என்னைத் தேடும் நான்
அத்தியாயம்==8
வேலைக்குப் போவது சசிக்கு சந்தோஷமாக இருந்தது. வீட்டில் வளைய வரும்போது அடிக்கடி ஸ்ரீ சொன்ன சொற்களே நியாபகம் வந்தது. என்ன இப்படி சொல்லிட்டார் என்று மனசு சங்கடப்படும். இது சரியாகுமா என்ற கவலை வரும். குழம்பு கொதிக்கும் போதும், வாசலில் காய் வாங்கும் போதும். மாமியாருடன் பேசும் போதும் ஸ்ரீ குற்றம் கண்டுபிடித்து திட்டிய வார்த்தைகளே பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கும்.
“சசி.....என்ன யோசனை? பருப்பு எடுத்து தரச் சொன்னேனே.” என்று பார்கவி கேட்ட பிறகே சுதாரித்துக் கொண்டு சாரி ஏதோ நினைவு அத்த,,,,என்று அசடு வழிந்து விட்டு எடுத்துக் கொடுப்பாள்.
வேலையில் அப்படியில்லை. முழு கவனமும் பார்க்கும் பைலில் இருந்தது. சவாலான வேலை. ஈடுபாடு இல்லாவிட்டால் காலை வாரிவிட்டு விடும். சசிக்கு அந்த கவனம் பிடித்தது. மண்டையில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த எண்ணக் கசடுகள் எங்கோ மூலையில் போய் ஒளிந்து கொண்டன. திருப்தியாக வேலை பார்த்தாள்.
ராபர்ட் தான் அவள் பாஸ். அவளும் அவனும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். அவன் இறுதி ஆண்டு முதுகலை என்றால், அவள் இறுதி ஆண்டு இளங்கலை. அவன் தான் கல்லூரி லீடர் ஆக இருந்தான். கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள் என்று சகலத்துக்கும் அவனிடம் போய் பேர் கொடுக்க வேண்டி இருந்தது. அவளை பேச்சுப் போட்டியில் இழத்து விட்டதே அவன் தான். அவள் முடியவே முடியாது என்று சாதித்தாள்.
“நீ பேசற. நம்ம கல்லூரிக்கு பரிசு வாங்கித் தர. உன்னால் முடியும்.” என்று சொல்லிவிட்டான். அனைத்து கல்லூரியும் கலந்து கொண்ட அந்த நிகழச்சியில் அவள் தான் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றாள்.
“எப்படி ராபர்ட், நான் பரிசு வாங்குவேன்னு உனக்குத் தோணுச்சு.? எனக்கு நம்பிக்கையே இல்லை. மேடை ஏறியதும் எனக்கு நடுக்கம் ஆகிவிட்டது. கூட்டத்தில் உன் முகம் பார்த்தேன். உனக்கு ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. பிரிப்பேர் பண்ணியதை மனதில் இருத்தி பேசிட்டேன். உனக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.” மூச்சு விடாமல் அவள் பேசினாள்.
“ப்பா.......முடிச்சிட்டியா? நீ ஒரு நாள் உன் சினேகிதிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தியே......”
“ஆமாம். நாலு பேர் கிளாசுக்கு வரலை. அந்த சமயம் நடந்த பாடத்தை அவங்களுக்கு நடத்திக் காட்டினேன். அதில் என்ன?”
“உன் பேச்சுத் திறன் அங்கே தான் ஸ்டார்ட் ஆகிடிச்சு. உன்னால் முடியும்னு நான் நம்ப அது தான் காரணம். சரியா போச்சு தானே?”
அவள் வியந்து போனாள். அவன் இப்படித் தான் திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பான். மாணவ மாணவிகளை கூர்ந்து கவனித்து திறமைகளை கண்டு பிடிப்பான். லீடர்னா சும்மாவா? அப்சர்வேஷன் பவர் இருக்கணும், அப்ப தான் கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும் என்பான்.
இப்பொழுது அவன் அவளின் திறமையை வெளிக் கொணரும் விதமாக வேலைகள் கொடுத்தான். சசி ஒரு புது உலகத்துள் நுழைந்தாள். அவள் அறிவுக்கு வெளிச்சம் தரும் நியமனங்கள், யுத்திகள் வந்து அவளை ஆச்சர்யப்படுத்தியது. அவள் அவளாக உணர்ந்தாள். ஸ்ரீ போட்ட கோட்டுக்குள் இருந்து அவள் விடுபட்டாள்.
ராபர்ட்டுக்கும் அவளுக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான நட்பு உருவாகியது. அவள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை அவள் தோற்றத்துக்கு கிடத்த அங்கீகாரமாக கொச்சைப்படுத்தி பேச மற்ற பெண்கள் தவறவில்லை. அவள் கண் கலங்கினாள்.
“சசி.....இதெல்லாம் சகஜம் தான். பேசறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. இந்தக் காதிலே வாங்கி அந்தக் காதிலே வீட்டிடனும். மனசை போட்டு குழப்பிக்காதே. நீ நீயா இரு. சரியா?” என்று ராபர்ட் சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும் ஷாலினி என்ற பெண் அவளை அடிக்கடி வம்புக்கு இழுத்து பேசி அவள் மனசை புண்படுத்துவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் லஞ்ச பிரேக்கில் சசி தன் லஞ்ச பாக்ஸை எடுத்துக் கொண்டு ராபர்ட் அறைக்கு போகும் போது ஷாலினி சொன்னாள்.....இல்லை பாடினாள். “பள்ளியறை பெண் மனதில் ஏக்கம் ஏக்கம். பக்கத்தில் துணை இருந்தால் வெட்கம் வெட்கம்....”
அதாவது சசி ராபர்ட்டின் கேபினுக்கு போவதை, பள்ளி அறைக்குப் போகிறாள் என்று டீஸர் விட்டாள். சசி வேகமாக திரும்பி வந்தாள்.
“இப்ப எதுக்கு இப்படி பாடினே? ராபர்ட் நான் படித்த கல்லூரியில் படித்தார். அவர் எனக்கு நல்ல நண்பர். இப்படி கொச்சைப்படுத்தி பாட்டு வேற பாடற. ஷாலினி திஸ் இஸ் டூ மச். ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருக்கவே கூடாதா? படிச்சவ தானே நீ? அசிங்கமா இல்லே?” என்றாள்
“ஹலோ சசி மேடம். நான் சும்மா பிரேக் டைம்ன்னு ஜாலியா பாடறேன். அதுக்கு நீங்க இப்படி அர்த்தம் எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது?”
“நீ என்னைத் தான் குறிப்பிட்டு பாடின. இன்னொரு முறை இப்படி பண்ண நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்றாள் சசி.
“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது சரிதான் போவியா......”
“ஷாலினி. சும்மா இருக்க மாட்டே? உன் சீட்டு கிழிஞ்சிடப் போறது. மேடம் போட்டுக் கொடுத்தா அவ்வளவு தான், நீ காலி.” என்று நளினி கூறி நகைத்தாள். சசி வேகமாக ராபர்ட்டின் அறைக்குப் போகாமல் வெளியில் எதிர் ரெஸ்டொரென்டுக்குள் நுழைந்தாள். தயிர் சாதம் ஆர்டர் பண்ணிவிட்டு உட்காரந்திருந்தாள். சே எப்படி எல்லாம் பேசுகிறார்கள்.? இது நாள் வரை அவர்கள் ஏதோ கூடிக் கூடி பேசுவார்கள் தெரியும். ஆனால் இன்று அப்பட்டமாக அவளை தாக்கியதும் தான் அவளுக்குப் புரிந்தது. இவர்கள் அவளைப் பற்றி நெடு நாட்களாக வம்பு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. தயிர் சாதம் வந்தது. அவள் சாப்பிட தட்டை தன்னருகே நகர்த்திய போது, ஒரு கரம் வந்து அவள் தட்டை இழுத்தது. யார் அது? இங்கும் வந்துவிட்டார்களா? நன்றாக திட்ட எண்ணி அவள் நிமிர்ந்த போது அங்கே ராபர்ட் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
“நானும் உன்னோடு மோர் சாதம் சாப்பிட வந்துவிட்டேன்.” என்றான்.
“உங்களை அவாய்ட் பண்ணத் தான் இங்கு வந்தேன். இங்கும் தொல்லை பண்ண வந்திடடீங்களா?” என்றாள் சலிப்புடன்.
“கூல் சசி. இந்த உலகம் என்ன உன்னை மாதிரி தேவதைகள் நிறைந்த இடமுன்னு நினைப்பா.? நான் பழயது சாப்பிட்டுக் கொண்டிருக்கேன். நீ பாதாம் அல்வா என் கண் முன்னால் சாப்பிடற. நான் சும்மா இருப்பேனா.? எனக்கு அல்வா கிடைக்காத ஆதாங்கத்தில் நீ திருடி தின்கிறேன்னு பழி போடுவேன்......இது தானே மனித குணம்.? இதுக்கு போயி அலட்டிக்கலாமா? அவங்க பேசினது எனக்கும் கேட்டுது. நீ விறு விறுன்னு இங்க ஓடி வந்ததையும் நான் பார்த்தேன். சசி.....நான் உன் பாஸ். உன்னை பாராட்டறேன், உன் கூட நட்பா லஞ்ச ஷேர் பண்ணறேன். அந்தப் பொறாமையில் ஏதாவது முள்ளா குத்திட்டே தான் இருப்பாங்க. நாளடைவில் புரிஞ்சுப்பாங்க. சரி.....இன்னிக்கு என்ன லஞ்ச் கொண்டு வந்திருக்கே.? பிஸி பேளா பாத் கேட்டேனே.” என்றான் சகஜமாக.
“அதான் கொண்டு வந்திருக்கேன். அதுக்குள்ளே கலாட்டா ஆகிடிச்சு.”
“நான் பிஸி பேளா பாத் சாப்பிடறேன் . நீ மோர் சாதம் சாப்பிடு. அது தான் உனக்கு பனிஷ்மெண்ட்” என்றான் விளையாட்டாக. சசியின் மனம் சற்று
சாந்தம் அடைந்தது. இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். படித்த புத்தகம் பற்றி, பார்த்த படம் பற்றி, எழுதிய கவிதை பற்றி என்று அவர்கள் பேச்சில் சுவை இருந்தது. சாப்பிட்டு முடித்து ராபர்ட் பணம் கட்டிவிட்டு வர, இருவரும் வெளியே வந்தனர்.
“சசி பெங்களூர் போக நீ தயார் தானே? அங்கே வெளிநாட்டு பிரமுகர்கள் வராங்க. இந்த டீலை பேசி முடிக்கணும். உன்னோடு பிரேமாவும் வரட்டும். உன்னை மட்டும் அழைத்துக் கொண்டு போனால் அநாவசயமா பேசுவாங்க. நீங்க ரெண்டு பேரும் ஒரு அறையில் தங்கிக்கலாம். நான் வேறு அறை எடுதூக்க கொள்கிறேன். சரி தானே.? இந்த டீல் முடிய நான் உன்னைத் தான் நம்பியிருக்கேன். ஸ்கெட்ச் போட்டு காட்டினே. அது அவங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். கம்பனிக்கு இந்த ஆர்டர் கிடச்சா உனக்கு பிரமோஷன் கிடைக்க சான்ஸ் இருக்கு. நானே உனக்கு மேல் அதிகாரி கிட்டே சொல்லி ரெக்கமண்ட பண்ணுவேன்.” அவன் சொல்லிக் கொண்டே போக, அவள் பின்னோடு சிரித்துக் கொண்டே டன் என்று சொல்லிக் கொண்டு வந்தாள். இருவரையும் சேர்த்து பார்த்து விட்டான் அங்கு வந்த ஸ்ரீ. அங்கேயே ஆனி அடித்தது போல் நின்றுவிட்டான். என்னமாக சிரிச்சுக்கிட்டு போறா? வீட்டிலே என் கூட சிரிச்சு பேசறதே இல்லே. திசை மாறி போறியா டீ.....வீட்டுக்கு வா. இருக்கு உனக்கு..... என்று கருவிக் கொண்டான்.
அங்கு ஒரு கம்பியூட்டர் ரிபேர் ஷாப் இருக்கு. ஸ்ரீயின் ஆபீஸ் கம்பியூட்டர் ஹாங் ஆகிவிட்டது. உடனே ரிப்பேர் செய்ய அவனே அதை எடுத்துக் கொண்டு, ராஜா என்பவனுடன் காரில் இந்தப் பக்கம் வந்தான்.
“என்னங்க சார்......என்ன யோசனை? சீக்கிரம் ரிபேர் பார்க்கணும்னு சொல்லிட்டு பேசாம உக்கார்ந்திருக்கீங்க.” என்றான் ராஜா.
“வந்த இடத்திலே ஒரு துர் தேவதையை பார்த்திட்டேன். சரி சரி நீ போய் சிஸ்டெத்தை கொடு. நான் இதோ வந்திடறேன்.” என்றான். ராஜா கிளம்பிப் போனதும், சசி சென்ற திக்கையே பார்த்துக் கொண்டு நின்றான். தெருவை கடக்கும் போது ராபர்ட் அவள் கையை பிடித்துக் கொண்டு கடந்தான். அவள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று பட்டது. உல்லாச வாழ்க்கை தான் வாழ்கிறாள் போலிருக்கு. என்று அவன் கருவிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு ராஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. வேண்டாவெறுப்பாக அட்டென்ட் பண்ணினான். “என்னடா?”
“சார்.....ரிப்பேர் பண்ண ஆயிரம் ரூபா கேக்கறான் சார். நீங்க கொஞ்சம் வாங்க.” என்று பதட்டத்துடன் கூறினான் ராஜா. கோபம் குறையாத மனதுடன் உள்ளே சென்ற ஸ்ரீ அந்த கடைக்காரனிடம் சத்தம் போட்டு கத்தி சண்டை போட்டான். கொள்ளை அடிக்றீங்க என்று குற்றம் சாட்டினான்.
“என்னா சார் ஓவரா பேசறீங்க? இஷ்டம் இருந்தா கொடுத்திட்டு போங்க இல்லே நடயை கட்டுங்க. பேஜார் புடிச்ச ஆளுங்க எல்லாம் என் கடைக்கு செட் ஆவாது.” என்று கோபமாக கத்தினான் கடைக்கார பாபு. அவனை அடிக்கப் போனான் ஸ்ரீ.
“என்னா.....என்னா சார் கை நீளுது.? ஏதோ பார்க்கக் டீசென்ட்டா இருக்கீங்கன்னு பார்க்கறேன். இல்லே பின்னி பெடல் எடுத்துடுவேன்.” என்றான். ராஜா சமாதானம் பண்ண முயன்றான்.
“விடுப்பா.....இதை பெரிசு பண்ணிக்கிட்டு. சார் ஏதோ கோபத்திலே கை நீட்டிட்டாரு. வூடுங்க.” என்றான்.
“வெள்ளையும் சொள்ளையுமா வந்திட்டு காட்டான் மாதிரி நடந்துக்கறான்.”
“என்னடா சொன்னே? ஒரு ஒட்டை கடைய வச்சு நடத்திக்கிட்டு என்னையா காட்டான்னு சொல்றே? பல்லை தட்டிடுவேன்.” ஸ்ரீ விடுவதா இல்லை.
அவர்கள் வாக்குவாதம் முற்றி அடி தடிக்கு முயன்றனர்.
“இருங்க போலீசுக்கு போனப் போட்டு சொல்றேன்.” என்று போனை எடுத்தான் ஸ்ரீ. அவன் போனை பிடுங்கிக் கொண்டது ஒரு கரம். திரும்பிப் பார்த்தான் ஸ்ரீ. சசி நின்று கொண்டிருந்தாள்.
“இத பாருங்க பிரச்சனையை பெருசு பண்ணாதீங்க. நான் எதிரே உள்ள கட்டிடத்திலே தான் வேலை பார்க்கறேன். நீங்க ஆர்கியூ பண்ணிட்டு முரட்டுத்தனமா அடிக்கப் போனதை பார்த்தேன். அதான் ஓடி வந்தேன்.” என்றாள் சசி. அவன் திடுக்கிட்டு நின்றான். அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“யார்மா இது? உன் புருஷனா? என்னா மனுஷன் இவன்? இவன் கூட எப்படி குடும்பம் நடத்றே? வெட்டி பய போலிருக்கு. நீ சம்பாதிச்சு சாப்பிடும் போதே இந்த ஆட்டம் ஆடறான்......” இவன் இப்படி சொன்னதும் சசிக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டு சொன்னாள்.
“தம்பி வாயிக்கு வந்ததை பேசக் கூடாது. கஸ்டமர் கிட்டே எப்படி நடந்துக்கணும்னு ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாம நீ கடை நடத்தினா என்ன அர்த்தம்? பொறுமையா இரு. அப்ப தான் உன் கடை நல்லா வரும்...... சரி நீங்க போங்க. வேற இடத்திலே போய் ரிப்பேர் பண்ணிக்கலாம். போங்க சொல்றேன்.”
சசி விரட்டி விட அவன் வேறு வழியில்லாமல் போய் காரில் ஏறிக் கொண்டான், நள்ள வேளை நீங்க வந்தீங்கம்மா. இல்லே சார் இதை போலீஸ் வரை கொண்டு போயிருப்பார். வரேன்மா.” என்று சொல்லி ராஜாவும் ஏறிக் கொள்ள ஸ்ரீ காரை ஒட்டிக் கோண்டி போய்விட்டான்.
அவள் அலுவலகம் வந்து சேர்ந்த போது ராபர்ட் கேட்டான்.
“என்னாச்சு சசி? யார் அது? எதுக்கு வேகமா ஓடினே?”
இவனிடம் சொல்வதா வேண்டாமா என்று அவள் தயங்கி நின்ற போது அவன் டக்கென்று கேட்டான். “சசி அது உன் கணவரா?”
அவள் வெறுமனே தலை ஆட்டினாள். கண்ணில் ஏனோ நீர் கோர்த்தது. ஸ்ரீ இப்படி எல்லாம் சண்டை போடக் கூடியவன் அல்ல. ஏன் இப்படி நடந்து கொண்டான்.? ஒரு வேளை அவளையும் ராபர்ட்டையும் சேர்த்து பார்த்து விட்டிருப்பானோ? அவளுக்கு ஆயாசமாக வந்தது. இங்கு இந்த பெண்கள் தான் தப்பு தப்பாக யோசிக்கிறாங்கன்னு பார்த்தா.......இவரும் கூட இப்படி சிறு பிள்ளைத்தனமா யோசிக்கிறாரே! அவளையும் அறியாமல் ஒரு சொட்டு நீர் திரண்டு முத்து போல் அவள் கன்னத்தில் நின்றது. அந்தக் கண்ணீரை துடைத்து விட்டான் ராபர்ட்.
“என் தங்கை எதற்கும் அழக்கூடாது. உனக்கு கஷ்டமா இருந்தா நான் வேணா உன் கணவரோடு பேசவா? ஏதேனும் சிக்கல் என்றால், அதை முளையிலேயே கிள்ளி விடணும்.”
அந்த வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் மட்டும் தரவில்லை. ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது. வேலியாக இருக்க வேண்டிய கணவன் முள்ளாக இருக்க.....யாரோ ஒரு ரத்த பந்தம் இல்லாத சகோதரன் அவளுக்கு வேலியாக இருக்கிறான். இந்த முரண்பாடை நினைத்தபடி அவள் வீட்டுக்குச் சென்றாள். ஸ்ரீ அவள் வருவதை ஒரு போலீஸ்காரன் போல் பார்த்து நின்றான். அவள் உடல் நடுங்கியது.
தேடல் தொடரும்
.