என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ...17
என்னைத் தேடும் நான்
அத்தியாயம்—17
குழந்தைகள் உலகம் அழகானது. தெய்வம் வந்து அமரக் கூடிய சிம்மாசனம், அவர்கள் மனசு. கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருப்பார். கடவுள் ஒரு நாள் பூமியைக் காண வருகிறாராம். கண்ட மனிதர்களை எல்லாம் நலமா என்றாராம். ஒருவர் கூட நல்ல பதில் சொல்லவில்லையாம். பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம். அந்த மழலை மொழிகளில் அவர் தன்னைக் கண்டாராம். அதுவே போதும் என்று வானம் சென்றாராம்.
பச்சை பசேல்லென்ற இயற்கை எவ்வளவு அழகோ அதே அழகு தான் குழந்தைகளின் மனமும். ரம்யா, இனியா என்ற இரெட்டை ரோஜாக்கள் இரெட்டை கடவுளுக்கு சமம். ரம்யாவின் கேள்விக்கு ஆடிப் போன சசி, திகைத்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வேர்த்தாள்.
“சொல்லுமா......”
செத்துப் போய்விட்டார் என்று சொல்ல மனசு வரவில்லை. வெளிநாடு சென்றிருக்கிறார் என்று பொய் சொல்லவும் பிடிக்கவில்லை. தனித்து வாழ்கிறார் என்று சொன்னால் இவர்களுக்கு எப்படி புரியும்? என்ன சொல்வது? அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது.
“நான் உங்களுக்கு மாம்பழக் கதை சொல்லியிருக்கேன் இல்லயா?’
“எந்த மாம்பழக் கதை? மாம்பழமாம் மாம்பழம் வாய் இனிக்கும் மாம்பழம்..” என்று ரம்யா ராகம் இழுக்க..
“அய்ய....அது கவிதை. அம்மா சொன்னது கதை. அம்மா மாம்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு பழனி மலையில் போய் இருக்காரே முருகப் பெருமான்....அந்தக் கதையா?” என்றாள் இனியா.
“அதே தான். உங்கப்பாவும் அதே போல் கோபித்துக் கொண்டு மலைகள் நிறைந்த ஒரு ஊரில் இருக்கார். அவ்வை பாட்டி போய் பாடினா தான் வருவார். சரி தூங்குங்க. மனசிலே வச்சுக்கோங்க யார்கிட்டவும் சொல்லக் கூடாது. ரகசியம்.”
“பாட்டிக் கிட்டே கூடவா?”
“ஆமா.... தாத்தாக்கிட்டவும்....ஒடுங்க குட் நைட்.”
அவர்கள் கிக் கிக் என்று சிரித்தபடி கை கோத்துக் கொண்டே படுக்க சென்றார்கள். சமாளித்தாக்கிவிட்டது. நாளை புதுப் புது கேள்விகள் எழும். ஏன் கோபித்துக் கொண்டார்? எப்போ அவ்வை பாட்டி போய் பாடுவாங்க. இவர்களைப் போல் மழலையாக இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஜன்னல் வழியாக நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் நிறைந்து போனது. உதட்டில் பட்டு கரித்தது. முதல் இரவில் அவள் இப்படித்தான் அழுதாள். அந்தக் கண்ணீரை அவன் சுண்டு விரலால் சுண்டி விட்டான்.
“பெண்கள் அழுதாலே எனக்கு மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கும். அதுவும் என் புது மனைவி அழுதால் என்னால் தாங்க முடியுமா? புரியுது. அம்மா அப்பாவை முதல் முதலாக பிரிந்த வேதனை கண்ணீர் தானே இது? சசி.....உனக்கு அம்மாவா அப்பாவா நானே இருப்பேன், இந்தக் கண்ணீர் கடைசி கடைசியாக இருக்கட்டும்.” என்றானே
அப்பொழுதும் அவள் கண்ணீர் நிற்கவில்லை.
“இன்னும் என்ன? நம்பிக்கை இல்லயா?”
“இது ஆனந்த கண்ணீர் ஸ்ரீ. னெண்க இப்படி சொலவீனகண்ணு எதிர்பார்க்கலை. நான் குடுத்து வைத்தவள்.”
அம்மா அப்பாவாக இருப்பேன் என்று சொன்னவன் மனுஷனாக கூட இல்லாமல் போய்விட்டான். அப்படி என்ன சந்தேகம் வேண்டி இருக்கு? இன்னொரு ஆணுடன் பழகினால் அது இனக் கவர்ச்சி அல்லது காதலாகத் தான் இருக்க வேண்டுமா? மனைவியின் மனதை அப்பழுகில்லாமல் புரிந்து கொள்ள டிகிஷ்னரியா போட முடியும்? கண் ஜாடைகள், கனிந்த வார்த்தைகள், மென்மையான தொடுகைகள் இதெல்லாம் அவனுக்கு உண்மையை உணர்த்தாதா? எங்கிருந்து சந்தேகம் என்ற பேய் அவனுக்குள் நுழைந்தது? அவளின் அழகான தேகத்தை கண்டு இச்சைப் படுகிறவனை அவளால் இனம் கண்டு கொள்ள முடியாதா? அப்படிபட்டவனை தவிர்க்க அவளுக்குத் தெரியாதா? காணுகின்ற அழகான ஆண்களை எல்லாம் கண்டு இச்சைப் படும் ரகமா அவள்? ஸ்ரீ உன் மேல் நான் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்....அது கூடவா உங்களுக்குப் புரியவில்லை........
கண்ணீர் வற்றிப் போன தினுசில் அவள் மௌனமாக உள்ளக் கண்ணீர் வடிய உட்காரந்திருந்தாள்.
“சசி.. பணி அடிக்கிறது. ஜன்னலை சாத்து. சளி பிடிக்கப் போகிறது.”
“வழக்கையிலே சனி பிடித்துவிட்டது. மூக்கில் சளி பிடித்தால் என்ன அத்த?” விரக்தியுடன் சொன்னாள் சசி.
“சளிக்கு மருந்து இருப்பது போல் சனிக்கும் மருந்து இருக்கு சசி.”
“ஜோதிட பரிகாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை அத்த.”
பார்கவி ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அவளை இழுத்து வந்து காட்டிலில் உட்கார வைத்தாள். சசியின் நெற்றியில் விளையாடிய கூந்தல் இழைகளை வாஞ்சையுடன் ஒதுக்கி விட்டாள்.
“மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். ஜோதிகூடம் எல்லாத்துக்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கை கடலில் நாமே தான் நீந்தி பிழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். மனசு தான் ஜோதிடம். நான் ஜோதிட பரிக்காரங்களை சொல்லவில்லை. மனசு சொல்லும் பரிகாரம் இது. சொல்ல நினைக்கிறேன். சொல்லட்டுமா?”
சசி புன்னகைத்தாள். “அப்பா என்று கேட்கும் குழந்தைகளுக்கு அப்பா அந்தக் கடவுள் தான் என்று யோசனை சொல்லப் போறீங்களா?”
“கடவுள் கல்லா கணியான்னு எனக்கு சொல்லத் தெரியாதும்மா. அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நான் தேடி புரிந்து கொண்ட ஒரு பரிகாரம் இது. பார்கவியின் பரிகாரம் என்று வைத்துக் கொள்ளேன்.”
சசி சற்று நிமிர்ந்து உட்காரந்து கொண்டாள். அத்தை என்ன பரிகாரம் சொல்லப் போகிறார்கள்? மகனை கெஞ்சி நான் கூட்டி வருகிறேன் உனக்கு சம்மதமா என்பார்களோ? மூன்று வருடமாக காணாமல் போனவர் எங்கு இருக்கறார் என்று கூட தெரியாத நிலையில்....அது சாத்தியமா?
மகன் அபிமென்யூ போரில் இறந்த சேதி கேட்டு அர்ஜுனன் எந்த அளவு வேதனை அடைந்தானோ அதே வேதனையை பார்கவி அனுபவித்து வருவது சசி அறிந்த ஒன்றே. அந்தக் காயம் ஏற்படுத்திய வலி இருக்க, அவள் வேதனைக்கு பரிகாரம் தேடும் அளவு பார்கவி நல்ல மனம் படைத்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இதுக்கு என்ன பரிகாரம் இருக்கக் கூடும் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.
“அத்தே....உங்க நல்ல மனசுக்கு நான் தலை வணங்குகிறேன். நான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லாமல், உங்க மகனின் தவறு உணர்ந்து எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கீங்க.. பெரிய விஷயம்.”
“விதி மேலே பழியை போட்டுக்கிட்டு நாம இனி உக்காந்து இருக்க முடியாது சசி. உன் வாழ்வு மலரனும். நான் சொல்றேன் கேப்பியா?’
“பீடிகை பலமா இருக்கு. சொல்லுங்க அத்த.”
“சொல்றேன் நீ கோபித்துக் கொள்ளக் கூடாது. சிந்திக்கணும். எதிர்காலம் இலையுதிர் காலமா காலம் முழுதும் இருக்கணுமா? வசந்தம் வரணும். அது தான் வாழ்க்கை.”
“என் மனசிலே வசந்தம் இருக்கு அத்த. ரெண்டு குட்டி ரோஜாக்கள் இருக்கும் போது என் வாழ்க்கை தோட்டத்தில் வசந்தத்துக்கு என்ன குறை?’
“பெண்ணே.......இப்போ வசந்தம் உணர்ந்தாலும் போகப் போக மனம் சூனியம் அடைந்து விடும். அதுக்காகவா பிறந்திருக்கோம்.? ஒடிந்து போன கால், சிதைந்து போன பார்வை என்று குறைகள் வரும்போது சும்மாவா இருக்கிறோம்? ஜெய்பூர் கால்கள், கண் தானம் என்று பரிகாரம் தேடி ஒடவில்லையா? மனசுக்கும் அது தான். ஒடிந்த மனசுக்கு மாற்று வேண்டாமா?”
“மாற்று மனசு எங்கு கிடைக்கும் அத்த?”
“சசி நேரடியா சொல்றேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு இன்னொரு மகன் கிடைப்பான்.”
முழு நிலவு வீசிக் கொண்டிருந்தாலும் அமாவாசை கண்டது போல் மிரண்டாள் சசி. இது தான் பரிகாரமா? அதுவும் ஒரு தாயின் வாயிலிருந்து? மகனை விட்டுக் கொடுக்காத தாயைத் தான் அவள் பார்த்திருக்கிறாள் கேட்டிருக்கிறாள்....இது என்ன புதுமை? என் வாழ்வின் முன் பகுதியை மறந்து ஒரு பின் பகுதியை நான் எப்படி தேர்ந்தெடுப்பேன்? ஸ்ரீ உன்னால் நான் அடையும் சுற்று சூழல் சங்கடங்களை நீ ஏன் எனக்கு அளித்தாய்? எச்சில் கூட்டி விழுங்கிய சசி உலர்ந்த பார்வை பார்த்தாள்.
“பசி எடுப்பவனுக்கு உணவு கொடுத்தால் அது பரிகாரம். ஜீரணம் செய்ய முடியாதவனுக்கு நல்ல உணவே கொடுத்தாலும் அது செரிக்காது. அத்த, உங்க நல்ல நோக்கம் பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு ஒத்து வராது.” என்று சொல்லி எழுந்து கொண்டாள் சசி.
இப்போ தானே கொளுத்தி போட்டிருக்கோம் அது மெதுவா தான் வேலை செய்யும் என்று உணர்ந்த பார்கவி “சரி சசி, யோசனை பண்ணு. குட் நைட்.” என்று சொல்லி அறையை விட்டு சென்று விட்டாள்.
சசி படுத்துக் கொண்டாள் ஆனால் தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? ஆற்றாமை தான் வந்தது. சுய பச்சாதாபம் வர, அவளுக்கு ஸ்ரீ மேல் கோபம் வந்தது. ஒழுங்காக எல்லோரையும் போல் இந்த மனுஷன் இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? தான் யார்? தனக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை. இன்னொரு புருஷன், இன்னொரு அப்பா என்று அமைத்துக் கொள்ள அவள் தயாரா? புது புனல் போல் பொங்கி வந்தது கண்ணீர்.
சசியின் கண்ணீர் அவளுக்கு மட்டும் சொந்தமானதில்லை. இந்த சமுதாயத்தில் தனித்து விடப்பட்ட பெண்களின் ஓட்டு மொத்த துயரத்தின் வெளிப்பாடு தான் அது. என்னவெல்லாம் சீர்திருத்தங்கள் வந்திருக்கு! விதவை திருமணம் ஓ. கே என்று டிக் அடிக்கபட்டு சட்டம் வந்திருக்கு. ஆனால் நடை முறையில்? ஜனத் திரள் நடுவே அவள் ஒரு தீவாகத் தான் கருதப்படுகிறாள்.
“இவள் ரெண்டாவது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்” என்பது தான் அவளுக்குறிய அடையாளம். அந்த ஒற்றை வரியில் கொஞ்சம் ஏளனம் கலந்திருக்கும். காலம் பூராவாக ஒரு வலி சுமந்து கொண்டிருக்க வேண்டி வரும். நிமிர்ந்து விட முடியாது. மனசு குறுகும். மனிதர்களை சந்திக்க பிடிக்காமல் கூட்டுக்குள் அடங்க நேரிடும். சட்டம் அனுமதித்தாலும் இன்னும் சமுதாயம் வாசலை முழுமையாக திறக்கவில்லை. இது தானே உண்மை! இது அமெரிக்கா இல்லையே......
சசி குப்புற படுத்து சிந்தித்தாள். பாதகங்களை விட அவள் மனசே அதுக்கு எதிராக நின்றது. யாரோ ஒரு மூன்றாமவன் அவள் குழந்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அத்தனை பரந்த உள்ளம் யாருக்கு இருக்கு?
மௌனமாக நாட்கள் ஓடியது. ஒரு மாலை நேரம் சசி குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது வாசலில் கார் வந்து நின்றது. யார் வருகிறார்கள். ரம்யா ஓடிச் சென்றாது
“அய் அப்பா....” என்று அவள் கை பிடித்து இழுத்து வந்தது ராபர்ட்டை
“வாங்க தம்பி..” என்று மலர்ந்த முகத்துடன் பார்கவி வரவேற்றாள்.
“உங்களை அப்பான்னு கூப்பிடலாமா?” என்று இனியா ராபர்ட்டின் மடியில் உட்கார்ந்து கொண்டது.
“இனியா.....ஏதாவது உளராதே. அடி விழும். போய் நான் சொன்னா மாதிரி பாடத்தை எழுதி காண்பி.” என்று அதட்டினாள் சசி.
“அம்மா நீ தானே கதை சொன்னே.....தசரத மகாராஜா குருட்டு பெற்றோரை அம்பு விட்டு கொன்னதும் அவங்க மகன் ராஜாவை அப்பாவா நினைச்சான்ணு. அது மாதிரி தான் நான் ராபர்ட் அங்கிளை அப்பாவா நினைக்கிறேன். ரம்யாவும் நினைக்கிறா. கோவிச்சுக்காதேம்மா.” என்று இனியா சொல்ல சசி கோபத்துடன் சொன்னாள்.
“உங்களுக்கு கதை சொன்னது தப்பாப் போச்சு. போங்க உள்ளே.”
அவர்களை விரட்டிவிட்டு சசி இறுகிய முகத்துடன் ராபர்ட்டை பார்த்தாள்.
“அவங்களுக்கு மூணு வயசா? இல்லே உனக்கு மூணு வயசான்னு தெரியலை சசி. கிடைக்காதது கிடைக்க மனசு வழி தேடிக்கிட்டே தான் இருக்கும். சரி அதை விடு, நான் இங்கு வந்தது ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத் தான்.”
“என்ன முக்கியமான விஷயம்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சசி. பார்கவி சூடான காபியை டிரேயில் கொண்டு வந்து வைத்தாள்.
“காப்பி ஆறினா நல்லா இருக்காது. அதே போல் விஷயம் உடனே சொல்லாவிட்டால் அதுவும் ஆறிவிடும். சசி கிட்டே சொல்லிடுங்க.”
சசி விழித்தாள். என்ன விஷயம்? ஏற்கனவே பார்க்கவியும் ராபர்ட்டும் பேசி விட்டார்கள் போலிருக்கு. என்ன நடக்கிறது இங்கே? சசி வியந்தாள். அநந்து பேப்பர் படிப்பதை விட்டுவிட்டு அவர்கள் எதிரே வந்து அமர்ந்தார். அவருக்கும் தெரிந்திருக்கு போலிருக்கே!
“இன்னிக்கு ஒப்பான சொல்லிடறது நல்லது ராபர்ட்.” என்றார்,
படபடப்புடன் பார்த்தாள் சசி. “எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லிடுங்க ராபர்ட். வீன் சஸ்பென்ஸ் எதுக்கு.”
“சரி சொல்லிடறேன். ஸ்ரீ டெல்லியில் இருக்கார்.”
சசியின் முகம் மலர்ந்தது.
“அப்ப.......நாம போய் கூட்டி வந்திடலாமா?”
“அது முடியாதே சசி.”
“அவர் இந்த மூணு வருஷத்தில் மாறியிருப்பார். நான் போய் அவர் காலில் விழுந்தாவது கூட்டி வரேன்.”
சசியை பரிதாபமாக பார்த்தான் ராபர்ட். இவளிடம் எப்படி உண்மையை சொல்வது? இவள் தாங்குவாளா?
“அவர்.....அவர்.......”
“உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே?. சசி கண்களில் பயம் தெரிந்தது. விசனத்துடன் தலை குணிந்தான் ராபர்ட்.
“சொல்லுங்க அவருக்கு என்னாச்சு?”
பார்கவி மெதுவாக சொன்னாள்.
“அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறான் சசி. அவனை உன் மனசிலிருந்து தூக்கி எரிந்து விடு.”
“அவர் விலாசம் சொல்லுங்க. நான் கெஞ்சிக் கேட்டு அவரை அழைத்து வருகிறேன். என் குழந்தைகளுக்காக.” என்ற சசியை அதிர்ச்சியுடன் பார்தனர் மற்ற மூவரும்.
“அந்த நரகத்தோட விலாசம் உனக்கு எதுக்கு சசி? விட்டுவிடு. ராபர்ட் உனக்காக ஒரு நல்ல வரன் பார்த்திருக்கான்.”
சொல்ல வேண்டியதை ஒரு வழியாக சொல்லி முடித்தாள் பார்கவி.
“நோ....நோ.....” என்று அலறி கைகளால் முகத்தை மூடி கேவிக் கேவி அழுதாள் சசி. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவளை குறிஞ்சி மலர் என்று கொண்டாடுவதா? இல்லை கோட்டிக்காரி என்று எடுத்துக் கொள்வதா? ஏறக் குறைய செத்துப் போன உறவு ஸ்ரீ. அதை மறந்து புது உறவை ஏற்றுக் கொள்ள இவளுக்கு ஏன் இவ்வளவு சென்ட்டிமென்ட்?
வானம் நட்சத்திரம் இல்லாமல் இருக்கலாம். கிரகணம் வரும்போது சூரியன் கூட தெரியாமல் இருக்கலாம். நிலா அமாவாசையில் காணாமல் போகலாம். ஆனால் வானமே காணாமல் போனால்? அந்த வலி சசிக்கு மட்டுமே புரியும். அவள் கண்ணீரின் அர்த்தம் அவளுக்கு மட்டுமே புரியும்.
வெளிச்சத்துக்கு வா என்று அழைத்தால் இவள் இருட்டில் தான் இருப்பேன் என்கிறாளே என்று அவர்கள் கவலைப் பட்டார்கள். வேறு பெண்ணுடன் இருக்கும் ஒரு கயவாளி கணவனுக்காக இவள் ஏன் அனுசரிக்கிறாள்?
“சசி..... குப்பை இருக்க வேண்டிய இடம் டஸ்ட் பின். உன் மனசுகக்குள் இல்லை.” என்றாள் பார்கவி. சசி கண்களை துடைதுக் கொண்டு புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அழுகையை விட மோசமாக இருந்தது.
தேடல் தொடரும்
..
.
. .