என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ==16
என்னைத் தேடும் நான்
அத்தியாயம் –16
வானம் லேசாக கருமை இடத் துவங்கியது. எவ்வளவு நேரம் அவள் மொட்டை மாடியில் உட்காரந்திருந்தாள் என்று அவளுக்கேத் தெரியாது. பார்க்கவியும் அனந்துவும் ஒரு கல்யாணதுக்கு போயிருந்தார்கள்.
“சசி..... பத்திரம். நான் பயப்படுவது வெளி ஆட்களால் உனக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என்று அல்ல. என் ஆசை மகன், அந்தக் கோடாரிக் காம்பு இருக்கானே ஸ்ரீ...... அவனால் உனக்கு தீங்கு ஏற்படுமோ என்று தான் அஞ்சுகிறேன். நாங்கள் ஊரில் இல்லை என்று அவன் மோப்பம் பிடித்துக் கொண்டு வந்தால், தயவு செய்து கதவை திறக்காதே. எனக்கு நீயும் குழந்தையும் தான் முக்கியம். புரியுதா?” என்று எச்சரித்துவிட்டுத் தான் சென்றாள் பார்கவி. அனந்துவும் அவளை ஜாக்கிரதையாக இருக்கும் படி சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார்.
சசிக்கு அவர்கள் போனதில் ஒரு சிறு நிம்மதி. வாய் விட்டு அழுதாள். கிணற்றடியில் இறைத்த தண்ணீர் கொண்டு முகத்தில் மாறி மாறி அறைந்து கழுவிக் கொண்டாள். நீ எத்தனை தரம் கழுவினாலும் உன் அடயாளம் மாறப் போகிறதா என்ன? என்று அவள் மனதின் குரல் கேட்டது. எதையும் அழித்துவிட முடியாது.
நீ ஸ்ரீயின் மனைவி தான். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். நிலா பக்குவமாக படகு வடிவில் நீந்திக் கொண்டிருந்தது. ஹனி மூன் கொண்டாடும் போதும் இப்படித்தான் ஜாலியா நீந்தினே.....முறிந்த பின்பும் அதே தன்மையுடன் நீந்துறே. நீயெல்லாம் ஒரு நிலவா? பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை உன்னிடம் இருக்குன்னு இதுவரை நம்பியிருந்தேன். ஆனா நீ எனக்கு ஆறுதல் சொல்றதை விட்டுவிட்டு, உல்லாசமா திரியற. அய்யோ நான் என்ன செய்வேன்?.....இயற்கை கூட எனக்கு இரக்கம் காட்டவில்லை.. அழுதாள். பிறகு பயித்தியம் போல் சிரித்தாள்.
“போடா......உன்ன எனக்குத் தெரியாது போடா. போ போ.....” என்று கத்தினாள். அவன் பிம்பம் மாறி மாறி அவள் முன் தோன்றியது. சீ என்று அவள் கிணற்று விளிம்பில் இருந்த பக்கெட்டை தள்ளி விட. அது சர சரவென்று பாதாளத்தில் இறங்கி சளப் என்ற இரச்சலுடன் நீரில் விழுந்து செத்துப் போனது. இது போல் செத்துவிட அவளுக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டது. கிணற்று விளிம்பில் ஏற முயற்சித்தாள். எதுவோ தடுத்தது. மெள்ள நிதானத்துக்கு வந்தாள். கண்களை துடைத்துக் கொண்டு படுக்கையில் வந்து விழுந்தாள்.
தூக்கம் வரவில்லை துக்கம் தான் வந்தது.
அப்படி என்ன நான் கேட்டுவிட்டேன்.? அன்பான கணவன்......ஆசையாய் ஒரு இல்லறம். இது ஒரு மாபெரும் குற்றமா? ஏன் எனக்கு இந்த தண்டனை? எதில் குறை வைத்தேன் இறைவா? உன்னை வணங்க வில்லையா? விரதங்கள் இருக்க வில்லையா? பூஜைகள் செய்யவில்லையா? புண்ணிய ஸ்தலங்களுக்கு போகவில்லையா? என்ன குறை உனக்கு வைத்தேன்? தேர்ந்தெடுத்து என் வாழ்க்கையை பறிச்சிட்டியே இறைவா? உனக்கே இது நியாயமா தெரியுதா?
அவன் நடமாடிய இடங்கள். அவன் நின்று சிரித்த இடங்கள். அவன் கொஞ்சி மகிழ்ந்த இடங்கள் எல்லாம் அவளுக்கு நினைவலைகளை எழுப்பியது. அவன் திட்டிய, அடித்த இடங்கள் மட்டும் உனக்கு தோணலையாக்கும்? என்று இடித்துக் கூறியது மனசாட்சி. பெருமூச்சு விட்டாள். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ? அவன் மனிதன் தானே? அவன் சந்தேக புத்தி தவறு தான் என்று உணர்த்தும் திறமை தன்னிடம் இல்லயோ? ஸ்ரீ நீ மாறிவிடேன். கல்யாணம் ஆன நாலு மாசம் நன்றாகத்தானே இருந்தே? அந்த ஸ்ரீ எனக்கு வேண்டும். நெஞ்சோடு அனைத்துக் கொண்டு காதல் கதை பேசிய ஸ்ரீ எனக்கு இப்ப வேண்டும். அவன் மூச்சுக் காற்று என் மேல் பட வேண்டும். அவன் குழைந்த குரல் என் காதில் சிணுங்க வேண்டும். அவன் காட்டிய அன்பும் காதலும் நாலு மாசம் நிஜம் தானே? அது எனக்கு வேண்டும். என் குழந்தைக்கும் வேண்டும். வேண்டும் வேண்டும் என்று அவள் மனசு கதறியது.
தான் பார்க்கும் கீதா, உமா, மேனகா எல்லோருக்கும் கிடைத்திருக்கும் பாக்கியம் எனக்கு மட்டும் ஏன் இல்லை? அவர்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள் என்று அர்த்தமா? நான் அழகில்லையா? பெண்மையின் நளினம் என்னிடம் இல்லயா? எது இல்லை? நான் கேட்கும் என் தாலிக்குறியவன் ஏன் முட்டாளாக இருக்கிறான்?
கேள்விகள் கேள்விகள் விடை கானா கேள்விகள். குடைந்து குடைந்து எடுத்து அவளை பித்துக்குளி ஆக்கியது அவள் மனம். ஒரு ரவுண்ட் இப்படி மறுகி மறுகி சிந்தித்தப் பின் அவள் தெளிவடைந்தாள்.
ஸோ.....பாலைவனம் ஆகிவிட்டது உன் வாழ்க்கை. அதை ஏற்றுக் கொள். அதில் சோலைவனமாக உன் குழந்தை. அதை ரசித்து வாழ ஆரம்பி. டாக்டரிடம் போனாள். குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று சொன்னாள் ஆனந்தி டாக்டர்.
“எங்க உங்க கணவர்? நீங்க மட்டும் வந்திருக்கீங்க.?” என்று கேட்டாள்.
“அவர் அலுவலக விஷயமாக டூர் போயிருக்கார். அவர் ஃபோன் பண்ணி சொல்லித்தான் நான் உங்களை பார்க்க வந்தேன்.” என்று முழு பூசனிக்காயை மறைத்து மலர் போல் சிரித்தாள். தோழி ராஜி சொல்லித் தான் அவள் இந்த டாக்டரை தேடி வந்தாள்.
“டாக்டர் ஆனந்தி ரொம்ப ஸ்பெஷல் சசி. யு வில் லைக் ஹர். எக்ஸ்பர்ட் இன் கைனகாலஜி. முரண்டு பண்ணும் பாப்பா கூட அவங்க கை வச்சா பழம் நழுவி பாலில் விழுவது போல் வழுக்கிக் கொண்டு பிறக்கும் என்று நற்சான்று கொடுத்திருந்தாள்.
“சசி......ஒண்ணு சொன்னா நீங்க அதிரிச்சி அடய மாட்டீங்களே.” என்றாள் ஆனந்தி. சசிக்கு பயம் பிடித்துக் கொண்டது. இவள் என்ன சொல்லப் போகிறாள்? அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டதா?
எத்தனையோ அதிர்ச்சிகளை தாங்கியாகிவிட்டது.
“சொல்லுங்க டாக்டர்.” என்றாள் கவலையை மறைத்துக் கொண்டு.
“இன்ப அதிர்ச்சி தான். உங்களுக்கு ரெட்டை குழந்தைகள்.”
சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் சசி.
“நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று ஒரு பெரிய லிஸ்ட்டாக அறிவுரை கொடுத்தாள் டாக்டர்.
“நான் சொன்னபடி கடைபிடித்தால் எந்த பிரச்சனையும் இல்லே.” என்று சொல்லி வழியனுப்பினாள் டாக்டர்.
சசிக்கு உள்ளம் பூரித்தது. போனால் போகிறது போ. ரொம்ப புலம்பின இல்லயா? அதான் உனக்கு ரெட்டை பரிசு என்று இறைவன் அருளிவிட்டானோ? எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? வீட்டுக்கு வந்துவிட்ட பார்கவிக்கு சசியின் குதூகலம் எதுக்கு என்று புரியவில்லை. சோகமாக இருப்பாள் நாம் தான் அவளை தேற்றணும் என்று நினைத்திருந்தாள். இங்கே பார்த்தால் அவள் பளிங்கு போல் சிறிதுக் கொண்டு இருக்கிறாளே! ஒருவேளை ஸ்ரீ வீட்டை விட்டுப் போனது அவளுக்கு இத்தனை மகிழச்சியை கொடுத்திருக்கிறதோ என்னவோ? இருக்கும். அருகில் இருந்து கொண்டு பாம்பு போல் விஷயத்தை கக்கிக் கொண்டு இருந்தவன் போனான் என்றால் யாருக்குத் தான் நிம்மதியாய் இருக்காது? அவளுக்கு உள்ளுக்குள் வேதனை இருக்கத்தான் செய்தது. அவன் திருந்தி வரக் கூடடும் என்று அவளும் தான் எதிர்பார்த்து ஏங்குகிறாள். விதி என்கிற விளையாட்டு மைதானத்தில் சிக்சர் அடிக்க ஆசைபட்டாலும் டக் அடித்துக் கொண்டு இருக்கும் திறமைசாலிகள் இருக்கத் தானே செய்கிறார்கள். சிக்சர் அடிக்க சரியான லூஸ் பால் இன்னும் வரவில்லை.
சசிக்கு வாழ்க்கையில் சிக்சர் அடித்துவிட்டது போலவே இருந்தது. ரெண்டு பாப்பா.....மை காட் என்ன ஒரு குடுப்பினை? அன்றிலிருந்து சசி புது சசியாக மாறினாள். தன் ஒவ்வொரு தாய்மையின் வளர்ச்சியையும் ரசித்தாள். வயிற்றில் இருக்கும் குழந்தைகளுடன் பேசினாள். டாக்டர் சொன்ன அனைத்தையும் கடை பிடித்தாள். மனசுக்கு இதமாக இருந்தது. பேபி கேர் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தாள். மொத்தத்தில் தன் மனதை உற்சாகமாக வைதுக் கொண்டாள்.
பார்கவிக்கு விஷயத்தை சொல்லும் முன் அவள் மனம் ஏனோ ஸ்ரீயை நினைத்தது. அவனிடம் சொன்னால் என்ன என்ற முட்டாள்தனமான ஐடியா அவளுக்கு வந்தது. அவளுக்கு வாந்தி எடுக்கவில்லை என்பதால் பார்கவிக்கு விஷயம் தெரியவில்லை.
சசிக்கு மூன்று மாசம் ஆகிவிட்டது. முயன்று தான் பார்ப்போமே என்று அவள் ஸ்ரீக்கு ஃபோன் செய்தாள். அவன் உடனே எடுத்தான். இவளும் பேசவில்லை அவனும் பேசவில்லை. கடைசியில் அவள் தான் சொன்னாள்
“நான் ஏன் உங்களுக்கு ஃபோன் செய்தேன் தெரியுமா?”
“எதுக்கு? அந்த ராபர்ட் உன்னுடன் கொஞ்சிக் குலாவ வந்ததை சொல்ல துடிக்கிறே இல்லே?” என்று நெருப்பை அள்ளி வீசினான்.
“என்ன இப்படி பேசறீங்க? இந்த பிரிவு உங்களை மாத்தியிருக்கும்னு நினச்சேன். ஒரு நல்ல செய்தி சொல்லத்தான் கூப்பிட்டேன்.”
“செய்தி நல்லதா கெட்டதான்னு நான் தான் சொல்லணும்.”
“எங்க இருக்கீங்க?”
“எதுக்கு கேக்கற?”
“இல்லே.....சும்மா தான். ஒரு வேளை நான் சொல்லும் விஷயம் கேட்டு நீங்க மனம் மாறி வரணும்னா...... உள்ளூரிலா? இல்லே வெளியூரான்னு.....உள்ளூருன்னா ஓடி வந்திடலாம் இல்லயா?”
“ஓடி வர நான் மானம் கெட்டவனா? சரி என்ன விஷயம் அதை சொல்லு.”
“உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்கனு கேக்க மாட்டேங்களா?”
“அவங்க செத்துப் போய் ரொம்ப நாளாச்சு.”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க திருந்தி வரணும்னு தான் ஆசைப்பட்டுக்கிட்டு இருக்காங்க.”
“நான் ஒரு அநாதை. அவ்வளவு தான். பேச்சை வளர்க்க வேண்டாம். எதுக்கு ஃபோன் செஞ்சே?”
“நீங்க அநாதை இல்லே ஸ்ரீ. உங்களுக்கு உங்களுக்கு......வந்து.....”
“பீடிகை போதும். பட்டுன்னு சொல்லு. எனக்கு வேலை இருக்கு.”
“ஒன்னுமில்லே. நீங்க ரெட்டை குழந்தைகளுக்கு அப்பா ஆகப் போறீங்க.” அவள் குரலில் பரவசம்.
ஒரு கணம் ஃபோன் மௌனமாக இருந்தது. அந்த ஒரு கணத்தில் அவள் ஏதேதோ கற்பனை பண்ணிவிட்டாள். அப்படியா? எனக்கு இப்பவே உன்னை பார்க்கணும் போல இருக்கு. யாருக்கு இப்படி ரெட்டை சந்தோஷம் கிடைக்கும்?. நான் உன்னை இப்ப தான் ரொம்ப நேசிக்கிறேன்.......
“வைடி போனை......” என்ற அவன் கத்தல் அவளை கற்பனை உலகிலிருந்து தொப்பென்று கீழே போட்டது. கண்ணீர் கண்களில் உப்பியது.
“உங்களுக்கு சந்தோஷம் இல்லயா?”
“தூ......இதில் சந்தோஷம் அடைய நான் ஒண்ணும் ரோஷம் கெட்டவன் இல்லே. அந்த ராபர்ட் கிட்டே சொல்லு. சந்தோஷப்படுவான். வெக்கமில்லாம என் கிட்டவே சொல்றே. உன் லீலைகளை வெறுத்து தான் நான் தனியா வந்திட்டேனே. அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்றே?......” என்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லி தொடர்பை துண்டித்து விட்டான். சசி தன் புத்தியை செருப்பால் அடிச்சுக்கணும் என்று அப்ப தான் உணர்ந்தாள். எந்த களங்கமும் இல்லாம தேவடியா பட்டம் சுமக்க வேண்டிய அவலம் அவளை கொதிக்க வைத்தது. அழுக்கு மனம் கொண்டவன் கொடுத்த பரிசு. உனக்கு வேணும்......சாக்கடை என்றும் சந்தனம் ஆகாது. இன்னுமா புரியலை என்று கெக்கேலி கொட்டியது புத்தி. இந்த காயம் அவள் நெஞ்சை கீறியது. ஆறுதல் தேட அவள் பார்கவியை நாடினாள்.
அவள் மடியில் படுத்து அனைத்தும் சொன்னாள்.
“வருத்தப்படாதே சசி. நாங்க இருக்கோம் உனக்கு. அந்த கழிசடையை மறந்து நிம்மதியா இரு.”
நாட்கள் பறந்தது. ஒவ்வொரு மாதமும் அவளுக்கு புதுப் புது தாய்மை அனுபவம். குழந்தைகள் அவள் வயிற்றை எட்டி உதைக்கும்போது கிடைத்த இன்பம் எல்லயற்றது.
ஒரு நல்ல நாளில் சசி ரெண்டு அழகிய பெண் குழந்தைகளுக்கு தாய் ஆனாள். இருவரும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தார்கள்.
“ரேகா.... லேகா என்று பேர் வைக்கட்டுமா அத்தே.”
“அதெல்லாம் வேண்டாம். விஜயலட்சுமி சந்தானலட்சுமி.” என்றாள் பார்கவி.
“நோ நோ. இவங்க நம் வாழக்கையில் இன்பம் கொண்டு வந்த தேவதைகள். ரம்யா....இனியா.” என்றார் அனந்து.
“எஸ்......மாமா சொல்வது தான் சரி. அந்த பெயர்களே இருக்கட்டும்.” என்று ஆமோதித்தாள் சசி.
ரம்யா இனியா நாள்ளொரு மேனி பொழுதொரு வண்ணம் சீரும் சிறப்புமாக வளர்ந்தார்கள். மூன்று வயது ஆனா போது ரம்யா கேட்டாள்
“என்னோட அப்பா எங்கேம்மா?”
கேள்வியின் யதார்த்தம் சுட்டது. சசி என்ன பதில் சொல்வது என்று திகைத்தாள். நான்கு அழகிய கண்கள் அவளையே பார்த்தன.
தேடல் தொடரும் .
.
. .
.
.
. . .