கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! -10

என்னை தீண்டும் நிழலே ! - 10




கயல்விழியும் காயத்ரியும் வீடு திரும்பினர். காயத்ரி அருணின் நினைவில் மூழ்க கயல்விழி முகிலனையே நினைத்து கொண்டிருந்தாள்.

சில நாட்கள் இவ்வாரே செல்ல அருண் காயத்ரி நிச்சியதார்தமும் வந்தது.

வெகு விமர்சியாக நிச்சயதார்த்தம் அரங்கேறிக்கொண்டிருந்தது.

ராஜா மற்றும் ராணியாக அருணும் காயத்ரியும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

முகிலன் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்.

கயல்விழி புடைவையில் தேவதையாக காட்சி தந்தாள்.
அவளை கடந்து செல்பவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் நின்று அவளை பார்த்து விட்டு தான் சென்றனர்.

பெண்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அழகாக இருந்தாள். நீண்ட அழகிய கூந்தலும் மீன் போன்ற அகண்ட அழகிய விழிகளும் கூர்மையான மூக்கும் அழகான காதும் அதன் ஓரத்தில் சுருண்டிருக்கும் முடியும் என பார்ப்பவர்கள் அனைவரும் அவளிடம் சொக்கித்தான் போனார்கள்.

கயல்விழியின் கண்கள் முகிலனை தேடியது.
இளவரசனாய் சிரித்து கொண்டிருந்த முகிலனை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள். அவனிடம் சென்று பேச எண்ணினாள்.

முகிலன் தன் நண்பன் கிஷோருடன் பேசி கொண்டிருந்தான்.

என்ன பேசலாம் என கயல்விழி யோசித்து கொண்டிருந்த போது, செல்வி அங்கே வந்து "சாப்பாடுலாம் ரெடியானு கொஞ்சம் பாருங்கடா" என முகிலனிடமும் கிஷோரிடமும் கூறிகிண்டிருந்தாள்.

இது தான் சமயம் என அங்கே வந்த கயல்விழி, "அத்தை எப்படி இருக்கீங்க? உங்க மருமகளை மட்டும் பாத்தா போதுமா எங்களையெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா" என விளையாட்டாய் கேட்டாள்.

"நீயும் தாண்டி என் மருமகள் ! உனக்கென்னமா குறைச்சல் அப்டியே அந்த தேவதையே நேரில் வந்தமாதிரி இருக்க" என செல்வி கூறினாள்.

அப்பொழுதுதான் கயல்விழியை முகிலன் திரும்பி பார்த்தான்.

புடவையில் அழகாய் மின்னும் கயல்விழியை பார்த்த முகிலன் மதி மயங்கி நின்றான்.

இதுக்கு முன்னாடி நாம பார்த்த கயல்விழியா இது திடிர்னு இவ்ளோ அழகா மாறிட்டா. இவ்ளோ நாளா நாம சரியா பார்க்கலயா இல்ல இன்னைக்கு தான் இவ்ளோ அழகா தெரியராலா என மனதிற்குள் பேசி கொண்டிருந்தான் முகிலன்.

கிஷோர் முகிலனிடம், "யாருடா இவ இவ்ளோ அழகா!" என வைத்த கண் மாறாமல் கயல்விழியை பார்த்தவாறு கேட்டான்.

என் அண்ணியோட தங்கச்சிடா பேரு கயல்விழி என முகிலன் கூறினான்.

"உனக்கும் கட்டிக்கர முறைதாண்டா, டேய் முகில், நீ ரொம்ப குடுத்து வெச்சவன் டா! என்ன பொண்ணுடா அவ, என்ன கண்ணு, என்ன வளைவு, செதுக்கி வெச்ச சிலை மாதிரியே இருக்கா டா"என முகிலனிடம் கிஷோர் கூறினான்.

கிஷோர் கூற கூற கயல்விழியை ரசித்து கொண்டு இருந்தான் முகிலன், இருந்தாலும் கிஷோர் கயல்விழியை ரசிப்பதை முகிலனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டேய் போதும் நிறுத்துடா இதுக்கு மேல அவளை பத்தி எதுவும் பேசாத என கூறி கிஷோரை முறைத்தான் முகிலன்.

எதுக்குடா கோவப்படற சும்மா ஜாலிக்குதானே என கிஷோர் கூற வேணாம் பேசாத என முகிலன் பதில் கூறினான்.

இவன் எதுக்கு இப்போ இவ்ளோ கோவப்படறான் சரி நாம மனசுக்குள்ளேயே பேசிப்போம் என நினைத்து கொண்டான் கிஷோர்.

அய்யர் நிச்சய பத்திரிகையை வாசிக்க சபையினர் முன்னிலையில் இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி கொண்டனர்.

அருண் காயத்ரியிடம், "காயு இப்போ நீ எனக்கு பாதி சொந்தம் ஆகிட்ட கூடிய சீக்கிரம் எனக்கு முழுவதும் சொந்தம் ஆக போற" என கூறினான்.

அவன் கூறியதை கேட்ட காயத்ரி வெட்கத்தில் சிவந்தே போனாள்.

முகிலன் செல்லும் இடம் எல்லாம் அவனை அறியாமலே கயல்விழியும் சென்றாள்.

கூல் ட்ரிங்க்ஸ் குடுத்து கொண்டிருக்கும் சப்ளையர் பாயை அழைத்து ஒரு கார்டில் ஏதோ எழுதி முகிலனை கை காண்பித்து அவரிடம் குடுத்து விடு என கூறினாள் கயல்விழி.

ஏய் என்னடி பண்ற என கயல்விழியை ரம்யா கேட்டாள்.

சும்மா டி, அவன் எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்க்க ஆசையா இருக்கு என கயல்விழி கூறினாள்.

வேணாம் எதாவது பிரச்சனை ஆகிட போகுது என ரம்யா கூற அதெல்லாம் ஒன்னும் ஆகாது பேசாம இரு என கயல்விழி கூறினாள்.

கூல் ட்ரிங்க்ஸ் கொடுப்பவன் முகிலனிடம் அந்த கார்டு உடன் இருக்கும் பாட்டிலை குடுத்தான்.

அதை வாங்கிய முகிலன் அதில் எழுத பட்டிருக்கும் வாக்கியத்தை படித்தான்.

"உன் கண்கள் அழகாக இருக்கிறது" என அதில் எழுதி இருந்தது.

"இதை யார் உன்னிடம் கொடுத்தார்கள்"என முகிலன் கேட்க உங்களிடம் குடுக்க சொல்லி ஒரு பெண் குடுத்தாள் என அந்த பையன் கூறினான்.

"பெண்ணா!! யாரு அந்த பொண்ணுனு தெரியுமா"என முகிலன் கேட்டான்.

"தெரில சார், உங்ககிட்ட குடுக்க சொல்லி சொன்னாங்க அதான் குடுத்தேன்" என அந்த கூல் ட்ரிங்க்ஸ் பாய் கூறினான்.

"சரி நீ போ, மறுபடியும் அந்த பொண்ண பாத்தா என்கிட்ட சொல்லு" என அந்த பையனிடம் முகிலன் கூறினான்.

பின் முகிலன் செல்லும் இடம் எல்லாம் அவனிடம் யாரோ ஒருவர் ஒரு செய்தியை கொடுத்துக்கொண்டே வந்தனர்.

"இந்த டிரஸ்ல இளவரசன் போல இருக்கீங்க!"
"உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு !"
"எப்போ எனக்கு ஒகே சொல்வீங்க!"
"லவ் யூ டா முகில்!"
என பல செய்திகளை அங்கே வேலை செய்பவர்கள் பலர் கொண்டு வந்து கொடுத்தனர்.

யாரு இப்படி செய்யறாங்கனு எப்படியாவது கண்டு பிடிச்சே ஆகனும் என நினைத்து கொண்டிருந்தான் முகிலன்.

முகிலனின் நிலையை கண்டு சிரித்து அவனை ரசித்து கொண்டிருந்தாள் கயல்விழி.

அந்த பெண் யாருனு முகிலன் கண்டு பிடிப்பானா !!

பார்ப்போம்......

நிழல் நிஜமாகும் !!

-நந்தினி மோகனமுருகன்
 
Top