என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ---3
விஜி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். குழந்தை ரித்வி தொட்டிலில் கத்திக் கொண்டிருந்தது.
“விஜி என்ன நீ பாட்டிலே கிளம்பிட்ட.. பிள்ள அழுது பார். சமாதானப்படுத்திட்டுப் போ...” என்றாள் மாமியார் ருக்மணி. தமிழரசன் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு.......
“நீ கிளம்பு விஜி. நான் பார்த்துக்கறேன் ..” சொன்னதோடு அல்லாமல் அவனே குழந்தையை எடுத்து ஜோ ஜோ என்று சமாதானப்படுத்துகிறான். குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டுத் தான் தொட்டிலில் போட்டிருந்தாள்.. அதற்குள் வழக்கம் போல அது வீல் என்று கத்த ஆரம்பித்துவிட்டது. விஜி போவதா வேண்டாமா என்று தயங்குகிறாள்.
“ஏண்டா நீ ஆபீஸ் போக வேண்டாமா.? அவளை வேலையை விடச் சொல்லுன்னா நீ கேக்க மாட்டேங்கற.” புலம்பலை ஆரம்பித்தாள் ருக்மணி.
“விஜி நீ கிளம்பு. லேட்டானா மேனேஜர் கத்துவான். பிளீஸ் கோ..ஏற்கனவே நிறைய லீவ் எடுத்திட்ட” அவன் சத்தம் போடவும் அரை மனதுடன் அவள் துளிர்த்த கண்ணீரை புறங் கையால் துடைத்துக் கொண்டே தெருவில் இறங்கினாள். டாக்டரிடம் குழந்தை ஏன் இப்படி சதா கத்திக் கொண்டிருக்கிறான் என்று கேட்டாள் விஜி. டாக்டர் பிரேமா அவளை பார்த்து நிதானமாக சொன்னாள். “பயப்பட வேண்டாம்.....சில
குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் காலிக் பிரச்சனை தான் இதுக்கு காரணம். நாளடைவில் சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்..” என்று சொல்லி அனுப்பிவிட்டாள். தினம் தினம் போராட்டமாக இருக்கிறது. தாங்க முடியாமல் தான் அவள் சசியிடம் முறையிட்டாள். சசியிடம் பேசிவிட்டு வந்த பின் தமிழ் மிகவும் தெளிவாக அவளிடம் பேசினான். “விஜி.. சசி சொன்ன ஐடியா படி நான் சந்திரா ஆன்ட்டியை குழந்தையை பார்த்துக்க ஏற்பாடு பன்னிடறேன். அதுவரை சமாளிப்போம். நீ வேலையை விட வேண்டாம்.”
விஜிக்கு ஒரு முடிவு வந்ததே என்று நிம்மதி ஏற்பட்டது உண்மை தான். ஆனால் கிளம்பும் போது குழந்தையின் அழுகையை கேட்டுக் கொண்டே போவது மனசை என்னவோ செய்தது. அவள் கூட வேலை பார்க்கும் அனுராதாவும் கை குழந்தைக்காரி தான். குழந்தை அது பாட்டுக்கு இருக்கு. மாமியார் நல்லா பார்த்துக்கறாங்க என்று சொல்கிறாள். அவளுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிக்கல்? வேலையை விட அவள் தயாராக இருந்தாள். குழந்தையை விடவா வேலை முக்கியம்? ஆனால் தமிழ் அதற்கு சம்மதிக்கவே இல்லை.
“சொல்றேன்னு தப்பா நினைக்காதே விஜி. எனக்கு எதனா ஆச்சுன்னா நீ என்ன பண்ணுவே? இப்ப உள்ள கஷ்டத்தை வச்சு எதையும் தீர்மானிக்க கூடாது. பியூசர்லே என்ன நடக்குமோ? அதுக்குத் தான் சொல்றேன்.”
அவன் அப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. நன்றாக இருந்த அவன் தந்தை பெருமாள் திடீரென ஸ்ட்ரோக் வந்து வேலை பார்க்க முடியாமல் போய்விட்டது. அப்பொழுது அவனுக்கு இருபது வயது. அவன் மேலே படித்து ஒரு வேலையில் அமர நான்கு ஆண்டுகள் பிடித்தது. அந்த நான்கு ஆண்டுகள் அவர்கள் பட்ட துயர் கொஞ்ச நஞ்சம் இல்லை. பண பற்றாக் குறை. தந்தையின் வைத்திய செலவு, வீட்டு செலவு என்று விழி பிதுங்கியது. வேறு வழியில்லாமல் சொந்த வீட்டை விற்று நான்கு வருடம் ஓட்டினார்கள். அவனுக்கு வேலை கிடைத்தவுடன் அவன் செய்த முதல் வேலை லோன் போட்டு ஒரு வீடு வாங்கியது தான். இப்பவும் அவன் அப்பா பெருமாள் வீட்டோடு இருக்க வேண்டிய கட்டாயம். வீட்டுக்குள் நடமாடிக் கொள்கிறார். பிஸியோதிரப்பி மூலம் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. அப்பாவை அவன் கண் போல பார்த்துக் கொண்டான். அவர் அதிகம் பேசுவதில்லை. சக்கர நாற்காலியிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்தது பிஸியோதிரப்பி தான். அவரால் இப்ப தொந்தரவு ஏதும் இல்லை. ருக்மணி அவர் தேவைகளை இத்தனை வருடங்கள் கவனித்து அலுத்துப் போயிருந்தாள். இதில் குழந்தையை கவனிக்க வேண்டும் என்றால், அது அவளுக்கு மலைப்பாக இருந்தது.
குழந்தை ரித்விக் அப்பாவின் தோளில் தூங்கிவிட்டது. குழந்தையை தொட்டிலில் போட்டான். ருக்மணி மகனுக்கு டிபன் எடுத்து வைத்தாள்.
“இத பாருடா.. உன் அப்பாவுக்கு நேர நேரத்துக்கு மருந்து கொடுக்கறது, சாப்பாடு ஊட்டி விடறதுன்னு எனக்கு ஒரு வளர்ந்த குழந்தை இருக்கு. இந்த லட்சணத்தில் நான் பேரனை எப்படி பார்த்துக்க முடியும்? விஜி நல்ல பொண்ணு தான். அலுவலகத்துக்கு போறதுக்கு முன்னே எல்லா சமையல் வேலையையும் முடிச்சிட்டு தான் போறா. ஆனாலும் என்னால் ரெண்டு பேரையும் பார்த்துக்க முடியலை டா. ஆள் வச்சா நான் அதுகளோட வேற அல்லாடனும். தயைசெய்து விஜியை வேலையை விடச் சொல்லு.”
“அம்மா....சசி ஒரு ஐடியா கொடுத்தா. அதன்படி சந்திரா ஆன்ட்டியை உதவிக்கு கூப்பிட்டு இருக்கேன். அவங்களும் வரேன்னு சொல்லியிருக்காங்க. குழந்தைக்கு நல்லாயிடும்மா. பிளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோ..... எனக்காக.” சொல்லிவிட்டு அவன் உடை மாற்ற சென்றுவிட்டான். ருக்மணிக்கு சந்திராவை பிடிக்கவே பிடிக்காது. அவளுக்கு வாய் ஜாஸ்தி. அவளோடு எப்படி? ஷூ மாட்டிக் கொண்டிருந்த மகனிடம் அவள் தவிப்புடன் சொன்னாள்..
“அந்த வாயாடி வேண்டாமடா. அவளோடு மல்லுக்கு நிக்க என்னாலே முடியாது. சரி வேற வேலைக்காரி பார்.... வேண்டாம் நானே பார்க்கிறேன்.”
“அம்மா....நான் ஏற்கனவே சொல்லியாச்சு. நீ வேற குட்டையை குழப்பாதே.. எனக்கு நிம்மதியே இல்லை. போறும். இந்தப் பிரச்சனையை இதோட விடுவியா? சும்மா நை நைன்னுட்டு. நான் வீட்டிலே இருக்கணுமா வேண்டாமா? வெறுப்பேத்தாதே....புள்ள மேல உனக்கு அக்கறை இருந்தாதானே? எதுக்கும் சம்மதிக்கலனா நான் என்ன தான் செய்யறது? என் பொண்டாட்டி வேலைக்கு போகக் கூடாது. நான் நல்லாயிருக்கக் கூடாது. இது தானே உன் ஆசை?. அப்படின்னா சொல்லு நான் அவளை
வேலையை விடச் சொல்றேன். எனக்கும் ஸ்ட்ரோக் வந்தா இந்த வீட்டையும் வித்திடலாம். ஓ. கே தானா?”
“என்னடா இப்படி பேசறே? நான் அப்படி நினைப்பேனா?” ருக்மணி துக்கம் நெஞ்சை அடைக்க சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குழந்தை வீல் என்று கத்த ஆரம்பித்தான். அதே சமயம் பெருமாள் “ருக்கு ருக்கு” என்று அலற, தமிழ் கோபத்துடன் பைக்கை உதைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். ருக்கு ரெண்டு குழந்தைகளுள் யாரை முதலில் கவனிக்க என்று அழுகையின் ஊடே நினைத்தாள். அவளுக்கு சசியின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவள் யார் நம்ம வீட்டு விஷயத்தில் தலையிட?. கணவனை சமாளித்து....பேரனையும் ஒருவாறு சமாளித்த பின் அவள் சசிக்கு ஃபோன் செய்தாள்.. அவளுக்கு சசியை தெரியும். தமிழும் விஜியும் கல்யாணம் செய்து கொண்ட புதிதில் வந்து வாழத்திவிட்டுப் போயிருக்கிறாள். அவ்வப்போது போனில் பேசியிருக்கிறாள். சசியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தாள் ருக்கு. ஆனால் இப்பொழுது அவளுக்கு சசி மேல் பயங்கர கோபம். தமிழ் இவள் அனத்தல் தாங்காமல் விஜியை வேலையை விடச் சொல்றேன்னு தான் சொல்லிட்டு இருந்தான். இவள் பேசி தூண்டிவிட்டப் பிறகு தான் அவன் அடியோடு மாறிட்டான்==இது தான் ருக்குவின் கோபத்திற்கு காரணம்.
சசி, மாமியார் பார்கவிக்காக அருகில் உட்கார்ந்து வாரியாரின் கம்பரசம் என்ற நூலை படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். ஃபோன் அடித்தது.
“ஹலோ.... “ என்று சொல்லிக் கொண்டே, மாமியாரிடம் விஜியின் மாமியார் என்று மெல்ல சொன்னாள். ஸ்பீக்கரில் போட்டாள்.
“சசி.. உன்னால் சும்மாவே இருக்க முடியாதா? என் குடும்ப விஷயத்தில் நீ ஏன் தலையிடறே? உன் வேலை என்னவோ அதை நீ பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தானே? விஜி உன் தோழிங்கறதுக்காக அவள் மனசை கலைப்பியா? இது என்ன சொந்த விவகாரம். நீ நாட்டாமை செய்யத் தேவையில்லே. அதென்ன என் மகனோட உனக்கு பேச்சு? அதுவும் தனியா ரெஸ்டாரென்டில்? என்ன? அவனை கைகுள்ள போடப் பார்க்கறயா? குடும்பப் பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கணும். வேத்து ஆம்பளை கிட்டே என்ன மணிக்கணக்கா பேச்சு? அவ்வளவு தான் உனக்கு மரியாதை.”
பார்கவி இந்த பேச்சைக் கேட்டு கொதித்துப் போனாள். சசியிடமிருந்து போனை பிடுங்கி பேச ஆரம்பித்தாள்......
“ஹலோ.. நான் சசியோட மாமியார் பேசறேன். என் மருமகளை பத்தி வாய்க்கு வந்தபடி பேசறீங்க. கேக்க ஆள் இல்லேன்னு நினைப்பா? உங்க மகனை அவள் தன் சகோதரனா, தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசானா தான் பார்க்கிறா. உங்க பார்வையிலே தான் விஷம். வார்த்தையை அளந்து பேசுங்க. நாங்களும் கௌரவமான குடும்பம் தான். உங்களை மாதிரி அநாகரீகமா நடந்துக்க மாட்டோம். இனிமே ஏதாவது என் மருமகளை பத்தி பேசினீங்க நான் பொல்லாதவள் ஆயிடுவேன் ஜாக்கிரதை.. வையுங்க போனை..” படபடவென்று பேசியதால் பார்க்கவிக்கு மூச்சு இரைத்தது. அவள் கோபம் இன்னும் தனியவில்லை
“அத்த..எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? ஏதோ கோபத்திலே பேசறாங்க. விடுங்க. கோபம் தனிஞ்சதும் சரியாயிடுவாங்க. விஜி ஃபோன் செஞ்சா. அவ கணவர் சந்திரான்னு ஒரு அம்மாவை ஏற்பாடு பண்ணிட்டாராம். அவ்வளவு தான் நமக்கு வேணும்..” சிரித்துக் கொண்டே சசி சொன்னாள். பார்கவிக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை.
“எப்படி பேசறாங்க பாரு?. வாய் கூசாம அசிங்கமா பேசறாங்க. அது தான் என்னாலே தாங்க முடியலை. மனுஷாளோட புத்தி போகுது பார். தனக்கு ஒரு பழி வந்தா அடுத்தவங்களை வாய்க்கு வந்தபடி தரக் குறைவா பேசறது. ஒரு பெரிய மனுஷியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கலை. நீ வருத்தப்படாதே சசி. அவங்க சொன்னதை மனசிலே வச்சுக்காதே ....நிம்மதியா கம்பரசம் படிச்சிட்டு இருந்தோம். அதுக்குள்ளே இந்த ஆபாசம்.” கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு எழுந்து கொண்டாள் பார்கவி. சசி புத்தகத்தை அடயாளமிட்டு மூடி வைத்தாள்.
“ஸ்ரீ வரும் நேரம்.. காபியை போடறேன்..” என்றபடி மாமியார் அடுக்களைக்குள் போக, சசி தன் அறைக்குப் போய் முகத்தை கழுவிக் கொண்டாள். பச்சைத் தண்ணியை முகத்தில் அடித்ததும் கொஞ்சம் மன சூடு தணிந்தது. நாம் என்ன அப்படியொரு தப்பு செஞ்சிட்டோம்? விஜியின மாமியாருக்கு ஏன் இவ்வளவு கோபம்? நீ இனி தலையிட வேண்டாமுன்னு சொன்னா கூட பரவாயில்ல.....அது என்ன வார்த்தை? அவனை கைக்குள்ள போட பார்க்கிறயா? அவ்வளவு சீப்பா என்னை எடை
போட்டிட்டாங்களே.......ஒருவேளை நான் தலையிட்டிருக்கக் கூடாதோ? ஸ்ரீ சொன்னது தான் சரியோ? ஆனா விஜியை பார்த்தா பாவமா இருந்துச்சே. அவள் துண்டால் முகம் துடைத்துக் கொண்டு பொட்டு வைத்துக் கொள்ள.வும், ஸ்ரீயின் பைக் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. அவள் உற்சாகத்துடன் அவனை வரவேற்க ஹாலுக்கு வந்தாள்.
ஸ்ரீ வரும்போதே கோபத்துடன் வந்தான். பிரீப் கேஸை சோபாவில் எறிந்தான். கண்கள் சிவந்திருந்தது.
“என்னாச்சு? கோபமா இருக்கீங்க போல..” சிரித்தபடி கேட்டாள்.
“சிரி.. அதான் உன் பொழப்பே சிரிப்பா இருக்கே..” என்றான். சசி முகம் வாடினாள். என்ன சொல்கிறார் இவர்?
“என்னங்க? நான் என்ன செஞ்சேன்? என் பொழப்பு ஏன் சிரிச்சு கிடக்கு?”
பாண்ட் பாக்கட்டிலிருந்து தன் போனை எடுத்தான். அதில் பட்டனை அழுத்த, சீறிக் கொண்டு வந்தது ஒரு குரல்....ரெக்கார்ட் பண்ணி வச்சிருப்பான் போல.....
“ஏம்ப்பா உன் பொண்டாட்டிக்கு வேற வேலையே இல்லயா? என் வீட்டு விஷயத்தில் அநாவஸ்யமா தலையிடறா. சொல்லி வை. இல்லே வேற மாதிரி ஆயிடும். என் மகனை ரெஸ்டாரென்ட்டுக்கு கூட்டிப் போய், பேசி மயக்கி, என் மருமகளுக்கும் எனக்கும் சிண்டு முடிஞ்சு விட்டிருக்கா. இதிலே உன் அம்மாவுக்கும் பங்கு. ரெண்டு பேரையும் வாயை அடக்கி வச்சுக்க சொல்லு. சீ குடும்பப் பொண்ணா அவ? கண்டிச்சு வை புரியுதா?”
விஷ சொற்களை உமிழ்ந்து விட்டு ஃபோன் சைலெண்ட் ஆனது. ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை. சசி ஷாக்கில் இருந்ததால் அவளுக்கு பேச்சே வரவில்லை. ஸ்ரீ கோபத்தில் இருந்ததால் அவனுக்கும் பேச்சே வரவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்க, சூடான காப்பியுடன் அங்கு வந்தாள் பார்கவி.
“இந்தாடா காப்பி. சூடு ஆறிடப் போவுது குடி..”
“காப்பியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். உன் மருமகளை பத்தி ஊரே சிரிப்பா சிரிக்குது. எல்லாம் நீ கொடுக்கிற இடம்.... “ காப்பி டம்பளரை தட்டி விட்டான். அது சசியின் மேல் பட்டு, அவள் முன் பக்கப் புடவை காப்பி அபிஷேகத்தில் நனைந்தது. ஆ என்று சூடு பொறுக்காமல் கத்தினாள் சசி. பார்கவி சத்தம் போட்டாள். “அறிவிருக்காடா உனக்கு? அந்த பொம்பளை என்னவோ கத்திச்சுன்னு இங்க வந்து குதிக்கிறே? ஒரு ஆம்பளையோட பேசினா உடனே தப்பு தப்பா பொண்ணை பேசறதா? உன் பொண்டாட்டி மேலே உனக்கு மரியாதை வேண்டாம்.? அந்தம்மா மேல் கோபப்படறத விட்டிட்டு இவளை மட்டம் தட்றது என்னடா நியாயம்? சசி நீ போய் புடவையை மாத்து. டேய்....நீ உன் மனசை மாத்து.... “
அங்கு அசாதாரண அமைதி நிலவியது
தேடல் தொடரும்.
.