எண்ணத் தேடும் நான்
அத்தியாயம் --21
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—21
எண்ணித் துணிக கருமம். துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. வள்ளுவர் பொட்டில் அடித்தது போல் சொல்லிச் சென்றார். ஸ்ரீ அதுக்கு சிறந்த உதாரணம். சசியை விரட்டிவிட்டான். ஒரு வாரம் வரை அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவள் மனதை நன்கு நோக்கடித்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. அஸ்ரத் அந்த ஒரு வாரம் அவனோடு பேசவில்லை. அது அவனுக்கு உறுத்திற்று. அவள் காப்பி போட்டுக் கொண்டிருந்த அந்த காலை வேளையில் அவளிடம் கேட்டான்.
“சசி அழுதுகிட்டே போனா. அது பற்றி நீ என்ன நினைக்கிறே?”
காபியை அவனிடம் கொடுத்துக் கொண்டே அவள் சொன்னாள். “உங்களோட மறு பக்கம் எனக்கு தெரிஞ்சுது.” அந்த சிறுமியின் ஒற்றை வரி அவனை சங்கடப்படுத்திற்று அவன் உருஞ்சிக் குடித்துக் கொண்டே கேட்டான். “புரியலையே......மனுஷனுக்கு ரெண்டு பக்கம் இருக்கா என்ன?”
“இருக்குன்னு நானே இப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன்.” ஒரு ஆழ்ந்த வருத்தம் அவள் கண்களில் படர்ந்தது. தன் முன் கதை சுருக்கம் பற்றி நினைத்தாள்.
குழந்தை திருமணம் அவள் தேசமான ராஜஸ்தானில் எளிதாக நடந்து கொண்டிருந்தது. பெற்றோர் இதுக்கு உடன்பட்டு, பொருந்தா கல்யாணங்களுக்கு சம்மதிக்கின்றனர் என்பது அதிர்ச்சி. ஏழ்மை, பொறுப்பை கை மாற்றி விடுவது, பணப் பிரச்சனை, கல்வி அறிவு இல்லாத கொடுமை, என்று பல் வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அஞ்சு வயசிலே திருமணம் பதிமூணு வயசிலே குழந்தை, இருபது வயதில் விதவை என்று பல சிறுமிகளின் வாழ்வு பறிக்கப்படுகிறது.
அஸ்ரத்தின் அத்தை மகள் நிஷா வீட்டுக்கு மூத்தவள். அவளுக்கு கீழ் ரெண்டு பெண் குழந்தைகள். அவள் பெற்றோர் நிஷாவுக்கு பதினேழு வயது வந்தவுடன் கல்யாணம் முடித்தனர். கூடவே அதே மேடையில் அவள் தங்கைகள் திருமணத்தையும் சேர்த்தே நடத்தி விட்டனர். கல்யாண செலவு மிச்சமாம். தங்கைகளின் வயது. ஒருத்திக்கு பத்து. ஒருத்திக்கு எட்டு. பெண்களை பாரமாக நினைக்கும் அளவுக்குத் தான் அவர்கள் மன முதிர்வு இருந்தது. சட்டம் இருந்தும் இந்தப் பழக்கம் இன்னும் முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை. அஸ்ரத் இதனை எதிர்த்து நின்றாள்.
பில்வாரா கிராமம் தான் அஸ்ரத் பிறந்த ஊர். அவள் அப்பா ஒரு லாரி டிரைவர். குடி மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் எல்லாம் அவருக்கு உண்டு. மகளை கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டால் நம் பொறுப்பு தீர்ந்தது என்று எண்ணினார் அவள் அப்பா. அவர் அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்திருந்த அவள், கல்லூரியில் சேர ஆர்வமாக இருந்தாள். மறுத்துப் பார்த்து பலன் இல்லாமல் போகவே, போலீஸ் கம்ளேன் கொடுத்துவிட்டாள். போலீஸ் வரும் முன் அவள் அப்பா காண்டானார். கோபத்தின் உச்சக் கட்டத்தில் இருந்த அவர் “நீயெல்லாம் ஒரு மகளா? போ வெளியே......இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை.” என்று அவளை
கட்டிய துணியோடு கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார்.
அஸ்ரத்தை நைய்ய புடைத்ததில், அவள் மேலெல்லாம் ரத்தக் காயம். போலீஸ் வந்தாலும் அப்பா அவள் மேல் அவதூறு பரப்பி பஞ்சாயத்து வைப்பார், எல்லோரும் அவரையே சப்போர்ட் பண்ணுவார்கள். இதை புரிந்து கொண்ட அஸ்ரத் வெளியே போய்விடுவது தான் சரியான முடிவு என்று அந்த கிராமத்தை விட்டே பறந்துவிட்டாள். திருப்தி அடைந்த தந்தை, போலீஸிடம் அவள் யாருடனோ ஓடி விட்டாள் என்று நம்ப வைத்து தப்பித்துக் கொண்டார். .
அவமான சின்னம் என்று வீசி எரியப்பட்ட அஸ்ரத், தில்லியில் உள்ள தன் தோழி வீட்டுக்கு செல்ல வண்டி ஏறினாள், தப்பித்தோம் என்று நினைத்திருந்த சமயம், அவளுக்கு நிச்சயத்திருந்த மாப்பிள்ளை வீட்டார் வந்து பஸ்சை நிறுத்தி, அவளை இழுத்துக் கொண்டு போக முயற்சித்தனர். .அதே பஸ்சில் பிரயாணம் செய்த ஸ்ரீ, அவளைக் காப்பாற்றி தன் வீட்டுக்கு கூட்டி வந்தான். அவள் கதையை கேட்டு வருத்தப்பட்டான். தன்னைப் போல அவள் ஒரு அனாதையாக நிற்கிறாள் என்று இரக்கம் கொண்டான். ஆதரவு அளித்தான். அவன் ஈர மனசில் பயனாக. அவள் கல்லூரியில் சேர்த்து படிக்க ஆரம்பித்தாள்.
இதோ அவளுக்கு படிப்பு முடிகிறது. வேலையும் ரெடி. இந்த சமயத்தில் தான் சசி ஸ்ரீயை சந்திக்க வந்தது. சசியின் அழகு மட்டுமல்ல, அவள் ஸ்ரீ மேல் வைத்திருந்த காதலும் அப்பட்டமாக தெரிய, ஸ்ரீ அவளை விரட்டி விட்டது, அஸ்ரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. சசியின் கண்ணீர் முகம் அவள் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆங்கிலத்தில் தான் அவள் உரையாடுகிறாள்.
“உங்களை மிக உயரத்தில் வச்சு பார்க்கிறேன். மனித மிருகங்களுக்கு நடுவே தெய்வமா நீங்க வந்து என்னை காப்பாத்தினது பெரிசா இருந்தது எனக்கு. ஆனா நீங்க கட்டிய மனைவியை இப்படி துரத்திவிட்டது எனக்கு அதிர்ச்சியா இருக்கு. இந்த உங்க மறுபக்கம் டார்க்கா இருக்கே. நீங்க ஒரு சாடிஸ்ட் மாதிரி இருக்கு.” என்றாள் அவள். காப்பியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த அஸ்ரத் டி. வி ஆன் செய்தாள். அவன் உடனே டிவி யை அணைத்தான். அவன் ரொம்பவும் டிஸ்டர்ப் ஆகி கேட்டான்......
“அஸ்ரத்.....இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. உனக்கு என் வலி தெரியுமா? மேலோட்டமா பேசறது நியாயமா?”
“ரெண்டு குழந்தைகள். அதுவும் டுவின்ஸ். எப்படி வேண்டாமுன்னு துரத்த முடிஞ்சுது.? குழந்தைகள் என்ன பாவம் செஞ்சாங்க?”
“குழந்தைகள் பாவம் செய்யலை. திருமணம் தாண்டிய உறவில் பிறந்த குழந்தைகள். எப்படி ஏத்துக்க முடியும்?”
அஸ்ரத் கண்களில் கோபம் எரிந்தது.
“ஸ்ரீ சார். என் உறவுகள் மத்தியில் நான் நிறைய இந்த பிரச்சனையை பார்த்திட்டேன். பெண்கள் மேல் சுலபமா சீப்பா சேத்தை வாரி வீசி, அவள் யார் கூடவோ உறவில் இருக்கான்னு சொல்லி அவமானப்படுத்தும் அசிங்கம்.....என்னால் ஜீரணிக்க முடியலை. நீங்களும் அந்த லிஸ்ட்டில் இருக்கீங்கன்னு நினைச்சால் என் மனசு வலிக்குது.”
ஸ்ரீ வெடுக்கென்று எழுந்து கொண்டான். ஒரு அழகிய பாதுகாப்பான கூட்டை அவன் அவளுக்கு அமைத்துக் கொடுத்திருக்கான். அவள் தாராளமாக மூச்சு விட சௌகரியம் பண்ணி இருக்கான். அழகும , இளமையுமாக இவன் அருகே கூட இருந்தும், ஒரு நாள் கூட சபலப்பட்டு அவள் மேல் அவன் கை வைத்ததில்லை. அசிங்கமாக ஒரு பார்வை பார்த்ததில்லை. தன் நகம் கூட அவள் மேல் பட்டதில்லை.......அப்படி இருந்தும் என்னை சாடிஸ்ட் என்கிறாள். பெண்களே நன்றி கெட்டவர்கள்.....” தன் மேல் சுய இரக்கம் வர, அவன் உள்ளம் சோர்ந்தது. சசி ஒரு நாள் கூட அவனை இவ்வாறு அவமானப் படுத்தியதில்லை. கடைசியாக வந்த போது கூட நான் வேண்டும் என்று தானே அழுதாள்? என்னை மன்னிக்கத் தயாராக இருந்தாள். இந்த ராபர்ட் தான் அவளை மயக்கி வலையில் விழ வைத்து, என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டான்.
இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. அஸ்ரத் கடைசியில் அவனிடம்
“கோபமா சார்? நான் சாடிஸ்ட் என்று சொன்னது தப்பு தான். ஆனா கட்டிய மனைவியை நம்பாம பழி போடுவது ஆண்மைக்கு அழகல்ல தெரியுமா.?”
அவன் பதில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“இன்னும் சில நாட்களில் நான் வேலைக்குப் போகப் போறேன். கிளம்பும் நேரம் வந்துவிட்டது. எனக்கு ஒரு நல்ல வழி காட்டியதை நான் மறக்க மாட்டேன். உங்க வாழ்வும் நல்லா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். “
“அதுக்கு.?....என்னை வேறு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியா.? சசியை அவள் தவறோடு ஏத்துக்க நான் தயார். அந்த அவளின் குழந்தைகளுக்கும் நான் தந்தையாக இருக்கத் தயார். ஆனா அவள் தவறை அவள் ஒத்துக் கொள்ளட்டும்.......”
“இது தான் சாடிசம். அவங்க செய்யாத தவறுக்கு நீங்க கொடுக்கும் தண்டனை இது. அவங்க தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை.” அழுத்தமாக சொன்னாள் அஸ்ரத். அவனிடம் விகல்பமின்றி பேச அவளால் எப்படி முடிந்தது? அவள் கண்ணில் அவனைக் காயப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு இல்லை......மாறாக அவன் நெஞ்சில் ஒரு புரிதலை ஏற்படுத்த நினைக்கும் நோக்கம் தான் இருந்தது. அவனுக்கும் அந்த நோக்கம் மெள்ள உள் இறங்குவது போலவே தோன்றியது. அவன் சமாதானமாக கேட்டான். .
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே அஸ்ரத்.? நான் ஒன்றும் அரக்கன் இல்லை. தவறுகளை மன்னிக்கும்....”
“இருங்க. குறுக்கே பேசறதுக்கு மன்னிக்கனும். சசி நீங்க சொல்றா மாதிரி தவறு செய்தவங்களா இருந்திருந்தா, இங்கே வந்திருக்கவே மாட்டாங்க. உங்க மேலே காதல் இல்லாவிட்டால், இப்ப கூட வந்திடுங்க என்று சொல்லியிருக்க மாட்டாங்க. ஒரு பெண்ணின் உள்ளம் ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும். கண்கள் பொய் சொல்லவில்லை. நாக்கு நாடகம் ஆடவில்லை...குழந்தைகள் உங்க குழந்தைகள் தான் என்பதில் ஐயம் இல்லை. சோலையை விட்டு விட்டு எதுக்கு பாலையில் இருக்கீங்க.?”
“நான் அந்த தூய்மையை உணரவில்லையே......”
“தாமரை இலை தண்ணீர் போல், உங்க மனைவி என்கிற ஆதிக்கம் இல்லாமல் தனித்து நின்று பாருங்க. உங்க நெஞ்சுக்கும் அந்த உண்மை புரியும். சீதையை புரிந்து கொள்ள ராமனாலேயே முடியவில்லை என்றால் .....உங்களால் மட்டும் எப்படி முடியும்.?” சொல்லிவிட்டு அவள் உள்ளே போய் விட்டாள். எவ்வளவோ தரம் அவன் அம்மா தூவிய விதைகள் தான்
இது. அவனுக்குள் இதுவரை அது வேலை செய்யவில்லை. காரணம் அவன் அம்மா, அவனை விட சசியை அதிகம் நேசித்ததால், பாரபட்சம் என்கிற எல்லைக்குள் அந்த விதைகள் விழுந்து, வேர் பிடிக்காமல் போயிற்று. அம்மா சொல்லும் போது மனசு பாதித்தது. இவள் சொல்லிய போது மனசு சுவாசித்தது. இதயம் வேலை செய்ய ஆரம்பித்தது.
ஒரு டாக்டர் வியாதியை பற்றி ஒரு கருத்து சொல்லும் போது ஏற்காத மனசு, இன்னொரு டாக்டரிடமிருந்தும் அதே கருத்து சொல்லப்படும் போது, அதன் உண்மைத் தன்மை நிஜம் தானோ என்று சிந்திக்கத் வைக்கிறது. அஸ்ரத் சொல்லியது அந்த வகையை சேர்ந்தது தான். பென்டுலம் இரு பக்கமும் ஆடுவது போல் அவன் மனம் மாறி மாறி யோசித்தது. இரவு பன்னிரெண்டு மணியில் ரெண்டு முள்ளும் ஒண்ணு சேர்ந்த நேரம், அவன் இரு மன கொள்கை ஒன்றானது. ஆட்டம் முடிந்து அவன் ஒரே சீராக முடிவுக்கு வந்தான். எஸ்...சசி மேல் தவறு இல்லை.
அஸ்ரத் யு ஆர் ரைட் மை டியர்.....அவனுள் மெள்ள உற்சாகம் கறை புரண்டது. சசிக்கு மெசேஜ் அனுப்பினான்.
“சசி உன்னை பார்க்கக் விரும்பறேன், என் குழந்தைகளை.....ஸாரி நம்ம குழந்தைகளை பார்க்கணும். நாம சேர்ந்து வாழலாமா.? நான் இனி உன் பக்தன். உன்னை ஆராதிக்கும் நேசன்.. புரிந்து கொள்வாயா சசி.? மன்னிக்க மாட்டாயா?” இந்த வரிகள் அவனுக்கு இயல்பாக வந்தது. யோசித்து யோசித்து அவளை இம்ப்ரஸ் பண்ண கோர்த்த வாக்கியம் அல்ல. அவன் நம்பிக்கையோடு காத்திருக்கிறான்.....அன்று நன்றாகத் தூக்கினான். ..
தேடல் தொடரும்
.

Last edited: