவன் காத்துக் கொண்டிருந்தான். மதிய சாப்பாடு கூட அவனுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. அவன் நல் மனம் சொல்லிற்று “ஏண்டா.. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்... அதுக்குள்ளே ஏன் கற்பனை பண்ணுறே? பொறு.. வைல்ட் திங்கிங் கூடாதுடா.” எச்சரிக்கை பண்ணிய மனதுக்கு கொஞ்சம் செவி சாய்த்தான். சரி அவளிடம் கேட்டுப் பார்ப்போம். அதுக்குள் முடிவு பண்ண வேண்டாம்.. மாலை ஐந்து மணி அடித்ததும் அரக்கப் பரக்க கிளம்பினான். ‘சார் என்ன இன்று அவசரமா அஞ்சு மணிக்கே கிளம்பிட்டீங்க? பொதுவா அறை மணியாவது இருந்து குறை வேலையையும் முடிச்சிட்டு போவீங்களே?” என்று குறுக்கே நின்று கேள்வி வைத்தான் சாம்பசிவம்.

“ஏய்.. சாருக்கு கல்யாணம் ஆகி சில மாதங்கள் தானே ஆகியிருக்கு. இன்னிக்கு ஸ்பெஷல் நாள் போலிருக்கு. ஹோம் மினிஸ்டர் ஜல்தியா வரச் சொல்லி போனை போட்டிருப்பாங்க. நீ குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டுக்கிட்டு. நான் சொல்றது சரிதானே சார்?” என்று இன்னொரு ஸ்டாஃப் பிட்டை போட எரிச்சல் அடைந்த ஸ்ரீ, ஒரு அசட்டு சிரிப்புடன் கிளம்பினான். காரை எடுக்கும் போது கழுத்தை அறுக்க என்று வந்து நின்றான் கோபு. “சார்.. சார். என்னை வழியில் நந்தன் ரெஸ்டோரென்ட் கிட்டே இறக்கி விடுங்க சார். என் பைக் மக்கர் பண்ணுது.”

முடியாது என்று எப்படி சொல்வது.? “ஏறிக்கோங்க” என்றான்.

“ரொம்ப நன்றி சார். என் கேர்ள் பிரெண்ட் காத்திட்டு இருப்பா. அதான்.” அவன் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான். எரிச்சலை வெளியே காட்ட முடியாமல் அப்படியா என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

கார் நின்றது. “ஒரு காப்பி சாப்பிட்டிட்டு .போலாம். வாங்க சார்.”

கத்த வாய் எடுத்தான், அதற்குள் அவன் சசியை பார்த்துவிட்டான். காலையில் பார்த்த வாலிபனோடு அவள் சிரித்து பேசிக் கொண்டு அங்கு உள்ள ரெஸ்டோரென்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். கட்டுக் அடங்காத கோபம் அவனை ஆட்கொண்டது.

அவன் மனதில் தீ எரிந்தது. வேகமாக கரை கிளப்பிக் கொண்டு வேடு வந்து சேர்ந்தான். அம்மா வீட்டில் இல்லை. ஆடி அசைந்து கொண்டு வீட்டுக்கு வந்தாள் சசி.

“ஏன் இவ்வளவு லேட் சசி.?” கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். அவள் அதற்க்கு பதில் சொல்லாமல்

“நல்ல வேளை விஜிக்கு தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று.” என்றாள். சோபாவில் நான்கு சாயிந்து கொண்டாள்.

“என் கிட்டே நீ எதுவும் சொல்லாம எங்கெங்கோ சுத்தற..”

“அம்மா சொல்லலையா?”

“ஏன் உனக்கு வாய் இல்லயா?”

“ஸாரி ஸ்ரீ. அம்மா தான் சொல்றேன்னு சொன்ங்கலேன்னு இருந்திட்டேன். தப்பு தான்.”

“அப்படி எங்க போனே?”

“விஜிக்கு வயிற்றில் ஃபைப்ராய்ட. உடனே சர்ஜரி தேவைன்னு சொல்லிட்டாங்க. அவளைத் தான் பார்த்திட்டு வரேன். அம்மா அங்கே தான் இருக்காகங்க.” என்றாள்.

அவன் முகத்தில் விழுந்த நிழல் அவளை கஷ்டப்படுத்தியது.

தேடல் தொடரும்

.















.
 
Top