என்னைத் தேடும் நான்
அத்தியாயம்== 4
சசி முன்னால் உள்ள பால்கனியில் உட்கார்ந்திருந்தாள். இளவேனில் காலம். சாயங்கால வானம் பொன் நிற வர்ணங்களோடு புது அழகில் மின்னியது. அதன் மஞ்சள் கலந்த செவ்வண்ண ஒளி அவள் முகத்தில் பட்டு அவளை மேலும் அழகாக்கியது.
அவள் எதை பார்த்துக் கொண்டிருக்கிறாள்? வானத்தையா? அங்கு வி வடிவில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளையா? இல்லை, மினுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களையா? எதையுமே இல்லை. விஜியின் வார்த்தைகளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
“சசி.....உனக்கு நன்றி சொல்லவேண்டிய அதே நேரத்தில், இனி நீ என் கணவரோடு பேசாதே என்றும் சொல்ல வேண்டி இருக்கு. ஒரு சுனாமியாக என் மாமியார் உங்கள் இருவரையும் திட்டியதை என்னிடம் பெருமையாக சொன்னார். அப்ப தான் நான் புரிந்து கொண்டேன் உன்னையும் உன் மாமியாரையும், தன் கத்தி போன்ற வார்த்தைகளால் அவர் காயப்படுத்தி இருக்கார் என்று. சசி என் மாமியார் சார்பா நான் மன்னிப்பு கேக்கறேன். இனி நீ என் கணவரோடு பேசி, அவரின் வசை சொற்களை கேட்டு அருமை கெட வேண்டாம். ஒரு நல்ல செய்தியும் கூறுகிறேன். என்னிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்த என் கணவர், சாந்தமாகிவிட்டார். பொறுப்பு அவரிடம் தான் இருக்குன்னு நீ புரிய வச்சிட்ட. அதுக்காக நான் உனக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து உன்னை கௌரவப்படுத்தணும்னு ஆசையா இருக்கு. ஆனால் வீட்டில் பொன் விலங்கு பூட்டியது போல, ஒரே நேர் கோட்டில் வளய வரவேண்டி இருக்கு. மாணவிகளாய் நாம் அனுபவித்த பொற்காலம சுதந்திரம் போய்விட்டது. சூழ்நிலை கைதிகள் ஆகிவிட்டோம். பசுமை நிறைந்த நினைவுகளே ன்னு பாடத்தான் முடியும்.. சந்திரா அக்கா வந்தாச்சு. அவங்களுக்கு குழந்தைகளை எப்படி பார்த்துக்கணும்னு நல்ல தெரியுது. ரித்விக் அவங்க கிட்டே சமர்த்தா இருக்கான். மீண்டும் உனக்கு நன்றி சசி...லவ் யு டா..
என்று அவள் மெசேஜ் அனுப்பி இருந்தாள். இருவேறு உணர்வுகளில் சிக்கித் தவித்தாள் சசி. சந்திரா என்னும் மனுஷி வந்து விஜிக்கு ஒரு தீர்வை கொடுத்தது சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் விஜி மாமியாரின் கடும் அதிகார ஆட்சியில் சுருண்டு இருக்க வேண்டியுள்ளதே என்று வருத்தமாகவும் இருந்தது. எல்லோரும் சசியின் மாமியார் போல இருந்துவிட முடியுமா? சசி நீ கொடுத்து வைத்தவள் தான். என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் சசி. மாமியார் பார்கவிக்கு கம்பரின் பாடல்களை படித்துக் காட்டுவது சசிக்கு பிடித்தமான ஒரு விஷயமாக இருந்தது. அவளும் அதன் மூலம் நிறைய தெரிந்து கொண்டாள். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான். கவிதையாக படிக்கும் போது, அதன் அழகும், தீந்த தமிழும், உவமையும் படிக்கப் படிக்க கம்பரின் எழுத்தின் மேல் ஒரு மோகமே வருகிறது.
ராமன் காட்டுக்கு போக வேண்டும், இதை தான் சொன்னால் ராமன் கேட்பானோ மாட்டானோ என்ற பயத்தில் கைகேயி இது மன்னவன் கட்டளை என்று கூறுகிறாள். “கடல் சூழ் உலகம் முழுவதும் பரதன் ஆள வேண்டும், நீ பதினான்கு ஆண்டுகள் சடை முடியோடும், மரவுரியுடனும் வெப்பமான கானகம் போக வேண்டும். இது அரசனுடைய கட்டளை” என்கிறாள். ராமன் தந்தை சொல் மீற மாட்டான் என்று தெரிந்து ராமனை பிளாக் மெயில் செய்கிறாள் என்று நினைப்போம். ஆனால் ராமர் இதை எப்படி எதிர் கொள்கிறார்.?
“மன்னவன் பணியன் றாகில்
நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியேன் பெற்ற தன்றோ?“
என்று எந்த சஞ்சலமும் இல்லாமல் முழு மனதோடு சொல்கிறான். அதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும்? கைகேயி சொன்னதைக் கேட்டு, அவன் முகம் “அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா” என்று சொல்கிறார் கம்பர். அவள் மாமியாரிடம் கேட்டாள்....
“எப்படி இது சாத்தியம் அத்த? நம்ப முடியலையே? பட்டாபிஷேகம் என்று முடி சூட தயாராகிக் கொண்டிருக்கும் நேரம், நீ காட்டுக்குப் போனும்ன்னு சொன்னா.. யாருடைய முகம் இப்படி அப்ப மலர்ந்த செந்தாமரை போல மலரும்? ராமர் மனுஷ அவதாரம் தானே? அப்படியிருக்க கோபம் வராமல் சந்தோஷம் அடஞ்சதா கம்பர் சொல்றது பொருத்தமா இல்லையே?” என்றாள் சசி. மாமியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்தாள் சசி.
பார்கவி சிரித்தார். சொன்னார்.. “நீ இப்போ உள்ள அரசியலை மனசில் வச்சு சொல்றே. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தன் பதவி முக்கியம் இப்போ உள்ள அரசியல்வாதிக்கு. கொள்ளை அடிச்சிட்டு, பழியை மக்கள் மேல் போட்டு, பேராசை பிடிச்ச தலைவர்கள் வாழும் நாடு இல்லை கம்பர் காட்டும் கோசல நாடு. போன்னு மக்கள் சொன்னாலும் பதவி நாற்காலியை விட்டுக் கொடுக்காத அரசியல் இப்போ உள்ள அரசியல். மக்கள் வேணும் வேணுமின்னு சொன்னாலும் பதவி துறக்கும் மனசு ராமருடயது. என் தம்பி பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ ன்னு சொல்ல மனசாட்சி வேண்டும். நாட்டு மக்கள் மேல் அன்பு வேண்டும், அறம் வேண்டும். ராமர், தம்பி பரதன் மேல் உள்ள நம்பிக்கையில் தான் இந்த நாட்டை அவனிடம் ஒப்படைக்க தயாராகி கானகம் செல்கிறார். கேடு கெட்ட தம்பியாக இருந்தால் அப்படி போய்யிருக்க மாட்டாரோ என்னவோ? அதனால் தான், கைகேயி சொன்னதைக் கேட்டு வெகுண்டு எழாமல் சம்மதித்தார். அவர் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல் இருக்க அதுவே காரணம்...”
பார்க்கவியின் இந்த நீண்ட விளக்கம் அவள் மனசை திறக்கும் திறவு கோலாக ஆயிற்று. ராமருக்கு தன் தம்பி மேல் உள்ள நம்பிக்கை தான் காரணம், அரச பதவியை விட்டுக் கொடுக்க என்று பார்கவி சொன்னது அவளுக்கு ஒரு புதிய, புரிந்து கொள்கிற விளக்கமாக இருந்தது.
நம்பிக்கை. அந்த ஒற்றைச் சொல் தான் நல்ல வாழ்கைக்கு ஆதாரம். நாட்டுக்கு பொருந்துவது போல், வீட்டுக்கும் அது பொருந்தும். நல்ல குடும்பம் நடத்த கணவன் மனைவிக்குள் நம்பிக்கை எனும் காற்று வீசிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவள் விஜி—தமிழ் தம்பதிக்கு புரிய வைத்திருக்கிறாள். அந்த சந்தோஷம் போதும், ஆயிரம் ருக்மணிகளின் கடும் சொற்களை சமாளித்து விடலாம். பார்கவி இவ்வளவு தெளிவாக இருக்க கம்பரை படித்தது ஒரு காரணமாக இருக்குமோ என்று நினைத்தாள் சசி. இருக்கலாம்....
சாயங்கால பொன் நிற வானம் கருமையிடத் தொடங்கியது. உள்ளே போய்விட வேண்டியது தான். ஏன்? இருளுக்கு பயந்து ஓடறயா? நாங்க இருக்கோம், என்று நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னத் தொடங்கி செய்தி சொல்லிற்று. நம்பிக்கையின்மை நம்மை தனிமை படுத்தும். நம்புவோம் அதே சமயம் விழிப்புடனும் இருப்போம். யாரை நம்பவேண்டும் என்ற தெளிவில் தான் வாழ்க்கை ஓடுகிறது.
சசி பால்கனியை விட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள். புத்தகம் ஒன்றை விரித்து படித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீ.
“என்ன புக் படிக்றீங்க?” என்று சொல்லி அதன் தலைப்பை படித்தாள். “டிரஸ்ட்” என்ற ஒரு ஆங்கில புத்தககம்.
“நானும் இத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். அந்த புத்தகம் என்ன சொல்லுது? மனுஷனுக்கு நம்பிக்கை தேவைன்னு சொல்லுதா?”
“நம்பி மோசம் போகக் கூடாதுன்னு சொல்லுது.” என்றான் அவன்.
“ஏன் நெகட்டிவ்வா யோசிக்கணும்? நம்பிக்கையும் லவ்வும் இரட்டைப் பிறவிகள். ரெண்டும் சேர்ந்தா தான் அது முழுமை அடையும்.”
“அது மனசாட்சி உள்ளவங்களுக்கு. இல்லாதவங்களுக்கு? தவறான நம்பிக்கை ஆளை கவிழ்த்துவிடும்.“ என்றான். புத்தகத்தை மூடினான்.
“உங்க கிட்டே ஒண்ணு சொல்லணும்..” என்றாள் அவள். தான் சொல்லியதை அவள் புரிந்து கொள்ளவில்லையா? முன்னாள் தமிழ் ஆசிரியருடன் பேசி இவள் அவங்க குடும்ப உறவை சரி பண்ணுகிறாளாம். இதை நம்ப ஆசைப்படறேன்.. மோசம் போயிடுவேனோன்னு பயமா
இருக்கு. அவன் உள் ஒன்று வைத்துக் கொண்டு, புறம் ஒன்றாக சிரித்து வைத்தான். சசி அவனை நம்புகிறவள். காதலிப்பவள். அவன் சிரிப்பை நிஜம் என்று நம்புகிறாள்.
“என்ன சொல்லனும்?” என்றான் விட்டேத்தியாக.
“ஒன்னுமில்லங்க....விஜி பத்தி..”
“என்ன சொல்லப் போறே? நம்பிக்கை ஆனவள்ன்னா?”
“நம்பிக்கையை தேடறவள்ன்னு..”
சசி அவன் அருகே அமர்ந்து அவன் கண்களை பார்த்தாள்.
“நம்பிக்கையை தேட அது என்ன பொருளா? இயற்கையிலேயே ரத்தத்தோடு கலந்திருக்கணும்..”
“விஜி அவள் மாமியாரிடம் நம்பிக்கை விதை விழணும்னு ஆசைப்படறா. சொந்த மகனை அவங்க நம்பலை. அதான் அப்படி பேசிட்டாங்க. அவங்களுக்கு நம்பிக்கை வரும்வரை தமிழரசன் சார் கூட என்னை பேச வேண்டாமின்னு சொல்லிட்டா.....”
அவனுள் சந்தோஷம் பொங்கியது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
“என்ன அநியாயம்? அவளே உன்னை நம்பலையா?”
“சேச்ச.....அவங்க மாமியார் சந்தேகப் பேர்வழி. வாய்க்கு வந்ததை பேசிட்டாங்க. உங்களுக்கேத் தெரியும். என்றாவது அவங்க மனசு மாறலாம். ஆப் தடை சொல்ல மாட்டாங்க இல்லே. நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டீங்க. உங்களுக்கு மத்தவங்க எப்பாய் தப்பா பேசிடக் கூடாதேன்னு தானே பயம்?. புரியுது.”
“ஆமா அதே தான். இப்ப புரிஞ்சுக்கிட்டேன். நீ உன் ஆசிரியரிடம் பேசு. ஒண்ணும் தப்பில்லை..” என்றான் அன்பொழுக. அவளைத் தான் [எசக கூடாது என்று தடை விதித்து விட்டார்களே! அந்தா தைரியத்தில் பெரினகண்மையாக இருப்பது போல காட்டிக் கொண்டான். அவன் வார்த்தைகளை அப்படியே நம்பியவள் “எனக்குத் தெரியும் உங்களைப் பத்தி. நீங்க ஒரு ஜெம்..” என்று அவன் தோளில் சாயிந்து கொண்டாள். ஜெம்.....கண்டவனோடு பேச அனுமதித்தால் ஜெம். என்று மனசுக்குள் அவன் நினைத்தது அவளுக்கு எப்படித் தெரியும்.?
அன்று இரவு சசி நிம்மதியாக தூங்கினாள். தூங்காமல் வெறும் கண்களை மூடி படுத்திருந்தான் ஸ்ரீ. “டேய் ஸ்ரீ நீ படிச்சவன் தானே? இப்படி உன் மனைவியை சந்தேகபடற. உன்னை நினைத்தால் உனக்கே அருவருப்பாக இல்லையா?” அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்டது.
அவளை யாராவது அபேஸ் பண்ணிட்டு போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு..... என்று அவன் வாய் முணுமுணுத்தது. அதிக அன்பும் காதலும் கூட ஒருவன் மனசுக்கு துயரத்தை கொடுக்கும் என்று அவன் உணர்ந்தான். தூங்கிக் கொண்டிருக்கும் சசியை பார்த்தான். சசி கொள்ளை அழகு மட்டுமல்ல.....அவள் சிரிப்பு அழகு. அவள் பேச்சு அழகு. அவள் மனசு அழகு. இத்தனை அழகுடையவளை இந்தப் பொல்லாத போக்கிரி ஆண்களிடமிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்? என்பது தான் அவன் கவலை. வைரத்தை வைடூரியத்தை வங்கி லாக்கரில் வைத்து காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த அஞ்சரை அடி தாஜ்மகாலை எப்படி எந்த வங்கியில் வைத்து பாதுகாப்பது? மனைவியை இறுக அனைத்துக் கொண்டான்.
காக்க வேண்டியது உன் மனசைத் தான் என்று யார் அவனுக்கு புரிய வைக்கப் போகிறார்கள்.?
தேடல் தொடரும்
.