என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ==11
பனி பெய்து கொண்டிருந்தது. இரவின் குளிர்ச்சியில் வெளிச்சத்தை தேடுவது போல் நின்று கொண்டிருந்தாள் சசி. ஸ்ரீயின் கோபம் அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நட்சத்திரங்கள் அவளை சோகமாக பார்ப்பது போல் தோன்றியது.
“சசி.....இங்க நின்னுக்கிட்டு என்ன பண்றே.? சாப்பிட வாயேன்.”
“மனசே சரியில்லை ராபர்ட். இப்ப என்ன செய்யறதுன்னே புரியலை.”
“சசி.... என்னை மன்னிச்சிடுன்னு சொல்லக் கூட எனக்கு அருகதை இல்லை. எல்லாம் என்னால் வந்தது. அம்மாவின் பேச்சு அந்த
வீடியோவில் கேட்டதும் நான் என்னையே மறந்திட்டேன். பழைய அம்மாவை......என்னைப் பற்றிப் பேசி என்னை நெகிழ்வோடு பார்த்த அம்மாவை மீண்டும் பார்த்ததும்.....அந்த சந்தோஷத்தை எனக்குக் கொடுத்த உன்னையே நான் தாயாக நினைத்து அப்படி செஞ்சிட்டேன்......ஸ்ரீ அந்த நேரம் வர, கடவுளே நிலமையே மாறிடுச்சு. இதை நான் எப்படியாவது சரி பண்ணிவிடுவேன். அது என் கடமை.” என்று நீளமாக பேசினான் ராபர்ட்.
ஸ்ரீயுடன் அன்று இரவு நடந்த உரையாடலை நினைத்துப் பார்க்கிறாள்.
ராபர்ட்டின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து சசி வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீ அவளை எள்ளலுடன் வரவேற்றான்.
“வாங்க மிஸஸ் ராபர்ட். வீடு தவரி வந்திட்டீங்க போலிருக்கு.”
ஹாலில் பார்கவி வந்து எட்டிப் பார்த்தாள். மகன் பேசியது கேட்டு திடுக்கிட்டவள் “என்னடா உளற? புத்தி பிசகிப் போச்சா?” என்றாள்.
“உன் ஆசை மருமகள்.....ஸாரி இனிமே அவ உன் மருமகள் இல்லே. அடுத்தவன் மேலே ஆசைப்பட்டு சோரம் போன கைகாரி. அவளுக்குத் தான் புத்தி பிசகி விட்டது.” என்றான்
பார்கவிக்கு நெஞ்சம் நடுங்கியது. மகன் இந்தளவு கீழிறங்கி போவான் என்று அவள் நினைக்கவில்லை. அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். “வார்த்தையை அளந்து பேசுடா. அது உன்னையே கிழிக்கும் ஆயுதம்.. கட்டின பொண்டாட்டியை பத்தி இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லே? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.....நீ ரொம்ப ஓவராப் போறே.”
“அம்மா.....அவ ஒரு துரோகி. அவளுக்கு வக்காலத்து வாங்காதே. அவ என்ன செஞ்சா தெரியுமா? நான் போகாதே போகாதேன்னு சொன்னேன். கேக்லை. அந்த ராபர்ட் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போயிருக்கா. அங்கே என்ன நடந்தது தெரியுமா? உன் ஆசை மருமகளை அவன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறான்.. இவ பல்லைக் காட்டிட்டு நிக்றா. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அவளை அப்படியே கொன்னு போட்டிடலாமுன்னு தோணுச்சு. இன்னும் நான் உயிரோட இருக்கேனே அதுக்கு நீ எனக்கு நன்றி சொல்லணும். இவளை வீட்டை விட்டு விரட்டு.” ஆவேசமாக கத்தி விஷயத்தை மகன் சொன்னதும், அதை உள் வாங்க பார்க்கவிக்கு சிறிது நேரம் பிடித்தது. பிறகு அவள் நிதானமாக சொன்னாள்.
“ஸ்ரீ.....ஒரு சராசரி புருஷனுக்கு வரும் ஆத்திரம் தான் இது. நீ சசியை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு தானா? அவள் அப்படிப்பட்டவ இல்லேன்னு உனக்கு ஏன் தோண மாட்டேங்குது? உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் ஜாதி இல்லே அவ. ராபர்ட் அவளை தனியா சந்திச்சு முத்தம் கொடுக்கலை தானே? அப்ப அதில் என்ன தவறு இருக்க முடியும்?”
ஸ்ரீ அம்மாவின் பதிலைக் கேட்டு திடுக்கிட்டான். அம்மா காரித் துப்புவாள் என்று நினைத்தான். ஒண்ணு அம்மாவின் மனசு ரொம்ப பரந்த மனசு....இல்லை அவள் சசியின் மேல் வச்சிருக்கும் ஆதீதமான அன்பு அவளை அப்படி பேச வைக்கிறது. அம்மாவிடம் சொல்லி புரிய வைக்க முடியாது. சசி இனிமே இந்த வீட்டில் இருக்கக் கூடாது. தன்மையாக பேசுவது போல் பேசி தான் இவளை விரட்ட வேண்டும்.
“ஓ....அப்படியா? நான் இந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை அம்மா. நீ சொன்ன பிறகு புரியுது. ஸாரி சசி. எதவும் மனசிலே வச்சுக்காதே.....” என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விட்டான்.
பார்கவி மகனின் வார்த்தைகளால் பூரித்துப் போனாள். அம்மாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நிஜத்தை புரிந்து கொண்டானே!. அவள் நிம்மதியாக தூங்கச் சென்றாள். சசிக்கு சந்தேகமாகத் தான் இருந்தது. புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்று அவள் உள் மனசு சொல்லிற்று.
இரவு தனியறையில் அவள் கேட்டாள்.
“ஸ்ரீ.....நிஜமாவே என்னை புரிஞ்சுக்கிட்டீங்களா?”
“அப்ஃகோர்ஸ். அம்மா சொன்னதும் தான் நான் எவ்வளவு அபத்தமா நினைக்கிறேன்னு எனக்குப் புரிஞ்சுது. கெட்ட எண்ணத்தோட அவன் முத்தம் கொடுக்க நினைச்சிருந்தா கண்டிப்பா அவன் எல்லோர் முன்னிலையிலும் அப்படி செஞ்சிருக்க மாட்டான்.....ஆனா அவன் எதுக்கு அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு அப்படி செந்தான்ணு எனக்குப் புரியலை.”
“நீங்க இவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு எனக்கு சந்தோஷமா இருக்கு ஸ்ரீ.” அவள் நடந்ததை சொல்லி முடித்தாள்.
“இது தான் விஷயம் ஸ்ரீ. அம்மாவின் நினைவ மீட்டுக் கொடுத்தேன்னு அவருக்கு ஒரே மகிழச்சி. பாவம் இப்ப அவங்க அம்மா அவரை அடயாளம்
தெரியாம இருக்காங்க. அந்த தாக்கம் தான் அவர் அப்படி நடந்துக் கிட்டதுக்குக் காரணம் ......ஒரு தாயாக அவர் என்னை பார்த்திருக்கார். இதுக்கு வேறு அர்த்தம் ஏதும் இல்லே ஸ்ரீ.”
“நீ சொல்வது சரிதான். இட்ஸ் ஓ.கே.’
சசியும் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினாள். மறுநாள் காலை அஞ்சு மணி இருக்கும் ஸ்ரீ அவளை எழுப்பினான். அவள் அரக்கப் பரக்க எழுந்து.....
“அய்யோ.....ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?” என்று பதறினாள்.
“அதெல்லாம் இல்லே. சீக்கிரம் குளித்துவிட்டு கிளம்பு. நாம பிக்னிக் போறோம்.” என்றான் சிரித்த முகத்துடன்.
“பிக்னிக்கா?. நேத்து சொல்லவே இல்லயே?”
“சர்ப்ரைஸ்......கிளம்பு. நாலு நாளைக்கு வேணும்கற உடை எடுத்துக்கோ”
அவள் உற்சாகத்துடன் கிளம்பினாள். பிடித்த நாலு உடைகளை பேக் பேக்கில் வைத்துக் கொண்டாள். அவர்கள் கிளம்பிய போது மாமியாரும் மாமனாரும் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
“அத்த கிட்டே ஒரு வார்த்தை......” என்று இழுத்தாள் சசி.
“அதெல்லாம் நான் ஃபோன் பண்ணி சொல்லிக்கிறேன்.” என்றுவிட்டான்.
குளிர்ந்த காற்று முகத்தில் மோத கார் வேகமாக சென்றது. இப்படி காலை நேர டிரைவ் போவது இதுவே முதல் முறை. சசிக்கு மிகவும் பிடித்தது. அவள் “ஸ்ரீ....ஸோ நைஸ். இப்படி ஒரு பிக்னிக் அரேஞ் பண்ணதுக்கு தேங்க்ஸ்.” என்றாள். ஸ்ரீ சிரித்தான். மவளே எங்க உன்னை டிராப் பண்றேன் பாரு என்று உள்ளுக்குள் கறுவினான்.. கார் நின்றதும் சசி
“இது என்ன இடம்? இங்கா பிக்னிக்? என்றாள்.
“ஆமாடி. இறங்கு. உன் பிக்னிக் ஸ்பாட் இது தான். உன் ஆசை கள்ளக் காதலன் வீடு தான் உனக்கு பிக்னிக் இடம். தாய் அது இதுன்னு நீ சப்பைக் கட்டு கட்ட வேணாம். இங்கே அவனோடு நீ கொஞ்சி குலாவிட்டு இரு. அவன் அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க ரெண்டு பேரும் நல்ல கூத்தடிக்கலாம். கெட் லாஸ்ட்.”
அவள் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் மாறவே இல்லை. சீ எவ்வளவு தந்திரமா இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கான்!
“டோன்ட் பீ சில்லி ஸ்ரீ. ராபர்ட் அப்படிபட்டவன் இல்லே. ஹி இஸ் ஏ ஜென்டில்மேன். என்னை நம்புங்க.” என்றாள்
“இறங்குடி.....” அவளை காரிலிருந்து கீழே தள்ளி பேக் பேக்கையும் அவள் மேல் வீசிவிட்டு......
“தப்பித் தவறி வீட்டுக்கு வந்தே காலை ஓடிச்சிடுவேன். வேசி. தூதூ.”
கார் மூர்க்கமாக கிளம்பிப் போய்விட்டது. இதோ அவள் ராபர்டின் வீட்டில் தான் இருக்கிறாள்.
கண்ணீர் சிந்த அவள் நின்ற கோலம் ராபர்டின் மனதை பிசைந்தது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்வு முடிவுக்கு வந்ததை அவனால் தாங்க முடியவில்லை. ஸ்ரீ அவளை விட்டுவிட்டுப் போன உடனேயே அவன் ஸ்ரீக்கு ஃபோன் செய்தான்.
“ஸ்ரீ...... பிளீஸ் புரிஞ்சுக்கோங்க. சிஸ்டர் மேலே எந்த தவறும் இல்லை. நான் தான் என் அம்மாவின் வீடியோ கிடைத்த சந்தோஷத்தில்.....”
“அடுத்தவன் பொண்டாட்டியை கிஸ் பண்ணுவியாடா? உன் மனசில் எவ்வளவு வக்கிரம் இருந்தா, இதை ஒரு சாக்கா வச்சுக்கிட்டு அவளை யூஸ் பண்ணப் பார்ப்பே.? எதுக்கு ஒளிவு மறைவு?. என்ஜாய்.” என்று விட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.
அதன் பிறக்கும் ராபர்ட் பல தடவை ஃபோன் செய்து பார்த்தான். ஸ்ரீ எடுக்கவேயில்லை. மனசுக்கு கஷ்டமாக இருந்தது. என்ன செய்வது என்ற தடுமாற்றம் அவனை அலைக்கழித்தது. சசி வேலைக்கு கிளம்பினாள்.
“வேண்டாம் சசி.....கொஞ்ச நாள் நீ வேலைக்கு வரவேண்டாம். நான் பார்த்துக்கறேன். முதலில் நீயும் உன் கணவரும் ஒன்று சேரணும். அது தான் முக்கியம்.” என்று சொன்னான்.
ஸ்ரீ வீட்டுக்கு வந்து யாருடனும் பேசவில்லை.
“எங்கடா சசி? விடியும் முன்னே அவளைக் கூட்டிட்டுப் போனேன்னு அப்பா சொல்றார். அவர் எழுந்து வந்து பார்க்கறதுக்குள்ளே காரை கிளப்பிட்டு போயிட்டியாம்.. என்ன கூத்தடிக்கிறே? ரொம்ப பாந்தமா நீ ராத்திரி பேசினது எல்லாம் நடிப்பா?” என்று பார்கவி குடைந்து குடைந்து கேட்டும் அவன் பதில் சொல்லவில்லை. அப்பாவும் கேட்டுப் பார்த்தார். அவன் வாய் திறக்கவில்லை வீட்டில் சாப்பிடவும் இல்லை. ஒரு வாரம் பொறுத்துக் கொண்டிருந்த பார்கவி சொன்னாள்.
“இத பாருடா. சசியை காணவில்லைன்னு போலீஸில் புகார் கொடுக்கப் போறதா அப்பா சொல்றார். அதெல்லாம் நமக்கு தேவையா? சொல்லு எங்க சசி? நீ பண்றது எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.”
“உன் அருமை மருமகள் தானே வருவா. அதுக்குள்ளே கலாட்டா பண்ணாம இருங்க. அவளுக்கு புருஷன் வேணும்னா வரட்டும். இல்லே அந்த கழுதைப் பயலலோட கூத்தடிக்கட்டும்.” என்று விட்டான்.
இவனை விட்டுத் தான் பிடிக்க வேண்டும் என்று பார்கவி மேலும் ஒரு வாரம் பொறுத்துக் கொண்டாள். பிறகு ஆரம்பித்தாள்.
“இனிமேலும் நான் சும்மா இருக்க முடியாது ஸ்ரீ. மரியாதையா சொல்லிடு சசி எங்கே? அவள் இன்னி சாயந்திரமே வீட்டுக்கு வந்தாகனும்.”
“வரலைன்னா?”
“கண்டிப்பா போலீஸ் கம்பலைன் நானே போய் கொடுப்பேன்.”
ஸ்ரீ ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். அவன் உள்ளத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்கு மட்டும் தான் தெரியும். சசியின் நினைவில் அவனால் தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. பட்டினியாக அலைந்து கொண்டிரந்தான். அந்த கிறுக்கன் முத்தம் கொடுத்ததுக்கு அவள் என்ன செய்ய முடியும்? என்று அவன் மனசாட்சி அவனைக் குத்திக் கொண்டிருந்தது. அவளே வந்துவிடுவாள் என்று எதிர்பார்த்தான். அவனது ஈகோ அவனை தடுத்தது.
“என்னடா முழிக்கிறே? சொல்லு.....சசி எங்கே?’
அவன் மெதுவாகச் சொன்னான்.
“அம்மா.....உங்களுக்குத் தெரியாது அவ மேலே நான் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு. அவ தான் என் உலகம். என் வாழ்க்கைன்னு இருக்கேன். அவ நல்லவ மா. ஆனா அந்த ராபர்ட் ஒரு பொறுக்கி. பேசாம இருக்கான் பாரு. சசியை கொண்டு வந்து விடணும்னு அவனுக்கு தோணவேயில்லை. சசி பாவம் மா. அவளுக்கு புரியவே இல்லை அவன் ஒரு அயோக்கியன்ணு. எப்படி புரிய வைப்பேன்.?’ அவன் கண்ணில் நீர் ததும்பியது. பார்கவி பதறிவிட்டாள்.
“உன் வருத்தமும் வலியும் எனக்குப் புரியுது. டேய் அவளைக் கூட்டி வந்திடு. அவ இனிமே வேலைக்கு போக மாட்டா. போதுமா? அது தானே உனக்கு பயம்? எப்படியோ நீயும் அவளும் சந்தோஷமா இருந்தா சரி.”
“நிஜமாவா சொல்றே? அவள் வேலைக்கு போனும்ன்னு அடம் பிடிச்சா?’
“அவ நான் சொல்றதை கேட்டுப்பா. உனக்கு அவளைப் பத்தி தெரியாது. அன்புக்கு அவள் அடிமை. நான் தான் பெண்ணுக்கு ஒரு சுதந்திரம் வேணும்னு அவளை வேலைக்கு போகச் சொன்னேன். அவள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை பார்த்தா உனக்கு ஓ.கே வா?”
ஸ்ரீ ஒரு வினாடி யோசித்தான். “ஓ. கே தான் ஆனால் ராபர்ட் கம்பனியில் வேலை பார்க்கக் கூடாது. அம்மா எனக்கு சசி வேணும் மா.” குழந்தை போல் கெஞ்சும் மகனை புரிந்து கொண்ட தாய் “சரிடா....வா நாம ரெண்டு பேரும் போய் கூட்டி வரலாம்.”
சசியின் கண்ணீர் முகத்தை பார்க்கவே பிடிக்காத ராபர்ட் அவள்இடம் சொன்னான்.
“சசி...உன்னை உன் வீட்டில் விட வேண்டியது என் கடமை. நீ இப்படி வர மறுத்தா நான் என்ன செய்ய முடியும்?” என்றான் ராபர்ட்.
“எனக்கு பயமா இருக்கு ராபர்ட். நீ வீட்டுக்கு வந்தா காலை ஓடிச்சிடுவேன்னு சொன்னார். அவருக்கு என் மேல் பிரியமே இல்லை. என்னை தவறான வார்த்தைகள் சொல்லி மரியாதை குறைவா பேசினார். இந்த அவமானம் என் நெஞ்சை கீறி வேதனை செய்கிறது.”
“கோபத்தில் வரும் வார்த்தைகளுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் சசி. பிளீஸ் வா.....உன்னை உன் இடத்தில் சேர்க்க வேண்டியது இந்த அண்ணனின் கடமை.”
சசி பயமும் தயக்கமும் கொண்டவளாக காரில் ஏறினாள்.
பார்க்கவியும் ஸ்ரீயும் சசியை கூட்டி வர கிளம்பி நிற்க.....அங்கே ராபர்டின் கார் வந்து நின்றது. சசி காரை விட்டு இறக்கினாள்.
தேடல் தொடரும்.
. . .
.